• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kathai Ondru Aarambam epilogue

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
எனக்கு என் கதை மாந்தர்களின் வாழ்க்கையை சில வருடம் கழித்து பார்க்க வேண்டுமென்ற ஆசை எழுந்த காரணத்தினால் இந்த பகுதியை பதிவிட்டிருக்கிறேன். விருப்பம் இருக்கிறவங்க படிச்சு பாருங்க.


‘வாடி என் தமிழ்செல்வி, டேக் மீ ஷாப்பிங் டு தி நல்லி…’
தமிழ் செல்வியை வேலை பார்க்க விடாமல் தொல்லை செய்து கொண்டிருந்தாள் பொற்பாவை. இப்போது கல்லூரியில் படிக்கும் பட்டாம்பூச்சி.
“இன்னும் சின்ன பிள்ளை மாதிரி என்ன டி விளையாட்டு உனக்கு ?பாரு உன் தம்பிங்க எல்லாம் உன்னையே பார்த்திட்டு நிக்கிறாங்க..”
பேசாத தமிழை இப்போது அதிகம் பேச வைத்தாள் அவள் செல்ல மகள்.
அன்னை சொன்னதற்கு அங்கு நின்றிருந்த வருண், வர்னித்தை பார்க்க, இருவரும் மொபைலை கையில் வைத்துக் கொண்டு,
“பொற்பாவை கா, இமாஜின் டிராகன்ஸ்ல பிலீவர் பாட்டுக்கு டான்ஸ் ஆடலாம் வரியா?” என்றான் சித்தியின் மூத்த மகன் வருண்.
“ஓ வரேனே!ஹாலில் வேண்டாம் தாத்தா திட்டுவாங்க,மாமா ரூமுக்கு போகலாம் வாங்க டா”
இருவரையும் அழைத்துக் கொண்டு அங்கு சென்று, இலக்கியன் அங்கில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு ஆட ஆரம்பித்தனர். மூவரும் ஆட்டமாய் ஆட்டம்! அவன் அறையில் இருந்த ஸ்பீக்கர் அலறியதில் ,அந்த வீட்டில் ஏதோ ஒரு மூளையில் இருந்த இலக்கியன் அங்கு வந்து சேர்ந்தான்.
“உன் கிட்ட எத்தனை தடவை சொல்லியிருக்கேன் என் ரூமுக்கு வராதேன்னு!”
சுள்ளென்று அவன் அக்கா மகளிடம் எரிந்து விழ வெண்பாவின் மகன்கள் அவ்விடத்திலிருந்து ஓடிவிட்டனர்.அவர்கள் அம்மா சொல்லிக் கொடுத்த முதல் பாடமே, மாமனிடம் அடங்கி போக வேண்டும் என்பது தான்!ஆனால் பொற்பாவை இன்னமும் அங்கேயே நின்று கொண்டிருக்க,
“நீ இன்னும் போகாம என்ன செய்றே!”
நிதானமாய் அவனை நெருங்கி வந்தவள்,
“இது என்னோட ரூமும் தானே, நான் இங்க இருந்தா தான் என்னவாம்!”
சொல்லி முடித்து அவனை ஒரு இடி இடித்துவிட்டு வெளியேறினாள்... போகிறவளை கேள்வியுடன் பார்த்துக் கொண்டு நின்றது சற்று நேரம் தான். தானாய் உதட்டில் ஒரு புன்னகை குடிக் கொள்ள, தன் கப்போர்டை திறந்து எதையோ ஆராய்ந்து கொண்டிருந்தவனின் தோளை தட்டினாள், அவளே தான்.
“எதுக்கு என் போட்டோவை இங்க வச்சியிருக்கே”
கப்போர்டின் உள் பக்கம் ஒட்டியிருந்த அவளின் புகைப்படத்தை சுட்டிக்காட்டி கேட்க, முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டான்.
அவனை அதே பார்வை பார்த்த படி மறந்து விட்டு போன அவளின் துப்பட்டாவை எடுத்துக் கொண்டு வெளியேறினாள்.
கதவை தாள் போட்டு பூட்டிவிட்டு , தன் மாமன் காட்டிய வழியில் நிஜத்தை ரசிக்க முயலாமல், அந்த போட்டோவில் மூழ்கிவிட்டான் இலக்கியன்.


மதி போனில் பேசிக் கொண்டிருந்தாள்,
“ என்ன டி இது வாழ்க்கை!இத்தனை பிஸியா போகுது. ஆபிசும் போய்ட்டு இந்த பிள்ளையையும் பார்த்துகிட்டு, சுத்தமா என்னால முடியலை வெண்பா. எங்க அம்மாவை இங்க அடிக்கடி கூப்பிடவும் யோசனையா இருக்கு”
“ ஆமா மதி கஷ்டம் தான் , நான் இப்ப வீட்டில் இருப்பதால் பார்த்துக்குறேன். உனக்கு அங்க உதவிக்கும் ஆள் இல்லைன்னு சொல்றே!”
“ நீங்க இந்த லீவுக்கு இங்க வாங்களேன்!”
“ ஆமா மதி, விழியன் சொல்லிட்டிருந்தார். சீக்கிரம் வரோம்”
“ ஓகே.ஊரில் எல்லாரையும் கேட்டதா சொல்லு. அடிக்கடி எனக்கு போன் பண்ணு டி. ப்ளீஸ் யா ஐயம்...”
“ யம்மா தாயே, மறுபடியும் அதை சொல்லாதே...கட்டாயம் செய்றேன்… பை டி”
பக்கத்தில் விழியன் நகைத்துக் கொண்டிருந்தான்.
“என்ன டா சிரிப்பு”
“அவளுக்கு அட்வைஸ் பண்ற அளவுக்கு உன் மூளை வளர்ச்சியடைஞ்சதை நினைச்சேன், சிரித்தேன்”
“உதைப்பேன்”பட் பட்டென்று அவனை மொத்த ஆரம்பித்தாள்.
“ஏய் ஏன் டீ அடிக்கிற?”
“ நகைக்கடைக்கு போனது ,எனக்கு செயின் வாங்க...போன வேலைய பார்க்காம எதுக்கு ஜாஸ்தி பேசுன! அவ உனக்கு வாங்கலையான்னு கேட்குறா, நீ இளிக்கிறே!”
“ஆத்தா மாரியாத்தா, அது சேல்ஸ்ல அவங்க கஸ்டமர் கிட்ட செய்ற யுத்தி, அதுக்கெல்லாம் நான் அவங்களை கோபமா திட்ட முடியாது… என்னை விட்டிரு டி. நான் பாவம்”
“ஒழுங்கா இருங்க”
ஒற்றை விரல் நீட்டி அவனை மிரட்டினவளை இழுத்தனைத்து முத்தமிட்டான்...
“ ரோட்டை பார்த்து வண்டி ஓட்டு விழியன்”
சிணுங்கிக் கொண்டு செல்லமாய் இன்னொரு அடி வைத்தாள். இருவரும் ஒருவர் முகத்தை பார்த்து ஒருவர் திருட்டு புன்னகை சிந்திக் கொண்டே அவள் தந்தை வீட்டுக்கு வந்து சேர்ந்தனர்.


தூங்குக் கொண்டிருந்த தன் மூன்று வயது செல்ல மகளை தங்கள் அறையில் விட்டு காலை பணிகளை முடித்துவிட்டு வருவதற்குள் பிளானை மாற்றிவிட்டான் அவன்.
“பிரகாஷ் ப்ளீஸ் , நான் பார்த்துக்குறேன் அவளை. நீ ஆபிஸ் போ!”
“ரதி எப்பவும் என்ன பிடிவாதம்! இன்னிக்கு கிளையண்ட் மீட் உனக்கு ரொம்ப முக்கியம், நீ ஆபிஸ் போ. நான் அவளை பார்த்துக்குறேன். காய்ச்சல் குறைஞ்சிடிச்சு பாரு!”
மகளின் நெற்றியை தொட்டு பார்த்தாள், அவன் சொன்னது சரி தான்.
வேறு வழி இல்லாமல் பணிக்கு தயாராகி விட்டாள். நேர்த்தியாய் கட்டிய காட்டன் புடவையில் குடும்ப குத்துவிளக்கு போலிருந்தாள்.அவனுக்கு கட்டி வைத்த டிபன் பாக்ஸை தனக்கென்று எடுத்துக் கொண்டாள். கிளம்பும் முன்,மறுபடியும் மகளை எட்டி பார்க்க இன்னமும் குட்டி எழுந்திருக்கவில்லை.அவளருகில் கட்டிலில் அமர்ந்து செய்திதாளை படித்துக் கொண்டிருந்தான் பிரகாஷ்...
“ போயிட்டு வரேன் பிரகாஷ்... பத்திரமா பார்த்துக்கோ” குனிந்து மகளின் நெற்றியில் முத்தமிட்டு அவள் திரும்ப அவள் கையை பற்றியிருந்தான் பிரகாஷ்.
என்ன என்பது போல் புருவத்தை வளைத்து அவள் கேட்க.
“ எனக்கு ஒண்ணு கொடுத்திட்டு போ ரதி”
“விளையாடாதே பிரகாஷ்... கையை விடு”
உறுவிக் கொள்ள முயன்றதை அவன் விடவில்லை...மாறாக கட்டிலை விட்டு எழுந்தவன் , அவளை சுவற்றில் சாய்த்து நிதான முத்தம் ஒன்றை வைத்தான். இந்த வாரம் முழுவதும் அவள் பட்டிருந்த மனச்சுமை எல்லாம் அகன்றது போலிருந்தது ரதிக்கு .பிள்ளைக்கு உடம்பு முடியாமல் போக, ரணப்பட்டிருந்த மனதை ஆசுவாசப்படுத்தினான் அவளவன். நீண்ட நேரமாய் நீடித்திருந்த முத்தத்தை ஒரு கட்டத்தில் முடிவுக்கு கொண்டு வந்தவன்,
“நம்ம பொண்ணை நான் பத்திரமா பார்த்துக்குறேன். நீ டென்ஷன் ஆகாம வண்டியை ஓட்டிகிட்டு போ”
சின்ன புன்னகையுடன் அவன் முகம் பார்த்து சரி என்றவள், அடுத்த நொடி புறப்பட்டு விட்டாள்.போகின்ற வழி முழுவதற்கும் தன் வாழ்க்கையில் பிரகாஷை தந்த கடவுளுக்கு நன்றி சொல்லி ஆபிஸ் வந்து சேர்ந்தாள், ரதி மீனா!
Ennakada nadakkuthu anga....enjoy
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top