• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

உன்னாலே உனதானேன் 25

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anu Chandran

மண்டலாதிபதி
Joined
Jun 1, 2019
Messages
226
Reaction score
697
Location
Srilanka
மதியம் இரண்டு மணியளவில் வினயிற்கு அழைத்தாள் ரேஷ்மி.... அழைப்பு எடுக்கப்படாமல் இருக்க எதிர்பார்த்ததே என்று எண்ணியவள்
“சாப்டாச்சா” என்று வாட்சப்பில் ஒரு குறுஞ்செய்தியை தட்டிவிட்டாள்... ப்ளூடிக் விழுந்த போதிலும் பதில் வரவில்லை...
“நான் இன்னும் சாப்பிடலை” என்று செய்தியனுப்பிய போது “ஹூ கெயாஸ்” என்று மறுமொழி வர அதில் கடுப்பானவள்
“ஆ... என் எக்ஸ் பாய்பிரண்ட் கேயார்ஸ்...” என்று பதிலனுப்ப
“அப்போ அவன்கிட்ட போய் சொல்லு...”என்று வினயிடம் இருந்து பதில் வந்தது...
“அந்த மரமண்டை, வளர்ந்து கெட்டவன்கிட்ட தான் சொல்லிட்டு இருக்கேன்.... ஆனா அது ஹூ கேயார்ஸ்னு கேக்குது?? பனைமரம் மாதிரி வளர்ந்தவனுக்கு கடவுள் மண்டையில் சரக்கை கொடுக்க மறந்துட்டாரு போல...” என்று வாய்ஸ் மெசேஜை பதிலாக அனுப்பினாள்...
அவளது வாய்ஜ் மெசேஜை ஹெட்செட் உதவியுடன் கேட்ட வினயிற்கு சிரிப்பை கட்டுப்படுத்தமுடியவில்லை....
உரையாடலை தொடர விரும்பியவனுக்கு வேலைப்பளு தடையாக இருக்க
“நான் சாப்டேன்... நீ சாப்பிட்டு ரெஸ்ட் எடு... டேக் கேயார்...” என்றுவிட்டு ஆப்லைன் சென்றுவிட்டான்....
அவனது மெசேஜை பார்த்ததும் மனதினுள் “ஒரு விஷயத்தை தெரிஞ்சிக்கிறதுக்கு எவ்வளவு பேச வேண்டி இருக்கு??? இப்போவே இப்படினா வீட்டுக்கு வந்ததும் நம்மாளு கோபம்னு என்னென்ன காமடி பண்ண போகுதோ...???” என்று பேசியவள் மொபைலை ஓரமாக வைத்துவிட்டு சாப்பிடச்சென்றாள்..
மாலை ஐந்து மணியளவில் ரியாவை பார்க்கிற்கு செல்ல அழைத்தாள் ரேஷ்மி...
“ரேஷ்மி நீ ரொம்ப டயர்டா தெரியிற..இன்னைக்கு ரெஸ்ட் எடு நாளைக்கு போகலாம்....” என்று தடுக்க
“ஐயோ அக்கா அதெல்லாம் ஒன்றும் இல்லை... நான் நல்லா தான் இருக்கேன்... நல்லா தூங்கி எழுந்ததால இப்போ ப்ரஸ்ஸா இருக்கு... நாம போகலாம்... அனுகிட்டயும் இன்னைக்கு போவோம்னு ப்ராமிஸ் பண்ணியிருக்கேன்... கூட்டிட்டு போகாட்டி குழந்தை ஏமாந்திடும்.. பாவம் அக்கா..”
“சரி உனக்கு உடம்புக்கு நல்லா இருந்த எனக்கு எந்த பிராப்ளமும் இல்லை..சரி ஒரு டென் மினிட்ஸ் தா.. நான் ட்ரெஸ் சேன்ஜ் பண்ணிட்டு வரேன்....” என்றவள் அனுவை அழைத்துக்கொண்டு உடைமாற்ற சென்றாள்...
உடைமாற்றி வந்த ரியாவையும் அனுவையும் அழைத்துக்கொண்டு வீரலட்சுமியிடம் சொல்லிக்கொண்டு மூவரும் அருகிலுள்ள பார்க்கிற்கு கிளம்பினர்....
பார்க்கிற்கு சென்றதும் அனுவை விளையாடுமாறு விட்டுவிட்டு அங்கு போடப்பட்டிருந்த பெஞ்சில் அமர்ந்தனர் இருவரும்...
அப்போது ரியாவின் போன் ஒலிக்க அதை எடுத்து பேசினாள்..
பின் ரேஷ்மியிடம் அபி பார்க்கிற்கு வருவதாக கூற பத்து நிமிடங்களில் அபி அங்கிருந்தான்... அபியிடம் குழந்தையை பார்த்துக்கொள்ளுமாறு கூறிய ரியா ரேஷ்மியை அழைத்துக்கொண்டு பார்க்கின் மறுகோடிக்கு சென்றாள்...
அங்கு போடப்பட்டிருந்த பெஞ்சில் இருவரும் அமர்ந்ததும்
“இப்போ சொல்லு ரேஷ்மி... என்கூட என்ன பேசனும்??”
“ரொம்ப தாங்ஸ் கா... நான் எப்படி ஆரம்பிக்கிறதுனு தயங்கிட்டு இருந்தேன்.... “
“புரிந்தது மா... அதான் அனு அப்பாவை வரவைத்து குழந்தையை அவரிடம் ஒப்படைச்சிட்டு வந்தேன்... சரி நீ சொல்லு... என்ன பேசனும் என்கிட்ட???”
“அக்கா வினய் ஏதும் சொன்னாரா உங்ககிட்ட??”
“இல்லை மா... கவின் ஏதும் சொல்லலை... காலையில் முகம் வாடி இருந்தது... நேற்றும் நீங்க இரண்டு பேரும் வரும் போதும் உங்க இரண்டு பேர் முகமும் சரியில்லாததால் தான் என்னனு விசாரிச்சேன்...”
“ஆமா அக்கா... நான் ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன்... ஒரு நல்ல மனுஷனை என்னுடைய முட்டாள் தனமான நடவடிக்கைகளால் ரொம்ப காயப்படுத்திட்டேன்...என்னை விரும்புன ஒரே காரணத்துக்காக அந்த மனுஷனும் நான் காயப்படுத்தும் போதெல்லாம் அமைதியாக இருக்காரு...” என்றவளின் குரல் கம்மியது..
“ரேஷ்மி கொஞ்சம் புரியிற மாதிரி சொல்லுமா??”
“சொல்றேன் கா... முதலில் இருந்து எல்லாத்தையும் சொல்றேன்....
எனக்கு லவ்னா பிடிக்காது.... அதாவது லவ் பண்ணுறேனு சொல்லுறவங்களையே பிடிக்காது.... அதுக்கு காரணம் என்னுடைய பெஸ்ட் ப்ரெண்டோட இறப்பு..”
“என்னாமா சொல்ற??” என்ற ரியாவின் கேள்விக்கு இவ்வளவு நாட்கள் அவள் மனதில் மறையா வடுவாக இருந்த அந்த சம்பவத்தை விபரிக்க தொடங்கினாள்...
அப்போது ரேஷ்மி ப்ளஸ் டூ படித்துக் கொண்டிருந்தாள்...
அன்று காலை ரேஷ்மியின் வீட்டில் வந்து காத்திருந்தாள் அவளது உயிர்த்தோழி நித்யா...
“ரேச்சு இன்னும் எவ்வளவு நேரம்டி?? ஸ்கூல் பெல் அடிச்சதும் தான் நீ கிளம்புவ போல... இனிமே நான் தனியா போய்க்கிறேன்.... நீயும் தனியா போய்க்கோ...” என்று கத்திக்கொண்டு நடுசாலையில் அமர்ந்து ரேஷ்மியின் அன்னை கனகா கொடுத்த பூரியையும் கிழங்கு பிரட்டலையும் ஒரு கட்டு கட்டிக்கொண்டிருந்தாள் நித்யா...
ஜடையை பின்னியவாறு அறையில் இருந்து வெளியே வந்த ரேஷ்மி
“மிஸ். நித்யா இதோடு இந்த வார்த்தையை நூறு தடவைக்கு மேல சொல்லிட்டீங்க.... ஆனா செயல்படுத்துற வழியைத்தான் காணோம்..”
“ஓ உனக்கு அப்படி ஒரு கவலை இருக்கோ....??சரி இனிமே நான் தனியாவே போய்க்கிறேன்.. நீயும் தனியா வா..” என்று பதிலளித்தவள் சாப்பிடுவதை நிறுத்தவில்லை...
“ஹா.. காமடி... எங்க அம்மா பூரி செய்வதை நிறுத்துறவரை உன் கம்பனி எனக்கு எப்பவும் உண்டு” என்றபடி கனகாவிடம் தனக்கும் ஒரு தட்டை வாங்கிக்கொண்டு நித்யாவின் அருகில் அமர்ந்தாள் ரேஷ்மி...
“அப்போ நான் இந்த அல்ப பூரிக்காக தான் வாரேன்னு சொல்லுறியா???” என்று நித்யா எகிற
“இல்லைனு சொல்லுறியா??”
“ஆன்டி பாருங்க ஆன்டி இவளை... நான் உங்க மேலே உள்ள பாசத்தில் நீங்க கொடுக்கும் பூரியை சாப்பிட்டா இவ இந்த பூரிக்காக தான் நான் இங்க வாரேன்னு சொல்லுறா...” என்று நித்யா சிணுங்க அவளை சமாதானப்படுத்தியவர் இருவரையும் பள்ளிக்கு கிளப்பினார்...
இவ்வாறு செல்ல சண்டைகளும் நட்பு பரிமாறல்களுமாக சென்று கொண்டிருந்த அவர்களது வாழ்வில் வந்தது அந்த கொடிய நாள்..
வழமை போல் பாடசாலைக்கு தயாராகி வந்த ரேஷ்மி நித்யாவிற்காக காத்திருக்க அவளோ அன்று வரவில்லை.. சரி செல்லும் வழியில் அழைத்து செல்லலாம் என்று கிளம்பியவள் நித்யாவின் வீட்டிற்கு செல்ல அவளது வீட்டு வாசலின் முன் பலர் நின்றிருந்தனர்...
என்னவென்று புரியாது உள்ளே சென்று பார்த்தவளுக்கு நடப்பது கனவா நினைவா என்று புரியவில்லை...
அங்கு நடு சாலையில் நித்யாவின் குடும்பத்தார் அமர்ந்து அழுது கொண்டிருந்தனர்..
ரேஷ்மியை கண்டதும் எழுந்த வந்து கட்டிக்கொண்டு அழுத நித்யாவின் அன்னை
“ஐயோ ரேஷ்மி நம்ம நித்யா நம்ம எல்லாரையும் விட்டுட்டு போயிட்டா மா... என் மக இப்படி எங்களை தவிக்க விட்டுட்டு போயிட்டாலே... இனி யாருகூட நீ தினமும் ஸ்கூலுக்கு போவ.. ஐயோ ஐயோ..” என்று தன் முந்தனையால் வாயை மூடிக்கொண்டு அழ ரேஷ்மிக்கு நித்யாவின் இறப்பை ஜீரணிக்கமுடியவில்லை.... அவள் கதறியழவில்லை என்றாலும் அவளது கண்களில் இருந்து நீர் கொட்டியவண்ணமே இருந்தது....
அவளது இறப்புக்கான காரணத்தை அறியவேண்டும் என்றுகூட தோன்றாத நிலையில் இருந்தாள் ரேஷ்மி.... நித்யாவின் இறப்பை கேள்விபட்ட ரேஷ்மியின் பெற்றோரும் அங்கு வந்துவிட அவர்களையும் கட்டிக்கொண்டு அழுதனர் நித்யாவின் பெற்றோர்...
மதியம் பன்னிரண்டு மணியளவில் பிரேதம் கொண்டு வரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது...
துக்கத்தை அடக்க முடியாத போதிலும் வந்திருந்த நட்புக்களை கவனிக்க வேண்டியிருந்ததால் வெளியே நின்றிருந்தவர்களை கவனிக்க தொடங்கினாள்...
அப்போது அங்கிருந்து ஒரு இளைஞர் பட்டாளத்தில் யாரோ கதறி அழுவது போலவும் இடையிடையே நித்யாவின் பெயரை அந்த நபர் கூறுவதும் ரேஷ்மியின் காதுகளில் விழுந்தது.
அந்த கூட்டத்தின் அருகே சென்றவள் அவளது டியூஷன் க்ளாஸ் ஆண் நண்பர்கள் ஆறேழு பேர் சூழ்ந்திருக்க அதன் நடுவில் ஒருவன் அவர்களில் ஒருவரை கட்டிக்கொண்டு அழுது கொண்டிருந்தான்...
அவன் “ஐயோ மச்சான்... இப்படி என்னை தனியா தவிக்க விட்டுட்டு போயிட்டாளே டா... நான் அவ கூட சண்டை போட்டுருக்க கூடாது... அய்யோ அவ சாகும் போது கூட நா அவகூட சந்தோஷமாக இருக்கலையே டா...எப்பவும் போல செல்ல சண்டைனு அவ கூட நான் போட்ட சண்டை என் கூட அவ போட்ட கடைசி சண்டையாகிருச்சே.... ஐயோ நித்யா எதுக்கு என்னை விட்டுட்டு போன??? என்னையும் உன்கூட கூட்டிட்டு போமா...இனிமே உன்கூட சண்டையே போட மாட்டேன்...” என்று அவன் அழகையூடு பிதற்ற அவன் நண்பர்கள் அவனை சமாதானப்படுத்திக்கொண்டிருந்தார்கள்...
இதை கேட்ட ரேஷ்மிக்கு இது புது தகவலாக இருந்தது... தகவலுக்கு சொந்தக்காரி உயிரோடு இல்லாத போது இந்த தகவலால் என்ன பயன் என்று தன் வேலையை கவனிக்க தொடங்கினாள்...
மாலையில் பிரேதம் சிதையூட்டப்பட ரேஷ்மிக்கு தான் தன் உடலின் ஒரு பாகத்தை இழந்தது போல் இருந்தது....
எப்போதும் தன்னுடனேயே சுற்றும் ஜீவன் இன்று திரும்பி வரமுடியாத தூரத்திற்கு சென்றுவிட்டது என்ற உண்மையை அவளது மனமோ ஜீரணிக்க மறுத்தது...
ஒருவாரம் பள்ளி செல்ல மறுத்தவளை சமாதானப்படுத்தி பள்ளிக்கு அனுப்பினர் ரேஷ்மியின் பெற்றோர்...
பள்ளி சென்றவளுக்கு நித்யா இல்லாத வகுப்பில் இருக்க பிடிக்கவில்லை... ஒருவாறு நேரத்தை நெட்டித்தள்ளியவன் பாடசாலை முடிந்து நேரே சென்றது நித்யாவின் வீட்டிற்கு...
 




Anu Chandran

மண்டலாதிபதி
Joined
Jun 1, 2019
Messages
226
Reaction score
697
Location
Srilanka
அங்கு அவளை வரவேற்ற நித்யாவின் பெற்றோரிடம் தன்னுடைய ஒரு புத்தகம் நித்யாவிடம் கொடுத்ததாகவும் அதை எடுப்பதற்காக வந்ததாகவும் கூறியவள் அவர்களது அனுமதியுடன் நித்யாவின் அறைக்கு சென்றாள்....
அறையினுள் சென்ற ரேஷ்மி நேரே சென்று நித்யாவின் மேசையில் இருந்த ட்ராயரை திறந்தவள் அதில் தான் நித்யாவின் பிறந்தநாள் பரிசாக கொடுத்த அந்த உலகவரைபடத்தை முன்புற அட்டையாக கொண்ட கனமான டயரியை வெளியே எடுத்தவள் அதை நித்யாவிற்கு கொடுத்தபோது தான் அவளிடம் வாங்கிய உறுதிமொழியை நியாபகப்படுத்தி பார்த்தாள் ரேஷ்மி...
“நித்து இது யூசுவல் டயரி மாதிரி யூஸ் பண்ண கூடாது.... இது நான் குடுத்ததால் உனக்கு இது ரொம்ப ஸ்பெஷல்..அதனால இதில் உனக்கு ரொம்ப ஸ்பெஷலாக நடக்கிற விஷயத்தை மட்டும் எழுதனும்.... அதாவது உன்னுடைய ஸ்வீட் மெமரிஸ்.. புரிஞ்சுதா??” என்று நித்யாவிடம் தான் வேண்டுகோள் விடுத்ததை நினைவுகூர்ந்தவள் அவள் அதனை மீறியிருக்க மாட்டாள் என்ற நம்பிக்கையில் அந்த டயரியை புரட்டத்தொடங்கினாள்....
ரேஷ்மி நினைத்தாற்போல் நித்யாவும் தன்வாழ்வில் நடந்த முக்கியமான நிகழ்வுகள் அனைத்தையும் அந்த டயரியில் தன் அழகிய கையெழுத்தினால் பதிந்திருந்தாள்.. சில பக்கங்களை பிரட்டியதும் ரேஷ்மியின் கண்கள் அந்த பகுதியிலே நிலைகுத்தி இருந்தது....
அதில் என்.எம் என்று எழுதி அதை சுற்றி ஹார்ட் வரையப்பட்டு அம்பொன்று சொருகப்பட்டிருந்தது...
அடுத்த பக்கத்தை பிரட்டியவளுக்கு கிடைத்தது ஒரு கடிதம். கடிதத்தை கையில் எடுத்தவள் மறுகையில் இருந்த டயரியை மேசையின் மீது வைத்துவிட்டு அந்த கடிதத்தை பிரித்து படிக்கத்தொடங்கினாள்...
அந்த கடிதத்தில் அருண் என்றொருவன் நித்யாவை காதலிப்பதாக எழுதியிருந்தான்...
கடிதத்தை வாசித்துகொண்டிருக்கும் போது நித்யாவின் அம்மா வந்துவிட அதை அவர் பார்க்காதவாறு மறைத்து வைத்த ரேஷ்மி அவரிடம் சொல்லிக்கொண்டு அந்த டயரியை எடுத்துச்சென்றாள்..
வீடு திரும்பிய ரேஷ்மி முதல் வேலையாக தன்னறைக்குள் புகுந்துகொண்டவள் அறைக்கதவை தாளிட்டுவிட்டு அந்த டயரியை படிக்கத்தொடங்கினாள்.
அதில் ஒவ்வொரு பக்கத்திலும் நித்யா அருணுடன் தான் கழித்த தருணங்களை ரசித்து எழுதியிருந்தாள்...
அதை ஒவ்வொன்றாக வாசித்த ரேஷ்மிக்கு நித்யாவா இது என்று நம்பமுடியவில்லை... அவள் ஒவ்வொரு நிகழ்வுகளையும் வர்ணித்து எழுதியதிலிருந்தே அவள் எவ்வளவு ஆழமானது என்று புரிந்து கொண்டாள் ரேஷ்மி... ஆனால் அதை நித்யா தன்னிடம் பகிராமல் மறைத்துவைத்திருந்தது அவளது ஆரூயிர் தோழியாக ரேஷ்மியின் மனதை வருத்தியது... ஆனால் இறுதியாக அவள் எழுதியிருந்த சம்பவம் நித்யா தன்னிடம் எதையும் மறைக்காது சொல்லியிருந்தால் இந்நிலை வராது தடுத்திருக்கலாமே என்று மனம் புலம்பித்தவித்தது...
அதில் எழுதியிருந்ததாவது
“இன்னைக்கு அருண் என்னை திட்டிட்டான்.... திட்டியிருந்த கூட பரவாயில்லை.... அவன் என்னை ஏன்டா லவ் பண்ணோம்னு இருக்குனு சொல்லிட்டான்... அவன் நிம்மதியை நான் கெடுத்துட்டேன்னு சொன்னான்.. அவன் சுகந்திரத்தை நான் பறிச்சிட்டேன்னு சொன்னான்... அவனோட லைப்பில் இனிமே நான் இல்லைனு சொல்லிட்டான்.... அவனை நான் லவ்வுனு சொல்லி டாச்சர் பண்ணுறேனாம்.... கடைசியான ஒன்னு சொன்னான்.. இன்னைக்கு தான் அவன் என்னை பார்க்கிற கடைசி நாள்னு சொன்னான்.... அப்போ இனிமேல் என்னை பார்க்க வரமாட்டானா????இதுக்கு முதலிலும் சண்டை பிடிச்சிருக்கோம்...ஆனால் அப்போ அருண் இப்படியெல்லாம் பேசுனதில்லை.... ஆனால் இன்னைக்கு அப்படி சொல்லிட்டேன்..... உண்மையாகவே நான் டாச்சரா அவனுக்கு??? என் வீட்டுலயும் என்னை டாச்சர்னு தானே சொல்லுறாங்க....என் அம்மா அப்பாவுக்கும் என்னை பிடிக்கலை... என்னை காதலிக்கிறேன்னு சொன்ன அருணுக்கும் என்னை பிடிக்கலை.... அப்போ எதுக்கு நான் வாழனும்???” என்று முடிவடைந்தது....
அதை வாசித்த ரேஷ்மிக்கு ஆத்திரம் தாங்கமுடியவில்லை.... இப்படி ஒரு அசட்டு காரணத்திற்காக தன் உயிரை மாய்த்துக்கொண்டாளா நித்யா??? இதை தன்னிடம் பகிர்ந்திருந்தால் ஏதேனும் செய்திருப்பேனே??? காதலில் ஊடல் சகஜம் தானே??? அதற்காக உயிரை மாய்த்து கொள்வதா??? இந்த முடிவு யாருடைய மன அமைதிக்காக??? இந்த முடிவு எத்தனை சொந்தங்களை கஷ்டப்படுத்தியிருக்கும்??? எதனால் இதை பற்றி எதுவும் யோசிக்காது இப்படியொரு மடத்தனமான முடிவை எடுத்தாள் நித்யா??? என்று யோசித்தவளுக்கு ஒரு விஷயம் புரியவில்லை....
கரெண்ட் ஷாக் அடித்ததும் உடனடியாக முதலுதவி கொடுக்காததால் நித்யா இறந்து போனதாகவே நித்யா வீட்டில் கூறினர்... ஆனால் இதை வாசிக்கும் போது அவள் தற்கொலை செய்து தன் உயிரை மாய்த்துக்கொண்டாள் என்று புரிந்தது...
நித்யாவின் இந்த முட்டாள் தனமான முடிவு ரேஷ்மியினுள் பெரும் கோபத்தை கிளப்பியிருந்தது... அந்த கோபம் நித்யா தான் உயிரை மாய்த்துக்கொள்ள காரணமானவன் மீது திரும்பியது... அவனது கோபமான பேச்சு தான் நித்யாவின் இந்த முடிவுக்கு காரணம் என்று முடிச்சிட அவனை சந்தித்து அவனது சட்டையை பிடித்து கேள்வி கேட்க வேண்டும் என்ற வெறி ரேஷ்மியினுள் வந்தது...
அருண் ரேஷ்மி மற்றும் நித்யாவுடன் டியூஷன் கிளாசில் பயிலும் சக மாணவன்...
அன்று மாலை டியூஷன் கிளாசிற்கு சென்ற ரேஷ்மி அருணை தேட அவன் அங்கு இருக்கவில்லை...
அவனைப்பற்றி அவனது நண்பர்களிடம் விசாரித்தபோது அவனுக்கு உடல்நிலை சரியில்லை என்று மட்டுமே கூறினர்... ஆனால் அவர்கள் ஏதோ மறைப்பது போல் தோன்றியது ரேஷ்மிக்கு...
அருணுடைய நண்பன் ஒருவன் ரேஷ்மியின் நண்பியின் பாய் ப்ரெண்ட்... அவள் மூலம் அருண் பற்றி தெரிந்து கொள்ள முனைந்தாள் ரேஷ்மி...
நண்பியின் மூலம் கிடைத்த தகவல் ரேஷ்மியை இன்னும் உலுக்கிவிட்டது.... அருண் இப்போது வைத்தியசாலையில் இருப்பதாக கூறியவள் அவன் நித்யாவின் இறப்பிற்கு பின் திக்பிரம்மை பிடித்தது போல் இருப்பதாகவும் அவனது சித்தம் கலங்கிவிட்டதாக டாக்டர்கள் கூறுவதாகவும் கூறினாள்...
இதை கேள்விப்பட்ட ரேஷ்மிக்கு யாரை நோவது என்று தெரியவில்லை... காதல் என்ற பெயரில் ஜோடியாய் மகிழ்ந்து சுற்றி திரிந்த இரு ஜீவனில் ஒரு ஜீவன் உலகை மறந்தும் மறு ஜீவன் உலகை விட்டு மறைந்தும் அவஸ்தைபடுகிறதே....
இந்த காதல் தேவைதானா...
காதலின் கைங்காரியம் இது தானா?? என்று வெதும்பியவளின் மனம் அந்த கணம் முதல் காதல் என்ற வார்த்தையை வெறுக்கத்தொடங்கியது...
காதல் என்று பிதற்றுபவர்களை தலை தெறிக்க ஓடச்செய்தாள் ரேஷ்மி....
என்று ரேஷ்மி தன் கதையை முடிக்க
“இப்போ சொல்லுங்க அக்கா... நான் என்ன பண்ணட்டும்??? நித்யாவோட இறப்பும் அருணோட இந்த நிலைக்கும் ஒரே காரணம் காதல்...இப்படி இரண்டு பேரோட வாழ்க்கையையும் அழிச்ச காதலை எதிர்க்கிற என்னால் வினய் வெளிப்படுத்தும் காதலை ஏற்றமுடியவில்லை.....
அவரை மேரேஜ் பண்ணும் போது அவரோடு சேர்ந்து சந்தோஷமாக வாழனும் அப்படீங்கிற எண்ணம் மட்டும் தான் என்னோட மனதில் இருந்தது... ஆனால் அவர் என்னை காதலிச்சதாக சொன்னப்போ என்னில் புதைந்திருந்த அந்த கோபம் வெளியே வந்துவிட்டது.... அதன் செயலால் அடிக்கடி வினயை ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேன்... அவரும் என்னுடைய செயலுக்கான காரணம் புரியாமல் தவிச்சிப்போய்ட்டாரு..... ஆனால் இப்போ என் மனம் அவரை விரும்பத்தொடங்கியிருந்தாலும் காதல் மீதான அந்த கோபம் வினையை அணுக எனக்கு தடையாக இருக்கு... நேற்று நான் வினயிடம் நடந்துகொண்ட விதம் அதன் வெளிப்பாடு தான்... என்னால் அதை கட்டுப்படுத்த முடியலை... அதனால் ரொம்ப கஷ்டப்படுறது வினய் தான்.... எனக்கு என்ன செய்றதுனே புரியலை.... காலம் இதை சரிப்படுத்தும்னு நினைத்தேன்... ஆனா அது நடக்கலை... இதற்கிடையில் அம்மா அப்பாவோட இறப்பு என்னை ரொம்ப மோசமா பிஹேவ் பண்ண வைத்துவிட்டது... அப்போ கூட வினய் ரொம்ப சப்போர்ட்டா தான் இருந்தாரே ஒழிய அவருடைய கோபத்தையோ ஏக்கத்தையோ வெளிப்படுத்தலை.... இப்படிபட்ட ஒரு நல்ல மனுஷனை கஷ்டப்படுத்துறோமேனு தான் ரொம்ப கஷ்டமாக இருக்கு.... அவரு நினைத்திருந்தால் எப்பவோ என்னோடு சேர்ந்திருக்கலாம்.... ஆனா அவர் என்கிட்ட கேட்டது என்னுடைய காதலை.... ஆனால் என்னால் அதை கொடுக்க முடியலை...” என்று கூறியவளின் குரலில் அத்தனை துயரம்...
ரேஷ்மியை ஆதரவாக அணைத்த ரியா “இங்க பாரு ரேஷ்மி..... உன்னுடைய நிலை எனக்கு புரியிது.... ஆனா மாற்றம் ஒன்று தான் மாறாது..... மற்றையதெல்லாம் மாறும்.... நித்யாவோட இழப்பு உன்னை ரொம்ப காயப்படுத்தியிருக்குனு எனக்கு புரியிது.... ஆனால் அவளது முடிவுக்கு காரணம் தனிமையே தவிர காதல் இல்லை....
அவளுக்கு அருணோட உறவும் இல்லைனா தனித்துவிடும் அப்படீங்கிற பயம் தான் அவளை அந்த முடிவு எடுக்க வைத்தது... அவ தன்னோட காதல் மேலே முழு நம்பிக்கை வைத்திருந்தானா அவ இந்த முடிவை எடுத்திருக்க மாட்டா... நீ சொல்வதை வைத்து பார்க்கும் போது அவளுக்கு அவ வீட்டு ஆட்களோடு பெரிதாக ஒட்டுதல் இல்லைனு நினைக்கிறேன்... சரியா??”
“ஆமா அக்கா... அவ எப்பவும் எங்க வீட்டுல தான் இருப்பா... அவ அம்மா அப்பா வேலைக்கு போனதால் அவ தனியா தான் இருப்பா... நான் தான் அவளை என்னுடன் என் வீட்டுக்கு கூட்டிட்டு போயிருவேன்... அவளோட அம்மா அப்பாவோட அவ பெரிசா அட்டாச்டு இல்லை...”
“இப்போ நான் சொன்னது புரியிதா?? அருண் துணையும் இல்லாமல் தனித்துவிடுவோமோ என்ற பயம் தான் அவளை அந்த கோழைத்தனமான முடிவை எடுக்க வைத்தது.. அருண் கூட தன்னுடைய செயலால் தான் அவள் இப்படி ஒரு முடிவை எடுத்துவிட்டாலோ என்று குற்றவுணர்ச்சியில் தான் அப்படியாகியிருப்பான்.... அது காதலின் விளைவு இல்லைமா.... விதியின் சதி..... இதில் நீ காதலை வேணாம்னு சொல்றதுல எந்த வித நியாயமும் இல்லை...” என்று ரியா ரேஷ்மியை மெதுவாக குழப்பிவிட்டாள்...
ஏற்கனவே வினயின் காதலில் மயங்கித்தவிக்கும் ரேஷ்மியின் காதல் மனம் இப்போது ரியா கூறிய கோணத்தில் இருந்து யோசிக்கத்தொடங்கியது....
அவளது யோசனை படிந்த முகத்தில் அவள் குழம்பிவிட்டாள் என்று புரிந்து கொண்ட ரியா அவளது கைகளை அழுத்திகொடுத்தாள்...
அந்நேரம் ரியாவின் மொபைல் அழைக்க அதை எடுத்து பேசியவள்
“ரேஷ்மி அனு அப்பா கூப்பிடுறாரு... வா நாம கிளம்பலாம்... இருட்டுவதற்கு முதல்ல கிளம்பலாம்” என்று ரேஷ்மியை கையோடு அழைத்துக்கொண்டு சென்றாள் ரியா...
வீட்டிற்கு வந்ததும் அறைக்குள் புகுந்துகொண்ட ரேஷ்மி கட்டிலில் அமர்ந்து ரியா கூறியதை பற்றி சிந்திக்க தொடங்கினாள்...
 




kaivalya

அமைச்சர்
Joined
Jun 24, 2018
Messages
2,229
Reaction score
1,517
Location
tamilnadu
இனியாவது எங்க கவின புரிஞ்சிக்க முயற்சி பன்னு ரேஷ்மி
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top