• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Maranathin Marmam - 12

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

MithraPrasath

SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
274
Reaction score
1,366
Age
31
Location
Bangalore
அத்தியாயம் 12

கெளதம் நான் கொல்லி வைப்பதாக கூறி கொண்டு அங்கு வந்து நிற்கிறான். அதை சற்றும் எதிர்பார்க்காத அனைவரும் அதிர்ந்தனர். ஆறுதலாய் சாய்ந்து அழுவதருக்கு தோள் இல்லாமல் தவித்த சௌந்தர்யா கெளதமின் வருகையால் தான் அநாதை இல்லை என்று எண்ணினாள்.

கண்களின் கண்ணீர் வற்றி தான் இருந்தது அவளுக்கு. இருந்தாலும் கெளதமை பார்த்ததும் கண்ணீர் கண்களில் பெருக்கெடுத்தது. அருகில் ஓடி சென்று அவனது முன் நின்று,

“பாத்தீங்களா.. பாட்டி என்ன விட்டுட்டு போய்ட்டாங்க.. நான் அநாதை ஆகிட்டேன் மறுபடியும். எனக்கு இருந்த சொந்தம் எல்லாம் என்ன விட்டுட்டு போயிட்டே இருக்காங்க..” என்று விம்மலும் அழுகையுமாக பேசுகிறாள்.

அவள் பேசுவதை கெளதமை தவிர வேறு எவருக்கும் புரியவும் இல்லை புரிந்து விடபோவதும் இல்லை. அவன் ஆதரவாய் அவளது கைகளை ஏந்தி,

“நான் இருக்கேன்... நானும் உனக்கு சொந்தம் தான், நீ தனி ஆள் இல்ல..

நான் உன்னை கட்டிக்க போறவன் தான...? அப்பறம் என்ன கவலை உனக்கு.. காலம் முழுக்க நான் உன் கூட இருப்பேன்.

பாட்டி உன்னை விட்டுட்டு போகல... உன்னோட தான் எப்போவும் இருப்பாங்க... அவுங்க பக்கத்துல இல்லையேன்னு நீ கவலை படாத.. உனக்கு சந்தோசத்த குடுக்குற தெய்வமா பக்கத்துல இருப்பாங்க..

நான் யாரும் இல்லாத தனி ஆளா நின்னப்போ, பாட்டி என்னை தன்னோட பேரன்னு சொன்னாங்க... அந்த பேரன் இருக்கான் அவுங்களுக்கும் உனக்கும்.. நான் உங்கள தனியா விட மாட்டேன்.”

“இப்போ யாரு தான் கொல்லி வைக்க போறீங்க..?” என்று ஒருவர் கேக்கிறார்.

கெளதம் அவளது கைகளில் இருந்து தன் கைகளை விடுத்து முன் சென்று, “நான் தான் வைக்க போறேன்... அவுங்களுக்கு நான் பேரன்...”

“சரிப்பா... நீ போய் தலைக்கு தண்ணி ஊத்திட்டு வா, வந்து வாய்க்கரிசி போடு...”

கெளதம் சடங்குகளை செய்தான். சடலத்தை தூக்கி சென்றனர்.

சௌந்தர்யாவுடன் சேர்ந்து சுந்தரியும் வீட்டை சுத்தம் செய்து குளித்து முடித்து அடுத்து செய்ய வேண்டிய வேலைகளை செய்ய தொடங்கினர்.

இடுகாட்டிற்கு சென்றவர்கள் வீட்டிற்கு திரும்பி வந்தனர். சௌந்தர்யா விளக்கே ஏற்றி முன் அமர்ந்து அழுது கொண்டிருந்தாள். வந்தவர்கள் குளித்து முடித்து விட்டு வந்தனர், சுந்தரி சென்று சௌந்தர்யா எதுவும் சாப்பிடவில்லை என்று கூறி கெளதமை சாப்பிட வைக்க சொல்லுகிறார்.

கெளதம் அவளுக்கு அருகில் சென்று அமர்ந்து அவளை சமாதன படுத்தினான். அவனுக்காக எழுந்து சகஜ நிலைக்கு வந்தவள் போல் பேசினாள். ஆனால் அவளுக்கு சோகம் கண்ணீராய் வந்து கொண்டே தான் இருந்தது.

அப்போது தேவன் அங்கு வருகிறான். தேவனை பார்த்ததும் அனைவருக்கும் ஒன்றும் புரியவில்லை. கௌதம் சென்று அவனை உள்ளே அழைத்து வந்தான்.

சைமன் கெளதமை பார்த்து, “நீ எப்டி கெளதம் வெளில வந்த..?” என்று சந்தேகத்தில் கேட்டான். அது வரை யாருக்கும் அதை கேட்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்பதால் எல்லாரும் அவனிடம் அதையே கேக்கின்றனர். அவனது பதிலுக்காக எல்லாரும் எதிர் பார்த்து கொண்டிருந்தனர்.

“நான் தான் கூட்டிட்டு வந்தேன், நான் ஒரு வக்கீல்... அதுவும் பரோல்ல தான் கூட்டிட்டு வந்துருக்கேன்... அவன் நைட்க்குள ஜெயிலுக்கு ரிட்டர்ன் போகணும்..” என்று தேவன் கூறுகிறான்.

அனைவருக்கும் அவன் சொல்லுவது புரிந்தாலும் சந்தேகம் தான் வந்தது. ‘தேவன் ஏற்கனவே கெளதமை கொலைகாரன் என்று கோர்ட்டில் கூறினான், அப்படி இருக்கும் போது அவன் எப்படி வெளியே கூட்டி கொண்டு வந்தான் என்று குழம்பி கொண்டிருந்தனர்.

அதேபோல் அவன் சென்னையில் இருக்கிறான், அப்படி இருக்க இங்கு நடப்பது எப்படி தெரியும்..? எப்படி அதுவும் சரியான நேரத்துக்கு இங்கு கூட்டி கொண்டு வந்தான்.

ஒருவேளை அவன் பொய் சொல்லுகிறானா..?! இல்லை கெளதமை கொலை செய்யும் நோக்கத்தில் எதுவும் வெளியே கொண்டு வந்தானா..?!’

என்று எண்ணி பயந்து போனால் சௌந்தர்யா.

இதே போல சந்தேகம் மற்றவர்கள் மனதிலும் இருந்தது. முருகன் சந்தேகத்தை கேட்டுவிட்டான்.

“கெளதம் நிஜமாவே தேவ் தான் உன்னை கூட்டிட்டு வந்தானா..? இல்லை அது பொய்யா..?”

சைமனும், “அவனுக்கு எப்டி இங்க நடக்குறது தெரியும்..?” கேட்டான்.

கெளதம் தேவனின் அருகில் சென்று அவனது கைகளை பிடித்து, “தேவ் என்னை புரிஞ்சுகிட்டான். நிஜமாவே அவன் தான் என்னை வெளில கூட்டிட்டு வந்தான்..

நீங்க நினைக்கிற மாதிரி வேற எதுவும் இல்ல..” என்று கெளதம் கூறுகிறான்.

இருந்தாலும் அவர்களது சந்தேகம் இன்னும் முழுவதுமாக தீரவில்லை என்பதால் அவர்கள் எல்லாரும் தேவனை ஏற்று கொள்ளவில்லை.

பின் தேவனே அவர்களது சந்தேகத்திற்கு விடை அளித்தான்.

“எனக்கு புரியுது, உங்களுக்கு இத ஏத்துக்க முடியாதுன்னு. இருந்தாலும் அது தான் உண்மை.

நான் கடைசியா வந்து அன்னைக்கு கோர்ட்ல கெளதம்க்கு எதிரா சாட்சி சொன்னேன்... அதுக்கு அப்பறம் நான் வீட்டுக்கு போனப்போ தான் அம்மா சொன்னாங்க கெளதம் நிஜமாவே எந்த கொலையும் பண்ணலன்னு..”

சௌந்தர்யா முகத்தில் அப்போது ஒரு திருப்தி ஏற்பட்டது. ‘அன்று கெளதம் நான் தான் கொலைகாரன் நான் தண்டிக்க பட வேண்டியவன் தான்னு குற்ற உணர்ச்சில பேசிட்டு இருந்தாரு, இப்போ இந்த விஷயம் கேட்ட பின்னாடி அவருக்கு இருந்த குற்ற உணர்ச்சி போய் மன கஷ்டம் குறைஞ்சுருக்கும்’ என்று எண்ணி சந்தோஷ பட்டாள்.

“அன்னைக்கு கெளதம் மாதவ்க்கு கொடுத்த தண்ணி அவனோட வாயிலே தான் இருந்துச்சாம், அத அவன் குடிக்கவும் இல்ல, அதனால அவன் சாகவும் இல்ல..

இத டாக்டர் அம்மா கிட்ட சொல்லிருக்காங்க. அதுனால தான் அம்மா அந்த கேஸ் வேணாம்ன்னு வித்ட்ரா பண்ணிருக்காங்க..”

எல்லாருக்கும் உண்மை தெரிந்ததும் சந்தோஷத்தில் கெளதமின் அருகில் சென்று அவனை கட்டி தழுவி மகிழ்ந்தனர்.

முருகன், “எனக்கு தெரியும் நீ கொலை பண்ணிருக்க மாட்டன்னு.. எனக்கு நம்பிக்கை இருந்துச்சு.. அது இன்னைக்கு தெரியவும் வந்துருச்சு.. ரொம்ப சந்தோஷமா இருக்கேன்..” என்று சந்தோஷ பூரிப்பில் பேசினான்.

தேவ், “இனி சந்தோஷம் மட்டும் தான் இருக்கும்... நான் இந்த கேசுல கெளதமுக்காக வாதடுறேன். அவன கண்டிப்பா இதுல இருந்து வெளில கொண்டு வந்துருவேன். நீங்க எல்லாரும் நம்பிக்கையா இருங்க..”

சௌந்தர்யா, “ரொம்ப நல்லது பண்ணுறீங்க.. ரொம்ப நன்றிங்க..”

“நீங்க எனக்கு நன்றி சொல்லி என்ன பிரிச்சுடாதீங்க.. கெளதம் என்னோட ப்ரெண்ட். நான் அவனுக்காக இத பண்ண மாட்டேனா..”

சைமன் குறுக்கிட்டு, “உனக்கு எப்டி இங்க நடக்குறது தெரியும்..? அதுவும் சரியான நேரத்துக்கு கௌதம இங்க கூட்டிட்டு வந்த..?”

“நான் கௌதம பார்த்து மன்னிப்பு கேட்டுட்டு போக தான் வந்தேன்.. இன்னைக்கு நான் இங்க வந்தப்போ தான் கேஸ் டீட்டைல்ஸ் தெரிய வந்தது. அதுவும் இங்க நடந்ததும் தெரிய வந்தது.

இங்க கெளதம் தேவைன்னு எனக்கு தோனுச்சு.. அதான் அவன பரோல்ல கூட்டிட்டு வந்தேன்..

இவன இங்க அனுப்பிட்டு எனக்கு அங்க சில வேலை இருந்துச்சு அத முடிச்சுட்டு வர லேட் ஆகிடுச்சு...”

“நீ இன்னைக்கு இவன இங்க கூட்டிட்டு வந்து ரொம்ப நல்லது பண்ணிருக்க...

நாங்க எப்டி தான் சௌந்தர்யாவ சமாதன படுத்துறதுன்னு முழிச்சுட்டு இருந்தோம்... கெளதம் இருந்தா இந்த பிரச்சனை இருந்துருக்காதுன்னு நினைச்சுட்டு இருக்கேள கௌதம நீ இங்க அனுப்பிவச்சுட்ட...

அதுவும் சரியான நேரத்துக்கு இங்க அனுப்பி ரொம்ப பெரிய நல்லது பண்ணிட்ட..” என்றான் முருகன்.

“எனக்கு நன்றி எல்லாம் தேவை இல்ல... நீங்க எல்லாரும் என் கூட மறுபடியும் நல்ல ப்ரெண்ட்ஸ் ஆனா போதும். அதுவே எனக்கு ரொம்ப சந்தோஷ்ம்.”
 




MithraPrasath

SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
274
Reaction score
1,366
Age
31
Location
Bangalore
அவர்கள் நால்வரும் தேவனின் அருகில் சென்று “நீயும் எங்க நண்பன் தான்..” என்று கூறி அவனையும் கட்டி தழுவி நண்பர்கள் ஆகினர். தேவன் மிகவும் சந்தோஷ பட்டான்.

“சரி ரொம்ப நேரம் ஆகிடுச்சு கெளதம்... மறுபடியும் ஜெயிலுக்கு போகணும்.. நாம கிளம்பலாமா..?” என்று தேவன் கெளதமை கேக்கிறான்.

கெளதம் யோசித்து கொண்டே, “நான் சௌந்தர்யா கூட கொஞ்சம் தனியா பேசனும்.. பேசிட்டு போகலாமா..”

“சரி பேசிட்டு வா... நாங்க வெளில வெயிட் பண்ணுறோம்.” என்று முருகன் சொல்ல, அனைவரும் வெளியே செல்லுகின்றனர்.

அப்போது தேவன் திரும்பி, “ஒரு நிமிஷம் கெளதம்... நான் சௌந்தர்யா அவுங்க பாதுகாப்புக்கு போலீஸ் வர சொல்லிருக்கேன்... பாடிய கொன்னவங்க மறுபடியும் வரலாம்ல, அதான்... எப்டியும் ஒரு லேடி கான்ஸ்டபில் வருவாங்க, அவுங்க கூட பாதுகாப்பா இருங்க சௌந்தர்யா...”

முருகன், “ஆனா பாட்டிய யாரும் கொலை பண்ணல.. அவுங்க தண்ணில கால் வச்சு கீழ வழுக்கி விழுந்து தலைல அடி பட்டு தான் இறந்தாங்க... வேற ஒன்னும் இல்ல..”

“எனக்கு தெரிஞ்சு அப்டி நடக்க வாய்ப்பே இல்ல... அப்போ ஏன் கதவு நீங்க வரும் போது திறந்து கிடந்துச்சு..?

யாரோ கொலை பண்ணிட்டு, தப்பிக்க அப்டி பண்ணிருப்பாங்கன்னு எனக்கு தோனுச்சு, அதான் போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணி பாதுகாப்பு கேட்டுருக்கேன்..”

கெளதம், “அவன் சொல்லுறது தான் எனக்கும் தோணுது, போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணது சரி தான்..”

தேவன், “சரி சரி நீ பேசிட்டு வா...” என்று கூறிவிட்டு வெளியே சென்றான். அனைவரும் வெளியே செல்கின்றனர். சைமனும், சந்தோஷ் இருவரும் கிளம்பிவிட்டனர்.

தேவன் ஏதோ போல் நின்றிந்தான். அவனுக்கு அருகில் சென்று முருகன்,

“நான் அங்கேயே கேக்கணும்ன்னு நினைச்சேன்.. ஆனா அது சரி வராதுன்னு எனக்கு தோனுச்சு... அதான் இப்போ தனியா வச்சு கேக்குறேன்..”

எதை கேக்க போகிறான் என்று குழப்பத்தில் நின்றான் தேவன்.

“மாதவன் எப்டி இறந்தான் அப்போ..? நீ உண்மை தான சொல்லுற..?” என்று சந்தேகத்தோடு கேட்டான்.

“மாதவ்க்கு அன்னைக்கு என்ன நடந்ததுன்னு தெரியல... டாக்டர் தெளிவா எதுவும் சொல்லல போல... அவனுக்கு நடந்தது கொலையா..? இல்ல சாதரணமா வீசிங் தானன்னு தெரியல...”

“அன்னைக்கு நாம எல்லாரும் விளையாண்டுட்டு தான இருந்தோம், அப்போ ஏதாது தூசி பட்டு மூச்சு அடிச்சுருக்கும்.. மற்ற படி இது கொலையா இருக்க வாய்ப்பு இல்லன்னு தோணுது..”

“இல்ல... அவன் அந்த விஷயத்துல எப்போவும் கவனமா இருப்பான்.. இருந்தும் இப்டி நடந்தது எனக்கு தப்ப தான் தோணுது. அம்மாக்கு கூட அவன யாரோ கொலை பண்ண ட்ரை பன்னிருக்காங்கன்னு தான் தோணிருக்கு, அதான் என்னை கூட்டிட்டு சென்னைக்கு போய்டாங்க...

நான் இங்க இப்போ வந்தது கூட அன்னைக்கு என்ன நடந்ததுன்னு கண்டுபிடிக்க தான்..”

“எனக்கு ஒண்ணுமே புரியல... கொலைன்னு என்னால எதுக்க முடியல...”

“நீ அத பத்தி யார் கிட்டயும் சொல்லாத... மொதல கௌதம நாம வெளில கொண்டு வருவோம், அப்பறமா இந்த விஷயத்த பாப்போம்ன்னு நினைச்சுருக்கேன்...”

“ம்ம்..” யோசித்து கொண்டே தலையை ஆட்டினான் முருகன்.

“கெளதம் கேஸ விசாரிக்க போற புது இன்ஸ்பெக்டர் பாரதிராமன் ரொம்ப நல்லவர்ன்னு கேள்வி பட்டேன்... அவர இப்போ பாத்துட்டு தான் வர்றேன்.. எப்டியும் கொலை யார் பண்ணதுன்னு கண்டு பிடிச்சுடலாம்ன்னு சொல்லிருக்காரு..”

அவர்கள் பேசி கொண்டிருக்கும் போதே கெளதம் வெளியே வருகிறான்.

“என்ன பேசிட்டு இருக்கீங்க ரெண்டு பேரும்...?!” என்று நார்மலாக கேட்டான். அவனுக்கு பேசியது எதுவும் கேட்டுவிட வில்லை என்பது நன்றாக தெரிந்தது.

தேவன், “அது ஒன்னுமில்ல... உன்னோட கேஸ் விசயமா தான்.. புது இன்ஸ்பெக்டர் பார்க்க போனேன், அத பத்தி பேசிட்டு இருந்தோம்..”

“சரி.. நாம கிளம்பலாம்...” என்று கெளதம் கூறினான்.

“ம்ம்ம்... போகலாம்.” என்று தேவன் கூறிவிட்டு முருகன் பக்கம் திரும்பி “நாளைக்கு பாக்கலாம்..” என்று கூறி கொண்டே அமைதியாக இருக்குமாறு கண்களை காட்டினான்.

தேவனும், கெளதமும் கிளம்பினர். முருகன் குழப்பத்தோடும், யோசனையோடும் நின்றிருந்தான்.

முருகன் அங்கிருந்து கிளம்பி ஸ்டேஷன் வருகிறான். அங்கு இன்ஸ்பெக்டர் பாரதிராமன் இருந்தார். அவரிடம் சென்று பேசுகிறான்.

“ஹலோ சார்... நான் முருகன்... கெளதம் கேசுல புதுசா வந்துருக்க இன்ஸ்பெக்டர் நீங்க தானா சார்...”

“எஸ்.. ஐயாம் இன்ஸ்பெக்டர் பாராதிராமன்.

நீங்க தான் கடத்தப்பட்ட முருகனா..?”

“ஆமாம் சார்... நீங்க என்னை கடத்தினவன விசாரிச்சுசீங்களா..?”

“நான் உங்கள தான் வர வைக்கணும்ன்னு நினைச்சுட்டு இருந்தேன்... நீங்க அர்ரெஸ்ட் பண்ணவன பாத்தீங்களா..? அவன் தான் உங்கள கடத்தினவனா..?”

“எஸ் சார்.. அவன் தான்.”

“ம்ம்ம்.. நீங்க அங்க வேற யாராது பார்த்தீங்களா..? உங்களுக்கு ஞாபகம் இருக்கா..?! யோசிச்சு பாத்து சொல்லுங்க..”

“இல்ல சார்.. அவுங்க எல்லாரும் முகத்த மூடி தான் இருப்பாங்க... அன்னைக்கு நான் தப்பிக்கும் போது இவன மட்டும் தான் பார்த்தேன். மற்றவங்க எல்லாரும் அங்க இல்ல அப்போ..”

“அவுங்க எத்தன பேரு இருந்தாங்க..?”

“எனக்கு சரியா தெரியல சார்..”

“ம்ம்.. நான் இவன் கிட்ட விசாரிச்சேன்.. ஆனா எந்த பதிலும் சொல்ல மாட்டுறான்..”

“நான் அவன் கிட்ட விசாரிக்கலாமா சார்..?”

“அது ரூல்ஸ் கிடையாது.. இருந்தாலும் பேசி பாருங்க, ஆனா வேற எதுவும் பண்ண கூடாது..”

“ஓகே சார்.. நான் சும்மா விசாரிக்க மட்டும் செய்றேன்..”

இன்ஸ்பெக்டரிடம் அனுமதி பெற்று அவனை விசாரிக்க செல்கிறான் முருகன். முருகன் கேட்டதற்கு அவன் அப்போதும் எந்த பதில் பேசவில்லை. இவன் எதுவுமே பேச மாட்டுறான் என்று கோபமாக வந்தது.

இன்ஸ்பெக்டரிடம் சென்று அவனை அடித்து விசாரிக்க சொல்கிறான் முருகன். அவர் ஏற்கனவே அடித்து பார்த்தும் அவனிடம் எந்த பதிலும் வர வில்லை என்று கூறுகிறார். மறுபடியும் அடித்து முயற்சி செய்து பார்க்க சொல்லி கேட்டு கொண்டான்.

ஆனால் இன்ஸ்பெக்டர் அவனிடம் உண்மையை வாங்குவது கஷ்டமாக இருக்கிறது என்று கூறினார். அவனிடம் இருந்து உண்மையை வாங்குவது முடியாத காரியம் என்று கூறினார். அதை கேட்டு முருகனுக்கு அவன் மேல் கோபமாக வந்தது. அவன் உண்மையை கூறினால் நான் உங்களுக்கு தகவல் சொல்லுகிறேன் என்று கூறி முருகனை அங்கிருந்து கிளம்ப சொல்லுகிறான் இன்ஸ்பெக்டர்,

இன்னைக்கு என்ன மட்டும் அடிக்க விட்டுருந்தா நான் அடிக்கிற அடில அவன் தானா உண்மை சொல்லி இருப்பான் நம்மை எதுவும் செய்ய விட போவதும் இல்லை, அவர்களும் எதுவும் செய்ய போவதும் இல்லை என்று மனதில் நினைத்தான். அதற்க்கு மேல் அங்கு இருக்க பிடிக்காமல் கிளம்பினான்.

வீட்டிற்கு சென்று கட்டிலில் படுத்த பின் அன்று நடந்த அனைத்தும் நிழலாய் மனதில் ஓடின. ஒரு நிமிடத்தில் எல்லாம் மாறி விட்டது என்று நினைத்து கொண்டிருந்தான். கெளதம் மேல் இருந்த கொலை பழி ஒன்று விலகியது என்று எண்ணி சந்தோஷமடைந்தான்.

நினைத்து கொண்டிருக்கும் போதே தேவன் கூறியதும் நினைவுக்கு வந்தது. மாதவனை யார் கொலை செய்திருப்பார்கள் என்று எண்ணினான். அப்படி நடக்க எப்படி வாய்ப்பு உள்ளது என்று எண்ணி மனதை வேறு எண்ண மாற்றினான். ஆனால் மனம் அதிலே சென்று நின்றது.
 




MithraPrasath

SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
274
Reaction score
1,366
Age
31
Location
Bangalore
தேவன் கூறியது போன்று இதை அடுத்து பார்க்கலாம். முதலில் கெளதமை வெளியே கொண்டு வர வேண்டும் என்று எண்ணி யோசனையில் ஆழ்ந்தான். நாளை அவனை எப்படி விசாரித்தால் உண்மையை வாங்கலாம் என்று எண்ணி கொண்டிருந்தான். திடீரென்று, “இது நல்ல யோசனை..” என்று முனங்கினான். அதை நாளை சென்று இன்ஸ்பெக்டரிடம் சொல்லி செய்ய வேண்டும் என்று ஒரு முடிவுக்கு வருகிறான். அப்படியே யோசனையில் ஆழ்ந்து உறங்கி போய் விடுகிறான்.

மறுநாள் காலை சீக்கிரத்திலே கிளம்பினான். சைமனும் அங்கு முருகனை பார்க்க வருகிறான். இருவரும் சேர்ந்து ஸ்டேஷன் செல்கின்றனர். அங்கு இன்ஸ்பெக்டர் அவரது வேலையே பார்த்து கொண்டிருக்கிறார்.

அவரிடம் சென்று, “சார்...” என்கிறான்.

அவர் பார்த்து விட்டு, “வாங்க முருகன்... என்ன இவ்ளோ காலைலே வந்துட்டீங்க..?!”

“ஆமாம் சார்.. எங்க ப்ரெண்ட் இப்டி ஒரு கஷ்டத்துல இருக்கும் போது எங்களுக்கு எப்படி ஓடும் மற்ற வேல...” என்று சைமன் கூறுகிறான்.

அவனை இன்ஸ்பெக்டர் பார்த்ததும், “இவர் யாரு..?” என்று கேக்கிறார்.

“நான் சைமன்.. கெளதம் ப்ரெண்ட்...”

இன்ஸ்பெக்டர் அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் பார்கிறார். அவரது பார்வை புரிந்தது சைமனுக்கு இருந்தாலும் எதுவும் பேசாமல் நின்றான்.

“நீங்க தான இந்த கேஸோட முக்கியமான சாட்சி...?!?!”

“ஆமாம் சார்..” என்று விரக்தியாக கூறுகிறான்.

முருகன் இடைமறித்து, “சார்... நாங்க என்னை கடத்தினவன் கிட்ட இருந்து உண்மைய எப்டி சொல்ல வைக்குறதுன்னு யோசிச்சோம்... அத பண்ணினா அவன் கிட்ட இருந்து உண்மைய வாங்கலாம் சார்..”

“அப்டி என்ன யோசிச்சுருக்கீங்க..?!” போலீஸ் என்ற திமிருடன் கேட்கிறார்.

“அவனோட பேமிலி கூட்டிட்டு வந்து பேச வச்சா.. உண்மைய வாங்கிடலாம் அவுங்க கிட்ட இருந்து...” முருகன் ஆர்வமாகவும் அதேநேரம் அதை இன்ஸ்பெக்டர் ஏற்பாரா என்ற சந்தேகத்தில் தயங்கியும் கூறுகிறான்.

“நீங்க சொல்லுறது நல்ல யோசனை தான்... நாம அவுங்க பேமிலிய வர வைப்போம்.. அதுக்கு முன்னாடி இவன கொஞ்சம் அடிச்சு பேச வைக்க பாப்போம்..” என்று இன்ஸ்பெக்டர் கூறவும், இன்ஸ்பெக்டர் அவர்களது ஆலோசனைக்கு தடை சொல்லாமல் ஏற்று பண்ணலாம் என்று கூறியதை நினைத்து மகிழ்ந்தனர்.

இன்ஸ்பெக்டர் அவனது பேமிலியை வர வைக்க ஏற்பாடு செய்கிறார். பின் அவனை அடிக்க பிரம்போடு உள்ளே செல்கிறார். இன்னும் இரண்டு கான்ஸ்டபில் சென்று அவனை அடித்து அடித்து பார்கின்றனர். அவன் எதற்கும் மசிவது போல இல்லை என்று தெரிந்து இன்ஸ்பெக்டர் ஒரு திட்டம் தீட்டுகிறார்.

வெளியே சென்று தண்ணீர் குடித்து விட்டு கான்ஸ்டபில்லை அழைத்து ஏதோ சொல்லுகிறார். பின் கான்ஸ்டபில் வெளியே செல்கிறார். முருகனும், சைமனும் அங்கு தான் இருந்தார்கள். ஆனால் அவர்களுக்கும் இன்ஸ்பெக்டர் செய்ய போவது தெரியாது.

சிறிது நேரத்தில் ஸ்டேஷன் போன் ஒலிக்கிறது. இன்ஸ்பெக்டர் எடுத்து பேசுகிறார்.

“ஹலோ..”

“எஸ் சார்.. பாதுகாப்பா தான் இருக்கான்... நீங்க சொன்னது மாதிரி தான் விசாரிக்கிறோம்..” என்று பேசிவிட்டு கட் செய்கிறார்.

பேசிவிட்டு செல்லுக்கு அருகில் இருந்த கான்ஸ்டபில் அருகில் சென்று,

“கான்ஸ்டபில் நீங்க அடுத்து விசாரிக்கும் போது நல்லா அடிச்சு விசாரிங்க..”

“சார், அவன இதுக்கு மேல அடிச்சா இறந்துடுவான்..”

“பரவா இல்ல... ஆல்ரெடி இவன கொல்ல யாரோ முயற்சி பண்ணிருக்காங்க.. நாம அவுங்க மேல பழிய போட்டுடலாம்... அத வச்சே அவன் பொண்டாட்டி கிட்ட உண்மையா வாங்கிடலாம்.. நீங்க போய் அவன நல்ல கவனிங்க..” என்று இன்ஸ்பெக்டர் கூறவும், கான்ஸ்டபில் “சரி சார்..” என்று கூறி பிரம்பை எடுத்து கொண்டு செல்லுக்குள் செல்கிறார்.

இன்ஸ்பெக்டரும், கான்ஸ்டபில்லும் பேசியதை அவன் உள்ளுக்குள் இருந்து கேட்டு கொண்டிருந்தான். அவனுக்கு அவர்கள் பேசியது போல நம்மை அடித்து கொன்று விடுவார்களோ என்று எண்ணி பயம் வந்தது.

அடுத்த நொடியே, ‘என்னை இவுங்க கொன்னா அது இவர்களுக்கு பெரிய பிரச்சன அதுனால இவுங்க என்னை கொல்ல மாட்டாங்க... இருந்தாலும் நான் பேச மாட்டுறேன்னு தான இப்டி எல்லாம் பண்ணுறாங்க...

ஆனா நம்ம முதலாளியும் நம்மள கொலை பண்ண முயற்சசி பண்ணுறத சொல்லுறாரே..?! அது உண்மையா இருக்குமா...? இல்ல நம்ம கிட்ட இருந்து உண்மையா வரவழைக்க இப்டி சொல்லுறாங்களா...?

ஒண்ணுமே புரியல...

நம்ம முதலாளி நமக்கும் நம்ம குடும்பத்துக்கும் உதவி செய்வேன்னு சொன்னாரு... அப்டி இருக்க எப்டி நம்மள அவரு கொலை பண்ண பார்ப்பாரு...?

சரி எப்டி இருந்தாலும் இவுங்களுக்கு நாம பேசணும், அவ்ளோ தான...

நான் அந்த கெளதம் பேரையே சொல்லுறேன்...

அது தான் ரெண்டு சைடும் இருந்து நமக்கு ஆபத்து வராது...’

ஒரு வழியாக முடிவுக்கு வந்தான். கெளதமை மாட்டி விட்டுட்டு நாம தப்பிக்கலாம் என்று எண்ணி சந்தோஷ பட்டான்.

ஆனால் அவனுக்கு தெரியாது இன்ஸ்பெக்டர் அவனை பேச வைக்க இப்டி பண்ணுகிறார், உண்மையை வரவழைக்க வேறு பண்ண போகிறார் என்று.

கான்ஸ்டபில் உள்ளே சென்று அடிக்க ஆரம்பித்தார். அடி அப்போது பலமாக தான் இருந்தது, இருந்தாலும் நேரம் பார்த்து சொல்லலாம் என்று அமைதியாகவே இருந்தான்.

ஒரு பத்து நிமிடம் கழித்து அவனே, “நான் உண்மைய சொல்லுறேன் சார்.. அடிக்காதீங்க... தாங்க முடியல...” என்று கூறுகிறான். இன்ஸ்பெக்டர் நாம் நினைத்தது போல நடக்கிறது என்று எண்ணி சந்தோஷமடைந்தார்.

முருகனும், சைமனும் அவன் உண்மையை சொல்ல போகிறான் என்று ஆவலில் எழுந்து சென்று பார்கின்றனர்.

கான்ஸ்டபில் அடிப்பதை நிறுத்தினார். இன்ஸ்பெக்டர் அவனுக்கு அருகில் சென்று, “வழிக்கு வந்தயா..? சொல்லு..” என்று கூறுகிறார்.

“சார்... அது அந்த கெளதம் தான்...

அவன் தான் எனக்கு பணம் குடுத்து, இப்டி பண்ண சொன்னான்.”

இன்ஸ்பெக்டர் அமைதியாக கேட்டு கொண்டிருந்தார். முருகனுக்கும், சைமனுக்கு கோபம் அதிகமாக வந்தது. கோபத்தில் அவனை, “பொய் சொல்லாத..” என்று முருகன் கன்னத்தில் அடித்தான்.

இன்ஸ்பெக்டர், “ஏன் இப்டி பண்ணுறீங்க..? இப்டி எல்லாம் இங்க பண்ண கூடாது.. வெளிய போங்க..” என்று கத்துகிறார். எரிச்சலோடு வேகமாக வெளியே செல்கிறான் முருகன்.

இன்ஸ்பெக்டர் வெளியே வந்து, “என்ன பண்ணிட்டு இருக்கீங்க..? இங்க நான் இன்ஸ்பெக்டர்...” என்று சொல்லவும், முருகன் இஷ்டம் இன்றி திரும்பி கொண்டான். சைமன், “இல்ல சார் அவன் பொய் தான் சொல்லுறான்..”

“அதெப்புடி நீங்க சொல்லுறீங்க..? அது உண்மையா கூட இருக்கலாம்... விசாரிச்சா தெரிஞ்சுடும்...”

சைமன், “சார் கெளதமுக்கு முருகன் அன்னைக்கு அங்க வர்றதே தெரியாது... அப்டி இருக்கும் போது எப்டி அப்டி பண்ணிருப்பான்...”

முருகன், “அதுவும் அவன் சொல்லுறான் பணம் கொடுத்தான்னு... கெளதம் கிட்ட பணம் இருந்தா ஏன் அவன் ஏழையா இருக்க போறான்... அவனும் நல்ல நிலையில இருப்பான்ல...” கோபமாக பேசிவிட்டு திரும்பி கொண்டான்.

“சரி நாம இன்னும் அவன விசாரிப்போம்... நீங்க அங்க போய் உக்காருங்க..” சமாதானத்துக்கு சொல்லுகிறார் இன்ஸ்பெக்டர்.

அவனிடம் மறுபடியும் விசாரிக்க செல்கிறார்.

“உண்மையா சொல்லு.. கெளதம் தான் பண்ண சொன்னானா..?”

“ஆமாம் சார்..”

“சரி அன்னைக்கு நீங்க முருகன் கடத்த அங்க தான் இருந்தீங்க... அப்போ அங்க நடந்த கொலைய யாரு பண்ணது..? கொலையானது யாரு..? சொல்லு..”

“சார் எனக்கு அதெல்லாம் தெரியாது... நாங்க வரும் போதே கெளதம் அவன கொன்னுட்டான்.. எங்களுக்கு அது யாரு என்னன்னு தெரியாது..”
 




MithraPrasath

SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
274
Reaction score
1,366
Age
31
Location
Bangalore
அங்கு இருக்க பிடிக்காமல் முருகன் வெளியே எரிச்சலோடு செல்கிறான். சைமனும் உடன் செல்கிறான். அவர்கள் வெளியே செல்லும் பொது, அங்கு ஸ்டேஷனுக்கு தேவன் வருகிறான். அவன் முருகனை பார்த்து, “என்ன ஆச்சு..? ஏன் இவ்ளோ கோபமா இருக்க..?” என்று கேக்கிறான்.

“இவுங்க எல்லாம் என்ன போலீஸ்..? ஒரு கைதிகிட்ட இருந்து எப்டி உண்மை வரவழைக்கணும்ன்னு கூட தெரியல..” என்று கத்தி பேசினான்.

தேவனும், சைமனும் வேகமாக அவனை சமாதன படுத்த கையை பிடித்து, “மெதுவா பேசு.. இது போலீஸ் ஸ்டேஷன்..” என்றனர்.

பின் அவனை அங்கிருந்து அழைத்து சென்று அருகில் இருந்த டீ கடையில் நின்று பேசுகின்றனர்.

தேவன், “எதுக்கு நீ இவ்ளோ டென்ஷன் ஆகுற..”

“டேய்..! அத கேக்காத எனக்கு எரிச்சலா வருது..” என்று முருகன் கொந்தளித்தான்.

சைமன் நடந்ததை கூறுகிறான்.

தேவன், “நீ கவலை படாத நாளைக்கு நம்ம கௌதம கண்டிப்பா வெளில கொண்டு வந்துடலாம்..”

முருகனுக்கு தேவன் கூறுவதில் நம்பிக்கை இல்லை. பதில் பேசாமல் நின்றான்.

“நான் சொல்லுறத நம்பு.. அன்னைக்கு கெளதம் உன் கூட அங்க வீட்டுல இருந்துருக்கான். அதுக்கு சைமன், பக்கத்துக்கு வீட்டுகாரர்ன்னு ரெண்டு பேர் சாட்சி இருக்காங்க..

அதுவும் நீயும் கெளதமும் அந்த பக்கம் போய் மூணு நிமிசத்துல சைமன் அங்க வந்து பாக்கும் போது அந்த பொணத்த யாரோ தூக்கி போட்டுருக்காங்க...

அது எப்டி மூணு நிமிசத்துல ஒருத்தர கொன்னு, அதுவும் அத மறைக்க வண்டி வச்சு ஏத்தி நசுக்கிருக்க முடியும்..?”

அவன் சொல்லுவது ஏதோ இருப்பது போல் தோன்ற இருவரும் கவனிக்கின்றனர்.

“அன்னைக்கு பொனத தூக்கி போடும் போதே அது நசுங்கி இருந்துச்சு, அப்போ எந்த வண்டியுமே போகலன்னு சைமன் சொன்னான்... எதுக்கு நசுங்கின பொணத்த தூக்கி போடணும்...?

இதுல இருந்தே அது கெளதம் பண்ணலன்னு தெரியுது...

அன்னைக்கு நீங்க அங்க போகுறதுக்கு முன்னாடியே கொலை நடந்துருக்கு.. அத அவுங்க மறைக்க ஆக்சிடென்ட் ஆகிருக்காங்க...

அப்போ தான் நீ அங்க போயிருக்க... அதுனால நீ எதுவும் பாத்துருக்கலாம் அப்டின்னு நினைச்சு கடத்திருக்காங்க, அப்போ கெளதம் அங்க வந்ததுனால அவன் மேல கொலை பழி விழுந்துருச்சு..

இது போதும் நமக்கு கௌதம வெளில எடுக்க..

நீ இவுங்க விசாரிக்கிறது, அவன் சொல்லுறத நினைச்சு கவலை படாத..”

சைமன் சந்தோஷமடைந்தான். ஆனால் அப்போதும் முருகன் குழப்பத்தில் இருந்தான். அவனை பார்த்து தேவன், “இன்னும் ஏன் கவலைய இருக்க முருகா..?” என்றான்.

“நீ சொல்லுறது சரி தான். ஆனா அவுங்க என்ன கடத்தினது அதுக்கு இல்லன்னு எனக்கு தோணுது. அவுங்க என்னை கடத்தி வச்சுருந்த அப்போ ஒரு வார்த்தை கூட கொலைய பாத்தியா அப்டின்னு கேக்கல..

அந்த கொலைய பத்தி பேசினது கூட கிடையாது. எனக்கு தப்பிச்சு இங்க வந்த பின்னாடி தான் தெரியும் நடந்தது எல்லாம்.

என்னை கடத்தினதுக்கு பின்னாடி வேற ஏதோ காரணம் இருக்குன்னு தோணுது...

அதான் நான் அது யாருன்னு தெரிஞ்சுக்க நினைக்கிறேன்..”

மூவரும் யோசனையில் இருந்தனர். அப்போது போலீஸ் வாகனம் ஸ்டேஷனுக்குள் செல்கிறது. அதில் இருந்து ஒரு பெண் மற்றும் இரு குழந்தைகள் இறங்குகின்றனர்.

அதை பார்த்ததும் முருகன், “இவுங்க அவனோட மனைவியும் குழந்தையும்..” என்று கூறவும், தேவன் “வாங்க போய் பார்க்கலாம்..” என்றான். மூவரும் ஸ்டேஷன் செல்கின்றனர்.

தனது மனைவியை அழைத்து வந்ததை பார்த்து அதிர்ச்சியாகினான். ஆனாலும் அவளுக்கு உண்மை தெரியாது என்று நினைத்து ஆறுதல் அடைந்தான்.

இன்ஸ்பெக்டர் அந்த பெண்ணிடம் சென்று, “நீ தான் அவனோட மனைவியா..?”

“ஆமாங்க அய்யா..”

“சொல்லும்மா அவன் யார் கிட்ட வேலை பாக்குறான்..?”

“எனக்கு அதெல்லாம் தெரியாது அய்யா..”

“புருஷன் என்ன வேல பாக்குரானு கூட தெரியாதா..? இல்ல அவன் எதுவும் சொல்ல கூடாதுன்னு சொல்லி வச்சுருக்கானா..?”

“இல்ல அய்யா.. எனக்கு நிஜமாவே தெரியாது...”

“ஓ..! தெரியாதுல உனக்கு..” என்று முறைத்து பார்த்தார். பின், “கான்ஸ்டபில்..” என்று அழைத்து ஏதோ கண்ஜாடை செய்கிறார்.

கான்ஸ்டபில் செல்லுக்குள் சென்று அவனை மூலையில் இழுத்து சென்று அடிக்கின்றனர்.

“அய்யா.. அய்யா அவர அடிக்காதீங்க அய்யா.. எனக்கு நிஜமாவே தெரியாதுங்க அய்யா..” என்று கூறி அந்த பெண் அழுகிறாள்.

“அப்போ நீங்களும் ஜெயிலுக்கு போங்க..” என்று கூறி லேடி கான்ஸ்டபில் அந்த பெண்ணையும் குழந்தைகளையும் சுற்றி நின்றனர்.

இன்ஸ்பெக்டர், “அடிங்க.. தானா உண்மை வரும்...” என்று கூறுகிறார்.

லேடி கான்ஸ்டபில் அந்த பெண்ணை அடிக்கிறார்.

உடனே உள்ளுக்குள் இருந்த அவன் பயந்து போய், “சார் நான் சொல்லுறேன்.. அவள அடிக்காதீங்க..” என்று சத்தமாக கூறி அழுகிறான்.

இன்ஸ்பெக்டர், “சொல்லுடா அப்போ..”

“எனக்கு பணம் குடுத்து முருகன கடத்த சொன்னது பாலு ஐயா தான் சார்..”

முருகன், சைமன் இருவரும் அதிர்ந்தனர். இன்ஸ்பெக்டர், “யாரு அந்த கந்துவட்டி பாலுவா..?”

“ஆமாங்க சார்..”

தொடரும்...
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
enna oru twist kandu vatti baluva:rolleyes::rolleyes::rolleyes::rolleyes::eek: baluvuku enna pagai gowtham mela............. interesting epi sis
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top