• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

அழகியின் "மோகனப் புன்னகையில்" விமர்சனம் ?

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
அழகியின் கைவண்ணத்தில் மற்றுமொரு காதல் சித்திரம் “மோகனப்புன்னகையில்...” 90 களில் நடந்த கதை...அதை அப்படியே உணரவைத்து நம்மை அந்த காலகட்டத்துக்கே கொண்டு சென்று விட்டார் அழகி.

காதலர்கள் தனியே சந்தித்துக் கொண்டதில்லை. களவு மொழி பேசிக்கொண்டதுமில்லை. சந்தித்துக் கொண்டவை என்னவோ இரு ஜோடி நயனங்கள் மட்டுமே. ஆனால் அதற்கே ஆடித்தீர்த்து விட்டார் அரண்மனை. ஆட்டத்தின் முடிவில் மாறிப்போயின காட்சிகள். காட்சிப் பிழையைத் திருத்தி தன் காதலாக்கிக் கொண்டானா? நாயகன் என அழகி தன்னுடைய பாணியில் அழகாக சொல்லியிருக்கிறார் கதையில்....

மிகவும் லாவகமாக கையாள வேண்டியக் கதைக்கரு. அதை தன் எழுத்தால் குறையின்றி சிறப்பாக செய்து அரண்மனைக்காரனையும், நாட்டியப்பேரொளியையும் நம் கண் முன்னே உயிரோட்டமாக உலாவ விட்டு வேடிக்கை பார்த்த அழகியின் எழுத்துக்கு முதலில் ஒரு சல்யூட்...

தன் குறையாத கம்பீரத்திலும்,
ஒரு சோகம் இழையோட அறிமுகமான விஜயேந்திரன், தன்னவளின் நிலையை கரிகாலனின் கடிதம் மூலம் அறிந்த பின் எடுக்கும் அதிரடி பாய்ச்சல் ஆஹா...கைவிட்டு போன தன் சொர்கத்தை கைப்பற்ற துடிக்கும் காதலின் தவிப்பு அது. அரண்மனைக்காரனுக்கான தகவலை கடிதம் மூலம் கொண்டு வந்த ஸ்டீஃபன் எனக்கு தேவதூதனாகவேத் தெரிந்தான்.

தன் ஐந்து வருடக் காத்திருப்பை காதலாக திகட்டத் திகட்ட தன் நாட்டியப் பேரொளிக்கு கடத்திய காதல் தேவன் அவன்...
நாட்டியப் பேரொளியின் விஜியாக, நம்பியின் மருமகனாக , ஸ்டீபஃனின் உடன்பிறவா சகோதரனாக, கரிகாலனின் ராஜாவாக, வளர்மங்கையின் அத்தானாக அரண்மனைக்காரன் நம்மை கவர்ந்த இடங்கள் அதிகம்...

சுமித்ரா... காரணமே இல்லாமல் தண்டிக்கப்பட்ட அப்பாவி ஜீவன். ஆனால் அதெல்லாம் முன்பிறவியோ என்னும் வகையில் நீண்ட நெடிய நாட்களுக்கு பிறகு என்றாலும் அரண்மனைக்காரனின் மொத்த காதலுக்கும் ஏகபோக உடைமைக்காரியான அதிர்ஷ்டசாலி...தன் நாட்டியத்தின் மூலம் அரண்மனைக்காரனோடு சேர்த்து நம்மையும் கட்டிப்போட்ட நாட்டியப்பேரொளி...

பெயரில் மட்டும் ‘அமிழ்தத்தை’ வைத்துக்கொண்டு பேச்சில் கசப்பை காட்டும் அதுவும் சுமித்ராவிடம் மட்டும் கசப்பைக் காட்டும் அமிழ்தவல்லி அம்மா. அரண்மனையின் சட்டதிட்டம், சம்பிரதாயம் என்று ஏகத்திற்கும் நம் பிளட்பிரஷரை எகிறவைத்த கதாபாத்திரம். கடைசியில் வயிற்று வாரிசுக்கென்றாலும் மருமகளுக்கு சோறு ஊட்டி விட்டதற்காக இந்தம்மாவை மன்னித்து விட்டிடலாம்.

ஆனால் விஜயனின் திருமணத்தை முன்னின்று நடத்தி நம் மனதில் இடம்பிடித்த கோதை அம்மா, தன் மகளின் ஸ்டீஃபன் மீதான காதல் தெரிந்த உடன் அடிச்சாங்க பாருங்க ஒரு ஸ்டண்ட், ஐயோ! இந்த அம்மாவா இப்படி ன்னு நான்ஆச்சர்யபட்டுப் போனேன்.... அப்படிப் பார்த்தால் மங்கையின் அப்பா கண்ணபிரான் பாராட்டப்பட வேண்டிய கதாபாத்திரம்.

தன் அன்பைக்கூட அதட்டியே வெளிப்படுத்தும் தில்லை வடிவு கதாபாத்திரமும் மனதில் நின்ற கதாபாத்திரமே...

ஸ்டீபஃன்- மங்கை திருமணத்தால் சுமித்ரா வாழ்க்கையின் நிம்மதி குலையும் என்றால் அந்த திருமணமே வேண்டாம் என்று சொன்ன கரிகாலன்- ரோஸி தம்பதியினரின் குண இயல்பு பிரம்மிக்க வைத்தது.

இந்த அரண்மனைக்காரர்கள் தங்கள் சம்பிரதாயம், தகுதிக்கு ஒத்துவராத காதலை தடுப்பதில் மும்முரமாக இருக்க அவர்களின் வாரிசுகளோ தங்களின் காதலில் உறுதியாக நிற்கிறார்கள். அதுவும் நிச்சயத்திற்கு வந்த ஸ்டீபஃனை தனிமையில் சந்தித்த மங்கை அவன் சொன்ன வார்த்தைக்காக குடுத்தா பாருங்க ஒன்னு...ஹஹஹ...அரண்டு போய்ட்டேன் நான்...
ஆனால் எங்கள் இருவருக்கிடையே இருந்து எங்களை பிரிக்க நினைப்பது இந்த சாஸ்திர சம்பிரதாயம் தானே...அதனால் அது எனக்கு தேவையில்லை மங்கையின் வழியிலே எல்லாம் நடக்கட்டும் நின்று விட்டுக்கொடுத்து நின்றானே ஸ்டீஃபன், மலைத்து போய்ட்டேன் நான். உடன்பிறவா சகோதரன் என்றாலும் அவன் அரண்மனைக்காரனின் தம்பியாயிற்றே. பின்னர் தன் அண்ணனைப் போலத் தானே அவனும் இருப்பான்.

இம்முறை ஆடிக்காருக்குப் பதில் வந்த அம்பாசிடரும் முன்னவரின் பணியை செவ்வனே செய்தது சிறப்பு.

ஏற்கனவே நான் கூறுவேன் அழகியின் மிகப்பெரிய பலம் உரையாடல்கள் என்று. அதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார் அழகி. இந்த புள்ளையும் நாமளும் ஒன்னா சேர்ந்து தானே எஸ்.எம். தளத்தை சுத்தி சுத்தி வந்தோம். ஆனால் இந்த புள்ளைய மாதிரி அட்லீஸ்ட் ஒரு paragraph கூட நம்மால எழுத முடியலையே என்று என்னை பொங்க வைக்கும் எழுத்து...

அங்கங்கே பாரதியாரின் பாடல்களை அழகி எடுத்து கையாண்டு இருந்த விதமும் அதை கதையோடு பொருத்தி கூறிய அதன் விளக்கமும் நம்மை அறியாமலே சபாஷ் போட வைத்த தருணங்கள்.

மொத்தத்தில் அழகியின் காதல் நாயகர்கள் வரிசையில் அரண்மனைக்காரனும் அழுத்தமாக தனது முத்திரையை பதித்து விட்டான் என்று சொன்னால் அது மிகையல்ல...@அழகி
 




Last edited:

Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
Valakam pola sabaash review.. sooper suvi kaa.. ???

Audi paniyai ambassador sevvane seithatha.. ?? sema ponga

Oru para elutha mudiyala nu build up pannittu para para vaa nethula irunthu pottutu irukkeenga kaa.. ??? vaalthukal neengalum naalai oru author raa maara
 




Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,505
Reaction score
29,240
Age
59
Location
Coimbatore
சுவிதாவின் சிறப்பே கதையை அழகாக சுருக்கமாக சொல்லி படிக்கும் ஆவலைத் தூண்டுமாறு விமர்சனம் செய்யும் அழகிய எழுத்து. வாழ்த்துகளை அழகியோடு சுவிதாவிற்கும் சொல்லிக் கொள்கிறேன்.
 




Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
Suvi ellarum serndhu dhaan suthinom. Azhagi and laxu writers, neenga lengthy aa reviews ezhudhreenga.. naanu ?
ஹஹஹ... அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே தோழியே...தோழியே...

ஒரு வரின்னாலும் நச்சுன்னு கமெண்ட் போட நித்யூ வை மிஞ்ச ஆளுண்டா??
 




Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
Valakam pola sabaash review.. sooper suvi kaa.. ???

Audi paniyai ambassador sevvane seithatha.. ?? sema ponga

Oru para elutha mudiyala nu build up pannittu para para vaa nethula irunthu pottutu irukkeenga kaa.. ??? vaalthukal neengalum naalai oru author raa maara
பத்தி பத்தியா விமர்சனம் போட்டாலும் ஸீனா வை மாதிரி மயக்கும் எழுத்துக்கும் எனக்கும் பல கிலோமீட்டர்ஸ் தூரம் செல்லம் ?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top