• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

இராமனின் மாண்பு

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
ஜனகமகாராஜனின் அரசவை.

ராம,லக்ஷ்மணர்களோடு விஸ்வாமித்திரர் அரசவையில் வீற்றிருக்கிறார்.

அப்போது அந்த வில் வண்டி வருகிறது, ஆம் சிவதனுசு எனும் அசாத்தியப்பெருமைகொண்ட வில் அது! எட்டு சக்கரம் கொண்ட வண்டியில் அதனை வைத்து,

'உறுவலி யானையை ஒத்த மேனியர்
செறிமயிர்க்கலெனத்திரண்ட தோளினர்'

எனக்கம்பன் வர்ணிக்கும் பலசாலியானவர்கள் இழுத்துக்கொண்டுவருகின்றனர்.

சபைமுழுவதும் ஆர்வமாய் காத்திருக்கிறது. வேடிக்கைபார்க்க மக்கள் எல்லாம் அங்கும் இங்குமாய் கூடி அமர்ந்திருக்கிறார்கள்.

"என்ன வில் இது !ஆகாசத்தைத் தொடுவதுபோல இப்படி கம்பீரமாய் இருக்கிறதே!"

என்று பேசிவியக்கிறார்கள்.

திண்நெடு மேருவைத்திரட்டிற்றோ.....மேருமலைத்திரட்டி இந்தவில்லைப்பண்ணினார்களா?

விண் இரு நெடிய வில் வீழ்ந்ததோ?..... வானவில் என்று சொல்வார்களே அதுதான் கீழே வீழ்ந்து இவ்வளவு பெரிதாக வளர்ந்திருக்கிறதா?

'என், "இது கொணர்க" என, இயம்பினான்?' என்பார்;
'மன்னவர் உளர்கொலோ மதி கெட்டார்?' என்பார்;
'முன்னை ஊழ் வினையினால் முடிக்கில் ஆம்' என்பார்;
'கன்னியும் இச் சிலை காணுமோ?' என்பார். ’

கம்பர் அழகாக வர்ணனை செய்திருப்பதைக்கவனியுங்கள்

"என்ன இது எதுக்கு இதைக்கொண்டுவந்திருக்காங்க எப்படி இதைப்போய் வளைக்கமுடியும் அரசனுக்கு புத்தி கெட்டுப்போய்விட்டதா?"என ஒருவரைஒருவர் பார்த்துப்பேசிக்கொள்கிறார்களாம்.

இப்படி அனைவரும் பார்த்து பிரமிக்கும் வில்லை வளைப்பவனுக்குத்தான் மகளைத்திருமணம் செய்துகொடுப்பதாய் ஜனகன் முடிவெடுத்ததற்குக் காரணம் இருக்கிறது..

சீதை ஒருநாள் அம்மானை ஆடினாளாம்.முணுகாயைவைத்துக்கொண்டு அதுகீழே விழாமல் ஆடுவது அம்மானை எனும் ஓர் பெண்கள் விளையாட்டு..

ஆடும்போது ஒருகாய் கீழே விழவும் அது , சிவதனுசு வைக்கப்படிருந்த பெட்டிக்குக்கீழே உருண்டு ஓடிப்போனதாம்.

இதை ஜனகர் பார்த்துக்கொண்டே இருந்தாராம்.சீதை அடுத்தகணமே தன் இடதுகையால் அந்தப்பெட்டியை சற்றும் சிரமமின்றி அனாயாசமாய் நகர்த்திவிட்டு அமமானையைக் குனிந்து பொறுக்கிக்கொண்டாளாம்.

மலையைத்தூக்கிவைக்கும் வலிமைகொண்ட தன் மகளுக்கு அப்போதே எப்படிப்பட்ட மாப்பிளையைப்பார்க்கவேண்டுமென ஜனகர் தீர்மானித்துவிடுகிறார்.

அதனால்தான் சிவதனுசை யார் எடுத்து வளைக்கிறார்களோ அவருக்கே என்மகளை மாலையிடச்செய்வேன் என்று நினைத்துக்கொள்கிறார்.

இப்போது வில் சபை நடுவில் வீற்றிருக்கிறது.

ராமன் உட்கார்ந்திருக்கும் விதத்தைப்பார்த்தால் அவன் எடுத்து முறித்துவிடுவான்போல இருக்கிறதாம்..

ஏற்கனவே தாடகையை வதம் செய்திருக்கிறதே ராமனின் சொல்லொக்கும் கடியவேகச் சுடுசரம்?

வந்தெதிர்ந்த தாடகை தன் உரத்தைக்கீறி வரு குருதிப்பொழிதர வன் கணையொன்று ஏவி’ என்கிறார் குலசேகர ஆழ்வார்.

ராமர் விட்ட பாணம் எப்படி இருக்கும் என்று கேட்டால் எப்படி பேசின மாத்திரத்தில் சொல் செவியில் போய் விழுகிறதோ அப்படி ஒரு கடையவேகச்சுடுசரமாம்!!

அதுவும் வயிரக்குன்ற கல்லொக்கும் தாடகையின் நெஞ்சைத்துளைத்து அப்பால் போனதாம் .

அது கல்லா புல்லார்க்கு நல்லோர் சொன்ன பொருள் எனப்போயிற்றன்னே என்கிறார் கம்பன்.

நல்லோர்கள் புல்போன்ற அற்பர்களுக்கு சொன்ன வார்த்தைகள் அவர்களின் ஒரு செவி வழி சென்று மறு செவி வழியே வெளியேறுவது போலவாம்!

இப்போது ராமர் சிவதனுசுவை எடுக்கிறார்.

தடுத்து இமையாமல் இருந்தவர் தாளில்
மடுத்ததும் நாண் நுதி வைத்ததும் நோக்கார்;
கடுப்பினில் யாரும் அறிந்திலர்; கையால்
எடுத்தது கண்டனர்; இற்றது கேட்டார்!

அவ்வளவுதான்! ராமனின் மாண்பை கம்பர் ஒரே வரியில் சொல்லிவிட்டார் பாருங்கள்!!!

கையால் எடுத்ததைத்தான் பார்த்தார்களாம் !!

அடுத்த நொடி என்றெல்லாம் கூட இல்லை உடனேயே என்பதற்கான அவகாசமும் இல்லை வில்லை எடுத்தான் முறித்தான் என்கிறார்!!!

கம்பனின் கடைசிவரியைக்கண்ணால் பருகுவோம் !!! காதால் பருகுவோம்!!!

?ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்!!!!?

?படித்ததை பகிர்ந்தேன்?
 
nathiya

அமைச்சர்
Joined
Nov 28, 2018
Messages
1,165
Reaction score
2,553
Location
Thiruvannamalai

இதுதெரிஞ்ச வரிகளா காட்சியாக இருந்தாலும் கூட நீங்க விவரிக்கிறது தான் ரொம்ப அழகா இருக்கு sriji?????????
 
srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
இதுதெரிஞ்ச வரிகளா காட்சியாக இருந்தாலும் கூட நீங்க விவரிக்கிறது தான் ரொம்ப அழகா இருக்கு sriji?????????
sriji happy annachi nathiji:love::love:(y)(y)
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top