• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Naan aval illai - 40

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
மகிழும் ஜென்னியும் கடற்மணலில் நடந்தபடி வந்து கொண்டிருந்தனர்.

அவளோ உணர்ச்சிகள் துடைத்த முகத்தோடு அழுத்தமாய் இருக்க,

மகிழ் பொறுமையிழந்தான்.

"அப்போ நான் கேட்ட கேள்விக்கு நீ பதில் சொல்ல மாட்ட ?" என்று அவன் கோபமான தொனியில் கேட்க,

அவள் நின்றபடி அவன் முகத்தை பார்த்து, "அப்படி எல்லாம் இல்ல மகிழ்... எனக்கு ஒரு ஆக்ஸிடென்டாயிடுச்சு... டேவிட்தான் என்னை காப்பாத்தினாரு... தலையில அடிப்பட்டு மெமரி லாஸாயிடுச்சு... அந்த டைம்ல நான் ஜென்னித்தாவா இருந்தேன்... ஞாபகம் வந்த பிறகும் நான் ஜென்னித்தாவாவே இருந்துட்டேன்... அவ்வளவுதான்" என்று மூச்சுவிடாமல் அவள் சொல்லி முடிக்க, அவன் சத்தமாய் சிரித்தான்.

"இப்ப எதுக்கு சிரிக்கிறீங்க ?" அவள் கடுகடுத்து கேட்க,

"இல்ல... இந்த இங்கிலீஷ் க்விஷ்ன் பேப்பர் ஹ்ன்ட்ஸ் கொடுத்துட்டு ஸ்டோரியை எழுத சொல்லுவாங்க... அப்படி இருக்கு நீ சொல்றது... " என்றான்.

"நான் ஒண்ணும் கதை சொல்லல மகிழ்"

"நீ இதை கதையா சொன்னா கூட எவனும் நம்ப மாட்டான்"

"நம்பாட்டி போங்க... ஆனா இதுதான் நிஜம்"

"சரி நம்பிறேன்... நீ பழசை எல்லாம் மறந்துட்ட... உன்னை டேவிட் காப்பாத்தினாரு... இல்லையா ?!" என்றவன் கேட்டு கூர்மையாய் அவள் பார்க்க,

"ஆமாம்" என்றாள் ஜென்னி.

"டேவிட் ஒண்ணும் சாதாரணமான ஆளில்ல சாக்ஷி... அவரூ மட்டும் நினைச்சிருந்தா உன் டீடைல்ஸை கண்டுபிடிக்க எவ்வளவு நேரம் ஆயிருக்க போகுது" என்றதும்,

அவள் தடுமாறி "அது" என்று யோசிக்க,

அவன் மேலும் "இன்னொரு விஷயம் இருக்கு... நீ போட்டிருந்த வாட்ச் டாலரெல்லாம் வேறொரு பொண்ணு எப்படி போட்டிருக்க முடியும் ? நீ உயிரோட இருக்கன்னா அந்த பொண்ணு யாரு? எதுக்கு இந்த டிராமா ? யாருக்காக இந்த டிராமா ?" வரிசையாய் அவன் கேள்விகளை அடுக்க, அவள் எப்படி பதிலுரைப்பது என திணறிக் கொண்டிருந்தாள்.

மேலும் அவன் அவளை ஆராய்ச்சியாய் பார்த்து வண்ணம்,

"நீ ஜென்னித்தா விக்டரா இருக்கிறதுல எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை... ஆனா சாக்ஷிங்கிறவ எங்கே தொலைஞ்சி போனா ?!! அதுதான் எனக்கு தெரியனும்" என்றவன் வினவ,

அவள் அவனை ஏறிட்டு "தெரிஞ்சிக்கிட்டு என்ன பண்ண போறீங்க மகிழ்?" என்று அலட்சியமாய் கேட்டு முகத்தை திருப்பிக் கொண்டாள்.

"நமக்குள்ள இந்த நிமிஷம் எந்த உறவும் இல்லாம இருக்கலாம்... ஆனா உன்னை பத்தி தப்பா பேசிறதை என்னால எப்படி கேட்டிட்டிருக்க முடியும் ?" என்று அவன் சொன்ன நொடி அவன் புறம் திரும்பியவள்,

"தப்பாவா... யாரு ?" என்று குழப்பமும் அதிர்ச்சியும் கலந்த பார்வை பார்த்தாள்.

அவன் நடந்ததை சொல்ல துணிவில்லாமல் மௌனமாய் நின்றான்.

ஜென்னி அவன் முன்னே வந்து, "மகிழ் பேசுங்க" என்க,
அவன் தயங்கி தயங்கி வேந்தனை சந்தித்து அவர்களுக்குள் நடந்த உரையாடலையும் கைகலப்பையும் உரைக்க,


கைகட்டியபடி ஒரு எள்ளலான புன்னகையோடு பார்த்தவள், "அவர் ரொம்ப ஒழுக்க சீலர்... என்னை சொல்ல வந்துட்டாராக்கும்" என்று சொல்லியவள் அதோடு நிறுத்தாமல்

மகிழை விழி இடுங்க பார்க்க, அவன் பதிலின்றி நின்றிருந்தான்.

"ஏன் மகிழ் ? சந்தேகம் அவருக்கு மட்டும்தானா ? இல்ல உங்களுக்குமா ?" என்று கேட்டு எகத்தாளமாய் ஒரு பார்வை பார்க்க,

அவன் தீயை தொட்டவன் போல "சாக்ஷி" என்று துடித்து போனான்.

"இப்ப ஏன் இவ்வளவு டென்ஷாகிறீங்க ? நத்திங் ராங் இன் இட்... சந்தேகப்படிறது அக்னி பரிட்சை செய்றது இதெல்லாம் கடவுளுக்கே உண்டுன்னும் போது... நம்மெல்லாம் ஆஃப்டிரால்... சாதாரணமான மனிஷங்கதானே மகிழ்" என்று அவள் ரொம்பவும் இயல்பாக சொல்லவும், அந்த வார்த்தை சற்று கடுமையாகவே அவனை தாக்கியது.

"ஏ ... என்ன நீ? உன் பாட்டுக்கு இஷ்டத்துக்கு பேசிட்டிருக்க... நான் உன்னை சந்தேகப்பட்டேன்னு இப்ப சொன்னனே" என்க,

"அந்த எண்ணம் இல்லாமலா என்னை நீங்க இங்க வரவைச்சீங்க ?!" என்று அவள் கேட்க,

"வேண்டாம் சாக்ஷி... வார்த்தையை விடாதே" என்று அவளை விரல் நீட்டி எச்சரித்தான்.

அவளின் அலட்சியப் பார்வையில் தன்னை அவள் நம்பவில்லை என்பதை தெளிந்து கொண்டவனுக்கு விழிகளில் நீர் கோர்த்தது.

"யார் யாரோ சொன்னாங்கன்னு நீ என் காதலை சந்தேகப்பட்டிருக்கலாம்... ஆனா அந்த கடவுளே வந்து சொன்னாலும் உன்னை நான் சந்தேகப்பட மாட்டேன் சாக்ஷி..." என்று நிறுத்தியவன் மீண்டும்,

"ஏன்னா அந்தளவுக்கு உன்னை நான் காதலிச்சேன் டி" என்று அவன் கனத்த மனதோடு உரைக்க,

அவன் வார்த்தை அவள் மனதையும் கனக்க செய்தது.

அதை காட்டிக் கொள்ளாமல் அவள் திரும்பியே நின்றிருந்தாள்.

அந்த நிராகரிப்பு அவனை ரொம்பவும் காயப்படுத்திவிட, "பைஃன்... நான் கிளம்பிறேன்... இதுவே நம்மோட லாஸ்ட் லாஸ்ட் மீட்டிங்கா இருக்கட்டும்... இன்னொரு தடவை உன்னை பார்க்கிற சக்தி எனக்கில்லை... குட் பை..." என்று சொல்லிவிட்டு அவன் விறுவிறுவென அகல, அவன் சென்ற பின்னரே அவள் பார்வை அவன் செல்லும் திசையின் புறம் திரும்பியது.

கடலில் வீழ்ந்த பல துளிகளில் ஒரு சில துளிகளில் மட்டுமே சிற்பிக்குள் வீழ்ந்து முத்தாகும். அப்படி முத்தாய் மாறினாலும் அவை எல்லாம் அணிகலனாய் மாறி போற்றுதலுக்குரிய மதிப்பை அடைந்து விடுகிறதா என்ன ?

அப்படி விழுந்த துளிதான் அவன் தன் மீது கொண்ட காதல். ஆனால் அது அணிகலனாய் மாறாமல் சிற்பிக்குள்ளேயே மூடிக்கிடக்க வேண்டும் என்பது விதியாகிய பட்சத்தில் யார் என்ன செய்ய முடியும் ?

இருப்பினும் அவன் காதல் விலைமதிப்பற்றதுதான் என்று எண்ணிக் கொண்டவள், அவன் சென்ற பாதையை ஏக்கமாய் பார்த்து, பெரூமுச்சொன்றை வெளிவிட்டவள் சோர்வாக நடந்து சென்று கார் நின்ற இடத்தை அடைந்தாள்.

அழுத்தமான மௌனத்தோடு டேவிட் அருகில் அவள் நிற்க, சோகத்தின் மொத்த குவியலாகவே கிடந்தது அவள் முகம்.

அவள் அப்படி நிற்பதை பார்த்து மிரட்சியடைந்தவன் "ஜென்னி" என்றழைக்க,

அவள் பதிலில்லாமல் எங்கேயோ வெறித்துக் கிடந்தாள்.

அவள் அருகாமையில் வந்து "ஜென்னி என்ன ?" என்று கேட்டு அவள் தோள்களை குலுக்க, அவள் அத்தனை நேரம் கட்டுக்குள் வைத்திருந்த அவள் உணர்வுகளெல்லாம் கட்டவிழ்த்துக் கொண்டன.

அப்படியே அவன் தோள் மீது சாய்ந்து கேவி அழத்தொடங்கினாள்.

அந்த நொடி அவள் மனநிலை என்ன நிலையில் இருந்திருக்கும் என்பதை அவனால் நன்கு உணர்ந்து கொள்ள முடிந்தது.

அவள் உணர்வுகளை அவனிடம் கொட்டித் தீர்த்து கொண்டிருக்க,
எந்தவிதத்திலும் அவளை இடையூறு செய்யாமல் அவள் அமைதிபெறும் வரை பொறுமையாய் நின்றுகொண்டிருந்தான் ஓர் தூணை போல.


***********
 




Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
பீனக்ஸ்


மகிழை அவள் சந்தித்துவிட்டு வந்து இரு நாட்கள் கழிந்து விட்டன.

அன்றூ வேலை நிமித்தமாய் இரவு வெகுநேரம் விழித்திருந்த காரணத்தினாலோ என்னவோ டேவிடின் உடலமும் மனமும் விடிந்த பின்னும் உறக்கத்தையே நாட, அலுவலகத்திற்கு போக வேண்டிய நிர்பந்தத்தோடு மெல்ல எழுந்து தன் அறையின் பெரிய சாளரத்தின் திரையை விலக்கினான்.

சூர்ய ஒளிக்கதிர்கள் ஒரே வீச்சில் உள்ளே பாய்ந்து அறையினை பிரகாசிக்க, அந்த சாளரத்தின் வழியே டேவிட் பார்த்த காட்சி அவன் தூக்கத்தை ஒரே நொடியில் விரட்டிவிட்டது.

கண்களை கசக்கியபடி இருமுறை பார்த்தவனுக்கு தான் பார்ப்பது உண்மைதானா என்ற குழப்பம்.

வேகமாய் அவன் அறையோடு இணைந்திருந்த பால்கனி கதவை திறந்தவன் மாற்றமில்லாமல் அதே காட்சியைதான் பார்த்தான்.

ஜென்னித்தா அவன் தந்தை தாமஸோடு அந்த பங்களாவை சுற்றியுள்ள விஸ்தரமான தோட்டத்தில் நடந்து கொண்டிருக்க,

அறையை விட்டு வெளியே வராதவர் தோட்டத்தில் வாக்கிங் போய் கொண்டிருப்பதை பார்த்து அவன் உண்மையில் ஆனந்தப்படதான் வேண்டும். ஆனால் அதிர்ச்சிகரமாய் இருந்தது.

எப்படி இதெல்லாம் என்று யோசித்தவனுக்கு ஜென்னிதான் முழுமுதற் காரணம் என்பது புரிந்தது.

மகிழை சந்தித்த அன்று அவள் அழுத அழுகையை இன்றும் அவனால் மறக்க முடியாது. ஆனால் இரண்டே நாட்களில் இந்தளவுக்கு அவள் தன்னை தேற்றிக் கொண்டிருப்பது ஆச்சர்யமாகவே இருந்தது.

தன் சாம்பலில் இருந்து மீண்டும் உயிர்த்தெழும் பீனிக்ஸ் பறவைதான் அவள் என்று எண்ணி கொண்டான்.

அதே நேரம் அவள் தன் தந்தையோடு இயல்பாய் பழகுவதை பார்த்து, அவர் அவளுக்கு செய்தவற்றை எல்லாம் எப்படி அவள் மறந்தாள் என அவன் வியந்து பார்த்திருக்க

தோட்டத்திலிருந்து ஜென்னி அவனை பார்த்துவிட்டு "டேவிட்" என்று குரல் கொடுக்க அவளை பார்த்து புருவத்தை ஏற்றினான்.

அவள் "குட் மார்னிங்" என்க,

"ஹ்ம்ம்.. குட் மார்னிங்" என்று கையசைத்தான்.

"கீழே இறங்கி வாங்க" என்றவள் அழைக்க,

"ஆபிஸுக்கு டைமாச்சு" என்றான்.

"கம்மான் டேவிட்... லெட்ஸ் ஹேவ் அ கப் ஆஃப் காபி" என்றவளின் புன்னகையில் இருந்த உற்சாகம் அவனையும் தொற்றிக் கொண்டது.

"யா கம்மிங்" என்றவன் சில நிமிடங்களில் வெகு ஆர்வமாய் வர,

அந்த தோட்டத்தில் புல்வெளிதரையில் அழகாய் வட்டவடிவில் அமைக்கப்பட்டிருந்த இருக்கைகளில் ஜென்னியும் தாமஸும் அமர்ந்திருக்க, டேவிட் யோசனையோடு அமர்ந்தான்.

அந்த சம்பவத்திற்கு பின் அவன் தன் தந்தையிடம் கோபித்து கொண்டு பேசாமலிருக்க, ஓரே வீட்டிலிருந்தும் அவன் அவரை பார்க்காமல் கொஞ்சம் இறுக்கமாகவே இருந்தான்.

இப்போது அவரை பார்த்தவனுக்கு எப்படி தன் உணர்வுகளை பிரதிபலிப்பதென்றே புரியவில்லை.

ஜென்னி அந்த சமயம் ஜாடியிலிருந்த காபியை கலக்கி இருவருக்கும் கப்பில் ஊற்றி விட்டு, அவளுமே பருகத் தொடங்கினாள்.

அவன் காபியை பருகிக் கொண்டிருக்கும் போதே ஜென்னி அவனிடம் "டேவிட்... நான் ஒரு விஷயம் கேட்பேன்... நீங்க கரெக்டா பதில் சொல்லனும்" என்க,

காபியை பருகியபடி "ஹ்ம்ம்.. முயற்சி பன்றேன்" என்றவனை பார்த்து

"உம்ஹும் அதெல்லாம் கிடையாது... கரெக்டா சொல்லனும்" என்றாள் அழுத்தமாக!

"சரி ஒகே" என்று அவன் சம்மதிக்க, ஜென்னி தாமஸை பார்த்து கண்சிமிட்டி புன்னகையித்தாள்.

அதை டேவிட் கவனிக்க தவறிய நிலையில் ஜென்னி அவனிடம் "அது வந்து டேவிட்.. எனக்கும் அங்கிளூக்கும் ஒரு டிஃப்ரன்ஸா ஆஃப் ஒபினியன்..." என்றதும் அவன் தந்தையின் புறம் தன் பார்வையை வீசியவன் "எதை பத்தி ?" என்று கேட்டான்.

"உங்களை பத்திதான்..." என்றாள்.

"என்ன ?" என்றவன் வியப்பாய் புருவத்தை ஏற்ற,

ஜென்னி புன்முறுவலோடு "அது ஒண்ணுமில்லை டேவிட்... நீங்க ஒரு விஷயத்தை கண்டிப்பா செய்வீங்கன்னு சொல்றேன்... அவர் இல்லை மாட்டீங்கன்னு சொல்றாரு... பாயின்ட் இஸ் தட் நான் உங்களை நல்லா தெரிஞ்சி வைச்சிருக்கேனா ? இல்ல.. அங்கிளா" என்றவள் சொல்லி முடித்ததும்,

அவன் உடனே ஜென்னியை பார்த்து "இதுல என்ன டௌட் ? நீ சொன்னதுதான் சரியாயிருக்கும்... அவராவது என்னை பத்தி தெரிஞ்சி வைச்சிக்கிறதாவது" என்றான் தந்தையை இளக்காரமாய் பார்த்தபடி!

ஜென்னி புன்னகை ததும்ப தாமஸிடம் "என்ன அங்கிள்? இப்பவாச்சும் நம்பிறீங்களா? " என்றதும் அவர் முகம் மலர்ந்தது.

டேவிட் அவர்கள் இருவரின் முகப்பாவனைகளை புரிந்து கொள்ள முடியாமல் "ஆமா அதென்ன விஷயம் ஜென்னி ?" என்று கேட்டான்.

"அங்கிள் சொன்னாரு நீங்க இந்த தடவை சொன்ன மாதிரி ப்ரீஸ்டாவீங்க... ஆனா நான் சொன்ன ... நீங்க மேரேஜ் பண்ணி நிச்சயம் அஞ்சு ஆறு பசங்களுக்காவது பாஃதராவீங்கன்னா?" என்று அவள் சொன்னதுதான் தாமதம்.

காபி பருகி கொண்டிருந்தவனுக்கு பொறையேறியது.

ஜென்னியும் தாமஸும் ஒருவரை ஒருவரை பார்த்து கொண்டு திருட்டுத்தனமாய் சிரிக்க, டேவிட் கப்பை மேஜை மீது வைத்து எழுந்து கொண்டு "எனக்கு ஆபிஸுக்கு லேட்டாகுது" என்று அவர்களிடம் இருந்து நழுவிக் கொள்ள,

ஜென்னி அவன் செல்வதை பார்த்துவிட்டு வாய்விட்டு சிரிக்க, தாமஸின் அமைதியற்ற மனமும் அவளிடம் பேசியதில் லேசாய் மாறியிருந்தது.

அவர் ஜென்னியை பார்த்து "நீ சொல்றது மட்டும் நடந்துடுச்சுன்னா ?" என்றவர் கேட்க,

"கண்டிப்பா நடக்கும் அங்கிள்... நீங்க பாருங்களேன்" என்றாள்.

மகனை பற்றி நன்கு தெரிந்தாலும் ஜென்னியின் வார்த்தையில் இருந்த உறுதி அவர் மனதில் நம்பிக்கையை விதைத்திருந்தது.

"சரி உள்ளே போவோமா ?" என்றவள் கேட்டு அவர் கரத்தை பற்றி எழுந்திருக்க உதவியவள் வாக்கிங் ஸ்டிக்கை அவர் கரத்தில் கொடுத்தாள்.

அவர் நடந்தபடியே "என் உடம்பு மனசும் உண்மையிலயே லேசா இருக்கு ஜென்னி... டேவிட் அடிக்கடி சொல்லுவான்... பணம் காசு எவ்வளவு இருந்தாலும் அன்புக்கு நிகரான சக்தி எதுவுமில்லைனு... இப்போ அதை நான் உண்மையிலயே உணர்றேன்" என்றவள் தலையை கரிசனமாய் அவர் தடவ,

"உண்மைதான் அங்கிள்... பணம் கொடுக்க கொடுக்க குறையும் ஆனா அன்பை மட்டும் கொடுக்க கொடுக்க நிறைஞ்சிட்டே இருக்கும்" என்றாள்.

அவர் அவளை அதிசயத்து பார்த்து "உனக்கு நான் செஞ்ச அநியாயத்தை எப்படிம்மா உன்னால மன்னிக்க முடிஞ்சிது" என்றவர் கேட்க,

"அங்கிள் ப்ளீஸ்... அதை பத்தி பேச வேண்டாம்னு சொல்லி இருக்கேன் ல" என்றவள் சொன்னாலும் அவர் முகத்தில் தங்கியிருந்த குற்றவுணர்வு மாறவேயில்லை.

அவரை மிதமான புன்னகையோடு பார்த்தவள் "நீங்க கில்டியா பீஃல் பண்ண வேண்டிய அவசியமில்லை... நீங்க டேவிடோட அப்பா... நீங்க எப்பவும் தலைநிமிர்ந்து பெருமையோடுதான் இருக்கனும்" என்றாள்.

டேவிடின் தந்தை என்ற விதத்தில் இன்று அவர் உண்மையிலயே அத்தனை பெருமிதமாய் உணர்ந்தார்.

ஆயிரம் சூர்யனின் பிரகாசத்தை அவள் வார்த்தைகள் புகுத்தி அவருக்குள் மண்டியிருந்த சுயநலமென்ற காரிருளை விலகச் செய்திருந்தது.

ஜென்னி தாமஸை அவர் அறையில் ஓய்வெடுக்க செய்துவிட்டு, தன் அறைக்கு அவள் சென்று கொண்டிருக்க, டேவிட் அவளை வழிமறித்து நின்றான்.

அவன் முகத்தில் உள்ள கோபத்திற்கான காரணம் புரியாதவள் போல, "ஆபிஸுக்கு லேட்டாச்சுன்னு சொல்லிட்டு... இன்னும் கிளம்பாம இருக்கீங்க" என்றவள் கேள்வி குறியாய் பார்க்க,

"ஏன் டேட்கிட்ட அப்படி சொன்ன?"
கேட்டு முறைப்பாய் பார்த்தான்.

"நான் எங்கே சொன்னேன்... அது நீங்க சொன்னதுதானே டேவிட்" இயல்பாய் கேட்டு அவள் தலையசைக்க,

"அது நான் வேறொரு சூழ்நிலையில உன்கிட்ட சொன்னது ஜென்னி" என்றவனின் பார்வை எங்கோ வெறித்தது.

"ஸோ வாட் ? அது இப்பவும் நடக்கலாமே" என்றவள் சொல்லவும் ஆச்சர்யமாய் பார்வையை அவள் புறம் அவன் திருப்ப

"நான் உங்களுக்கு சூப்ப்ப்ப்ரா ஒரு பொண்ணு பார்த்து வைச்சிருக்கேன் ... உங்களை மாதிரியே ரொம்ப ப்ரண்ட்லியான அன்பா பழகிற கேரக்டர்" என்று அவள் குதுகலித்து சொல்ல,
அவன் முகம் ஏமாற்றமாய் மாறியது.

"ஜென்னி ப்ளீஸ்... ஸ்டாப் டாக்கிங் நான்ஸென்ஸ்... என் டெசிஷன் என்னன்னு நான் அன்னைக்கே சொல்லிட்டேன் ல...? அப்புறம் ஏன் நீ இப்படி தேவையில்லாம பேசிட்டிருக்க...

நான் உன் லைஃப்ல உன் டெசிஷன்ல எப்பையாச்சும் தலையிட்டிருக்கேனா? அப்புறம் நீ மட்டும் ஏன்?" என்றவன் கேட்டுவிட்டு அவன் அந்த பேச்சை வளர்க்காமல் அங்கிருந்து வேகமாய் அகன்றுவிட்டான்.

அவன் கோபத்தை அவள் பொருட்படுத்தவில்லை.

ஆனால் அப்போதைக்கு அவனை எப்படியாவது திருமணத்திற்கு சம்மதிக்க வைத்துவிட வேண்டுமே என்ற எண்ணம்தான் அவளுக்கு பெரிதாய் இருந்தது.

எப்போதும் போல் அலுவலகத்திற்கு தயாராகி டேவிட் புறப்பட, ஜென்னியிடம் கோபமாய் பேசிவிட்டதை எண்ணி அவன் மனதிற்கு உருத்ததலாய் இருந்தது.

ஆதலால் அவளிடம் பேச அவள் அறைக்கு செல்ல,

என்றுமில்லாமல் அவள் இன்று முற்றிலுமாய் வேறு பாணியில் உடையணிந்திருப்பதை பார்த்து வியப்பாய் நின்றுவிட்டான்.

"ஜென்னி" என்றழைத்து அவன் அறைகதவருகில் நிற்க,

"உள்ளே வாங்க" என்றாள்.

அவன் அவளின் தோற்றத்தை வியந்தபடி பார்த்தவன் "இன்னைக்கு ரொம்ப புதுசா தெரியிற" என்க

"உம்ஹும்... புதுசில்ல டேவிட்... இதான் என் பழைய லுக்" என்று அவள் சொல்லவும்

அவன் குழப்பமானான்.

அவள் புன்னகையோடு, "சாக்ஷி எப்படி இருப்பான்னு எனக்கு நானே பார்த்துக்கனும்னு தோணுச்சு டேவிட்... அதான் காட்டன் புடவை.. பின்னல் ... மல்லிகை பூ... எப்படி இருக்கு ?" என்று அவள் ஆர்வமாய் கேட்க, அவளின் அந்த மாற்றத்தை அவனால் நம்ப முடியவில்லை.

சாக்ஷி என்ற பெயரை கூட விளிக்க விரும்பாதவள் இன்று முழுமையாய் அவள் சாக்ஷியின் தோற்றத்தில் மாறி நிற்பதை அதிசயத்து பார்த்திருக்க,

அவளோ "ஏன் டேவிட் ? சாக்ஷி அழகா இருக்காளா ?... இல்லை ஜென்னித்தாவா ?" என்று கேட்டாள்.

அவன் புன்னகை அரும்பிய முகத்தோடு,

"சாக்ஷிதான் ரொம்ப அட்டிரக்டிவ் ஆனா ஜென்னிதான்... அட்மைரப்பிள்" என்க,
அவள் முகமும் மலர்ந்தது.

டேவிட் அதன் பின்னர் தன் கைகடிகாரத்தை பார்த்து தயக்கத்தோடு, "ஐம் சாரி ஜென்னி... நான் ஏதோ டென்ஷன்ல உன்கிட்ட கோபமா பேசிட்டேன்" என்க,

அவள் மாறாத புன்னகையோடு, "அது பரவாயில்லை... ஆனா நான் சொன்ன மேட்டர்" என்று அவள் கேட்கவும்,

"எனக்கு ஆபிஸுக்கு லேட்டாவது" என்று சொல்லிவிட்டு அந்த நொடியே அவன் புறப்பட்டான்.

'எஸ்கேப் ஆகிறீங்களா ? நான் எப்படியாவது உங்களை வழிக்கு கொண்டு வர்றேன்' என்று தானே உரைத்து கொண்டவள், பின்னர் கண்ணாடியில் நின்று அவளை மேலும் கீழுமாய் பார்த்தாள்.
 




Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
மகிழை பார்த்ததிலிருந்து அவள் மனம் முற்றிலுமாய் மாறியிருந்தது.

அவனின் விழிகளில் அவளுக்கே உரித்தான ஆழமான காதலை பார்த்த பின் ஏற்பட்ட அபிரமிதமான சந்தோஷம் இது.

அதுவே போதும் இந்த ஜென்னம் முழுக்க என்றளவுக்காய் அவள் உள்ளமெல்லாம் அவன் காதலை எண்ணி பூரிப்படைந்திருக்க, சாக்ஷியாய் தான் மகிழின் பார்வையில் எப்படியிருந்திருப்போம் என்று அவளுக்குள் தோன்றிய அசட்டுத்தனமான ஆசையை தீர்த்துகொள்ளவே அவ்விதம் உடையணிந்து பார்த்து கொண்டாள்.

முதல்முறையாய் அவள் விழிகள் அவளையே பார்த்து ரசித்து கொண்டது.

அந்த சமயம் ராகவ் டேவிடின் வீட்டிற்குள் நுழைந்தான். அவன் தயக்கத்தோடு முகப்பு அறையில் நின்று பார்வையை சுழற்ற,

டேவிட் அவனை பார்த்துவிட்டு,

"உள்ளே வாங்க ராகவ்" என்றழைத்தான்.

டேவிடை பார்த்ததும் கொஞ்சம் கடுப்பானவன், அவனிடம் அலட்சிய பார்வையோடு "ஜென்னியை பார்க்கனும்" என்று இறுக்கமாகவே உரைத்தான்.

ராகவிற்கு தன்னை சுத்தமாய் பிடிக்கவில்லை என்பதை டேவிட் அவன் பார்வையிலயே உணர்ந்தாலும்,

புன்முறுவலோடே அவனை பார்த்து "ஜஸ்ட் மினிட் ராகவ்" என்றவன்

அங்கிருந்த பணியாள் ஒருவனை அழைத்து, ராகவை ஜென்னியின் அறைக்கு அழைத்துப் போகச் சொல்லி பணித்தான்.

அவன் டேவிடிடம் மரியாதைக்காக கூட ஒர் நன்றியுரைக்காமல் கடந்து சென்றான்.

ராகவ் அவள் அறையில் வாசலில் வந்து நிற்க, ஜென்னியின் மனமெல்லாம் மகிழை மட்டுமே சுற்றியே இருந்தது.

'எவனோ ஒருவன் வாசிக்கிறான்

இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்'

என்ற பாடல் மிதமாய் ஒலித்துக் கொண்டிருக்க, அவள் மனநிலைக்கு ஏற்றவாறாய் இருந்த அந்த பாடலை அவள் விழிகள் மூடி இருக்கையில் அமர்ந்து தலைசாய்த்து ரசித்திருந்தாள்.

'எவனோ ஒருவன் வாசிக்கிறான்

இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன

தவம்போல் இருந்து யோசிக்கிறேன்

அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்

கேட்டுக் கேட்டு நான் கிறங்குகிறேன்

கேட்பதை அவனோ அறியவில்லை

காட்டு மூங்கிலின் காதுக்குள்ளே

அவன் ஊதும் ரகசியம் புரியவில்லை'

உள்ளே நுழைந்தவன் அப்படியே அந்த பாடலின் சந்தங்களில் தன்னிலை மறந்து கிடந்தவளின் புதுவிதமான உடையலங்கரத்தை பார்த்து திகைப்புற்றான்.

அவளோ அவன் வருகையை அறியாமல் அந்த பாடலுக்குள்ளேயே மூழ்கிகிடந்தாள்.

'எவனோ ஒருவன் வாசிக்கிறான்

இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்'

'புல்லாங்குழலே! பூங்குழலே!

நீயும் நானும் ஒரு ஜாதி

என் உள்ளே உறங்கும் ஏக்கத்திலே

உனக்கும் எனக்கும் சரிபாதி

கண்களை வருடும் தேனிசையில்

என் காலம் கவலை மறந்திருப்பேன்

இன்னிசை மட்டும் இல்லையென்றால் நான்

என்றோ என்றோ இறந்திருப்பேன்!'

அவள் தேகத்தின் நிறத்தோடு போட்டிக் போட்டுக் கொண்டு அழகாய் மிளிரும் அந்த மஞ்சள் நிற காட்டன் புடவையில் பின்னிய கூந்தலும் அதனில் அவள் சூடியிருந்த மலரும் என அவளை உச்சி முதல் பாதம் வரை நிதானமாய் ரசித்தவனின் மனம் சலனப்பட்டது.

காந்தமாய் ஈர்த்தவளை அவன் மனம் தீண்டச் சொல்லி அழுத்தம் கொடுக்க, அவனின் காம உணர்வுகள் எரித்தழலாய் மாறி அவனுக்குள் தீ முட்டியது.

ஆனால் அவள் அதனை சற்றும் உணர்ந்திருக்கவில்லை. அந்த பாடலிலேயே அவள் லயித்திருந்தாள்.

எவனோ ஒருவன் வாசிக்கிறான்

இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்

உறக்கம் இல்லா முன்னிரவில்

என் உள் மனதில் ஒரு மாறுதலா'

'இரக்கம் இல்லா இரவுகளில்

இது எவனோ அனுப்பும் ஆறுதலா

எந்தம் சோகம் தீர்வதற்கு

இது போல் மருந்து பிரிதில்லையே'

அந்தக் குழலைப் போல் அழுவதற்கு

அத்தனை கண்கள் எனக்கில்லையே'

அவளை தன் பார்வையாலயே வருடியவன் நிதானம் இழந்து தன்னிலை மீறி நெருங்கியவனுக்கு அந்த கணம் சடாரென எப்போதோ எங்கேயோ அவளை இதே கோலத்தில் இத்தனை நெருக்கமாய் பார்த்த நினைவு தோன்ற, அவன் அப்படியே ஸ்தம்பித்துவிட்டான்.

'எவனோ ஒருவன் வாசிக்கிறான்

இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்'

பாடல் முடிவுற,

அவள் சஞ்சரித்திருந்த அந்த இன்பகரமான உலகம் சட்டென்று மறைந்த நொடி அவள் உள்ளுணர்வு தலைதூக்கி அவளை எச்சரிக்க,

"ராகவ்" என்று அதிர்ந்து அவனை விலக்கிவிட்டு விழித்து கொண்டவளுக்கு இதயம் அதிவேகமாய் படபடத்தது.

அவள் தள்ளிய வேகத்தில் அவனோ சற்று நிலைத்தடுமாறி நின்றான்.

hi friends,
நான் எதிர்பார்த்ததை விட இந்த கதை அதிக அத்தியாயங்களை கடந்து கொண்டு இருக்கிறது.
இழுக்க வேண்டும் என்பது என் எண்ணம் இல்லை. அதே நேரத்தில் அவசரமாய் முடிக்கவும் முடியாது. இந்த கதையின் சிக்கலை ஒவ்வொன்றாக பொறுமையாகவே விடுவிக்க வேண்டும்.

வாசகர்கள் பொறுத்தருள வேண்டும்.
 




Last edited:

Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
இல்லை மகிழ்ச்சி இல்லை ஒரே குழப்பம் மா இருக்கு அத எழுதுற அளவு எனக்கு தெம்பில்லை சாமி... அடுத்த episode அ நினைச்சு நாள தள்ளுவோம்...
 




Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
இல்லை மகிழ்ச்சி இல்லை ஒரே குழப்பம் மா இருக்கு அத எழுதுற அளவு எனக்கு தெம்பில்லை சாமி... அடுத்த episode அ நினைச்சு நாள தள்ளுவோம்...
Enna kozhapam
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
NO.1 Raghav thaan saakshi yooda accident ku kaaranamaa avanuku yeppadi teriyum..
NO.2 david ku ponnu yaaru??
NO.3 jenni yeppo unmaiyaa magil oofa love aa marappa illa
NO.4 iva innum marakalana then y iva raghav aa marriage pannikurean nu sonna ? Enna plan ?
NO.5 ava thaanai yaaru koduma paduthunaanga nu kandupidichitaala?
NO.6 saiyath yenga alla kaanom konja naala

Ipoothaiku ithu thaan inni yoosika yoosika thaan enna enna moo thoonum..ka??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top