• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Vaadi en thamizhachi (spl episode)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
15 வருடங்களுக்கு பிறகு...


9

8

7

6

நேரம் குறைந்து கொண்டே வர நிற்காமல் ஓடினாள்.

5 விநாடிகள்.

"ஏய் தமிழச்சி... அதை தூக்கி போடு"

4 "ஏய்... தூக்கி போடிறிறிறிறி"

3 விநாடிகள்தான். கரத்திலிருந்த பாமை கைப்பற்றி தூக்கி வீசினான்.

அது வானுயர பறந்து சென்று கடல் நீரில் வீழ்ந்து வெடிக்கவும், அலறியவள் படுக்கையில் இருந்து சுருண்டுவிழப் பார்த்த போது கெட்டியாய் இரும்பினை ஒத்த ஒரு கரம் அவளை விழாமல் தாங்கிக் கொண்டது.

பதட்டத்தோடு விழித்து பார்க்க அவன் உறக்கத்திலேயே அவளை நெருக்கமாய் இழுத்து அணைத்தவன் "கண்டதை நினைக்காம தூங்குடி... " என்றான்.

அவள் மெல்ல அந்த மோசமான நினைவுகளிலிருந்து மீண்டவள், அவன் புறம் திரும்பி படுத்தாள்.

அதற்குள்ளாக மீண்டும் அவன் ஆழ்ந்த உறக்க நிலைக்கு சென்றிருந்தான்.

எத்தனை அயர்ந்த உறக்கத்தில் இருந்தாலும் அவளை விழ விடாமல் தாங்கிக் கொள்வது, இத்தனை வருடக் காலமாய் அவனுக்கு பழகிய விஷயமாய் மாறியிருந்தது.

அதுவே அவனின் ஆழமான காதலுக்கும் எடுத்துக்காட்டு.

அன்று மட்டும் தான் பாம் வெடித்து இறந்து போயிருந்தால்...

இப்படியொரு வாழ்க்கையை வாழமுடியாத துர்பாக்கியசாலியாய் இறந்து போயிருப்பேனே என்று எண்ணிக் கொண்டாள்.

அவள் விழியின் முன்னே அதே கம்பீரமும் ஆளுமையும் நிறைந்த அவன் முகம். அவனின் மீசை முடியில் எட்டிப் பார்க்கும் அந்த நரையும் கூட அவனின்
கம்பீரத்தை பெருக்கியதென்றே சொல்ல வேண்டும்.

அவனுக்காகவும் அவன் காதலுக்காகவும் இன்னும் பல நூறு வருடகாலங்கள் கூட சலிக்காமல் அவனுடன் வாழலாம்.

இந்த எண்ணங்களை சுமந்தபடி உறக்கம் மறந்து அவனையே பார்த்திருந்தாள்.

வீரேந்திரன் ஐந்து வருடங்களுக்கு முன்பு கமிஷனராய் பதிவு உயர்வு பெற்றிருந்தான்.

அதே சமயம் தமிழச்சியின் பத்திரிக்கையும் நல்ல வளர்ச்சி பெற்று அவளுக்கென்ற சிறப்பான அங்கிகாரத்தை பெற்று தந்திருந்தது.

ஆதியின் பத்திரிக்கையும் அந்தளவுக்கு வளர்ச்சியை பெற்ற போது இரு தோழிகளும் சேர்ந்து தங்கள் பத்திரிக்கைகளை இணைத்து வீரதமிழச்சி என்று ஒரே பத்திரிக்கையாய் மாற்றி அதனை நிர்வாகம் செய்தனர்.

தமிழகம் முழுவதும் மக்களின் நம்பகமான பத்திரிக்கையாய் வீரதமிழச்சி வாரஇதழ் மாறியிருந்தது.

இரு தோழிகளுக்கும் அது பேறும் புகழையும் அளவில்லமால் பெற்று தந்திருந்தது.

அதே சமயம் ராஜசிம்மன் அரண்மனையை செந்தமிழ் தொல்பொருள்துறைக்கு அளித்ததன் விளைவாக அது நம் தமிழனின் கௌரவத்தையும் அவனின் கட்டிட கலையின் திறமையையும் பறைசாற்றும் வண்ணம் இன்றளவிலும் கம்பீரமாய் நின்று கொண்டிருக்கிறது.

நம் நாட்டு மக்களும் பல வெளிநாட்டு பயணிகளும் சிம்மவாசலில் அமைந்துள்ள நம் பாரம்பரிய அரண்மனையை தினமும் பார்வையிட்டு பெருமிதப்பட்டு கொண்டிருந்தனர்.

*********

விடியலை தொட்ட அந்த நாளில் நேரம் கடந்து கொண்டே போனது.

அலறிய அலாரத்தை அடக்கிவிட்டு விஷ்வா உறங்கிக் கொண்டிருந்தான்.

ஆதி அவன் போர்வையை இழுத்துவிட்டு "எழுந்திருடா" என்று சத்தமாய் கத்தவும் "லீவு நாளில் கூட ஏன்டி இப்படி டார்ச்சர் பன்ற ?" என்று சொல்லியவன் மீண்டும் போர்வையை போர்த்திக் கொண்டான்.

"லீவா.. டே இன்னைக்கு ஸ்கூலுக்கு போகனும்.. ஓபன் டே" என்றாள்.

விஷ்வா அதிர்ந்தபடி விழித்து பார்த்தவன் முகத்தை பரிதபமாய் மாற்றிக் கொண்டு, "ப்ளீஸ்டி... நீயே போயிட்டு வந்துடிறியா..." என்று கேட்டான்.

"அதெல்லாம் முடியாது... என்னை தனியா போய் திட்டு வாங்க சொல்றியா... நெவர்" என்றாள்.

"ப்ளீஸ்ஸ்ஸ்ஸ் டி... இந்த ஒரே தடவை விட்டிறேன்" என்று கெஞ்சலாய் பார்த்தவனை மிரட்டலாய் பார்த்தாள்.

அந்த பார்வைக்கு சரணடைந்தவன்

"சரி சரி... முறைக்காதே வர்றேன்" என்று விஷ்வா சொல்ல "சீக்கிரம்" என்றவள், உடனே திரும்பி விறுவிறுவென அறையை விட்டு வெளியேறினாள்.

'இரண்டு மூணு வைச்சிருக்கவன் எல்லாம் நிம்மதியா இருக்கேன்... ஒண்ணே ஒண்ணு வைச்சுக்கிட்டு நான் படற பாடு இருக்கே' என்று புலம்பியபடியே புறப்படத் தயாரானான்.

அந்த உயரமான பள்ளிக்கட்டிடத்தின் முன்னே நின்ற காரின் பின் இருக்கையின் கதவை திறந்து ஆதி வெளியே வர, விஷ்வா வாகன நிறுத்தம் நோக்கி காரை நகர்த்தி சென்று நிறுத்தினான்.

காட்டன் புடவையில் கம்பீரமாய் ஆதி உள்ளே சென்று கொண்டிருக்க, விஷ்வா தன் மகனை திரும்பி பார்த்து "விக்ரமா... இந்த தடவை என்னெல்லாம் சேட்டை பண்ணி வைச்சிருக்க" என்று
தன்னுடைய தோற்ற சாயலிலயே வசீகரமாய் நின்றிருந்த தன் மகன் விக்கிரமாதித்தியனை கேட்டான்.

"இல்லப்பா... நான் இந்த தடவை எந்த சேட்டையும் பண்ணல... வேண்ணா என் ப்ரண்ட்டு சிம்மாவை கேட்டுப் பாருங்க"

"அவன் அப்படியே உன்னை விட்டுக் கொடுத்திட்டாலும்"

இப்படியே பேசிக் கொண்டபடி
எட்டாம் வகுப்பு ஏ என்றிருந்த வகுப்பறையை வாசலை இருவரும் அடைந்திருந்தனர்.

ஏற்கனவே ஆதி அவனின் வகுப்பாசிரியை முன்பு அமர்ந்திருந்தாள். அவர் கொடுத்த அந்த அட்டையை பொறுமையாய் பிரித்து அவள் பார்த்திருக்க, ஆதித்தியன் முகத்திலோ அச்சத்தின் சாயல்.

ஆதி தயங்கி நின்ற தன் கணவனை உள்ளே அழைத்தாள்.

விக்ரமை பள்ளியில் சேர்த்த நாள் முதற் கொண்டு அவனை கடிந்து கொள்ளாத ஆசிரியர்களே கிடையாது.

அவன் செய்த சேட்டைகளில் வேலையை விட்டுச் சென்ற ஆசிரியர்கள் கூட உண்டு.

அத்தனை சேட்டைக்காரன்!

விக்ரம் பயங்கொள்ளவது ஆதியை பார்த்தால் மட்டும்தான். அவள் கிடைக்கும் ஆயுதத்தில் எல்லாம் விரட்டி விரட்டி அடித்து பார்த்துவிட்டாள்.

ஆனால் அடி வாங்கிய அடுத்த நொடியே அவற்றை எல்லாம் துடைத்துபோட்டுவிட்டு தன் லீலைகளை தொடங்கவிடுவான்.

இப்போதே இப்படி என்றால் வருங்காலத்தில்...

நினைக்கும் போதே உள்ளம் பதறும் அவளுக்கு !

அதற்கு காரணம் ஆதி செல்லம்மாவிற்கு ஒரே மகள். விஷ்வாவும் சாரதாவிற்கு ஒரே மகன். பாட்டிகள் இருவரின் படுச்செல்லம். ஒற்றை பேரன் வேறு.

அவனை சமளிக்கவே ஆதிக்கு நேரம் சரியாய் இருக்க இன்னொரு குழந்தையா?

கனவிலும் அப்படி ஒன்றை அவள் எண்ணவும் தயாராக இல்லை.

அவனின் ரிப்போர்ட் கார்ட்டை வாங்கிப் பார்த்தான் விஷ்வா.

வகுப்பில் இரண்டாவதாக வந்திருந்தான். அது ஒண்ணும் புதிய செய்தி அல்ல. படிப்பில் அவன் அதிபுத்திசாலிதான்.

விக்ரமின் ஆசிரியர் அவர்கள் இருவரை நோக்கி தன் கதாக.காலட்சபத்தை ஆரம்பித்தார்.

"மிஸ்டர் & மிஸஸ். விஷ்வா... சொல்றேனே தப்பா எடுத்துக்காதீங்க.. உங்க சன் ரொம்ப ரொம்ப நாட்டி... எந்த டீச்சரையும் க்ளாஸ் எடுக்கவே விடாம சதா கமென்ட் பாஸ் பன்றான்... இட்ஸ் ஸோ இரிடேட்டிங்... எல்லா சப்ஜக்ட் டீச்சர்ஸும் இதே கம்பிளைன்ட்தான்... எவ்வளவோ வார்ன் பண்ணியாச்சு... ஹ்ம்ம்ம்... கொஞ்சங் கூட மாறவே மாட்டிறான்" என்று இறுகிய முகத்தோடு உரைக்க, ஆதி சினம் பொங்க தன் மகனை நோக்கினாள்.

'போட்டு கொடுத்திட்டியே பத்மா... உனக்கு இருக்கு' என்று ஆசிரியை மனதிற்குள் வைதாலும் வெளியே
அமைதியின் சொரூபமாய் நின்றபடி "சாரி மிஸ்... இனிமே அப்படி நடந்துக்க மாட்டேன்" என்று சொல்லி அத்தனை பரிதாபமாய் பார்த்தான்.

ஆசியருக்கு அவனின் முகப்பாவனையை பார்க்க வியப்பாகவும் பரிதாபகரமாகவும் இருந்தது.

விக்ரமின் நடிப்பெல்லாம் ஆதியின் முன்னிலையில்தான். அவள் அந்தப்புரம் போனால் இவன் இந்தப்புரம் தன் சேட்டையை துவங்கிவிடுவான்.

அவர்கள் பேசி முடித்துவிட்டு வெளியேறிய சமயம், செந்தமிழ் அந்த வகுப்பறை வாசலில் வந்து நின்றாள்

அவள் பின்னோடு அவள் மகன் சிம்ம பூபதி வந்து கொண்டிருந்தான்.

அமைதியோடு கூடிய தேஜஸான புன்னகையே அவனின் சிறப்பம்சம். அதை தாண்டி ஒரு ராஜகளை அவன் பார்வையிலும் நடையிலும்!

சிறு வயதினன் எனினும் நடவடிக்கைகளிலும் செயலிலும் அதீத முதிர்ச்சி.

நம் தமிழ் மொழியின் பாரம்பரிய இலக்கியங்களை எல்லாம் அந்த வயதிலேயே கற்று கைத்தேர்ந்தவனாயிருந்தான்.

அத்தகைய அறிவு கூட அவன் முதிர்ச்சிக்கு காரணமாக இருக்கலாம்.

விக்ரமும் சிம்மாவும் ஒரே வகுப்பில் படிப்பவர்கள். இருவரும் வேற்று குணம் படைத்தவர்கள் எனினும் சிறுவயதிலிருந்து நெருங்கிய நண்பர்களாகவே வளர்ந்திருந்தனர்.

அந்த நண்பர்கள் இருவரும் பார்த்த மாத்திரத்தில் பார்வையாலயே தங்கள் நட்பை பரிமாறிக் கொண்டு புன்னகையித்து கொள்ள, ஆதி தமிழை பார்த்தத கணம் புன்னகையோடு "வா தமிழ்... இப்பதான் உனக்கு கால் பண்ணலாம்னு நினைச்சேன்" என்று உரைத்தாள்.

"நானும் நீ வந்திட்டியான்னு யோசிச்சிட்டு இருந்தேன்" என்றவள் விஷ்வாவை பார்த்து "எப்படி இருக்கீங்க விஷ்வா சார் ?" என்று நலம் விசாரித்தாள்.

"ம்ம்ம்.. நல்லா இருக்கேன்மா"

"நீ, விக்ரமா ?" என்று விக்ரமின் தலையை தமிழச்சி கோத "சூப்பரா இருக்கேன் ஆன்டி" என்று பதிலுரைத்தான்.

"அவன் சூப்பராதான் இருப்பான்... நாங்கதான் அவன்கிட்ட பாடாத படுறோம்" என்றாள் ஆதி.

விக்ரமின் முகம் களையிழந்து போனது.

"ஏன்டி அப்படி சொல்ற ?" என்று தமிழ் கேட்க, ஆதி அவனின் ஆசிரியை வாசித்த பாராட்டு மடலை வார்த்தை மாறாமல் ஒப்புவித்தாள்.

இதை கேட்ட சிம்ம பூபதி முந்திக் கொண்டு "விக்ரம் அப்படி எல்லாம் இல்ல ஆன்ட்டி" என்று சொல்லி ஆதியை நோக்கினான்.

அப்போது ஆதியும் விஷ்வாவும் ஒருவர் ஒருவர் முகத்தை பார்த்து பெருமிதம் கொண்டனர். இந்த வயதிலேயே தவறி கூட இருவரும் ஒருவரையொருவர் விட்டு கொடுத்திராமல் இருப்பது அவர்களின் நட்பின் பெருமையை பறைசாற்றியது.

ஆதி அப்போதுதான் கவனித்தாள்.

"ஏ தமிழ்... எங்கடி உன் பொண்ணு தமிழச்சியை காணோம்" என்றதும் விக்ரமும் வியப்போடு "அதானே எங்க அந்த கேடி?" என்றான்.

தமிழச்சி செந்தமிழின் இரண்டாவது மகள். சிம்ம பூபதியைவிட இரண்டு வயது சிறியவள். முதல் குழந்தை ஆணாய் பிறந்து தமிழ் தன் சவாலில் வென்றுவிட்டாலும் வீரேந்திரன் அத்தனை சீக்கிரத்தில் தோல்வியை ஏற்பானா? எப்படியோ அவனின் ஆசை இரண்டாவது முயற்சியிலேயே கிட்டிவிட்டது.

தமிழச்சி எங்கே என்று கேட்டதும் தமிழ் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு சிம்மபூபதியை நோக்கி "எங்கடா உன் தங்கச்சியை காணோம் ?" என்று வினவினாள்.

"நீங்க வீட்டுக்கு வா... வைச்சுக்கிறேன்னு சொன்னதுதான்... மேடம் அப்பவே
தாத்தாகிட்ட அடம்பிடிச்சி இழுத்துட்டு போயிட்டாங்க" என்று அவன் சொல்லவும் மகனை புருவத்தை சுருக்கி முறைத்தாள்.

"சாரிம்மா... நீங்க முன்னாடி போகும் போதே பின்னாடி ஸ்டியர் கேஸ் வழியா போயிட்டா? நான் உங்ககிட்ட சொன்னா அப்பாகிட்ட போட்டுக் கொடுத்திருவேன்னு மிரட்டிறா மா" என்றான்.

ஆதி தன் தோழியின் புறம் திரும்பி "நீ ஊரையே ஏமாத்துவ... உன்னையே ஏமாத்திறா...உன் பொண்ணு... உன்னை விட பெரிய தில்லாலங்கடிதான்" என்றாள்.
 




Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
"நீ வேற ஆதி... அவ இந்த வயசிலயே கிளாஸ்ல இருக்கிற எல்லார் கூடயும் சண்டை பிடிக்கிறாலாம்... ஏகபோகத்துக்கு கோபம் வேற வருது... அவளை என்ன பன்றதுன்னே தெரியல ... எல்லாம் அவங்க அப்பா கொடுக்கிற இடம்... அதான் ஓவரா ஆடிறா...?" என்று சினத்தோடு கடுப்பானாள்.

இப்படியாக நீண்டு கொண்டிருந்த அவர்கள் சம்பாஷணையால் நேரம் கடந்து செல்ல, ஆதி தன் தோழியிடம் விடைப் பெற்று கொண்டு கணவனோடும் மகனோடும் புறப்பட்டாள்.

அதற்கு பிறகு சிம்மபூபதியை அழைத்து கொண்டு தமிழ் அவனின் வகுப்பறைக்குள் நுழைய, அவனின் ஆசிரியர் அவளை பார்த்த நொடி சிம்மாவை பற்றி புகழ்ந்து தள்ளிவிட்டார்.

அவன்தான் அந்த வகுப்பிலேயே முதலிடம். இம்முறை மட்டும் அல்ல. வரிசையாய் ஒவ்வொரு வகுப்பிலும்.
அவன் எல்லா ஆசிரியர்களுக்கும் பிடித்தமான மாணவன் என்ற பெயர் வேறு.

தமிழுக்கும் வீரேந்தினுக்கும் மகன் எனினும் அவன் குணத்தில் அவர்களை போல் அல்ல. முற்றிலும் வேறு.

தமிழ் அவனிடம் வியந்து கண்டறிந்தது அவளின் தாத்தா சிம்மவர்மனின் சாயலும் குணமுமே!

*********

ஆதி வீட்டை அடையும் வரை ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

விஷ்வா மகனிடம் "உங்கம்மா செம கோபத்துல இருக்கா ? உனக்கு செம மாத்து இருக்கு" என்று எச்சரிக்க,விக்ரம் அரண்டபடியே நுழைந்தான்.

விக்ரமை பார்த்ததும் சாரதாவும் கருணாகரனும் மகனின் ரிப்போர்ட் கார்ட்டை வாங்கி பார்த்து பெருமைப்பட்டு கொண்டிருந்தனர்.

ஆதி கோபமாக "உங்க பேரன் படிப்பெல்லாம் படிச்சிருவாரு.. ஆனா கொஞ்சம் கூட ஒழுக்கமே கிடையாது..." என்றாள்.

அதோடு நிறுத்தாமல் மகனை நோக்கி உக்கிரமாய் "ராஸ்கல்! எவ்வளவு திமிரிருந்தா இந்த வயசில டீச்சர்ஸ் பாடம் எடுக்கும் போது கமென்ட் பாஸ் பன்னுவ? " என்று சீற்றத்தோடு பொங்கினாள்.

உடனே சாரதா பேரனை பார்த்து "ஏன் தங்கம் அப்படி எல்லாம் பன்ற ?" என்று பரிவாய் கேட்கவும் ஆதியின் கோபம் அதிகரித்தது.

விக்ரம் உடனே "நான் எதுவும் தப்பா செய்யல பாட்டி... மிஸ் கிளாஸ் நடத்தும் போது எல்லோரும் தூங்கிறாங்க.. நான் ஒரு நல்லெண்ணத்தில கமென்ட் பண்ணி எல்லோரையும் எழுப்பி விட்டேன்" என்று தன் செயலுக்கு நியாயம் கற்பித்தான்.

ஆதி உடனே தன் கணவனை நோக்கி "நல்லெண்ணமா? உங்க பையன் எப்படி சமாளிக்கிறான் பார்த்தீங்களா?!" என்றதும் விஷ்வா தன் சிரிப்பை கட்டுப்படுத்த முடியாமல் உதிர்த்துவிட்டான்.

அப்படியே உங்களை மாதிரியே இருக்கான் என்று பார்வையாலேயே அவள் சொல்ல விஷ்வா தோள்களை குலுக்கினான்.

ஆதி விக்ரமை பார்த்தபடியே உள்ளே செல்ல, ஏதோ பெரிய ஆயதத்தோடு வரப் போகிறாள் என்று மட்டும் எல்லோருமே யூகித்து அவள் சென்ற திசையிலேயே பார்வையை பதித்தனர்.

விக்ரமிற்கு கரமெல்லாம் சில்லிட்டு போக "அப்பா காப்பாத்துங்க" என்று உதவிக்கு தந்தையை அழைத்தான்.

"அதெல்லாம் கஷ்டம் விக்ரம்... தப்பித்தவறி தடுத்தேன்னு வைச்சுக்கோ... எனக்கும் சேர்த்து அடி கொடுப்பா உங்க அம்மா" என்றான்.

அவனின் பாட்டி தாத்தா கூட ஆதி அவனை அடிக்க வந்தால் தடுக்க மாட்டார்கள்.

அவள் எது செய்தாலும் சரியென்று எண்ணம் கொண்ட மாமனார் மாமியார் ஆயிற்றே.

ஆதியிடம் இருந்து விக்ரமை காப்பது சிரமம்தான்.

இதே போல ஒரு காட்சி தமிழின் வீட்டிலும் அரங்கேறியது.

பள்ளியில் இருந்து புறப்பட்ட தமிழ், சிம்மனை மட்டும் வீட்டிற்கு போகச் சொல்லிவிட்டு முக்கியமான வேலை என்று அலுவலகத்திற்கு சென்றுவிட்டாள்.

அவள் வீட்டை அடைந்ததும் முதலில் தேடியது தன் மகளைதான்.

"தமிழச்சி" என்று அழைத்தபடி வீடு முழுக்கவும் தேட, சிம்மனும் அவள் தாத்தா மகேந்திரனும் சந்திராவும் கூட அவள் எங்கே என்று தேட ஆரம்பித்தனர்.

அம்மா வீட்டினுள் நுழைந்த மாத்திரத்தில் எங்கயோ சென்று ஒளிந்து கொண்டுவிட்டாள்.

அத்தனை சீக்கிரத்தில் சிக்கவும் மாட்டாள்.

எல்லோருமே பயந்து போக தமிழ் இறங்கிய குரலில் "தமிழச்சி வெளியே வா.. அம்மா உன்னை அடிக்க மாட்டேன்" என்றழைத்து பார்த்தாள். அப்போதும் பதிலில்லை.

இந்த வாக்குறுதிக்கெல்லாம் அவள் மகள் இறங்கிவிடுவாளா ?!

அவள் வீரேந்திரனின் செல்ல மகளாயிற்றே!

இறுதியாய் எல்லோருமே அவளை வீடு முழுவதும் தேடி தேடி சோர்ந்து போய் முகப்பறையில் அமர்ந்திருக்க, அந்த சமயம் வீரேந்திரன் போலிஸ் உடையில் கம்பீரமாய் வீட்டிற்குள் நுழைந்தான்.

அவனை பார்த்ததும் எல்லோருக்கும் கிலி உண்டானது.

தன் தொப்பியை மனைவியிடம் கழட்டி கொடுத்தவன் தலைமுடியை கோதியபடி "ஆமா வீடே அமைதியா இருக்கு... எங்க என் தமிழச்சியை காணோம்" என்று கேட்டான்.

உள்ளே வந்த மாத்திரத்தில் தன் மகள் இல்லாததை அவன் கவனித்துவிட்டான்.

"வீர் அது" என்று அவள் தயங்கவும்

"என்ன தமிழ்? உங்க வீட்டுக்கு அனுப்பியிருக்கியா?.. உம்ஹும் இருக்காதே.. என் தமிழச்சி என்கிட்ட சொல்லாம எங்கயும் போக மாட்டாளே..." என்று சந்தேகம் கொண்டவன்.

"தமிழச்சிமா... தமிழச்சிசிசிசி" என்று அழைத்து பார்த்தான்.

அவன் மனைவி, மகள் இருவரையும் ஒரே போல அழைத்தாலும் அவனின் அழைக்கும் தொனி மாறுபடும்.

மனைவியை அழைக்கும் போது அதிகாரமும் காதலும் தெரிய, மகளை அழைக்கும் போது அமிழ்ந்த குரலில் அன்பும் அக்கறையும் வெளிப்படும்.

மகளை தேடும் கணவனின் கரத்தை பற்றியவள் நடந்ததை எல்லாம் முழுமையாய் விவரித்தாள்.

அவளை அனலாய் பார்த்தவன் மகள் எங்கே ஒளிந்திருப்பாள் என்று மனதிலேயே யோசித்து அவர்களின் அறை நோக்கி நடந்தான்.

உள்ளே நுழைந்த மாத்திரத்தில் "டேட்..." என்று அவன் மகளின் குரல்.

இருவரும் குரல் வந்த திசையில் நிமிர்ந்து பார்க்க, உயரமாய் மேலே இருந்த பெரிய கப்போர்டில் அமர்ந்திருந்தாள் அவன் செல்ல மகள்.

அவளை பார்க்கும் போதெல்லாம் மனைவியின் அந்த சிறு வயது புகைப்படம்தான் அவன் நினைவுக்கு வரும். அதே சாயல்தான்.

அதில் உள்ள குட்டி தமிழச்சியின் அதே துருதுருவிழிகள் அப்படியே இருந்தன. அதே துருதுருப்பான குணமும் கூட அப்படியே என்று மனதில் எண்ணி புன்னகையித்து கொண்டான்.

ஆனால் தமிழ் மகளின் மீது அதீத கோபத்தோடு "நீ இங்கதான் இருக்கியாடி? உன்னை" என்று அவளை அடிக்க முன்னேறியவளின் கரத்தை வீர் அழுத்தமாய் பற்றி நிறுத்தினான்.

"பாருங்க வீர்... எல்லோரும் எங்கெல்லாம் தேடிட்டிருக்கோம்... இவ பாட்டுக்கு எது மேல ஏறி உட்கார்ந்திட்டிருக்கான்னு.. அவளை" என்று சொல்லியபடி கோபம் கொண்டு மகளிடம் முன்னேறியவளின் கரத்தை வீர் பற்றி தன் புறம் திருப்பியவன் "உன் பொண்ணு வேற எப்படிறி இருப்பா?" என்று அலட்டிக் கொள்ளாமல் கேட்க தமிழ் மௌனமானாள்.

"நீ போ... நான் அவளை கூட்டிட்டு வர்றேன்" என்று அவன் மனைவியை பார்த்து சொல்லவும் அவளுக்கு கோபம் அடங்கவேயில்லை.

அவனை அவள் முறைப்பாய் பார்க்க, அவனின் பார்வையும் எதிர்திசையில் அவளை கோபமாய் மோதியது.

அதற்கு மேல் அங்கே நின்றால் ஏதேனும் வாக்குவாதம் நேர்ந்துவிடுமோ என எண்ணியவள் ஆற்றாமையோடு "நீங்க ரொம்பதான் அவளுக்கு செல்லம் கொடுத்து கெடுக்கிறீங்க..." என்று புலம்பிக் கொண்டே வெளியே போனாள்.

தன் மனைவி சென்றதும் மகளின் புறம் நிமிர்ந்தவன் "இதெல்லாம் என்ன வேலை தமிழ்ச்சி... " என்று கேட்டவனின் வார்த்தையில் கண்டிப்பு இருந்தாலும் பார்வையில் இல்லை.

"இல்ல டேட்... நான் எதுவுமே செய்யல... தமிழச்சிதான்... மிஸ் சொல்றதை அப்படியே கேட்டுட்டு என்னை அடிக்க வர்றா"

"அம்மா அடிக்க வந்தா... நீ தப்பு செய்யலன்னு நின்னு ப்ரூப் பண்ணு... அதை விட்டுவிட்டு இப்படியா மேல ஏறி உட்கார்ந்திருக்கிறது ? "

"போங்க டேட்... தமிழச்சிக்கு எதையும் கேட்கிற பொறுமை இல்லை... முதல்ல என்னை அடிச்சிட்டுதான் மறுவேலையே பார்ப்பா?"

"நீ பொறுமையா பேசினா... அவ நிச்சயம் அடிக்க மாட்டா... மோரோவர் அம்மா எது சொன்னாலும் அது உன் நல்லதுக்குதான்னு நான் ஏற்கனவே சொல்லி இருக்கேன் இல்ல... "

தமிழச்சி தலைக்கவிழ்ந்து "சொல்லி இருக்கீங்க" என்றாள்.

"அப்புறம்....." என்று கேட்டபடி அவன் பார்வை முறைப்பாய் மாற அவள் மௌனமானாள்.

மகளின் முகப்பாவனை மாறியதை கவனித்தவன்"சரி விடு... இனிமே நீ இப்படி பண்ண கூடாது... திரும்ப நீ இப்படி நடந்துக்கிட்டன்னா... நான் உன் கூட பேசவே மாட்டேன்... காட் இட்" என்று அவன் உரைக்கவும், தன் தந்தையின் லேசான கோப பாவனையை கூட அவளால் ஏற்க முடியாமல் கண்ணீர் தளும்பியது அவள் கண்களில்!

மகளின் கண்ணீரில் கரைந்தவன் உடனே அவளை கைகப்பிடித்து இறக்கிவிட்டு "அட ! என் தமிழச்சி அழறாலா... அப்போ நீ அப்பா மாறி ஸ்டிராங் இல்லயா?!" என்று கேட்டான்.

கண்களில் வந்த கண்ணீரை மறைத்து கொண்டவள் "நோ நோ... நான் அழமாட்டேன்... என் டேட் மாதிரி நான் ஸ்டிராங்தான்... " என்றாள்.

"வெரி குட்... அப்பதான் நீ பெரியவளானதும்... அப்பா மாதிரி போலீஸ் ஆபிஸர் ஆக முடியும்" என்றதும் அவள் தன் தந்தையை கட்டிக் கொண்டாள். அவனுமே பூரிப்போடு அவளை அணைத்து கொண்டான்.

மனைவியின் மீதான அபரிமிதமான காதலே மகள் மீதும் பாசமாய் உருவெடுத்திருந்தது.
 




Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
இருவரும் ஒன்றாய் கரத்தை பிடித்து கொண்டு அறையை விட்டு வெளியே வந்தவர்கள் நேராய் தமிழ் முன்னிலையில் சென்று நிற்க தமிழச்சி தன் தாயின் கரத்தை பற்றி "சாரி தமிழச்சி... நான் இனிமே கிளாஸ்ல யார்கிட்டயும் சண்டை போட மாட்டேன்... ப்ராமிஸ்" என்று உறுதியளித்தாள்.



எல்லோருக்குமே தந்தை மகளுக்கான அந்த உறவின் மீது அத்தனை வியப்பு! ஆனால் தமிழுக்கு அதீத கோபமே தலைத்தூக்கியது.


மகளை பார்த்தவள் "எங்களை எல்லாம் பார்த்தா உனக்கு மனிஷங்களாவே தெரியிலயா... அதென்னடி உங்க அப்பா சொன்னா மட்டும் கேட்கிற... ?!" என்று வினவினாள்.

தமிழச்சி தன் அப்பாவின் மீது சாய்ந்து அணைத்தபடி "ஏன்னா அவர்தானே என்னோட ஹீரோ... " என்று சொல்ல வீரேந்திரன் பெருமிதப்பட்டு மனைவியினை நோக்கிய போது அவள் உதடுக்குள்ளேயே முனகிக் கொண்டாள்.

அதனை கவனித்தவன் மகள் முன்னிலையில் மனைவியை எதையும் கேட்க விரும்பாமல் அமைதி காத்தான்.

உணவருந்த மேஜை மீது அமர்ந்திருந்த வீர் தமிழை பார்க்க, அவனிடம் பாரா முகமாகவே பரிமாறினாள்.

உணவு முடிந்த பின் தமிழச்சி தன் தாத்தா பாட்டியுடன் உறங்கச் சென்றுவிட, சிம்மபூபதி தன் பெற்றோர்களின் அறையருகில் உள்ள ஒரு தனி அறையில் படுத்துக் கொண்டான்.

வீரேந்திரன் அறைக்குள் வந்ததும் மனைவி சொன்ன வார்த்தையை நினைவுப்படுத்தியபடி

"ஏ தமிழச்சி.. பாப்பா என்னை ஹீரோன்னு சொன்ன போது நீ ஏதோ முனகினியே... என்னது?" என்று கேட்டான்.

அவள் அவனை அலட்சியமாய் பார்த்துவிட்டுஅறையிலிருந்த டீவியை ஆன் செய்து சௌகர்யமாய் அமர்ந்து கொண்டு பார்க்க

"திமிரா... என்ன சொன்னேன்னு சொல்லு ?" என்று கேட்டு ரிமோட்டை பறித்தான்,

"இப்ப என்ன சொன்னன்னு கண்டிப்பா தெரியனுமா ?" என்று எரிச்சலாய் பார்த்தாள்.

"ஆமாம்"

"அவளுக்கு நீங்க ஹீரோ... ஆனா எனக்கு நீங்க வில்லன்னு சொன்னேன்... போதுமா ?"

அந்த வார்த்தைகள் அவனை இன்னும் கோப்படுத்த "இவ்வளவு வருஷமாச்சு... இருந்தும் உன் கோபமும் திமிரும் இன்னமும் மாறவே இல்லயில்ல"

"நீங்க அப்படியே மாறிட்டீங்களாக்கும்" என்று சொன்னபடியே வெடுக்கென ரிமோட்டை அவனிடமிருந்த வாங்கினாள்.

அவன் மீண்டும் கோபமாக அந்த டீவியை அணைத்தான்.

தமிழ் வெறுப்போடு "உங்க பொண்ணுக்கு மட்டும் எல்லா சுதந்திரமும் உண்டு... எனக்கு இங்க டிவி பார்க்க கூட உரிமையில்லையா ?" என்றாள்.

இந்த கேள்வியை கேட்டதும் பதிலேதும் பேசாமல் ரிமோர்ட்டை தூக்கியெறிந்துவிட்டு திரும்பி படுத்துக் கொண்டான்.

அவர்கள் இருவரும் ஒரு காலத்தில் ஊரே வேடிக்கை பார்க்க சண்டை போட்டிருந்தாலும்,.குழந்தைகள் முன்னிலையில் அந்த தவறை செய்வதில்லை என உறுதி பூண்டிருந்தனர்.

வெளியே அவன் எது சொன்னாலும் விருப்பமில்லாவிடிலும் கேட்டுவிடுவது போல அவள் தலையசைத்தாலும், அறைக்குள் வந்த மாத்திரத்தில் தான் சேகரித்த மொத்த கோபத்தையும் ஏதோ ஓரு விதத்தில் காட்டுவாள்.

இப்போதைக்கு அவள் வெறப்பை காண்பிக்க ஒரு வழி அந்த தொலைக்காட்சி.

அவளின் மனமும் அந்த தொலைக்காட்சி நிகழ்வுகளில் லயிக்கவில்லை.

எனினும் மகள் விஷயத்தில் தன் கணவன் ரொம்பவும் செல்லம் தந்து கெடுக்கிறான் என்றும், ஏன் தனக்கே அவளை கண்டிக்கும் உரிமையை தரமாட்டேன் என்கிறான் என்றும் ஒரு தாயாக எழுந்த ஆதங்கம்தான் அவளை அவனிடம் அப்படி கோபப்பட வைத்தது.

இப்படி யோசித்திருக்கும் போதுதான் அந்த டிவி செய்தி ஒளிப்பரப்பானது.

யதச்சையாகதான் கவனித்தாள்.

அவள் பார்த்தது உண்மைதானா ?

அவசர அவசரமாய் அருகிலிருந்த கணவனை உலுக்கியபடி எழுப்பினாள்.

"வீர்ர்ர்ர்ர்" என்று அவள் சத்தமிட சலிப்போடு எழுந்தவன் "தூங்கின பிறகுதான் கத்தி என் உயிரை எடுப்ப, இப்போ முழிச்சிட்டிருக்கும் போதேவா" என்று கோபமாய் கேட்க, அவளால் பதில் சொல்ல முடியவில்லை.

டிவியின் மீதிருந்த பார்வையை எடுக்காமலே அவனிடம் அந்த காட்சியை காண்பிக்க அவனும் அதனை நோக்கினான்.

"கடலின் ஆழத்தில் கிடைத்த ஓர் ஆபூர்வமான சிலை. ராமேஸ்வரம் கடற்கரையில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கண்டறிந்த அதிசயம்.

கடலின் அடி ஆழத்தில் ஆறடிக்கும் உயரமுள்ள இராஜ கம்பீர பெண் கடவுள் சிலை கண்டறியப்பட்டது.

பெரும் போராட்டத்திற்கு பின் அந்த சிலை கடல் வீரர்களின் உதவியோடு மீட்கப்பட்டது.

இந்த சிலை தற்போதைக்கு கடலோர பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைத்த நிலையில், அந்த சிலையின் காலம் குறித்து கண்டறிய தொல்பொருள் ஆய்வாளர்களிடம் அந்த சிலை விரைவில் ஒப்படைக்கப்படப்படும் என எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இவ்வாறாக அந்த பெண் செய்தி வாசிப்பாளர் சொல்லிக் கொண்டிருக்க இருவருமே தங்கள் விழிகளை எடுக்கவேயில்லை.

வீரேந்திரனும் வியப்போடு பார்த்து கொண்டிருக்க தமிழுக்கு மெய்சிலிர்த்து போனது.

அந்த சிலைதானே அது. பலமுறை கேட்டுக் கொண்டாள்.

அவளால் நம்பமுடியவில்லை. ஆனால் உண்மை !

அவளுக்குள் உண்டான பிரம்மிப்பினை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது. அத்தனை கம்பீரமாய் இருந்தது அந்த சிலை வடிவம்.

கனவிலும் எண்ணியதில்லை.

அவளின் காலத்தில் அந்த சிலையை மீண்டும் பார்ப்பாள் என்று!

மயிர்ககூச்சு உண்டானது அவளுக்கு !

காரிருள் சூழ்ந்து சூர்யனை மறைக்க முயற்சித்தால் அவன் மறைந்துவிடுவானா? !

இல்லை மறைக்கத்தான் இயலுமா?

தமிழனின் பாரம்பரியத்தையும் பெருமையையும் என்றுமே அழிக்க முடியாத என்பதற்கான அழுத்தமான சான்றே அந்த சிலை !

அந்த கீரிடத்தை எதன் காரணத்தால் நம் சந்ததியினர் இத்தனை காலங்களாய் பாதுகாக்கின்றனர் என்று அவளுக்குள் பலமுறை கேள்வி எழும். இன்று அவற்றிற்கெல்லாம் விடை கிட்டியது போல் இருந்தது.

அந்த சிலையின் பிரமாண்டத்தை அவள் கற்பனை செய்திருக்கிறாள். ஆனால் இப்பொழுது பார்க்கும் போது அந்த சிலை கற்பனைகளுக்கெல்லாம் அப்பாற்ப்பட்ட ஒன்றாய் அதிகம்பீரமாய் இருந்தது.

அதனின் நேர்த்தியான வடிவமைப்பும் வேலைப்பாடும் அந்த சிலையின் இன்னொரு சிறப்பம்சம்.

உண்மையலேயே அந்த கீரிடம் அல்ல பொக்கிஷம்.

அந்த சிலைதான் விலைமதிப்பில்லாத பொக்கிஷம் என்று தோன்றியது அவளுக்கு!

ஆம் ! அதுதான் பொக்கிஷம் !

அதுவே நம் தமிழ் பாரம்பரியத்தின் சிறப்பும் பெருமையும் கூட.

***முற்றும்***


************************************View attachment 893
 




Last edited:

Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
முடிவுரை

அன்பிற்குரிய வாசக நண்பர்களே,

வணக்கம்

இந்த கதை அதற்கு பிண்ணனியில் உள்ள கருத்துக்களை நான் சொல்லாமலே பலருக்கும் புரிந்திருக்கும். இருந்தாலும் நான் சொல்ல நினைத்த சில விஷயங்களை இங்கே பதிவிட்டுவிடுகிறேன். என் கதையை பொறுமையாய் படித்தது போல இந்த முடிவுரையையும தயவு கூர்ந்து முழுவதுமாய் படித்துவிடுங்கள்.

அதுவே இந்த கதையை எழுதியதின் ஒரே நோக்கம்.

தமிழன் என்ற ஒரு இனம். அவனுக்கென்று பல்லாயிரம் பெருமைகளும் சிறப்புகளும் இருந்தன. இன்று இருக்கிறதா? நாளை இருக்குமா? அதெல்லாம் தெரியாது. ஆனால் அதை காக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.

நம் பழமையையும் பாரம்பரியத்தையும் எதுக்கு வேலை வெட்டியில்லாம காப்பாத்துகிட்டு.

ஒன்றே குலம் ஒருவனே தேவன் - ஆயிரம் வருடம் முன்பு திருமூலர் சொன்ன கருத்து.

யாதும் ஊரே யாவரும் கேளீர்..
கணியன் பூங்குன்றனாரின் வரிகள். இந்த பெருமைக்குரிய கருத்துக்களை என்றோ சொல்லப்பட்டுவிட்டது.

ஆனால் இதையெல்லாம் சொல்லிக் கொடுக்கத்தான் ஆளில்லாமல் போய்விட்டது. தமிழ் படித்தால் மார்க் எடுக்க முடியாதுன்னு பிரெஞ்ச் மற்றும் சமஸ்கிருதம் படிக்கிறேன் என பல மாணவர்கள் சொல்ல கேட்க அதீதமான வலி.

நாம எதை தொலைக்கிறோம்னு தெரியாமலே தொலைச்சிட்டிருக்கோம்.

இன்னைக்கான கல்வி முறை நம்மை எல்லாம் பணம் படைக்கும் ஒரு இயந்திரமாகவே உருவாக்குகிறது.
பண்புள்ளவனாய் உருவாக்குவதில்லை. ஒரு ஆசிரியையாக இதனை கண்கூடாய் பார்த்தவள் நான்.

நாம் எல்லோரும் இன்னைக்கு அறிவாளி குருடர்களாய் மாற்றப்பட்டிருக்கிறோம். ஆம் அறிவாளி குருடர்கள்தான்.

முதலில் தாய்மொழி கல்வி என்பது தாய்ப்பால். ஆனால் நாம் பருகி கொண்டிருப்பது புட்டி பால். பின் நம் சமுதாயம் எங்கிருந்து ஆரோக்கியமாய் கட்டமைக்கப்படும்.

ஒரு விஷயத்தை அழுத்தமாய் பதிவிடுகறேன்.

இலக்கியமும் செய்யுளும் படிச்சா போரடிக்கும்னு நாம படிக்காம விட்டுட்டோம். ஆனால் அதில் சொல்லப்படாத விஷயங்களே இல்லை.

வீரம் காதல் கொடை பக்தி அறிவியல் இயற்கை விவசாயம் அறம் என எல்லாமே அடங்கியது நம் தமிழ் மொழி.

தமிழ் இலக்கியங்களும் தமிழ் வரலாறும் சொல்லும் கருத்தில் பல அறிவியல் ரசியங்கள் இருக்கு. இயற்க்கையை காப்பதற்கான வழிமுறை இருக்கு. ஒவ்வொரு மனிதனும் ஆரோக்கியமாய் வாழ மருத்துவம் சொல்லப்பட்டிருக்கு. ஒருவன் அறம்சார்ந்து நடக்க எண்ணிலடங்கா கருத்துக்கள் இருக்கு. எல்லாமே இருக்கு. ஆனால் அதை துச்சமாய் தூக்கிப்போட்டுவிட்டு எங்கேயோ ஓடிக் கொண்டிருக்கிறோம்.

Hiroshima nagasaki அழிந்ததை சொல்லித்தரும் நம் கல்விமுறை First world war, second world war என இவற்றிற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்கும் நம் வரலாற்று புத்தகங்களில் பல்லாயிரம் வருட பழமையான நம் வரலாறுக்கு எத்தனை பக்கங்கள் இருக்கும்.

Revolt of 1857 முதல் சுதந்திர போராட்டம் னு சொல்லி கொடுப்பது உண்மையில்லை. ஆம் அது முதலில் தமிழகத்தில் ஆரம்பித்தது.

வேலூர் புரட்சிதான் முதல். வரலாற்றில் கூட நம் சிறப்பு மறைக்கப்பட்டு ஒரு பொய்யான வரலாறை நாம் படித்து கொண்டிருக்கிறோம்.

இதையெல்லாம் இனிமே தெரிந்து என்னவாகப் போகிறதுன்னு கேட்காதீங்க.

இழந்ததை மீட்க முடியாவிடிலும் இனி எதையும் இழக்காமல் இருக்க முற்படுவோமே!

நாம நம் வருங்கால சந்ததிகளுக்கு இதையெல்லாம் கொண்டு சேர்க்கனும்.

இயற்கையை நேசிச்சி காதலித்தவன் தமிழன்.

கல்லணையை கட்டிய கரிகாலன் பற்றி ஒரு சுவரஸ்யமான தகவல். காவிரி வீணாய் சென்று கடலில் சேரவிடாமல் அது விவசாயத்துக்கு பயன்பட வேண்டும் என நினைத்தான்.

கரிகாலன் கடற்கரையில் நின்று யோசித்திருந்த போது அவன் நின்றிருந்த இடத்தில் அலைகள் வந்து அடித்து அவன் கால்கள் மண்ணில் புதைந்ததாம். அப்போது தோன்றியது ஓர் யோசனை அவனுக்கு. பெரிய தூண்களை கட்டமைத்து ஓடும் நதி பிரவாகத்தில் நிறுத்தினால் அது நிச்சயம் மண்ணில் புதையுறும். அது கல்லணை கட்ட ஏதுவாய் இரூக்கும். இதுவே தமிழனின் புத்திக்கூர்மை. இயற்கையை செழிப்புற செய்ய நம் அறிவு பயன்ப்பட்டது என்பதற்கு சான்று.

நாமெல்லாம் தஞ்சை செல்லும் வழியில் திருப்பாலைதுறையில் பாலைவனநாத சுவாமி கோவிலுக்கு போக வேண்டும். கட்டிடக்கலைஞர்களை பிரமிக்க வைக்கும் பிரமாண்டமானை நெற்களஞ்சியம் சோழன் காலத்தில் கடட்மைக்கப்பட்டு இருக்கிறது.

தஞ்சை பெரிய கோவில். பிரமிப்பின் உச்சக் கட்டம். அங்கே வெளியே இருக்கும் துவாரபாலகர் சிலையை பார்த்ததுண்டா? யானையை விழுங்கும் பாம்பும், அதனை மிதித்த படிநிற்கும் துவார பாலகர்கள். யானையே பெரியது. அதை விழுங்கும் பாம்பு எத்தனை பெரியது. அதனை மிதிக்கும் துவாரபாலகன் எத்தனை பெரியவன். அத்தகைய துவார பாலகனை காவலனாய் கொண்ட மூலஸ்தல நாயகன் எத்தனை பெரியவன்.

அந்த சிற்பியின் சிந்தனையும் அறிவும் எத்தனை எத்தனை பெரியது. அங்கே நிற்கிறான் தமிழன்.

ஆனால் இன்று அடிமைப்பட்டு ஊழியம் செய்ய போய்விட்டோம். சில விஷயங்களை மாற்ற இயலாது எனினும் இதையெல்லாம் மொத்தமாய் மறந்துவிட கூடாது.

இன்று நம்முடைய நெற்களஞ்சியம் விரைவில் மீத்தேன் வாயுவால் பாலைவனமாய் மாறப் போகிறது.

நாம் நம் பழமையை இனியும் மறந்திருந்தால், அதன் விளைவு இன்னும் இதை விட மோசமான விபரீதங்களில் போய் முடியும்.

நான் இந்த கதையில் மூழ்கி போன சிலையென உரைப்பது நம் தமிழ் உணர்வை.

விலை மதிப்பில்லாத கீரிடம் என்று சொல்லியிருப்பது நம் தமிழ் மொழியை...

அந்த தமிழன் என்கிற உணர்வை எங்கயோ தொலைந்து
அடி ஆழத்தில் இருக்க, அந்த உணர்வு வெளிப்பட்டால் மட்டுமே அந்த கீரிடம் அதன் சிறப்பை பெற முடியும்.

அதாவது நம் மொழி அதன் பெருமைக்குரிய இடத்தை அடைய முடியும்.

நம் உணர்வும் மொழியும் அழிந்துவிடவில்லை. அதனை யாரும் அழிக்கவும் முடியாது.

அதை வெளிகொணர வேண்டியதும் பாதுகாக்க வேண்டியதும் நம் கடமையல்லவா ?!

சிம்மவாசல் மற்றும். ராஜ சிம்மன் அரண்மனை என் கற்பனைதான் எனினும் அதற்கு பிண்ணனியில் காவிரிபூம்பட்டினம் என்ற ஒரு நகரம் இருக்கிறது. 1500 வருடங்களுக்கு முன்பே நூறு போர்க்கப்பல்கள் நின்றிருந்ததாம். அங்கே இரவும் பகலும் அங்காடிகள் இருக்க ஏற்றுமதி இறக்குமதி என பொன்னும் பொருளும் குவிந்திருந்த செழிப்பான நகரம். அதோடு வியாபரத்திலும் அந்த நகரம் பெரும் பேறு பெற்றிருந்தது.

ஆனால் ஒரே ஒரு பேரலை அந்த நகரத்தையே கடலுக்குள் இழுத்து கொண்டது.

இது ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையில் சொல்லப்பட்டிருக்கிறது.

நீங்கள் நம் பழமையையும் பாரம்பரியத்தையும் காக்க எண்ணினால் நேரம் கிட்டும் போதெல்லாம் நம் நாட்டில் உள்ள பழமையான கோவில்களுக்கு உங்கள் பிள்ளைகளை அழைத்துச் செல்லுங்கள்.

கடவுளை தரிசிப்பதை தாண்டி அதன் பழமையையும் வரலாறையும் நீங்களும் கற்று அவர்களுக்கும் மறவாமல் சொல்லித் தாருங்கள்.

நாம் நினைத்தால் மீண்டும் தமிழன் என்ற உணர்வை மீட்டெடுக்க முடியும். நம் குழந்தைளை பண்பாளனாய் மாற்ற முடியும். தமிழனாய் உணர வைக்க முடியும்.

ஒரு சிறிய வேண்டுகோள்.

உங்களின் கருத்தின் உந்துதலும் உத்வேகமே என்னை இந்த கதை எழுதி முடிக்க வைத்தது. தேடல் போட்டியின் கால அவகாசம் இன்னும் ஒன்றரை மாதங்கள் இருக்க நம் கதை முதலில் முடிவுற்றது மகிழ்ச்சியெனினும் ஓட்டு போடும் தருணம் போது தமிழச்சியை மறந்துவிடாதீர்கள்.

முதலில் முடித்ததால் வாசகர்கள் இந்த கதையை தேர்ந்தெடுப்பதில் பின்னடைவு செய்துவிட மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

வாடி என் தமிழச்சியின் வெற்றி உங்கள் கையில்...

ஒவ்வொரு முறையும் சிறப்பான முறையில் கருத்தை பகிர்ந்து கொண்ட அத்தனை வாசகர்களூக்கும் நன்றி மற்றும் லைக் போட்டவர்களுக்கும்

என் மனம்கனிந்த நன்றி நன்றி நன்றி



கதையை குறித்த உங்களின் நீண்ட அலசல்களையும் விமர்சனங்களையும் மறவாமல் பகிர்ந்து கொள்ளுங்கள்.



விரைவில் ஆதியே அந்தமாய் தொடராக வரும். அதே சமயம் தேடல் போட்டில் நான் அவள் இல்லை கதையும் வர இருக்கிறது என அறிவிக்கிறேன்.



நன்றியுடன்
மோனிஷா
 




Vijayasanthi

இணை அமைச்சர்
Joined
Jan 29, 2018
Messages
872
Reaction score
1,284
Location
Sivakasi
சூப்பர் சிஸ்...கதை ஆரம்பத்தில் இருந்து முடிவு வரையிலுமே அடுத்து என்ன அடுத்து என்ன அப்படின்ற கேள்விதான்...ஆரம்பத்தில் இருந்த உறசாகம்,எதிர்பார்ப்பு கடைசிவரை இருந்துச்சு...கதை கற்பனை யாக இருந்தாலும் எழுத்துக்கள் ஒவ்வொன்றும் ஆழமானது மற்றும் அழுத்தமானது...இன்றைய தமிழர்கள் மறந்ததை உங்கள் கற்பனையின் மூலம் தூண்டுகிறீர்கள்...கடைசிவரை வீர் மற்றும் தமிழச்சி அவங்கவங்க குணநலன மாத்தாம அழகான வஆழ்க்கை வாழுறாங்க....ஆதி விஷ்வா ஜோடி சூப்பர்...கடலில் சிலை மீட்டெடுப்பதை படிக்கும் போதே மெய் சிலிர்க்குது...அருமையான மற்றும் சுபமான முடிவு....கதையை விட நீங்க குடுத்த முடிவுரை ஒவ்வொரு தமிழனுக்கும் நெத்தியடி...சூப்பர் சிஸ்...தேடலில் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்....
 




Buvani

மண்டலாதிபதி
Joined
Mar 14, 2018
Messages
245
Reaction score
367
Location
Tamilnadu
Sis mikka mazhilchi.entha oru matramum namidam thuvanga vendum.nan Tamil pulamai vathi alla anal thapindri elutha padika therium.en thalaimuraikum ithai seiya virumbukiren.sametime we should know not for the name languages also.but what ever we are learning we can understand only in our mother tongue.our brain will register in that so will start to write and read in Tamil .not for the name sake as a tamilian we respect our annai tamil.?????. but really I want to appreciate you and your way of writing.because your stories are not the casual love Story.it also carries some message to society.pls keep rocking and the God will give all blessings to you and your family.????????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top