• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

sandiya sri's KKRI-WONDERFUL MUSIC OF LOVE

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Status
Not open for further replies.

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
கண்ணனின் குரலோசை, ராதையின் இதழோசை -மெல்லிசை கானம்.
View attachment 22500

எழுத்தாளர்,சகோதரி சந்தியாஸ்ரீ பற்றி சொல்ல வேண்டும் என்றால் அதற்கே நான் தனி புத்தகம் தான் எழுத வேண்டும்.

இவ்வளவு குறுகிய காலத்தில் பத்திற்கும் மேற்ட்பட்ட கதைகள் எழுதி வியக்க வைத்திருக்கிறார்.

ஒரே சமயத்தில் ஏழு கதை, வாரம் ஏழு நாட்கள், ஒவ்வொரு நாளும் ஒரு கதை என்று ஏழு நாளும் ஏழு கதை எழுத போகிறேன் அக்கா என்று இவர் சொன்ன போது திகைத்து தான் போனேன்.

எத்தனை டாலேண்ட் இருந்தால் இது சாத்தியம் என்று யோசிக்க தான் தோன்றியது.

தெரியாதவர்களை பற்றி எப்படி வேண்டும் என்றாலும் எழுதி விடலாம்.ஆனால் தெரிந்த எழுத்தாளர்களின் பிம்பத்தை கதை மாந்தராய் கொண்டு வருவது என்பது கத்தியின் மேல் நடப்பது போன்றது.அதை வெகு அழகாய் தன் நாவல் ஒன்றில் கொண்டு வந்ததில் இருந்தே இவர் திறமை நம்மால் அறிய முடியும்.

ரிஸ்க் எல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடுவது மாதிரி என்று இதோ KKRI கதை.ஏன் ரிஸ்க் என்கிறேன் என்றால் கதையின் நாயகியால் பேச முடியாது.

மொழி படத்தில் ஜோதிகா நடித்தார் என்றால் சினிமாவில் அவர் முக EXPRESSION CUT அண்ட் எடிட் செய்ய, பத்து முறை RETAKE எடுக்க அங்கே டைம் இருக்கும்.ஆனால் எழுத்தாளராய் அதை செய்யும் போது ரிஸ்க் அதிகம்.சினிமாவில் இருந்த அந்த LUXURY சந்தியாவிற்கு கிடையாது.

வாய் பேச முடியாத ஹீரோயின் மனஉணர்வுகளை எழுத்தில் கொண்டு வந்து வாசகர் மனதில் தாக்கம் ஏற்படுத்துவது என்பது அத்தனை சுலபம் இல்லை.அதை மிக சிறப்பாக செய்து இருக்கிறார்.

தன் எழுத்தின் மூலமாகவே கதை மாந்தர்களுடன் பயணிக்க வைத்து தன் முத்திரையை பதித்து விட்டார்.
கதை மனைவியை தேடி கணவன் வருவதில் ஆரம்பம் ஆகிறது.

ஹீரோ குடும்பம் இவர்கள் தனி குடித்தனம் செய்து கொண்டு இருக்கிறார்கள் என்று நினைக்க, ஹீரோயின் குடும்பம் ஹீரோ தான் தங்கள் தங்கை மன வருத்தத்திற்கு காரணம் என்று இருக்கிறார்கள்.

அங்கு இருந்து தொடங்குகிறது கதை.

கதை சொல்லி விட்டால் விறுவிறு போய் விடும்.சோ என்ன என்று படித்து பாருங்கள்.

கிருஷ்ணா,மது ,ஜானு மூவரும் நம்மில் ஒருவராய், நம்மோடு வாழ்ந்து இருக்கிறார்கள்.

இப்படி ஒரு தன்னம்பிக்கை பெண்ணாய் இருக்க வேண்டும் என்று மனம் ஆவல் கொள்கிறது.

இது போல் ஒரு கணவன் கிடைத்தால் நம் வாழ்க்கை குரலோசையாக இனித்து,இதழோசையாக நிச்சயம் சுகமாய் ஒலிக்கும்.

இதில் எனக்கு பிடித்த ஒரு ஜீவன் அந்த கிளி ஜானு .இது மாதிரி எங்கே கிடைக்கும் ஒரு ஆர்டர் போட மனசு அடித்து கொள்கிறது .

மொத்தத்தில் சந்தியாஸ்ரீ நமக்கு கொடுத்து இருக்கும் இன்னிசை விருந்து.

இன்னும் பல உச்சங்களை தொட வாழ்த்துக்கள் சந்தியா டியர்.

உங்களின் அடுத்த படைப்பிற்காக காத்து இருக்கிறேன்.

வாழ்க, வளர்க.

with love
honey
 




Status
Not open for further replies.

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top