Book Offers in Ms Publications

கடும் சோதனைகள் வருவது ஏன்..?

#1
கடும் சோதனைகள் வருவது ஏன் ...?
கடவுள் ஏன் நம்மை இப்படி சோதிக்கிறார் ...?
.
சுகத்தை மட்டும் விரும்பி ஏற்கிற மனிதன், கஷ்டம் வரும்போது அதை பொறுத்துக் கொள்ள மாட்டேன் என்று சொன்னால், அவன் இறைவனையோ, இயற்கையையோ, புரிந்து கொள்ளவில்லை என்று தான் அர்த்தம்.

கடவுள் நம்மை சோதிப்பதெல்லாம் இல்லை. அது ஒரு தவறான நம்பிக்கை. அவர் நமக்காக நம் கர்ம விதியை சரிவர நடத்தி வைக்கிறார். அவர் மேலும் நமக்கு நம் தலைவிதியை இறை வழிபாட்டின் மூலம் மாற்றியெழுத முழுச் சுதந்திரமும் கொடுத்திருக்கிறார்.

நாம் கடவுளின் சோதனை என்று சொல்வது, நமக்கு நாமே, ஏற்படுத்திக் கொண்டிருக்கும் விளைவுகளேயன்றி வேறல்ல.

மக்களிடம் ஆச்சரியப்பட வைக்கும் விஷயம் என்னவென்றால், கஷ்டங்களை அனுபவிக்கும்போது, ஏன் எனக்கு, என்பவர்கள், அவர்கள் வளர்ச்சி யடைகையில், எனக்கு ஏன் இந்த வளர்ச்சி, என்று கேட்பதேயில்லை ... !

எனக்கு மட்டும் ஏன் இத்தனை கஷ்டம் என்பவர்கள், என்றாவது எனக்கு மட்டும் ஏன், இந்த மாருதி கார், ஹீரோ ஹோண்டா பைக், சாம்சங் கலக்ஸி மொபைல், லேப் டாப், ஐ.டி கம்பனி வேலை, வங்கியில் பணம் ,வீடு, நகை, வெளிநாட்டுப் பயணம், என்று கேட்டதுண்டா .. ?

வைரம் அறுக்கப்படாமல் பளபளப்பாகாது, மின்னாது, தங்கம் நெருப்பில் புடம் போடாமல் புனிதமாகாது. நல்லவர்கள் சோதனைக்கு உள்ளாவார்கள், ஆனால் வேதனைப்பட மாட்டார்கள். வாழ்வின் அனுபவங்கள் அவர்களை சிறப்பிக்குமே தவிற கசப்பிக்காது.

ஆரம்பதிலிருந்து கடைசி வரை கஷ்டப்பட்டே வாழ்ந்து செத்தவர்கள் இந்த உலகத்தில் யாரும் கிடையாது.அதே போல பிறந்த தேதியிலி ருந்து இறுதிவரை சந்தோஷத் துடனே வாழ்ந்து மடிந்தவர்களும் கிடையாது.

கஷ்டப்படுகிறவர்களுக்கு, துன்பம் அனுபவித்த வர்களுக்கு, ஆண்டவன் ஒரு நாள் உதவாமற் போக மாட்டான். எப்பொழுதுமே கஷ்டப்படட்டும் என்று, யாரையும் ஆண்டவன் அப்படியே விட்டுவிட மட்டான்.

விதிக்கப்பட்ட தடைக் கற்கள் தரும் பாடங்களே போராட்டங்களிலும் சகிப்பிலுமே மன வலிமை வரும். சோதனைகள் என்பது மனோதி டத்தை அதிகரிக்க உதவும்
சில சமயங்களில், அவர் நம்மைக் கைவிட்டு விட்டாரோ என்று தோன்றுகிறது. ஏனெனில், நாம் அவரைக் காண முடிவதில்லை. சோதனை வேளை களில் நாம் காணமுடியாதவாறு அவர் நம்மோடே இருக்கிறார். அவருடைய கண்கள் நம்மீது எப்போதும் நோக்கமாயி ருக்கின்றன.

எனவே, நற் சிந்தனையுடன், அவரது நாமமே ஜபித்து, அவரை வணங்கி, அவரிடம் சரண் அடைந்தால், நாம் நமது சோதனைகளையு ம், கர்ம வினைகளையும், பயமின்றி கடந்து சாதனையாக்கலாம்.

உங்கள் பிரச்சனை பெரிதாக இருந்து, அதை சமாளிக்க கூடிய கொள்ளளவு உங்களிடம் இல்லையென்றால், சோர்ந்து விடாதீர்கள், உங்களது அனைத்து முயற்சி களும் தீர்ந்து போகும் போது, கடவுளின் கருணை ஆரம்பமாகும்.
கடந்த காலத்தை கலக்கமில்லாமல் உணர்ந்து கொள்ளுங்கள்...

நிகழ் காலத்தை ஊக்கத்துடன் அணுகுங்கள்....
வருங்காலத்தை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்....
கிடைக்காததையும் தவறவிட்டதையும் நினைத்துத் தளராதீர்கள்...

பயத்தைக் களைந்து நம்பிக்கையை தக்க வையுங்கள்...
சந்தேகங்களை நம்பாதீர்கள்
நம்பிக்கையை சந்தேகிக்காதீர்கள்.

உங்களுக்கு கிடைத்த வரங்களை எண்ணில் கொள்ளுங்கள்.

கடவுளை நம்புங்கள் அவர் நல்லவர்களைக் கை விட மாட்டார்...!
 
#4
உங்கள் பிரச்சனை பெரிதாக இருந்து, அதை சமாளிக்க கூடிய கொள்ளளவு உங்களிடம் இல்லையென்றால், சோர்ந்து விடாதீர்கள், உங்களது அனைத்து முயற்சி களும் தீர்ந்து போகும் போது, கடவுளின் கருணை ஆரம்பமாகும்.

அருமையா சொன்னீங்க....ஈஸ்வரி காசிராஜன் மேம்....
 
#5
அருமை, ஈஸ்வரி டியர்
romba romba arumaya sollittinga............nalla message....
kastta padrappa thalanrthu pogama aduthu ennannu sindhikkanum nammakku namea deairiyama iruntha ellathayum samalikkalam....
padikkarappave oru nimirvu varuthu thanks for the message.....
உங்கள் பிரச்சனை பெரிதாக இருந்து, அதை சமாளிக்க கூடிய கொள்ளளவு உங்களிடம் இல்லையென்றால், சோர்ந்து விடாதீர்கள், உங்களது அனைத்து முயற்சி களும் தீர்ந்து போகும் போது, கடவுளின் கருணை ஆரம்பமாகும்.

அருமையா சொன்னீங்க....ஈஸ்வரி காசிராஜன் மேம்....
Thank u dears
 
snehasree

Author
Author
#6
பிரச்சனை ஏற்படும் நேரத்தில் அதில் இருப்பவர் தெளிவாக சிந்திக்க தடுமாறுவார் ஆனால் அதற்கு சம்பந்தமில்லாத நபர் அவரை தெளிவாக வழி நடத்த முடியும். என் கருத்து பிரச்சனை இல்லாதவர் இருப்பவரை மீட்டு வேண்டும்.

பிரச்சனையின் பலமே அதை நினைப்பதில்தான் இருக்கிறது அதனால் பிரச்சனையை மறந்து மனதை ரிலாக்ஸ் செய்து கூலாக யோசித்தால் பிரச்சனைக்கான தீர்வு தானாக கிடைக்கும்
 
#7

True dear
 
#8
கடவுளை நம்பினோர்
கெடுவதில்லை-ங்கிறது
ரொம்பவும் சரியான
உண்மைதான், ஈஸ்வரி டியர்
 
Latest Episodes

New comments

Latest updates

Top