• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

KUK - 5

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

nalini sri. p

புதிய முகம்
Joined
Jan 1, 2019
Messages
6
Reaction score
36
Location
Salem
Hai friends next update here paa...............

உள்ளம் – 5

உணவு உன்ன அனைவரும் அமர்ந்திருக்க சுமலா தான் அன்னையை நோக்கி பேச்சை ஆரம்பிக்குமாறு சைகை செய்ய சற்று பொறு என ரவியின் அன்னை கூறுகிறார்


ரவி “என்ன இன்னைக்கு ரொம்ப அமைதியா இருக்கு எப்பொழுதும் இப்படி இருக்காதே என்ன விசியம். அபை இன்னும் மருத்துவமனையிலிருந்து வர வில்லையா அவனை காணோம்”

யாதவ் “அண்ணா மருத்துவமனையில் அவசரம் என அழைப்பு வந்தது அதுதான் போய்ருக்காங்க”

ரவி “ம்”

ரவியின் அம்மா “ரவி நம்ம தேவிக்கும்- வர்சனுக்கும் கல்யாணம் முடிந்தது அப்படியே வர்ஷாக்கும் அபைக்கும் கல்யாணம் பண்ணிட்டா நல்லா இருக்கும் அபைக்கும் வயசாகிட்டே போகுது நம்ம தேவி கல்யாணம் முடியட்டும் பேசாமஇருந்தேன் இப்ப அவளுக்கு கல்யாணம் முடிந்துவிட்டது அதனால சொல்றேன்”

ரவி “அம்மா நம்ம அபை குணத்துக்கும் வர்ஷாகும் ஒத்துபோகுமா ஏனா அபைக்கு சட்டு சட்டுனு கோவம் வந்திடும் வர்ஷா ரொம்ப அமைதியானவ”

அது எல்லாம் கல்யாணம் செய்துவைத்தால் சரியாகிடும். நீ தயங்க இதுதான் காரணமா இல்லை அபைக்கு எப்படி கொடுக்கறது என யோசிக்கிறியா.

அபை நான் வளர்த்த பிள்ளை அவனுக்கு கொடுக்க நான் யோசிப்பேனா. சரி மா இரண்டு பேருக்கும் திருமணம் செய்திடலாம். நீங்களே ஜோசியர வரவைத்து ஒரு நல்ல நாள் பாருங்க நிச்சியத்தை முடித்து விடலாம்

சுமலா “ இதை பத்தி அபைகிட்ட நீயே பேசி சம்மதம் வாங்கிடு நாங்க பேசினாள் பிடிகொடுக்க மாட்டன். இதே நீ சொன்னாள் உடனே ஒத்து கொள்வான்”

ரவி “சரி அபைகிட்ட நான் பேசுறேன்”
_____________________________________________________________________


அத்தமா,அத்தமா எங்க இருக்கீங்க அம்மு தனது அத்தையை கூப்பிட்டு கொண்டே அலுவலகத்தில் இருந்து வீட்டுக்குள் வந்தாள்

சுபத்ரா “என்ன அம்மு என்னை இப்படி ஏலம் விடுற”

அத்தமா இதுல உங்க கையெழுத்து போடுங்க சில பத்திரங்களை நீட்டி கேட்க. அப்பொழுது உள்ளே நுழைந்த அர்ஜுன் அம்மா அப்படியே இதிலும் உங்க பொன்னான கையெழுத்தை போடுங்க என்றான்

என்ன ரெண்டு பேரும் பத்திரத்தை நீட்டி கையெழுத்து போட சொல்றீங்க முதலில் எதற்கு என சொல்லுங்க அப்புறம் கையெழுத்து போடுறதா வேண்டாமா என்று முடிவு பண்றேன்

அத்தமா கம்பனியின் எல்லா பொறுப்புகள்,நீங்க எடுக்கின்ற முடிவுதான் இறுதியானது என உங்கள் பெயரில் அதிகாரத்தை மாற்றுவதற்குதான் உங்க கையெழுத்து கேட்டேன். ஏன் என்றால் நான் சென்னை போனதும் இங்க ஏதாவது ஒன்று என்றால் நீங்களே அதை பார்த்து கொள்ளலாம். இல்லை என்றால் ஒவ்வொரு முறையும் நான் அங்கிருந்து வந்து இதை முடித்துவிட்டு செல்ல வேண்டும்

அர்ஜுன் “அம்மா நானும் மருத்துவமனை பொறுப்பை உங்களிடம் ஒப்படிகிறேன். ஏதாவது அவசரம் என்றால் நீங்களே முடிவெடுத்து கொள்ளலாம்”

என்ன இரண்டு பேரும் விளையடுகிறிங்களா. அம்மு கம்பனி அதிகாரத்தை தரேன் என்கிறாள் நீ மருத்துவமனையை பார்த்து கொள் என்கிறாய் இங்கே வரவே கூடாது முடிவு செய்துடிங்க போல நான் எதிலும் கையெழுத்து போட மாட்டேன் ரெண்டு பேரும் என்ன பன்றின்களோ பண்ணிகோங்க

அம்மு “ அப்பா அத்தமாக்கு எவ்வளோ கோவம் வருது. அத்தை நான் எதற்காக இப்படி செய்கிறேன் என்று உனக்கு நல்லாவே தெரியும் அதுமட்டுமில்லாது இதற்கு முன்பு எல்லா கம்பனியையும் நீ தானே பாத்துகொண்டாய் இப்ப மட்டும் என்ன அடம்பிடிக்கரா

ப்ளீஸ் அத்தை கொஞ்ச நாளைக்குதான் அப்புறம் எப்பவும் போல நானே வந்து பத்துகொள்கிறேன். ஏதும் ரொம்ப அவசரம் என்றால் நானே உடனே வருகிறேன்” என கெஞ்ச சுபத்திரா அம்முவின் முக பாவனையில் சமாதானம் ஆகி கையெழுத்திட

அர்ஜுன் “மா இது எல்லாம் உனக்கே அநியாயமாக தெரியல நானும் தனே உன்னிடம் கையெழுத்து கேட்டேன். அம்முக்கு மட்டும் போட்டுவிட்ட எனக்கு எங்க” சிறுபிள்ளை போல்
பாவனை கொடுக்க


அச்சு கம்பனி ஏற்கனவே நான் பார்த்து கொண்டிருந்தது அதனால் அதை பத்தி எனக்கு தெரியும் நான் பார்த்து கொள்வேன் ஆனா மருத்துவமனை பற்றி எனக்கு ஒன்றும் தெரியாதே இதற்கு முன்பு நந்தினி பார்த்து கொண்டாள் அவள்தான் இப்போ நம்மிடம் திரும்பி வர முடியாத இடத்திற்கு சென்றுவிட்டாலே

ஒரு நிமிடம் அங்கே அமைதி நிலவ மா “அத்தை எங்கும் போகல எப்போதும் நம்முடனே இருந்து நம்மை வழிநடத்திவார்கள்”


அத்தமா நானும்,அச்சுவும் அடுத்த வாரம் சென்னை செல்லலாம் என்று இருக்கோம் இங்கே இருந்து நீங்கள் எல்லாவற்றையும் பார்த்து கொள்ளுங்கள் சோனாவையும், கரனையும் )அபிதா pa) கூடவே வைத்து கொள்ளுங்கள். எல்லா வேலையும் நீங்களே இழுத்து போட்டு செய்யாதிங்கா

கரணிடம் சொல்லுங்க அவனே யாரை வைத்து முடிக்க வேண்டுமோ முடித்து விடுவான்


சென்னை

லஷ்மி இப்ப எதுக்கு முகத்தை தூக்கி வைத்திருக்க “சொன்னால் தானே தெரியும்” என ரவி வினவ

பொண்ணு கல்யாணத்தை யாரை கேட்டு முடிவு செய்தீங்க அவளுக்கு அம்மானு நான் ஒருத்தி இருக்கேன் உங்க கண்ணுக்கு தெரியுதா இல்லையா நீங்க பாட்டுக்கு அபைக்கு கட்டி கொடுக்கிறதா சொல்லிவிட்டிங்க

ரவி “இதற்கு தான் முகத்தை திருபறியா நான் கூட உனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லையோ என நினைத்தேன்”

ஆமா எனக்கு வர்ஷாவை அபைக்கு தர விருப்பம் இல்லை. அபை என்ன நேரத்தில் என்ன நிலையில் இருப்பான் என்றே தெரியாது அதோடு என்றாவது ஒருநாள் என்னை அத்தை என மதித்து பேசி இருப்பனா சரி சின்ன பையன் அச்சே நாமே பேசலாம் என்று போனால் முகத்தை கடுகடு வைத்து கொண்டு கேட்டதற்கு ஒரு வார்த்தயில் பதில் சொல்ல வேண்டியது

ரவி “ உனக்கு அபையை பத்தி தெரியாதா. அவன் ஏன் இப்படி இருக்கான் என்று நாம் பேசினால் நமக்கு நடுவே சண்டை வரும். இதை இதோட விட்டுவிடு அவன் நிச்சியமாக நமது பெண்ணை நன்றாக பார்த்து கொள்வான்”

அவன் ஏன் இப்படி இருக்கான் என தெரியுமே அந்த நந்தினியை மட்டும்தான் அவன் அத்தையாக நினைக்கிறான். அதனால் சொல்றேன் நம்ம பெண்ணை அவன் பார்த்து கொள்ள மாட்டேன். இந்த கல்யாணத்தை நிறுத்திடுங்க

ரவி “வாயை மூடு என்னைக்கோ ஏமாத்திவிட்டு போனவள் பத்தி பேச்சு எதற்கு. கண்டிப்பா அபை – வர்ஷா திருமணம் நடக்கும் பொறுப்பான அம்மாவா இருந்து எல்லா வேலையும் பாரு”

என கூறிவிட்டு அபையை பார்க்க சென்றார்

அபை தனது அறையின் பால்கனியில் நின்று இருளை வெறித்து கொண்டிருந்தான் அவன்
மனமோ என்றும் போல் இன்றும் அமைதியின்றி காணப்பட்டது


அவன் மனதினுள் “அத்தை நீங்க இப்போ எங்கே இருகீங்க. நான் நீங்க இல்லாமல் தனிமையாய் இருப்பது போல உணர்கிறேன். என் அம்மா கூட என்னிடம் பாசம் காட்டாத பொழுது எனக்கு அன்பை அன்பு,பாசம்,பரிவு என அனைத்தையும் தந்தீர்கள் ஆனால் நீங்கள் செல்லும் போது இது அத்தனையும் உங்களுடனே எடுத்து சென்று வீட்டிர்களே. என்னை சுற்றி எல்லாரும் இருந்தும் அவர்களிடம் இருந்து உண்மையான அன்பை என்னால் உணர முடியவில்லை. அதனால் எல்லாரிடமும் கோவம் கொள்கிறேன்.

என்னிடம் நீங்க என்ன சொல்லிவிட்டு சென்றீங்க நீ பெரியவன் ஆனதும் எப்பொழுதும் உன்னுடனே இருப்பேன் என்றும் அதுவரை உன்னுடைய மாமா சொல்படி கேட்டு நட என்றும் கூறினீர்கள். இப்பொழுது வரை நீங்கள் சொன்னவை மட்டுமே நான் செய்கிறேன் பிறகு ஏன் என்னை பார்க்க இன்னும் வரவில்லை

அத்த நீங்க எங்கே இருந்தாலும் சரி கண்டிப்பாக ஒருநாள் என் முன்னே வருவீர்கள் என நம்புகிறேன். என இருளை வெறித்து பார்த்து நினைக்க ரவி அறையின் உள்ளே வந்து அவன் தோலைதொட திரும்பி அவரை நோக்கினான்

ரவி “என்ன அபை இங்கே நின்று இருளை பார்த்து கொண்டிருக்கிறாய்”
ஒன்றும் இல்லை மாமா சும்மா நின்று கொண்டிருந்தேன். என்ன விசியம் மாமா கூப்பிட்டு இருந்தால் நானே வந்திருப்பேனே


ரவி “அபை நான் சுற்றி வளைக்காமல் நேர விசியத்திற்கே வந்திடுறேன் உனக்கும் வர்ஷாக்கும் திருமணம் செய்யலாம் என எல்லோரும் முடிவு செய்துள்ளோம். உன்னுடைய விருப்பம் என்ன”

மாமா எல்லோருக்கும் இதில் சம்மதமா குறிப்பாக உங்கள் மனைவிக்கு

ரவி “ அபை அவள் உனக்கு அத்தையும்தான் அதை மனதில் கொள்.சரி விடு உனக்கு சம்மதமா”

மாமா எனக்கு இப்பொழுது திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லை இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்

நீ எதற்காக,யாரை மனதில் வைத்து கொண்டு இப்படி சொல்கிறாய் என எனக்கு தெரிகிறது. ஓடிப்போனவள் என்றும் வரமாட்டாள். அவள் வந்தாலும் ஒழுக்கம் கேட்டவளுக்கு இந்த வீட்டில் இடம் இல்லை அதை மனதில் வைத்து கொள். அவள் வந்து உனது திருமணத்தை நடத்துவாள் என கனவு காணாதே.
___________________________________________________________________________________


சென்னை விமான நிலையம் பரபரப்புடன் இயங்கி கொண்டிருக்க டெல்லியில் இருந்து வந்து தரையிறங்கிய விமானத்தில் அபிதாவும், அர்ஜுனும் வந்து இறங்கினர். அவர்களை கூட்டி செல்ல ராஜன் வந்தார்

அபிதா “அங்கிள் உங்களுக்கு எதற்கு சிரமம் நாங்களே ஒரு டாக்ஸி புக் செய்து வந்திருப்போமே”

அதனால் என்ன மா உன் அம்மாவின் நட்பிகாக எது வேண்டுமானாலும் செய்யலாம்
அர்ஜுன் “அங்கிள் நாங்கள் கேட்டது எல்லாம் தயாரா”


வாங்க சென்று கொண்டே பேசலாம். என அழைக்க அவர் கொண்டு வந்த காரில் ஏறி பயணத்தை மேற்கொண்டனர்.

ராஜன் “நீங்கள் கேட்டது படி வீடு, நீங்க இரண்டு பேரும் சென்று வருவதற்கு கார், வீட்டு வேலை செய்ய ஆட்கள் ஆனைத்தும் தயார். அதோடு அம்மு கேட்ட ரவியின் குடும்ப புகைப்படம் இதோ என்றார்”

அம்மு நீ சொன்ன படி ஆட்கள் மூலம் கவனித்ததில் இன்னொடு செய்தி ரவியின் மகளுக்கும்- சுமாலாவின் மூத்தார் பிள்ளை அபைக்கும் திருமணம் செய்ய போவதாக தெரிகிறது

ம் என கேட்டு கொண்ட அம்மு “அங்கிள் எப்பொழுது திருமணமாம்”

அது பற்றி இன்னும் தெரியவில்லை தெரிந்தவுடன் முதலில் உன்னிடம் சொல்கிறேன்
சரிங்க அங்கிள் அப்புறம் ஆண்டி, அவந்தி எல்லோரும் நலமா. அவந்தி ராஜனின் மகள்.


இப்பொழுதாவது கேட்க வேண்டும் என உனக்கு தோன்றியதே நானும் வந்ததில் இருந்து கேட்பாய் கேட்பாய் என காத்திருந்தேன் என கிண்டலாக கூற

அம்மு “போங்க அங்கிள் நான் நேற்று தான் அவந்திகிட்ட பேசினேன் ஆண்டி என்மேல் கோவமாக இருக்கிறதா கேள்விபட்டேன் அதும் இல்லாமல் நம் பேசியதை ஆண்டி உங்கள் மொபைல் முலம் கேட்டு கொண்டுதானே இருகாங்க அதனால் நானும் கொஞ்சம் விளையாடினேன் அவர்களை பற்றி கேட்காமல்”

ராஜன் “எப்படி மா சரியாக கண்டு பிடித்தாய். நீங்க இரண்டு பேரும் எங்களுடன் தங்காமல் தனியே தங்குவதால் கோவமாக இருந்தால் பின் நான் எடுத்து சொல்லவும் தெளிந்து நீங்கள் வந்தவுடன் அவளுக்கு போன் செய்யுமாறு கூறினாள்”

சரி சரி போனை எடுத்து நாங்கள் நாளை அவரை பார்க்க நாளை வருவதாக கூறி கட் செய்யுங்கள்

அர்ஜுன் “அவங்களுக்கு நீ சொன்னதே கேட்டு இருக்கும் அம்மு”


உள்ளம் கரையும்..............................
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
மிகவும் அருமையான பதிவு,
நளினி ஸ்ரீ. p டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top