• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

உன்னாலே உனதானேன் 27

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anu Chandran

மண்டலாதிபதி
Joined
Jun 1, 2019
Messages
226
Reaction score
697
Location
Srilanka
காலை ஆறுமணிக்கு கண்விழித்த ரேஷ்மி அவளை அணைத்திருந்த வினயின் கையினை மெதுவாக விலக்கியவள் அவனது உறக்கம் கலையாதவாறு எழ முயன்றவளை ஏதோ தடுத்தது... என்னவென்று பார்க்க அவளது நைட்டியின் ஒரு முனை வினயின் கையில் அணிந்திருந்த மோதிரத்தில் சிக்கியிருந்தது...
அதை விடுக்க முயன்று கீழே குனிந்தவள் மெதுவாக அவனது மோதிரத்தில் சிக்கியிருந்த அந்த முனையை எடுக்க முயன்று கொண்டிருக்கும் போதுதான் கவனித்தாள் அவன் அணிந்திருந்த மோதிரத்தில் கே என்ற எழுத்தினுள் ஆர் என்ற எழுத்து பின்னிப்பிணைந்து எழுதப்பட்டிருந்தது... அதை பார்த்தவளுக்கு அதில் முத்தமிட தோன்றிட மெதுவாக அவன் கையை எடுத்து அந்த மோதிரத்திற்கு இதழ்களின் ஈரம்படாதவாறு ஒரு முத்தத்தை பதித்துவிட்டு எழுந்து சென்று குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்...
குளியலறையில் இருந்து வெளியே வந்தவள் தன்னை அலங்கரித்துக்கொண்டு பூஜை அறைக்கு சென்று விளக்கேற்றிவிட்டு இறைவன் முன்னிலையில் தன் வாழ்வு வினயுடம் இனிக்க வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்துவிட்டு சமையலறைக்குள் புகுந்து கொண்டாள்..
காலை உணவை தயாரித்து முடித்தவள் காபி கலந்துகொண்டு தங்கள் அறைக்கு சென்றாள்..
வினயை எழுப்ப சென்றவள் ஒரு நிமிடம் தயங்கி யோசிக்கத்தொடங்கினாள்..
“இப்போ இவரை எழுப்பலாமா வேணாமா?? அவருக்கு நம்ம மேல உள்ள கோபம் இன்னும் குறையலைனு அவர் கீழ படுக்கை விரிச்சி படுத்திருக்கதிலேயே புரியிது... இப்போ நாம எழுப்பி காபி குடுத்தா வாங்கிப்பாரா இல்லை நீயும் வேணாம் உன் காபியும் வேணாம்னு போயிருவாரா?? சீ சீ.. நம்ம ஆளு அவ்வளவு டெரர் எல்லாம் இல்லை... என்ன லேசுல கோபம் வராது... வந்த என்ன பண்ணுவாருனு சரியாக யூகிக்க முடியாது... நம்ம கையால காபி வாங்கி குடிக்க வைக்கனும்.... ஆனா டென்சன் படுத்தக்கூடாது.... அப்படி ஒரு பிளானை யோசிக்கனும்...இப்போ என்ன பண்ணலாம்???” என்று யோசித்தவளுக்கு வினயின் கைபேசி கண்ணில் பட்டது...
அதை பார்த்ததும் சட்டென்று ஒரு யோசனை தோன்றிட மொபைலை எடுத்தவள் அதில் ஏதோ செய்துவிட்டு பழையபடி வினயின் அருகில் வைத்தவள் அறை வாசலுக்கு சென்று நின்றுகொண்டு நடப்பதை கவனிக்க தொடங்கினாள்..
அவள் அங்கிருந்து நகர்ந்த அடுத்த நொடி அவனது மொபைல் அலறத்தொடங்கியது..
அது அலறியதாவது “டேய் புருஷா... குட்மார்னிங்... லவ்யூடா....எந்திரி நேரமாச்சு..” என்று ரேஷ்மியின் குரலில் ஒலித்தது.
முதல் முறை அலறிய போது வினய் எழுந்துவிட்டானா என்று எட்டி பார்த்தாள் ரேஷ்மி.. ஆனால் வினயோ இன்னும் உறங்கிக்கொண்டிருந்தான்.
இரண்டாவது முறை அலறியபோதும் இதே தொடர்ந்தது... மூன்றாவது முறை அலறிய போது வினயிடம் சிறு அசைவு தெரிந்தது...
அவனிடம் அசைவு தெரிந்ததும் நடப்பதை கவனிக்க தொடங்கினாள் ரேஷ்மி..
வினயோ “இவ எதுக்கு இன்னைக்கு நம்மை கனவுல இப்படி டார்ச்சர் பண்ணுறா??? லவ்யூ லா சொல்றா....” அரை தூக்கத்தில் உளறிபடி மறுபடியும் தூங்க முயல அதை பார்த்த ரேஷ்மிக்கு சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை.
மீண்டும் மீண்டும் ரேஷ்மியின் குரல் ஒலிக்க வினயின் தூக்கம் முழுவதுமாக கலைந்தது...
கண்விழித்தவன் சுற்றும் முற்றும் ரேஷ்மியை தேட அவள் அங்கு இல்லை...
“என்னடா இது?? அப்போ இவ்வளவு நேரம் நாம கேட்ட குரல் கனவுலயா கேட்டுச்சு?? அப்படினாலும் அது எதுக்கு தேய்ந்த டேப் ரெக்கார்டர் மாதிரி சொன்னதையே சொல்லிட்டு இருக்கு???? ஒரு வேளை லவ் முத்திப்போய் இந்த த்ரீ பட தனுஷ் மாதிரி நமக்கு ஏதும் மண்டையில் ஓடுற வயர் ஏதும் லூசாகிருச்சா??” என்று தனக்குள் வினவியபடி எழுந்து அமர்ந்தவனை மீண்டும் கலைத்தது ரேஷ்மியின் அந்த குரல்..
வினயோ சுற்றும் முற்றும் தேட கண்ணில் ஏதும் தென்படவில்லை...
“ஐயோ ஷிமி வாய்ஸ் கேக்குது.. ஆனா ஷிமி இல்லையே.. நமக்கு கண்ணுல ஏதும் கோளாறோ??? இந்த மாலைக்கண் மாதிரி காலைக்கண்ணுன்னு ஏதாவது டிசாடரா???” என்றவன் மீண்டும் சுற்றும் முற்றும் தேடி இறுதியில் அவனது மொபைலில் இருந்து தான் ரேஷ்மியின் குரல் வருவதை கண்டு கொண்டான்...
மொபைலை எடுத்தவன் அதை பார்க்க அதில் அலாரம் என்று தோன்ற அதை நிறுத்தியவன் தன் மொபைலை நோட்டமிட்டவாறு தலையை நிமிர்த்த அப்போது தான் உள்ளே வருவது போல் வினய் முன்னே காபி தட்டுடன் வந்தாள் ரேஷ்மி...
படுக்கையில் இருந்து எழுந்தவன் படுக்கையை மடித்து வைத்துவிட்டு ரேஷ்மி கொண்டு வந்த காபியை வாங்கி குடிக்க ஆரம்பித்தான்.
காபி குடிப்பதாய் சொல்லிக்கொண்டு ஓரக்கண்ணால் தன்னவளை சைட் அடித்துக்கொண்டிருந்தான் வினய்.. அவள் காபி எடுத்து வரும் போதே அவளது அலங்காரம் கண்ணில் பட அதை அவள் அறியாது ரசித்துக்கொண்டிருந்தான் வினய்.
மென்பச்சையும் வெள்ளையும் கலந்த காட்டன் சாரியில் அழகுப்பதுமையாய் இருந்தாள் ரேஷ்மி. குளித்ததற்கு சான்றாய் தலை முடியை துவாயினால் முடிந்திருந்தாள். அதிலிருந்து ஆங்காங்கே சில கூந்தல் வெளி வந்திருந்திருந்தது... நெற்றியை வட்டமாய் சிறிய சிவப்பு நிற பொட்டொன்று ஆக்கிரமித்திருக்க வகிடானது இரத்த சிவப்பு நிற குங்குமத்தால் நிறந்தீட்டப்பட்டிருந்தது..
கண்ணிற்கு கீழே கறுப்பு நிற மை ஆழமாய் பதிந்திருக்க அதனுடன் கம்பெனி கொடுத்திருந்து அந்த வெள்ளைக்கல் பதித்த மூக்குத்தி.
அந்த ஒப்பனை போதாதென்று அந்த ஸ்ரோபரி வண்ண இதழ்களும் லிப் பாம் இனால் பாலிஷ் செய்யப்பட்டு அதன் கட்டமைப்பை செழிப்பாய் காட்டியது..
இந்த செயற்கை ஒப்பனையை தோற்றகடித்தது அந்த கன்னத்தில் விழுந்த சிறு குழி...
ஐந்து நிமிடத்தில் குடித்து முடிக்க வேண்டிய காபியை பதினைந்து நிமிடங்கள் கடந்த பின்பும் குடித்து முடிக்கவில்லை.
ரேஷ்மியோ வினய் எதற்காக இப்படி நேரம் தாழ்த்துகிறான் என்று புரியாமல் அவனை ஆராய்ச்சியோடு பார்க்க அப்போது தான் தெரிந்தது அவன் இல்லாத காபியை சுவைத்து கொண்டிருப்பது..
அதை பார்த்தவள் வினயிடம் இருந்த கப்பை பிடுங்கி எடுத்தவள்
“கப்பில் இருந்த காபி தீர்ந்து ரொம்ப நேரமாச்சு... நீங்க போய் குளிச்சிட்டு வாங்க...” என்றுவிட்டு ரேஷ்மி அறையிலிருந்து செல்ல வினயோ
“இவளுக்கு திடீர்னு என்னாச்சு?? செம்மையா ரெடியாகி அட்டன்டன்ஸ் குடுக்குறா..போனில் அவ வாய்சையே அலாரமாக வைத்து நம்மளை எழுப்புற?? சம்திங் ராங்...அது மட்டும் புரியிது.. இவ எப்போ எப்படி நடந்துப்பான்னு புரிஞ்சிக்கவே முடியலையே.. ஆனா ஒன்னு இன்னைக்கு என் பொண்டாட்டி செம்மையா இருக்கா... காபி குடிக்கும் போது செய்த வேலையை சாப்பிடும் போதும் கண்டினியூ பண்ணிற வேண்டியது தான்... ஆனா நாம தான் அவ மேல கோவமா இருக்கோமே..எப்படி சைட் அடிக்கிறது???” என்று யோசித்தவாறு குளியலறைக்குள் புகுந்து கொண்டான் வினய்.....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top