என் வாழ்க்கை பந்தம் அவன் அத்தியாயம் 1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Poornima Madheswaran

Author
Author
Joined
Jan 25, 2020
Messages
50
Reaction score
31
Points
18
Location
namakkal
அத்தியாயம் 1:

அழகிய காலை பொழுதில் தேவராயபுத்தில் உள்ள ஒரு அழகிய வீட்டில் நம் நாயகி தான் போற்றும் தாதா, பாட்டி (நாராயணன்,தமயந்தி) இன் புகைபடத்தை வணங்கிய உடன் அன்றாட வாழ்க்கையை தொடங்குவாள் நித்தியக்கல்யாணி (நித்தியா தோழிகளுக்கு, நமக்கும்).நம் நாயகி சந்திரன் மற்றும் லட்சுமியின் முதல் மகள்(அதாவது அவர்கள் வெறுக்கும் மகள்). சந்திரனின் பெற்றவர்கள் மூலம் வளா்க்கப்பட்டவள் மற்றும் அவர்களின் உயிர் அவள்.

நித்தியா மற்றும் தேவகியும் பள்ளியில் இருந்து நண்பர்கள் அவர்கள் மட்டும் அல்ல தேவகி பெற்றோர்க்கும் (அருள் மற்றும் அம்பிகா) மற்றும் தமையன்.


நளனுக்கு, பாசமான தங்கை மற்றும் நித்தியா செல்லம் ஆவாள். தேவகி விட நளனுக்கு நித்தியா ஒரு படி மேல் தான் இதனால் தேவகிக்கு என்றும் தன் அண்ணன் என்றால் பெருமையே கூடவும் ஒரு கா்வமும் உண்டு. இவர்கள் இருவரும் சேர்ந்தால் வீடு ரணகளம் தான். அன்று நித்தியா, தேவகிக்கு கடைசி தேர்வு (Feasion designing ).வழக்கம் போல் அவள் தேவகி உடன் சென்றால்.


புகழ் பெற்ற கல்லூரியில் அன்று மாணவர் பயணம் முடிந்து அடுத்த கட்டத்தை நோக்கி வாழ்க்கை சென்றது. தேர்வு முடிந்து மற்ற தோழிகள் உடன் மகிழ்ந்து மாலையில் இருவரும் தேவகி வீடுக்கு சென்றான்.


அங்கு அவா்களை வரவேற்றது வடை சுடும் வாசனை மற்றும் டீயின் நறுமணம் தான், பிறகு தான் அம்பிகா மற்றும் அருள் வரவேற்றனர். அவர்களிடம் செல்லம் கொஞ்சிவிட்டு தான் வீட்டுக்கு செல்வாள். அனைத்து தந்தையை பேல் அருள் அவர்களிடம் அடுத்து என்ன செய்ய போகிறீர்கள் என்று கேட்காமல் அவர்களின் யோசனையை மட்டும் கேட்டார்.

நித்தியா தான் முதலில் தன்னுடைய திட்டத்தை ஆரம்பித்தால். அப்பா முதலில் ஒரு கம்பெனியில் வேலைக்கு சோ்ந்து அதன் நுணுக்கத்தை கற்று கொண்டு அதற்கு பிறகு ஒரு தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால். அதற்கு தேவகி அனுபவம் இருந்தால் தான் எங்களால் தொழிலில் வெற்றி பெற முடியும் என்றால். அருள் அவர் அனுபவத்தை கூறினார்.

அம்பிகாக்கு அத்தனை பெறுமை அதை மறைத்துக்கொண்டு (பின் யார் அவா்களை அடக்குவது அவர் இருவரும் சரியான வாலு வீட்டில் மட்டும்) தன் மகள்களுக்கு வடை, டீ யை கொடுத்தாா்.

நித்தியா, அப்பா Vkn சில்க்ஸ் இல் ஒரு offer இருக்கு, நாளைக்கு தான் interview இருக்கு போலாம்னு இருக்கேன் என்பவரிடம்.

என்னது நாளைக்கா இன்னைக்கு தான் exam முடிந்தது அதற்குள் interviewஆ? அதலாம் வேண்டாம் வேறபாக்கலாம், ஒரு வாரம் என் கூடத்தா இருக்கனும் இரண்டு பேரும் six months எங்கூட time spent பன்னல இப்ப என்னன்னா வேலைக்கு போரேன் சொல்லாிங்க?, அவன் என்னடானா அங்க இருந்து வர time இல்லை சொல்லறான்?, இவர் என்னடானா வேலை வேலைனு இருக்காரு நா எதுக்கு தான் இங்க இருக்கேன்? எல்லா என்னமோ பன்னுங்க நா மட்டும் தனியா இருக்கேன் போங்கஎல்லாம் என்று தன் ஆற்றாமையை வெளிப்படுத்தினார்.

தேவகி, அம்மா நாளைக்கு interview மட்டும் தான் அதுமட்டும் Attend பண்ணீட்டா போதும் please மா.

நித்தியா, அம்மா interview முடிந்ததும் ஒரு ஒரு வாரம் நீங்க ஆசை பட்ட மாதிரி உங்க கூடத்தான் OK வா, என் செல்ல அம்மா இல்ல? அப்பாவும் நம்ம கூடத்தா இருப்பார் OK வா? அப்பா!, கண்டிப்பா ஒரு வாரம் அம்மா உங்ககூடத்தான் done. அதான் அம்மா அப்பாவும் சரிவு சொல்லிட்டார் இல்ல சிரிங்க அம்மா? சிரிங்க பாக்கலாம்?.

அம்பிகாவும் சிரித்து விட்டால் போடி வாலு என்று செல்லமாக திட்டியவர். டீ, வடையை சாப்பட்டுவிட்டு நித்தியா, நாளைய பயணத்தை தேவகி உடன் முடிவு செய்து விட்டு வீடு நோக்கி சென்றால்.

அங்கு அவளை வெறுமையான வீடே வரவேற்றது. வேண்டாத நினைவுகள் ஆக்கிரமித்தது அதை தட்டி அடக்கி விட்டு குழிக்கச்சென்றால். பிறகு இரவு உணவை முடித்து விட்டு நாளைய interviewக்கு தேவையானதை எடுத்து வைத்து விட்டு இரவு 11மணிக்குத்தான் தூக்கத்திர்க்கு சென்றால்.

அதோ போல், அவள் வீட்டின் நேர் எதிரே உள்ள வீட்டில் கலகலப்பு குறைந்து தூக்கத்திர்க்கு சென்றனர்.

அந்த வீட்டில் நித்தியாவை நேசிக்கும் சில அன்பு இதயங்களும் உள்ளன, பல வெறுக்கும் இதயங்களும் உள்ளன. இதை பற்றி எல்லாம் அவள் கவலைபட்டதும் இல்லை ஏன் எனில் அவர்களுக்கு மேல் இவள் அவர்களை வெறுக்கிறால் என்றால் மிகை அல்ல. அவர்கள் வேறு யாரும் இல்லை இவள் உறவுகள் தான்.

அதே சமயம் அம்பிகா தன் வளா்பு மகளை பற்றி கவலையில் இருந்தால். அதை புாிந்து கொண்ட அருள், கவலை பாடமா நம்ம நித்தி பார் எவ்வளவு சந்தோசமா இருக்க போரா நாமும் பார்கதானபோறேம், அது மட்டுமல்ல பா என் நித்தியா எவ்வளவு சாதனை புாிவானு? அப்ப நா அந்த familyய பாத்து கேட்பேன் என் நித்தியாக்கு பன்னு அந்நியாயத்தை அப்ப அவங்க எல்லாம் என்ன பதில் செல்லராங்கனு பாக்குறேன்?, அது வரை நம்ம நித்தியாவ பத்திரமா பார்த்துக்கனும். (அப்பெழுது மூன்றாவதாக ஒரு குரல் கேட்டது அது வேறு யாரும் அல்ல நளன் தான்)கண்டிப்பா நித்தியா சாதிப்பா தேவகிமா என்ற திசையை நோக்கினார்கள்.

தேவகி ஓடிச்சென்று தன் அண்ணனை கட்டிக்கொண்டால். பின் அவனை நலம் விசாரித்து விட்டு தான் அனைவரும் இரவு உணவை முடித்து தூக்கத்திற்க்கு சென்றான். ஆம் நளன் நித்தியாவால் இங்கு வரவைக்கப்பட்டான் அம்பிகாவின் வருத்தத்தை போக்குவதற்கு அதுமட்டுமல்ல? அவன் வேலையையும் முடித்துவிட்டு வந்துள்ளான்.

நளன் கோவையில் உள்ள சில கம்பெனியில் லீகல் அட்வைசராக தன் வேலையை மாற்றி உள்ளான். ஒரு ஆறுமாதமாக அதனால் தான் சிறிது காலமாக வீட்டிற்கு வரமுடியவில்லை அவனால்(தனது நண்பனின் Vknசில்க்ஸ் மற்றும் Vkn jewellery, factoryயில் தான் லீகல் அட்வைசராக உள்ளான் அதுவும் அவன் திறமையால்).


பந்தம் தொடரும்......
 
banumathi jayaraman

Well-known member
Joined
Jan 17, 2018
Messages
26,931
Reaction score
65,467
Points
113
:D :p :D
உங்களுடைய "என் வாழ்க்கை
பந்தம் அவன்"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
பூர்ணிமா மாதேஷ்வரன் டியர்
 
Poornima Madheswaran

Author
Author
Joined
Jan 25, 2020
Messages
50
Reaction score
31
Points
18
Location
namakkal
:D :p :D
உங்களுடைய "என் வாழ்க்கை
பந்தம் அவன்"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
பூர்ணிமா மாதேஷ்வரன் டியர்
Thanks sis
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top