• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Ennai Ko(Ve)llum Vennilave - Epilogue

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Aadhiraa

SM Exclusive
Author
Joined
Jan 17, 2018
Messages
1,073
Reaction score
7,772
Location
Tirunelveli
வணக்கம் மக்களே..

இந்த கதைக்கான திரியின் நான் பதியும் கடைசி அத்தியாயம் இதுவென நினைக்கிறேன்... எல்லாம் வல்ல இறைவனுக்கு..இந்தக் கதையில் என்னுடம் சேர்ந்து பயணித்து, எனக்காக நான் செய்யும் தவறுகளை எல்லாம் பொறுத்துக் கொண்டு படித்த அனைத்து நல் உள்ளங்களுக்கு நன்றி..

இந்தக் கதையை எப்படி முடித்துள்ளேன் எனக் கேட்டால் முடித்துவிட்டேன் என்பது மட்டுமே எனது பதில்...நன்றாக இருந்ததா இல்லையா என்பது எல்லாம் நீங்கள் சொன்ன பின் தான் முடிவு செய்ய வேண்டும் மக்களே...

பல குழப்பத்திற்கு நடுவே, ஏன் குழப்பம் என்றால் எப்போதும் கருத்து தெரிவிக்கும் பலர் இறுதி அத்தியாயத்திற்கு சரியாய் கருத்து தெரிவிக்கவில்லை...அதிலே அதிகமாய் சோர்ந்துவிட்டேன்..
ஆனால் புதிதாய் பல கருத்துக்கள் பார்த்ததில் மகிழ்ச்சியே...

அத்தகைய குழப்பம் மற்றும் தயக்கத்துக்குப் பின் இக்கதையின் இறுதி அத்தியாயத்தை இங்கே கொடுக்கிறேன் மக்காஸ்..

அனைவரையும் என்னால் என் கற்பனைக் கொண்டு திருப்தி படுத்த முடியவில்லை என்றாலும், உங்களில் சிலபேருக்கு என் கதைப் பிடித்திருக்கும் என்ற நம்பிக்கையில் உங்களிடம் இருந்து விடைபெறுகிறேன் மக்காஸ்...

மறந்துவிடாதீர்கள்..விரைவிலே சந்திப்போம்...இன்று இரவு ஒன்பது மணியில் இருந்து இதுவரை நான் ரிப்ளை செய்யாத கமென்ட் அனைத்திற்கும் ரிப்ளை செய்து கடலை போட வருகிறேன் உங்களின் குயந்த புள்ள...

நன்றி மக்களே..உங்களது ஆதரவை என்றும் மறக்க மாட்டேன்...

இப்படிக்கு
என்றும் உங்கள் குயந்த புள்ள..
 




Aadhiraa

SM Exclusive
Author
Joined
Jan 17, 2018
Messages
1,073
Reaction score
7,772
Location
Tirunelveli
~37~

மதிய உணவு இடைவேளையில் ஆதிக் வர்மனின் கார், அவர்களது ஏரியாவில் இருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியின் முன்னால் நின்றிருந்தது…

தலைமை ஆசிரியர் அறையின் முன் ஆதிக் வர்மன் கால் கடுக்க நின்றிருக்க, அவனது காலுக்கு அருகே ஏழு வயது சுட்டிபெண் ஆருண்யா கைகளைக் கட்டி முகத்தைச் சுருக்கி அவனது பேன்ட்டின் நுனியைப் பிடித்து நின்றிருந்தாள்…

வந்ததில் இருந்து பல விதத்தில் கேட்டு பார்த்தும், நிமிர்ந்து முகத்தைப் பார்க்காமல் குனிந்தே நிற்கும் தனது மகளின் முன் மண்டியிட்டு அமர்ந்தவன்..

“ஆரு…” என்றதும்

“என்னப்பாஆ..?” இதழ் குவித்து அழகாய் மழலையில் கொஞ்சும் தனது மகளிடம்

“எதுக்கு டா மேம் வரச் சொன்னாங்க..?” எனவும், அவளது அன்னையைப் போலவே ஈயெனச் சிரித்தவள்,

“அவங்களுக்கு வேற வேலையில்ல ப்பா..சும்மா சும்மா கூப்பிடுவாங்க..” என்றவளை முறைக்க முடியாமல் பார்த்தவன்..

“உண்மையை சொல்லு டா..” என்க

“என்மேல எந்த தப்பும் இல்ல ப்பா..” என்றவள் வாயை மூடி நின்ற விதத்திலே தெரிந்தது, இதற்குமேல் பதில் சொல்ல மாட்டாள் என,

‘இது சரிவராது’ மனதில் நினைத்துக் கொண்டே எழுந்து நிற்க, தலைமை ஆசிரியர் அறையில் இருந்து வெளியே வந்த ப்யூன்,

“ஆருண்யா வர்மன்..” என்றார் அழைக்கும் விதமாய்..

ப்யூன் அழைத்ததும், தந்தையைத் தாண்டி முன்னேச் சென்றவள், வாங்க ப்பா..சீக்கிரம்..” தயங்கி நிற்கும் ஆதிக்கின் கைபிடித்து இழுத்தாள்…

தலைமையாசிரியரின் அறைக்குள் நுழையும் முன், ஆருண்யாவின் கன்னம் கிள்ளிய ப்யூன், “பாப்பா ரொம்ப சுட்டி சார்..” என்று சொல்ல, அவனைப் பார்த்து கடனே எனச் சிரித்தவனுக்கு முகத்தில் பயம் தான்..

அவரது அறைக்குள் நுழைந்ததும், “வணக்கம் மேம்..” கைகூப்பி வணங்கும் ஆதிக்கை எழுந்து நின்று வரவேற்ற தலைமையாசிரியர், அவருக்கு முன்னிருந்த இருக்கையை காட்டி,

“உட்காருங்க மிஸ்டர்.ஆதிக்..” என்றார்..

இருக்கையில் அமர்ந்தவன், பக்கத்தில் நின்ற தனது மகளை கைகளில் அள்ளி மடியில் அமர வைத்து கொண்டு, “என்ன ஆச்சு மேம்..” எனக் கேட்க

“ஏன் சார்..பாப்பா சொல்லலையா..?” என்றவர் பக்கத்தில் இருந்த பெல்லை அழுத்தி,

“சாமி, இரண்டாங் க்ளாஸ்ல ரஷ்வந்த் கூட்டி வாங்க...அப்படியே இந்த பொண்ணு அடிச்ச நாலாங் க்ளாஸ் நிலனையும் கூட்டி வாங்க” கட்டளையாய் உரைத்தவரின் மொழியில் இருந்து தனது பெண் யாரையோ அடித்திருக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டவன், அவளது காதருகே குனிந்து

“ஏன் பாப்பா..?” என்று கேட்டதும், அவனைப் போலவே மெதுவாய்

“என்மேல தப்பு இல்லப்பா..” என்பதை மட்டும் சொல்ல, இவளை ஒன்றும் செய்யமுடியாது என அறிந்தவன் தங்களையே பார்த்து கொண்டிருக்கும் தலைமையாசிரியரிடம்

“என்ன ஆச்சு மேம்..” என மறுபடியும் கேட்டு நின்றான்..

“சார்…உங்களுக்கு இருக்கும் வேலையில வாரத்துக்கு ஒருமுறை இப்படி அலைய வைக்க எங்களுக்கு கஷ்டமா தான் இருக்கு..ஆனா உங்க பொண்ணு சேட்டை கொஞ்டமும் குறைஞ்ச பாடில்லை சார்..” என்றவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, வரிசையாய் அவ்விரண்டு மாணவர்களும் உள்ளே வர,

அவர்கள் இருரையும் பார்த்து சிநேகமாய் ஆதிக் சிரிக்க, ரஷ்வந்த், “பெரிப்பா…” எனக் காலைக் கட்டிக் கொண்டான்..

அவர்கள் இருவரும் வந்ததும் ஆருண்யாவை மடியில் இருந்து இறக்கிவிட்டவன், “போ போய் அவங்க கூட நில்லு..” என்றவன் ரிஷ்வந்தையும் தன்னில் இருந்து பிரித்து அவர்களுடன் நிற்க வைத்தான்..

குழந்தைகள் அனைவரையும் ஒன்றாய் பார்க்கும் அவனது செய்கைக்கு மெச்சுதலாய் ஒரு பார்வைக் கொடுத்தவர், “சார்..உங்க பொண்ணு கோபம் வந்தா டப்புன்னு கையை நீட்டி அடிக்குறா..எங்க இருந்து அவளுக்கு இந்தப் பழக்கம் வந்தது சார்.. இன்னைக்கு காலையில கூட உங்க பொண்ணு நிலனை அடிச்சிருக்கா..”

“வாட்டர் டேங்க் பக்கத்துல வச்சி, அவன் மேல ஏறி உட்கார்த்து அடிச்சவளை, அவன் கிட்டயிருந்து பிடிச்சி இழுக்குறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிட்டு சார்…ஹோம் வொர்க்ல இருந்து எதுவுமே ஒழுங்கா பண்ணுறது இல்ல சார்..இப்போ முடிஞ்ச எக்ஸாம்ல எல்லாமே பிலோ ஆவரேஜ்…அ எழுது சொன்னா ஆ எழுதி வைக்குறா, A எழுத சொல்லிக் கொடுக்கும் போது அ எழுதி அதைமட்டும் தான் எழுதுவேன்னு அழுத்தமா உட்கார்ந்துகிறா சார்…” என்றவர் ஆருண்யாவை முறைத்து பார்க்க

“ஏன் டா அடிச்ச..” தனது முகம் பார்த்து கேட்கும் தந்தையிடம்

“அப்பா..அவன் தான் என் முடியைப் பிடிச்சி இழுத்தான்..” என நிலனைப் பற்றி குறை கூற

நிலன் அதை மறுக்கவேயில்லை..சொல்லப் போனால் இங்கு நடக்கும் எதுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்பதை போல நின்றிருந்தான்..

அவனுக்குப் பதிலாய் வாயைத் திறந்த ரிஷ்வந்த், “பெரிப்பா அந்த அண்ணா என்னைக் கூப்பிட கை நீட்டும் போது இவா தான் பா குறுக்க வந்துட்டா..அந்த அண்ணா கையில போட்டிருக்க டாலர்ல தெரியாம இவளோட முடிப்பட்டு இழுத்ததுக்குத் தான் இவ்ளோ சண்டை..” வசமாய் போட்டுக் கொடுக்கும் ராஜின் மகனான தனது அண்ணனை முறைத்தவள்,

“அப்பா...ரிஷி கூட நான் சண்டை…” என்பதை அறிவிப்பாய் கொடுக்க

ஆருண்யாவின் காலில் மிதித்த ரிஷ்வந்த், “சூ..” என வாயில் விரல் வைத்துக் காண்பித்தான்..

அவன் சொன்னதும் அமைதியாய் அடங்கியவள், குனிந்து நின்று கொள்ள,

“சாரி மேம்..” என்ற ஆதிக்கை தடுத்தவர்,

“நீங்க ஏன் சார் சாரி சொல்லனும்..” என்றவரைத் தொடர்ந்தவன்

“இல்ல மேம்...இனி இதுபோல பண்ணாம பார்த்துக்கிறோம்.. ஆரு ஆஸ்க் சாரி டூ ஹிம்..” என்றதும்,

தந்தையை சினப்பார்வை பார்த்தவள், நிலனிடம் திரும்பி, “சாரி..” எனச் சொல்ல

நிலனின் அருகே சென்ற ஆதிக், “சாரி பா…” என்றவனின் கை அவனது தலையை வருடியது..

பிரச்சனை அவ்வளவு தான் என்பதைப் போல, “மிஸ் நான் போகட்டுமா” யாருக்கும் பதிலளிக்காமல் அவனது வயதை மீறிய இறுக்கத்துடன் வெளியேறிய நிலனையே பார்த்து நின்றவவனிடம்

“சார்..கொஞ்சம் பார்த்துகோங்க..வீட்டுலையும் கொஞ்சம் சொல்லிக் கொடுக்கச் சொல்லுங்க..” என்றார்..

“ஓகே மேம்..” என்றவனிடம் அவன் அந்தப் பள்ளிக்கு கட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கும் கழிப்பறையையும், பெண்களுக்கு என தனியே கட்டிக் கொடுக்கும் ஓய்வறை பற்றியும் விவாதித்தவர், இறுதியாய்,

“சார்..உங்களுக்கு இருக்கிற வருமானத்துக்கு பிள்ளைகளை இங்க சேர்த்தது ஆச்சர்யமா தான் சார் இருக்கு..” என்றவருக்கு எப்போதையும் போல் சிரிப்பை பதிலாய் கொடுத்தவனை நிறுத்தியவர்

“சார் இன்னைக்காச்சும் என்னக் காரணம்னு உண்மைய சொல்லுங்க சார்..உங்க தம்பி மகனை இங்க சேர்த்ததே எங்களுக்கு ஆச்சர்யமா இருந்தது இதுல உங்க பொண்ணையும்..” என்றவனை தடுத்தவன் திரும்பி இருவரையும் பார்க்க, ரிஷ்வந்த் அமைதியாய் கையை கட்டி நின்று ஆருண்யாவை பார்த்திருக்க

ஆருண்யாவோ, குதித்து குதித்து அங்கு உயரத்தில் வைத்திருந்த ட்ராபியை எடுக்க முயன்று கொண்டிருந்தாள்..

“ஆரு, ரிஷி..” டைம் த்ரீ ஆகிட்டு பாருங்க க்ளாஸ்க்கு போய் மிஸ் கிட்ட சொல்லிட்டு பேக் எடுத்துட்டு வாங்க என ஆதிக் சொன்னதும் வேகமாய் சிறுவர்கள் ஓடிவிட்டனர்..

“மேம்..என் பசங்களுக்கு தேவை படிப்பு தான...இங்க சொல்லிக் கொடுக்குறத விட மிஞ்சிப் போனா அதிகமா ரெண்டு லாங்குவேஜ் சொல்லிக் கொடுக்கப்போறாங்க..சோ என் பசங்களுக்கு அதர் லாங்குவேஜை நான் டியூசன் அனுப்பி படிக்க வச்சிக்குறேன் மேம்...அதுமட்டுமில்லாம தமிழ்ல படிக்கிற ஒண்ணும் கேவலம் இல்லையே..”

“அவங்க ரெண்டு பேருமே இந்த மிடில் க்ளாஸ் சொசைட்டில வளரணும்,பணத்தோட மதிப்பு அவங்க கூட இருக்கிறவங்கள பார்த்தாச்சும் புரிஞ்சுக்கட்டும்...எனக்கு நம்பிக்கையிருக்கு என் பசங்க மேல…” என்றவன் தனது உதவியாளர் வந்து மிச்ச வேலைகளை முடித்துக் கொடுப்பார் எனச் சொன்னவன் ஓடி வந்த பிள்ளைகளின் புத்தகப் பையை வாங்கிக் கொண்டு கிளம்பிவிட்டான்..

உண்மை தான்..அரசு பள்ளியில் படிப்பது கேவலமில்லையே?!

காரில் ஏறியதில் இருந்து ரிஷியை, காரை என மாற்றி மாற்றி நோண்டிக் கொண்டு வளவளத்துக் கொண்டே வரும் மகளைக் கண்டிக்காமல் அவள் போக்கிலே விட்டவன், போர்ட்டிக்கோவில் காரை நிறுத்தினான்..

கார் நின்றதும் வாயிலிலே செருப்பை அந்தப்பக்கம் ஒன்றும் இந்தப்பக்கம் ஒன்றுமாய் கழற்றி எறிந்தவள், குடுகுடுவென உள்ளே ஓடி வர, அங்கே மதி குச்சியுடன் நிற்பதைப் பார்த்து அதே வேகத்தில் ஆதிக்கிடம் திரும்பி ஓடி வந்தாள்..

காரில் இருந்து இறங்கி ரிஷிவந்தின் பையையும் தனது மகளின் பையையும் கையில் எடுத்துக் கொண்டு திரும்பியவனின் காலை பற்றி நிற்கும் மகளின் இந்த ஓட்டம் ஏன் எனப் புரிந்து கொண்டவன், “ரிஷி கண்ணா… பாப்பாவ கூட்டிட்டு போ..பெரிப்பா சூ கழத்திட்டு உங்க பேக் எடுத்துட்டு வரேன்..” என்றவன் வெளியே போட்டிருந்த சேரின் மீது காலை வைத்து சூவை கழற்ற, ரிஷியின் கரத்தைப் பிடித்து அமைதியாய் உள் நுழைந்த ஆருண்யா அன்னையின் கைக்கு அகப்படாமல் வேணியின் மடியில் ஏறி அமர்ந்து கொண்டாள்…

“ஏய் ஆரு..எத்தனை தடனை சொல்றது..சூவை ஒழுங்கா கழத்தனும்னு…” என்றவள் ரிஷியை தனது இடுப்பில் தூக்கிக் கொண்டு சின்னவளைத் திட்ட, அங்கிருந்த குழலிக்கு மகளின் மாற்றத்தில் புரையேறியது..
 




Aadhiraa

SM Exclusive
Author
Joined
Jan 17, 2018
Messages
1,073
Reaction score
7,772
Location
Tirunelveli
தனது அன்னையின் கிண்டலில் அவரை முறைந்தவள், “என்ன அம்மா..” என்று கேட்க

“ஒண்ணுமில்ல மதி..பழச நினைச்சேன் புரையேறிட்டு..” என்பதை மட்டும் சொன்னார்..

இடுப்பில் இருந்த ரிஷிவந்த் நழுவி செழியன் மற்றும் தர்மருக்கு இடையில் அமர்ந்துகொண்டு அவர்களிடம் கதை பேச, பிள்ளைகளுக்கு பால் ஆற்றிக் கொண்டு வந்த ரேகா, மதியின் கையிலிருக்கும் குச்சியை வாங்கி கீழே போட்டாள்…

வீட்டில் இருக்கும் அனைவருமே ஆருண்யாவின் கட்சி தான்..ஆருண்யா பல சமயங்களில் மதியை பிரதிபலித்தாலும் ஆதிக்கின் முக அமைப்பு அப்படியே அவளுக்கு…

பின்னோடு வந்த ஆதிக், மதியின் கையில் குழந்தைகளின் பையைத் திணித்தவன் அங்கிருந்த ஒற்றை சோபாவில் அமர்ந்து கொள்ள, பிள்ளைகளின் பையை அவர்களது அறையில் வைத்தவள்,

“இன்னைக்கு எதுக்கு ஸ்கூல் போனீங்க..?” என்றாள் மகளை முறைத்துக் கொண்டே

அன்னையின் முறைப்பை அறியாத ஆருண்யா, தந்தையிடம் கண்களால், “சொல்லாதே..” எனச் செய்கை செய்ய,

“சும்மா அங்க டொனேட் பண்ணுற பில்டிங் விஷயமா பேசப் போனேன்..” என்பதை மட்டும் சொல்லியவன் காபியை அருந்தத் துவங்கினான்..

அவனை முறைத்தவள், தங்களது அறைக்குச் சென்றுவிட, மெதுவாய் காபியை அருந்தியவன், குழந்தைகள் விளையாடத் தொடங்கியதும் தனது அறைக்குச் சென்றான்…

கட்டிலில் அமர்ந்திருந்த மதி துணியை மடித்துக் கொண்டிருக்க, தனது கப்போர்டில் இருந்து வேறு உடையை எடுத்தவன் பாத்ரூமிற்குள் நுழைய போக, வழிமறித்து அவனைத் தடுத்தவள்…

“வரவர..ஏன் ஆதிக் என்னைக் கண்டுக்க மாட்டுக்க…” என்றவளைக் கேள்வியாய் பார்த்தவன்,

‘இதுயென்ன புது கதையா இருக்கு..?’ விழிகளால் அவன் கேட்கும் கேள்வி புரிந்தவள்

“உண்மை தான்..உன் பொண்ணு வந்ததுல இருந்து..என்னை உனக்கு கண்ணு தெரியவே மாட்டக்கு...நீ வீட்டுக்கு சீக்கிரமா வரணும்னா உன் பொண்ணு ஏதாச்சும் தப்பு செய்யனும் போல…” என்றவள் குறைப்பட்டுக் கொள்ள

“ஹே அது தான் நீ ஆசைப்பட்ட மாதிரி இன்னைக்கு நைட் நாம எல்லோரும் கேரளா போறோமே..அப்புறமும் உன்னைக் கண்டுக்கலன்னு சொன்னா எப்படி..” என்றவனின் கால் மேல் ஏறி கழுத்தைக் கட்டி நிற்பவளின் இடை வருடியவன்…

“நோ மதி..” அவள் கேட்க வருவதைப் புரிந்து முன்னாடியே பதில் சொல்லும் கணவனைவிட்டு விலகி, “ஆதிக், ப்ளீஸ்..ஒரே ஒரு பையன் மட்டும்…முதல் தடவை ட்வின்ஸ் ஆசைப்பட்டேன் அது தான் நடக்கல...இப்போ ப்ளீஸ்…” எனக் கெஞ்சும் மதியின் விழியை ஊடுருவியவன்

“நீ பெத்த ஒரு புள்ளைக்கே வாரத்துல ஒரு நாள் போய் காத்து கிடக்குறேன் இது பத்தாதுன்னு இன்னும் ஒரு பையன் வேறையா...நாடு தாங்குதோ இல்லையோ மதி...இந்த வீடும் தாங்காது நானும் தாங்கமாட்டேன்…” எனச் சலிப்பாய் அவன் சொன்னாலும் ஒரு மாதமாய் அவனுக்கும் கூட இன்னொரு குழந்தைப் பற்றியே எண்ணம் இருக்கத் தான் செய்தது..

அவனது பதிலில், “ஹி ஹி...என்னை மாதிரியே ஆரு அறிவாளியா இருக்கான்னு உனக்குப் பொறாமை..” என்றதும்..

“வாயக் கிளறாத டி..” என்றவன் இன்றைய சம்பவத்தை மதியிடம் சொல்லிக் கொண்டிருக்க, அதே சமயம் ரிஷியும் அங்கிருந்த அனைவருக்கும் சொல்லிக் கொண்டிருந்தான்..

குடும்பமே தன்னைப் பற்றித் தான் புகழ்ந்து கொண்டிருப்பதை அறியாத ஆருண்யாவோ, வாசலில் ஏறிக் கொண்டிருக்கும் தனது ராஜப்பாவின் மேலே தொத்தி இடுப்பில் ஏறி உட்கார்ந்து அவனிடம் இன்றைக்குத் தான் செய்த சாகசங்களை ஒப்பித்தாள்..

அவளிடம் கதைக் கேட்டுக் கொண்டே உள்ளே வந்தவன், குட்டி இருக்கையில் அவளை அமர வைத்து, ரிஷியின் கன்னைத்தை கிள்ளி, “நீங்க ரெண்டு பேரும் விளையாடுங்க..அப்பா குளிச்சிட்டு வாரேன்…” என்றவன் கண்களால் ரேகாவை உள்ளே வருமாறு அழைத்துவிட்டு சென்றான்..

அவன் சென்ற சில நிமிடங்களில் யாரும் அறியாமல் அறைக்குள் வந்த ரேகாவின் சுடிதார் துப்பட்டாவை பிடித்து இழுத்தவன், இறுக்கமாய் கட்டியணைத்துக் கொள்ள, அவனது அணைப்புக்கு உடன்ப்பட்டவளின் காதில், “வது..ரொம்ப நாளா கேட்குறேன்...என்ன தான் டி முடிவு பண்ணிருக்க..?” எனக் கேட்க

“நமக்கு ஒரு பையன் போதுங்க..” என்றவளின் கன்னம் கிள்ளி கெஞ்சியவன்

“ஹேய் அப்படி சொல்லாதடி உனக்கு என்னை மாதிரி ஒரு பொண்ணு வேணும்னு ஆசையில்லையா..?” என்றான்..

“யப்பா...உங்கள மாதிரி ஒரு ப்ராடெக்ட் வேணாம் சாமி...அதுவும் என்னைச் சுத்த விடுறதுக்கா..?” அவளின் பதிலில்

“ஏன் டி நான் உன்னை நல்லா பார்த்துக்கலையா..?” எனக் கேள்வி தொடுத்தான்..

“அப்படி சொல்ல முடியாது..ஆனா உங்க அம்மாவும் விகாஷ் அண்ணாவும் இந்தக் கல்யாணத்தை நடத்தி வைக்கலன்னா ஆதி அத்தான் என்னைப் பத்தி உங்க கிட்ட பேசலன்னா நமக்கு கல்யாணமும் ஆகிருக்காது ரிஷியும் பொறந்திருக்க மாட்டான்..எனக்கு அதுல ஒரு சின்ன வருத்தம் எப்பவுமே உண்டு..” என்றவளின் கரம் பிடித்து நெஞ்சில் வைத்தவன்,

“நம்ம பையனுக்கு ஏழு வயசு ஆகுது..இன்னும் உனக்கு கோபம் போகலையா டி..என்னோட சூழ்நிலை உனக்குப் புரியல வது...பெத்தவங்க என்னை வேணாம்னு கைவிட்ட நேரத்துல அப்பா அம்மா அண்ணன்னு ஒரு நல்ல குடும்பத்தை கொடுத்தவங்களுக்கு ஏதாச்சும் தலைகுனிவு வந்திடுமோன்னு எனக்கு பயம்...அதான் உன்னை பிடிச்சாலும் பிடிக்கலைன்னு சொன்னேன்..சரின்னு நானா என்னோட பயத்தைவிட்டு வெளில வந்து உன்னைக் கல்யாணம் பண்ணிக்க கேக்கும் போது நீ வேணாம்னு சொன்னதும் உன்மேல ஒரு கோபம்…உனக்கு எத்தனை தடவை எக்ஸ்ப்ளைன் பண்ணி உன் காலுல விழுந்தாலும் நீ இன்னும் அதுலையே நிக்குற..”விரக்தியாய் மொழிபவனை முறைத்தவள்…

“அதுலையே நின்னிருந்தா எப்படி ரிஷிவந்த் வந்திருப்பான்..?” அவளின் கேள்விக்கு வாய்விட்டு நகைத்தவன்

“அது அய்யாவோட சாமர்த்தியம் டி..” எனச் சட்டைக் காலரை தூக்கிவிடும் தன் காதல் கணவனின் இதழை முதன் முதலாய் தன் இதழ் கொண்டு வருடினாள் வதனரேகா..

கிளம்பும் வரையிலும் தன் முகம் பார்த்து கண்களால் தூதுவிடும் மதியை முறைத்தவன், தங்களது மகள் தன்னுடம் இருப்பது தான் தனக்கு சேப்டி என்பது போல அவளை கைகளிலே வைத்துக் கொள்ள, அவனது தந்திரம் அறிந்தவள்,

“ஆரு, பாட்டி உனக்கு சாக்கி வாங்கி வச்சிருக்காங்களாம் டா..” என ட்ராவல்ஸ் வேனில் தங்கள் இருவருக்கும் இடையில் அமர்ந்திருக்கும் ஆருண்யாவிற்கு ஆசை காட்டி அனுப்ப பார்க்க,

“எனக்கு சாக்கி வேணாம்..” என்றவள் ஆதிக்கின் கழுத்தைக் கட்டி அவனது மொபைலில் எதையோ பார்த்துக் கொண்டிருந்தாள்..

மனைவியின் முகத்தில் வந்துப் போன பாவத்தில் வாயை மூடிச் சிரித்தவன், ஆரு, “வேணி பாட்டி கிட்ட கேம்ஸ் இருக்கு போய் விளையாடு..” என்றான்

ஆதிக் சொன்னதும், அவனைவிட்டு வேகமாய் இறங்கி மதியைத் தாண்டி முன்னிருக்கைக்குச் சென்றுவிட்டாள்..

தான் சொல்லிக் கேட்கவில்லை ஆதிக் சொன்னதும் கேட்கிறாளே என்ற கோபத்தில், “போ டி போ...நாளைக்கு வந்து அம்மா சாக்கி கொடு அது கொடு இது கொடுன்னு கேளு அப்போ வச்சிக்கிறேன் உன்னை..” என்ற அன்னையின் குரலுக்குத் திரும்பி,

“நீ கொடுக்கலனா போ..எனக்கு ரேகாம்மா கொடுப்பாங்க..” என்றவள் வேணியின் மடியில் ஏறி திரும்பி அமர்ந்து கொண்டாள்…

சிறிது நேரத்தில் ரேகா, ராஜின் மகவும் அவர்கள் சீட்டை விட்டு செழியன் சீட்டுக்குச் சென்றுவிட, அதில் ரேகாவை திரும்பி கள்ளப் பார்வை பார்த்துச் சிரித்தாள் மதியழகி..

மதியழகியின் சிரிப்பில் வெட்கம் கொண்ட ரேகா, மொபைலில் எதையோ நோண்டிக் கொண்டிருந்த ராஜிடம் ஒன்ற, சீட்டின் இடைவேளையில் ரேகாவை பார்த்துக் கொண்டிருக்கும் மதியின் காதில் தனது மீசை முடி உரசிட, “ஐ வான்னா கிஸ் யூ டி மை பொண்டாட்டி..” எனச் சொன்னான் ஆதிக் வர்மன்,

அவனது செய்கையில் கிளர்ந்தவள், சரியெனத் தலையசைத்து அவனது மார்போடு ஒன்றினாள்…

சின்னவர்கள் வேனில் அரங்கேற்றும் காதல் நாடகத்தில் வெட்கம் கொண்ட வெண்மதியும் ஆதிரனைத் தன் மாப்புக்குள் பொத்தி வைத்துக் கொண்டு இருளை போர்வையாக்கியது…

காதலில் விட்டுக் கொடுத்தலைவிட பல கசப்புகளை விட்டுவிடுவதே மேல் எனச் சொல்லி நானும் மதி, ஆதிக்குடன் விடைபெறுகிறேன்…
 




snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
கடைசியாக சுட்டிபெண் ஜுனியர் மதி ஆருண்யாவின் சேட்டைகள் குறும்புகள் அப்பா மகள் பாசத்துடன் கதை இனிதே நிறைவு பெற்றது வாழ்த்துக்கள் குயந்தபுள்ள Write your reply...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top