• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

எனது சிறுகதை தொகுப்பு - அறிமுகம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

எனது முதல் சிறுகதை தொகுப்பு "பிள்ளையார் சுழி!" இப்போது விற்பனையில்...வாங்கி ஆதரிக்க விருப்பமா?

  • ஆம்

    Votes: 2 100.0%
  • இல்லை

    Votes: 0 0.0%

  • Total voters
    2

Prana2009

நாட்டாமை
Joined
Apr 10, 2018
Messages
96
Reaction score
331
Location
Bangalore
அனைவருக்கும் வணக்கம்!

எனது முதல் சிறுகதை தொகுப்பு பிள்ளையார் சுழி! இப்போது விற்பனையில்.

படிக்க... பரிசளிக்க....
இனிமை மற்றும் எளிமையான நடையில், வாசிப்பாளர்களை நேசிக்கத்தூண்டும், நேர்மறை சிந்தனைகளை விதைக்கும்
சிறுகதை தொகுப்பு "பிள்ளையார் சுழி!"

அனைவரும் வாங்கி ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்....அமேசானில் வாங்க...

புத்தகம் வாங்க:
ப்ரணா, 80085-82111
(அல்லது)
https://www.amazon.in/dp/B07FR6X89M
 




Attachments

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
சிறுகதைத்தொகுப்பின்
பெயர் "பிள்ளையார் சுழி"
ரொம்பவே நல்லாயிருக்கு,
ப்ரணா2009 சார்
 




Prana2009

நாட்டாமை
Joined
Apr 10, 2018
Messages
96
Reaction score
331
Location
Bangalore
காற்றின் மொழி பாடல் போட்டியில் முதல் தேர்வாளர் பட்டியலில் அடியேனும் இடம் பெற்றுள்ளேன்.
மொத்தம் 700 பாடல்களிலிருந்து 66 பேர் முதல் பட்டியலில் இடம் பெற்றுள்ளோம். சக "பாட்"டாளிகள் அனைவருக்கும் வாழ்த்துகள்!
#காற்றின்மொழி
எண் 6: பிரனானன் என்பது நான் தான். - ப்ரணா
https://www.amazon.in/dp/B07FR6X89M WhatsApp Image 2018-10-08 at 5.38.48 PM.jpeg
 




Prana2009

நாட்டாமை
Joined
Apr 10, 2018
Messages
96
Reaction score
331
Location
Bangalore
எனது முதல் சிறுகதை தொகுப்பு "பிள்ளையார் சுழி!" (ஜூலை 2018 வெளியீடு)
இரு மாதங்களில் 300 பிரதிகளுக்கு மேல் விற்பனையாகியுள்ளது. இதுவரை வாங்கி ஆதரித்த அனைவருக்கும் நன்றி!
விமர்சனம் எழுதி ஊக்குவித்த #தினமலர், #குமுதம், மற்றும் #பொதிகைமின்னல் #தேன்சிட்டு பத்திரிக்கைகளுக்கு நன்றி
?
புத்தகம் பெற:
ப்ரணா, 80085-82111
****
https://www.amazon.in/dp/B07FR6X89M
******
http://bookonlion.com/product/pillaiyaar-suzhi/
******
https://www.flipkart.com/pillaiyaar-suz…/p/itmf7drzqbhfuyyz…
******
விளம்பரம் மற்றும் விமர்சனம்:
https://youtu.be/UfEdLLqWJk0
******
http://books.dinamalar.com/details.asp?id=25166
விரைவில்:
https://www.panuval.com/
புத்தக பூங்கா - ராயப்பேட்டை, சென்னை
 




Prana2009

நாட்டாமை
Joined
Apr 10, 2018
Messages
96
Reaction score
331
Location
Bangalore
புதுப்பாடலாசிரியர் போட்டியில் வெற்றி பெற்ற எனது பாடல் மற்றும் தமிழ்த்திரைப்பாக்கூடம் மாணவர்களின் பாடல்கள் அடங்கிய இசை தகடு 15-09-2018 சென்னையில் வெளியிடப்பட்டது.
"மரகதக்காடு" இயக்குநர் மங்களேஷ்வரன் மற்றும் இசையமைப்பாளர் ஜெய் பிரகாஷ் வெளியிட்டனர்.
அருகே பாடலாசிரியர் பிரியன் மற்றும் பாடகி கமலஜா.
*******************************************************************
பாடல்: பம்பர கண்ண வெச்சு பல்லாங்குழி ஆடிட்டா....
பாடகர்: திரு. வேல்முருகன்
பாடலாசிரியர்: ப்ரணா
 




Attachments

Prana2009

நாட்டாமை
Joined
Apr 10, 2018
Messages
96
Reaction score
331
Location
Bangalore
அனுபவம் புதுமை!
**************************
எனது பிள்ளையார் சுழி! சிறுகதை தொகுப்பை வெளியிட்ட நாளிலிருந்து (வெளியீட்டு விழா வைக்கும் அளவுக்கு நான் பிரபலம் இல்லாததால் ஊடகம் தான் என் ஒரே துணை), பற்பல அனுபவங்கள். அதையே ஒரு புத்தகம் ஆக்கலாம் போல.
*******
எனது முந்தைய பதிவு ஒன்றில் குறிப்பிட்டது போல், விற்பனை பொறுப்பு முழுதும் என்னிடமே உள்ளதால் கையில் இருக்கும் அத்தனை பிரதிகளையும் எப்படியாவது வாசிப்பவர்கள் தேடி சேர்த்துவிடும் முனைப்பில் தனி நபராய் நான் மேற்கொண்ட சில முயற்சிகளும் அதன் மூலம் நான் பெற்ற அனுபவங்களும் நினைத்தாலே இனிப்பவை.
1, நேரடியாக களம் இறங்கி விற்பது:
பேருந்து நிலையம், ரயிலடி, பெங்களூர்
தமிழ்ச்சங்கம், சென்னை புத்தக கண்காட்சி
வாயில்; எழுத்தாளனே நேரடியாக
விற்பதாலோ என்னவோ வரவேற்பு அமோகம்
*************
2, உறுப்பினராக இருக்கும் வாட்ஸ்-அப்
குரூப்புகளிலும், நண்பர்கள் மற்றும்
உறவினர்களுக்கு 'ப்ராட்காஸ்ட்' என்னும்
வழியிலும் செய்தி அனுப்புவது
(வஞ்சனையில் இல்லாமல் வாழ்த்துகள்
குவிகிறது; வாழ்த்திய அனைவரும்
வாங்கியிருந்தால் நான் இந்நேரம் மூன்றாவது
பதிப்பே வெளியிட்டிருப்பேன்
?)
ஆனால் இதன் மூலம் வாங்கியோரும் உண்டு.
அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்
?
**************
3, அமேசான்.இன் மற்றும் பிளிப் கார்டி-ல் விற்பது:
வரவு எட்டணா செலவு பத்தனா
கணக்குத்தான் எனினும், ஊடக விற்பனை
சூட்சமம் பல அறிந்து வருகிறேன். (தனி
புத்தகம் வெளியிடம் அளவிற்கு)
**************
4, யூடியுப் விளம்பரம்:
கூகுளில் கணக்குத்துவங்கி, பல்வேறு
தடைகளை கடந்து, நமது காணொளியை
மற்ற வீடியோக்களின் மத்தியில் கொண்டு
வருவது பிரம்ம பிரயத்தனம். அதையும்
கற்றுக் கொண்டு வருகிறேன் (செலவினமும்
அதிகம்...
:))
**************
5, தமிழ் பத்திரிக்கைகளில் விளம்பரம்:
இது கொஞ்சம் முட்டாள்தனம் தான்;
இருந்தாலும் அதையும் முயற்சித்துள்ளேன்.
**************
6, புத்தக விமர்சனம்:
தேடித்தேடி எழுத்து ஊடகம் மற்றும்
காணொளி ஊடகங்களுக்கு புத்தக பிரதியை
அனுப்பி வருகிறேன்; தினமலர்,
பொதிகை மின்னல் போன்ற
பத்திரிக்கைகளில் வந்த விமர்சனங்கள்
நிச்சயம் உற்சாக டானிக் தான்.
இப்படியாக இன்னும் பல்வேறு முயற்சிகளை தொடரவே விழைகிறேன்.
**************
இதுவரை ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி! என் புத்தக்த்தை குறித்த விமர்சனங்களும் வந்த வண்ணம் உள்ளன; அவை தனிப் பதிவில்.
************
அப்படி என்னதான் இந்தாளு எழுதி கிழிச்சிருக்கான் என படிக்க விரும்புவோருக்கு....
ப்ரணா, 80085-82111
******
https://www.amazon.in/dp/B07FR6X89M
******
http://www.gowthampathippagam.in/books/book25.html
******
https://www.flipkart.com/pillaiyaar-suz…/p/itmf7drzqbhfuyyz…
******
விளம்பரம் மற்றும் விமர்சனம்:
https://youtu.be/UfEdLLqWJk0
******
http://books.dinamalar.com/details.asp?id=25166
 




Attachments

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top