• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Pesum silaiye.. Kattavizhkava..? Epi ~ 17

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

AnithaKarmegam

இணை அமைச்சர்
Joined
Jan 21, 2018
Messages
711
Reaction score
1,865
Age
27
Location
Thiruvarur
அதை கண்ட அவர் “ ஆகா.. நீ எனக்கு எதிராக திரும்பி விட்டாயா? உன் இதயம் அவளுக்காக துடிக்கிறதா...” என ஏளனமாக எண்ணி விண்பாவின் கையை இறுக்க பிடித்துக் கொண்டார்...

அவளின் கையை பிடித்துக் கொண்டே அவளை தன் பால் வசிய படுத்த ஆரம்பித்தார்... “ இன்று எப்படியும் அவளை தன் வசபடுத்தி யாகத்தை செய்ய வேண்டும் “ அவன் எண்ணிக் கொண்டு அவள் கையை பிடித்துக் கொண்டு அவர் மந்திரத்தை ஆரம்பித்தார்...

கூடவே அக்ரதா குரல் அவளை எட்டாத வண்ணம் பார்த்துக் கொண்டார்... அதை அறிந்த அக்ரதாவின் ஆன்மாவோ “ மகரிஷி தான் நினைத்ததை விட.. பயங்கரமாக இருக்கிறான்.. இவரை ஏதாவது செய்ய வேண்டும் “ என்று எண்ணிக் கொண்டான்...

அவன் அப்படி எண்ணி தன் மனதில் இருந்து விண்பாவை அந்த நிமிடமே தூக்கி எறிந்தான்... மனதில்“ விண்பா வேண்டாம்.. விண்பா வேண்டாம் “ என்று உரக்க கத்தினான்...

அவன்கத்தல், காட்டில் இருந்த சித்தருக்கு பெரும் சந்தோசத்தை ஏற்படுத்தியது.. இப்பொழுது அவருக்கு இருக்கும் ஒரே எதிரி கோட்டை மட்டுமே...

அக்ரதா இறந்த பிறகு உண்மை நிலையை அறிந்து, அவன் ஆன்மா விண்பாவை காக்க நினைக்கும் என்று எண்ணினார்... ஆனால் இப்பொழுது அக்ரதாவே அப்படி முடிவெடுக்கும் பொழுது அவருக்கு சந்தோசம் தானே அதே சந்தோசத்துடன் அவளை அணைக்க தன் கைகளை அவள் நோக்கி நீட்டினார்...

அவர் அங்கு கைகளை அவள் நோக்கி நீட்ட, எழிலன் உடலில் இருந்த ஆன்மாவோ, எழிலன் ஆன்மாவை எழுப்பிக் கொண்டு இருந்தது, அதே வேலையை தான் விண்பாவும் செய்துக் கொண்டு இருந்தாள்...

இருவரும் மிக தீவிரமாக அவனை எழுப்பும் வேலையை செய்வனே செய்ய... அதுகொஞ்சமாக வேலை செய்ய ஆரம்பித்தது...

மெதுவாக கைகளை அசைத்த எழிலன் வாய், மெதுவாக“ பிங்கி “ என முணுமுணுத்தது... அதில் சந்தோசம் அடைந்த அக்ரதா ஆன்மா அவனை விட்டு பிரிந்து வந்தது..

அக்ரதா ஆன்மா பிரிய காரணம் “ சித்தர் இத்தனை நாள் குடி இருந்தது அவனின் உடலில், இப்பொழுது அவருக்கு எதிராக எது செய்தாலும் அதை அவர் உடனே கண்டுக் கொள்வார். அதற்க்கு காரணம் அவனின் கட்டுப்பாடு இல்லாத மனமே... ஆனால் எழிலன் மனதில் நினைப்பதை அப்படி அவர் அறிந்துக் கொள்ள முடியாது... அவன் மனநிலை எப்படி பட்டது என்று அவர் நன்கு அறிந்து வைத்திருக்கிறார் “ அதனால் அக்ரதா வெளியில் இருந்து பார்க்க ஆரம்பித்தான்...

எழிலன் “ பிங்கி “ எனவுமே கோட்டை ஆக்ரோசத்துடன் எழுந்து விட்டாள்... அவள் எழுந்த வேகத்துடன் கோவில் கோட்டை கதவுகள் திறந்துக் கொண்டன.... திறந்துக் கொண்ட அதே வேகத்துடன் கோவிலில் இருந்து புகை மண்டலம் எழுந்து அந்த காட்டை நோக்கி சென்றது...

எழிலனின்“ பிங்கி “ என்றகுரல் விண்பா காதை வந்தடைந்த நேரம்.. விண்பாவின் உடல் மொழியில் சந்தோசம் அதை அறிந்த, சித்தர் அவளின் எண்ணத்தை கண்டுக் கொண்டார்..
அறிந்த அவர் வேகமாக அவளை நெருங்க, அதே வேகத்துடன் தண்ணீராக இருந்த இருவரும் வெடித்து நாலா பக்கமும் சிதறினர்....


சிதறிய தண்ணீர் துளிகள் ஓன்று கூடுவதற்கு முன் பெரும் மழை பெய்தது... ஆனால் அந்த மழைத்துளிகள் அந்த மண்டபத்தில் விழவே இல்ல... அந்த நேரம் கோட்டை, அன்று சத்தியம் செய்து கொடுத்த தேவிகளை அழைத்தாள்...

இவள் அழைக்கவும் அவர்கள் ஓன்று கூடி வந்தனர்... இந்த நாளுக்காக தான் அவள் காத்திருந்தாள்... அது தான் அன்று சித்தர் அவளை சிறை செய்த பின்னும் அவள் அவர்கள் உதவியை நாடவில்லை... அவளுக்கு தெரியும்.. எந்த காரியத்தை எந்த நேரம் செய்ய வேண்டும் என்று...

விண்பா அவளின் இந்த வயதில் பல கஷ்டத்தை அனுபவிக்க வேண்டும் என்பது அவள் விதியில் எழுதப்பட்ட ஓன்று... அது இன்றுடன் முடிகிறது.. இனி அவளுக்கு யாராலும் எதற்காகவும் ஆபத்து என்பது இல்லை.. அது தான் அவள் விண்பாவை காக்க இந்த நாளை தேர்ந்தெடுத்தாள்..

அவள் இந்த நாளை முன்னாடியே குறித்திருந்தால், சித்தர் எப்படியும் அறிந்துக் கொண்டிருப்பார்... ஆனால் இப்பொழுது நடந்தது யாரும், யாரும் அறியாதது...
தேவிகள் வரவும் ஒவ்வொரு தேவிகளும் ஒவ்வொரு வேலையை கையில் எடுத்துக் கொண்டனர்... நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் இந்த 5 பூதங்களும், அதாவது இந்த 5 தேவதைகளும் தன் பணியை செய்வனே ஆரம்பித்தனர்...


ஒருவள் அந்த மண்டபத்தை ஆக்ரமித்துக் கொள்ள. அது சரிந்து விழ ஆரம்பித்தது... மகரிஷியின் கனவுகள், அவரின் ஆசைகள் இதில் இருந்து அழிவை நோக்கி பயணம் செய்கிறது...

அவர் யாகம் வளர்க்கும் முன்னே இன்னொருவள் அந்த யாககுண்டத்தை தன் நெருப்பால் நிறைத்தாள்...

இந்த கூட்டத்தின் நடுவே தான் அவர்கள் இருவரும் தன் சிதறிய நீர் துளிகளை சேர்க்க போராடினார்கள்...

அதற்குள் பெரும் மழையை அடுத்தவள் உண்டு பண்ணி அவர்களுடன் கலந்தாள்... இருவரின் தண்ணீர் பாகத்துடன், இந்த தண்ணீரும் கலந்து அவர்கள் பாகத்தை அறிய முடியாமல் தவித்தனர்...

அந்த நேரம் அங்கு காற்றாக வந்தான் அக்ரதா... வந்தவன்பல நீர் துளிகளை சேர்த்து விண்பாவை ஓன்று சேர்த்தான்... இன்னும் ஒரு துளி சேர்த்தால் விண்பா முழு வடிவம்.. அதாவது அவளின் முழு ஆன்மா வடிவம் பெறுவாள்...

“ பிங்கி “ நினைவு வர எழுந்த எழிலன் கோட்டை நல்லூரை நோக்கி வந்தான்.. 6 மாதமாக படுத்த படுக்கையாக இருந்த எழிலன் எழுந்து வந்தான் அவனின் பிங்கியை தேடி.. வெளிறிப் போய் ஆள் அடையாளம் இல்லாமல் வந்தவனை கண்டு, அப்பொழுது தான் ஊர் ஜனங்களை அவரவர் வீட்டுக்கு அனுப்பிய சாமுண்டி அந்த காட்டை நோக்கி அழைத்து சென்றார்....

அங்கு சென்று அவன் நிற்க... அவன் நெற்றியில் இருந்து ஒரு சொட்டு நீர் கீழே விழ உருண்டு வர அதை கண்ட தேவதைகளுள் ஒருவள் அவனை நோக்கி இரு கையையும் நோக்கி நீட்டி வருவதற்குள் அந்த சொட்டு கீழே விழுந்தது...

கிழே விழுந்த, அந்த சொட்டை சித்தர் பிடித்து அவரை எழுந்து நிற்க வைத்தது... அதே நேரம் எழிலன் மயங்கி சரிந்தான்...

கட்டவிழ்க வருவான்............
shaaaaaaaaaaaaaaaa enna ipdi oru twist vaichu irukinga....:(
 




Priyapraveenkumar

அமைச்சர்
Joined
Feb 19, 2018
Messages
2,340
Reaction score
2,705
Location
Coimbatore
wow ud semma supper and rombave interesting ah kondu poittinga....oovoru seenum mass(y)(y)(y):eek::eek::eek:.....
but story ending poguthu than niraya kastama irukku.......
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
ஆஹான், அருமை மகரிஷிக்கு
அழிவு ஆரம்பமா?
கோட்டைத்தாய் வெளியில
வந்து விண்பாவை காக்க
ஆரம்பித்து விட்டாள்
வாவ், வாவ் சூப்பர்
இப்போத்தான் ரொம்பவே
சந்தோஷமாக இருக்கு,
ஷாந்தினி டியர்
நன்றி பானும்மா.. ஆமா அவருக்கு அழிவு ஆரம்பம் தான்... :ROFLMAO::ROFLMAO:
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
நீராக மாறி மகரிஷியும்
விண்பாவும் செய்யும் சித்து
வேலைகள், கோட்டைத்தாய்
அனுப்பிய தேவதைகள் செய்யும்
சித்து வேலைகள் எல்லாமே,
மிகவும் அருமை
பேரைப் பாருங்கப்பா, கெட்ட
எண்ணம் பிடித்தவனுக்கு
மகரிஷி-ன்னு பேராம்?
அடக்கடவுளே?
அதற்குள் இந்த அருமையான
நாவல் முடியப் போகுதா,
ஷாந்தினி டியர்?
அப்போ,
ஹா ஹா பானும்மா.. :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:அவர் பேருக்கு என்ன குறை... ஆமா இன்னும் ஒரு 3 எபி தான் வரும்னு நினைக்கேன் ..:censored:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top