• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

இனிமே நீ குடிப்ப?! 8 final

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Soundarya Krish

முதலமைச்சர்
Joined
Sep 17, 2018
Messages
10,587
Reaction score
27,628
Location
Home Town
ஆச்சரியத்திலிருந்து வெளிவராதவளை உலுக்கி ஓர் புடவையை அவளிடம் கொடுத்து அணிந்து வரச் சொன்னான். அவள் புரியாது விழித்தாள். அதற்கு அவனோ, "சரியா பதினெட்டு வருசத்துக்கு முன்னாடி எனக்காக எங்க அக்கா ஒரு விலைமதிப்பற்ற ஒரு புனிதமான மாசுமறுவில்லாத நல்ல மனசுடைய ஒரு மரகத கல்லை எனக்குப் பரிசா கொடுத்தாங்க! அதுக்கு என்னுடைய வாழ்க்கையில் முக்கிய பங்கு இருக்குனு சாரி சாரி.. என் வாழ்க்கையே அது தானென்று நான் இப்போது தான் புரிந்துகொண்டேன்."

"அம்மா குடுத்தாங்களா? எங்க மாமா அந்த மரகதக் கல்?"

"நீ போய் இந்த சேலையை கட்டிட்டு வா. நான் உனக்கு அதை காட்டுறேன்."

அதையேற்று அவளும் அந்த சேலையை வாங்கிக் கொண்டு சென்றாள். அவள் தயாராகி வருமுன்னர் அவன் செய்ய வேண்டிய மீதி வேலைகளைச் செய்தான். அவள் அவனளித்த சேலையில் கிளம்பி வந்தாள். அவள் அழகை ரசித்தவன் மெய்மறந்தான்.
nayanthara-in-saree-photos-9.jpg

"மாமா சேலை கட்டிட்டு வந்தா அந்த மரகதக் கல்லை காட்டுவேனென்று சொன்ன! காட்டு மாமா நான் மரகத கல்லைப் பார்த்ததே இல்லை மாமா!" என்று அவனிடம் கொஞ்சினாள்.

அவள் சலுகையாய் கொஞ்சியதில் மீண்டெழுந்த விதுரன் அவளை அழைத்துச் சென்று அவளுக்காக அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் அவளை அமர்த்தினான். பின் அவள் காலடியில் அமர்ந்து தன் கைப்பேசியை எடுத்தான். பொறுமையிழந்த மாதுவோ,"மாமா நான் என்ன கேட்கிறேன்! நீ என்ன செய்துகொண்டு இருக்கிற! மாமா..." என்று படபடத்தாள்.

அவளது படபடப்பையும் ரசித்தான் அந்த காதல் கள்வன்‌. "பொறுடா! காட்டுறேன்..." என்று அவளை அமைதி படுத்திவிட்டு அந்த மரகத பட்டுடுத்திய அழகு மரகதச் சிலை முழுதாக தெரிய அவள் காலடியில் அவன் தெரிய ஒரு சுயமியை எடுத்தான். பின் அவளிடம்,"என்னுடைய அந்த தூய்மையான மரகதக் கல் கூடத்தான் இப்போ நான் பேசிட்டுருக்கேன் டீ!" என்று கூறி அவளருகில் அவனும் அமர்ந்து ஊஞ்சலைக் காலால் உந்தி ஆட்டிவிட்டான். அவன் திடீர் செயலில் அவள் அதிர்ந்து தெளியும் முன்னரே அவளை மீண்டும் அதிரவைத்தான் விதுரன் அவள் மடியில் தலைசாய்ந்து. அதில் பதறிய மாது தன் வலது காலை கீழூன்றி ஊஞ்சலை நிறுத்த எத்தனிக்கையில் அவன் அவளை விட விரைந்து அவள் பாதத்தைப் பற்றினான் தன் வலக்கையால்.

அவன் மடி சாய்ந்ததில் அவளில் உண்டான குறுகுறுப்பு அவனின் இச்செயலில் வார்த்தையில் விவரிக்க முடியாத ஓர் உணர்வு பிரவாகத்தால் அவளது உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரை கூசி சிலிர்த்தது. ஆயிரம் தடவை தொட்டு பேசிய தன் மாமன்தான் என்றாலும் அவனது இந்த காதல் அவதாரத்தை ஏற்க முடியாமல் என்பதை விட ஏற்கத் தெரியாமல் தவித்தாள் அந்த பேதை. அவள் நிலை உணர்ந்த விதுரனோ அவள் மடிக்கும் பாதத்திற்கும் விடுதலை தந்து எழுந்தான்.

மேல்மாடத்தின் ஒரு ஓரத்தில் பூக்குவியலிற்குள் கிடத்தப்பட்ட மேசையில் அழகிய கேக் வீற்றிருந்தது. அதை நோக்கி அவளை அழைத்துச் சென்று,"இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் பொண்டாட்டி!!" என்று கூறி அவள் பிறை நுதலில் தன் காதல் சாசனம் எழுதி இதழ் ரேகை பதித்தான் மாதுவின் காதல் அடிமை. கேக்கை வெட்டி அவனுக்கு ஊட்டத் தயக்கத்துடன் அவனை நோக்கி கேக்கைக் கொண்டு சென்றாள்.

"எனக்கு நெத்தியாலா சாப்பிடுகிற பவர்லாம் இல்லைம்மா! உன் ஆசை பட்டியலில் அதுவும் இருக்கா?" என்று பயந்ததுபோல் நடித்தான் விதுரன்.

அவன் சொன்னதும் அவனை நிமிர்ந்து பார்த்த மாது தன் கை அவன் நெற்றியைக் குறிவைத்திருப்பதைக் கண்டு சிரித்தாள். பின் தயங்கிய படியே அவன் வாயருகில் கொண்டு சென்றாள். அவள் கையை பற்றிய விதுரன் அவள் முகத்தையே ஊன்றிப் பார்த்தான். எதுவோ தோன்ற அவளும் அவனைப் பார்த்தாள். அவன் விழிகளில் எதை உணர்ந்தாளோ சட்டென்று அவன் மார்பில் தன் முகம் புதைத்தாள்.

"என்னாச்சு டீ பொண்டாட்டி மாமா முகத்தைப் பார்க்க மாட்டிக்குற என் மூஞ்சி அவ்வளவு கேவலமாகவா இருக்கிறது?"

"என்னன்னு தெரியலை மாமா! நீ கையை பிடிக்கும் போது உன் கையை இறுக்கிப் பிடிச்சிக்கனும்னு தோனுது ஆனால் ஏதோ ஒன்னு தடுக்கிறது! நீங்க மடியில் படுக்கும்போது உங்க தலை முடியைக் கோதி விடனுமென்றுத் தோனும் ஆனால் மறுபடியும் ஏதோ வந்து தடுக்கும். இப்போ கூடப் பாருங்க உங்க முகத்தை பார்க்கனும்னு நினைக்கிறேன் ஆனால் முடியலை!" என்று வருந்தினாள்.

"அடி மக்கு அது வெக்கம் டீ! இந்த மாமன் கிட்ட சொல்லிட்டைல நான் பார்த்துக்கொள்கிறேன் இனி!" என்று அவளை சமாதானம் செய்து அவள் நீட்டிக் கொண்டிருந்த கேக்கை சுவைத்தான். இடையிடையே அவள் விரல்களையும் தான்.

மாதுவின் பிறந்த நாளை இனிமையாக இருவரும் சேர்ந்தே கொண்டாடி இரண்டு வருடம் கழித்து தங்கள் மதுராக்குட்டிக்கும் பிறந்தநாள் கொண்டாடத் தயாராகினர். தன் வாழ்க்கையின் நடந்த சம்பவங்களையும் தன் மனைவி தன் வாழ்க்கையை வரமாக வளமாக மாற்றியதையும் அசைபோட்டபடியே வீடு வந்தான் விதுரன்.

ஆசையும் மகிழ்ச்சியும்
போட்டிப் போட்டுச் சாமரம் வீச...
ஆச்சரியமும் குழப்பமும்
முட்டி மோதி பதற்றம் பூச...
விரைவாய் வாசல் வந்தேன்

என்னவளிடம் காதல் பேச...

வாசலில் அழைப்பு மணியை அழுத்தும் பொழுதே ஓர் அற்புத உணர்வு வந்து அவனை ஆட்கொண்டது. ஆவலுடன் காத்திருந்தான் மனைவியின் காதல் கனிந்த முகத்தைக் காண. அவன் ஏக்கத்தைத் தீர்க்கும் காதல் தடாகமாய் வந்து கதவு திறந்தாள். வாசலில் நின்றவனைச் சிரித்த முகமாக வரவேற்றுத் தேநீரும் சிற்றுண்டியும் அளித்துவிட்டு அவனுடன் சிறிது நேரம் வழக்கமான கலகலப்புடன் பேசினாள். பின் அவனிடம் சொல்லிவிட்டுச் சமையல் வேலைகளைக் கவனிக்கச் சென்றாள். அவனும் குளித்து இளைப்பாறி வரச் சென்றான்.

குளித்து முடித்து வந்து வரவேற்பறையில் அமர்ந்தான். அவன் முகத்தில் மனைவி தன்னிடம் பேசியதில் மகிழ்ந்துபோய் இருந்தது. அவன் மகளும் அவனை இடித்துக்கொண்டு வந்து ஃசோபாவில் அமர்ந்தாள். மகளின் செயலை இரசித்துச் சிரித்தவன்,"என் குட்டி தங்கத்துக்கு என்ன வேணுமாம்?"என்று கொஞ்சினான்.

"டின்னர்க்கு வெளிய கூட்டிட்டுப் போங்க டாடி!" என்று கட்டளையிட்டாள் மதுரா.

"டின்னரா? ம்ம்ம்.. சன்டே போகலாம் குட்டி!" என்றான் விது.

"டாடி! நீங்களா கூட்டிட்டுப் போனால்தான் உங்கள் சாய்ஸ். பட் இது வந்து ஃபீஸ், உங்கள் மாதுவை உங்கள் கூட பேசவச்சதுக்காக நீங்க எனக்கு தரப்போகிற ஃபீஸ்! அதுனால நான் தான் என்றைக்கு போகனும்னு சூஸ் பண்ணுவேன்!" என்று வழக்காடினாள் மதுரா.

"பேச வச்சியா??"

"ஆமா! அதுவும் ப்ளாக் மெயில் பண்ணி!"

"ப்ளாக் மெயிலா?? என்னடா சொல்ற குட்டிமா!"

"ஆமாப்பா ப்ளாக் மெயில் தான். அன்றைக்கு ஒரு ஃபோட்டோ காட்டுனீங்களா நீங்க அதை நான் அம்மாவிடம் காட்டினேன். அதான் அம்மா உங்க கிட்ட பேசாமல் இருந்தாங்க.. அதுனால அவங்களை அப்பாகிட்டப் பேசலைனா அந்த ஃபோட்டோவ ஸ்டேடஸ் வச்சி 'மை அம்மா பை மதுரா'னு ஸ்டேட்டஸ் போடுவேனென்று மிரட்டினேன்! உடனே உங்க கிட்ட பேசிட்டாங்க! எப்படி என் ப்ளான்?" என்று மார்தட்டிச் சிரித்தாள் மதுராக்குட்டி.

"எந்த ஃபோட்டோ டா குட்டி?"

"அதான்ப்பா மாதும்மா கிராமத்தில இருக்கும் போது எடுத்தது!"

D2WUsL3U0AE_Ayu-683x1024.jpg

'ஹா... ஹா... ஹா... அப்போது இன்றைக்குப் பாம்பு படுக்கை கன்பார்ம்!' என்று சிரித்த மனசாட்சி விதுரனின் முறைப்பில், 'குறைந்தபட்சம், தேனீ படுத்கையாச்சு உண்டென்று நினைக்கிறேன்!' என்று கூறிவிட்டு ஓடியது.

இரவு உணவு வரை இனிதாகவே அனைவருக்கும் பொழுது கழிந்தது. சீலா தன் மகளின் மனமாற்றத்தில் மகிழ்ந்தாலும் விதுரனிற்கு அறிவுரை வழங்கவும் மறக்கவில்லை. தன் அறிவுரையை முடித்துக்கொண்ட சீலா இறுதியில்,"இனிமே நீ குடிப்ப?!" என்று கேட்டார். அவர் கேட்ட மாத்திரத்தில் விதுரனின் தலை வேகமாக இல்லையெனும் விதமாக ஆடியது.

அனைவரும் உறங்கச் சென்றனர். சீலா மதுராவை தன்னுடன் படுக்க அழைத்துச் சென்றார். அறைக்குள் வந்த விதுரன் தலையணையை மட்டும் நன்றாக உதறி எடுத்துக்கொண்டு கதவைத் திறக்கவும் மாது உள்ளே வரவும் சரியாக இருந்தது. அவனைக் குழப்பமாகப் பார்த்த மாது," என்ன மாமா? எங்க போறீங்க? அதுவும் தலகானியோட..." என்று கேட்டாள்.

அவள் கேள்வியில் விழித்த விதுரன்,"இல்லை மாதும்மா நீ பாப்புக்காக தான என்கிட்ட பேசுற! இப்போது பாப்பாதான் இல்லையே! நீயும் பாவம் சோபாவில் கஷ்டப்பட்டு படுக்கனும். அதான் நான் வேண்டுமானால் வெளியில்.." என்று கூறியவனை இடைமறித்தது மாதுவின் சிரிப்பு.

அவன் அவளைப் புரியாமல் பார்க்க அவளோ,"மாமா அன்றைக்கு எறும்பை வைத்து விளையாண்டது மாதிரி இன்றைக்கும் பண்ணுவேன் பயந்துட்டியா? அய்யோ ஆனால் உண்மையிலேயே வேறவொன்னு ப்ளான் பண்ணேன் அதை செயல்படுத்துகிறதுக் குள்ள உன் தரப்புல ஒரு திடீர் திருப்பம் வந்து தீர்ப்பு மாறிருச்சு. சோ! நீ தப்பிச்சுட்ட!" என்று கூறிக் கண் சிமிட்டினாள்.

"அப்படி என்னாச்சு?"

மத்தியான நேரம் மாதுவும் சீலாவும் வரவேற்பறையில் அமர்ந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தனர். மது விளையாடிய சோர்வில் உறங்கிக் கொண்டிருந்தாள். அப்போது அழைப்புமணி அழைத்தது. யாரென்று பார்க்க கதவைத் திறந்தவள் பயத்தில் வெளிறினாள்.
 




Soundarya Krish

முதலமைச்சர்
Joined
Sep 17, 2018
Messages
10,587
Reaction score
27,628
Location
Home Town
யாரோ ஒருவன் தலையில் தலைக்கவசமுடனும் கையில் இனிப்பு பெட்டியுடனும் நின்றிருந்தான். அவளுக்கு காலையில் செய்தியில் வந்த சம்பவம் நினைவில் வந்தது. யாரோ ஒருவன் தலைக்கவசத்துடன் வந்து நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றதாகவும். தெரிந்தவர் போல் மயக்க மருந்து இனிப்பு பெட்டியைக் கொடுத்து ஏமாற்றியதாகத் தகவல் என்று செய்தியாளர் சொன்னது மனதில் வந்தது. சீலாவிற்குச் சைகை செய்து அவனிடம் பேச்சுக் கொடுக்க சொல்லிவிட்டு உள்ளே சென்றாள்.

வரும்பொழுது ஒரு கையில் மிளகாய்ப் பொடியும் மற்றொரு கையில் துடைப்பக்கட்டையையும் எடுத்து வந்தாள்.அவனும் இனிப்பு பெட்டியையும் நீட்டியவாறே உள்ளே வந்தான். உள்ளே நுழைந்தவனைத் துடைப்பத்தாலேயே நான்கு போடு போட்டு தலைக்கவசத்தை கழட்ட வைத்து மிளகாய்ப் பொடியைக் கண்களுக்கு அருகில் கொண்டு சென்றாள். அவன் முகத்தைப் பார்த்துத் திகைத்தனர் இருவரும்.

"ராஜாண்ணா! அய்யோ மன்னிச்சுருங்க அண்ணா! நான் ஏதோ திருடனென்று நினைச்சுக்கிட்டு இப்படியெல்லாம் பண்ணி சாரிண்ணா! எதுக்குண்ணா ப்ளாட்டுக்கு ஹெல்மெட் போட்டுட்டே வந்தீங்க அதான் குழம்பிட்டேன்..." என்றவள் சற்றென்று தன் பேச்சை நிறுத்தி அவனை ஊன்றிப் பார்த்தாள்.

"என்னண்ணா? இது கோலம்! ஆம்பளைங்க இப்படி இருந்தால் அது எங்க ஊரப் பொருத்தவரை ஏதோ பெரிய தப்பு செஞ்சி தண்டனை வாங்கிருக்கான்னு சொல்லுவாங்க! நீங்க எதற்கு இப்படி இருக்கீங்க!"

"அது வந்துமா..."

"இருப்பா! முதலில் அந்த பாத்ரூம்ல மூஞ்சியை ஒழுங்கு பண்ணிட்டு வா!" என்று விரட்டினார் சீலா. ஆம் எந்த நிலையில் தன் நண்பனைப் பார்க்கக் கூடாது என்று விது குடித்தானோ, அதே நிலையில் மாறு மீசை மாறு தாடியோடு வந்திருந்தான். தன் நண்பனைக் குற்றமற்றவன் என்று நிரூபித்து அவன் குடும்பத்தில் தன்னால் எழுந்த குழப்பத்தைச் சரி செய்யும் வேகம் அவனில்.

முகத்தில் முழுதாக சவரம் செய்து வந்தவனை அமர்த்தி காபி கொடுத்தனர் தாயும் மகளும். அவன் காபியை அருந்தும் வரை அமைதி காத்தனர் இருவரும்.

"எதற்குப்பா அப்படி ஒரு கோலத்தில் வந்த? என்னாச்சு?" என்று வினவினார் சீலா.

"அன்றைக்கு மட்டும் நம்ப விது குடிக்கவில்லையென்றால் நான் இப்படித்தான் ஒரு மாசம் ஆபிஸ் போயிருப்பேன்ம்மா! எனக்காகத்தான் விது குடித்தான். அதுவும் ரொம்ப கம்மியாத்தான் குடிச்சான். பட் ஃபர்ஸ்ட் டைம்ல அதான் கொஞ்சம் பிரச்சினை ஆகிருச்சு." என்று நடந்தது அனைத்தையும் விளக்கிக் கூறினான். அதைக்கேட்டவுடன் மாதுவின் மனதில் விதுவின் மேலிருந்த கோபம் வருத்தம் ஊடல் எல்லாம் பாறையில் அடிக்கும் அலையாய் சிதறித் தெறித்து மறைந்தது.

விதுரனிடம் நடந்ததைக் கூறி முடித்த மாது அவன் தோளில் சாய்ந்தாள். பின்பு எதுவோ நினைவு வந்தவளாக அவள் சாய்ந்திருந்த அவன் தோளிலேயே தன்னால் இயன்றவரை அழுந்த கிள்ளினாள். அவளை விட்டுத் துள்ளி விலகினான்.

"இப்போ என்னடி!"

"மதுக்குட்டி கிட்ட எதுக்குடா மாமா அந்த ஃபோட்டோவை காட்டி உங்கம்மானு சொன்ன? பக்கி! அவ என்கிட்ட வந்து அந்த ஃபோட்டோவை காட்டி வாட்சப் ஸ்டேட்டஸ் போடுவேன்னு சொல்லுறா!!"

"ம்ம் அது நீ தான... ஊரில் காட்டுப்பக்கம் திரியும் போது இப்படித்தான இருந்த! ஆயிரம் சொல்லு எனக்கு இந்த அப்கிரேடட் வெர்சனை விட அந்த ஓல்டர் வெர்சன் மாதுவைத்தான் ரொம்ப பிடிக்கும்!!" என்றவாறே அவளைத் தூக்கிச் சுற்றினான்.

"முதலில் என்னை இறக்கி விடுங்க மாமா!" என்று சிடுசிடுத்தாள்.

"எதுக்குடி மறுபடியும் ஆங்கிரி பேர்டா (angry bird) மாறிட்ட?" என்று அவளை இறக்கி விட்டான் விது.

"நீங்க என்ன பண்ணுவீங்கன்னு தெரியாது! ஆனால்..."

"பத்து மாசத்தில் மதுரா குட்டிக்கு விளையாடத் தம்பி வேண்டும்.. அதான!" என்று பல்லைக்காட்டினான்.

"ஒரு ஆணியும் தட்ட வேண்டாம்... போய் உங்க பொண்ணுக்கிட்ட இருந்து அந்த ஃபோட்டோவை எப்படியாச்சும் வாங்கிட்டு வாங்க! இல்லாவிட்டால் என் பனிஸ்மன்ட்ஸ் பத்திதான் உங்களுக்கே நல்லா தெரியுமே!" என்று சிரித்தாள்.

"என்னது மறுபடியும் பனிஸ்மென்டா? தெய்வமே இரு காலையில் உன் கையில் அந்த ஃபோட்டோ இருக்கும். பனிஸ்மென்ட்லாம் எதற்கு வேஸ்ட் பண்ணுறீங்க?" என்று இறங்கிய குரலில் பேசினான்.

"பனிஸ்மென்ட்ட யூஸ் பண்றதா வேஸ்ட் பண்றதானு நான் முடிவு பண்ணிக்கிறேன். நீங்க போய் ஃபோட்டோவை எப்படி வாங்குவதென்று இல்லாத உங்க மூளையைத் தட்டி தட்டி முடிவு பண்ணுங்க... போங்க!" என்று கூறி அவனை அறைக்கு வெளியே தள்ளிக் கதவடைத்தாள்.

அவளது திடீர் தாக்குதலில் நிலை தடுமாறி கீழே விழப்போனவன், அருகிலிருந்த மேசையைப் பற்றி நின்றான். பின் பெருமூச்சுடன் சென்று இருக்கையில் அமர்ந்து மகளைச் சமாளிக்கத் திட்டமிட்டான். அவன் சிந்தனை சிற்பியாக மாறி தன் மூளைச் செல்களை செதுக்கிக் கொண்டிருப்பதை அவனுக்குத் தலையணையும் போர்வையும் கொடுக்க வந்த மாது பார்த்து விழுந்து விழுந்து சிரித்தாள். அவள் சிரிப்பொலி அவன் செதுக்கலைத் தடைசெய்து அவனை நினைவுக்கு அழைத்து வந்தது. அவள் சிரிப்பதைக் கண்டு அவளை முறைத்தான்.

"மாமா நீ குரு சிஷ்யன் படத்தில் வரும் ஷோவையே தாண்டிருவ போல ப்ளான் பண்ணுறதுல! ஹா... ஹா... ஹா.." என்று அவனை வம்புக்கு இழுத்தாள். அவன் அவள் சுதாரிக்கும் முன்னர் அவளருகில் விரைந்து அவள் இரு பக்கமும் கையூன்றி அவளைச் சுவரிலேயே சிறை செய்தான்.

அவன் செயலில் வாயடைத்துப் போனாள் அந்த வாய் பேச்சுக்காரி. அவன் அவள் இதழ் நோக்கிக் குனிய பெண்ணவள் இமைகள் தன் கயல் காதலிகளை மறைத்தது அங்கு அரங்கேறப் போகும் காட்சியைக் காணாதிருக்க. கண்மூடிச் சாய்ந்தவளின் விழிமீன்கள் நர்த்தனங்கள் நடத்தியதே ஒழிய அவற்றின் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. அவள் இமைகள் பிரியக் காத்திருந்தவன் அவள் தலையில் குட்டி தலையணையையும் போர்வையையும் வாங்கிச் சென்று படுத்தான். அவளோ காதலின் மாயவலை அறுபட்டு விழச் சிரிப்புடன் தன் தலையைத் தடவியவள்,'இருடா மவனே நாளைக்கு வச்சுகிறேன் உன்னை... திருட்டு மாமா!!!' என்று கொஞ்சிக்கொண்டே அறைக்குள் சென்றாள்.

மறுநாள் மாலை குடும்பத்துடன் கடற்கரை சென்றான் விதுரன். மதுராவும் மாதுவும் நன்கு விளையாடிக் களைத்த பிறகே கடற்கரையை விட்டு வந்தனர். அங்கிருந்து நேராக ஓர் உயர்தர உணவு விடுதிக்குச் சென்றனர். நான்கு பேர் அமரக்கூடிய மேசையில் அமர்ந்தனர். பணியாள் வந்து அவர்களுக்குத் தேவையானவற்றைக் கேட்டான். மாதுவும் மதுவும் ஒரு சேர விதுவைப் பார்த்தனர்.

'ஒன்னுகூடிட்டாய்ங்களே டா விது... நம்மள இன்றைக்கு வேலை சொல்லியே வெள்ளாவிப் பானையில் வேகப் போட்ருவாங்களே! விது பார்த்து சூதானமா இருடா!!'

'நானே கடுப்பில் இருக்கிறேன்! பேசாமல் போயிரு!' என்று தன் மனசாட்சியை அடக்கியவன் மகளும் மனைவியும் கேட்டவற்றை வாங்கி வந்து அவனே பரிமாறினான். அவன் அவர்கள் கேட்டவற்றை வாங்கச் சென்ற ஒவ்வொரு முறையும் தாயும் மகளும் ஹய் ஃபை அடித்துக்கொண்டனர் சிரிப்புடன்.

அங்கு நடக்கும் காட்சியைக் கண்டு மனம் நெகிழ்ந்தார் சீலா. மகளும் தன் தம்பியும் மனமொத்து சந்தோசமும் நிம்மதியும் நிறைந்து வாழும் வாழ்க்கையை உணர்ந்த அந்த தாயுள்ளம் குளிர்ந்து போயிற்று. அவர்கள் வாழ்க்கையில் வரும் கஷ்ட நஷ்டங்களை இருவரும் சேர்ந்தே இருந்து சமாளிக்க வேண்டும் என்று கடவுளுக்கு ஒரு வேண்டுதல் வைத்தது அவர் மனம்.

தன் தம்பியை அவர்கள் இருவரும் படுத்தும் பாட்டை கண்டு பொறுமை இழந்தவர் இருவரையும் மிரட்டிச் சாப்பிட வைத்தார். தன் தம்பியையும் உணவுண்ண அமர்த்தினார். அவரின் செயலில் மாதுவும் மதுவும் உதட்டைச் சுழித்து முறைத்தனர். தப்பித்தோம் பிழைத்தோம் என்று அமர்ந்து உணவுண்ண ஆரம்பித்தான் விதுரன் காலையில் நடந்ததை எண்ணியவண்ணம்.

"மதுக் குட்டி குட் மார்னிங்!"

"குட் மார்னிங் பா!"

"பேபிம்மா டின்னர் போவோமா இன்றைக்கு. உனக்கு பிடித்த உணவகத்துக்கே போகலாம்."

"என்னப்பா எதாச்சும் ப்ராப்ளமா? என் ஹெல்ப் தேவைப்படுகிறது போலையே!"

"ம்ம்ம்..‌ அன்றைக்கு அப்பா ஒரு ஃபோட்டோ உன்கிட்ட காட்டுனேன்ல அது மட்டும் உங்கம்மா கைலை கிடைச்சது நான் காலி! அதை அப்பாவிடம் கொடுத்திரு டா!"

"எதற்குப்பா? அந்த ஃபோட்டோ அம்மாவோடது தான. அப்பறம் என்ன?"

"அது மாது ஃபோட்டோ தான் பட் அது ஃபுல் அன்ட் ஃபுல் நான் எடிட் பண்ணது! வில்லேஜ் ஸ்டைல இருந்த எப்படி இருப்பாளென்று பார்க்கிறதுக்காக பண்ணேன்! அத மட்டும் அவள் பார்த்தாள் மறுபடியும் என்கிட்ட டூ விட்டுருவாள். போச்சு!"
 




Soundarya Krish

முதலமைச்சர்
Joined
Sep 17, 2018
Messages
10,587
Reaction score
27,628
Location
Home Town
"ஏன் டாடி இப்படி பண்ணீங்க? நான் அம்மா தானென்று நினைத்து அவங்களை ரொம்ப வம்பு பண்ணிட்டேன்! அம்மா பாவம்! எல்லாம் உங்களால் தான்."

"சாரி டா அப்பா கிட்ட அந்த ஃபோட்டோவை கொடுத்திரு டா. ப்ளீஸ்!"

"சரிப்பா! ஆனால் ஒரு பனிஸ்மென்ட் உண்டு கண்டிப்பாக!"

'அம்வை மாதிரி பனிஸ்மென்ட் கொடுக்க ஆசைப்படுகிறாளே! சரி குழந்தை தானே எதாச்சு குழந்தைத் தனமாக சொல்லுவா செய்வோம்' என்று மனதில் நினைத்துக் கொண்டு வெளியே,

"சரிடா! டீல்!" என்று கூறி ஃபோட்டோவை பெற்றுக் கொண்டான். அந்த தந்தை மகளின் உடன்படிக்கையின் விளைவு தான் இந்த உணவு பரிமாறும் வேலை. இவ்வாறு எண்ண அலைகளில் நீந்தியவனைத் தோளில் தட்டி நினைவுக்குக் கொண்டு வந்தாள் மதுரா. பின்பு குடும்பமே ஒருசேர விதுவைப் பார்த்து,"இனிமே நீ குடிப்ப?!" என்று கேட்டுச் சிரித்தனர்.

அன்றிரவு தனிமையில் தன் மடியில் தலை சாய்ந்திருந்த தன் கணவனின் முடி கோதியபடியே பல கதைகள் பேசிக்கொண்டிருந்தாள் மாது. அவள் பேச்சை ரசித்தவாறே அவளைச் சீண்டிக் கொண்டிருந்தான் விதுரன். திடீரென ஏதோ நினைவு வர அவனை எழுப்பி,
"அதெல்லாம் இருக்கட்டும் மாமா! இனிமே நீ குடிப்ப!?" என்று கேட்டாள்.

"சாமி சத்தியமா பாட்டில் சரக்கைக் குடிக்க மாட்டேன் டீ!!!" என்றவன் நினைவில் பச்சைக் கீரை, விளக்கெண்ணெய், மனைவியின் விலகல், அவளின் மௌன விரதம், எறும்பு படுக்கை, அதிமுக்கியமாக அவன் மனசாட்சியின் அத்துமீறல் எல்லாம் வந்து வந்து போனது.

"ஆனால் ...." என்றவன் தன் menஇதழால் அவள் மென்னிதழைச் சிறை செய்தான்.

இத்தோடு குடிக்குப் போட்டாயிற்று என்ட்கார்ட்!!!???

Thank u frns n sisters for all ur support ??????
Lub u???
 




Last edited:

Soundarya Krish

முதலமைச்சர்
Joined
Sep 17, 2018
Messages
10,587
Reaction score
27,628
Location
Home Town
Yanna ma ippadi panni vechurikinga madhu va....?????

Nalla punishment kudukaranaga ammavum, magalum...???

Inime nee kudipa...???

Vithu super family ....
Happy ending...
Lovely riya dr.... congratulations ??????
:love::love::love: lub u Haritha kutty???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top