• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

எழுதுகிறேன் ஒரு கடிதம் - 20 (Pre final)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
வணக்கம் தோழமைகளே, இன்னைக்கு நான் வாயைத் திறந்து எதுவும் சொல்றதா இல்ல. அப்புறம் தயிரைக் காணோம் கடுகைக் காணோமுன்னு யாரு தேடுறது. அதனால நீங்களே படிச்சுப் பார்த்துத் தெரிஞ்சுக்கோங்கப்பா ;););)
CA2BBA85-65F4-45E4-9EC4-2BE8B3C926CE.jpeg
 




Last edited:

Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
அத்தியாயம் - 20

சிங்கப்பூரிலுள்ள சென்டோஸா ஐலேன்ட் அன்று முழுவதுமாக மித்ரனின் நிறுவன ஆட்களாலும் அவர்களுடைய குடும்பத்தினராலும் சூழப்பட்டிருந்தது. மித்ரன் ரொபாட் கைனடிக்ஸ் நிறுவனத்தைத் தொடங்கிய நாளிலிருந்தே இதைக் கடைப்பிடித்து வருகிறான். வருடத்தில் ஒரு நாள் அங்கு வேலைப் பார்ப்பவர்களுக்கென முழுவதுமாக ஒதுக்கி விடுவான்.

மூன்று வெவ்வேறு நாட்டவர்கள் ஒன்றாகப் பணிபுரிவதால் பண்டிகை நாட்களைத் தேர்ந்தெடுக்காமல் நிறுவனம் தொடங்கிய நாளையே வருடா வருடம் இந்தக் கொண்டாட்டத்திற்குத் தேர்ந்தெடுத்துவிட்டான் மித்ரன். சென்னையிலும் இதே போல் விழாக்களும் கொண்டாட்டங்களும் உண்டு வேறொரு நாளில். அதற்கும் மித்ரன் செல்வது வழக்கம்.

அன்று அனைவருக்குமான செலவை ரொபாட் கைனடிக்ஸ் நிறுவனமே ஏற்றுக் கொள்ளும். உணவு தொடங்கி சென்டோசாவிலுள்ள பொழுதுபோக்கு சவாரிகள் வரை அனைத்தும் நிறுவனத்தின் பொறுப்பு. சிறப்பாகப் பணியாற்றியவர்களைக் கௌரவித்துப் பரிசும் பாராட்டும் கூட உண்டு.

மதிய உணவுடன் ஆரம்பமாகும் நிகழ்வானது ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்தில் தொடங்கி இறுதியில் பரிசு வழங்குவதோடு முடிவடையும். அதன்பின் டக்கீலா, மார்கரிடா, காக்டெயில், மார்டினி என்று ஆல்கஹால் ஆறாக ஓடுகையில் வாங் லீயிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு மித்ரன் கிளம்பிவிடுவான்.

இன்று காலையிலேயே களைக்கட்ட ஆரம்பித்திருந்தது சென்டோஸா. அழகான ஒரு பிளாக் டாப்சிலும் சந்தன நிற ஜீன்சிலும் வந்திருந்தாள் சம்ரிதி. முன்னுச்சி முடியை மட்டும் ஒரு க்ளிப்பில் அடக்கி மற்றவற்றை விரித்துவிட்டிருக்க, மித்ரனைக் காணும் ஆவலிலேயே கூடுதல் அழகாய்த் தோன்றினாள் பெண். வாய் லீ ஜிங்கின் கேள்விகளுக்குப் பதில் கூறிக் கொண்டிருந்தாலும் கண்கள் மித்ரனை எதிர்பார்த்து அலைப்பாய்ந்துக் கொண்டிருந்தன.

மித்ரனைப் பிரிந்து இந்தப் பத்து நாள் இருந்ததே ஏதோ பத்து யுகம் போலத் தோன்றியது பெண்ணவளுக்கு. இனி மித்ரன் எந்த நாட்டுக்குச் சென்றாலும் தானும் கூடவே சென்றுவிட வேண்டும் என்று மனதுக்குள் தீர்மானமே நிறைவேற்றியாகிவிட்டது.

எப்போதடா வருவான் என்று உடம்பின் ஒவ்வொரு அணுவும் தவமிருக்க அவளை நெடு நேரம் காக்க வைக்காமல் வந்து சேர்ந்தான் அவளுடையக் கண்ணாளன். அவளைப் போலவே கறுப்பு நிற டிஷர்ட்டும் ப்ளூ ஜீன்சுமாக அட்டகாசமாக வந்திறங்கினான் மித்ரன்.

பார்த்த விழி பூத்தபடி சம்ரிதி மித்ரனையே பார்த்து நிற்க, மித்ரனோ அவனுடைய விழிகளைக் கூலர்சுக்குள் ஒளித்திருந்தான். நடுவில் ஒரு சிலரிடம் மட்டும் மரியாதை நிமித்தமாக ஓரிரு வார்த்தைகள் உரையாடிவிட்டு நேரடியாக சம்ரிதியிடம் வந்து நின்றான்.

கூலர்சைக் கழட்டி டிஷர்ட்டில் மாட்டியவன் சம்ரிதியை ஆழ்ந்து நோக்க விழிகள் நான்கும் பின்னிப் பிணைந்து கொண்டன. நிறுவன ஆட்கள் அனைவருமே மித்ரனின் வரவை எதிர்நோக்கியே காத்திருந்ததால் கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அங்கேதான் குழுமியிருந்தார்கள்.

அனைவரின் முன்னிலையிலும் எந்தவிதத் தயக்கமும் இன்றி சம்ரிதியின் முன் ஒற்றைக் காலை மடக்கி மண்டியிட்டவன், ஒரு மந்தகாசப் புன்னகையுடன் தன்னுடைய பாக்கெட்டிலிருந்து ஒரு மோதிரத்தை எடுத்து அவள் முன்பாக நீட்டி,

"என் கூட என் வீட்ல இந்த ஆறு மாசமா ஒரு பொண்ணு தங்கியிருக்கா. அவ நிக்கிறது, நடக்குறது, தூங்குறது, பேசுறது, ஏன் சமயத்துல அவ அழுகைக் கூட எனக்குப் பிடிக்குது. பயங்கர புத்திசாலி. அக்கௌன்ட்சில புலி. ஆனா என்கிட்ட மட்டுமே எனக்கே எனக்காக அவ காட்டும் குழந்தைத்தனம் இப்படி அவளோட எல்லாமே எனக்குப் பிடிச்சிருக்கு.

அவ இல்லாம என் வாழ்க்கையே இல்லைன்னு நினைக்குற அளவுக்கு அவளைப் பிடிச்சிருக்கு. அவளுக்காக உயிரைக் கூடக் கொடுக்கலாமின்னு நினைக்குற அளவுக்குப் பிடிச்சிருக்கு.

இதெல்லாம் என் மாமா பொண்ணுங்குற காரணத்துக்காக இல்லை. வேற எந்தக் காரணத்துக்காகவும் இல்லை. சம்ரிதிங்குற தனி மனுஷியைப் பிடிச்சதால மட்டுமே இந்தக் காதல் விண்ணப்பம். உனக்கும் என்னைப் பிடிச்சிருக்கா? வில் யூ பீ மை லவ் பாஃரெவர்?"

ஒவ்வொரு வார்த்தையையும் நிறுத்தி நிதானமாக சம்ரிதியின் கண்களைப் பார்த்துத் தெளிவாக வார்த்தைகளைக் கோர்த்து மாலையாக்கிக் கேட்டான் மித்ரன்.

கையிரண்டாலும் வாயை மூடிக் கொண்டு கண்களிலிருந்து கண்ணீர் வழிய இமைக்கவும் மறந்து நின்றிருந்தாள் சம்ரிதி.

இதை விடவும் ஒருவன் தன் காதலை மரியாதைப்படுத்த முடியுமா? 'மாமா மகள் என்ற காரணத்தினால் தானே காதலித்தாய். இப்பொழுது அதுவே இல்லையென்றாகிவிட்டது. எங்கனம் உன் காதலை நான் ஏற்பது?' என்று அவள் சொன்ன ஒரே காரணத்துக்காக அத்தனைப் பேரின் முன்னிலையில் தன் மனத்தைத் திறந்துக் காட்டியிருந்தான் மித்ரன்.

உனக்காக மட்டுமே உன்னைக் காதலிக்கிறேன் என்று நீக்கமற நிரூபித்திருந்தான்.
மாமாவின் மகளாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் சம்ரிதி தான் தன் உயிர் என்பதை உரக்கத் தெரிவித்துவிட்டான் மித்ரன். அசையவும் மறந்து நின்ற சம்ரிதியைப் பின்னிருந்து இறுக்க அணைத்த லீ ஜிங்கினுடைய அணைப்பும் சுற்றியிருந்தவர்களின் ஹோ என்ற பேரிரைச்சலுமே நினைவுலகுக்கு அழைத்து வந்தது.


அப்பொழுதும் "வில் யூ" என்று கேள்வியாகப் பார்த்தவனிடம் "யெஸ்" என்று அழுகையும் சிரிப்புமாகத் தலையசைத்துத் தன் கையை நீட்டியிருந்தாள் சம்ரிதி. அவள் விரல்களைப் பற்றி மோதிரம் அணிவித்தவன் மென்மையாக் அந்தக் கைகளில் ஒரு முத்தம் வைத்தான். சுற்றியிருந்தவர்களின் ஆரவாரம் இன்னும் அதிகமாகியது.

அப்பொழுது பற்றிய சம்ரிதியினுடைய விரல்களைப் பின் எப்பொழுதும் விடவில்லை மித்ரன். இருவரும் இணைப் பிரியாமல் சுற்றிக் கொண்டிருந்தார்கள். ஆசைதீர கண்களால் தன்னவளைப் பருகிக் கொண்டிருந்தான் மித்ரன். அவன் பார்வையை மாற்றும் வகையறியாது தவித்துப் போனாள் சம்ரிதி.

சற்றுத் தள்ளி நின்றிருந்த வாங் லீ வேறு லீ ஜிங் ஏதோ அவன் காதில் சொல்லிச் சிரிக்கவும் வேகமாக இவர்களை நோக்கி வந்தவன் மித்ரனுடைய ஷர்ட்டில் மாட்டியிருந்தக் கூலர்சை எடுத்து மித்ரன் கண்களில் அணிவித்துவிட்டுப் பின்பு,
"இவ்வளவு பப்ளிக்காவாடா சைட் அடிப்ப? ஆனாலும் ஒன்னுடா, இன்னைக்கு என்னையும் சேர்த்து எத்தனைக் குடும்பஸ்தனோட வாழ்க்கைக்கு நீ உலை வைச்சிருக்கியோ? எதுவா இருந்தாலும் சொல்லிட்டுப் பண்ணுங்கடா டேய்" என்று அங்கலாய்த்துவிட்டுச் சென்றான்.


மதிய உணவருந்தி முடியும் வரைப் பொறுத்திருந்த சம்ரிதி அதற்கு மேல் தாங்க மாட்டாமல் பரிசுகள் வழங்கும் விழாவிற்காக வேறு உடை மாற்றப் போவதாகச் சொல்லிவிட்டு லீ ஜிங்குடன் ரிசார்ட்டிலுள்ள அறைக்குச் சென்றுவிட்டாள்.

மித்ரனை அங்கு செல்லவிடாமல் தடுக்கும் பொறுப்பை வாங் லீ திறம்படச் செய்து அதற்குப் பரிசாகப் புண்ணான முதுகையும் பெற்றுக் கொண்டான். சம்ரிதி மற்றும் லீ ஜிங் இருவரும் ஒரே மாதிரியாக பிங்க் மற்றும் வெள்ளை நிற லெஹங்காவில் தயாராகி வர, மித்ரன், வாங் லீ மற்றும் அவனுடைய குட்டி மகன் என்று மூவருமாக பிளாக் அன்ட் ஒயிட் புஃல் பாஃர்மல் சூட்டில் தயாராகி வந்தார்கள்.

'டிரஸ் நல்லாயிருக்கா' என்பது போல் கண்களால் வினவித் தலையசைத்து சம்ரிதி கேட்க மூச்சடைத்தது மித்ரனுக்கு. விழா தொடங்கியிருக்க முயன்று தன் கவனத்தைத் திசைத் திருப்பினான் மித்ரன். இருந்தும் கண்கள் நொடிக்கொரு தரம் சம்ரிதியையே தொட்டுத் தொட்டு மீண்டது.

விருதுகள் வழங்கி முடித்தபின் வேடிக்கை விளையாட்டுகள் தொடர்ந்து கொண்டிருந்தன. அதில் ஒரு நிகழ்வாக மித்ரனைப் பாடச் சொல்ல, "உங்களுக்கெல்லாம் சோலோ சாங் வேணுமா இல்ல டூயட் வேணுமா" அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்டு வைத்தான் மித்ரன்.

அவன் எதிர்பார்ப்பைக் கொஞ்சமும் குலைக்காமல் மொத்த அரங்கமும் "வீ வான்ட் டூயட்" என்று அதிர்ந்தது. அது மட்டுமின்றி சம்ரிதியையும் அவர்களே மேடையேற்றி இருந்தார்கள். சம்ரிதியைப் பார்த்தவாறே பாடத் தொடங்கினான் மித்ரன்.

"நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூவல்லவா
இந்தப் பூவுக்கு சேவகம் செய்பவன் நானல்லவா
இதழோடு இதழ் சேர்த்து
உயிரோடு உயிர் கோர்த்து வாழவா"
இந்தப் பாடலை சற்றும் எதிர்பாராத சம்ரிதி திகைப்பும் காதலும் கலந்த குரலில் பாடத் தொடங்கினாள்.
"நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூவல்லவா
இந்தப் பூவுக்கு சேவகம் செய்பவன் நீயல்லவா
கண்ணாளனே கண்ணாளனே
உன் கண்ணிலே என்னைக் கண்டேன்"
"கண் மூடினால் கண் மூடினால்
அந்நேரமும் உன்னைக் கண்டேன்"
"ஒரு விரல் என்னைத் தொடுகையில்
உயிர் நிறைகிறேன் அழகாய்"
"மறுவிரல் வந்துத் தொடுகையில்
விட்டு விலகுதல் அழகா"
"உயிர் கொண்டு வாழும் நாள்வரை
இந்த உறவுகள் வேண்டும் மன்னவா"
"நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூவல்லவா
இந்தப் பூவுக்கு சேவகம் செய்பவன் நீயல்லவா"
"இதே சுகம் இதே சுகம்
எந்நாளுமே கண்டாலென்ன"
"இந்நேரமே இந்நேரமே
என் ஜீவனும் போனாலென்ன"
"முத்தத்திலே பல வகையுண்டு
இன்று சொல்லட்டுமா கணக்கு"
"இப்படியே என்னைக் கட்டிக்கொள்ளு
மெல்ல விடியட்டும் கிழக்கு"
"அச்சப்பட வேண்டாம் பெண்மையே
என் ஆண்மையில் உண்டு மென்மையே"
"நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூவல்லவா
இந்தப் பூவுக்கு சேவகம் செய்பவன் நானல்லவா
இதழோடு இதழ் சேர்த்து
உயிரோடு உயிர் கோர்த்து வாழவா"
"நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூவல்லவா
இந்தப் பூவுக்கு சேவகம் செய்பவன் நீயல்லவா"


ஏற்கனவே காந்தக் குரலுக்குச் சொந்தக்காரர்கள் இருவரும். இப்பொழுது அந்தக் காந்தக் குரலோடு கரை காண முடியாத அளவு காதலும் சேர்ந்து கொள்ள அத்துனை இனிமையாக வெளிவந்திருந்தது பாடல். பாடி முடித்த பின்னும் ஒரு சில விநாடிகள் அமைதியாகவே கழிய பின் அந்த அரங்கம் அதிர்ந்தது கரவொலிகளால்.

வெட்கப் புன்னகையுடன் சம்ரிதி தன் இருக்கைக்குத் திரும்பிவிட மித்ரனும் சிறிது நேரத்தில் அவளருகில் வந்து அமர்ந்தான்.

"அத்தான்"

ஏதோ சொல்லுவதற்காக சம்ரிதி அழைக்க, மொத்தமாகத் தன்னுடைய பாதி உடலை அவள் மேல் சரித்துக் கொண்டு "ஹ்ம்ம்" என்றான் மித்ரன். வெட்கம் பிடுங்கித் தின்ன ஒற்றைக் கையால் மித்ரனை எதிர்புறமாகத் தள்ளிய சம்ரிதி,

"லீ ஜிங் குட்டிப் பையனை வீட்டுல கொண்டு போய் விடப் போறாளாம். நானும் வீட்டுக்குக் கிளம்புறேன். நீங்க இருந்து இதெல்லாம் முடிச்சுட்டு வாங்க" என்று சொல்ல பதறித் தான் போனான் மித்ரன்.

"ஏன்...ஏன்...ஏன்? அதெல்லாம் வேண்டாம். இன்னும் டூ ஹவர்ஸ்தான். ரெண்டு பேரும் சேர்ந்தே வீட்டுக்குப் போகலாம்" என்றான் அவள் கையை இறுகப் பற்றிக் கொண்டு.
முகத்தை சிரித்த மாதிரி வைத்துக் கொண்டு கையை மெல்ல உறுவிக் கொண்டவள் லீ ஜிங்குடன் எழுந்து நடக்கத் தொடங்கிவிட அத்தனை பேர் முன்னிலையில் லீ ஜிங்கை முறைக்க மட்டுமே முடிந்தது மித்ரனால்.
 




Last edited:

Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
சிறிது தூரம் சென்று திரும்பிப் பார்த்த சம்ரிதி, 'சீக்கிரம் வந்துடுங்க' என்று வாயசைத்துவிட்டுச் செல்ல அவளைப் பரிதாபமாக பார்த்து வைத்தான் மித்ரன். 'ஐயோ கொல்றாளே, இன்னைக்கு வீட்டுக்கு வந்து உன்னை கவனிச்சுக்குறேன் சமி பேபி' என்று மனதோடு கறுவிக் கொண்டவன் முகத்தில் ஒரு மந்தகாசப் புன்னகை வந்து அமர்ந்து கொண்டது.

அரங்கை விட்டு வெளியே வந்ததும், "நான் டாக்ஸி எடுத்துக்குறேன் லீ ஜிங். நீ கிளம்பு" என்று கூறிய சம்ரிதியை விநோதமாகப் பார்த்தாள் லீ ஜிங்.

"எதுக்கு உன் புருஷன் என்னைத் திட்டுறதுக்கா?" என்று கூறி சிறிது நேரம் இடைவெளிவிட்டவள் "ஓய் என்னம்மா நடக்குது இங்க? காலையிலேருந்து உங்க ரெண்டு பேர் முகமும் வேற ஓவர் பிரைட்டா இருக்கு. என்ன விஷயம்? எதாவது குட் நியூசா?" என்று குழந்தை ஏந்துவதைப் போல் கையாட்டிக் கேட்டாள் லீ ஜிங்.

"அதெல்லாம் ஒன்னுமில்ல. எனக்குப் போற வழியில் கொஞ்சம் பர்சேஸ் பண்ண வேண்டியிருக்கு லீ ஜிங். அதான் தனியா போயிக்கிறேன்னு சொன்னேன். பட் குட் நியூஸ் அடுத்த மாசமே சொல்லிடுவேன்" என்று அவளைப் பார்த்துக் கண்ணடித்துக் குறும்புப் புன்னகையுடன் கூறினாள் சம்ரிதி.

"ஆண்டவா இன்னைக்கு எங்க மித்ரனை நீதான்பா காப்பாத்தணும்" என்று லீ ஜிங் போலியாக வானத்தைப் பார்த்துக் கோரிக்கை வைக்க, அதன் பின் தோழிகள் இருவரும் சிரிப்பும் கும்மாளமுமாக ஒன்றாகவே வீட்டை நோக்கிக் கிளம்பினார்கள்.

வழியில் லிட்டில் இந்தியா சென்று அங்கு அன்று விற்பனைக்கென்று வைத்திருந்த மொத்த ரோஜாக்களையும் மல்லிகையையும் வாங்கிக் கொண்டாள் சம்ரிதி. பக்கத்தில் இருந்த மாரியம்மன் கோவிலுக்குச் சென்று 'இன்று தொடங்கப் போகும் தங்கள் வாழ்க்கை ஆயுளுக்கும் இதே காதலுடன் தொடர வேண்டும்' என்று அவசர வேண்டுதல் வைக்கவும் மறக்கவில்லை.

சம்ரிதியை அவர்களுடைய வீட்டில் இறக்கிவிட்டு "நாளைக்கு போஃன் பண்ணுவேன் ஒழுங்கா நான் கேட்குற எல்லா கேள்விக்கும் பதில் சொல்லணும். ஓ.கே?" என்று சொல்லி சம்ரிதியை சீண்டி பின் "ஐ அம் சோ ஹாப்பி பாஃர் யூ டியர்" என்று கூறிக் கட்டியணைத்துவிட்டுச் சென்றாள் லீ ஜிங்.

வீட்டுக்குள் நுழைந்தவளைப் பரபரப்பும் வெட்கமும் சூழ்ந்து கொள்ள மித்ரனுக்குப் பிடித்த வகையில் மக் ப்ரௌனி, ஒயிட் சாஸ் பாஸ்தா, சூப் என்று விரைவாக சமைத்து முடித்து டைனிங் டேபிளில் செட் செய்து வைத்தாள் சுற்றிலும் மெழுகுவர்த்திகளோடு.
ரோஜா பூக்களை உதிர்த்து வாசலில் தொடங்கி படுக்கையறை வரை ரோஜா இதழ்களால் பாதையமைத்து வைத்து, வெள்ளை நிறப் படுக்கை விரிப்பின் நடுவில் இதய வடிவில் ரோஜா இதழ்களைப் பரப்பி வைத்தாள்.


'கொஞ்சம் ஓவரா போற மாதிரி இல்ல' என்று கேள்வி கேட்ட மனசாட்சியின் தலையில் குட்டி, 'என் அத்தானுக்காக நான் செய்றேன்' என்று சொல்லி அடக்கி வைத்தாள்.

இதையெல்லாம் முடிக்கவே மூன்று மணிநேரம் கழிந்திருந்தது. மித்ரன் எந்நேரமும் வந்துவிடலாம் என்று தோன்றியதால் அவன் வருவதற்குள் குளித்துவிடலாம் என்றெண்ணி சம்ரிதி குளியல் தொட்டிக்குள் இறங்கவும் மித்ரன் வந்து சேரவும் சரியாக இருந்தது.

கதவைத் தட்டிப் பார்த்தவன் பதிலில்லை என்றவுடன் தன்னிடம் இருந்த சாவி கொண்டு வீட்டைத் திறக்க அசந்துதான் போனான் மித்ரன். மொத்த வீடும் மெல்லிய மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் மூழ்கிக் கிடக்க பாதம் தரையில் படாதவாறு ரோஜாப்பூப் பாதைத் தாங்கியது.

ஆவலும் ஆசையும் விழிகளில் போட்டிப் போட சம்ரிதியைத் தேடிப் படுக்கையறைக்குச் சென்றவனுக்கு அங்கும் அவளைக் காணாமல் ஏமாற்றமே மிஞ்சியது.
குளியலறையிலிருந்து வந்த சத்தம் தன்னவளின் இருப்பை உணர்த்த துள்ளலுடன் குளியலறையை நோக்கிச் சென்றான்.


லாக்காகி இருக்குமோ என்ற சந்தேகத்துடனே குமிழியைத் திருகிப் பார்க்க, அதிர்ஷ்டக் காற்று மித்ரன் பக்கமே வீசியது. கதவு திறக்கும் சத்தத்தில் அதிர்ந்து போனவளாய் திரும்பிப் பார்க்க அங்கு மந்தகாசப் புன்னகையுடன் நின்றிருந்தான் மித்ரன்.

அவசரமாகத் தன்னை முழுவதுமாக சோப்பு நுரைக்குள் மறைத்துக் கொண்டவள் அவஸ்தையாக அவனைப் பார்த்து,

"அத்தான்..." என்று கூறி பரிதவிப்பாக ஏறிட்டாள்.

மெல்லிய விசில் சத்தத்தோடுப் புருவத்தை ஏற்றி இறக்கினான் மித்ரன். மெல்ல அவளை நோக்கி நடக்கத் தொடங்க,

"அத்தான் வேண்டாம் கிட்ட வராதீங்க. உங்களை யாரு இவ்வளவு சீக்கிரம் வரச் சொன்னது? என் சஸ்பென்செல்லாம் கெட்டுப் போச்சு. எல்லாம் உங்களாலதான்" என்று பதட்டத்தில் சம்ரிதி உளறத் தொடங்க,

"சேச்சே என்னோட சமி பேபி சர்ப்ரைசை நான் கலைப்பேனா? இப்ப முதல்ல அத்தானோட சர்ப்ரைஸ். அப்புறம் உன்னோடது. இன்னைக்குப் பூரா இந்த வேலைதான்" என்று அவளை நோக்கிக் குறும்பாகக் கண்ணடித்துக் குளியல் தொட்டிக்குள் இறங்க முற்பட, "ஐயோ அத்தான் டிரஸ்" என்று அலறியிருந்தாள் சம்ரிதி.

"கரெக்ட் செய்யப் போற வேலைக்கு டிரஸ் தேவையில்லை இல்ல" என்று கூறி அவள் இதழில் அவசர முத்தம் பதித்து வெளியேறி, என்ன செய்வது என்று சம்ரிதி யோசித்து முடிப்பதற்குள் இடுப்பில் கட்டிய துண்டோடு நீருக்குள் இறங்கியிருந்தான் மித்ரன்.

அதன் பிறகு மித்ரனின் கண்கள் பேசிய காதல் பாஷையிலும், கைகளும் இதழ்களும் பெண்ணவளின் உடலில் நடத்தியக் காதல் ஆராய்ச்சியிலும் மயங்கி அவர்களைச் சூழ்ந்திருந்த சோப்பு நுரையும் வெட்கமடைந்து முகத்தைத் திருப்பிக் கொண்டது.

'ரோஜாப்பூ கோவிச்சுக்கும்' என்றொரு முறை பிறகு 'மல்லிகைப் பூவை யூஸ் பண்ணவே இல்லையே' என்று மாற்றி மாற்றி பூவின் பெயரைச் சொல்லியே பூவையை முழுவதுமாகத் தனதாக்கிக் கொண்டான் மித்ரன் மீண்டும் மீண்டுமாக.

மறுநாள் காலைப் பொழுது ரம்மியமாக விடிய தன்னை இறுக்கி அணைத்தவாறு உறங்குபவளை ஆசைத் தீரப் பார்த்திருந்தான் மித்ரன். கன்னங்களும் உதடுகளும் லேசாகக் கன்றிச் சிவந்திருக்க ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் சம்ரிதி.

அவள் தலை முடியை ஒதுக்கிவிட்டு நெற்றியில் முத்தமிட்டு "சமிம்மா எந்திரிடா" என்று அவள் காது மடலில் உதடு உரசக் கூறினான் மித்ரன்.

"ஹ்ம்ம்... இப்பதானே தூங்கவே ஆரம்பிச்சோம் அதுக்குள்ள எழுப்புறீங்களே அத்தான்" கண்களைத் திறவாமலே சிணுங்கலாக வெளிவந்தது சம்ரிதியின் குரல்.

ரொம்பவும் படுத்திவிட்டோமோ என்று பதறிப் போன மித்ரன் வேகமாக அவள் மேனியை ஆராய முற்பட, அதற்குத் தடையாகப் போர்வையை இறுக்கப் பற்றியிருந்தாள் பெண். "சமிம்மா ரொம்ப கஷ்டமா இருந்துச்சா? எங்கேயாவது வலிக்குதா?" பரிதவிப்பாக மித்ரன் வினவ பதிலாக மௌனமே கிடைத்தது.

தவிப்புடன் மித்ரன் பார்க்க சம்ரிதியோ குறும்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள். திரும்பவும் "வலிக்குதா" என்று கேட்க இல்லையென்று தலையசைத்தவள் அவன் "இல்லையா" என்று கேட்கும் போது ஆம் எனும் விதமாகத் தலையசைத்து அவனைக் குழப்பிக் கொண்டிருந்தாள்.

மித்ரன் இவள் குறும்பை உணர்ந்து கொள்ளும் முன் சிட்டாகப் பறந்து குளியலைறைக்குள் நுழைந்து கொண்டாள் இம்முறை மறக்காமல் கதவை லாக் செய்துவிட்டு.
குளித்து முடித்து அழகாகப் புடவை கட்டி சமைத்துக் கொண்டிருந்தவளைப் பின்னிருந்து ஆசையுடன் அணைத்துக் கொண்டான் மித்ரன்.


"அத்தான்... தள்ளிப் போங்க. எனக்கு வேலை இருக்கு."

"நீ உன் வேலையைப் பாரு. நான் என் வேலையைப் பார்க்கிறேன்" என்று கூறியவாறே அவள் கூந்தலுக்குள் வாசம் பிடிக்கத் தொடங்கினான் மித்ரன்.

அவன் புறமாகத் திரும்பி நின்றவள், "என் செல்ல அத்தான்ல்ல, நாம முதல்ல கோவிலுக்குப் போய் கடவுளுக்கு ஒரு தேங்க்ஸ் சொல்லிட்டு வருவோமாம். அதுக்கப்புறம் நீங்க உங்க வேலையைப் பார்ப்பீங்களாம். சரியா" என்று அவன் கன்னம் தாங்கி வினவ, "ஹ்ம்ம்" என்று சந்தேகமாகப் பார்த்தான் மித்ரன்.

அவனுக்குப் பதிலாக "ஹ்ம்ம்" என்று உறுதியாகத் தலையசைத்தவளிடம், "இத்தனை நாளா இந்தக் காதலையும் குறும்பையும் எங்கே ஒளிச்சு வைச்சிருந்தேன்னு வந்து கண்டுபிடிக்கிறேன்" என்று அவள் நெற்றி முட்டிச் சிரித்துவிட்டு,

"அதுக்கு முன்னாடி உன்கிட்ட கொஞ்சம் பேசணும்டா. வேலையை முடிச்சிட்டு வர்றியா?" என்று மித்ரன் கேட்க ஆமோதிப்பாகத் தலையசைத்தாள் சம்ரிதி.

சொன்னபடி பிரேக்பாஃஸ்ட் தயாரித்து முடித்துவிட்டு, "அத்தான் சாப்பிட்டுக்கிட்டே பேசலாமா?" என்று கேட்டபடி வந்து நின்றாள் சம்ரிதி. அவள் கரம் பிடித்துத் தன்னருகே அமர்த்திக் கொண்டவன், தன்னருகில் இருந்த லேப்டாப் பேகில் இருந்து சம்ரிதி கொடுத்தப் பத்திரத்தை வெளியில் எடுத்து அவளிடம் நீட்டினான் மித்ரன்.

அதைப் பார்த்ததும் சம்ரிதியின் முகம் மாறத் தொடங்க கைகள் வெளிப்படையாகவே நடுங்கத் தொடங்கியது. ஆதரவாக மித்ரனின் கரத்தை ஒரு கையால் இறுக்கப் பற்றிக் கொண்டு மற்றொருக் கையால் நடுங்கியவாறே அந்தப் பத்திரத்தை வாங்கினாள் சம்ரிதி. அவள் நிலையறிந்து ஆதரவாக அவளை அணைத்தவாறேப் பேசத் தொடங்கினான் மித்ரன்.

"சமிம்மா நீ... உனக்கு..." என்று முதலில் வெகுவாகத் தயங்கியவன், "உனக்கு அப்பா அம்மா யாருன்னு தெரிஞ்சுக்கணும் இல்ல அவங்களைப் பார்க்கணும் அந்த மாதிரி எதாவது ஆசை இருக்கா டா?" மென்று முழுங்கி ஒரு வழியாகக் கேட்டேவிட்டான் மித்ரன்.

அவன் மேலிருந்து கோபமாகத் தன் கையை உருவிக் கொண்டவள், "உளறாதீங்க அத்தான். நான் எதுக்கு அவங்களைத் தேடணும்? இந்த ஜென்மத்துல என் அப்பா அம்மான்னா அது இவங்க மட்டும்தான்" என்று அங்கு வைக்கப்பட்டிருந்த ராஜனின் புகைப்படத்தைச் சுட்டிக் காட்டிக் கூறினாள் சம்ரிதி.

"எனக்கு இருக்குறதெல்லாம் இவங்களுக்கு மட்டுமே சொந்தமா நான் பிறக்காமப் போயிட்டேனே அப்படிங்குற தவிப்புதானேயொழிய நீங்க சொல்ற மாதிரி எந்த மண்ணாங்கட்டியும் இல்ல. அப்படி யாரையாவதுக் கண்டுபுடிச்சுப் போய் பார்த்துட்டு வந்து அவங்களைப் பத்திதான் பேசப் போறீங்கன்னா நாம பேசவே வேண்டாம்" என்று கூறிக் காதுகளை இறுக மூடிக் கொண்டுத் திரும்பி நின்று கொண்டாள் சம்ரிதி.

அவளுடைய வாய் வழி வந்த உள்ளார்ந்த வார்த்தைகளில் அகமகிழ்ந்து போனவன், "அப்படின்னா உன் கையாலேயே இந்தப் பத்திரத்தைக் கிழிச்சுப் போட்றுடா" என்று கூறி அந்தப் பத்திரத்தை அவள் புறமாக நீட்டியிருந்தான் மித்ரன்.
 




Last edited:

Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,488
Reaction score
29,223
Age
59
Location
Coimbatore
மிகவும் எதிர்பார்ப்புடன் இருக்கும் பொழுது தொடரும் , நிறைவுப் பகுதியை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்
 




Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,488
Reaction score
29,223
Age
59
Location
Coimbatore
மிகவும் எதிர்பார்ப்புடனே அடுத்து என்ன என்று சுவாரசியமாகவே கதையோட்டம் நகர்ந்தது. தெளிவான கதையமைப்பு. நிறைவு பகுதியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் சங்கீதா.
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
மிகவும் எதிர்பார்ப்புடன் இருக்கும் பொழுது தொடரும் , நிறைவுப் பகுதியை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்
மிக்க நன்றி சித்ராம்மா. நாளை அல்லது நாளை மறுநாள் நிறைவுப் பகுதியைக் கொடுத்துவிடுகிறேன். தங்கள் வார்த்தைகளே எனக்கு மிகுந்த ஊக்கமளிக்கின்றன. மிக்க நன்றி.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top