• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

General Audience வீரவணக்கம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Manikodi

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
3,747
Reaction score
17,102
Location
Vriddhachalam
ஜென்மம் நிறைந்தது
சென்றவர் வாழ்க

சிந்தை கலங்கிட
வந்தவர் வாழ்க

நீரில் மிதந்திடும்
கண்களும் காய்க

நிம்மதி நிம்மதி
இவ்விடம் சூழ்க!

ஜனனமும் பூமியில்
புதியது இல்லை

மரணத்தைப் போல் ஒரு
பழையதும் இல்லை

இரண்டுமில்லாவிடில்
இயற்கையும் இல்லை

இயற்கையின் ஆணைதான்
ஞானத்தின் எல்லை

பாசம் உலாவிய
கண்களும் எங்கே?

பாய்ந்து துழாவிய
கைகளும் எங்கே?

தேசம் அளாவிய
கால்களும் எங்கே?

தீ உண்டதென்றது
சாம்பலும் இங்கே

கண்ணில் தெரிந்தது
காற்றுடன் போக

மண்ணில் பிறந்தது
மண்ணுடன் சேர்க

எலும்பு சதை கொண்ட
உருவங்கள் போக

எச்சங்களால் அந்த
இன்னுயிர் வாழ்க

பிறப்பு இல்லாமலே
நாளொன்று இல்லை

இறப்பு இல்லாமலும்
நாளொன்று இல்லை

நேசத்தினால் வரும்
நினைவுகள் தொல்லை

மறதியைப் போல்
ஒரு மாமருந்தில்லை

கடல் தொடு ஆறுகள்
கலங்குவதில்லை

தரை தொடும் தாரைகள்
அழுவதும் இல்லை

நதி மழை போன்றதே
விதியென்று கண்டும்

மதி கொண்ட மானுடர்
மயங்குவதேன்ன !

மரணத்தினால் சில
கோபங்கள் தீரும்

மரணத்தினால் சில
சாபங்கள் தீரும்

வேதம் சொல்லாததை
மரணங்கள் கூறும்

விதை ஒன்று வீழ்ந்திட
செடிவந்து சேரும்

பூமிக்கு நாம் ஒரு
யாத்திரை வந்தோம்

யாத்திரை தீரும் முன்
நித்திரை கொண்டோம்

நித்திரை போவது
நியதி என்றாலும்

யாத்திரை என்பது
தொடர்கதையாகும்

தென்றலின் பூங்கரம்
தீண்டிடும் போதும்

சூரியக் கீற்றொளி
தோன்றிடும் போதும்

மழலையின் தேன்மொழி
செவியுறும் போதும்

மாண்டவர் எம்முடன்
வாழ்ந்திட கூடும்

மாண்டவர் சுவாசங்கள்
காற்றுடன் சேர்க !

தூயவர் கண்ணொளி
சூரியன் சேர்க !

பூதங்கள் ஐந்திலும்
பொன்னுடல் சேர்க!

போனவர் புண்ணியம்
எம்முடன் சேர்க !

இந்த பாடல் வரிகள் கவிஞர் வைரமுத்து அவர்கள் எழுதியது.
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அன்பு தோழமைகளே இரண்டு நாட்களுக்கு முன் நம் தாய் திரு நாட்டையே உலுக்கிய சம்பவம். நமக்காக நமது பாதுகாப்பிற்கு எல்லையில் 42 பேர் தன் இன்னுயிரை துறந்துள்ளர் அந்த வீரர்களின் ஆன்மா விற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நமது SM தள தோழமைகள் அனைவரும் நாளை மாலை 6 மணிக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்துமாறு கேட்டு கொள்கிறேன்
கண்டிப்பாக செய்வோம்,
மணிக்கொடி டியர்
 




shiyamala sothy

இணை அமைச்சர்
Joined
May 4, 2018
Messages
990
Reaction score
2,953
Age
51
Location
canada
மறைந்த இராணுவ வீரர்களுக்கு அஞ்சலியையும், அவர்களது குடும்பத் தார்களுக்கு எனது ஆழ்ந்த அநுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
1550353386498.png1550354135745.png
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
அன்பு தோழமைகளே இரண்டு நாட்களுக்கு முன் நம் தாய் திரு நாட்டையே உலுக்கிய சம்பவம். நமக்காக நமது பாதுகாப்பிற்கு எல்லையில் 42 பேர் தன் இன்னுயிரை துறந்துள்ளர் அந்த வீரர்களின் ஆன்மா விற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நமது SM தள தோழமைகள் அனைவரும் நாளை மாலை 6 மணிக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்துமாறு கேட்டு கொள்கிறேன்
?யெஸ் பெல் மீ அல்சோ டன்???? நேற்று அதே நேரம் நான் சென்ற ஒரு நிகழ்ச்சியிலும் 1000 மக்கள் கூடி இருக்க நம் நாட்டு பொக்கிஷமானவர்கள்? இன்னுயிரை துறந்த வீரர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தினோம்?????????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top