• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே 20

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Barkkavi Murali

இணை அமைச்சர்
Joined
Sep 16, 2019
Messages
602
Reaction score
1,848
Location
Bangalore
ஹாய் பிரெண்ட்ஸ்...??? அபி - ப்ரியா தான் ஜோடினு பல பேர் கண்டுபிடிச்சுருப்பீங்க...??? இந்த எபில ப்ரியாவோட லவ் ஸ்டோரிய பார்ப்போம்...???
1576427746837.jpg

ஈர்ப்பு 20
“எனக்கு கண்ண கட்டிட்டு எங்க கூட்டிட்டு போறீங்க?”

“இன்னும் கொஞ்ச நேரம் வெயிட் பண்ணு… உனக்கே தெரியும்…”

“இத தான் 5 நிமிஷமா சொல்லிட்டு இருக்கீங்க….”

“பேபி உன் பொறுமையைப் பத்தி எனக்கு நல்லா தெரியும்… சோ இன்னும் கொஞ்ச நேரம் குட் கேர்ளா அமைதியா வந்தா உனக்கு ஒரு கிப்ட் கிடைக்கும்…”

என் பொறுமையைப் பற்றி கிண்டலடித்ததும் இனிமேல் அவனிடம் எதுவும் கேட்க கூடாது என்று முடிவெடுத்து வாயைக் கைகளால் மூடியபடி அவன் இழுத்த இழுப்பிற்குச் சென்றேன். என் செய்கையைப் பார்த்து அவன் நகைப்பது கேட்டாலும் அவனிடம் பேசக் கூடாது என்று என்னையே கட்டுப்படுத்தி வைத்திருந்தேன்.

சிறிது நிமிடங்கள் கடந்த பின் சில்லென்ற காற்று வீசி என்னை சிலிர்க்கச் செய்தது. என்னால் பூக்களின் வாசத்தை உணர முடிந்தது. அங்கு வந்ததும் அவன் மெல்ல என் கண்களைத் திறக்க, என் முன்னால் இருந்த கார்டன் டின்னர் செட்டிங்கில் மயங்கித் தான் போனேன்.
IMG_20191215_221400.jpg


கண்கள் கூசுமளவு இல்லாமல் மிதமான வெளிச்சத்தோடு அந்த இரவை ரம்மியமாக்கியது. வழி நெடுகிலும் ரோஜா இதழ்கள் தூவப்பட்டு இருந்தது. அவற்றின் மீது என்னவனுடன் நடக்கும்போது பெருமையாகவும் கர்வமாகவும் இருந்தது. அதிர்ச்சியிலிருந்து இன்னமும் மீளாமல் வாய் மூடி மெளனமாக அந்த தருணத்தை ரசித்துக் கொண்டிருந்தேன்.

அங்கு போடப்பட்டிருந்த மேசைக்குச் சென்றோம். அது ஒரு ‘ரொமான்டிக்’ டின்னருக்காக அமைக்கப்பட்டிருந்த மேசை. ரோஜா இதழ்களும் இதய வடிவ மெழுகுவர்த்திகளும் அதை அலங்கரித்தன. இவற்றையெல்லாம் ஒரு வித ஆர்வத்தோடு பார்த்துக்க கொண்டிருந்தேன்.

அங்கு உட்காரச் சென்றபோது என் நாற்காலியை அவனே இழுத்து என்னை அமரச் சொன்னான். இது போல அவன் செய்யும் சிறு சிறு விஷயங்களும் என்னை சிறப்பாக உணரச் செய்தது.

“எப்படி இருக்கு பேபி?”

இன்னும் அந்த அற்புதமான அதிர்ச்சியிலிருந்து வெளிவராத நான், “ஹான்… என்ன கேட்டீங்க?” என்று கூறினேன்.

அவனோ எதுவும் சொல்லாமல் என்னைப் பார்த்து அவனின் வழக்கமான சிரிப்பை உதிர்த்தான்.
‘இப்படி சிரிச்சே என்ன மயக்கிடுற???…’ இவ்வளவு நேரம் சுற்றியிருந்ததை திறந்த வாய் மூடாமல் பார்த்த நான் இப்போது அவனிடம் லயித்து விட்டேன்.


“பேபி என்ன பார்த்தது போதும்???..” என்று கண்ணடித்துக் கொண்டே, “இந்த செட்டிங் பத்தி ஒன்னுமே சொல்லையே…” புருவத்தை உயர்த்தி வினவினான். அப்போதே அவனின் புருவம் உயர்த்தும் செயலுக்கு நான் அடிமையாகிப் போனேன்.

“டார்லு… உனக்கு தெரியலையா நான் எவ்ளோ ஹாப்பியா இருக்கேன்னு???… ஐயம் இன் ‘கிளௌட் நையன்’???. இந்த மாதிரி ஒரு சர்ப்ரைஸ்ஸ நான் எதிர்பார்க்கவே இல்ல…”

“அப்படியா அப்போ இந்த மொமெண்ட்ட இன்னும் மறக்கமுடியாததா மாத்திடலாமா பேபி???…” என்று கூறியபடியே அருகில் வந்தான்.
நானோ என் கண்களை இறுக்க மூடிக்கொண்டேன். என் இதயம் படுவேகமாக துடிக்கும் சத்தம் மட்டுமே எனக்கு கேட்டது. சிறிது வினாடிகள் கழித்தும் எதுவும் நடக்காததால் ??? கண்களைத் திறந்து பார்த்தபோது நான் இன்னமும் என் கட்டிலில் படுத்துக் கொண்டிருந்தேன்.


‘ச்சே கனவு தானா???…’ என்று சலித்துக் கொண்டேன்.

‘இன்னும் லவ்வே சொல்லலையாம் அதுக்குள்ள ‘கிஸ்’ சீன் கேக்குதா…’ என்று என் மனச்சாட்சி என்னைக் கலாய்க்க…

‘ஹ்ம்ம் அவன் என் கனவுல வந்தா நான் என்ன பண்ணுவேன்…’ என்று நானும் என் மனச்சாட்சியும் சண்டைப் போட்டுக் கொண்டிருக்க, என் அம்மாவின் குரலில் அடித்துப் பிடித்து எழுந்து சென்றேன்.

அன்று காலை லோன் விஷயமாக பேங்கிற்கு நானும் அபியும் சென்றோம். அங்கு ஏற்கனவே சாண்டியும் தாமோ அங்கிளும் எங்களுக்காக காத்திருந்தனர். மேனேஜரிடம் லோன் பற்றி ஆலோசித்தோம். பின் அவர் இன்னும் ஒரு மாதத்தில் லோன் சன்க்ஷனாகிவிடும் என்று கூறினார். பின் நாங்கள் அனைவரும் ரெஸ்டாரண்டிற்கு வந்தோம்.

“லோன் சன்க்ஷன் ஆக 1 மந்த் ஆகும்னு சொல்றாரு… அது வரைக்கும் என்ன பண்ண…” என்று சாண்டி கேட்டாள். நானும் அதையே யோசித்துக் கொண்டிருந்தேன்.

“லோன் கையில கிடைக்கிற வரைக்கும் உங்களுக்கு நான் பணம் தரேன்…” என்று தாமோ அங்கிள் கூறியவுடன், “வேண்டாம் அங்கிள்” என்று கூறினேன்.

“கியூட்டி நான் சொல்றத முழுசா கேளு… நான் நெனச்சா உங்கள லோன் வாங்க விடாம நானே உங்க பொடிக்குக்கு ஃபுல்லா ஃபண்ட் பண்ண முடியும்… ஆனா அப்படி ஆரம்பிச்சா அது உங்களோட பொடிக்கா இருக்காது… அதனால தான் லோன் வாங்கவே நான் சம்மதிச்சேன்… இப்போ என்ன லோன் வரவரைக்கும் நான் தரேன்… லோன் வந்ததுக்கு அப்பறம் நான் எவ்வளவு செலவு பண்ணேனோ அத திருப்பி கொடுத்துருங்க…” என்று கூறினார்.

இது எனக்கு பிடித்திருந்தது. நான் அபியைப் பார்க்க அவனும் இதற்கு சம்மதித்தான்.

“சூப்பர்… இப்போவே நாம பொட்டிக்கோட ஒர்க்ஸ் ஸ்டார்ட் பண்ணிடலாம்..” என்று மகிழ்ச்சியோடு கூறினாள்.

“எந்த இடத்துல வைக்க போறீங்கன்னு முடிவு பண்ணிடீங்களா…” என்றார் தாமோ அங்கிள்.

“இல்ல அங்கிள்… நாங்களும் ரெண்டு மூணு இடத்த நெட்ல தேடிப் பார்த்தோம்… பட் அங்கயெல்லாம் வாடகை காஸ்ட்லியா இருக்கு…”

அப்போது அபி அவனின் ரெஸ்டாரண்ட்டிலிருந்து சிறிது தூரத்தில் ஒரு இடம் இருப்பதாக கூறினான். நானும் அவன் ரெஸ்டாரண்ட்டிற்கு செல்லும்போது அந்த இடத்தைப் பார்த்திருக்கிறேன். வெளியே இருந்து பார்த்தபோதே அந்த இடம் நன்றாக இருந்தது. எங்கள் பொடிக்கிற்கும் அது ஏற்றதாக இருக்கும். ஆனால் அந்த இடத்தின் விலை அதிகமாக இருக்கும் என்று எண்ணியே அந்த இடத்தைப் பற்றி விசாரிக்கவில்லை.

“அபி ஆனா அந்த இடத்தோட ரெண்ட் அதிகமா இருக்கும்ல…”

“ஒரு தடவ அந்த இடத்தப் பாரு… உனக்கு பிடிச்சா மேற்கொண்டு ரெண்ட் பத்தி பேசலாம்…”

“அப்போ வாங்க இப்போவே போகலாம்…” என்று சாண்டி கூறினாள்.

அபியோ, “இருங்க அந்த இடத்தோட ஓனர் கிட்ட பேசிட்டு வந்துடுறேன்…” என்று கூறிவிட்டு சென்றான்.

ஐந்து நிமிடங்களில் திரும்பி வந்த அவன், “அந்த ஓனர் ஊருல இல்லையாம்… சோ நம்ம அந்த இடத்தப் பாத்துட்டு பிடிச்சுருந்தா போன்ல இன்போர்ம் பண்ணிடலாம்…”

அந்த இடத்திற்கு சென்று பார்த்ததும் எல்லாருக்கும் பிடித்திருந்தது. நான் அபியிடம் அந்த இடத்திற்கான வாடகை எவ்வளவு என்று கேட்டதும் மீண்டும் அந்த ஓனரிடம் பேசினான்.

அவன் சொன்ன வாடகையில் நாங்கள் இருவரும் அதிர்ச்சியடைந்தோம். நாங்கள் மதிப்பிட்டதை விட குறைவான வாடகையை சொன்னான். இதைக் கேட்டதும் நானும் சாண்டியும் மகிழ்ந்தோம்.

அங்கிருந்து வீட்டிற்கு வந்த நான் என் அப்பாவிடம் லோன் பற்றியும் நாங்கள் பார்த்த இடம் அதன் வாடகை பற்றியும் கூறினேன். அவர் சென்றதும் என் அம்மாவைக் கட்டிப்பிடித்து என் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினேன். மேலும் என் அம்மாவை வெறுப்பேத்தி கலாய்த்து விட்டே என் அறைக்குச் சென்றேன்.

என் அறைக்குச் சென்றதும் வேகமாக முகநூலிற்குள் சென்றேன். இன்று நடந்ததைக் க்ரிஷிற்கு ஒளிபரப்ப… அவன் அதைக் கேட்டதும் என்னை வாழ்த்தினான். பின் அந்த இடம் பற்றிக் கேட்டான்.

க்ரிஷ் : ஹே உனக்கு அந்த ரெண்டல் பிளேஸ் பிடிச்சுருக்கா?

நான் : சூப்பரா இருக்கு???…
ஃபர்ஸ்ட் அந்த பிளேஸ பாத்துட்டு ரெண்ட் ரொம்ப அதிகமா இருக்கும்னு நெனச்சேன்… பட் நாங்க எஸ்டிமேட் பண்ணத விட ரொம்ப கம்மியா இருந்தது… ஃபைனலி மீ வெரி ஹாப்பி… ☺☺☺


க்ரிஷ் : ஓ… சூப்பர்…???

நான் : ஆனா பாவம் அந்த ஓனருக்கு தான் அந்த பிளேஸோட ஒர்த்தே தெரியல…???

க்ரிஷ் : ???
 




Barkkavi Murali

இணை அமைச்சர்
Joined
Sep 16, 2019
Messages
602
Reaction score
1,848
Location
Bangalore
அன்று மாலை நான் பொடிக் பற்றியும் சமீபத்திய வரவுகள் பற்றியும் இணையதளத்தில் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது ப்ரியா வந்திருப்பதாக என் அம்மா கூறினார். அப்போது தான் நேற்றைய விஷயம் நியாபகம் வந்தது. இன்று அவளிடம் அதற்கான விளக்கத்தைக் கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு அவளைப் பார்க்கச் சென்றேன்.

“ஹாய் ப்ரியா… நானே கூப்பிடனும்னு நெனச்சேன்… நீயே வந்துட்ட…” என்று கூறி அவள் அருகில் அமர்ந்தேன்.

அவள் முகம் நேற்றைக்கு விட இன்று சிறிதளவு தெளிவாகவே இருந்தது. அதற்காக அவள் பெரிதும் முயன்றிருக்கிறாள் என்பது எனக்கு புரிந்தது.

மேலும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அவளிடம் இன்று பேங்கிற்கு லோன் வாங்க சென்றது முதல் வாடகைக்கு இடம் பார்த்தது வரை எல்லாவற்றையும் சொன்னேன்.
அப்போது அவள் ஏதோ கூற வந்தாள் ஆனால் மறுநிமிடமே அவள் முகத்தை சாதாரணமாக்கிக் கொண்டாள். நான் அதைக் கவனித்தாலும் அதைப் பெரிதாக எடுக்கவில்லை.


“என்னோட பொடிக்கோட இன்டீரியர் டெகரேஷன்ஸ் பாத்துட்டு இருக்கேன்… நீயும் வந்து அத செலக்ட் பண்ண ஹெல்ப் பண்ணு…”

“நான் எப்படி…” என்று அவள் தயங்கினாள்.

“இனிமே எல்லாம் அப்படி தான்???…” என்று அவளிடம் கண்ணடித்து விட்டு என் அறைக்கு அழைத்துச் சென்றேன்.

அறைக்குள் வந்ததும் அவளின் கண்கள் நானும் அபியும் இருக்கும் புகைப்படத்திலேயே நிலைத்திருந்தது. அவளைப் பார்த்து சிரித்துக் கொண்ட நான், ‘இவ்ளோ நாள் இதப் பத்தி வாயே திறக்கலேல நீ.. கேடி…’ என்று மனதிற்குள்ளே கூறிக்கொண்டேன்.

“என்ன டி அண்ணி… அபி நல்லா இருக்கான்ல…” என்று நான் கேட்டதும் ஏதோ ஒரு நியாபகத்தில் ஆம் என்று தலையை ஆட்டி பின் நிகழ்வுக்கு வந்ததும் இல்லை என்று மீண்டும் தலையசைத்தாள்.

அவளைப் பார்த்து நகைத்துவிட்டு, “ஃப்ராட் டி நீ… என் அண்ணாவையே சைட்டடிச்சுருக்க…” என்று கூறவும்…

“அது…வந்…ந்து…” என்று அவள் திணறினாள்.

“விடு டி நீ ஒன்னும் சமாளிக்க வேண்டாம்… ஆனா நேத்து என்ன ஆச்சுன்னு மட்டும் சொல்லு…”

சிறிது நேரம் அமைதியாக இருந்தாள். பின்பு யாரிடமாவது பகிர்ந்தால் நன்றாக இருக்குமென்று எண்ணினாளோ என்னவோ, என்ன நடந்தது என்று கூற ஆரம்பித்தாள்.

அவள் சொல்ல ஆரம்பிக்கும் போது, “ஃபர்ஸ்ட் உன் லவ் மேட்டர பத்தி சொல்லுங்க மேடம்…” என்று கூறினேன்.


அவளும் லேசாக சிரித்துவிட்டு, “நானும் நீயும் ஒன்னா ஸ்கூல் படிச்சப்பவே உங்க அண்ணாவ பிடிக்கும். அவங்க உன்ன திட்டி, கலாய்ச்சாலும் உனக்கு ஏதாவது பிரச்சனைனா ஃபர்ஸ்ட் முன்ன வந்து நிப்பாங்க… உன் மேல ரொம்ப கேரிங்கா இருப்பாங்க… அப்போலாம் அவங்கள மாதிரி ஒரு அண்ணா எனக்கு இல்லயேனு ஃபீல் பண்ணிருக்கேன்…” என்று கூறவும்…

“என்னாது அண்ணாவா இல்லையேனு ஃபீல் பண்ணியா???… அப்போ இப்போ…” என்று கண்ணடித்து கேட்டேன்.

அதற்கு என்னை அடித்துவிட்டு, “இப்போ தான் எனக்கு வேற அண்ணா கிடைச்சிட்டானே???…” என்றாள் அவளும் சிரித்துக்கொண்டே.

அவள் ராகுலைத் தான் கூறுகிறாள் என்று தெரிந்தாலும், அதைப் பற்றி வினவாமல் அவளின் காதல் கதையைத் தொடரச் சொன்னேன்.

“அப்பறம் நான் டெல்லி போனதுக்கு அப்பறம் ரெண்டு பேரும் அவ்ளோவா டச்ல இல்ல… ரொம்ப நாள் கழிச்சு தான் உன்ன ஃபேஸ்புக்ல பாத்தேன். அது கூட நீயும் உங்க அண்ணாவும் இருக்குற போட்டோவ நீ டிபியா வச்சுருந்தத பாத்து தான் உங்க நியாபகமே வந்துச்சு… அதுக்கு முன்னாடி வரைக்கும் உங்க அண்ணா மேல அப்படி ஒரு இன்ட்ரெஸ்ட் எனக்கு வந்தது இல்ல… ஆனா அந்த போட்டோவ பாத்ததும் எனக்குள்ளேயே ஏதோ ஃபீலிங்… அத எப்படி எக்ஸ்பிரஸ் பண்றதுன்னு எனக்கு தெரியல… ஆனா லவ் பண்ணா உங்க அண்ணாவ தான் லவ் பண்ணி கல்யாணம் பண்ணனும்னு டிசைட் பண்ணிட்டேன்… அதுக்காகத் தான் என் காலேஜ் முடுஞ்சதும் இங்க வந்துட்டேன்…”

“ஓ… அப்போ மேடம் மெசேஜ் பண்றப்போ மிஸ் யூனு சொல்றதெல்லாம் எனக்கு இல்ல???… எப்படி எப்படி அவன் போட்டோவ பாத்து தான் எனக்கு ரெக்வஸ்ட்டே அனுப்பிருக்க???… அடிப்பாவி உன்ன எல்லாம் எங்க வீட்டுல ஃபிரெண்டுக்காக எதையும் செய்வா ப்ரியானு ‘நாடோடிகள்’ ரெஞ்சுக்கு பில்ட் அப் கொடுத்துருக்கேன்… நீ என்னடானா உன் ஒன் சைடு லவ்வுக்காக என்ன யூஸ் பண்ணிருக்கேல???…”

“ஹே அப்படிலாம் இல்ல டி???…”

“சமாளிக்காத டி…”

“உண்மையா தான் டி சொல்றேன்… எனக்கு நீயும் முக்கியம் தான்…”

“ஓ… நா’னும்’ முக்கியமா???…”

“அச்சோ படுத்தாத டி நீயும் உங்க அண்ணா மாதிரியே… உனக்கு ஏதாவது ஃப்யூச்சர்ல ஹெல்ப் வேணும்னா நான் செய்ய மாட்டேனா என்ன…”

‘இவளுக்கு விஷயம் தெரிஞ்சு பேசுறாளா இல்ல சும்மா ஃப்ளூக்ல அடிச்சி விடுறாளானு தெரிலேயே…???’

“ஹ்ம்ம் அத அப்பறம் பாப்போம்… இப்போ நேத்து நடந்த மேட்டருக்கு வா மா…”

ஈர்ப்பான்(ள்)….
 




KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,528
Reaction score
43,609
Age
38
Location
Tirunelveli
Athana intha mathri scene lam namma Nasriya Ku Dream la Thana varum ????..
Dream laye proposal n marriage nu mudichrathinga Author sister???..

Worth illainu owner kitaye worth a pesuranga heroine?????...

Oru couples achum Nalla conversation vaikratha idea innum varalaiya????
 




KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,528
Reaction score
43,609
Age
38
Location
Tirunelveli
நானும் வந்துட்டேன்,
பார்கவி டியர்
Akkkaaaa epo varinga?
Epo poringa nu teriyavey illaiye Ka?️?️?️?️
Nalla irukingala Ka?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top