• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode C N 16

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Eswari kasirajan

முதலமைச்சர்
Joined
Apr 14, 2018
Messages
10,671
Reaction score
27,027
Location
Tamilnadu
மன்னிக்கவும் மக்களே!
மிக தாமதமாய் ஒரு எபி கொடுத்திருக்கேன்! இது prefinal epi!
படிச்சு பார்த்து உங்க comments சொல்லுங்க..

சின்ன நெஞ்சிலே-16

“எனக்கான வெளி அடையாளங்களை மாத்த மட்டும் தான் என் அப்பாவால் முடிஞ்சது! மத்தபடி என் மனசில் எந்த தெய்வத்தை கும்பிடணும்னு அவர் முடிவு செய்ய முடியாது பாட்டி! நானும் அம்மாவும் என்னைக்கும் நம்ம சாமியை மாத்திகிட்டது இல்ல!”

நிலாவிடம் கூட பகிர்ந்திடாத விஷயங்களை பாட்டியிடம் சொல்ல ஆரம்பித்தான் இந்திரன்.
“நிலானியை கல்யாணம் செய்யணும்றது என்னோட தனிப்பட்ட முடிவு! என் அப்பாவுக்கு அவளை பத்தி தெரிய வந்து என் கிட்ட இதெல்லாம் வேண்டாம்னு தான் சொன்னார்! என்னால அவளை தவிர யாரையும் என் வாழ்க்கை துணையா நினைச்சு பார்க்க முடியலை பாட்டி!”

பேரனின் கூற்றில் நிஜம் இருந்தது அந்த அனுபவசாலியான ஆவுடைபாட்டிக்கு தெரிந்தது!
“நீ நினைக்கிற மாதிரி நானும் என் அப்பாவும் எதையும் முன்னமே திட்டம் போட்டெல்லாம் செய்யலை!”

“நிலானியை கல்யாணம் செய்துகிட்டதால் எனக்கு என் அப்பா கூடவும் பிரச்சனை தான்! அவர் சம்மதம் இல்லாம செய்துகிட்டதில் இன்னைக்கு வரைக்கும் அவர் கூட பேச்சுவார்த்தை இல்லை! எதையும் தெரிஞ்சுக்காம சும்மா தொட்டதுக்கெல்லாம் அவரை குற்றம் சொல்லாதே பாட்டி!”

“உன் சொத்தை எதிர்பார்த்து அவரில்லை! அவர் பிசினஸில் நிறைய சேர்த்து வச்சியிருக்கார்! அவருக்கு அண்ணா நகரில் வீட்டு வாடகையும், கடை வாடகையும் மட்டும் லட்சமா வருது! அது பத்தாதுன்னு இன்னமும் உழைக்கிறார்! அதுமட்டுமில்லாம அவரால் இன்னைக்கு தேதிக்கு எத்தனை குடும்பம் முன்னேறியிருக்கு தெரியுமா!”

அவன் நிறுத்துவதை போல் தெரியவில்லை! ஆவுடைபாட்டிக்கு இதற்கு மேல் மகனை பற்றி கேட்க பொறுமை இல்லை!

“போதும்ல உன் அப்பன் பெருமை! சும்மா பெருமையில் எருமை மேய்ச்சிகிட்டு!” பாட்டி முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க ஆரம்பித்தது!

“பாட்டி உன் பேத்தியை நான் நல்லா பார்த்துப்பேன். இனிமேலாவது என்னையும் கொஞ்சம் நம்பிப் பாரேன்!”

அவர் மடியிலிருந்து எழுந்தவன் ஆவுடைபாட்டியின் கண்களை நேராக பார்த்து சொல்ல, அவன் பேச்சில் மனசு இளகினாலும் வெளிக்காட்டவில்லை அந்த முதியவள்!

“நம்புற முகரையா இருந்தா நம்பிக்கை தானா வரும்லே. உன்னையும் உன் அப்பனையும் நம்பத் தோணலை எனக்கு! என்னை நம்பு, நம்புன்னு வந்து யாசிக்கிறவ!”

அந்த இடத்திலிருந்து நகர முயன்றவரை,
“ஏய் கிழவி இன்னிக்கும் தூக்கினா தான் நீ அடங்குவே!” அவனும் எழ, அவர்கள் பக்கமிருந்து சிரித்து கொண்டிருந்த தன் பேத்தியின் மேல் பார்வை போனது ஆவுடைபாட்டிக்கு!
“நிலா என்னட்டி இளிப்பு, உன் புருஷனை என்னான்னு கேளு! ஒரே அட்டூழியமா இருக்கு இவனோட! இந்த கொடுமைக்கு தான் என்னை இங்க வரச் சொன்னையா நீ!”

பாட்டியின் பதட்டத்தை கண்டு கணவன் மனைவி ஒருவரையொருவர் பார்த்து நகைக்க ஆரம்பித்தனர்!

அடுத்த நாள் காலை, பாட்டியின் காலில் விழுந்து ஆசிப் பெற்றனர் தம்பதிகள் இருவரும்!
“என்ன இது திடீர்னு! நேத்து செஞ்ச தப்புக்கு இராத்திரியே மன்னிப்பு கேட்காம...எந்திரிங்க!”
“ச்சோ, அதுக்கு இல்ல! ஆசிர்வாதம் பண்ணு ஆத்தா, இன்னிக்கு அவருக்கு பிறந்தநாள்”
சொன்ன நிலானி இன்று நிரம்பவும் அழகாய் தெரிந்தாள் பாட்டியின் கண்களுக்கு!

தலைப்பேரன் பிறந்த தினம் தான் அடைந்த மகிழ்ச்சி இன்னமும் நினைவு இருக்கிறது ஆவுடைபாட்டிக்கு! அதே நினைவோடு,
“நல்லா இருங்க இரண்டு பேரும்! எம் பேத்தியை பத்திரமா பார்த்துக்கோ லே!”
பாட்டியின் கண்கள் கலங்கியது!
அவனுக்கு திருநீறு வைத்து விட,
“அவ கிட்டயும் சொல்லேன் பாட்டி உன் பேரனை பார்த்துக்க சொல்லி!”

“யாருக்கு என்ன சொல்லணும்னு எனக்கு தெரியும், நவருலே!”
பேத்தியின் உச்சிமுகர்ந்தவர்,
“நிறைய புள்ளைகளை பெத்துக்கோ நிலானி! ஆத்தா இருக்கேனில்ல நான் வளர்த்து தாரேன்”

“அதை நீ என் கிட்ட சொல்லணும் கிழவி”
பாட்டியும் நிலாவும் ஒன்றாய் அவனை முறைக்க பேச்சை மாற்றினான்!
“ஆசிர்வாதம் வாங்கியிருகேன், விபூதி மாத்திரம் தானா உன் பரிசு!”

“இந்தா…!”
அவர் தந்த இரண்டாயிரம் இந்திய ரூபாய் நோட்டுக்களை பெற்றுக் கொண்டவன்,

“இதெல்லாம் வேணாம், எனக்கு என் சின்ன வயசில் செஞ்சி தந்த மாதிரி கறி குழம்பு வச்சி கொடு! இட்லியும் கறி குழம்பும்!”

பாட்டிக்கு வியப்பாய் இருந்தது! இன்னமும் அதையெல்லாம் நினைவில் வைத்திருக்கிறானா இவன்? எத்தனை வருடங்களானாலும் நாம் உண்ட உணவின் ருசியை மட்டும் மறப்பது கடினம் என்பது பாட்டிக்கு தெரியவில்லை போலும்!

பெயர் ஊர் தெரியாதவர்களுக்கு கூட உணவளிக்கும் ஆவுடைபாட்டி பேரன் இப்படி கேட்டால் சும்மா இருப்பாரா! அடுத்த நாளே அந்த வீட்டில் கறிகுழம்பு தயார்!

தாமு எத்தனை முட்டுக்கட்டை போட்டும், மடையை உடைத்து ஓடும் நீரை போல் தேன்மொழி தன் வழியில் குறுக்கே வந்தவரை சட்டை செய்யாது போய்க் கொண்டே இருந்தார்! மனைவியின் இந்த புதிய மாற்றம் அவரையும் குழப்பியது! விமான நிலையம் வரைக்கும் கூட வந்து வழியனுப்பாமல் தன் எதிர்ப்பை பிடித்துக் கொண்டு நின்றுவிட்டார் தாமு!

அவரின் நிலையோ கீழே விழுந்து மண்ணை கவ்வியது போன்றது தான்! ஆனால் அதை எவரிடமும் வெளிக்காட்ட முடியாதே! இருபது மணிநேரம் பொறுத்து பார்த்தவர் மனைவியின் தற்போதைய நிலையை அறிய எண்ணி மகனை ஸ்கைப்பில் பிடித்தார்!

அந்த ‘ஸ்கைப் காலை’ எடுத்தது ஆவுடையம்மாள்! பேரப்பிள்ளைகள் இருவரும் வந்திருந்த தேன்மொழியிடம் பேசிக் கொண்டிருக்க, ஆவுடையம்மாள் லேப்டாப்பை உயிர்பித்திருந்தார்! மண்வெட்டி, அரிவாள் என்று பழகிய கை இன்று ‘மெளசை’ வைத்து வருடங்களாய் பழகியது போல் அசத்திக் கொண்டிருந்தது!
“ஊருக்கு போறப்ப எனக்கு ஒரு லப்டப்பு வாங்கி கொடுட்டி நிலா! இது இல்லாம இனி எனக்கு சிரமம் போல!” என்று சொல்லி நிலானியை திகைக்க வைத்திருந்தார்!

இப்போது அன்னை ஸ்கைப்பில் வரவும் எதிர்புறம் இருந்த தாமு தன் மொத்த எரிச்சலையும் அவர் மீது காட்டினார்!

“திட்டம் போட்டு என் பொண்டாட்டியையும் மகனையும் என்கிட்ட இருந்து பிரிக்கிறியா மா?
நாங்க தான் நீ வேண்டாம்னு ஒதுங்கி இருக்கோமே, ஏன் வலிய வந்து வம்பு செய்றே!”
அத்தனை நேரம் இருந்த மகிழ்ச்சியான சூழ்நிலை மாறிவிட்டது அந்த வீட்டில்!
ஆவுடையம்மாள் பெருங்குரலில் ஆரம்பித்தார்!

“பல்லை தட்டிருவேன் ராஸ்கோல்
யாருலே நீ, யாரு! கண்ட அனாத பயலும் என்னை அம்மான்னு கூப்பிடுறதா!
எனக்கு ஆயிரம் வேல வெட்டி கிடக்குலே! ஒவ்வொருத்தன் பின்னாடியே போய் அவன் மனசை மாத்துறது தான் என் பொழப்புன்னு நினைச்சியா!”

குடும்பத்தினர் அனைவரும் இண்டர்நெட் வழியே அங்கு சண்டையிட்டுக் கொண்ட மகனையும் தாயையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தனர்!
“கெவினை அந்த புள்ளையோட சேர்த்து வைக்க முடிவு செஞ்சிடீங்கல, இதுக்கான பலனை கூடிய சீக்கிரம் அனுபவிப்பீங்க!”

“என்ன லே மிரட்டுதே! இந்திரன்னு அழகா சாமி பெயரை வச்சியிருக்கிற பயலை, சும்மா வேற மாதிரி கூப்பிட்டுகிட்டு இருக்கே! என்ன அனுபவிப்பேனா, நான் தானே... ஏற்கனவே அனுபவிச்சாச்சு லே, உன்னை பெத்ததுக்கு! இப்போ என் பேரன் என் கிட்ட அன்பை பொழியுறான், தெரிஞ்சுக்கோ!”

பாட்டி மகனை கடுப்பேற்ற அது தப்பாமல் தன் காரியத்தை செய்தது!
“இதெல்லாம் எத்தனை நாளைக்குன்னு பார்க்க தான் போறேன்!”
“என் பேரன்லே! என் பரம்பரை அவய்ன்! ஒரு நாளும் உன்னை மாதிரி மாறிப் போக மாட்டான்!”
குரல் இடறியது!
“பெத்தவயிறு பத்திகிட்டு எரியுதடா!
உனக்கு சோறு போட்டு வளர்த்த அப்பன் ஆத்தாளுக்கு கடமை செய்ய கூடாதுன்னு எந்த மதத்திலேயும் சொல்லலையே! எதை எதையோ காரணம் காட்டி இத்தனை வருஷம் ஏமாத்திட்டியா எங்களை!”
அழுக ஆரம்பித்திருந்தார் ஆவுடையம்மாள்!

மகன் தன்னை காயப்படுத்தியது இத்தனை வருடங்களுக்கு பிறகு வலித்தது அவருக்கு, அதுவும் அளவுக்கு அதிகமாய்!

“நீ உன்னை பெத்தவங்களுக்கோ, உன் மதத்துக்கோ, உன் பொண்டாட்டிக்கோ உண்மையா இல்லையே லே! சாமியை மாத்திட்டே! உன்னை சுத்தியுள்ள ஆசாமி மேல பாசமில்லை! எல்லாத்தையும் விட்டிட்டு இப்ப காசுக்கு பின்னே ஓடுதியே! உன் கடைசி காலத்தில் அந்த காசா துணைக்கு வரும்னு நினைக்கே?”

தாமு எதையும் பதில் பேசாமல் இருந்தது தேன்மொழிக்கு ஆச்சரியமே!
“எங்குலத்தை நாசம் செய்ய பார்த்த பாவிபய நீ! உன் கிட்ட இன்னும் என்ன பேச்சு வேண்டிகிடக்கு! ஆனா ஒண்ணு சொல்றேன் கேட்டுக்கோ, எதுவானாலும்
ஆரம்பிச்ச இடத்துக்கு வந்து தான் லே சேரும், மழையானாலும் சரி நீ செய்த பிழையானாலும் சரி! அப்போ உன்னை பெத்தவ பேச்சை உணர்வே நீயி!”

தாமு பேச வந்ததை கைகாட்டி தடுத்தவர்,
“எல்லா கடவுளும் அன்பை போதிக்க சொல்லிக் கொடுத்தா நீ வெறுப்பை உமிழ்ந்திட்டு இருக்கே! உன்கிட்ட போய் இதை சொல்றேன் பாரு! செவிடன் காதுல ஊதின சங்கை போல!
சை வை லே போனை! என் மருமவ வந்திருக்கா, அவளை கவனிக்கணும் நான்!”

அழுகை கோபம் சாபம் எல்லாம் கலந்த கலவையாய் ஆவுடையம்மாளின் பேச்சைக் கேட்டு தாமு பதிலளிக்காமல் சிலையாய் நிற்க, இணைப்பை துண்டித்தார் ஆவுடையம்மாள்!

வருத்தத்துடன் அந்த பெரியவள் தன் படுக்கையில் போய் விழ அந்த குடும்ப உறுப்பினர் எவரும் அவரை தொந்திரவு செய்ய முயற்சிக்கவில்லை!
Super epi dear
எதுவானாலும்
ஆரம்பிச்ச இடத்துக்கு வந்து தான் லே சேரும், மழையானாலும் சரி நீ செய்த பிழையானாலும் சரி! அப்போ உன்னை பெத்தவ பேச்சை உணர்வே நீயி!”

Arumaiyana varikal & unmaiyum kooda
 




Senbusha

புதிய முகம்
Joined
Jun 14, 2018
Messages
3
Reaction score
3
Location
Bangalore
Kadhai different a irundhadhu mam...unga kadhai ya padicha japan la yeh namalum vaazhura feel...idhoda final update illai yeh mam???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top