• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

எழுதுகிறேன் ஒரு கடிதம் - 15

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
வணக்கம் தோழமைகளே, இன்றைக்குக் கொஞ்சம் விரைவாகவே வந்துவிட்டேன். இன்றைய பதிவு தான் இந்தக் கதையின் மையக்கரு. என் மகளுடைய பள்ளிக்குச் சென்றிருந்த பொழுது அவளுடைய நெருங்கிய தோழியையும் அவள் பெற்றோர்களையும் சந்தித்தோம். அச்சிறுபெண் கறுப்பினத்தவளாக இருக்க அவள் பெற்றோர்களோ இருவருமே வெள்ளையர்கள். இது குறித்து வீட்டுக்குத் திரும்பும் பொழுது காரில் பேசிக் கொண்டிருக்கையில் என் மகள் சொன்னாள், அப்பெண் நைஜீரியாவைச் சேர்ந்தவள் என்றும் இவர்கள் அவளை அங்கிருந்து தத்தெடுத்து வந்து வளர்ப்பதாகவும், நைஜீரியாவில் அப்பெண்ணின் பெற்றோர் சகோதர சகோதரிகள் இருப்பதாகவும் கூறினாள். இதையெல்லாம் அவள் தோழியே இவளுக்குச் சொன்னதாகவும் கூறினாள். இருவரும் படிப்பதென்னவோ முதலாம் வகுப்புதான். இங்கு இது சகஜம்.
இந்த விஷயத்தை நான் உணர்வுப்பூர்வமாகப்பார்க்க என் கணவரோ இதுதான் நடைமுறை என்கிறார். இப்பொழுது கதையைப் படித்துவிட்டு நீங்களே சொல்லுங்கள் ராஜன் செய்தது சரியா இல்லையா என்று. என்னைப் பொறுத்தவரை அவர் செய்தது தான் சரி என்று எனக்குப்படுகிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதைத் தெரிவியுங்கள். பரீட்சை முடிந்து முடிவுக்காகக் காத்திருக்கும் மனப்பக்குவத்தில் நான் இருக்கிறேன் இப்பொழுது. சம்ரிதியின் மன உணர்வுகளை சரியாக உங்களுக்குக் கடத்தியிருக்கிறேனா என்பதிலும் கொஞ்சம் ஐயப்பாடு உள்ளது. எனவே மறக்காமல் உங்கள் கருத்துகளைத் தெரிவியுங்கள்.

படிக்கும் போதே நாளைக்கு ரிசல்ட்னா இன்னைக்கு எல்லாரும் தூங்காம டென்ஷனா இருப்பாங்க. நான் முழிச்சிருந்தா தானே டென்ஷன்னு நல்லா இழுத்து போர்த்திக்கிட்டுத் தூங்குற ஆளு. அதனால இப்பவும் நான் தூங்கப் போறேன். நீங்க இன்னைக்குப் பதிவைப் படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லுங்க. நான் காலையில எந்திரிச்சுப் பார்க்கிறேன். (எனக்கு இங்க இப்போ இரவு நேரம் மக்களே... சோ ???)
806839CD-EA07-49B2-9EF5-80EB2F4F3DC4.jpeg
 




Last edited:

Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
அத்தியாயம் - 15

விஷயமறிந்து விரைந்து வந்து சேர்ந்தான் மித்ரன். "மாமா ஒரே ஒரு தடவை ராஜா பயலேன்னு சொல்லுங்க மாமா" என்ற மித்ரனின் கதறல் அனைவரையும் கதி கலங்கச் செய்திருந்தது. யாரும் யாருக்கும் ஆறுதலளிக்கக் கூடத் தெம்பில்லாமல் இருந்தார்கள். அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து ஒன்பது மாதங்கள் கடந்திருந்த நிலையில் இப்படியொரு இழப்பை சத்தியமாக யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை.

வெடித்து அழும் லெக்ஷ்மியைக் கூட சமாதானப்படுத்த முடிந்தது. கண்களில் கண்ணீர் வழிந்தோட வெறித்த பார்வையுடன் அமர்ந்திருக்கும் சம்ரிதியை யாராலும் நெருங்கக் கூட முடியவில்லை. மித்ரன் உட்பட யாருடைய பேச்சும் அவள் செவிகளை எட்டவேயில்லை. ஒற்றைப் பெண் அதிலும் பத்து ஆண்டு கால தவிப்பிற்குக் கிடைத்த பரிசு, ஒட்டுமொத்தப் பாசத்தையும் கொட்டி வளர்த்திருந்தார் ராஜன். அப்பேற்பட்ட தந்தை ஒரே இரவில் இல்லாமல் போனதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை அந்தப் பேதைக்கு.

அனைத்துக் காரியங்களும் நடந்து முடிந்த பின் துக்க காரியம் நடந்த வீட்டில் சுப காரியம் எதைப் பற்றியாவது பேச வேண்டும் என்று வயதில் பெரியவர் ஒருவர் ஆரம்பிக்க, அனைவரின் பார்வையும் விஸ்வநாதனையே வட்டமிட அவரோ கையிலிருந்த மொபைலைத் தீவிரமாக நோண்டிக் கொண்டிருந்தார்.

அங்கு ஒரு விரும்பத்தகாத மௌனம் சூழ்ந்து கொண்டது. அதைப் பார்த்த தேஜூவின் தந்தை, "என் பொண்ணு இந்த வருஷம் படிப்பை முடிக்கிறா. அவளுக்கு மாப்பிள்ளை பார்க்கலாமுன்னு இருக்கோம். யாராவது நல்ல் மாப்பிள்ளை இருந்தா சொல்லுங்க" என்று கூறி சூழ்நிலையை ஓரளவு சகஜமாக்கினார்.

நடந்ததைக் கவனித்த மித்ரன் தன் காதலுக்காக நிறைய போராட வேண்டியிருக்கும் என்று முதல்முறையாக உணர்ந்தான். அதுவரையில் தன் காதலுக்கு எந்த விதத்திலும் எதிர்ப்பு வராது என்றே இறுமாந்திருந்தான் மித்ரன். சம்ரிதிக்கோ நடப்பதனைத்தும் காதில் விழுந்தாலும் கருத்தில் பதியவில்லை.

எப்பேற்பட்ட துக்கம் நிகழ்ந்திருந்தாலும் காலம் துக்கப்பட்டுக் கொண்டு நிற்பதில்லை. அது தன் வேலையை செவ்வனே செய்து கொண்டேயிருக்கும். ஓரளவுக்கு சம்ரிதியும் லெக்ஷ்மியும் வழமைக்குத் திரும்பியிருந்தார்கள்.

இவர்கள் பாதுகாப்பிற்கென அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டுத்தான் மித்ரன் கிளம்பியிருந்தான். அதற்கு மேல் அவன் இங்கிருப்பதற்கு அவனுடைய வேலை இடம் கொடுக்கவில்லை. ஒரு நாளைக்கு இருபத்தி நான்கு மணி நேரம் போதாமல் அவன் ஓட வேண்டி இருந்தது. நாள் தவறாமல் தொலைபேசி அழைப்பு மட்டும் வந்துவிடும் மித்ரனிடமிருந்து. சுஜாதா, தேஜூ அவளுடைய அம்மா எனறு யாராவது ஒருத்தர் ஆள் மாற்றி ஆள் அடிக்கடி வந்து போய் கொண்டிருந்தார்கள்.

ஒருநாள் கல்லூரி விடுமுறையின் பொழுது, "அம்மா நான் வீடு க்ளீன் பண்ணவா?" என்று கேட்டபடி வந்து நின்றாள் சம்ரிதி.

"இப்ப எதுக்குடா" என்று லெக்ஷ்மி வினவ,

"சும்மா இருந்தா ஒரு மாதிரி இருக்கும்மா. டிவி பார்க்கவும் பிடிக்கலை. படிக்கவும் மூடில்லை. அதான்" என்று கூறியவள் முகத்தைப் பார்க்கப் பொறுக்கவில்லை லெக்ஷ்மிக்கு. 'ஆண்டவா என் பொண்ணையாவது எனக்கு பழையபடி மீட்டுக் கொடு' என்று மனதிற்குள் வேண்டிக் கொண்டவர்,

"உனக்கு போரடிக்குதுங்குறதுக்காக வீடு க்ளீன் பண்ணப் போறியா? நான் கூட என் பொண்ணுக்கு பொறுப்பு வந்திடுச்சுன்னு இல்ல நினைச்சேன். சரி என்ன பண்ணப் போற சொல்லு. ரெண்டு பேரும் சேர்ந்து பண்ணலாம்" என்று அவளை சகஜமாக்க முயன்றார் லெக்ஷ்மி.

"இல்லம்மா அப்பாவுக்கு உடம்பு சரியில்லாம போனதிலிருந்தே ரெண்டு ரூம்லயும் இருக்குற பரண் க்ளீன் பண்ணவே இல்ல. நான் அதைப் பண்றேன். நீங்க மேல எல்லாம் ஏற வேண்டாம். நான் பார்த்துக்குறேன்."

"பரண் மேலயா? வேண்டாம்டா. அது யாராவது ஆள் வைச்சுப் பண்ணிக்கலாம். நீ அதெல்லாம் செய்ய வேண்டாம். அங்க வியர்த்துக் கொட்டும். அப்புறம் உனக்கு உடம்புக்கு எதாவது வந்திடப் போகுது"

"அதெல்லாம் ஒன்னும் பண்ணாதும்மா. ப்ளீஸ்ம்மா" ஏதோ வீரதீர செயல் புரியப் போவதைப் போல கெஞ்சத் தொடங்கி விட்டாள் சம்ரிதி.

"சரி என்னமோ பண்ணு. நான் சமையலை முடிச்சிட்டு வரேன். எதாவது வேணுமுன்னா கூப்பிடு" என்று கூறிவிட்டு சமையலறைக்குச் சென்றார் லெக்ஷ்மி.

முன்ன பின்ன ஏறிப் பழக்கமில்லாததால் தட்டுத் தடுமாறி ஏறியவள், 'ஹப்பா இது என்ன இவ்வளவு பெருசா இருக்கு. பேசாம் இறங்கிடுவோமா' என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள். பின் 'கொஞ்சம் பாத்திரம் தானே இருக்கு, எடுத்து துடைச்சு வைப்போம்' என்று அந்த வேலையில் ஈடுபடத் தொடங்கினாள். கீழே பெட்ரூமில் உள்ள குளியலறைக்கு மேல் கட்டப்பட்டிருந்ததால் கிட்டத்தட்ட அந்தப் பரண் ஒரு சிறிய அறை அளவுக்குக் காட்சி அளித்தது.

முழுதாக வியர்வையில் குளித்தபடி ஒவ்வொன்றாகத் துடைத்துக் கொண்டே வந்தவளை ஈர்த்தது அந்தப் பரணின் கடைசி மூலையில் இருந்த ராஜனின் கிடார் பெட்டி. 'இது என்னது? அப்பாவோடதைத் தான் மித்ரன் அத்தான் எடுத்துட்டுப் போயிட்டாங்களே' என்று யோசித்தவாறே அதைத் திறந்து பார்க்க அதனுள் கிடார் இல்லை. 'ஓ வெறும் பாக்ஸ் தானா? பழசு போலிருக்கு அதான் அப்பா இங்க வைச்சிருக்காங்க' என்று எண்ணிக் கொண்டே அதைத் துடைக்கத் தொடங்கினாள்.

வெளியே துடைத்து முடித்தவள் அதைத் திறந்து உள்ளேயும் துடைக்க அப்பொழுது தட்டுப்பட்டது ஒரு சின்னஞ்சிறு ஜிப். அதற்குள் தந்தை எதையாவது வைத்திருக்கிறாரா என்று தெரிந்து கொள்ள ஆவலுடன் அதைத் திறந்தாள் பெண்.

தந்தையின் நினைவாக அவர் உபயோகப்படுத்திய பொருட்கள் அனைத்தையும் பத்திரபப்டுத்தி இருந்தாள் சம்ரிதி. அவருடைய கையெழுத்து அடங்கிய ஆவணங்கள், சீப்பிலிருந்த முடி, பர்ஸ் முதற்கொண்டு டூத் பிரஷ், ஷேவிங் ரேசர் வரை அனைத்தையும் பத்திரப்படுத்தியிருந்தாள். அந்த வரிசையில் இதில் எதாவது கிடைக்குமா என்பது தான் அவளது நோக்கம்.

ஆனால் கைக்குக் கிடைத்த விஷயமோ எரிமலைக் குழம்பில் உயிருடன் முக்கி எடுத்ததைப் போல தகித்தது. அது ஒரு அரசாங்க முத்திரைத் தாள். சாதாரணமாக அதைப் படிக்கத் தொடங்கியவளின் கண்கள் அதிர்ச்சியில் அப்படியே நிலைக்குத்தி நின்றது. அதில் அச்சிடப்பட்டிருந்தது என்னவென்றால் இன்னாரின் மகளை அவர் உயிர்விடும் தருவாயில் இருப்பதால் நான் தத்தெடுத்துக் கொள்கிறேன் என்று எழுதி அவளுடைய தந்தை ராஜன் அதில் கையொப்பமிட்டிருந்தார். தேதி சரியாக இவளது பிறந்தநாள் தேதி. சம்ரிதியின் கால்களுக்கடியில் பூமி நழுவியது.

கண்ணீரும் வியர்வையும் ஆறாகப் பெருக்கெடுக்க அப்படியே அமர்ந்திருந்தாள் சம்ரிதி. முதலில் ஒன்றுமே புரியவில்லை. இது எப்படி சாத்தியம்? அம்மா வயிற்றில் தான் இருந்தது தொடங்கிப் பிறந்தது வரையில் கதை கதையாகப் தாய் தந்தை உட்பட பலரும் சொல்லக் கேட்டிருக்காளே. அப்படியிருக்கையில் இந்த தத்துப் பத்திரம்... நினைக்க நினைக்கத் திராவகத்தில் குளித்தது போல் இருந்தது.

அப்படியே அமர்ந்திருந்தவளைக் கலைத்தது கீழே கேட்ட லெக்ஷ்மியின் குரல். "சம்ரிதி இன்னுமா முடிக்கலை? போதும் இறங்கி வா. மீதியை அப்புறம் பார்த்துக்கலாம்."

அந்த நிலைமையிலும் அந்தப் பத்திரத்தில் தாயினுடையக் கையெழுத்து இல்லாததை அவள் மனது அவசர அவசரமாகக் குறித்துக் கொண்டது. அந்தப் பத்திரத்தை அதே இடத்தில் வைத்தவள் கண்களைத் துடைத்துக் கொண்டு கீழே இறங்கி வந்தாள்.

"என்னடா இப்படி வியர்த்துப் போயிருக்கு? கண்ணெல்லாம் வேற கலங்கியிருக்கு" என்று அவள் தலைமுடியை ஒதுக்கிவிட்டுக் கொண்டே கேட்டார் லெக்ஷ்மி.

"கண்ல தூசி விழுந்திடுச்சும்மா" குரலே எழும்பவில்லை சம்ரிதிக்கு.

"சரி கொஞ்ச நேரம் ஃபேனுக்குக் கீழே உட்காரு. வியர்வை அடங்கட்டும். அம்மா தலைக்கு ஊத்தி விடுறேன். குளிச்சிட்டு சாப்பிடலாம்" என்று சம்ரிதியிடம் சொல்லிவிட்டுச் சென்றார் லெக்ஷ்மி.

எப்பொழுது தான் குளிக்க வைப்பதாகக் கூறினாலும், "போங்கம்மா நான் என்ன சின்ன பிள்ளையா" என்று முறுக்கிக் கொள்பவள் இன்று தான் இழுத்த இழுப்புக்கெல்லாம் வந்து நிற்பது விசித்திரமாக இருந்தது லெக்ஷ்மிக்கு. குளித்து முடித்து வந்து உணவிலும் கவனம் இல்லாமல் தட்டில் இருந்ததைக் கையால் அளைந்து கொண்டிருந்தாள் சம்ரிதி.

"என்னடா ஏன் ஒரு மாதிரி இருக்க?" என்று லெக்ஷ்மி பரிவாகக் கேட்க,

"காய்ச்சல் அடிக்கிற மாதிரி இருக்கும்மா" முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு பதிலளித்தாள் சம்ரிதி. அழுததால் குரலும் ஙஞண நமன போட்டுக் கொண்டிருந்தது.

பதறிப் போய் தொட்டுப் பார்த்த லெக்ஷ்மிக்கும் கொஞ்சம் சூடு இருப்பது போல் தோன்றவே, "சொன்னா கேட்குறியா? தேவையில்லாத வேலை பார்த்து இப்ப உடம்புக்கு முடியாம போச்சு பாரு. அம்மா மாத்திரை தருவேனாம். அதைப் போட்டுக்கிட்டுத் தூங்கி எந்திரிச்சா எல்லாம் சரியா போயிடுமாம். சரியா?" என்று சிறு குழந்தைக்கு சொல்வது போல் சொல்லி சம்ரிதிக்கு மாத்திரைக் கொடுத்து அவளைப் படுக்க வைத்துத் தானும் அவளருகிலேயே படுத்துக் கொண்டார்.

சம்ரிதிக்கு உடம்பிற்கு என்று ஏதேனும் வந்துவிட்டால் அவள் முதலில் தேடுவது அவள் தந்தையைத்தான். தாய் தந்தை இருவருமே அவளருகிலேயே இருக்க வேண்டும். அம்மாவையாவது அவ்வப்பொழுது விடுபவள் அப்பாவை அசையக் கூட விட மாட்டாள். சிறு குழந்தையாக இருக்கும் பொழுது ஆரம்பித்தது இன்றுவரை அந்தப் பழக்கத்தை விடவில்லை சம்ரிதி.

'இந்தப் பொண்ணுக்கு எப்ப உடம்பு முடியாம போனாலும் அவங்க அப்பாவைத் தானே தேடுவா. இப்ப நான் என்ன பண்ணுவேன்' என்று மனதிற்குள்ளாகவே புலம்பிக் கொண்டிருந்த லெக்ஷ்மி அவரறியாமலேயே தூங்கி இருந்தார்.

லெக்ஷ்மி தூங்கும் வரைப் பொறுத்திருந்தவள் எழுந்து கால் போனப் போக்கில் நடக்கத் தொடங்கினாள். அவள் மனதில் ஓடிக் கொண்டிருந்ததெல்லாம் அப்பாவைப் பார்க்க வேண்டும். அவர் வாயால் அந்தப் பத்திரத்தில் இருப்பதெல்லாம் பொய் என்று சொல்லிவிட வேண்டும்.

ஆனால் தந்தையை இனிப் பார்க்கவே முடியாது என்பதையெல்லாம் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை பெண் மனது. கடைசியாக தந்தை சென்ற இடம் இதுதானே என்று மயானத்திற்கே வந்து சேர்ந்திருந்தாள்.
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
அங்கேயாவது தந்தையைப் பார்த்துவிட மாட்டோமா என்று தவித்தவளுக்கு யாருமற்ற அந்த சூழ்நிலையே வெறுமையைத் தர அங்கேயே சரிந்து அமர்ந்து அழத் தொடங்கினாள். மகளின் கண்ணிலிருந்து ஒரு சொட்டு நீர் வந்தாலும் துடித்துப் போகும் ராஜன் இப்பொழுது அதே மகள் இப்படிக் கதறித் துடிப்பதைப் பார்த்திருந்தால் அவர் கண்கள் ரத்தக் கண்ணீரை சொரிந்திருக்கும்.

ஒருவேளை இப்பொழுதும் அவ்வாறுதான் துடித்துக் கொண்டிருந்தாரோ? அவர் துடிப்பதைப் பார்த்துக் கடவுளுக்கே பொறுக்காமல் ஒரு ஆளை அனுப்பி வைத்ததைப் போல் திடீரென்று ஆஜானுபாகுவாய் ஒரு மனிதர் வந்து சம்ரிதியின் எதிரில் நின்றார்.

முதலில் என்னவென்று பொறுமையாய் விசாரிக்க, அப்பா என்பதைத் தவிர வேறு வார்த்தைகள் எதுவும் வரவில்லை சம்ரிதி வாயிலிருந்து. "பொம்பளைப் புள்ள இந்த இடத்துக்கெல்லாம் இப்படி தனியா வரக் கூடாது. முதல்ல கிளம்பும்மா இங்கயிருந்து" என்று கொஞ்சம் மிரட்டலாகக் கூற,

அந்த மிரட்டலுக்குப் பலனிருந்தது. அழுகையை நிறுத்திவிட்டுப் பேந்தப் பேந்த விழித்தவளை வழியில் சென்ற ஒரு ஆட்டோவை நிறுத்தி அதில் ஏற்றி அனுப்பி வைத்தார் அந்த மனிதர். யாரோ ஒரு ஆட்டோ ஓட்டுநனருக்கு எப்படித் தன்னுடைய வீடு தெரியும்? தான் முகவரி கூறாமல் எவ்வாறு சரியாக வீடு வந்து சேர்ந்தோம்? கையில் பைசாவும் இல்லாமல் என்று எதையும் யோசிக்கும் மனநிலையில் இல்லை சம்ரிதி.

அவள் மூளையில் ஓடிக் கொண்டிருந்தது எல்லாம் ஒன்றே ஒன்றுதான். இவர்கள் இருவரும் தன்னுடைய தாய் தந்தையர் இல்லையென்றால் தனக்கு இந்த உடலும் வேண்டாம் உயிரும் வேண்டாம். யாரோ முகம் தெரியாதவர்களுடைய பெண்ணாகத் தன்னைக் கற்பனை செய்துப் பார்க்கக் கூட விரும்பவில்லை அவள் மனது. உடம்பில் ஓடும் மொத்த ரத்தத்தையும் வெளியேற்ற வேண்டும் போலத் தோன்றியது.

மொத்தத்தில் சாக வேண்டும் போல் தோன்றியது. இறந்து போயாவது தந்தையைப் பார்க்க வேண்டும். மீண்டும் குழந்தையாய் மாறி அவர் மடியில் அமர்ந்து கொள்ள வேண்டும். அவர் நெஞ்சில் முகம் புதைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு எண்ணியவாறே ஆட்டோவில் இருந்து இறங்கிக் கேட்டைத் திறந்து கொண்டு விறுவிறுவென்று வீட்டினுள் நுழைந்தவளை வரவேற்றது லெக்ஷ்மியின் அழுகைக் குரல்.

"சம்ரிதி... ரிதிம்மா... எங்கேடா போன? அம்மா எவ்வளவு பயந்து போயிட்டேன் தெரியுமா? அப்பாவும் இல்லாமல் அம்மா உயிரோட இருக்குறதே உனக்காகத்தானேடா. அம்மாவை விட்டுட்டு நீ எங்கேடா போன?" என்று அவளைக் கட்டிப் பிடித்து தலை முதல் கால் வரை தடவிப் பார்த்து, முகமெங்கும் முத்த மழை பொழிந்து தான் இத்தனை நேரமும் அவளைக் காணாமல் தவித்தத் தவிப்பைப் போக்கிக் கொண்டிருந்தார் லெக்ஷ்மி.

அவரின் பரிதவிப்பைப் பார்த்த பிறகே தான் செய்து வைத்த காரியம் புரிந்தது. 'ச்சே எவ்வளவு சுயநலமா யோசிச்சிட்டேன். அம்மா சொல்ற மாதிரி அப்பாவுக்குப் பிறகு அவங்க உயிரோட இருக்குறதே எனக்காகத் தானே. அப்படியிருக்கும் போது நான் என்னைப் பத்தி மட்டுமே யோசிச்சு...' அதற்கு மேல் நினைக்கக் கூடப் பிடிக்கவில்லை சம்ரிதிக்கு.

ஏதேதோ காரணங்கள் கூறித் தாயை சமாதானப்படுத்தியவள் அன்று முதல் அவருக்காக வாழத் தொடங்கினாள். ஆனால் என்ன முயன்றும் மனதில் நிரந்தரமாகக் குடியேறிவிட்ட வெறுமையையும் விரக்தியையும் விரட்டியடிக்க முடியவில்லை. கடமைக்காக வாழத் தொடங்கினாள்.

பிறந்ததிலிருந்து தாய் மற்றும் தந்தையின் அன்பெனும் கூட்டுக்குள்ளே வளர்ந்தவளுக்கு திடீரென்று அந்தக் கூடு தனக்கு சொந்தமானதே அல்ல என்று தெரிய வரும்பொழுது அவளின் மனநிலையை விவரிக்க வார்த்தைகளுக்கும் பஞ்சமாகிப் போனதே.

சம்ரிதி என்ற பெயரைக் கேட்டவுடன் அனைவருக்கும் நினைவுக்கு வருவது அவளுடைய கள்ளங்கபடமற்ற சிரித்த முகம். அந்தக் குழந்தைத்தனமான சிரிப்பை விரும்பாதவர் யாருமில்லை. அந்தச் சிரிப்பை மறந்தாள். பேச்சை மறந்தாள். சுற்றம் மறந்தாள். சுயம் மறந்தாள். மித்ரனையும் மறந்தாள்.

அவளது நினைவில் இருந்ததெல்லாம் அம்மாவுக்காக உயிர் வாழ்ந்து தான் ஆக வேண்டும். கடமைக்கு வாழ்த் தொடங்கினாள். பேச்சும் இல்லை சிரிப்பும் இல்லை எந்த விஷயத்திலும் பற்றுதலும் இல்லை. கடமைக்கு உண்டு உறங்கி கேட்ட கேள்விக்கு மட்டும் பதிலளித்து உணர்ச்சிகள் துறந்து மரத்துப் போனாள் சம்ரிதி.

அவளின் இந்த மாற்றத்தைப் பார்த்துப் பயந்து போன லெக்ஷ்மி, மித்ரன் அழைத்த பொழுது அவனிடம் கவலையோடு புலம்பித் தீர்த்துவிட்டார்.

"என்னாச்சுன்னு தெரியலை மித்ரா, உடம்பு சரியில்லாம போனதால அவங்கப்பா ஞாபகம் ரொம்ப வந்து இப்படி நடந்துக்குறாளா? என்னன்னு ஒன்னும் புரியலையே" இவளை எண்ணி எண்ணி மருகித் தான் போனார் லெக்ஷ்மி.

மித்ரனுக்குமே அந்த செக்யூரிட்டி ஏஜென்சியிலிருந்து ரிப்போர்ட் போயிருந்ததால், "நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க அத்தை. நான் பார்த்துக்குறேன்" என்று அவருக்கு ஆறுதல் கூறிவிட்டு என்ன செய்து இவளை மாற்றுவது என்று யோசிக்கத் தொடங்கினான்.

மித்ரனுமே ஆரம்பத்தில் லெக்ஷ்மி நினைத்ததைப் போல் தந்தையின் பிரிவுத் துயர் தாங்காமல் தான் இவ்வாறு நடந்து கொள்கிறாள் என்றே நினைத்தான். சம்ரிதியை எவ்வாறு அந்த இழப்பிலிருந்து மீட்டுக் கொண்டு வருவது என்று யோசித்த பொழுது அவன் நினைவுக்கு வந்தவள் தேஜூ. உடனே அவளுக்கு அழைத்தும் விட்டான். அவனுடைய அழைப்பை ஏற்றவள்,

"என்னடா இது வெளியில மழை எதுவும் பெய்யுதா? மிஸ்டர் புன்னகை மன்னன் உலகமகா அதிசயமா எனக்கு ஃபோன் பண்ணியிருக்கீங்க" கேலியுடனே பேச்சைத் தொடங்கினாள் தேஜூ.

"எனக்கு உன்கிட்டயிருந்து ஒரு உதவி வேணும் தேஜூ" மிகவும் பவ்வியமாக வந்தது பதில் மித்ரனிடமிருந்து.

"அதானே பார்த்தேன். சோழியன் குடுமி சும்மா ஆடுமா? சரி சொல்லுங்க என்ன செய்யணும்? உதவின்னு வந்துட்டா, இந்த தேஜூவை நம்பினோர் கைவிடப்படப் படார் மாமா"

"எல்லாம் சரி இந்த ஓவர் பீட்டர் தான் தாங்க முடியலடா சாமி" மித்ரன் போலியாக அலுத்துக் கொள்ள,

"உதவி மாம்ஸ் உதவி... மறந்து போச்சா? மேட்டருக்கு வாங்க பாஸ்" அலட்டாமல் பதில் கொடுத்தாள் தேஜூ.

"சம்ரிதி" என்று மித்ரன் தொடங்கவுமே படபடவெனப் பொரியத் தொடங்கி இருந்தாள் தேஜூ. "அவ ஆளே ரொம்ப டல்லாயிட்டா மாமா. நானும் என்னென்னமோ செஞ்சு பார்க்குறேன். ஒன்னும் கதைக்காக மாட்டேங்குது. வாயவே திறக்க மாட்டேங்குறா. சிரிக்கக் கூட மாட்டேங்குறா மாமா. பெரியம்மா பாவம், இவளைப் பத்திக் கவலைப்பட்டே அவங்க ஒரு வழி ஆகிடுவாங்க போல. நானும் அவ பிரெண்ட்ஸ் கிட்ட எல்லாம் சொல்லி வைச்சு அவளை சுத்தி எப்பவும் யாராவது இருக்குற மாதிரிதான் பார்த்துக்குறேன். இதுக்கு மேல என்ன செய்றதுன்னும் எனக்குப் புரியல"

"அவளோட கவனத்தை வேற பக்கம் திசைத் திருப்பணும் தேஜூ. சம்ரிதி நல்லா படிப்பா. அதான் அவளை பார்ட் டைம்ல சி.ஐ.எம்.ஏ கிளாஸ்ல போடலாமுன்னு பார்க்குறேன். இன்ஸ்டிட்யூட் எல்லாம் கூட விசாரிச்சுட்டேன். நீயும் அவ கூட சேர்ந்து கிளாஸ் போறியா?" என்று மித்ரன் கேட்க,

"ஆத்தீ யாரைப் பார்த்து என்ன வார்த்தை கேட்குறீங்க மாமா நீங்க? இந்த உதவி மட்டும் என்னால முடியவே முடியாது" தெறித்து ஓடினாள் தேஜூ.

"தேஜூவை நம்பினோர் கைவிடப்படார்னெல்லாம் சொல்லிட்டு இப்ப இப்படி பேக் அடிக்கிறியே தேஜூ"

"அதுக்குன்னு உதவி கேட்குறதுக்கு ஒரு வரைமுறை வேண்டாமா? சம்ரிதி இஷ்டப்பட்டு படிக்கிற ஆளு. நானெல்லாம் கஷ்டப்பட்டுப் படிக்கிற ஆள் மாமா. என்னைப் போய் அதுவும் சி.எம்.ஏ... சான்சேயில்ல மாமா"

"சி.எம்.ஏ இல்ல தேஜூ, சி.ஐ.எம்.ஏ... சி.எம்.ஏவுக்கு மொத்தமா பதினாறு பேப்பர். இதுக்கு மொத்தமே பனிரெண்டுதான் தேஜூ. கொஞ்சம் கன்சிடர் பண்ணேன். நீ போறதாயிருந்தா அவளும் எதிர்க்கேள்வி கேட்காம சேர்ந்திடுவா. படிக்க ஆரம்பிச்சுட்டான்னா அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா நார்மலாயிடுவா தேஜூ. ப்ளீஸ்" மித்ரன் சொல்லவும் கொஞ்சம் யோசிக்கத் தொடங்கினாள் தேஜூ.

"அப்படிங்குறீங்க..." யோசனையாக தேஜூ இழுக்க,

"ஆமாங்குறேன்" அடித்துக் கூறினான் மித்ரன்.

"சரி மாமா. உங்களுக்காகப் பண்றேன். ஆனா ஒன்னு சம்ரிதி கூடப் போறேன் வரேன் எல்லாம் ஓகே. சம்ரிதி எல்லா பேப்பரும் பாஸ் பண்ணிட்டா. நீ பண்ணலையான்னு என்னைப் பார்த்து இந்த சமூகம் கேள்வி கேட்கக் கூடாது சொல்லிட்டேன். அதுக்கு நீங்க தான் பொறுப்பு. ஆமா" ஒருவழியாக ஒப்புக் கொண்டாள் பெண்.

"சமூகத்துக்கெல்லாம் பயப்படுற ஆளா நீ" என்று மித்ரன் கேலியாக வினவ,

"பார்த்தீங்களா காரியம் முடிஞ்சதும் கழட்டி விடுறீங்க. சரி நானும் ஒன்னும் உங்களுக்காக இதைச் செய்யலை. சம்ரிதிக்காகத் தான் செய்றேன். முதல்ல அவ எனக்குத் தங்கச்சி. அப்புறம்தான் உங்களுக்கு...." என்று கேள்வியாக நிறுத்தியவள், "ஆமா உங்களுக்கு அவ யார் மாமா?" என்று குறும்புடன் கேட்டு வைத்தாள் தேஜூ.

"எனக்கு..." என்று அவளைப் போலவே இழுத்தவன், "எனக்கு ராஜா மாமான்னா உசிரு. ராஜா மாமாவுக்கு சம்ரிதின்னா உசிரு" என்று அதே குறும்புடன் கூறி முடித்தான் மித்ரன்.

"அதானே டைரக்டா சொல்லிட மாட்டீங்களே. நானே ஒருநாள் கண்டுபுடிக்கத் தான் போறேன். அன்னைக்கி இருக்கு உங்க ரெண்டு பேருக்கும்" என்று கூறி மேலும் கொஞ்ச நேரம் வளவளத்துவிட்டு அழைப்பைத் துண்டித்தாள் தேஜூ.

இந்த வெகுளிப் பெண்ணிடமாவது ஒரு முறை ஒரே ஒரு முறை தங்கள் உள்ளத்திலிருப்பதை சம்ரிதியோ அல்லது மித்ரனோ வெளிப்படுத்தி இருந்தால் இவளே பிற்காலத்தில் நடந்த பல குழப்பங்களை நடக்க விடாமல் தடுத்திருப்பாள். ஆனால் எதற்காக என்று தெரியாமலே இருவரும் மாற்றி மாற்றித் தங்கள் காதலை மறைத்து வைத்தார்கள்.

எது எப்படியோ மிதரனின் திட்டம் வெற்றிகரமாக செயல்படத் தொடங்கியது. சம்ரிதி முழுக்க முழுக்க தன்னைப் படிப்பில் மூழ்கடித்துக் கொண்டாள். கல்லூரி அது முடிந்த பின் சி.ஐ.எம்.ஏ என்று வேறு எதைப் பற்றியும் யோசிக்க நேரமில்லாமல் அல்லது யோசிக்க விருப்பமில்லாமல் ஓடத் தொடங்கி இருந்தாள் சம்ரிதி.
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
Semmaa... Ivale terinchikittala.. sari appadi paatha konjam kastama irunthaalum namala ipadi valarthirukaangale nu santhosapadalaam la.. vera maathiri yosichu romba hurt aagitta pola.. ???

Ithula ennaka iruku.. ellam oor ulagathula nadakurathu thaan.. veliya terincha oruthar illana oruthar solliruvaanga nu ullaye vachittu manaivi kitta kooda maraichirukaaru.. iva athai poi nondi paathirukka polaye.. vithi ila kaa neenga senja sathi.. ???

Fb innum konjam iruke.. apuram thaan mithu va paaka mudiyum pola.. ??
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top