• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

என்ன கொடுமை சார் இது? 9 (a)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

ஶ்ரீவிஜய்

மண்டலாதிபதி
Joined
May 13, 2019
Messages
138
Reaction score
685
Location
Chennai
மறுநாள் காலையில் அலுவலகத்தில் தன் கேபினில்.. கன்னத்தில் கை வைத்து அமர்ந்திருந்தான், விஷ்வா. அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.. தான் ஏமாற்றி வாங்கிய கம்பெனி டாக்யூமெண்ட்ஸ் ப்ரியனிடம் சென்று விட்டது என்று..! ஆனால் இது எப்படி நடந்தது என்று தான் புரியாமல் அமர்ந்திருக்கிறான்.


நேற்றிரவு பெட்டி எப்படி கீழே விழுந்தது? உள்ளிருந்த பத்திரம் மட்டும் எப்படி காணாமல் போனது? வீட்டிற்கு யாரும் வந்த சுவடும் இல்லை. போலீசிற்கு போகலாமா? என்னவென்று கம்ப்ளெய்ண்ட் தருவது? நிறுவனத்தை தன் பெயருக்கு மாற்றிய விவரம் நிறுவன ஊழியர்களுக்குக் கூட இன்னும் தெரியாது. அனைவரும் ப்ரியனும் பார்ட்னர் என்றே நினைத்திருக்கின்றனர். இந்நிலையில் போலீஸிடம் சென்றால் திருடனுக்கு தேள் கொட்டினாற் போலல்லவா இருக்கும்?


ஏதேதோ நினைத்து தனக்குள் உழன்று கொண்டிருக்கும் போது.. இன்டர்காமில் விசிட்டர் வந்திருப்பதாக தகவல் வந்தது. வந்திருப்பது ப்ரியனாக தான் இருக்கும் எனத் தானே முடிவெடுத்துக் கொண்டு.. மேலே எதுவும் விசாரிக்காமல், உள்ளே அனுப்புமாறு பணித்தான்.


ஆனால் உள்ளே வந்தவனைப் பார்த்ததும்.. ஆச்சர்யமாக நோக்கி.. "நீங்க.. நீங்க ரவி சர் பிஏ.. மிஸ்டர் ஆதவன்.. இல்ல?" என்று கேட்டான், பரபரப்பாக..!


'தேவேந்திரன் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்' உடன் ஒப்பிடுகையில்.. ப்ரியனின் நிறுவனம் மிகவும் சிறியது தான்.. தேவேந்திரன் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் இரண்டு தலைமுறைகளை சந்தித்த நிறுவனம்.. பிவி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் இரண்டு வருடங்களை மட்டுமே எட்டவிருந்தது.


அதோடு ப்ரியனைப் போல் அல்லாமல்.. ப்ரியன், விஷ்வாவின் தோழனான ரவீந்திரனின் வலக்கை, இடக்கை, சைடு கை என அனைத்தும் இந்த ஆதவன் தான் என்று அறிந்திருந்தான் விஷ்வா. எனவே தான் ஆதவனைக் கண்டதும் அவனிடம் இந்த பரபரப்பு..!


"ஆமா சர்.. எப்டி இருக்கீங்க..?"


"ஹ்ம்ம்.. குட் மிஸ்டர் ஆதவன்.. ரவி எப்டி இருக்கான்? பேசி ரொம்ப நாள் ஆச்சு.."


"யாஹ்.. ஹி ஆல்சோ ஃபைன்.."


"என்ன திடீர் பிவி விசிட்.. உங்க பிஸி ஷெட்யூல்லயும்?"


"ஒரு சின்ன ப்ராஜெக்ட் சர்.. ரவி சர்க்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க போல.. மறுக்க முடியல.. ஆனா, இப்ப ஃபைவ் ஸ்டார் ரெஸ்டாரண்ட் ப்ராஸஸ்ல இருக்குது.. சோ.. இப்போதைக்கு வேற எதையும் தொட முடியாது.. அதான் உங்களால பண்ண முடியுமானு கேக்கலாம்னு வந்தேன்.."


"ஓ!! சர்ட்டன்லி ஆதவன்.. என்ன மாதிரி ப்ராஜெக்ட்..?"


ஆதவனின் வாய்ஜாலம் நாம் அறியாததா? இல்லாத திட்டத்தை இருப்பதாகக் கூறி, இடத்தையும் கைக் காட்டி.. விஷ்வாவை நன்றாகவே நம்ப வைத்து விட்டான்.


"இதுல நாங்க இடத்துக்கு அட்வான்ஸ் பே பண்ணின டீடெய்ல்ஸ் இருக்குது.." என்று சிறிய பேப்பர் ஹோல்டரை எடுத்துக் காட்டினான். "இடம் பாக்கறதுக்கு உங்க சைட் இன்ஜினியர் அனுப்புனீங்கனா எங்க ஆள் ஒருத்தர் வந்து காட்டிடுவார்.."


இன்ஜினியர் என்றதும் மீண்டும் ப்ரியனின் நினைவில் அமிழ்ந்து.. குழம்பினான் விஷ்வா.


"தென்.. உங்களுக்கு ஓகேனா பார்ட்டிய கூட்டிட்டு வரேன்.. ப்ராஜெக்ட்க்கு பைசா கால்குலேட் பண்ணி கொட்டேஷன் அவர்க்கிட்டயே குடுத்துடுங்க.. பில்டிங் ப்ளான் கூட ஏற்கனவே பார்ட்டி கேட்ட மாதிரி நானே போட்டு வச்சுட்டேன். நீங்க இடம் பார்த்தப்புறம்.. உங்க இன்ஜினியர்கிட்டயும் கன்சல்ட் பண்ணிக்கோங்க விஷ்வா சர்.. "


"ஹ்ம்ம்.. ஓகே மிஸ்டர் ஆதவன்.." மனதில் குழம்பிக் கொண்டிருந்தவன்.. ஆதவனிடம் கவனத்தை சிதற விட்டான்.


பேனாவை பிடிப்பதற்கு கூட திராணியற்றவன் போல அமர்ந்திருந்தவனை கீழ் கண்களால் கவனித்து கொண்டே.. "ஓகே சர்.. அப்ப இது பத்தின அக்ரிமென்ட்ல கொஞ்சம் சைன் பண்ணிடறீங்களா? நாங்க அட்வான்ஸ் பே பண்ணிட்டோம்.. தட்'ஸ் வொய்..." என்று இழுத்தவாறே.. முதல் இரண்டில் மட்டும் வேலை சம்பந்தப்பட்ட காகிதங்களையும்.. மற்றவை நிறுவனத்தை ப்ரியனுக்கு தாரை வார்த்து தருவதாக கூறிய.. சில காகிதங்களையும் எடுத்து வைத்தான், ஆதவன்.


யோசித்து கொண்டிருந்த விஷ்வா.. "ஹ்ம்ம்.. ஷூயூர்.." என்று பிசிறு தட்டியக் குரலோடு.. ஆதவன் நீட்டிய காகிதங்களை மேலோட்டமாக பார்த்து விட்டு தன் கையெழுத்தை இட்டான்.


ஆதவன் மேலும் சிறிது நேரம் பேசி விட்டு.. விடைபெற்று கொண்டான். அவன் போன பின்னும் விஷ்வாவின் நினைவுகளில் ப்ரியன் மட்டுமே நிறைந்திருந்தான்.


அவனுக்கு நன்றாக தெரிந்தது, நிறுவனம் தன் கைவிட்டு போகப் போகிறதென்று..! அதை ஏற்று கொள்ள முடியாமல் மனம் தத்தளித்து தவித்தது. என்னவோ இவனே உழைத்து வளர்த்த நிறுவனம் போல்.. அதிலேயே உழன்று கொண்டிருந்தான். இருந்தாலும் தன் சம்மதம் இல்லாமல் அவனால் அவன் பெயருக்கு மாற்ற முடியாது என பலவீனமாக நம்பினான்.


எந்த நேரமும் ப்ரியனை எதிர்பார்த்திருந்த விஷ்வா.. அன்று மாலையில் அவன் ப்ருந்தாவுடன் கைக் கோர்த்து கொண்டு வருவான் என கொஞ்சமும் நினைக்கவே இல்லை.


'இது எப்படி..?' காலையில் இருந்து யோசித்து யோசித்து சூடாகிக் கிடந்த மூளை.. இப்போது வெடித்து சிதறி விடும் கொதிநிலையை அடைந்தது..


உள்ளே வந்த ப்ரியன்.. "என்னடா மறுபடியும் மறந்து போய் வந்துட்டேன்னு பார்க்கறியா? பாவம் பச்சப்புள்ள மாதிரி முழிக்கறியே மச்சி.. ஜோ ஜேட்.. ஜோ ஜேட்.." என்று அவனைப் போலவே போலி இரக்கம் காட்டினான்.


"ஒரு நாள்.. ஒரு நாள் கூட உன்னை வேற மாதிரி நினைச்சதே இல்லடா.. நம்ம என்னத்த தர்றோமோ அது தான் நமக்கு திரும்ப கிடைக்கும். ஆனா.. ஒட்டுமொத்த நம்பிக்கையையும் நான் உன் மேல் தானடா வச்சிருந்தேன்..? நீ ஏன் எனக்கு அந்த நம்பிக்கைய தராம போயிட்ட?"


விஷ்வா பேச்சு வராமல் நின்றிருந்தான்.


"ஃப்ரெண்டுனு நீ என்னை தோள்ல சாய்ச்சுக்க வேணாம்.. குப்புற தள்ளி விடாம இருந்துருக்கலாம்ல? எத்தனை வருஷ ஃப்ரெண்ட்ஷிப்..? பணத்துக்காக தூக்கிப் போட்டுட்டல்ல? ரைட்.. பாஸ்ட் இஸ் பாஸ்ட்.. எப்டி..? நீயே வெளில போயிடறியா? இல்ல…." என்று வாக்கியத்தை முடிக்காமல் விஷ்வாவின் முகத்தை வெற்றி பார்வை பார்த்தான்.


"நோ.. இது என் கம்பெனி.. நான் எதுக்கு வெளில போகணும்..? ஐ நெவர்.." விஷ்வாவின் குரலில் நடுக்கமும், பதட்டமும்..


ப்ரியன் கூலாக ப்ருந்தாவைப் பார்த்து கண்சிமிட்டி, "அம்மு.. சர்கிட்ட அத எடுத்து காட்டு" என்றான்.


ஓரத்தில் சிறிய டெடிபியர் தொங்கி கொண்டிருந்த தன் கைப்பையில் இருந்து கற்றை காகிதங்கள் அடங்கிய கோப்பு ஒன்றை எடுத்து டேபிளில் விஷ்வாவின் முன் வைத்தாள், ப்ருந்தா.


இதோ.. இதோ.. தான் வெளியேறும் தருணம் வந்து விட்டது.. தன்னை வெளியேற்ற காத்திருக்கும் அரக்கனை போல் காட்சியளித்த கோப்பினை மெதுவாக பிரித்துப் பார்த்தான்.


நிறுவனத்தை ப்ரியன் பெயருக்கு மாற்றி தருவதாக எழுதியப் பத்திரங்கள்.. விஷ்வாவின் கையெழுத்தோடு..! இது எப்படி சாத்தியம்..! நிமிர்ந்து ப்ரியனைப் பார்த்தான்.


என்ன பாக்கற? ரெண்டே நாள்ல எப்டி இது நடந்தது பார்க்கறியா? ஏமாத்தின உனக்கே ஒரு வழி இருந்துருக்கும் போது.. நேர்மையா இருந்த எனக்கு ஒரு வழி கூடவா இல்லாம போய்டும்? அதான் உன் வழிலயே வந்து என் கம்பெனிய எடுத்துக்கிட்டேன். ஹாஹாஹா.. ஏண்டா.. ஒருத்தன் வந்து கையெழுத்து போடு சொன்னா படிச்சு பார்க்க மாட்டியா? மடையன் மாதிரி கண்ண மூடிட்டு போட்ருவியா?"


விஷ்வாவிற்கு ஆதவன் வந்து போனதே அப்போது தான் புத்தியில் உறைத்தது.. ஆனால்.. நிறுவனக் கூட்டத்திற்கு சென்று வரும் தனக்கே ஆதவனை அதிகம் தெரியாத பொழுது.. கல்லோடு மல்லுக் கட்டும் ப்ரியனுக்கு எப்படி தெரிந்தது? விஷ்வா மற்றும் ப்ரியனின் தோழனான ரவியின் ஆள் தான் ஆதவன்..


'அப்படியானால்??? உதவிக்காக ப்ரியன் சென்றது.. ரவியிடமா? அதனால் தான் பத்திர பதிவு கூட இவ்வளவு சீக்கிரம் முடித்திருக்கிறானா?' அவனாகவே அவனின் யூகங்களைத் தீர்மானித்துக் கொண்டான்..


என்ன கொடுமையடா இது.. விஷ்வாவைப் போன்றவன்.. தன் சக்திக்கு மீறி ப்ரியனிடம் வேண்டுமானால் போராட முடியும்.. 'தேவேந்திரன் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்' எனும் மிகப் பெரிய சாம்ராஜ்யத்தின் வாரிசான ரவியிடம் எப்படி மோத முடியும்?


ஒழுங்காக இருந்திருந்தாலாவது தான் நான்கில் கால் பங்களித்த பிவி - யில் இருந்திருக்கலாம்.. இப்போது.. மொத்தமும் போய் வெற்று ஆளாய் நிற்கின்றான்.


சரி.. நிறுவனத்தில் தான் இந்த ப்ரியன் தன்னை வென்று விட்டான்.. ஆனால் இந்த ப்ருந்தாவுடன் எப்போது, எப்படி ராசியாகித் தொலைந்தான்? எரிச்சலுடன் ப்ருந்தாவைப் பார்த்து விட்டு.. ப்ரியனை நோக்கினான்.


"என்ன செல்லோ.. என் செல்லத்த எப்டி சமாதானம் பண்ணினேன்னு யோசிக்கறியா? அதுக்கு ஏண்டா இப்டி மஞ்சமாக்கான் மாதிரி முழிக்கற?" என்று அவனின் வசனத்தை அவனுக்கே திருப்பி படித்தான், ப்ரியன்.


"ஒண்ணுமில்ல.. நேத்து உன் வீட்டுக்கு வந்தப்ப உன் மொபைல்ல இருந்த மெமரி கார்ட எடுத்துட்டு போய்.. என் தேவிகிட்ட காட்டினேன்.. மேடம் அதுல நீ வச்சிருந்த குப்பையெல்லாம் பார்த்துட்டு என் மேல எந்த தப்பும் இல்லனு வெளில ரிலீஸ் பண்ணி விட்ருந்த என்னை திரும்பவும் அவங்க இதய ஜெயிலுக்குள்ளத் தூக்கி போட்டுக்கிட்டாங்க.. இனி எப்பவும் என்னை ரிலீஸ் பண்ணவே மாட்டாங்களாம்டா.. ம்ம்.." என்று தித்திப்பாய் வருந்தினான்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top