• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode varamai vantha urave 9 (prefinal)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

kavi nila

மண்டலாதிபதி
Author
Joined
Sep 4, 2019
Messages
263
Reaction score
741
Location
chennai
வரமாய் வந்த உறவே 9



ஒரு வாரம் நன்றாக சென்றது.


இரவு, மித்ரனின் அறையில், “நான் நாளைக்கு கிளம்ப போறேன். நீ என்னனா இன்னும் கூட நம்ம லவ்வை வீட்டில் சொல்லாமல் இருக்க. என்னை ஏமாத்தலாம்னு மட்டும் நினைக்காத. அப்புறம் உங்க அம்மாகிட்ட போய் நீ என்னை கலியானம் பன்னிக்கிறேன்னு சொல்லி என்னை ஏமாத்திட்ட. என் வயிற்றுள்ள உன் பாப்பா இருக்குனு சொல்லிடுவேன். உனக்கு தான் சேதாரம் அதிகமாக இருக்கும் பார்த்துக்கோ,” என சம்யுத்தா மித்ரனை மிரட்டிக் கொன்டு இருந்தாள்.


‘இது கூட நல்ல ஐடியாவா தான் இருக்கு. பட் இதை உண்மையாக மாத்திடா இன்னும் நல்லா இருக்கும்,’ என பேசிக் கொண்டே அவளை நெருங்கிக் கொண்டே வந்தான்.


சும்மா இருந்தவனை மிரட்டுரேன்னு நீயே உனக்கு ஆப்பு வச்சுக்கிட்டியே என தன்னை தீட்டிக் கொண்டே, “கிட்ட வராத. நான் சும்மா தான் சொன்னேன். நீ உண்மைனு நினைச்சியா.சரி டைம் ஆச்சு நான் கிளம்புறேன்” என செல்ல நினைக்க, அவள் கையை பிடித்து இழுத்தான்.


இழுத்த வேகத்தில் அவன் மேலே விழுந்துவிட்டாள். அவன் முகத்தை நெருக்கத்தில் பார்த்ததும் அதை ரசித்துக் கொண்டே தன் கைகளால் அவன் கன்னங்களை வருடிக் கொண்டுயிருந்தாள்.


அவள் முகத்தை பார்த்துக் கொண்டுயிருந்தவன் அவளின் மனதை புரிந்துக் கொண்டு, ‘என்னடி அப்படி பார்க்கிற. நீ மட்டும் சரினு சொல்லும் இன்னும் பத்து மாதத்தில் என்னை மாதிரியே பாப்பாக்கு நான் ஏற்பாடு பன்றேன்’, என அவளின் இடையை வருடிக் கொண்டே கூறினான்.


அதுவரை கனவில் இருந்தவள் அவனின் வார்த்தையை கேட்டு, “பக்கத்துல வரலாம்னு நினைச்ச செருப்பு பிச்சிடும்” என கத்தினாள்.


ஹாலோ, பேபிமா நீங்க தான் என்னவோ மெத்தையில் படுத்துயிருக்கறா மாதிரி என் மேலை படுத்தக்கிட்டு இருக்கீங்க, என சொன்னவுடன்


தன் நிலையை பார்த்ததும் கன்னங்கள் தானாக சிவக்க, “சாரி”என கூறி விட்டு பின் நியாபகம் வந்தவளாக, “நான் ஏன் சாரி சொல்லனும் நீ தானே என்னை இழுத்த,” பேசிக் கொண்டே அவனை அடிக்க பக்கத்தில் எதாவது இருக்கா என தேடினாள்.


திடீர் என,


“ஏய்! இது என்னோடது. உன்கிட்ட எப்படி?” என அவனையும் தன் தொலைந்த போன பிரேஸ்லைட்டையும் மாறி மாறி பார்த்தாள்.


இதுவா? எப்படி உன்னோடதுனு சொல்லுற,


இது கண்டிப்பாக என்னோடது என எனக்கு நல்ல தெரியும். அதுல ‘c’ இருக்கும் பாரு, என அவனை கேட்டாள்.


ஆமாம் மா. “c” இருக்கு. அது என்ன சம்மந்தமே இல்லாம “c” என கேட்டான்.


அதுயெல்லாம் எனக்கு தெரியாது. எனக்கு இது ரொம்ப லக்கி. காணாமல் போன அப்ப நான் எவ்வளவு கஷடப்பட்டேன் தெரியுமா? தா நான் மம்மிக்கிட்ட என் பிரேஸ்லைட் கிடைச்சதை சொல்லனும், என அவனிடம் வாங்கிக் கொண்டு சென்றாள்.


அடிப்பாவி, இது எங்க கிடைச்சது கேட்பாள்னு பார்த்தா, திருப்பிக் கொடுத்த என்னை கூட கண்டுக்கானமல் போறாள். இவளையெல்லாம் நான் கலியானம் பண்ணி என்ன பன்னப்போறேனோ.. ஆன்டவா, இதை சாக்கா வைத்து ஒரு கிஸ் கேட்கலாம்னு பார்த்தா ஒரு ப்லையிங் கிஸ் கூட இல்லை என தன் எதிர்காலத்தை நினைத்து சலித்துக் கொண்டான்.


சம்யுத்தா அறையில்,


எங்கடி இருந்த எவ்வளோ நேரமா. நான் உன்னை வீடு முழுக்க தேடிக்கிட்டுயிருக்கேன், என கேட்டனர் சஹானா மற்றும் சங்கீதா.


இங்க தான் இருந்தேன் என கூல்லாக சொன்னாள்.


பொய் சொல்லாத நான் தான் தேடிப் பார்த்தேனே. நாளைக்கு கிளம்பனும். கொஞ்சமாச்சு பொறுப்புயிருக்கா, என சங்கீதா அவளை திட்டிக் கொண்டுயிருந்தாள்.


மித்து ருமில் தான் இருந்தேன்.


என்னது மித்துவா என்டி சொல்லுர. இந்த நேரத்தில அண்ணா ரூமில் என்ன பன்னிட்டுயிருந்த என கேட்டாள்.


ஒன்றும் பெருசாலாம் இல்லைடி. தாலியை அவன் என் கழுத்திலே கட்டலாமா இல்லை நான் அவன் கழுத்துல கட்டலாமா னு பட்டிமன்றம் நடத்திக் கொண்டுயிருந்தோம், என அசால்லடாக சொல்ல


இருவரும் அதிர்ந்து அவளை பார்த்தனர். பின் அவளிடம் என்னடி சொல்ற?


அடிப்போடி நீவேற நானே என் மித்துவை விட்டு நாளைக்கு போகனுமேனு கவலையா இருக்கேன். நீங்க வேற.


இது எப்போடி நடந்துச்சு. கூடவே இருக்கிற எங்க கிட்ட கூட சொல்லலை பாத்தியா. போடி என் கிட்ட பேசாதா என முகத்தை திருப்பிக் கொண்டாள் சஹானா.


ஈஈஈஈ.... சொல்லனும் தான் இருந்தேன். அதான் இப்ப சொல்லிட்டேன்லா,


ரொம்ப சீக்கிராமா சொல்லிட்ட போ, என இருவரும் சலித்துக் கொண்டனர். அதை விடு உங்க கதையை முதல சொல்லு...


அவ்வளோ வர்த்லாம் இல்ல டி என நடந்ததை கூறினாள்.


சஹானா, எனக்கு இப்ப தான் சந்தோசமா இருக்கு. நீயும் என் கூடவே இங்கயே இருப்ப.


இல்லைடி. கண்டிப்பான நாங்க நாளைக்கு கிளம்பனும். இன்னும் ஒரு வருஷம் தான். அதுக்கு அப்புறம் உங்ககூட, ஆன்ட்டிக் கூட. என் மித்து கூட தான் இருக்க போறேன், என நாளை கிளம்ப தேவையானதை எடுத்து வைத்துக் கொண்டே கூறினாள் சம்யுத்தா.

___________________________________


கதிரவன் தன் கதிர்வீச்சுகளால் பூமியை தாக்க, தன்னை காக்க நிலா ஓடிக் கொண்டுயிருக்க. மலர்கள் தங்கள் காதலனை கண்டு மலர்ந்து இருக்க, மித்ரன் கவலையோடு தோட்டத்தில் அமர்ந்துயிருந்தான்.


அவனை கண்டு அங்கு வந்த விஷால், ‘மச்சான், இங்க என்னடா பன்ற’ என பார்க்க முதத்தில் குழப்பத்தோடு இருந்த நன்பனை கேள்வியாக பார்த்தான்.


அவனின் பார்வையை புரிந்து கொண்டு, அது ஒன்றுயில்லை டா. சம்யுத்தா இன்றைக்கு கிளம்புற டா.


“அதுக்கு நீ என் மச்சான் கவலையா இருக்க” என சொல்லிக் கொண்டே. ஒரு வேலை “மச்சான் லவ் பன்றியா”.


ம்ம், என தலையை ஆட்டினான்.


அம்மாகிட்ட சொல்லிட்டியா டா, என கேட்க,


நேற்று நைட்டே போனேன் டா. நான் பேசறத்துக்குள்ள அம்மாவே பேச ஆரம்பிச்சுட்டாங்க டா. அப்ப அவங்க நான் சொல்லுறதை கேட்பியானு கேட்டாங்க. நானும் நம்ம அம்மா தானேனு என்ன மா கேட்பியானு கேட்டுகிற அதை செய் அப்படி கெத்தா சொல்லு மா னு சொன்னா, என் மம்மி என் தலையில் கல்லை துக்கி போட்டாங்க டா.


என்னடா சொல்ற, என புரியாமல் கேட்டான்.


யாரோ ஒரு பென்னை பார்த்துயிருக்காளாம். நான் அவளை தான் கலியானம் பன்னிக்கினும் கேட்டாங்க. நான் அமைதியா இருந்ததை பார்த்து நான் ஓகே சொன்னா மாதிரி சொல்லிட்டு போய்டாங்க டா. இப்ப என்ன பன்றது. இதை மட்டும் சமு கேட்டா நான் அவளோ தான்.


உன்னை யாருடா அமைதியாக இருக்க சொன்னா.


அது அமைதி இல்லடா அதிர்ச்சி. ஈவினிங் சம்யுத்தா சங்கீ வேற கிளம்ப போறாங்க. என்ன பன்றதே தெரியலை டா.


சரிவா. பாத்துக்கொள்ளலாம் என அவனை இழுத்துக் கொண்டு சென்றான்.


அனைவரும் ஹாலில் இருக்க லட்சுமி சம்யுத்தாவிடம் சென்று,


நான் உன் கிட்ட ஒன்னு சொல்லனும் இப்ப சொல்லவா, என கேட்க அந்த நேரம் வாசலில் சத்தம் கேட்க திருப்பி பார்த்தனர்.


பிரியாவை பார்த்தவுடன், மம்மி என அழைத்துக் கொண்டு அவளை அனைத்துக் கொண்டாள் சம்யுத்தா.


பின், என்ன மா நானே அங்க வர மாட்டேனா. நீங்க ஏன் இவ்வளோ தூரம் வந்தீங்க, என கேட்டாள்.


அவளின் காதுகளை திருக்கிக் கொண்டே, என் பொன்னு ஒரு விசயம் சொன்னா. அதை எப்படி முடிங்கனும் தெரியாமல் இருக்கானு தெரியும் போது நான் எப்படி இங்க வராமல் இருப்பேன்.
 




kavi nila

மண்டலாதிபதி
Author
Joined
Sep 4, 2019
Messages
263
Reaction score
741
Location
chennai
மம்மி வாங்க நாம ரூமிற்கு போய் பேசலாம் என பிரியாவை இழுக்க,


இருமா. இப்ப தானே வந்தாங்க. அப்புறமாக நீங்க பேசுங்க என அனைவரும் பிரியாவிடம் பேசிக்கொண்டுயிருந்தார்.


சிறிது நேரம் பிறகு,


லட்சுமி, நல்ல வேலை நீங்களே வந்திங்க. உங்க கிட்ட ஒரு விசயம் கேட்கனும் இருந்தேன்.


சொல்லுங்க மா என சொல்ல,


உங்க பொன்னை என் வீட்டு மருமகளா அனுப்ப முடியுமா என கேட்க, அனைவரும் பிரியாவின் முகத்தையே பார்த்துக் கொண்டுயிருந்தனர்.


இதை கேட்ட மித்ரனோ, அம்மா என் தெய்வமே.... என் காதல் விளக்கை அனைக்காமல் அதை காப்பாத்திட , என மனதில் தன் அம்மாவிற்கு கோவில் கட்டிக் கொண்டுயிருந்தான்.


நானும் உங்க கிட்ட என் பொன்னு உங்க வீட்டு பையனை லவ் பன்றதை பத்தி பேசலாம்னு தான் இவள்கிட்ட கூட சொல்லாமல் வந்தேன்.


அனைவரும் மித்ரனை பார்க்க, அவன் ஈஈஈ.... அதை சொல்ல தான் மா நேற்று உங்க ரூமிற்கு வந்தேன்.


அட நல்லவனே! என்று அம்மா அவனை பார்த்தார்.


என் பொன்னுக்கும் என்னை மாதிரி ஒரு நிலைமை வரக்கூடாதுனு ஒரு பயம்.


என்னங்க சொல்றிங்க, என அனைவரும் அவளின் முகத்தையே பார்க்க,


நான் பிறந்தது வளர்ந்தது எல்லாமே பொள்ளாட்சியில் தான். நான் எங்க வீட்டுக்கு ஒரே பொன்னு. ரொம்ப செல்லம். நான் கேட்டது, கேட்காதது எல்லாமே கிடைக்கும். எல்லாமே கொடுத்தாங்க கூடவே ஒரு மரண அடியும் கொடுத்தாங்க அன்றேக்கு போனேன். அதுக்கு அப்புறம் இப்பதான் என் பொன்னுக்காக இங்க வரேன், என கண்கள் கலங்க பேசிக் கொண்டுயிருந்தவரை சம்யுத்தா அனைத்துக் கொண்டாள்.


மம்மி! நீங்க அழாதிங்க. உங்களை இப்படி பார்க்க முடியலை மம்மி. ஒரு முறை தெரியாமல் என் அப்பா யாருனு கேட்டதுக்கு நீங்க ஒரு நைட் முழுக்க அழுதிங்க. அன்னையில் இருந்து இப்ப வரைக்கும் நீங்க மட்டும் போதும் தான் மம்மி இருந்தேன். இப்பகூட நீங்க மட்டும் போதும். அழாதிங்க என அவளும் கூட சேர்ந்து அழுதாள்.


அவளின் கன்னீரை கண்டவுடன் பதறிப் போய் அவள் கன்னீரை துடைத்துவிட்டாள், பிரியா. கண்னுல இருந்து நான் எப்பமே சந்தோஷத்தை மட்டும் தான் பார்க்கனும். இப்படி அழுக கூடாது, என சமாளித்துவிட்டு தன் கதையை சொல்ல தொடங்கினாள்.


நான் 12வது முடிச்ச உடனே எனக்கும் என் மாமா பையனுக்கு கலியானம் பேசனாங்க. நான் தான் மேல படிக்கனும் அவங்க கூடலாம் சண்டை போட்டு மேல படிக்க அவங்களை சம்மதிக்க வைச்சேன். நானும் ஜாலியா கல்லூரிக்கு போக ஆரம்பிச்சேன். கொஞ்ச நான் கழிச்சு என் வாழ்க்கையில் ரவி வந்தான். எனக்கு என் மாமா பையனை பிடிக்கும். ஆனால் பிடிச்சதுக்காக கலியானம் பன்னிங்க முடியாதுலா. அவங்க மேலையெல்லாம் வராது ஒன்னு எனக்கு ரவி மேல வந்துச்சு. நானா போய் தான் என் லவ்வை சொன்னேன். ஆனா அவங்க என்னை ஏத்துக்கவேயில்லை. அவங்க வேற சாதி நான் வேற சாதினு சொன்னாங்க. அப்புறம் கடைசி வருசம் என்னை லவ் பன்றதை ஒத்துக்கிட்டாங்க.


எங்க வீட்டில் சொன்னதுக்கு அவங்க கீழ் சாதினு என் காதலுக்கு ஒத்துக் கொள்ளவேயில்லை. வீட்டிலே ரொம்ப சன்டை போட்டேன். அதுக்கு அப்புறம் என் மாமா என்கிட்ட உன்னை அவனுக்கே கலியானம் பன்னி தறேன்னு சொன்னாங்க.


நான் ரொம்ப சந்தோஷ்மா இருந்தேன். ஒரு நாள் எனக்கு அவங்க கால் பன்னாங்க. நாங்க எப்பமோ பார்க்கிற இடத்துக்கு வர சொன்னாங்க. நான் சீக்கிரமாய் போய் அவனுக்காக வைட் பன்னிட்டு இருந்தேன். அவங்களும் வந்தாங்க. ஒரு கார் வந்துச்சு. அது எங்க இருந்து வந்துச்சுனு தெரியலை. அவங்களை இடிச்சிட்டு போய்டுச்சு. என் கண்னு முன்னா«டியே அவங்க... என மேல சொல்ல முடியாமல் கண்களை துடைத்துக் கொண்டு மேலே தொடர்ந்தார்.


என்னாலா அவங்களை காப்பாத்தவே முடியலை. எங்க வீட்டில இதை பத்தி சொல்ல போனேன். அங்க பேசறதை பார்த்து மேலும் அதிர்ந்தேன். எங்க வீட்டில் இருந்தவங்க தான் அவங்களை காரில் இடிச்சாங்கனு தெரிய வந்துச்சு. அவ்வளோ தான் என் மொத்த உலகமே இடிச்சு விழுந்தா மாதிரி இருந்துச்சு. உடனே அங்க இருந்து கிளம்பி மருந்துவமனைக்கே வந்துட்டேன். இவங்களையும் என்னால காப்பத்த முடியலை. என் வீட்டில் எனக்கு பன்ன துரோகத்தையும் என்னால தாங்க முடியலை. எதுக்கு வாழ்ந்து என்ன செய்ய போறேன்னு சாகப் போனேன். சாகலாம்னு நினைக்கும் போது தான் எனக்கு அவள் கிடைச்சா. அழுதுக்கிட்டு இருந்தாள். அவங்க அம்மாவை தேடிப் பார்த்தேன். கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் இந்த குழந்தையோட அம்மையும் பார்த்தேன்.


அப்ப நரஸ் வந்து இந்த குழந்தையோட அம்மா வேற குழந்தையை தெரியாமல் மாத்தி எடுத்துக் கிட்டு போய்டாங்கனு சொன்னங்க. மாத்தி எடுத்துக் கிட்டு போன குழந்தை காலைல தான் இறந்துடுச்சாம். குப்பை தொட்டியில் விழுந்த குழந்தைனால யாரும் அந்த குழந்தையை தேடி வரலை. எவ்வளோ தேடிப் பார்த்தேன். என்னால இவளோட அம்மாவை கண்டுப்பிடிக்கவே முடியலை.


கடவுள் தான் எனக்கு துணையா இவளை அனுப்பனா மாதிரி இருந்துச்சு. இவளையும் கூட்டுக் கொண்டு சென்னை போய்டேன். அங்க போய் என் படிப்பை முடிச்சு, என் நன்பன் ஒருவனால என்னக்கு டெல்லியில் வேலை கிடைக்க அங்கே போய்டேன். அதுக்கு அப்புறம் நான் எங்க வரவே இல்லை. இப்ப வரைக்கும் சம்யுத்தாவிற்காக தான் நான் வாழுறேன், என சொல்லிக் முடிக்க சம்யுத்தா அழக ஆரம்பித்தாள்.


நா.. நான்.. உன்.. பொன்னு இல்லையா மம்மி..... எனக்கு யாருமே இல்லையா என தினறிக் கொண்டே கேட்டாள்.


எனக்கு நீ மட்டும் தான் டா உலகம். உனக்காக தான் நான் இன்னும் வாழறேன். வாழுவேன். இப்படி சொல்லி அம்மாவை கஷ்டப்படுத்தாத.


சாரி மம்மி... என கேட்டவளை அனைத்துக் கொண்டாள்.


மொத்த குடும்பமும் இதை கேட்டு, இப்படியுமா மனிதர்கள் இருப்பார்கள் என வியந்தனர். தன் வயற்றில் பிறக்காதவளுக்காக இப்படி ஒரு தவ வாழ்க்கை என பிரியாவை எண்ணி வியந்தனர்.


பிரியா அனைவரையும் பார்த்து, அவருக்கு இந்த உண்மையை நான் சொல்ல கூடாதுனு தான் இருந்தேன். ஆனால் உண்மையை மறைத்து அவளுக்கு கலியானம் பன்றது எனக்கு நல்லதாக தோனலை. அதான் உங்க கிட்ட சொல்லிட்டேன். இப்ப சொல்லுங்க உங்க முடிவை.


லட்சுமிக்கு முன் மித்ரன், “அத்தை நீங்க என் தேவதையை பெற்ற அம்மாவா இல்லாமல் வேனா இருக்கலாம். பட் நீங்க தான் அவள் அம்மா. அதே மாதிரி அவள் தான் என் மனைவி,” என சொல்ல


லட்சுமி, “ஆமாங்க சம்யுத்தா தான் எங்க வீட்டு மகாலட்சுமி”.


சன்முகம், சரி பேசனாது போதும் அவங்களை ரூமிற்கு கூட்டிக் கொண்டுபோங்க என சொன்னார்.


மம்மி வா. நான் உனக்கு இவங்களை பத்தி சொல்றேன் என தன் அறைக்கு அழைத்து செல்ல ,


வழியில் இவர்களின் குடும்ப புகைப்படத்தை பார்த்து விட்டு அங்கே நிற்க,


இவ்வளோ பொ¤ய குடும்பமா. எங்க எல்லோரும் என பிரியா கேட்டாள்.


அதற்கு சன்முகம், என் தம்பி அவன் மனைவி, அவங்க இரண்டு மகன் மற்றும் மருமகளோட கோவிலுக்கு போய் இருங்காங்க. இன்னும் இரண்டு நாளில் வந்துடுவாங்க.


ஓ.. அப்படியா என திரும்பிய பிரியா தன் கண்களையே நம்ப மறந்து சிலையாக நின்று விட்டாள்.







 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top