• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

எழுதுகிறேன் ஒரு கடிதம் - 18

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
வணக்கம் தோழமைகளே, தொடர்ந்து ஆதரவளித்து வரும் அனைவருக்கும் நன்றி. இன்றைய பதிவுடன் flashback முடிவடைகிறது. படித்துவிட்டு உங்களுடைய கருத்துக்களை மறக்காமல் தெரிவியுங்கள்.DE03CEB0-E3DD-4A50-8A32-727C8B899551.jpeg
 




Last edited:

Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
அத்தியாயம் - 18
மெல்ல மாலை மங்கி இருள் கவிழத் தொடங்கியிருந்தது. திருச்சியில் தகிக்கும் வெயிலுக்கும் தனக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல் ஒய்யாரமாக நகரின் மையப் பகுதியில் அமைந்திருந்த ஐயப்பன் கோவில். சுற்றிலும் பலவகை மரங்கள் சூழ குளிர்ச்சியாகப், பசுமையாக அமைதியாக அருள் பாலித்துக் கொண்டிருந்தார் ஹரிஹரன். தேஜூவின் வீட்டிலிருந்து புறப்பட்ட மித்ரன் இங்கு தான் வந்து அமர்ந்திருக்கிறான் மூன்று மணி நேரமாக. உடன் பார்த்திபன் வேறு.


எப்பொழுது இந்தக் கோவிலுக்கு வந்தாலும் லேசாகிவிடும் மனது இன்று மட்டும் ஏனோ கட்டுப்பட மறுத்தது. கோவிலிலும் கூட்டம் குறைந்து ஒன்றிரண்டு நபர்கள் மட்டும் அங்கும் இங்குமாய் அமர்ந்திருந்தார்கள். அவர்களுள் சிறு பெண் குழந்தை ஒன்று அங்குமிங்கும் ஓடிக் கொண்டு விளையாடி கொண்டிருந்தது. உடல் தியான மண்டபத்தில் இருந்தாலும் மித்ரனுடைய பார்வை இந்தக் குழந்தையையே சுற்றிச் சுற்றி வந்தது.

இளம்பச்சை நிறப் பட்டுப் பாவாடையும் அடர்பச்சையில் சட்டையுமணிந்து, கை நிறைய வளையல்களும் கால்களில் வெள்ளிக் கொலுசும் கீதம் பாட அசைந்தாடும் சிறு தேர் போல தன் பிஞ்சுப் பாதங்களில் தத்தித் தத்தி அடி எடுத்து வைத்து நடக்கவும் ஓடவுமாக இருந்தாள் குழந்தை. அந்தக் காட்சியே அத்தனைக் கவிதையாய் இருந்தது.

குண்டுக் கன்னங்களும், திராட்சைக் கண்களும், அந்தக் கண்கள் காட்டும் பாவனையில் மயங்கி அனைவரும் அந்தக் குழந்தையைக் கொஞ்சிவிட்டே கடந்து சென்றனர். மித்ரனுக்கு அந்தக் குழந்தையைப் பார்க்கையில் சிறு வயது சம்ரிதியைப் பார்ப்பது போல் தோன்றியது.

‘எங்களுக்குப் பெண் குழந்தைப் பிறந்தாலும் இப்படித்தான் இருக்குமோ’ எண்ணிய வேகத்திலே அந்த நினைப்பைத் துடைத்தெறிந்தது மனது. அண்ணன்களைப் போல தான் என்னையும் நினைத்தாளாமே. உடன் பிறந்தவர்களுடனான ஒப்பீடேயானாலும் நினைக்க நினைக்கக் கசந்தது மனது.

எத்தனை ஆசைகள், எவ்வளவு கனவுகள் அத்தனையும் அவள் சொன்னதாகக் கேள்விப்பட்ட ஒற்றை வார்த்தையில் பொசுங்கிப் போனது. திருமணம்தான் ஆசை ஆசையாகக் கனவு கண்ட முறையில் நடக்கவில்லை. விரும்பியவளைத்தான் மணமுடித்து இருக்கிறோம் என்ற சந்தோஷமாவது மிஞ்சியதா என்றால் அதுவுமில்லை. எல்லோரையும் போல தான் என்னையும் நினைத்தாளாமே. நானும் மற்றவர்களும் ஒன்றா? எப்படித் திசை மாற்றினாலும் மறுபடி மறுபடி இதையே நினைக்கும் மனதுக்குக் கடிவாளமிட முடியவில்லை மித்ரனால்.

மறுபடியும் கண்களை மூடித் தியானத்தில் அமர்ந்து பார்த்தான். மனம் ஒரு நிலைப்பட மறுத்தது. உள்ளுக்குள் தகித்துக் கொண்டிருந்த உஷ்ணம் நீராவியாக மாறி மூடியிருந்த கண்களிலிருந்துக் கண்ணீராய் வெளிவந்தது.

பார்த்துக் கொண்டிருந்த பார்த்திபன் பதறிப் போனான். சிறுவனாக இருக்கும்போதே மித்ரன் கண் கலங்கினால் பொறுக்காது பார்த்திபனுக்கு. இப்பொழுது கேட்கவும் வேண்டுமா? அமர்ந்த நிலையிலேயே மித்ரன் தோள் மீது கையைப் போட்டுத் தன்னோடு சேர்த்து அனைத்துக் கொண்டவன்,

“டேய் மித்ரா என்னடா இது? சின்னக் குழந்தை மாதிரி” ஆதங்கமாக வெளிவந்தது பார்த்திபனின் குரல்.

“என்னால முடியலையே பார்த்திண்ணா. நான் என் உலகமே அவதான்னு இருக்கேன். இவ உங்க எல்லாரையும் மாதிரி தான் என்னையும் நினைச்சேன்னு சொல்லிட்டாளே” அதைவிட ஆதங்கமாக வந்தது மித்ரனின் பதில்.

“சம்ரிதி அப்படி சொன்னதுல என்னடா தப்பு. நாம எல்லாருமே அவளுக்கு அத்தைப் பசங்க தானே”

“அதுக்கு...” முறைத்துக் கொண்டு பதிலளித்தான் மித்ரன்.

“சரி நீ அவளைத்தான் உன் உலகமாவே நினைச்சுக்கிட்டு இருக்க அப்படிங்குறதை அவகிட்ட சொல்லியிருக்கியா?” நிதானமாகப் பார்த்திபன் கேட்க மௌனமே பதிலாக வந்தது மித்ரனிடமிருந்து.

“சம்ரிதிகிட்ட தான் சொல்லலை. அட்லீஸ்ட் எங்க கிட்டயாவது சொல்லியிருக்கலாமில்ல. அவளைத்தான் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன்னு. நானும் நேஹாவும் எத்தனை தடவைக் கேட்டிருப்போம். ஒரு தடவையாவது ஒத்துக்கிட்டிருக்கியா? எப்போதும் எதாவது சொல்லி மழுப்பிடுவ.”

“ம்ப்ச் அது ஒரு பீல் பார்த்திண்ணா. எப்படி சொல்றது... ஹ்ம்ம்... இது என்னோட அம்மா, அப்பா அண்ணனுங்க மாதிரி சம்ரிதிதான் என் மனைவிங்குறதும் என் மனசுல ஆழப் பதிஞ்சுட்ட ஒரு விஷயம். அவளுக்கும் அப்படித்தான். அது எனக்கு நல்லா தெரியும். இதை வெளியே சொல்லணுமின்னு அவசியமில்ல.

அடுத்தது எனக்குக் கல்யாணப் பேச்சு வரும்பொழுதே சம்ரிதியைத்தான் பார்ப்பீங்கன்னு நம்பினேன். அவளை விட்டுட்டு இன்னொரு பொண்ணைத் தேடுவீங்கன்னு நான் கனவுல கூட நினைச்சுப் பார்க்கலை.” பார்த்திபன் வியந்து போனான் மித்ரனின் இந்தப் பதிலில்.

“அம்மா கிட்டயாவது சொல்லியிருக்கலாமேடா. அப்பா கல்யாணப் பேச்சு எடுத்த போதே எங்களால ஆரம்பத்துலேயே உறுதியா மறுக்க முடியாததுக்கு இதான் காரணம்.”

“எனக்கும் சம்ரிதிக்கும் தான் நிச்சயதார்த்தமுன்னு நான் எவ்வளவு சந்தோஷமா வந்தேன் தெரியுமா? இப்ப எதுக்கு இவ்வளவு அவசர அவசரமா பண்ணணும்? எல்லாம் அப்பா பார்த்த வேலைதானே” கோபமாக முகத்தைத் திருப்பினான் மித்ரன்.

“இந்த விஷயத்துல யாரையும் தப்பு சொல்ல முடியாது மித்ரா. அப்பாகிட்ட கேட்டா நீ சம்மதிச்சதுக்கு அப்புறம் தானே செஞ்சேன்னு சொல்லுவாங்க. அதுவும் சரிதானே. நல்லவேளை அந்த சுரேஷ் ஆதித்யா வந்தான். இல்ல வீண் மனஸ்தாபம்தான் வந்திருக்கும் ரெண்டு குடும்பத்துக்கும் நடுவுல. சரி கிளம்பு மணியாச்சு. கோவில் நடை சாத்தப் போறாங்க. வீட்டுக்குப் போலாம்”

“நான் வரலை. எனக்கு சம்ரிதியை இப்பப் பார்த்தா கோவம்தான் வரும். நான் ஹோட்டல்ல ரூம் போட்டுக்குறேன். என் திங்க்ஸ் மட்டும் கொண்டு வந்து கொடுங்க பார்த்திண்ணா. சொன்னபடி நான் நாளான்னிக்கு சிங்கப்பூர் கிளம்புறேன்” சோர்வாகக் கூறினான் மித்ரன்.

உள்ளுக்குள் உறங்கிக் கொண்டிருந்த தமையன் விழித்துக் கொள்ள, “அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் மித்ரா. பேசாம வீட்டுக்கு வா. லெக்‌ஷ்மி அத்தையைப் பத்தி நினைச்சுப் பார்த்தியாடா நீ. யார் எதிர்பார்த்தாலும் பார்க்கலைன்னாலும் அவங்க உன்னைத் தேடுவாங்க. கிளம்பு பேசாம” பார்த்திபன் சற்று அதட்டலாகக் கூறவும் அதுவும் லெக்‌ஷ்மி அத்தையை முன்னிறுத்திக் கூறியது மித்ரனுக்குமே நியாயமாகப் படவே மறுபேச்சின்றிக் கிளம்பினான்.

இவர்கள் ராஜன் வீட்டுக்குள் நுழையவும் விஸ்வநாதன் கார் கேட்டைத் தாண்டவும் சரியாக இருந்தது. தேஜஸ்வினியின் வீட்டில் நிலைமைக் கொஞ்சம் கைமீறித்தான் போயிருந்தது. தேஜஸ்வினியின் சித்தப்பா விஸ்வநாதன் மித்ரனிடம் தெரிவிக்காமல் நிச்சதார்த்த ஏற்பாட்டை வேண்டுமென்றே நிர்பந்தித்தது போல் பேசிவிட்டார்.

லிங்கேஷ்வரன் தாத்தாவும் அதை ஒப்புக் கொள்வதைப் போல மௌனமாகிவிட, விஸ்வநாதனுக்குக் கோபம் தலைக்கேறிவிட்டது. கோபத்தில் ‘உங்கள் வீட்டுப் பெண் மட்டும் நிச்சயத்தன்று காதலித்தவனை வரவழைக்கலாமா’ என்பது போல் கேட்டுவிட ஒருவருக்கொருவர் வார்த்தைகள் தடிக்கத் தொடங்கியது.

லெக்‌ஷ்மி தான் இருவருக்கும் பொதுவாகப் பேசி நிலைமையை கொஞ்சம் சீர்படுத்தி இவர்களையும் அழைத்துக் கொண்டு கிளம்பி வந்துவிட்டார். ஒருபுறம் தங்கையின் புகுந்த வீட்டு உறவுகள் இன்னொருபுறம் தன்னுடைய புகுந்த வீட்டு ஆட்கள். இருபக்கமும் விட்டுக் கொடுக்க முடியாத நிலை. யாருக்கென்று பேச முடியும்? இருதலைக்கொள்ளி எறும்பாகிப் போனது லெக்‌ஷ்மியின் நிலை.

வீட்டிற்கு வந்ததும் விஸ்வநாதன் ஆடித் தீர்த்து விட்டார். சம்ரிதிக்கு சொல்லாமல் மறைத்து விட்டதாகத் திட்டுக் கிடைத்தது. சுஜாதாவிற்கு ஆரம்பத்திலிருந்து அபசகுனமாகத் தடை கூறிக் கொண்டே இருந்ததால் தான் இவ்வாறு நடந்ததாகத் திட்டுக் கிடைத்தது. லெக்‌ஷ்மிக்கு தங்கையின் புகுந்த வீட்டு மக்கள் தராதரம் தெரியாதவர்கள் என்று தன்னிடம் முன்கூட்டியே தெரிவிக்காததற்காகத் திட்டுக் கிடைத்தது.

மித்ரனையும் விட்டு வைக்கவில்லை. யாரைக் கேட்டு இவன் தாலி கட்டினான்? அப்புறம் அப்பான்னு நான் ஒருத்தன் எதுக்கு?’ என்று எதிரில் இல்லாத மித்ரனையும் திட்டித் தீர்த்தார். தந்தையை ஒருவர் எடுத்தெறிந்து பேசும் பொழுது மகன்களாகப் பொறுப்பாகத் தன் பக்கத்திலிருந்து தனக்காகப் பேசாமல் போனதற்காக பார்த்திபன் மித்ரன் இருவரும் பங்குப் போட்டு வாங்கிக் கட்டிக் கொண்டனர். மொத்தத்தில் அனைவருக்கும் வசை மாரி பொழிந்தது.

ஆடுவதெல்லாம் ஆடி முடித்தவர் சென்னைக்குக் கிளம்புவதாகக் கூறி கோபமாகக் காரெடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டார். அவருடைய கார் கேட்டைத் தாண்டி வெளியேற பார்த்திபனின் கார் உள்ளே நுழைந்தது.

வீட்டுக்குள் நுழைந்ததும், “அப்பா எங்கம்மா இந்நேரத்துக்குக் கிளம்பிப் போறாங்க?” என்று சுஜாதாவிடம் வினவினான் பார்த்திபன்.

அவனிடம் பதிலொன்றும் கூறாமல் மித்ரனை நெருங்கிய சுஜாதா பளாரென்று அவன் கன்னத்தில் அடித்திருந்தார். தன்னை அடிக்கும்பொழுது தலைகுனிந்து வாங்கிக் கொண்டவன் அடுத்து அவர் சம்ரிதியை அடிக்கக் கை ஓங்கவும் “அம்மா” என்று கத்தியிருந்தான் மித்ரன்.

“என்ன சத்தம் பலமா வருது மித்ரா? அவ இன்னைக்கு தான் உனக்குப் பொண்டாட்டி. பொறந்ததுல இருந்து அவ எனக்குத் தம்பி மக” என்று கூறியவாறே சம்ரிதிக்கும் பளாரென்று ஒரு அடி விழுந்தது.

வேகமாக வந்து சம்ரிதியை மறைத்தவாறு அவளுக்கு முன்னால் நின்று கொண்டான் மித்ரன்.

லெக்‌ஷ்மியைக் காண்பித்தவர், “இதோ நிக்குறாளே உன் அத்தை இவ உன் கண்ணுக்குத் தெரியுறாளா இல்லையா? நீ பாட்டுக்கு உன் இஷ்டத்துக்குத் தாலியைக் கட்டுற. அவகிட்ட ஒரு வார்த்தைக் கேட்க வேணாம்.

நான் உங்க நாலு பேரையும் சின்னப் பிள்ளையா இருந்தப்ப கூட அடிச்சதில்லை. என்னையவே அடிக்க வைச்சுட்டில்ல. நாங்க என்னடா குறை வைச்சோம் உங்களுக்கு? ஒரு பிரெண்ட் மாதிரி தானே உங்க கிட்டப் பழகுறேன். என்கிட்ட ஒரு வார்த்தை சொல்றதுக்கு என்ன கேடு உங்க ரெண்டு பேருக்கும்.

இந்தா இவகிட்ட அத்தனைத் தடவைக் கேட்டோமே. இல்லைன்னு சாதிச்சாளே. அப்புறம் எதுக்குடி இவன் உன் கழுத்துல தாலி கட்டினான்? இப்பவாவது வாயைத் திறந்து பதில் சொல்லுடி” என்றவாறு மீண்டும் சம்ரிதியை அடிக்க வர, இந்த முறை லெக்‌ஷ்மி அவளை அணைத்துக் கொள்ள சத்தெல்லாம் வடிந்தது போல் தொப்பென்று தரையில் அமர்ந்தார் சுஜாதா.

அவர் முன் மண்டியிட்டு அமர்ந்த மித்ரன், “ம்மா சாரிம்மா” என்று ஏதோ பேச முயல, கையை நீட்டித் தடுத்தார் சுஜாதா.

“உருவத்துல மட்டுமில்ல குணத்துலயும் நீ என் தம்பி மாதிரின்னு நினைச்சுப் பூரிச்சுப் போயிருந்தேனே. அப்படி இல்லவே இல்லைன்னு ஒரேடியா நிரூபிச்சுட்டில்ல. அந்தப் பையன் சுரேஷ் மட்டும் வரலைன்னா என்ன நடந்திருக்குமுன்னு நினைச்சுப் பார்க்கக் கூடப் பிடிக்கலை எனக்கு. தேஜூவும் மனசுக்குள்ள உன் மேல ஆசையை வளர்த்திருந்தா என்னடா பண்ணியிருப்ப? பெண் பாவம் பொல்லாதது. எல்லாம் வளர்ந்து நல்லா சம்பாரிக்கிறீங்கல்ல. அந்தத் திமிருடா உங்களுக்கு. அதான் அப்பா அம்மா அத்தைன்னு யாரையும் மதிக்காம நடக்க சொல்லுது” ஆத்திரம் தீரும் மட்டும் வசைபாடினார் சுஜாதா.
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
மாமனைப் போலில்லை என்று தாயின் வாயிலாக வந்ததைத் தாங்கிக் கொள்ள இயலாதவனாக, “ம்மா சாரிம்மா... அப்படி எல்லாம் இல்லம்மா. சம்ரிதி இடத்துல இன்னொரு பொண்ணை பெயரளவில கூட வந்துடக் கூடாதுங்குற பதட்டத்துல அப்படி நடந்துகிட்டேன்மா. ப்ளீஸ்மா மன்னிச்சிடுங்கம்மா” என்று கரகரத்தக் குரலில் கெஞ்சத் தொடங்கினான் மித்ரன்.

“நீங்க தானேம்மா எங்களுக்கு எல்லாமே. மதிக்கலைன்னு எல்லாம் சொல்லாதீங்கம்மா. இந்த ஒரு தடவை மன்னிச்சிடுங்கம்மா. ப்ளீஸ்மா” என்று பார்த்திபனும் கெஞ்சலில் இறங்க,

இதுவரை நடப்பதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த குட்டி ஆரவ்வும் “சாயீ அப்பம்மா... சாயீ அப்பம்மா...” என்று கூறிக் கொண்டே சுஜாதாவின் கழுத்தை கட்டிக் கொண்டு அழுகைக்குத் தயாராகவும்,

“அடி என் சீனிக் காளை... எதுக்கு அப்பம்மாக்கிட்ட சாரி கேட்குறீங்க. நீங்க தான் குட்பாய் ஆச்சே. உங்களுக்காக உங்க சித்தியையும் சித்தப்பனையும் மன்னிச்சு விட்டுடறேன். சரியா. அழாதடி தங்கம்” என்று பேரனுக்காக தன்னை சகஜமாக்கிக் கொண்டார் சுஜாதா.

“என் செல்ல அம்மா” என்று பார்த்திபன் அவரைக் கழுத்தோடுக் கட்டிக் கொள்ள மித்ரன் அவர் வயிற்றைக் கட்டிக் கொண்டு மடியில் முகம் புதைத்துக் கொண்டான்.

“இந்த ரெண்டு தடிப்பயலுக கிட்ட இருந்தும் என்னைக் காப்பாத்துடி நேஹா.” வழமைக்கு மாறியிருந்தார் சுஜாதா.

“போங்கத்தை நீங்களாச்சு உங்க பாசக்கார மகனுங்களாச்சு. எனக்குப் பசி வயித்தைக் கிள்ளுது. நான் சாப்பிடப் போறேன்” கொஞ்சமும் மனமிரங்கவில்லை நேஹா.

“அதுவும் இன்னைக்கு அவங்க வீட்ல டிபனுக்கு அசோகா ரெடி பண்ணியிருப்பாங்க போல. வாசனை அப்படியே ஆளையே தூக்குச்சு. சாப்பிட நமக்குக் கொடுத்து வைச்சுதா? ஹ்ம்ம்... ரெண்டு பேரும் எந்திரிச்சுப் போய் எனக்கு சுடச்சுட அசோகா வாங்கிட்டு வாங்கடா. அப்பதான் நான் சமாதானம் ஆவேன்” சுஜாதா கெத்தாக சொல்ல,

“தாய்க்குலமே நீங்க சமாதானமாகி அரை மணி நேரமாச்சு” மகன்கள் இருவரும் கோரஸ் பாடினார்கள்.

“மணி பத்தாகப் போகுதும்மா. காலையில முதல் வேலையா உங்களுக்கு நான் அல்வா கொடுக்கிறேன். அதாவது அசோகா அல்வா வாங்கித் தரேன்னு சொன்னேன்” கிண்டலாகக் கூறினான் பார்த்திபன்.

“அடடா எங்கண்ணன் பாட்டுக்குக் கோவமா கிளம்பிப் போயிட்டாங்க. அவங்க சாப்பிட்டாங்களா இல்லையான்னு யாராவது கவலைப்படுறீங்களா? சரி நான் அவங்களுக்கு போஃன் பண்ணிக் கேட்டுட்டு, நமக்கு எல்லாருக்கும் டிபன் ரெடி பண்றேன்.” செல்லமாக அங்கலாய்த்துக் கொண்டே சமையலறையை நோக்கிச் சென்றார் லெக்‌ஷ்மி.

சம்ரிதியைத் தவிர அனைவருமே இயல்பாகி இருந்தார்கள். அவள் மட்டும் இன்னும் கலங்கிய முகத்துடனே அமர்ந்திருந்தாள். அவ்வப்பொழுது மித்ரனின் பார்வை அவளைத் தழுவிக் கொண்டுதான் இருந்தது. அவளின் கலக்கம் இன்னுமின்னும் இவனுக்குப் கோபத்தை விதைத்துக் கொண்டிருந்தது.

ஒருவாறாக அனைவரும் உணவருந்தி முடிக்க, “கல்யாணம்தான் திடீர்னு நடந்துடுச்சு. மத்ததெல்லாம் நாள் கிழமை பார்த்து தான் செய்யணும்” என்று கூறி சம்ரிதியைத் தன்னுடன் படுக்க வைத்துக் கொள்வதாகக் கூறிவிட்டார் சுஜாதா.

“மித்ரா நீ இப்ப என்ன பண்றதா முடிவெடுத்திருக்க? எப்ப சிங்கப்பூர் கிளம்பணும்? போறப்ப சம்ரிதியையும் கூட்டிட்டுப் போறியா?” தாயாக மித்ரனைக் கேள்வி கேட்கவும் தவறவில்லை.

“நாளைக்கு மறு நாள் டிக்கெட் போட்டிருக்கேன்ம்மா. இப்ப சம்ரிதியைக் கூட்டிட்டுப் போக முடியாது. கல்யாணத்தை ரிஜிஸ்டர் பண்ணனும். அப்பதான் விசா பிராசஸ் பண்ண முடியும்” என்றான் மித்ரன்.

“நாளான்னைக்கு டிக்கெட்டா... அதெல்லாம் சரி வராது. நீ ஒரு வாரம் இங்க தானே இரு. முதல்ல நீங்க ரெண்டு பேரும் உங்களுக்குள்ள இருக்குற பிரச்சனையைப் பேசித் தீர்த்துக்கோங்க. குலதெய்வம் கோவிலுக்கு வேற போயிட்டு வரணும். அதுக்கப்புறம் நீ முதல்ல போயிட்டு அப்புறம் விசா ஏற்பாடு பண்ணிட்டு சம்ரிதியைக் கூட்டிட்டுப் போ” என்றார் சுஜாதா.

பதிலேதும் கூறாமல் மௌனமாகத் தலையாட்டினான் மித்ரன்.

விஸ்வநாதன் எதற்கும் வர மறுத்துவிட சுஜாதாவும் லெக்‌ஷ்மியுமே இவர்களைக் கோவிலுக்கு அழைத்து செல்வது போன்ற வேலைகளை செய்து முடித்தார்கள். பார்த்திபனும் நேஹாவும் சென்னைக்குத் திரும்பிவிட சுஜாதா, லெக்‌ஷ்மி, மித்ரன் மற்றும் சம்ரிதி மட்டுமே வீட்டில் இருந்தனர். மூன்று நாட்கள் போயிருந்தது. மித்ரனின் மறுப்பையும் மீறி அன்று அவர்கள் இருவருக்கும் முதலிரவுக்கு ஏற்பாடு செய்திருந்தார் சுஜாதா.

அறைக்குள் நுழைந்த சம்ரிதி பார்த்தது அங்கிருந்த செயரில் கால்களை நீட்டி ஒரு கையால் கண்களை மூடி அமர்ந்திருந்த மித்ரனைத்தான். என்ன செய்வது என்றறியாமல் அவள் கதவருகிலேயே தேங்கி நிற்க,

“உட்காரு” என்றான் மித்ரன் படுக்கையைக் காண்பித்து.

அவள் அமர்ந்ததும், “உனக்கு இந்தக் கல்யாணம் புடிச்சிருக்கா இல்லையான்னு எனக்குத் தெரியலை. இத்தனை நாளும் நீயும் என்னை விரும்புறதா தான் முட்டாள் மாதிரி நினைச்சுக்கிட்டு இருந்தேன். அப்படியில்லடா மடையான்னு தெளிவா என் மண்டையில அடிச்சுப் புரிய வைச்சுட்ட.

தாலி கட்டினதுக்காக நீ என்கூட கஷ்டப்பட்டு வாழ வேண்டாம். உனக்கு இன்னும் ஒரு வருஷம் படிப்பிருக்கு. இந்த ஒரு வருஷத்துல நீ யோசிச்சு ஒரு முடிவெடு. படிப்பு முடிஞ்சதும் நான் சிங்கப்பூருக்கு டிக்கெட் போடுறேன். நீ என்னை மனப்பூர்வமா எத்துக்கறதா இருந்தா வா. இல்லைன்னா வர வேண்டாம்.

அதுக்கப்புறம் உன் வாழ்க்கையில நான் எப்போதும் குறுக்க வர மாட்டேன். கட்டாயக் கல்யாணம் பண்ணிட்டேனோன்னு எனக்கு உறுத்தலா இருக்கு. அதனால இப்ப முடிவெடுக்குற பொறுப்பை உன் கிட்டயே விடுறேன். நீயே டிசைட் பண்ணு நான் வேணுமா வேண்டாமான்னு. அதுவரைக்கும் நமக்குள்ள இதெல்லாம் எதுவும் வேண்டாம்” படுக்கையைக் காண்பித்து இறுகிய முகத்துடன் பேசி முடித்தான் மித்ரன்.

அவன் கூறிய கட்டாயக் கல்யாணம் என்ற வார்த்தையில் பதறியவள், “அப்படியெல்லாம் இல்லை மாமா” என்று சொல்லி மேற்கொண்டு ஏதோ சொல்ல வர,

அவள் சொல்லிய மாமா என்ற வார்த்தை, ‘மத்த மூணு மாமா மாதிரி தான் மித்ரன் மாமாவும்’ என்ற வாக்கியத்தை மித்ரனுக்கு நினைவுப்படுத்தியது. அவள் கூந்தலை இறுகப் பற்றி அவளை எழுப்பியவன், வன்மையாக அவள் இதழ்களை சிறை செய்திருந்தான்.

முதல் முத்தம். மனதுக்குள் செய்த கற்பனைகளெல்லாம் நிஜமாய் உருமாறி கண் முன் நிற்கையில் ஆசை கொண்ட மனது மயங்கித்தான் போனது இருவருக்கும். வன்மையாக ஆரம்பித்த முத்தம் மென்மையாக மாறிக் கொண்டிருந்தது. அவள் கூந்தலைப் பற்றியிருந்த கை மெல்ல அவள் கழுத்தை வருடிக் கொடுக்கத் தொடங்கியிருந்தது.

சம்ரிதியுமே முதலில் அதிர்ந்தாலும் அவளுக்கும் அதே நிலை தான். அவளுடைய கவலைகளனைத்தும் அந்த ஒற்றை முத்தத்தில் தீர்வது போலிருந்தது. முடிவேயில்லாமல் நீண்டு கொண்டே இருக்கக் கூடாதா என்று மனம் ஏங்கியது. தாமாக அவளின் கைகளிரண்டும் மித்ரனின் முதுகை வளைத்துக் கொண்டது.

‘என்ன சொல்லிட்டு இப்ப என்ன பண்ணிக்கிட்டு இருக்க மித்ரா’ என்று மித்ரனின் மனசாட்சி கேள்வி எழுப்ப சடாரென்று அவளை விட்டு விலகினான். அவளுக்கு முதுகைக் காட்டியபடி திரும்பி நின்றவன்,

“சாரி... நான் இங்க இருக்குற இன்னும் ரெண்டு நாளும் நீ என்கிட்ட பேசாம இருக்கிறது நாம ரெண்டு பேருக்குமே நல்லது” என்று சொல்லிவிட்டு அறைக்குள் இருந்த மற்றொருக் கதவைத் திறந்து கொண்டு வெளியில் சென்றுவிட்டான் மித்ரன். சொல்லியபடி இரண்டு நாளில் சிங்கப்பூருக்குக் கிளம்பியவன் மறுபடி சம்ரிதியைப் பார்த்தது ஒரு வருடம் கழித்து அவள் சிங்கப்பூருக்கு விமானமேறிய அன்றுதான்.
 




Last edited:

Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
Mee came sangi kaa.. ???

Mithu paavam.. romba nonthu poyitaan polave.. haiyaa fb mudinchichu.. naan present mithu va paarka waiting.. ?????
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top