• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

டேய் உன்னை எப்படிடா கரெக்ட் பண்றது 10

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Meghna suresh

நாட்டாமை
Joined
May 26, 2019
Messages
83
Reaction score
873
Location
India
பகுதி – 10

காலங்கள் யாருக்கும் காத்திருப்பதில்லை. கண் இமைக்கும் நொடியில் காட்சிகளை மாற்றிப் போட்டு, ‘மாறாதது மாற்றம் மட்டுமே’ என்ற தத்துவம் சொல்லி நிற்கும்.

சூரியின் வாழ்விலும் அப்படி ஒரு மாற்றமே வந்திருந்தது. முகிலன் அதிரடியாய் சூரியின் வீட்டிற்கே சென்று பெண் கேட்டு நின்றிருந்தான். அவள் தன் தோழிகளிடம் கூட தான் காதலுற்ற கதையை அப்போது விளம்பி இருக்கவில்லை.

முகிலனின் பதவி, படிப்பு, குடும்ப பின்னணி தங்களுக்கு ஏற்புடையதாய் இருக்க சூரியின் வீட்டில் உடனே திருமணத்திற்கு சம்மதித்து விட்டனர். விவரம் அறிந்த அவள் தோழிகள் முதலில் அவளிடம் முகம் திருப்பி இருந்த போதும், பின்பு அவளின் மகிழ்ச்சி கண்டு தாங்களும் அவளோடு இணைந்து மகிழ்ந்தனர்.

புருவம் நெறித்து விஸ்வாமித்திரனாய் நடமாடிய முகிலன், இவர்கள் திருமண நிச்சயம் முடிந்த நாளில் இருந்து காதல் மன்னனாய் உருமாறி இருந்தான்.

இவளுக்கு திருமணம் என்றதும் எழுந்து அமர்ந்த, சூரியின் தாத்தாவிடம், காதல் வசனங்கள் கேட்டு, அதை அவள் தோழியர் முன் பேசிக் காட்டி அவளை சிவக்க வைத்து மற்றவர் அனைவரையும் நகைக்க வைத்தான்.

இவர்கள் நிச்சயம் முடிந்து இரு மாதங்கள் கழிந்தே திருமணத்திற்கு நாள் குறிக்கப்பட்டிருந்தது. ஆகா சென்னையில் ஜோடி புறாக்களாய் இருவரும் காதல் வானில் சிறகடித்துக் கொண்டிருந்தனர்.

வழமையாய் தன் பணி நேரம் முடியவும், சூரி நேராய் முகிலனின் இல்லம் சென்றுவிடுவாள். அங்கு நித்திக்கு பாடம் சொல்லிக் கொடுப்பதோடு, அவளோடு சேர்ந்து சமைக்கிறேன் பேர்வழி என்று மொத்த சமையல் அறையையும் குப்பை செய்து வைத்திருக்கும் போது முகிலன் வருவான்.

மூவரும் சேர்ந்து சுத்தப்படுத்தி முடித்து, மூர்த்தி அண்ணாவோடு அமர்ந்து உணவருந்தி முடித்து, நித்தியை உறங்க வைத்த பின்னே, முகிலன் சூரியை அவள் அறைக்கு கொண்டு வந்து விடுவான்.

நீளும் அந்த இரண்டு மைல் தொலைவின் இரு சக்கரப் பயணமே இவர்களின் காதல் நாள் காட்டி. முகிலன் பொறுப்பான காவல் அதிகாரியாய் எந்த அளவிற்கு கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று இருந்தானோ, அதற்கு நேர்மாறாய் காதலில் மிகச் சிறந்த கள்வனாய் இருந்தான்.

சூரி எதிர்பார்க்கா தருணங்களில் அவளிடமிருந்து முத்தம் திருடுவதில் சிறந்த கள்வன் அவன். விடிய விடிய இவனிடம் அலைபேசியில் கதை அளந்துவிட்டு, பல நாட்கள் அலுவலகத்தில் தூங்கி விழுந்தாள்.

வார இறுதி நாட்களில், சூரியோடு, அவள் தோழிகளையும் முகிலன் வெளியே அழைத்து செல்வான். அன்றைக்கு இவர்கள் செய்யும் செலவு அத்தனையும் அவனுடையதே. அந்த வார இறுதி நாளில் எத்தனை விதமான வஸ்துகளை வயிற்றுக்குள் தள்ளலாம் என்பதே ராவியின் பெரும் திட்டமாய் இருக்க, மற்ற தோழிகள் அவளை கேலி செய்வதைப் போல அவள் வாங்கி அடுக்கும் பண்டங்களில் பாதியை காலி செய்வர்.

திருமணத்திற்கு இன்னும் பத்து நாட்களே உள்ளது என்ற நிலையில், முகிலனின் அக்கா அவனின் இல்லம் வந்து சேர்ந்தார். அதனால் அவர்களின் தினசரி சந்திப்பு பாதிப்பிற்கு உள்ளானது. முகிலனின் அக்காவிற்கு பெரிதாய் இந்த சம்மந்தத்தில் விருப்பம் இல்லை என்பது அவர் நடவடிக்கைகளில் அப்பட்டமாய் தெரியும்.

சரி இன்னும் பத்து நாட்கள் தானே பொருத்துக் கொள்வோம் என்று இருவரும் சேர்ந்து முடிவு செய்திருக்க, அடுத்த இரண்டாம் நாள் வார இறுதி நாளாய் வந்தது.

இருவரின் திருமண உடைகள் ஏற்கனவே இரு வீட்டு பெரியவர்கள் சார்பில் தீர்மானிக்கப்பட்டு இருக்க, முகிலன் சூரியின் தோழிகளுக்கு புத்தாடை வாங்கித் தர விரும்பினான்.

மறுத்த அவர்களிடம், “நீங்க எல்லாரும் எனக்கு தங்கச்சி மாதிரி. உங்க அண்ணன் கல்யாணம். உரிமையா வந்து ட்ரெஸ் எடுத்துக்கோங்க. சரியா..?’’ என்று மிரட்ட, அனைவரும் வராத ஆனந்தக் கண்ணீரோடு வெளியே செல்ல கிளம்பினர்.

முகிலன் நித்தியை அழைத்து வந்திருக்க, இவர்கள் ஒரு பெரிய பல்பொருள் அங்காடியில் துணிகளை கலைத்துப் போட்டு தங்கள் தேடுதலை துவக்கினர். ஆனால் சூரியும், முகிலனும் மட்டும் தங்களுக்கான காதல் உலகத்தில் அமிழ்ந்து இருந்தனர்.

முகிலன் தங்கள் ரகசிய குறியீட்டின் படி, அவளிடம் முத்தம் வேண்ட, அவளோ அதே ரகசிய குறியீட்டின் படி, அவனுக்கு பதில் கொடுத்து அவனை பித்தம் கொள்ள வைத்துக் கொண்டிருந்தாள்.

சற்று நேரம் கலைந்த துணிகளை வேடிக்கைப் பார்த்த நித்தி, எதற்காக மாமனும், அத்தையும் தங்கள் சுண்டு விரலை மோதி மோதி விளையாடிக் கொண்டுடிருக்கின்றனர் என்பது புரியாமல் அருகில் இருந்த ரம்யாவை அழைத்து நடந்து கொண்டிருந்த நாடகத்தை கண்பித்தாள்.

இவர்களின் லீலையை கண்டு தலையில் அடித்துக் கொண்ட ரம்யா, “வர வர இதுக ரொமான்ஸ் தாங்க முடியலைடா சாமி. சீக்கிரம் நமக்கும் மாப்பிள்ளை பார்க்க சொல்லிடனும் வீட்ல.’’ என்று மனதிற்குள் நினைந்துக் கொண்டவள், நித்தியை தூக்கிக் கொண்டு சூரி, மற்றும் முகிலன் அமர்ந்திருந்த இடத்திற்கு அருகில் சென்று நின்றாள்.

இவள் வந்து நிற்பதைக் கூட கவனிக்காமல் அவர்கள் தொடர்ந்து தங்கள் உலகில் மூழ்கி இருக்க, ரம்யா முதலில் செருமினாள். அதற்கும் அவர்கள் செவி சாய்க்கவில்லை என்றதும், “ஹெலோ..’’ என்று உரத்த குரலில் கத்தினாள்.

அவளின் அக்குரலுக்கு மொத்த கடையும் அமைதியாகி, இவர்கள் புறம் கேள்வியாய் திரும்ப, தங்களை சூழ்ந்திருந்த மொத்த ஒலியும் அடங்கிய காரணம் அறிய, இருவரும் தலை நிமிர்ந்து பார்த்தனர்.

தங்களின் அருகே கொலை வெறிப் பார்வையோடு நின்றிருந்த ரம்யாவையும், ஆராய்ச்சிப் பார்வையோடு நின்றிருந்த நித்தியையும் கண்டவர்கள், ஒரு அசட்டு சிரிப்போடு தங்கள் சுண்டு விரல்களை பிரித்துக் கொண்டனர்.
நிலைமையை சமாளிக்க வேண்டிய அவசியம் உணர்ந்த முகிலன், “ஹாய் குட்டி..! உங்களுக்கு இப்ப ஐஸ்கிரீம் பசிச்சு இருக்குமே..! வாங்க நாம பக்கத்துல இருக்க ஐஸ்கிரீம் லேண்ட் போலாம். ஆன்டிங்க எல்லாம் ட்ரஸ் எடுத்துட்டு வரட்டும்.’’ என்று அங்கிருந்து நழுவ முயன்றான்.
 




Meghna suresh

நாட்டாமை
Joined
May 26, 2019
Messages
83
Reaction score
873
Location
India
“என் ட்ரஸ் செலக்சன் முடிஞ்சது அண்ணா. நானும் உங்களோடையே வரேன்.’’ என்று ராவி அருகில் வந்து நின்றாள். அதுவரை வெட்கத்தில் தலை குனிந்திருந்த சூரி நிமிர்ந்து பார்த்து ‘பக்கென’ சிரித்துவிட்டாள்.

ஏனெனில் ஐஸ்கிரீம் என்ற வார்த்தையை கேட்டதும், ராவி கையில் சிக்கிய ஏதோ ஒரு உடையை அள்ளி இருக்க, தற்சமயம் அவள் கரங்களில் ஆண்களின் இலகு உடையான வேட்டி வீற்று இருந்தது.

சூரி விழுந்து விழுந்து சிரிக்க, அவளோடு மற்ற தோழிகளும் தற்சமயம் இணைய, எதற்காய் அவர்கள் தன்னைப் பார்த்து இப்படி சிரிக்கிறார்கள் எனப் புரியாத ராவி தன் கையை குனிந்து பார்த்து விட்டு, தன் தலையில் தானே கொட்டிக் கொண்டு அவளும் அவர்களோடு இணைந்து நகைத்தாள்.

ரம்யாவோ, “ஏண்டி ஏதோ சேட்டான்ஸ் சைட் அடிக்க மலையாளப் படம் பாக்குறன்னு நினச்சிட்டு இருந்தா நீ இப்படி மல்லு வேட்டிய கையில வச்சிக்கிட்டு நிக்குற. அண்ணா அவளுக்கு அதையே வாங்கிக் கொடுங்க. உங்க கல்யாணத்துக்கு அதை கட்டிக்கிட்டு மலையாள பகவதி மாதிரி வந்து நிக்கட்டும்.’’ என ராவியை வாரினாள்.

“சோறுன்னு ஒரு வார்த்தை கேட்டுற கூடாதே. எதை செஞ்சிட்டு இருந்தாலும் அதை அப்படியே போட்டுட்டு ஓடி வந்துடுறது. உன்னலாம்..’’ என்று கார்த்தி தன் பங்கிற்கு பொங்கி பொங்கல் வைத்தாள்.
இவர்களின் செல்ல சண்டைகளை ரசித்துக் கொண்டிருந்த முகிலன், “ஓகே லேடிஸ்.. சண்டை போதும். வாங்க ஜாலியா ஒரு ஐஸ்கிரீம் சாப்பிட்டு வந்து மறுபடி செலக்சனை கண்டினியூ பண்ணலாம்.’’ என அழைக்க, “எனக்கு மட்டும் ரெண்டு அண்ணா..’’ என்ற படி ராவி முன்னால் நடந்தாள்.

மற்ற தோழியர் மீண்டும் அவளை வாரிக் கொண்டே பின்னால் நடந்தனர். இப்படியாக கொண்டாட்டமாக கழிந்த்தது அன்றைய மாலைப் பொழுது அவர்களுக்கு.

ஒருவழியாய் தோழியர் தங்கள் உடைகளை தேர்ந்தெடுத்து முடிக்க, முகிலன் அவர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு கிளம்பினான். இரவு உணவை உயர்தர உணவகத்தில் முடித்ததும், வாங்கிய உடைகளின் பார்சல்களை கையில் அள்ளிக் கொண்டு தோழியர் கிளம்பினர்.

எப்பொழுதும் முகிலன், இவர்களை வெளியே அழைத்துக் கொண்டு வந்தாலும் அவனே கொண்டு போய் அவர்களை விட்டுவிட்டு வருவான். ஆனால் இன்றைக்கு தன் அக்காவிற்கும் இரவு உணவினை வாங்கி இருந்தான்.

ஆகையால் அவன் அப்படியே கிளம்ப தோழிகள் தாங்கள் வைத்திருந்த இரு சக்கர வாகனத்தில் தங்கள் அறை நோக்கி பறந்தனர்.

அனைவரும் அறையை அடைந்ததும் தேசிய உடையான நைட்டிக்கு மாறிய பின், சற்று நேரம் மாலையில் நடந்த கலாட்டாக்களை அசைபோட்டு சிரித்துக் கொண்டிருந்தனர்.

இப்படியான இவர்களின் பேச்சு, அப்படியே சூரி திருமணத்தில் வந்து நின்றது. ராவி தான் தன் கருத்தை முதலில் முன் வைத்தாள்.

“நீ ரொம்ப லக்கிடி சூரி. முகிலன் சூப்பர் பர்சன்டி. ஆனா இதுக்கெல்லாம் நீ எனக்கு தான் காலம் முழுக்க நன்றிக் கடன் செலுத்தனும் ஆமா !’’ என்று முற்றுப்புள்ளி வைத்தாள்.

உடனே ரம்மி , “ஆமா... அவ ஏண்டி உனக்கு கடன்.. அதுவும் நன்றிக் கடன் படனும்.’’ என நீட்டி முழக்கி ராகம் போட, இப்போது கார்த்தி வந்து நடுவில் இணைந்தாள்.

“இல்லையா பின்ன... பிரியனை பழிவாங்க அவங்க அண்ணனை நீ கரெக்ட் செய்யணும்னு முதல்ல ஐடியா கொடுத்ததே ராவி தாண்டி.’’ என சொல்ல இருவரும் ஹை பை கொடுத்துக் கொண்டனர்.

நால்வரும் வெடித்து சிரிக்க, ரம்மியோ, “அந்தப் பிரியன் உன்னை அண்ணி அண்ணின்னு பம்மிகிட்டு கூப்பிடுறதைப் நாங்க மூணு பேரும் பார்க்கப் போறோம்னு நினச்சா... செம கிக்கா இருக்குடி..!’’ என்றுவிட்டு படுக்கையில் விழுந்தாள்.

அதுவரை தோழிகளின் கிண்டல் பேச்சுக்களை ரசித்துக் கொண்டிருந்த சூரி முதன் முறையாய் வாய் திறந்தாள்.

“நாம ப்ளான் போட்டு எதுடி பெயிலியராகி இருக்கு. முகிலனை மடக்க நாம தெரு தெருவா திரிஞ்சி போட்ட பிளானை எல்லாம் நினச்சா எனக்கு இப்பக் கூட சிரிப்பா இருக்குடி.’’ என்று முடித்த அதே நேரம் அவர்கள் அறையின் ஜன்னலோரம் ஏதோ தொப்பென்று வீழும் அரவம் கேட்க, நின்றுக் கொண்டிருந்த சூரி சென்று கதவை திறந்தாள்.

இவர்களின் அறைக்கு வெளியே பக்கவாட்டில் முகிலன் நின்றிருந்தான். ஜன்னலின் ஓரம் சற்று முன் முகிலனின் கரத்தில் இருந்த நெகிழினிப் பை கீழே வீழ்ந்திருந்தது. தோழிகள் விட்டு சென்றிருந்த பை ஒன்றை கொடுக்க வந்தவனின் செவியில், திறந்திருந்த ஜன்னலின் வழி இவர்களின் அத்தனை சம்பாசனைகளும் தெளிவாய் விழுந்திருந்தது.

முதலில் அங்கு அவனைக் கண்ட சூரி மகிழ்வே கொண்டாள். வேகமாய் அவனை நெருங்கி, “ஏன் இங்கயே நின்னுடீங்க. உள்ள வாங்க..’’ என்றவள் அவன் கரம் பிடிக்க முயன்றாள்.

வேகமாய் கரத்தைப் பின் இழுத்தவன், “நீ கூட எனக்காக என்னை நேசிக்கலையா சூரி..?’’ என்று வலி நிரம்பிய குரலில் வினவியவன், அடுத்து ஒரு நொடி கூட அங்கே நிற்காமல் புயல் போல விலகி நடந்தான்.

இறுகிய உடலும், சிவந்த முகமுமாய் செல்லும் அவனை குழப்பத்துடன் பார்த்திருந்த சூரிக்கு ஒரு நொடி அவனின் கோபத்தின் காரணம் புரியாது திகைத்தவள், திறந்திருந்த ஜன்னல்களை அப்பொழுது தான் கவனித்தாள்.

தங்களின் பேச்சு அவனுக்குள் தோற்றுவித்திருக்கும் உணர்வை உணர்ந்தவளாய், அவனுக்கு தன்னை உணர்ந்தும் வேகத்தோடு சூரி அவனை நோக்கி ஓடினாள்.

ஆனால் அவள் அவனை நெருங்குவதற்குள் தன் வாகனத்தை கிளப்பி புயலென சீறி மறைந்திருந்தான் முகிலன். கண்களில் கசிந்த நீரோடு அவன் சென்ற வெற்றிடத்தை வெறித்துக் கொண்டிருந்தாள் சூரி. இனி ஒருபோதும் அவன் இப்பாதை வழிப் பயணிக்கப் போவதில்லை என்பதறியாது.
 




Meghna suresh

நாட்டாமை
Joined
May 26, 2019
Messages
83
Reaction score
873
Location
India
ஹாய் மக்களே...

ஒரு பெரிய கேப் விட்டு மீனு வந்தாச்சு.

இந்த பூஜா ஹாலிடேஸ் முடியும் முன்ன கதையை முடிப்போம்.

உங்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றிகள் பல.

அன்பில்...

மீனு.
 




Baladurga Elango

அமைச்சர்
Joined
May 7, 2018
Messages
1,666
Reaction score
2,833
Location
Chennai
Nice update. Mugiln hurt ayetan so sad
 




Riy

அமைச்சர்
Joined
Feb 7, 2018
Messages
1,051
Reaction score
3,440
Location
Tirupur
அச்சோ... இப்ப சூரி எப்படி முகிலன சமாதானம் செய்ய போறாளோ....
 




SarojaGopalakrishnan

முதலமைச்சர்
Joined
Jul 20, 2018
Messages
5,555
Reaction score
7,771
Location
Coimbatore
முகிலன் இப்படி கோபத்துடன் போக
சூரி நிலமை என்ன ஆகுமோ
 




Geethazhagan

அமைச்சர்
Joined
Aug 16, 2018
Messages
3,909
Reaction score
4,843
Location
Chennai
அச்சோ இதை போய்முகிலன் கேட்டுட்டானா. பாவம்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top