• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

யது வெட்ஸ் ஆரு 23

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

revathi kayal

இணை அமைச்சர்
SM Exclusive
Joined
Apr 21, 2018
Messages
541
Reaction score
2,720
Location
madurai
ஹாய் தோழிஸ் அடுத்த எபிசொட் போட்டுட்டேன்.. படிச்சுட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க.. முந்துன எபிக்கு லைக் மற்றும் கமெண்ட்ஸ் இட்ட அனைவர்க்கும் நன்றிகள். silent ரீடர்ஸ் அப்படினு யாராவது இருந்தா கதை முடிய போகுது உங்களது கருத்துக்களை பகிர்ந்துக்கோங்க தோழிஸ்... ஹாப்பி ரீடிங்...




23​




யாதவ் வந்திருந்த செய்தியை கேட்டு மகிழ்ச்சியுடன் அவன் இருக்கும் இடத்தை அடைந்த ஷா, அவனை பார்த்தவாறு நின்று விட்டாள்.



இந்த யாதவ் புதிதாக தெரிந்தான். என்ன வித்தியாசம் என்று கேட்டால் தெரியவில்லை? ஏதோ வித்தியாசத்தை அவனிடம் உணர்ந்தாள். என்ன மாற்றம் என்று கூர்ந்து பார்க்க, ஆம் அவன் பார்வையில் தான் ஏதோ மாற்றம். உயிர் குடிக்கும் பார்வை.



அவனிடம் எப்பொழுதும் அவள் உணர்ந்தது அவளை ஆளவே அவனது பார்வை விளையும். இப்பொழுது எதுவோ, வித்தியாசமாக, அதற்கு நேர்மாறான பார்வை, சரியாக சொல்ல வேண்டுமென்றால் அவனது பார்வை இவளை ஆராதித்துக் கொண்டிருக்கிறது.



சூடிக்கொடுத்த சுடர்கொடியாள் இப்படி தான் தனது காதலனை பார்த்திருப்பாளோ? மீரா தனது கண்ணனை பார்வையால் இப்படி தான் உயிர் பறிக்க நினைத்திருப்பாளோ??



ஏன் இவன் இப்படி பார்க்கிறான்? என்ற யோசனையுடன் அவன் அருகில் சென்றாள் ஆரு.



அவள் அந்த அறையின் உள்ளே நுழைந்ததில் இருந்து தன்னை வந்து அடையும் வரை ஆருவை கண் அகலாமல் பார்த்தான், பார்த்துக் கொண்டே இருந்தான் யாதவ்.



தனக்கு அருகில் ஷா வரவும் எழுந்து நின்ற யாதவ் ஷாவினது கரங்களை மிக இறுக்கமாக பிடித்துக் கொண்டான். ஷாவிற்கு வாயில் இருந்து வார்த்தைகள் வரவே இல்லை. அமைதியாக அவனை பார்த்தவாறே தனது கரங்களை அவனது கரங்களுக்குள் கொடுத்துவிட்டு நின்றாள்.



கங்கா முழுதாக சந்திரமுகியாகிய தருணம் போல், ஷா முழுதாக ஆருவாக மாறிய தருணம் அது. அதை ஷா உணர்ந்து இருந்தாலோ என்னவோ யாதவ் முழுமையாக உணர்ந்தான்.



"ஹோல்டு மீ டைட்..!" என்று யாதவ் ஷாவின் கண்களை பார்த்துக் கூற, ஷா சிரிப்புடன் என்ன என்பது போல் அவனை பார்க்க, "ப்ளீஸ் ஹோல்டு மீ...!"என்க



யாதவை தன்னால் முடிந்தவரை இறுக அணைத்துக் கொண்டாள் ஆரு. எப்பொழுதும் போல் அவளது கழுத்து வளைவில் முகம் புதைத்தவன் சில நாட்களுக்கு பிறகு தாயிடம் வந்து சேரும் குழந்தை எப்படி தனது தாயை வாசத்தின் மூலம் உணர துடிக்குமோ அப்படி அவளது வாசத்தை தனக்குள் கொண்டுவந்தான்.



அவளது தோளில் முகம் புதைத்துக் கொண்டு ஷாவை இறுக அணைத்தவாறு "ஆரு.."என்று யாதவ் அழைக்க,



அவனது அணைப்பில் வார்த்தையில் வடிக்க இயலா, ஒரு நிம்மதியில், ஆத்ம திருப்தியில் இருந்த ஆரு "என்ன?" என்று அவனின் முதுகில் தனது விரல்களால் கோலமிட்டவாறு கேட்க,



இன்னும் புதைந்தவாறு "எனக்கு பயமா இருக்கு ஆரு"என்று கூற,



அவனின் உடலின் நடுக்கத்தின் மூலம் யாதவ் உண்மையில் ஏதோ ஒரு பயத்தில் இருக்கிறான் என்று புரிந்து கொண்ட ஷா, அவனது முதுகை வருடி அவனது நடுக்கத்தை குறைத்தவள் "ஏன்?" என்று அவனது நாடியில் முத்தமிட்டு அவனது முகத்தை அண்ணாந்து பார்த்து கேட்க,



அணைப்பில் இருந்தவாறே குனிந்து அவளது முகத்தை பார்த்த யாதவ் "நீ இல்லாத இந்த மூணு நாள் நான் பட்ட அவஸ்தை வாழ் நாள் முழுக்க பட்ருவேனோனு பயமா இருக்கு ஆரு... என் வாழ் நாள் முழுக்க நீ வேணும். என் கூடவே நீ வேணும். தூங்கும் போது கட்டி பிடிச்சுக்க, காலைல ரன்னிங் போக, டீயை ரசிச்சு குடிக்க, இன்ஸ்டால அழகா ஜோடியா போஸ்ட் போட, எங்க அப்பன் ரகுவரனை லெப்ட் ரைட் வாங்க, இன்னும் என்ன என்னவோ பண்ண நீ எனக்கு வேணும். நீ மட்டும் போதும். எஸ்.. ஐ லவ் யு சோ சோ சோ சோ சோ மச்..." என்று யாதவ் ஆரம்பித்த பொழுதே சிறிது சிறிதாக அவனது அணைப்பை விலக்கி, அவன் ஐ லவ் யு சொன்ன போது முழுவதுமாக அவனை விட்டு விலகிருந்தாள் ஷா.



அவளின் பதிலுக்காக யாதவ் அவனது ஆருவை பார்த்தான். எதை அவள் அவன் வாயிலிருந்து கேட்க கூடாது என்று நினைத்தாளோ அதுவே கேட்டுவிட்டாள்.



ஆனால், அவளுக்கு ஒன்று புரியவில்லை கோவம் வருவதற்கு பதில் இந்த மனது ஏன் இப்படி இவ்வளவு அமைதியை தத்தெடுத்து கொண்டு இருக்கிறது என்று புரியாமல் அவனுக்கு பதில் கூட சொல்லாமல் நின்றாள் ஆரு.



அவள் யாதவை காதலிக்கிறாளா? என்றால் கிடையவே கிடையாது. இல்லை இவள் அதை உணரவில்லையா எப்படியோ இப்பொழுது இல்லை. அவள் மனது அவளுக்கே குழப்பமாக இருந்தது.



அவள் மௌனத்தை தாங்க முடியாத யாதவ் "ஆரு.."என்று அழைக்க, அவனை பார்த்தாள் ஷா. ஆனால், பதில் பேச வில்லை.



"சே சம்திங் ஆரு..?" என்று யாதவ் கண்களில் மொத்த உயிரையும் தேக்கி, குரலில் காதல் சொட்ட அவளது கரங்களை பிடித்துக் கொண்டு கெஞ்சாத குறையாக கேட்டான்.



அவனது கரத்தின் சூட்டில், உணர்வு வர பெற்றவள், இணைந்திருந்த தங்களது கரங்களை சில நொடிகள் என்னவென்று புரிந்து கொள்ள முடியாத உணர்வுடன் பார்த்தவள்; ஒரு முடிவுடன் அவனது கரத்திலிருந்து தனது கரத்தை பிரித்தெடுத்து விட்டு, பார்வையை யாதவின் கண்களுக்கு மாற்றியவள் தனது செப்பு வாய் திறந்தாள்.



"எனக்கு இந்த காதல் கருமம் மேல எல்லாம் நம்பிக்கை கிடையாது யது.என்னால யாரையும் காதலிக்க முடியாது… உணர்வுகளை புரிஞ்சுக்க முடியாத, கையாள தெரியாத ஜடம் நான்.ப்ளீஸ் பைத்தியம் மாதிரி உளறாம கிளம்பு..." என்று கூறியவாறு ஆரு தனது வேலையை பார்க்க திரும்ப,



அவள் செய்வதெல்லாம் ஆரம்பித்திலிருந்து கவனித்து கொண்டிருந்த யாதவிற்கு அவளது தடுமாற்றம் நம்பிக்கை அளித்தது. தன்னை காதலிக்கிறாள் என்று முழுமையாக நம்பினான். இணைந்திருந்த கரங்களை பார்த்தபோது அவள் கண்கள் காட்டிய செய்தியை சரியாக புரிந்து கொண்டான்.



ஆருவின் கரத்தை பிடித்து தன்னை நோக்கி திருப்பியவன்



"ஏன் முடியாது? சிவாவை காதலிச்ச தானே. அப்ப உன்னால காதலிக்க முடியும். புரிஞ்சுக்க முடியும்" என்று கூற, அவனை சந்தேகமாக பார்த்தவள்



"ஆமாம் , சிவா மேட்டர் எப்படி உனக்கு தெரியும்?" என்று ஆருஷாவாக கேட்க,



"ஆமாம் அது பெரிய ராணுவ ரகசியம். அவங்க கல்யாணத்துக்கு முதல் நாள் நாம பண்ண அட்டகாசம் எல்லாம் மறந்து போச்சா? நீ தான் டி குடிச்சுட்டு உளறுன..." என்று யாதவ் கூற,

"அட ஆமாம்ல…" என்று வாய் விட்டு ஆருவாக கூறியவள், சில நொடிகளுக்கு பிறகு



"சிவா விஷயம் வேற... அவன் என்னோட பதிமூணு வயசுல இருந்து என்னை பார்த்துக்கிட்டவன். என் கூட இருந்தவன். அவன் என்னை காதலிக்கிறேன்னு என்கிட்டே வந்து ப்ரொபோஸ் பண்ணப்ப நன்றி கடனா நினைச்சு தான் அவனுக்கு ஓகே சொன்னேன். அவன் எப்பயும் என்னை விட்டு போகாம இருப்பான்னு நான் நம்பவே இல்லை. நானும் அவன் கூடவே இருப்பேன்னு எனக்கும் நம்பிக்கை இல்லை. ஆனால் நீ அப்படி கிடையாது. உனக்கும் எனக்கும் செட் ஆகாது. எனக்கு காதல் அப்படினா என்னனு கூட தெரியாது"



அவளது பதிலில் இதெல்லாம் தெரிந்தது தானே என்பது போல் பார்த்தவன் "நீ என்னை காதலிக்குற ஆரு.." என்க அவளுக்கு கோவம் வந்துவிட்டது.



இவ்வளவு நேரம் உன்னிடம் இப்படி பேசியதை அதிகம் என்பது போல் இருந்தது அவளது நடவடிக்கை. ஆரு முழுதாக மீண்டும் ஷாவாக மாறிவிட்டாள். வெளியேற துடித்த ஆருவை உள்ளே அழுத்தியவள் சிரிக்க ஆரம்பித்தாள்.
 




revathi kayal

இணை அமைச்சர்
SM Exclusive
Joined
Apr 21, 2018
Messages
541
Reaction score
2,720
Location
madurai
அவளின் சிரிப்பின் அர்த்தத்தை உணர்ந்தான் யாதவ். எதுவோ உள்ளே உடைவது போல் உணர்ந்தான். ஏதோ தன்னை வலிக்க செய்ய போகிறாள் என்று புரிந்தது.



"நான்? உன்னை ? குட் ஜோக்..." அவள் காதலில் தான் சந்தேகம் கொண்டாளே தவிர, ஒரு நொடி கூட யதுவின் காதலில் ஆரு சந்தேகம் கொள்ளவில்லை. அவனுக்கு தன் மேலான உணர்வுகளை முன்பே அவளது உள்மனம் அறிந்து இருக்கிறது போல். அதனால் தான் அடிக்கடி என்னை காதலிக்கிறாயா என்று கேட்டு இருப்பாளோ? அது ஷா மட்டுமே அறிந்தது.



"ஆமாம்..." என்று யாதவ் அழுத்தமாக கூற, அதற்கும் சிரித்தவள் "உன் கூட படுக்க வந்தா உன்னை லவ் பன்றேன்னு அர்த்தமா?" என்று அவனை அழுத்தமாக பார்த்தவாறு ஷா கேட்க, இப்படியெல்லாம் பேசி கேட்டு அறியாத யாதவ் மனம் வெகுவாக அடிவாங்கியது.



"ஆரு… ஒழுங்கா பேசு..."என்று கண்களை மூடிக் கண்டு அவளை நோக்கி கரத்தை நீட்டி கூற, ஷாவிற்கு பாவமாகவும், சிரிப்பாகவும் இருந்தது. அதனால் விளையாட்டாக பேசியே இவனை அனுப்பி விடுவோம் என்று நினைத்துக் கொண்டு சிரிப்புடன்



"ஹா ஹா ஹா...என்ன டா சீரியல் ஹீரோயின் மாதிரி சீன் போடுற? உன் கூட இருந்தது தவிர நான் உன்னை எப்படி லவ் பன்றேன்னு சொல்ற சொல்லு. நிரூபிச்சு காட்டு பார்ப்போம்..." என்று ஷா கேட்க, ஆரம்பத்தில் அவளது வார்த்தையில் அவனுக்கே சிரிப்பு வந்து விட்டது.



நடிகன் இல்லையா இவன். எப்பொழுதும் டைரக்டர் கதை சொல்ல சொல்ல அந்த இடத்தில் தன்னை வைத்து அவனது மூளைக்குள் நொடி நேரத்தில் காட்சிகள் பெரிய திரையில் ஓடும். எனவே, இவள் கூறிய சீரியல் ஹீரோயினும் இவனது மூளைக்குள் படமாக ஒரு பெண்மணி யாதவை கொடுமை படுத்துவதை போல் நொடி நேரத்தில் ஓட சிரித்துவிட்டவன், அவளது பின் பாதி வார்த்தைகளையும் சிரிப்புடன் கேட்டவன் அவள் முடித்த சில நொடியில் ஆருவை தனதருகில் இழுத்தவன், அவளை பின்புறமாக திருப்பி சட்டென்று அவளது வலது தோள் புறம் இருந்த மேல்ச்சட்டையை இழுக்க, அவனது திடீர் செயலில் அதிர்ந்த ஷா திரும்பி அவனை பார்க்க அவளை வலுக்கட்டாயமாக திருப்பியன் தனது கைபேசியை எடுத்து அவளது பின் தோளில் இருந்த அந்த டாட்டூவை புகை படம் எடுத்து விட்டு, அவளை பின்பக்கமாக அணைத்தவாறே அவள் தோளில் தனது நாடியை பதித்து அவளிடம் அந்த புகைப்படத்தை காட்டினான் யாதவ்.

ஷா அந்த புகைப்படத்தை சிறிது அதிர்ச்சியுடன் தான் பார்த்துக்கொண்டிருந்தாள்.



"இன்னும் ஏன் இந்த டாட்டூவை அழிக்காம வைச்சுருக்க? ஷாக்கு இதுக்கெல்லாம் நேரம் இல்லையா? மனசு இல்லையா? " என்று போட்டு தாக்கினான் யாதவ்.



பிரச்னை எல்லாம் முடிந்த மறுநாளே சென்னையில் மிகப்பெரிய மருத்துவமனையில், தான் இந்த டாட்டூவை அழிக்க லேசர் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ததும், மருத்துவமனை வரை சென்று சிகிச்சை அளிக்கும் அறைக்குள்ளும் சென்று விட்டு சிகிச்சை ஆரம்பிக்க போகும் நேரத்தில் என்னவென்று அறியாத உணர்வில் இந்த சிகிச்சை வேண்டாம், இந்த டாட்டூ இருக்கட்டும் என்று சொல்லி விட்டு வந்ததும் அநியாயமாக இப்பொழுது நினைவு வந்தது ஷாவிற்கு.



'ஒருவேளை இவன் சொல்லுவதுபோல் இவனை நான் காதலிக்கிறேனா??' என்று ஷா அவனது கையணைவில் தடுமாற,



அவளது தடுமாற்றத்தை கண்டுகொண்ட யாதவ் அவளுடன் இன்னும் குலைந்தவாறு "இந்த உலகத்துல இதுவரை யாருமே பண்ணாத அளவுக்கு நம்ம கல்யாணத்தை ரொம்ப கிராண்ட்ஆஹ் நடத்துறோம். உனக்குன்னு நான்.. எனக்குன்னு நீ.. இது மட்டும் போதும். இந்த ஆயுசுக்கும் உன் கூட எப்பயும் நான் இருப்பேன். "



திருமணம் என்ற வார்த்தையே அவளை தடுமாற்றத்திலிருந்து மீட்க போதுமானதாக இருக்க, ஷா முழுவதுமாக மீண்டுருந்தாள். யாதவ் சொல்லி முடிக்கும் வரை அமைதியாக நின்றவள், அப்படியே முன் பக்கமாக திரும்பி அவனது கழுத்தை சுற்றி தனது கரங்களை கொண்டு சென்று மாலையாக கோர்த்தாள்.



ஷாவின் திடீர் செய்கையில் இனிமையாக அதிர்ந்து, அன்றலர்ந்த மலர் போல் ஏகத்துக்கும் விரிந்து கிடந்த அவனது கண்களை பார்த்தவாறு, "கல்யாணம் பண்ணிக்கலாம்... ஆனால், அதுல ஒரு சின்ன பிரச்சனை இருக்கே.." என்று அவள் குழந்தையாக மிழற்ற அவளது திடீர் ஒத்துழைப்பில் ஆச்சர்யமாக பார்த்தவன்,



"எதுவா இருந்தாலும் சொல்லு? நான் சரி பண்றேன்."



"அது ஒண்ணுமில்லை. எனக்கு ஒருத்தன் கூடயே வாழுறது கஷ்டம் ஆச்சே. ப்ப்ச்… உன்கூட கல்யாணம் ஆகிட்ட பின்னாடி எனக்கு வேற யாரு மேலயோ, இந்த உலகமே சொல்லுற சோ கால்டு காதல் வந்துட்டா நான் என்ன பண்றது யது? அப்ப நான் அவன் கூட போயிருவேனே..." என்று இதற்கு முன்பு மிழற்றியதை விட மிகவும் குழைந்து மிழற்றியவள், ஒரு மாதிரியான கோணல் சிரிப்புடன் யாதவை பார்த்தாள்.



அவள் பேச, பேச அவனது முகத்தில் தோன்றிய மாற்றங்கள், நிரம்பி வழிந்த வலி என்று அனைத்தையும் பார்த்தவாறு பேசினாள். அவனது வலி உள்ளே என்னமோ செய்தது. இருந்தும் இது தானே உண்மை. அப்படி தான் அவளே நம்பினாள். இவனை வலிக்க வைக்க வேண்டும் என்றெல்லாம் அதை அவள் சொல்லவில்லை.



ஷா பேசி முடித்தவுடன் ஒரு ஆழ்ந்த மூச்சை இழுத்து வெளிவிட்டவன், சிரிப்புடன் அவளது இடையில் தனது கரங்களை படரவிட்டு,



"அப்படி நம்ம கல்யாணத்துக்கு பின்னாடி வேற ஒருத்தன் மேல உனக்கு காதல் வந்துச்சுன்னா, இந்த உலகத்துலயே நான் அதிகமாக நேசிக்குறது உன்னை மட்டும் தான்… உன் மேல சத்தியமா சொல்றேன், நீ அவன் கூட போலாம். உன்னை தடுக்க மாட்டேன். அடுத்த நொடி டிவோர்ஸ் கொடுத்துருவேன்" என்று யாதவ் கூற, அவ்வளவு நல்லவனா டா நீ என்பது போல் அவனைப் பார்த்தவள்,



"நீ நிஜ ஹீரோன்னு ஒத்துகிறேன். ஆனால், இந்த கல்யாணம், குடும்பம், குழந்தைகள் எல்லாம் என்னால பார்த்துக்க முடியாது. எனக்கு என் கெரியர் மட்டும் தான் முக்கியம். "என்று அவள் முடிக்க கூட வில்லை அதற்குள் யாதவ்



"இது தான் பிரச்சனையா?? கவலை படவே வேண்டாம். நீ வேலைக்கு போ. நான் சினி பீல்ட் விட்டு வந்துறேன். வீட்ல இருந்து பாப்பா, உன்னை, நம்ம வீட்டை எல்லாரையும் பார்த்துகிறேன். நீ வேலைக்கு போய்ட்டு வா..." என்று சர்வசாதாரணமாக கூற, ஷா அதிசயமாக அவனை பார்த்தாள்.



ஷாவிற்கு தெரியும், யாதவிற்கு சினிமா என்பது உயிர் மூச்சை போன்றது, ரகுவரனுக்கும் யாதவிற்கும் இடைவேளை வருவதற்கு காரணமே அவனது இந்த சினிமா மேலுள்ள மோகம் தான் என்பது, ஆனால் தனக்காக அதையே விட்டு கொடுக்கிறான் என்றால் அவனுக்கு தன் மீதுள்ள காதல் எவ்வளவு ஆழமானது என்று புரிந்தது. இப்படி ஒரு அன்பிற்கு தான் தகுதியானவளா? தெரியவில்லை. இப்படி மூச்சடைக்க வைக்கும் காதல் தேவை இல்லை என்று நினைத்தாள்.



ஆருஷாவால் எதையும் சமாளிக்க தெரியும். ஆனால், அன்பை அவளால் கையாள தெரியாது, பதட்டப்படுவாள், சொதப்புவாள். இங்கேயும் சொதப்பினாள்,



"யது நீ என்ன சொன்னாலும் என்ன பண்ணாலும் எனக்கு உன் மேல காதலோ எந்த கன்றாவியோ கிடையாது. தயவுசெஞ்சு இந்த இடத்தை விட்டு போ.எனக்கு நேரம் ஆச்சு... உன் கூட ஏன் பழகுன்னேனு என்னை யோசிக்க வைச்சுறதா..." என்று ஷா கையெடுத்து கும்பிட்டு கூற, யாதவ் சுத்தமாக நொறுங்கி விட்டான்.



"ப்ளீஸ் ஆரு இப்படிலாம் பேசாதே. நான் போறேன். ஆனால் ஒண்ணு நீ என்னை காதலிக்கிறது உண்மை" என்க



ஷா அவனை ஒரு மாதிரி முறைக்க, "நீ நம்பலைல என்னை..." என்றவன் அவளை இழுத்து அவளை அவளையே உணர வைக்க கூடிய நெற்றி முத்தத்தை அவளுக்கு வழங்கினான் யாதவ்.



காமம் கலந்த காதலின் முத்தத்தின் போதே, நடுங்குபவள் காதல் மட்டுமே திளைத்து இருக்கும் முத்தத்தில் மொத்தமாக உடைந்தாள். கண்கள் லேசாக கலங்கும் போல் இருந்தது. அதை சமாளித்தவள் யாதவை பார்த்து புன்னகைத்தாள். அதில் சத்தமாக சிரித்த யாதவ்,



"போறேன். ஆனால் நிரந்தரமா இல்லை. எப்போ என்னோட ஆரு அவளை சுத்தி இருக்குற ஷாவை உடைச்சிட்டு வெளியேறி என்கிட்டே வாராளோ அன்னைக்கு நான் திரும்பி வந்துருவேன். லவ் யு ஆரு..." என்று கூறியவன் அவளது அனுமதி இல்லாமலே ஷாவை இழுத்து அணைத்து நீண்ட இதழ் முத்தத்தை கொடுத்து விட்டு திரும்பி கூட பார்க்காமல் அந்த இடத்தை விட்டு அகன்றான் யாதவ்.



போகும் அவனையே பார்த்தவாறு நின்றிருந்தாள் ஆருஷா. ஏதோ, தன்னுடைய சின்ன சின்ன சந்தோஷங்களும் அவனுடனே கைகோர்த்து தன்னை விட்டு செல்வது போல் இருந்தது.



பிரிவு மட்டுமே அவளால் அவளையே உணர வைக்க முடியும் என்று நம்பினான். பிரிவு சில நேரங்களில் இணைவாகவும் மாறலாம். சில நேரம் நிரந்தர பிரிவாகவும் போய் விடும்… இவர்களின் வாழ்க்கையில் பிரிவிற்கான கதாபாத்திரம் என்னவோ…???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top