• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

உங்களோடு சில மனக்குமுறல்கள்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
வணக்கம் தோழமைகளே

மன வேதனையோடு இந்த பதிவினை இடுகிறேன்

பொள்ளாச்சியின் கொடுமை .200 மேற்பட்ட பெண்கள் பாதிப்படைந்து இருக்கிறார்கள் என்கிறது ஊடகம் .சமூக வலைத்தளம் .விளக்கினை தேடி போகும் விட்டில் பூச்சிகளின் நிலை தான் நினைவுக்கு வருகிறது ."என்ன தவம் செய்தேன் "என்ற என் கதையில் கூட வீகென்ட் ஷாப்பிங் மால் ,மல்டிப்ளெஸ் ,பார்க் ,பீச் போன்றவற்றில் பெற்றோர்களுக்கு தெரியாமல் ,ஸ்பெசல் கிளாஸ் என்ற பெயரில் சுற்றும் பள்ளி ,கல்லூரி மாணவ ,மாணவியர் பற்றி எழுதி இருந்தேன் .குடும்பத்தோடு வெளியில் போன போது என் கண்ணில் பட்ட சம்பவங்களின் பாதிப்பு தான் அந்த கேள்வி .அதன் சுருக்கம் இங்கே

கடவுள் நேரில் வந்து அனைவரையும் காப்பாற்ற முடியாது தான் .சில சமயங்களில் இது போல் எச்சரிக்கை பல பெற்றோர்களுக்கு கிடைப்பதும் இல்லை ......மற்றவரின் மேல் நம்பிக்கை வைத்து தான் பெற்றோர்கள் வேலைக்கு செல்வது .......அந்த நம்பிக்கை தகர்க்க படும் போது எதற்காக,யாருக்காக ஓடி ஓடி வேலை செய்தார்களோ அவர்களே இல்லாத போது குற்ற உணர்ச்சி என்னும் கொடிய அரக்கனின் பிடியில் மாட்டி திக்கி திணறி அழகான குயில் கூடு பல சூறாவளியில் சிக்கி சின்னா பின்னமாகி விடுவதும் நடப்பது உண்டு .....ஜான்சி போன்ற சிறு பிள்ளைகள் ,ஆணோ ,பெண்ணோ ..........கண்காணிப்பில் வைத்து இருப்பது அவசியம் ..........மனித வக்கிரத்தின் அளவூ கோல் யார் அறிவார் ????/அதிர்ந்து பேச தயங்குபவன் கூட கூட்டத்தோடு இருக்கும் போது பாம் வீசி தயங்க மாட்டான் என்பதே நிதர்சனம் .ஒருவன் மனிதன் ஆவதும் ,மிருகம் ஆவதும் ஒரு சூழ்நிலையில் அவன் எப்படி ரியாக்ட் ஆகிறான் என்பதை பொறுத்தே .....அதை முன் கூட்டியே யாரால் தான் உணர்ந்து அறிய முடியும் ????நம்மால் முடிந்தது தற்காப்பு மட்டும் தான்


ஜான்சி போன்ற சிறு பிள்ளைகளின் நிலை இது என்றால் ,பருவ பெண்களை,வாலிப ஆண்களை தவறான வழிக்கு கொண்டு செல்லும் நிறைய ஊக்குவிப்பான்கள் நாட்டில் உண்டு .....அதில் நட்பு ,காதல் ,சோசியல் மீடியா ,சொசைட்டி பெரும் பங்கு வகிக்கிறது ......"உன் நண்பனை பற்றி சொல் ...உன்னை பற்றி நான் சொல்கிறேன்" என்பது இது தான் ...... ......தடம் மாறி போன இந்த வயது பிள்ளைகள் தான் பின் நாளில் suicide பாம்மர் ஆகவோ ,terrorist ஆகவோ ,இன்னொரு உயிர் போக காரணமாகவோ ஆகி விடுகிறார்கள் ......இந்த கூட்டத்திற்கு "காதல்"என்பது பொழுது போக்கு .... தீவிரவாதிகளின் தற்பொழுதைய ஆயுதம் "காதல் "தானாம் .காதல் என்ற பெயரில் ,காதலுக்காக எதை வேண்டும் என்றாலும் செய்ய தயாராய் இருக்கும் ஆண் /பெண்களை தீவிர வாதிகளாக மாற்றுவது தான் .அதனால் தான் 76 வழுக்குகள் RAW /NIA (RESEARCH அனாலிசிஸ் விங் /நேஷனல் இன்வெஸ்டிகஷன் AGENCY )பதிவு செய்து உள்ளது

VOLUNTEER வேலையாக தொண்டு நிறுவனங்களுக்கு செல்லும் இடங்களில் இவ்வாறு பாதிக்க பட்ட பெண்கள் ,கை விட பட்ட அனாதை குழந்தைகளை பார்த்து விட்டு ஷாப்பிங் மால் ,சினிமா ,பீச் ,பார்க் போன்ற இடங்களில் சுற்றும் ஜோடிகளை பார்க்கும் போதும் மனம் வேதனை அடையாமல் இருந்தது இல்லை .


'இவர்கள் யாரை ஏமாற்ற பார்க்கிறார்கள் தங்களையேவா இல்லை பெற்றோர்களையா ???? இதில் எத்தனை காதல் உண்மையானது ?எத்தனை காதல் திருமணத்தில் முடிகிறது ?இவ்வாறு நடந்த திருமணங்கள் கடைசி நொடி உயிர் போகும் வரை எத்தனை நிலைத்து இருக்கிறது ?????இதில் எத்தனை டைம் பாஸ் காதல் ????இவர்களின் பெற்றோர் இதை எல்லாம் கவனிக்காமல் என்ன செய்கிறார்கள் ?????பெற்றோரின் கண்ணில் மண்ணை தூவி விட்டு இவ்வாறு செல்லும் தைரியம் எங்கு இருந்து வருகிறது ???எங்கு பெற்றோர் தோல்வி அடைகிறார்கள் ??? இவவாறு எண்ணாமல் இருக்க முடியவில்லை .


எல்லாமே ஒன்றுடன் ஒன்று இணைந்தவை என்று நினைக்கும் போது பெரு மூச்சு எழுவதையும் அவளால் தடுக்க முடியவில்லை


நல்ல திருமணமே ...நல்ல தாம்பத்தியம் (இல்லறம் )

நல்ல தாம்பத்யமே ......நல்ல சந்தானம் (பிள்ளைகள் ).

நல்ல பிள்ளைகளே ...........நல்ல சமூகம்

நல்ல சமூகமே ............நல்ல உலகம்


இதை தானே எல்லா மத திருமணங்களும் வலியுறுத்துகின்றன .திருமணத்திற்கு அதனால் தானே இவ்வளவோ முக்கியத்துவம் ,சிறப்பு கொடுக்கப்படுகிறது .

இதில் ஒன்று தவறினாலும் உலகத்தில் உள்ள அனைவர்க்கும் இழப்பு தான் .பெரியவர்களின் இந்த தத்துவம் இந்த ஷாப்பிங் மால் ,சினிமா ,பார்க் ,பீச் காதலில் காணாமல் போகிறது .நம்பி ஏமாறுவதும் தப்பு ,நம்பியவர்களை ஏமாற்றுவதும் தப்பு .இது எதுவுமே இந்த டைம் பாஸ் காதலில் இருப்பதில்லை .விட்டில் பூச்சிகளாய் வாழ்க்கை அழிந்து ,கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதால் என்ன பயன் ???

"போலீஸ் தூங்கவில்லை ......மக்கள் தூங்கி கொண்டு இருக்கிறார்கள் ....இந்த அபார்ட்மெண்டை பாருங்க ....ரொம்ப போஷ் ஏரியா ....ஆனால் ஒருத்தருக்கு ஒருத்தர் தொடர்பில் இல்லை ....அடுத்த வீட்டில் என்ன நடந்தாலும் அது எனக்கு நடக்காத வரை சந்தோசம் என்று இருப்பதால் வரும் வினை .....நான்கு சுவற்றுக்குள் என் வக்கிரத்தை தீர்த்து கொள்கிறேன் என்று இணையத்தளத்தில் ஆபாசத்தை விளைவிக்கும் ஒவ்வொருவரும் காரணம் .....இப்படி தொழிலுக்கு வரும் பெண்கள் ,குழந்தைகள் யாரோ ஒருவரின் மகள் ,தங்கை என்ற மனிதாபிமானம் இல்லாததது காரணம் ......இது பல மில்லியன் டாலோர் புழங்கும் வெளியுலகத்திற்கு தெரியாத இருட்டு உலகம் ....இப்படி கடத்த படும் பெண்கள் முன்பு எல்லாம் "LOW ரிஸ்க் "VICTIMS என்பார்கள் ....அதாவது அனாதைகள் ,காணொம் என்று யாராலும் தேட படாதவர்கள் ....இவர்கள் இருந்தாலும் ,செத்தாலும் என் என்று கேள்வி கேட்க யாரும் முன் வர மாட்டார்கள் .போலீஸ்க்கும் கம்பளைண்ட் எதுவும் வராது ......ஆனால் இப்பொழுதோ காதல் என்ற பெயரில் தெருவுக்கு தெருவு நான்கு பேர் பைக்கில் நிற்கிறார்கள் .....எதையும் அறியாத விட்டில் பூச்சிகளாக பெண்களும் ஷாப்பிங் மால் ,பீச் ,பார்க் என்று "உரிமை "என்ற பெயரில் ,"நாகரீகம் "என்ற பெயரில் காதல் என்ற வலையில் மாட்டி அலைந்து கொண்டு இருக்கிறார்கள் .இப்பொழுது இவர்களை கடத்துவது தான் அதிகமாக நடக்கிறது .கடத்தவில்லை என்றாலும் இவர்களுடன் சேர்ந்து இருக்கும் படங்களை காட்டி பணம் பறிப்பது வெகு ஜோராக நடக்கிறது .....

"முதலில் மக்கள் எங்கு தவறு நடந்தாலும் துணித்து குரல் கொடுக்க வேண்டும் ...நான்கு சுவற்றுக்குள் இருந்து முகநூலில் இல்லை .....வெளிப்படையாக .....உங்களுக்கு சிறு குழந்தைகள் இருந்தால் முதலில் "குட் டச் ,பேட் டச் "சொல்லி கொடுங்க ....டியூஷன் ,கிளாஸ் அனுப்பும் இடங்கள் பாதுகாப்பானதா என்பதை முதலில் உறுதி செய்து கொள்ளுங்கள் ....உங்கள் பள்ளி ஆசிரியர் ,ஆசிரியர் ,உங்கள் குழந்தைகளை பள்ளிக்கு கொண்டு செல்வோரின் மேல் கவனம் இருக்கட்டும் ...பள்ளி முடிந்து வந்த உடனே குழந்தையிடம் அன்று நடந்ததை விசாரியுங்கள் ...நாகரீகம் என்ற பெயரில் குழந்தைகளுக்கு KERCHIEF அளவு சிறிய உடல் தெரியும் உடைகளை தவிருங்கள் ....முகநூல் ,ட்விட்டர் ,இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் உங்கள் பிள்ளைகளின் போட்டோக்களை பதிவு செய்யவே வேண்டாம் ....உங்கள குழந்தையின் படத்தினை எடுத்து அதை கொண்டு "ப்ளூ பிலிம் "தயாரிப்பர்வர்கள் அதிகம் உண்டு .....இவர்கள் PEDOPHILE ஆவார்கள் ....குழந்தைகளை மட்டுமே குறி வைப்பவர்கள் .....வெளியே பார்க் ,பீச் ,ஷாப்பிங் செல்லும் போது உங்களின் கவனம் உங்கள் குழந்தையின் மேலும் ,சுற்றுப்புறத்தை மேலும் இருக்கட்டும் ....குழந்தைகள் வெளியே வாங்கி சாப்பிட அனுமதிக்க வேண்டாம் .....பள்ளிகளின் அருகே போதை மருந்துகள் கலந்த தின்பண்டங்கள் விற்பனையும் நடக்கும் ....."என்றாள்

"வயது பெண்களின் பெற்றோர்களுக்கு உங்களின் அறிவுரை ?"

"ஒரு வயதுக்கு மேல் INDEPENDENCE அவசியம் தான் என்றாலும் அது சுதந்திரமாக உங்கள் பிள்ளைகள் எடுத்து கொள்ளும் அளவு விட்டுவிடாதீர்கள் ....அவர்களின் நடவடிக்கைகளை கவனியுங்கள் .அவர்களின் நண்பர்கள் யார் ,அந்த நண்பர்களின் குடும்பம் எப்படி பட்டது என்று தெரிந்து கொள்ளுங்கள் ....அடிக்கடி ஸ்பெஷல் கிளாஸ் வைக்கிறார்களா என்று கல்லூரியில் தெரிந்து கொள்ளுங்கள் ....ஒரு காலேஜ் எடுத்து கொண்டால் அந்த காலேஜின் பெற்றோர் குழு விவாதித்து ,காலை ,மாலை காலேஜ் அருகே ரவுண்ட்ஸ் வரலாம் ...போலீஸ் ,காலேஜ்க்கு எழுதி போட்டு இந்த சமயங்களில் ரோந்து வர மனு போடலாம் .உங்கள் பிள்ளைகளின் காண்டாக்ட் லிஸ்ட் உங்களுக்கு தெரிந்து இருக்க வேண்டும் .....செல்ல பெயர் வைத்து காண்டாக்ட் லிஸ்ட் இருந்தால் அது யார் என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள் .....இட்ஸ் பெட்டர் SAFE தான் சாரி .ஹோஸ்டேலில் தங்கி படித்து ,வேலை செய்யும் பெண்களின் பெற்றோர்களும் ,ஹாஸ்டல் வார்டன் எப்படி பட்டவர் ,அந்த ஹோஸ்டேலில் போதிய CCTV வசதி இருக்கிறதா ,மகள் எத்தனை மணிக்கு திரும்ப வருகிறாள் ,யார் அவளை பார்க்க வருகிறார்கள் என்பதை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் .போலீஸ் ஒவ்வொரு பெண்ணின் பின்னாலும் காவலுக்கு வர முடியாது .பெற்றோர் ,சுற்றி இருக்கும் மற்ற பெற்றோர் தான் இதனை உங்கள் கடமையாக எடுத்து செய்ய வேண்டும் .இது என் நம்பர் ....யாருக்கு என்ன உதவி தேவை என்றாலும் எப்பொழுது வேண்டும் என்றாலும் தொடர்பு கொள்ளலாம் .....நன்றி "என்ற ராஜேஸ்வரி கிளம்பினாள் .

நான் எழுதிய கதையில் வரும் கற்பனை கலந்த சம்பவம் இன்று உண்மையாக நடந்து விட்டதை பார்த்து மனம் துடிக்கிறது .

ரெண்டு நான்கு சுவற்றுக்குள் எதை வேண்டும் என்றாலும் ,பார்ப்பேன் ,படிப்பேன் என்று சொல்வார்கள் .ஆனால் அந்த வக்கிரம் வெளி இடங்களிலும் பிரதிபலிப்பது சமூக சீர்கேடே .படம் எடுப்பவர்களுக்கு சரி ,கதை எழுதுபவர்களும் சரி ஒரு எல்லைக்கு மேல் அந்தரங்கத்தை வெளிச்சம் போட்டு கட்டுவதன் எதிரொலி தான் இது


இந்த கொடூரங்களை கண்ட பிறகாவது பெற்றோர்கள் ,கல்லூரி மாணவிகள் ,இல்லத்தரசிகள் உங்களை பார்த்து கொள்ளுங்கள் .உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் என்பது உங்கள் கையில் தான் .சுதந்திரம் ,பாசம் என்ற பெயரில் அனைத்தையும் இழந்த பிறகு கலங்கி பிரோயோஜனம் இல்லை .

சமூக வலைததலங்களில் உள்ள உங்கள் மற்றும் உங்கள் பிள்ளைகளின் போட்டோவினை முதலில் எடுங்கள்.ஏதாவது ஒரு ப்ரோனோக்ராபி வெப்சைட் அதை திருடலாம் .குடும்பத்தோடு நேரத்தை செலவிடுங்கள் .முகம் தெரியா நட்பிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை உங்கள் வீட்டில் உள்ளோரிடம் காட்டுங்கள் .

3 மாதம் கத்தி விட்டு எலேச்டின் என்று போய் விடுவோம் ...ஆனால் பாதிக்க பட்டவர்களின் நிலை ????இப்படி தான் கும்பகோணம் தீ விபத்து ,சென்னையில் 200 முதியோர்கள் ஆர்கன் திருடி கொல்லப்பட்டது என்று எல்லாவற்றையும் தூக்கி தூர போட்டு விடுகிறோம் .மறதி தேசிய வியாதி .

கூடா நட்பு கேடாய் முடியும் .

இது அட்வைஸ் அல்ல ....பெற்றோராய் என் மன குமுறல் .
 




Last edited:

lakshmi2407

அமைச்சர்
Joined
Mar 26, 2018
Messages
3,214
Reaction score
15,304
Location
Tamil nadu
டீன் ஏஜ் பிள்ளைகள் வைத்திருப்போருக்கு:

பிள்ளைகள் , அவர்களின் தோழமைகளை வீட்டிற்கு அழைத்து வர, ஆண் பெண் யாராயிருந்தாலும், பழக்குங்கள். யாருடன் என்ன பேசினாலும், அது உங்களது கண்பார்வைக்கு வரும் என்பது குழந்தைகளுக்கு தெரிய வேண்டும்.பாஸ்வேர்ட், பொதுவாய் இருக்கட்டும்.

யாருடைய அலைபேசியையும், வீட்டில் உள்ளோர் அனைவரும் உபயோகிக்க அறிவுறுத்துங்கள்.

கணினியை... ஹாலில் அனைவரும் பார்க்கும்படி வைக்கவும்...

அத்தனையும் மீறி, அவர்கள் மேல் நம்பிக்கை வையுங்கள். அவர்களுடன் பேசி, விளையாட நம்மைத்தவிர யார் இருக்கிறார்கள்....?
 




Eswari kasirajan

முதலமைச்சர்
Joined
Apr 14, 2018
Messages
10,671
Reaction score
27,027
Location
Tamilnadu
பொள்ளாச்சி சம்பவம் இப்போதுதான் வெளிச்சத்துக்கு வந்து இருக்கிறது, ஆனால் வெளிவராமல் இருக்கு இன்னும் எத்தனைக் கொடுமைகள் இருக்கின்றதோ, அதை கேட்பதற்கே மனம்பதறுகிறது, அனுபிவித்தவர்களின் நிலை.......

இதுக்கெல்லாம் நாம ஆதங்கபடுகிறோம் வருத்தப்படுகிறோம், அடுத்து......... என்னச் செய்கிறோம் நாம் ?????
இதைமட்டும் தான் நம்மளால் செய்ய முடிகிறது, எதுவும் செய்ய முடியாத கையறு நிலையில் உள்ளோம் என்பது வேதனைக்குறியது
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
பொள்ளாச்சி சம்பவம் இப்போதுதான் வெளிச்சத்துக்கு வந்து இருக்கிறது, ஆனால் வெளிவராமல் இருக்கு இன்னும் எத்தனைக் கொடுமைகள் இருக்கின்றதோ, அதை கேட்பதற்கே மனம்பதறுகிறது, அனுபிவித்தவர்களின் நிலை.......

இதுக்கெல்லாம் நாம ஆதங்கபடுகிறோம் வருத்தப்படுகிறோம், அடுத்து......... என்னச் செய்கிறோம் நாம் ?????
இதைமட்டும் தான் நம்மளால் செய்ய முடிகிறது, எதுவும் செய்ய முடியாத கையறு நிலையில் உள்ளோம் என்பது வேதனைக்குறியது

for that only i posted this.after seeing if 1 or 2 parents keep theri kids safe and delete sharing entire life in fb/twitter stop aana pothum.
morning la irunthu manase sari illai.heavy aagi valikuthu.

namma tamilnatila ipadi nu still in shock.1st vinodhini at chennai.then death of 200 old people,then this.

manithan song thaan niyabagam varuthu
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,040
Reaction score
49,883
Location
madurai
மிகவும் கனமான பதிவு தான் இது. மகளிர் தினம் கொண்டாடும் இந்த சமயத்தில் இந்த சம்பவம் நாம் இன்னும் அடிமை படுத்த படுகிறோம் என்பதை வெட்ட வெளிச்சமாக்குகிறது. முதலில் நமக்கான சுதந்திரத்தை நாம் இன்னும் தக்க வைத்து கொள்ளாமல் இருக்கிறோம் என்பதே உண்மை . எந்த நிலைமையிலும் தன்னை காத்து கொள்ளும் நுண்ணிய அறிவை பெண் குழந்தைகளுக்கு நாம் கற்று கொடுத்து விட்டால் இது போன்ற அசம்பாவிதங்கள் ஏற்படுவதை பாதிக்கும் மேல் குறைய வைப்புகள் உள்ளது. தற்காப்பு கலை என்றில்லாமல் அறிவு சார்ந்த முறையிலும் தங்களை காத்துக் கொள்ளும் வழிகளை பற்றி பள்ளிகளிலே அத்தியாவசியப் பாடமாக கொண்டு வர வேண்டும்.

ppp.jpgppp1.jpg
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top