• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Unathu Vizhiyil Tholainthen Penne! - 1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அத்தியாயம் – 1

திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள அயலூர். ஒரு பசுமை நிறைத்த ஒரு அழகிய கிராமம். எங்கும் பார்த்தாலும் பச்சை நிறத்தில் காட்சியளிக்கும் வயல்வெளிகளும், அதில் ஒற்றைகாலில் நிற்கும் கொக்கு கூட்டங்களும், அந்த வயல்வெளி மீது வட்டமிடும் வெள்ளை நாரைகளும் கண்ணுக்கு குளிர்ச்சியைத் தரும்.. அங்கே இருக்கும் மலைக்கோவில் எல்லாமே ரசிக்கதக்க ஒன்று.

“அம்மா சாப்பாடு ரெடியாகி விட்டதா..?” என்று அன்னைக்கு குரல் கொடுத்தவண்ணம் பள்ளிக்கு கிளம்பிக் கொண்டிருந்தான் அன்பரசன்.

“ம்ம் ரெடியாகிவிட்டது..” என்று அவனுக்கு குரல் கொடுத்தபடியே வேலையைத் தொடர்ந்தார் சுமித்ரா அன்பரசனின் அன்னை..

“சுமித்ரா சாப்பாடு ரெடியா என்று கேட்டவண்ணம் மாடியில் இருந்து இறங்கி வந்தார் தியாகராஜன்..

“எல்லோருக்கும் எல்லாம் ரெடி ஆனால் யாரும் இன்னமும் டைனிங் ஹால் பக்கம் வந்த மாதிரி தெரியவில்லை..” என்று கூறியபடியே சமைத்த உணவுகளை டைனிங் டேபிளில் கொண்டு வந்து வைத்தார்..

“அம்மா என்னோட சயின்ஸ் நோட்டைப் பார்த்தீங்களா..?” என்று புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் இனியா.

“உன்னோட அண்ணா ரூமில் இருக்கும் பாரும்மா..” என்று கூறினாள் அவளின் அன்னை..

“எந்த அண்ணா ரூமில்..?” என்று மீண்டும் கேட்ட தங்கையின் கையில் நோட்டைக் கொடுத்தான் அன்பரசன்.

“தேங்க்ஸ் அண்ணா..” என்று கூறியவளின் தலையை மெல்ல வருடிய அன்பு,

“அம்மா நான் கிளம்புகிறேன்..” என்று பேக்கை எடுத்துக் கொண்டு பள்ளிக்கு செல்ல, “டேய் சாப்படாமல் செல்கிறாயே..?” என்று அவனின் அன்னை சமையல் அறையில் இருந்து குரல் கொடுக்க,

“எனக்கு சாப்பாடு வேண்டாம் அம்மா..” என்றவன் தந்தையின் அருகில் சென்று, “அப்பா நான் கிளம்புகிறேன்..” என்று கூறியவன் டிப்பனை எடுத்துக்கொண்டு வெளியே சென்றான்..

“சைக்கிளில் கவனமாக போகணும்..” என்று கணவன் மனைவி இருவரும் மகனுக்கு சொல்ல, “சரிம்மா..” என்று சொன்னவன் அவனது சைக்கிளை எடுத்துக் கொண்டு சென்றான்..

“அம்மா என்னோட பேனாவைக் காணோம்..” என்று குரல் கொடுத்தான் அறிவுமதி. அவனின் குரல் கேட்டதும் அவனுக்கு தேவையானது எடுத்துக் கொடுக்க உள்ளே நுழைந்தவர்,

மகனுக்கும், மகளுக்கு தேவையை கவனிக்க பள்ளி வேனின் ஹாரன் சவுண்ட் காதைக் கிழிக்க அவர்களை அனுப்பிட்டு வரும் வரையில் அமைதியாக ஹாலில் அமர்ந்திருந்தார்..

“என்னங்க நீங்க இன்னும் கிளம்பாமல் என்ன செய்றீங்க..?” என்று கேட்டுக் கொண்டே அவரை அழைத்துவந்து அவருக்கு சாப்பாடு பரிமாற, அவரும் சாப்பிட ஆரமித்தார்..

அவர் சாப்பிட்டு முடித்துவிட்டு, “நான் கிளம்புகிறேன் சுமித்ரா..” என்று சொல்லிவிட்டு செல்ல, “ஸ்ஸ்..” என்று பெருமூச்சு ஒன்றை வெளியிட்டு தரையில் அமர்ந்தார்.. அவரின் பார்வை அந்த வீட்டை வலம் வந்தது..

உள்ளே நுழைந்ததும் முதலில் ஹால் அதற்கு வலதுபுறம் ஒன்று விருந்தினர் அறை. இன்னொன்று தியாகு சுமித்ராவின் படிக்கை அறை.. இடதுபுறம் சமையல் அறை மற்றும் பூஜை அறை.. இதற்கு இரண்டுக்கும் நடுவே மாடிக்கு செல்லும் அறை. மாடியில் மூன்று பேருக்கும் படுக்கை அறை..

அந்த வீட்டின் பின்புறம் தோட்டம் அமைக்கப்பட்டிருக்க, அந்த வீட்டைப் பார்ப்பவர்கள் அனைவரும் ஒருமுறை திரும்பார்க்கும் வண்ணம் பார்த்து பார்த்து கட்டியிருந்தார் தியாகராஜன்.

தியாகராஜன் திண்டுக்கல்லில் ஒரு பணபலம் படைத்த குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் ஒரு பெரிய ஜவுளிக்கடையின் முதலாளி. அவரின் மனைவி சுமித்ரா கிராமத்தில் பிறந்து வளர்ந்த ஒரு பெண். அவர்கள் வீட்டில் சுமித்ராவைப் பார்த்தும் பிடித்ததால் தியாகராஜனுக்கு திருமணம் செய்ய, மனைவியின் குணம் பிடித்தும் அவரைக் காதலிக்க ஆரமித்தார் தியாகு.

அந்த தம்பதிகளுக்கு அன்பரசன் பெரியவன். இப்பொழுது பன்னிரண்டாம் வகுப்பு படிக்கிறான். படிப்பில் படுசுட்டி. இவன் கொஞ்சம் பணபலம் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவன் என்றாலுமே இவனுக்கு அரசு பள்ளிதான் மிகவும் பிடிக்கும். பாகுபாடு இன்றி அனைவரிடமும் பழகுவான். இவனது பணத்திற்காக இவனுக்கு ஜால்ரா போடும் சிலரும் இவனது அருகில் இருக்கின்றனர்.

அவனுக்கு அடுத்து அறிவுமதி விடவும் நான்கு வருடம் சிறியவன். இப்பொழுது எட்டாம் வகுப்பு படிக்கிறான். அண்ணனும் தம்பியும் இருவருக்கும் வயதில் வித்தியாசம் இருந்தாலும் இருவரும் கலகலப்பாக பேசி சிரிப்பார்கள்..

இவர்களுக்கு தங்கை இல்லை என்ற குறையைத் தீர்த்தவள் இனியா அவர்கள் உடன்பிறவாத தங்கை தியாகுவின் தம்பி மகள். தியாகுவின் தம்பி விபத்தில் இறந்துவிட, அவளை எடுத்து வளர்க்கின்றனர் தியாகு தம்பதியினர். தியாகுவின் தாய் ஜெயந்தி அதே ஊரில் பெரிய வீட்டில் இருக்கிறார்.. இவர்கள் வாரம் ஒருமுறை சென்று பார்த்து வருவார்கள்..

இனியாவிற்கு பாட்டி என்றால் உயிர்.. அண்ணன் இருவரின் மீதும் மிகுந்த பாசம் கொண்டவள்.. இப்பொழுது ஆறாம் வகுப்பு படிக்கிறாள். இப்படி சிறிது நேரம் அமர்ந்தவர் அடுத்த அடுத்த வேலைகளில் கவனம் செலுத்தினார்..

அன்பரசன் பள்ளிக்கு செல்லும் வழி எங்கும் கண்ணுக்கு எட்டிய தொலைவு வரையில் வயல்வெளிகளும், மரங்களும் காட்சியளிக்கும் மண் சாலை தனது சைக்கிளில் வேகமாக வந்துக் கொண்டிருந்தான்..

ஒரு குறிப்பிட்ட இடம் வந்ததும், “ஏய் எழில் இன்னும் அங்கே என்ன செய்கிறாய்..?” என்று ஒருவரின் குரல் கேட்க தனது வேகத்தைக் குறைத்தவன் யார் என்று சுற்றிலும் பார்க்க,

அவனுக்கு கொஞ்சம் தூரத்தில் ஒரு பதினான்கு வயது பெண் அவனுக்கு முதுகுக்காட்டிய வண்ணம் நித்தியமல்லி செடியிடம் பேசிக்கொண்டிருந்தாள்..

அவளின் மீது பார்வையை செலுத்தியவன், ‘அங்கே நின்று யாருடன் பேசிக்கொண்டிருக்கிறாள்..?’ என்ற கேள்வி மனதில் எழுந்ததும், மெதுமாக சைக்கிளை ஒட்டிய வண்ணம் அவளைப் பார்த்தான்..

“உன்னிடம் எத்தனை முறை சொல்வது பூ பூக்கும் பொழுது கொஞ்சம் நிறையாக பூக்க வேண்டும் என்று..” என்று சொல்லியவள், “எழில்..” என்று அடுத்த குரலில் திரும்பினாள்.. எழில் திரும்பியவளின் முகம் பார்த்து திகைத்து நின்றான்.

நேராக நேரேடுத்து பின்னப்பட்ட இரட்டை ஜடை. காதில் சிறிய ஜிமிக்கி, இயற்கையாகவே விலேன வளைந்த புருவம், அழகான மீன்கள் போன்ற இரண்டு கண்கள், கூர்மையான நாசி, அழகிய சிற்பியால் செதுக்கப்பட்டது போல இரண்டு ரோஜா இதழ்கள் அவளின் சந்தன நிறத்திற்கு ஏற்றது போல அளவான உடலமைப்பு உடைய மங்கை தான்!

அவளின் முகத்தின் அழகில் மயங்கியது அவனின் உள்ளம் என்றால் அவளின் விழியில் தொலைந்தது அவனின் இதயம்.. “இதோ வருகிறேன்..” என்ற குரலில் அவனின் திகைப்பு மாறியது.. மறுபடியும் அவளின் முகம் பார்த்தவன்,

‘இவளுக்கு எழில் என்று பெயர் வைத்ததில் தப்பே இல்ல.. பெண்ணுக்கு உரிய அத்தனை எழிலையும் வைத்திருக்கிறாளே..’ என்று மனதில் நினைத்தவன் பள்ளிக்கு நேரம் ஆவதை உணர்ந்து சைக்கிளை எடுத்தான்..

“என்னங்க அம்மா எதுக்காக இப்பொழுது கூப்பிட்டீங்க..? நான் நித்யாகிட்ட தானே பேசிட்டு இருந்தேன்..” என்று சிணுங்கினாள் மகள்.

அவளைப் பார்த்து புன்னகைத்த பார்வதி, “பள்ளிக்கூடத்திற்கு நேரம் ஆச்சுமா அதுதான் உன்னைக் கூப்பிட்டேன்..” என்று கூறியவர், அவளுக்கு சாப்பாடு பரிமாற, சாப்பிட்டு முடித்தவள்,

“அம்மா நான் பள்ளிக்கூடம் கிளம்புகிறேன்.. அப்பா எங்கே இருக்கிறார்..?” என்று கேட்டதும் அவளை நிமிர்ந்து பார்த்த பார்வதி, “அப்பா வயலில் இருப்பார் கண்ணா..” என்று சொல்ல,

“சரிம்மா நான் போகும் வழியில் பார்த்துக் கொள்கிறேன்..” என்று கூறியவள் தன்னுடைய பேக்கை எடுத்துக் கொண்டு சென்றாள்..

மூன்று அறைகள் கொண்ட ஓட்டு வீட்டுதான் எழில்விழியின் வீடு. அவளின் வீட்டை சுற்றிலும் வேப்பமரம், மாமரம் இருக்கும்.. அவளுக்கென்று அமைத்த தோட்டமும் இருக்கும். அதில் நித்தியமல்லி, ரோஜா, மல்லிகை, முல்லை, ஜாதிமல்லி என்று அனைத்தும் இருக்கும்.. அவற்றுடன் பேசுவதே அவளின் வேலை. மெல்ல அந்த வழியில் சென்றவள், தங்களின் தோட்டத்தை நெருங்கியதும் அவளின் தந்தை நோக்கிக் குரல் கொடுத்தாள், “அப்பா நான் பள்ளிக்கூடம் போய்ட்டு வருகிறேன்..” எழில்விழி
 




Last edited:

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அவளின் குரலில் வரப்பில் தண்ணிக் கட்டிக்கொண்டிருந்த சுந்தரம் நிமிர்ந்து மகளைப் பார்த்தார். பள்ளி சீருடையில் நின்றிருந்த மகளைப் பார்த்தவர், “சாப்பிட்டியா எழில்விழி..?!” என்று கேட்டார்.

“ம்ம் சாப்பிடேன் அப்பா.. நான் கிளம்புகிறேன்..” என்று சொல்ல, வரப்பில் இருந்து வெளியே வந்தவர், “இந்த பாப்பா..பஸ்சிற்கு காசு.. பார்த்து சூதானமாக போய்ட்டு வரணும்..” என்று சொல்லி மகளை அனுப்பி வைத்தார். அவரின் முகத்தில் மகளைப் பார்த்து ஒரு அழகிய புன்னகை அழகாக மலர்ந்தது.

சுந்தரம் – பார்வதி இருவரும் பெயரில் மட்டும் பொருத்தம் இல்லை அவர்களின் மனமும் பொருத்தமே. இருவரும் அதிகம் பேசிக்கொள்ளாமலேயே மனதில் நினைப்பதைப் பகிரும் ஒரு ஜோடி. இவர்களுக்கு சொந்தமாக 5 ஏக்கர் நிலம் இருக்கிறது.. அதில் விவசாயம் செய்து குடும்பத்தை நடத்துகின்றனர். அவர்களுக்கு மொத்தம் இரண்டு பிள்ளைகள்.

முதல் மகன் முத்துக்குமார் வயது 19. அவனுக்கு அதிகமாக படிப்பு ஏறவில்லை.. அதனால் அவன் தந்தையுடன் வேலை செய்கிறான்.. அவனுக்கு குடும்பத்தின் மீது எல்லாம் பாசம் கிடையாது.. அவனிற்கு தேவையானவற்றிற்கு மட்டும் தாய், தந்தையைத் தேடுவான்.. அவன் காரியம் முடிந்தால் அடுத்து அவனின் வேலையைப் பார்க்க போய்விடுவான். சரியான சுயநலவாதி தான் மட்டும் தனக்கு மட்டும் என்று யோசிக்கும் குணம் உடையவன்..

இரண்டாவது எழில்விழி. அவள் இருக்கும் அழகிற்கு அவள் இந்த வீட்டில் பிறக்க வேண்டிய பெண்ணே அல்ல என்று பெற்றோர்கள் அதிகமுறை நினைத்தது உண்டு. அவளின் அமைதி அதற்கு எடுத்துக்காட்டு. பார்ப்பவர்களை திரும்பப் பார்க்க தூண்டும் ஒரு குத்துவிளக்கின் சுடர்விடும் தீபத்தின் அமைதியான அழகு என்றே எழிலின் அழகு என்று சொல்லலாம்.

எழில்விழி என்ற பெயருக்கு ஏற்ற அழகும் இருக்கும் அவளிடம் பலரும் கேட்கும் ஒரே கேள்வி, உன்னோட பெயரால் உனக்கு அழகா..? இல்லை உன்னால் அந்த பெயருக்கு அழகா..? என்பதே ஆகும்.

அவள் முத்துக்குமாரை விடவும் ஐந்து வருடம் சிறியவள். இப்பொழுது ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பெண். இவள் யாரிடமும் அதிகம் பேசமாட்டாள். வீட்டில் உள்ள பெற்றோரிடம் மட்டும் கொஞ்சம் பேசுவாள். அவள் அமைதி எந்த அளவிற்கோ அதே அளவு அவளை ஒருவர் சீண்டினால் அவர்களுக்கு பதிலடிக் கொடுக்கும் அளவிற்கு தைரியம் மிகுந்தவள்.

ஆனால் வீட்டில் அண்ணனுக்கு மட்டும் அதிகம் பயப்படுவாள்.. அவன் பார்க்கும் ஒரு பார்வையில் எழில்விழிக்கு உள்ளே உதறல் எடுக்கும். அந்த அளவிற்கு அண்ணனைப் பார்த்தால் அவளிற்கு மிகவும் பயம்.

எட்டாம் வகுப்பு வரையில் கிராமத்தில் இருந்த பள்ளியில் படித்தவள் இப்பொழுது அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் சேர்க்கப்பட்டிருக்கிறாள்.

அவளுக்கு ஒன்பதாம் வகுப்பின் முதல் நாள் இன்று. அவள் சரியான நேரத்திற்கு பள்ளிக்குள் சென்றுவிட்டாள். அந்த பள்ளிகூடத்தில் இருபாலினரும் படிக்கின்றனர்..அவள் உள்ளே சென்றதும் சென்றதும் கொஞ்சம் மிரண்டாள்..

அந்த பள்ளிக்கூடத்தைப் பார்த்து.. பால்மஞ்சள் நிறம் கொண்ட கட்டடம்.. வெளியே வர பள்ளியின் வாயிலைத் தவிர வேறு வழிகள் இல்லை.. கேட்டை தாண்டி உள்ளே சென்றதும் இடதுபுறம் கேண்டின், இன்னும் முன்னோக்கி நகர்ந்தால் ப்ரின்ஸிபால் ரூம், அதற்கு பக்கத்திலே ஸ்டாப் ரூம், அதற்கு பக்கத்தில் கோடி மரம், நடுவே பள்ளியின் வளாகம், சதுர வடிவ கட்டிடம் இரண்டு மாடிகள், மூன்று மாடியிலும் சேர்த்தும் மொத்தம் நாற்பது வகுப்பறைகள், ஒருபக்கம் வெளியே செல்லும் முன்வாயில், இரண்டு மாடிக்கும் சேர்த்து மூன்று பக்கமும் மாடிப்படிகள், எந்த மாடியில் இருக்கும் எந்த ரூமிற்கும் இந்த மூன்று வழிகளிலும் செல்லலாம்..

அந்த கட்டிடத்தை கடந்து பின்புறம் சென்றால் அங்கே இரண்டு பிரிவுகள் ஒன்று பாத்ரூம் செல்லும் வழி இன்னொன்று நூலகம் செல்லும் வழி அதக்கும் பக்கத்தில் ஒரு கட்டிடம் அதில் இரண்டு மாடிகள் அதில் பத்து வகுப்பறைகள்.. இந்த பள்ளியில் வளாகத்தைச் சுற்றியும் மரங்கள் இருக்கும் அதுவும் வளாகத்தின் நடுவே இருக்கும் வேப்பமரம் மொத்த வளாகத்திற்கும் நிழல் கொடுக்கும்..

அவளின் வகுப்பிற்கு செல்லும் வழி தெரியாமல் மிரண்ட வண்ணம் வந்தவள், மாடிப்படியின் அருகில் இருந்த சில பெண்களைக் கேட்க, அவர்கள் இங்கே அங்கே என்று மாற்றி மாற்றி சொல்ல சம்யுக்தாவிற்கு தலையே சுற்றியது..

இருந்தும் படிகளில் ஏறிச்சென்று அங்கே எந்தப்பக்கம் செல்வது என்று புரியாமல் விழித்தவள், அங்கே பள்ளி சீருடையில் கையில் புத்தகத்துடன் நின்றிருந்த ஒருவனைப் பார்த்தாள்.

அலையலையாக கேசமும் அளவான உடல்வாகும், அடர்ந்த புருவம், பார்ப்பவர்கள் என்ன நினைக்கின்றனர் என்று சொல்லும் அளவிற்கு அவர்களை ஊடுருவும் பார்வை! கூர்மையான நாசி, செதுக்கப்பட்ட உதடுகள், அரும்பு மீசையுடன் பார்ப்பதற்கு ஆறு அடி உயரம் கொண்டவன் பார்வை கையில் இருந்த புத்தகத்தில் இருக்க அவனின் கவனமும் அதில் தான் இருந்தது. நொடியில் அவனைப் பார்வையால் அளந்தாள் எழில்விழி..!

அவனைப் பார்த்தும் எழில்விழி மனதில், ‘இவரிடம் கேட்கலாமா..? இல்ல வேண்டாமா..?’ என்று தனது மனத்திற்கு தனக்கு தானே கேள்வி எழுப்ப, அதுவரைப் படித்துக் கொண்டிருந்தவன் தன்னருகில் நிழலாட அவனே நிமிர்ந்து அவளைப் பார்த்தான்..

அவள் மனத்திற்கு ஏதோ பேசிக்கொண்டிருக்க, அவனது மனதில், ‘கொஞ்ச நேரத்திற்கு முன்னால் நான் பார்த்த அதே எழில்..’ என்று மனம் சொல்ல, ‘எதற்கு இங்கே நிற்கிறாள்..?’ என்று அவனின் மனம் கேள்வி எழுப்ப, ஒரு புருவம் உயர்த்தி அவளைக் கேள்வியாகப் பார்த்தான்.

மீண்டும் ஒருமுறை அவனது பார்வை அவளைப் பார்வையால் அளந்து முடிக்க, தன்னை யாரோ பார்க்கிறார்கள் என்று உணர்ந்தவள் நிமிர்ந்து அவனைப் பார்க்க இருவரின் விழிகளும் ஒரு நொடி நேருக்கு நேர் சந்தித்து அவள் தயங்கித் தயங்கி, “இங்கே ஒன்பதாம் வகுப்பு எ செக்சன் எங்கே இருக்கிறது..” என்று கேட்டாள்..

அவள் தயக்கத்துடன் கேட்டதும், அவளைப் பார்த்தவன், “இந்த மாடிப்படியில் ஏறிச்சென்றால் வலதுபுறம் நான்காவது அறை நீ கேட்ட கிளாஸ் ரூம்..” என்று சொல்ல, சரியென்று தலையசைத்தவள்,

அவனிற்கு நன்றி சொல்லும் முன்னரே பள்ளியில் இறைவணக்க நேரத்திற்கு செல்லும் பெல் அடிக்க அவள் எதுவும் பேசாமல் அவளின் கிளாசிற்கு செல்லும் படியில் ஏறிச்செல்ல, அவளையே பார்த்தவன் முகத்தில் ஏன் என்றே அறியாமல் அரும்ப புன்னகை அவனின் கிளாஸ் ரூம் நோக்கி நடந்தான்.

அவனின் எதிரே வந்த அவனின் வகுப்பறை தோழன் பிரதாப், “என்னடா யாரோ ஒரு பொண்ணு கூட பேசியது போல தெரிந்தது..?” என்று விளையாட்டாகக் கேட்டதும்,

“ம்ம் பொண்ணுதான் கிளாஸ் ரூமிற்கு செல்ல வழிக் கேட்டாள் சொன்னேன்..” என்று அவன் சொல்ல அவனையே சந்தேகமாகப் பார்த்தவன் தோள் மேல் கைபோட்டுக் கொண்டு,

“உண்மையைச் சொன்னால் நம்பனும்.. இப்படி பார்வை எல்லாம் பார்க்க கூடாது.. வா அடுத்து நமக்கு தமிழ் கிளாஸ் இருக்கு.. வா நாம் அதைக் கவனிப்போம்..” என்று அழைத்துச் சென்றான்..

இவர்களின் சந்திப்பு அடுத்த சந்திப்பு எப்படி நிகழுமோ..? அவள் விழியில் தொலைந்தவன் கிடைப்பான அதை எழில்விழியே சொல்ல வேண்டும்..
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
உங்களுடைய, "உனது விழியில்
தொலைந்தேன் பெண்ணே"-ங்கிற
அழகான, அருமையான,
இந்த புதிய நாவலுக்கு,
என்னோட மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
சந்தியா ஸ்ரீ டியர்
 




Last edited:

sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
அருமையான துவக்கம் சந்தியா கதாபாத்திர அறிமுகம் அருமை பூவோடு பேசும் நாயகி எழில்விழி அமைதியான அன்பு எல்லாம் ஜோர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top