• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

என்ன கொடுமை சார் இது? 6(b)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

ஶ்ரீவிஜய்

மண்டலாதிபதி
Joined
May 13, 2019
Messages
138
Reaction score
685
Location
Chennai
தன் தோழியின் வீட்டு கிரஹபிரவேசத்திற்கு என்று வந்திருந்த ப்ருந்தா.. இளஞ்சிவப்பு நிற டிசைனர் புடவை அணிந்திருந்தாள்.


தன் மொபைலில் வந்த அழைப்பை ஏற்று பேச வெளியே வந்த ப்ரியன்.. தோட்டத்தில் பூத்திருந்த ரோஜாவிலிருந்து ஒன்று தரையில் விழுந்து.. கை கால் முளைத்து, கண்களில் ரசனையெனும் மையிட்டு.. இதழ்களில் புன்னகையோடு தன் முன்னால் நிற்பதைக் கண்டான்.


தோட்டத்தில் தோழிகளோடு அரட்டையில் இருந்தவளின் கண்கள்.. அவ்வப்போது ரோஜாக்களை வருடி வருடி.. அதன் அழகைத் திருடித் திருடி நெஞ்சுக்குள் பொத்தி வைத்துக் கள்ளச் சிரிப்பு சிரித்துக் கொண்டிருந்தது.. தன்னையும் ஒருவன் கண்களால் வருடித் திருட முயன்று கொண்டிருக்கிறான் என்பதை அறியாமல்..!


விசேஷம் முடிந்து.. விடைபெறும் நேரம் வந்ததும்.. கடினப்பட்டு போயிருந்த தன் நெஞ்சத்தை நனைத்து.. இலகுவாய் உள்ளே சென்று அமர்ந்து கண்சிமிட்டியவளை.. விழிகளால் தேடினான்.


யாருடனோ சிரித்து பேசிக் கொண்டிருந்தவளை கண்ட பின்.. அருகில் சென்று, "எக்ஸ்க்யூஸ் மீ.. ம்ம்.." என்று எப்படி பேச்சைத் துவங்குவது என தயங்கி கொண்டிருக்கையில்..


"நீங்க.. இன்ஜினியர் ப்ரியன் தான?" என்று கேட்டாள், தன் யூகம் சரியாக இருக்கும் என்ற ஆர்வம் தாங்கிய உற்சாகக் குரலில்..!


இனம் புரியாத சந்தோஷ விழிகளோடு, ஆனால் குரலில் அதை மறைத்து, "ஹ்ம்ம்.. நீங்க..?" என்று கேட்டான்.


"இந்த வீட்டுப் பொண்ணோட ஃப்ரெண்ட்.. வீடு ரொம்ப அழகா இருக்குது சர்.. அதான் யாரோட ப்ளான்னு கேட்டேன்.. உங்கள தான் கை காமிச்சா.." என்றாள், மலர்ந்த புன்னகையுடன்..!


"தாங்க்ஸ்.." அதற்கு மேல் சத்தியமாக என்னப் பேச எனப் புரியவில்லை.. நெற்றியைத் தேய்த்து விட்டு கொண்டு, அவளைத் தவிர மற்ற இடங்களை பார்வையால் அலசினான்.


"சொல்லுங்க சர்.. எதுக்கு கூப்ட்டீங்க..?"


"அது.. வந்து.."


அதற்குள் அவன் பின்னிருந்து ஒரு குரல், "ப்ருந்தா.. கிளம்புவோமா? எனக் கேட்டது.


'ப்ருந்தா..' தித்திப்பாய் இனித்த நெஞ்சம்.. அவள் கிளம்ப போகிறாள் என்பதில்.. சற்றே சுணங்கியது.


"தீப்தி.. இங்க வா.. வர்ஷினி சொன்னாளே.. இன்ஜினியர்.. இவங்க தான்.." என்றாள், தான் முதலில் அறிமுகமாகி விட்ட சந்தோஷத்தில்..!


இதெல்லாம் பழக்கமில்லாத ப்ரியன் சற்று எரிச்சலடைந்தான். எனினும் அவளிடம் அதைக் காட்டாமல் இருக்க முடிந்ததே தவிர.. அந்த பெண்ணின் புன்னகைக்கு பதில் புன்னகையை தர முடியவில்லை.


தலையை மட்டும் அசைத்து வைத்தான். அதைப் பார்த்தவள், "நீ வெளிய வெய்ட் பண்ணு தீப்தி.. இதோ வந்துடறேன்.." என்று கூறி அனுப்பி வைத்தாள்.


தீப்தி தோள்களைக் குலுக்கி விட்டு நகர்ந்ததும்.. ப்ரியன் தன் மனம் முழுதும் ஆக்ரமித்து உள்ளுக்குள் காதல் சிற்பங்களை செதுக்கி கொண்டிருந்தவளை நிமிர்ந்து பார்த்தான்.


தன் தோழியிடம் அவன் காட்டிய பாரா முகத்தில்.. உதடுகளை மடித்து, தன் ஏமாற்றத்தை கண்களில் வெளிப்படுத்தினாள்.


இப்போது அவளும் எதுவும் பேசத் தோன்றாமல்.. 'எதற்கு அழைத்தாய்' என விழிகளால் அவன் விழிகளிடம் கேள்வி எழுப்பினாள்.


எப்படி தன் காதலை வெளிப்படுத்த எனப் புரியாமல் குழம்பியவன்.. "ஐ'ம்.. ஐம் இன் லவ் வித் யூ.." என்று பட்டென்று கூறினான்.


அவன் தன்னிடம் காதல் உரைக்கிறான் என்று புரிவதற்கு முன்.. மென்மையான காதலை இத்தனை விறைப்பான உடல்மொழியோடு கூட ஒருவனால் வெளிப்படுத்த முடியுமாவென்றே திகைத்து நின்றாள்.


திகைப்பிலிருந்து மீளாமல் நின்றவளிடம், "உங்க நம்பர் குடுங்க.. பேசணும்.." என்றான்.


"ஹாங்!!!"


"ப்ச்.." என்று எரிச்சலாக மீண்டும் நெற்றியைத் தேய்த்து விட்டுக் கொண்டவன்.. சட்டென்று அவள் இடக்கையில் வைத்திருந்த மொபைலைப் பிடுங்கி.. ஆன் செய்தான்.


பேர்ட்டன் வரைய சொன்ன திரையைப் பார்த்து மேலும் கடுப்பாகி.. அவள் முன் திரையைக் காட்டினான். அவனின் மிரட்டலானப் பார்வையில்.. மிரண்டவள் நடுங்கும் விரலால் திரையை வருடி லாக்கை விடுவித்து விட்டு.. அவன் முகம் பார்த்தாள்.


அதிலிருந்து தனக்கு கால் செய்தவன்.. "சேவ் பண்ணிக்கோ.. அப்புறம் கால் பண்றேன்" என்று அவள் முகத்தை மீண்டும் ஒரு முறை முழுதாகப் பார்வையால் நனைத்து விட்டுச் சென்றான்.


மிரண்டு நின்றிருந்தவள்.. செல்லும் முன் அவன் பொழிந்த காதல் பார்வை மழையில் தன்னையறியாமலேயே நனைந்து.. துளிர்த்து.. சிலிர்த்து.. புதிதாய் பூத்து.. அப்பூக்களைக் கோர்த்து.. அவனிடமே தந்து தன் மனமாளிகைக்குள் தயக்கமாய் வரவேற்றுக் கொண்டாள்.


அவளிடம் பேசாவிட்டால் வேலையாகாது என்ற நிலையில் இருந்த ப்ரியன்.. அன்று மாலையே கால் செய்து, 'காதல் சொல்வாயா? மாட்டாயா?' என கிட்டத்தட்ட மிரட்டினான்.


அவனின் முரட்டுத்தனத்தில் சற்றே மிரண்டாலும்.. அவனின் மருவக்காதலில் கரையவே செய்தாள், ப்ரியனின் ப்ரியமான ப்ருந்தா..!


அதன் பின் இருவரும் நேரில் சந்தித்து பேசி.. காதல் வளர்த்தனர். சந்திக்கும் போதெல்லாம் திருமணம் குறித்து ப்ரியன் கேட்பதற்கு.. "அப்பா ரொம்ப ஸ்ட்ரிக்ட் ப்ரியன்.. சி. ஏ. வேற ரெண்டு அட்டெம்ட்லயும் கோட்டை விட்டுட்டேன்.. இப்ப போய் எப்டி எனக்கு கல்யாணம் பண்ணி வைங்கனு சொல்ல முடியும்?" என்று சொல்லி தட்டி கழித்து விடுவாள்.


இவனும் சரி படிப்பை முடிக்கட்டுமென விட்டு விடுவான். இப்படியே ஆறு மாதங்கள் சென்ற நிலையில் தான்.. திடீரென நேற்று வந்து பிரேக்கப் என்று கூறி விட்டு சென்றாள். இன்று மதியம் கண்களால் வெறுப்பைக் கக்கி, முகம் திருப்பினாள். இப்போது பரிதவிப்பாய் பார்த்து போகிறாள். மண்டை காய்ந்து போய் ஆதவனின் தோள் சாய்ந்திருந்தான் ப்ரியன்.


ஆதவன் எல்லாம் சரியாகிவிடும் என நம்பிக்கை கூறி.. அவனைத் தேற்றினான். இருவரும் இரவு உணவை அங்கேயே முடித்து விட்டு.. விடைபெற்று கொண்டு தத்தமது வீட்டிற்கு கிளம்பினர்.
 




Haritha

அமைச்சர்
Joined
Aug 13, 2018
Messages
3,706
Reaction score
9,954
Location
Pollachi
Super. ??
Priyan ippadi iru proposal ah. ??
Pavam brindha adei yannaga panniruinga???
 




Sowdharani

அமைச்சர்
Joined
Feb 7, 2018
Messages
1,438
Reaction score
1,923
Location
Chennai
dei priyan unnoda love kuda olunga solla theriyala unnai ellam enna pannurathu
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top