• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

அத்தியாயம் 14

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

deiyamma

நாட்டாமை
Author
Joined
Sep 6, 2020
Messages
63
Reaction score
101
Location
nagercoil
என்னை சாய்த்தாயே உயிர் தாராயோ
அத்தியாயம் 14

'காலங்கள் கடந்தாலும்
காத்திருப்பது சுகமே...
காதல் உலகில்...!'

"ஹா..ய் இளங்கோ அங்கிள்...!" புன்னகை முகமாக வரவேற்றான் ரவி. ஏர்போட்டிலிருந்து அழைத்து செல்வதற்காக வந்திருந்தான் அவன்.

தடுப்பு தாண்டி வந்தவரை கட்டியணைத்து தன் அன்பை பறைசாற்றினான். "ஹாய் லதா ஆன்ட்டி". என்றபடி அவருக்கும் ஒரு அட்டெண்டஸ் போட்டவனை... இளமை பொங்கும் நவயுக குமாரி நேகா ஆசையாய் தன் இருப்பை அவனுக்கு காட்டினாள் அவன் வரவேற்ற பாணியிலே...

"ஹேய்... நீ இன்னும் அந்த பெர்பியும் தான் யூஸ் பண்ணுறீயா... ?!" கழுத்தோரமாய் தன் கூர் நாசியினால் மணத்தை உள்ளிழுத்த படியே வினவினாள்.

புன்னகையை பதிலாக கொடுத்தான்.

"அப்புறம் சொல்லுங்க அங்கிள்.. ட்ராவல் ஒன்றும் பிரச்சனை இல்லையே..??"

"நோ பிரோப்ளம் மை சன். இட்ஸ் குட்". ரவியின் தோளில் கை போட்டு அணைத்தபடியே பதில் கூறினார் இளங்கோ.

" உங்களுக்கு தங்குவதற்கு எங்க வீட்லயே ரூம் அரேஞ் பண்ண சொல்லிட்டேன். சோ இன்றைக்கு ரெஸ்ட் எடுங்க. அப்புறமா உங்களோட பிளான்ஸ் எல்லாம் பார்த்துக்கலாம். சரியா அங்கிள்..?!"

"ஓ கே டா. உன் விருப்பப்படியே நடக்கட்டும்". பேசியபடியே
அவர்கள் எல்லோரும் ஏர்போட்டிலிருந்து வெளியே கார்பார்க்கிங்ற்கு சென்றடைந்தனர்.

நால்வரும் காரில் ஏறி கொள்ளவும் அந்த வெள்ளை நிற ஆடி கார் தென்றலாய் புறப்பட்டது.

முன் சீட்டில் ரவியும் நேகாவும், பின் சீட்டில் இளங்கோவும் லதாவும் அமர்ந்து கொண்டனர்.

"ஹே நேகா.. டேஷ் போர்ட் கொஞ்சம் ஓபன் பண்ணு.." காரை ஓட்டிய படியே சொன்னான்.

"அதோ அந்த ப்ளூ கலர் ஃபைலை எடு".

சொன்னபடியே அவளும் எடுத்து கொடுத்தாள். தலையை பின்புறமாக திருப்பியபடியே சொன்னான், "அங்கிள் இது தான் நாங்க புதுசா கட்டிக்கிட்டு இருக்கிற ரெஸ்டாரண்ட். அம்மாவோட நினைவா இருக்கட்டும்ன்னு நாங்க ஆசைப்படுறோம். பாருங்க. உங்களுக்கு பிடிச்சிருக்கான்னு சொல்லுங்க. உங்களுக்கும் அம்மாவை நல்லா தெரியும். சோ அவர்களுக்கு பிடிச்சதுல ஏதாவது நான் மிஸ் பண்ணியிருந்தேனா... நீங்க எனக்கு கைட் பண்ணுங்க.. "

"சுயர் மை பாய். ஆனால் உங்க அப்பாகிட்ட கேட்டாலே சொல்லுவார்டா. அவருக்கு தெரியாததா எனக்கு தெரிய போகுது.? உ ..உ..ங்..க அம்மாட்ட நான் அந்த அளவு நெருங்கி பழகுனது இல்..லை..டா ரவி. இருந்தாலும் ஏதாவது நினைவுக்கு வந்தா சொல்லுறேன் சரியா..?!"

"போதும் நிறுத்துங்க.டேய் ரவி என்னடா இது..? வந்தவுடனே ஆரம்பிச்சிட்டிங்களா...எப்போ பாரு பிஸினஸ் தானா...??!" குறைப்பட்டாள் லதா நேகாவின் அம்மா.

ஆண்கள் இருவரும் சிரித்து கொண்டனர்.

"என்னங்க நீங்க..??! பிஸ்னஸ் எல்லாத்தையும் கொஞ்ச நாளைக்கு ஓரங்க்கட்டிட்டு ரெஸ்ட் எடுக்கிற வழியை பாருங்க."

"இந்த இந்தியா ட்ரிப்ல நீங்க எந்த வேலையையும் பார்க்க மாட்டேன்னு எனக்கு ப்ராமிஸ் பண்ணியிருக்கீங்க. மறந்திறாதீங்க" விரல் நீட்டி எச்சரித்தாள் லதா.

"சரி தான். எஜமானி அம்மாவே சொல்லிட்டீங்க நான் கேக்கமா இருப்பேனா...?!!" அழகாய் நடித்துக் கொண்டார்.

"ம்ம்ம்... இப்போ இப்படி சொல்லிட்டு அப்புறம் ஏதாவது வேண்டாத வேலை பார்த்திங்கன்னு வைங்க...??!"

"ஹா ஹா ஹா.." நேகாவும் ரவியும் சிரித்து கொண்டனர். அவர்களுக்கு தான் தெரியுமே. ஓய்வு என்று கூறினாலும் அவரால் கொஞ்ச நேரம் கூட சும்மா அமர்ந்திருக்க முடியாதே...

"என்ன சிரிப்பு..??! ஹாங்..." இப்போது இளசுகள் அத்தையின் பிடியில் மாட்டிக்கொண்டனர்.

"போங்கம்மா.. உங்களுக்கே நல்லா தெரியும் அப்பாவை பற்றி.. !"

"அவரே அடங்கி வீட்ல இருந்தாலும் நீங்க இருக்க விட மாட்டிங்க போல.?!?"

"ஹா ஹா ஹா..." சிரித்து கொண்டாள் நேகா.

அப்படியே பேசி கொண்டே வீடு வந்து சேர்ந்தனர்.

எல்லோரும் பரஸ்பர பேச்சு பேசிய படியே உள்ளே செல்ல ஆயத்தமாயினர்.

இளங்கோவின் போன் ரிங் ஆகவும் அவர் மற்றவர்களை பார்த்து ரவி நீங்க எல்லோரும் வீட்டுக்கு உள்ளே போங்க.. நான் பேசிட்டு வந்திருதேன்.

"ஹ்ம்ம்... சொல்லு".
........
"தென் வாட் அபௌட் ஸ்டார்ஸ்...?"
........
"கோ டு ஹெல் மேன்..."
.......
"டோன்ட் ஷோ யுவர் பேஸ்".

கோபம் கொப்பளிக்க போனை அணைத்து விட்டு உள்ளே சென்றார்.
##############

"நீங்கள் எத்தனை பாரம்பரியமாகவும் நவநாகரீகமாகவும் இதை கட்டி முடிச்சாலும் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் அதிக மகிழ்ச்சியை கொடுப்பது ஊஞ்சல்தான்ன்னு நான் சொல்லுவேன். ஆனால் இப்பொழுது எல்லாம் இந்த பழக்கம் ரொம்ப குறைஞ்சு போச்சு. முன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி பெண்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக ஆடினார்கள். ஆனால் இப்போ அப்படி கிடையாது. முடியவும் முடியாது".

கைகளை ஆட்டி ஆட்டி பேசிக் கொண்டிருந்தாள் ஆராதனா. பேசும் அழகில் கவரப்பட்டவனாய் ரவியும் அவள் கொஞ்சு மொழியை ரசித்து கொண்டிருந்தான் அவளுக்கு தெரியாமல். ஏர்போட்டிலிருந்து அவர்களை வீட்டில் விட்டு விட்டு ஆபிஸ் வர தாமதம் ஆகவே அவர்களை அவன் கட்டி கொண்டிருக்கும் ரெஸ்டாரண்ட்ற்கு தான் இன்று வர சொல்லியிருந்தான். அவளும் அகிலும் முன்னவே அங்கு வந்திருக்க அங்கு என்னனென்ன மாற்றங்கள் செய்தால் நன்றாக இருக்கும் என்று அவர்கள் பேசி கொண்டிருந்தார்கள்.

வந்தது என்னவோ பெயின்டிங்ஸ் எப்படி அமைப்பது என்ற ஐடியாவிற்காக... ஆனால் இவர்கள் செய்வதென்ன..?! ஏதோ அவர்களது ரெஸ்டாரண்ட்ற்கு டிசைன் எப்படி செய்யலாமென இங்கே பட்டி மன்றம் நடத்தி கொண்டிருப்பது என்ன..?!

"ஊஞ்சல் ஆடுறது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல அகில்.. மன ஆரோக்கியத்திற்கும் ஏற்றது.! எப்படின்னு கேளுடா..??!" அம்பேந்திய வில்லாக புருவங்கள் விரிய பெண்ணவள் ஆர்வமாய் பேசினாள்.

"ஹ்ம்ம்.. வேண்டாம்னாலும் விடவா போற... சொல்லு.. எப்படின்னு சொல்லி முடி..." ஆர்வமே இல்லாமல் வினவினான் அகில்.

"ஹாங்.. அப்படி கேளுடா என் தகரடப்பா ஃப்ரென்ட்டு..!! நாம் ஊஞ்சலில் ஆடுறதனல மனசுல உள்ள நெகடிவ் எண்ணங்கள் எல்லாம் மறைஞ்சு பாசிடிவ் எண்ணங்கள் தோன்றுதாம். அதோட மனசுக்கு ஒருவித புத்துணர்வையும் கொடுக்குது. தெரியுமாடா உனக்கு...?!"

"எனக்கு எப்படிமா தெரியும்..? அதுவும் எரிச்சல் கொடுக்கவே நீ இருக்கும் போது..???! இதை தான் நோயும் நீயே மருந்தும் நீயேன்னு சொல்லுறதோ..??!"

"டேய்... என்னடா சொன்ன...?!"முறைத்து கொண்டாள் பெண்.

"ஒன்றும் இல்லைம்மா தாயே.. நீ சொல்லு. அடியேன் கேட்கிறேன்" இலித்தபடியே சொன்னான்.

"ஹ்ம்மம்ம்... என்ன சொல்லிக்கிட்டு இருந்தேன்...??!" இடுப்பில் இடக்கையை மடக்கியப்படி வைத்து, வலக்கையை இதழோரமாய் தடவியபடியே யோசித்தாள்.

அந்த தோரணையில் கவரப்பட்டவனாய் அவளை ரசித்து பார்த்தான் ரவி. அவளது அசைவுகள் சிரிப்புகள் ஒவ்வொன்றும் அவனிதயத்தின் ஓட்டத்தை வுசெய்யின் போல்ட் ரேஞ்சிற்கு உயர்த்தியது(வுசெய்யின் போல்ட் என்பவர் நம்பர் ஒன் ஓட்ட பந்தய வீரர்). பாவம் அவன். அவளால் எழுப்ப பட்டு கொண்டிருக்கும் உணர்வுகளை அடக்க அரும்பாடு பட்டான்.

"எப்படி.. இந்த சிறு பெண்ணிடம் தலை குப்புற விழுந்தேன்..?! நான் பார்க்காத அழகிகளா... குணவாதிகளா..?! இருந்தும் இவள் என்னை ஈர்க்கிறாளே..! இவள் தான் என் உலகம் என்று மனம் அடம் பிடிக்கிறதே..

அந்த ஒரு நாள் சம்பவத்தை தவிர்த்து இன்று இவளுடனான சந்திப்புகள் ஒன்றும் அந்த அளவிற்கு சொல்லும் படியாக இருந்ததில்லையே.. அவள் அவளாக தான் இருக்கிறாள். நான் தான் எல்லாவற்றையும் நினைவில் வைத்துக்கொண்டு இவளுக்காக ஏங்கி தவிக்கிறேன். ஹ்ம்..ம்..ச்.." சலித்துக் கொண்டான்.

"ஹ்ம்ம்.. சொல்லுடா தேங்காய் மண்டையா.. என்னடா சொல்லிக்கிட்டு இருந்தேன்...??" ஆரு.

"ஹாப்படி.. மறந்துட்டா.. நான் தப்பிச்சேன்". நெஞ்சில் பூத்தது மகிழ்ச்சி பூ.

"நான் சரியா கவனிக்கல ஆரு.." அண்டபுழுகு புழுகினான் அகில்.

"ஹா..ங்... நியாபகம் வந்துட்டு.."இரு கைகளையும் மேலே தூக்கி ஆட்டியபடி ஆர்ப்பரித்தாள்.

"ஹைய்யோ வடை போச்சா...!" மனதில் நொந்து கொண்டான்.

"ஊஞ்சல் பற்றி சொல்லிக்கிட்டு இருந்தேன். சரியா... ??! அப்புறம் ஊஞ்சல் ஆடுவது கடவுளுக்குகூட மகிழ்ச்சி அளிக்கும் விஷயமாம். அதான் கோவில்களில் கூட இறைவனை ஊஞ்சல்களில் வைத்து சீராட்டி விழா கொண்டாடுறாங்க". அந்த ரெஸ்டாரண்டின் ஒவ்வொரு இடமாக சென்று பார்த்துக்கொண்டே சொல்லி கொண்டிருந்தாள்.

"அப்புறம் உனக்கு தெரியுமா...?? பழங்காலத்தில் எல்லா வீடுகளிலும் வரவேற்பறையில் ஊஞ்சல் கட்டி வைத்திருப்பாங்களாம். வீட்டுக்குள் வரும் தேவதைகள் எல்லாம் வீட்டின் முன்னே இருக்கும் ஊஞ்சலில் ஆடப் பிரியப்படுவார்களாம்!

அப்படியே சந்தோசமா ஊஞ்சலில் ஆடிகிட்டே நல்லது செய்வார்களாம் இதெல்லாம் அவர்களது நம்பிக்கையாம்" வியப்புடன் சொன்னாள்.
 




deiyamma

நாட்டாமை
Author
Joined
Sep 6, 2020
Messages
63
Reaction score
101
Location
nagercoil
"அது சரி.. இப்போ எதுக்கு இவ்ளோ விலா வரியா இதை சொல்லுற...?"

"அது..வா...டா..

இந்த ரெஸ்டாரண்ட்ல.. சாதாரணமா போடுற சேர் சோபாக்கு பதிலா... டிசைன் டிசைனா... ஊஞ்சல் கட்டி போட்டா என்ன...?!" கண்கள் மின்ன சிறுப்பிள்ளையாய் கேட்டாள்.

"ஹா ஹா ஹா.. நல்ல ஜோக் போ..." குலுங்கி குலுங்கி சிரித்தான்.

"ஏன்டா.. பேய்க்கு டப்பிங் கொடுக்கிற மாதிரி சிரிக்கிற...??"

சிரித்தபடியே சொன்னான்.. "இது என்ன உன்னோட ரெஸ்டாரண்டா..?! வளைச்சு வளைச்சு பிளான் போடுற... கொஞ்சம் அடக்கி வாசி... நாம இங்க வந்திருக்கிறது பெயின்டிங்ஸ்க்கு தேவையான இன்பர்மேஷன் கலெக்ட் பண்ணுறதுக்கு... அதை விட்டுட்டு.. நீயா லூசு தனமா பிணத்தாத..."

"போடா... லூசு பயலே... அப்படி பண்ணா அழகா இருக்கும்னு தான் சொன்னேன். அதற்காக ஓவர்..ரா பேசாத.." என்றபடி அருகே இருந்த பைலை கொண்டு அவனை சாத்தினாள்.

"ஹே... விடுடி...! ஹைய்யோ அம்மா..! கொல்லுறாளே...!" அவள் கொடுக்கும் அடிகளை வாங்கிய படியே அலறினான்.

இதை தூரத்தில் நின்று பார்த்து கொண்டிருந்த ரவிக்குள் பொறாமை தீ பற்றி கொண்டது. நட்பு கலந்த சகோதர உறவு தான். இருந்தும் காதல் கொண்ட மனம் குரங்காய் தாவியது.

தனக்கானவள் அடுத்தவனை தீண்டுவதா..?! என்ன உறவாக இருந்தால் என்ன..? அது எனக்கு மட்டும் தான்..! மனம் ஸ்திரமாய் முரசு கொட்டியது.

மேலும் நின்று அதை ரசிக்க விரும்பாமல் வேக எட்டுகளுடன் அவர்களை வந்தடைந்தான்.

"ஹலோ மிஸ் அண்ட் மிஸ்டர்.." வார்த்தைகள் அழுத்தமாய் பிறந்தது.

சிரித்த முகமாகவே திரும்பிய ஆரதனாவின் கண்கள் இவனை கண்டதும் பதறியது. என்ன இது..?? இவன் எப்போது வந்தான்.?? எதற்கு இத்தனை பாசமாய் முறைக்கிறான்...!

"ஹலோ சார்" என்றபடி அகில் அவனுடன் கை குலுக்கி கொண்டான்.

"ரொம்ப சீக்கிரமா வந்துடீங்களா அகில்.."

"நோ சார். 10 மினிட்ஸ் தான் ஆச்சு சும்மா சுத்தி பார்த்துட்டு இருந்தோம்."

"ஓ. உங்களுக்கு தேவையான ஐடியாஸ் கிடைச்சுதா... ??"

"ஐடியா வா...?! நான் எங்க பார்த்தேன்..? இவள் தான் கிறுக்கு தனமா பேசியே ரம்பம் போட்டுக்கிட்டு இருந்தாலே..." கண்களால் முறைத்தான் ஆருவை.

"ஹீ ஹீ.." இப்போ இவன் எதுக்கு வெட்டவா குத்தவான்னு பார்க்கிறான்..?!
அவனை சமாளிக்கும் பொருட்டு ஆருவே பதில் சொன்னாள்.

"இன்னும் கொஞ்சம் பார்த்துட்டு அப்புறம் சொல்லுறோம் சார்."

"ஓ. கே. நீங்க பாருங்க. எனக்கு வேற வேலை இருக்குது. மதியம் உங்க கூட ஜாயின் பண்ணிக்கிறேன்.." சொன்னபடி அவன் சென்றுவிட்டான்.

"சரிடா.. இங்கே வா. இதை பிடி" என்று ஒரு பைலை அவனிடம் கொடுத்தவள். "ஹ்ம்ம் முதல நான் போறேன்.. பின்னாடி நீ வா. நான் என்னோட ஐடியாவை நோட் பண்ணிக்கிறேன். அதே போல நீயும் உன்னோடதை நோட் பண்ணிக்கோ..." சொல்லிவிட்டு அவள் ஒவ்வொரு இடமாக பார்க்க ஆரம்பித்தாள்.

அகிலும் அவளுக்கு பின்னே தான் சென்று கொண்டிருந்தான். அவனுக்கு மேனேஜரிடம் இருந்து அழைப்பு வரவும் உடனே வேறு ஒரு வேலை சம்மந்தமாக கிளம்ப வேண்டி வந்தது. சரி ஆருவிடம் சொல்லி விட்டு கிளம்பலாம் என்றால் அவளை காணவில்லை. அங்கிருந்த அதிகாரி ஒருவரிடம் தான் கிளம்பி விட்டதாக அவளிடம் சொல்லுமாறு தகவல் சொல்லி விட்டு கிளம்பிவிட்டான்.

ஒவ்வொரு இடமாக சென்று பார்த்துக்கொண்டிருந்த ஆருவிற்கு அலுப்பு தட்டவே இல்லை. எல்லாம் வெகு நேர்த்தியாக மிகவும் ரசித்து வடிவமைத்தது போல இருந்தது. இவள் வரைந்து கொடுக்கும் பெயின்டிங்ஸ் மட்டும் மாட்டினால் இந்த இடமே கூடுதல் அழகோடு மிளிரும் என்பதில் துளி அளவேணும் ஐயமில்லை.

ஆருவிற்குள் உற்சாகம் குமிழிட்டது. ரசித்தபடியே அந்தந்த இடத்திற்கு ஏற்றாற்போல் மனதில் வரைந்து கொண்டாள்.

நேரம் செல்லவே ஆருவிற்கு ஏதாவது குடித்தால் நன்றாக இருக்கும் போல தோன்றவே திரும்பி வந்த வழியே செல்லலானாள்.

வருகின்ற வழியில் அங்கிருந்த தோட்டம் அவளை வெகுவாக கவர்ந்தது. உயர்ரக செடி கொடிகள் மட்டுமில்லாமல் சாதாரண மக்கள் வீட்டில் வளரும் செடிகள் முதற்கொண்டு அங்கே அலங்கரித்து கொண்டிருந்தது.

அதுவும் அந்த ஜாதி மல்லி பூ செடி அவளை சுண்டி இழுத்தது அதன் மணத்தால்.ஆழ்ந்து மூச்சிழுத்து அனுபவித்தாள் மங்கை.

"ஜாதி மல்லி பூச்சரமே...
சங்கத்தமிழ் பாச்சரமே...
ஆசையென்ன ஆசையடி..
அவ்வளவு ஆசையடி...

எ..ன்..னெ..ன்..ன முன்னே வந்து கண்ணே நீ கொஞ்சம் கேட்டுக்கோ...!


ஹ்ம்மம்ம்..மம்ம்ம்ம்...."

இதழ்கள் பாடலின் வரிகளை முணுமுணுக்க... பெண்ணவள் தளிர் கரங்களால் பூக்களை தென்றலாய் வருடினாள். குனிந்தமர்ந்து நாசியில் பூக்களின் மணத்தை நுகர்ந்தாள். கண்மூடி அதை உள்ளிழுத்தால்.

கருப்பு வெள்ளையாய் அந்த நிழலுருவம் வந்து நின்றது.

தன் பின்னே வெகு அருகில்... அத்தனை நெருக்கமாய் அவன் வந்து அமர்ந்தது கூட உணராமல் அந்த நிழல் தேஜாவூ விடம் மனம் லயித்து போயிருந்தாள்.

"பூக்கள் கூட வெட்கப்படும்
உன் விரல் நுனி தீண்டுகையில்...
அப்படி இருக்கையில்..
உன் நாசிநுனி முத்தம் தாங்குமா...?
பெண்ணே.. உன்னால் நான் பூக்கிறேன்..
மேலும் மேலும்...
மணமாய்... மயாஜாலமாய்..."


மீசையின் நுனிகள் செவியினை முத்தமிட... உடலில் மின்சார தூண்டல். காந்தமாய் கவர்ந்திழுக்கும் அந்த குரல் சொன்ன வரிகளில் இருந்த அர்த்தம் பெண்ணவளை சரித்தது. சட்டென கேட்ட அந்த குரலால் பட்டென திரும்பினாள்... அங்கே வெகு அருகில் அவன். ரவி...

கண்கள் கவி பாட.. இதழ்கள் நெருக்கத்திற்காக அழைக்க.. பெண்ணவள் அப்படியே அதிர்ந்து போய் அமர்ந்திருந்தாள்.
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
நான்தான் First,
டெய்யம்மா டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
டெய்யம்மா டியர்
 




Shruthi subbu

இணை அமைச்சர்
Joined
Jul 5, 2021
Messages
938
Reaction score
887
Location
Bangalore
ஊஞ்சல் விஷயம் சூப்பர் 🤩🤩🤩🤩
இன்னும் லவ்வே சொல்லல அதுகுள்ள ரொமான்ஸ் பண்ணா அந்த புள்ள பயப்புடாது......😳
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top