• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கனலை விழுங்கும் இரும்பு - intro

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai
டப.. டப.. டப.. என உறுமிக் கொண்டே, ஆலிவ் வர்ண ராயல் என்ஃபீல்டு ஒன்று, விமானம் தரையிறங்கும் விசையின் வேகத்தில் வந்து கொண்டிருந்தது. அதன் அசூர வேகத்தில், சாலையின் ஓரத்தில் கிடந்த ஒன்றிரண்டு இலைகளும், ஓராயிரம் குப்பைகளும் பறவையைப் போல பறக்க யத்தனித்தன.

வந்த வேகத்தில் சரேலென, ஒரு பெரிய சொகுசு மாளிகைக்குள் வாகனம் நுழைந்தது. பின்பும், வண்டியின் வேகம் குறையாமல் 'பார்க்கிங்' பகுதி நோக்கிச் சென்றது. படிப்படியாக வேகம் குறைக்கப்பட்டு, வண்டி நிறுத்தப்பட்டது.

என்பீல்டை ஓட்டி வந்த உருவம், அதிலிருந்து இறங்காமலே, இரண்டு கால்களையும் தரையில் ஊன்றி, கைகளில் ஒருவித அழுத்தம் கொடுத்து, வண்டியைப் பின்னோக்கி இழுத்துப் 'பைக் ஸ்டேண்ட்' போட்டது.

தலைக்கவசத்தைக் கலட்டி என்பீல்டின் கைகளில் தொட்டில் போல் கட்டித் தொங்கவிட்டது. பின்னர் கண்ணாடியைப் பார்த்து, கேசத்தைக் கோதிச் சரிசெய்தது. வலது காலைத் தூக்கி, அரைவட்டமாகச் சுற்றிக் கொண்டு வண்டியிலிருந்து இறங்கி, உருவம் நடக்க ஆரம்பித்தது.

இருபுறம் இருந்த புல்தரையின் நடுவே போடப்பட்டிருந்த கல் தரையில், 'செல் விரைந்து' என்று நடந்து வந்தது, அந்த உருவம்.

தார் சாலையில் குதிரை ஓடும்போது மற்றும் மால்களில் பெண்கள் குதிஉயர் காலணிகள் அணிந்து வரும்போது, ஒரு சப்தம் வருமே 'டொக்கு டொக்கு' என்று. அதுபோல் இருந்தது, அந்த உருவத்தின் பூட்ஸ் ஒலி.

வானமே நகர்ந்து வருவது போல இருந்தது. இது உருவத்தின் எடை பற்றி அல்ல… அதன் உடை பற்றியது. அதாவது, நீல வர்ண பேன்ட்டும், வெள்ளை நிறத்தில் சட்டையும் அணிந்திருந்தது, அந்த உருவம்.

உருவத்தின் நாடித்துடிப்பின் ஓசைக்கேற்ப, நர்த்தனம் செய்து கொண்டிருந்தன மணிக்கடிகாரத்தின் நொடி முட்கள்.

மாளிகையின் வெளியே, தோட்ட வேலை செய்து கொண்டிருந்த பெண்கள், கண் இமைக்க மறந்து, அந்த உருவத்தின் தோற்றத்தை வியந்து பார்த்தனர். ஏன்? அவ்வப்போது, சில ஆண்களும், அதனினது கம்பீரத்தை ரசித்தனர்.

உருவம் மிடுக்குடன் நடந்து வந்து, மாளிகைக்குள் நுழைய முற்படுகையில், வாயிலில் நின்ற பாதுகாவலர்கள் தடுத்தனர்.

தடுத்ததை, அலட்சியப் படுத்தும் விதமாக, உருவத்தின் நாக்கில் உழன்று… சுழன்று… கழன்று கொண்டிருந்தது ஒரு சுவிங்கம்.

சோதனையை ஆரம்பிக்கும் முன்பு, பாதுகாவலர்கள் சுவிங்கத்தைத் துப்பிவிடச் சொல்லினர்.

அந்த உருவமும், சுவிங்கத்தை நாக்கின் நுனியில் பந்துபோல உருட்டிக் கொண்டு வந்து, துப்பியது. அந்தத் துப்பலில், சுவிங்கம் ஹர்திக் பாண்டியாவின் மட்டையில் பட்ட பந்து போன்று பறந்து சென்று குப்பைத் தொட்டியில் விழுந்தது.

பாதுகாவலர்கள் சோதனையை ஆரம்பிக்கும் பொழுதுதான், உருவம் வாய் திறந்தது.

"பொம்பளைய செக் பண்ண பொம்பள இல்லையா?" என்றது பல்லைக் கடித்துக் கொண்டு.

இந்த கேள்வியில் தன் வேலைக்கான திமிர் இருந்ததா? இல்லை அதன் இயல்பான நிமிர் இருந்ததா? ஆனால் ஒன்று, இது சாதாரண இலகு பேச்சல்ல!

அந்தப் பாதுகாவலர்கள் 'மூன்றாவது' மொழியில் பேசிக் கொண்டனர்.

'சப் டைட்டில்' போட்டு, அதைப் புரிந்து கொள்வதற்கு ஒருவித சோம்பல். அதனால் அந்தப் பெண் உருவம், அவர்களது பேச்சுக்களைப் பொறுமையுடன் தவிர்த்தது. அந்தப் பொறுமையும் ஒரு கட்டத்தில் போய்விட்டது.

"என்ன? சன் டிவி பார்க்கிறப்ப சோனி டிவிக்கு மாத்ற" - இது பெண் உருவம், எரிச்சலுடன்.

'என்ன' என்று ஒலிக்கிறதா? இல்லை 'இன்னா' என்று ஒலிக்கிறதா? சரியாகப் பிரித்தறிய முடியவில்லை.

அவர்களுக்குள் சிறிது நேரம் வீண்பேச்சுகள், விதண்டாவாதங்கள், வியாக்கியானங்கள் அரங்கேறின.

அதற்குள் இந்தச் சலசலப்பு கேட்டு, 'கோட்' போட்ட மனிதர் ஒருவர் வெளியே வந்தார்.

இதுபோல் 'கோட்' அணியும் மனிதர்களைப் பார்க்கும் பொழுது, அந்தப் பெண் உருவத்திற்கு ஒன்று தோன்றும். அது என்னவென்றால், வியர்க்கும் என்று தெரிந்தும், இரவு நேரத்தில் மேகப் போர்வையைப் போர்த்திக் கொண்டு உறங்குகின்ற சூரியன்!

"வாட் கேப்பண்ட்? வாட் இஸ் கோயிங் ஆன் ஹியர்" என்றார் உலக மொழியில்.

"நத்திங் சார். மைசெல்ஃப் சயனா, சிஐடி ஆபிஸர். அன்ட் ஐ பிரிப்பர் ஃப்பிமேல் செக்யூரிட்டி ஹார்டு. வில் யூ அரேஞ்ச் பார் இட்?" என்றாள், 'உலகத்தோடு ஒத்து வாழ்' என்ற பழமொழிக்கு இணங்க.

ஆனால் ஒன்று, அவளின் அந்த ஆங்கில உச்சரிப்பில், அந்நிய நாட்டவரும் தோற்றுவிடுவார்கள்.

"யூ ஜஸ்ட் கெட் இன் மேம்" என்று சொன்னார் மரியாதையுடன்.

இந்தச் சலுகை, அவளது வேலைக்கா? இல்லை அவள் பேசிய மொழிக்கா? தெரியவில்லை. ஆனால் உள்ளூர் மொழிகளுக்குள் அடித்துக் கொண்டு, உலக மொழியிடத்து அடிமைப் பட்டிருக்கிறோமோ?

அந்த உருவம், மன்னிக்கவும்… 'சிஐடி ஆபிஸர்' சயனா, அந்த சொகுசு மாளிகைக்குள் நுழைந்தாள்.

இன்னாள் அமைச்சரின் இக்கட்டைத் தீர்க்கவா? இல்லை… தனக்கு இன்னலைத் தேடிக்கொள்ளவா? - இவளின் இந்த நுழைவு.


PhotoGrid_1563376532578.jpg
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
welcome பரி... action with thiriller with your dialogues ... nice (y)(y) சயனா டிரஸ் சொன்ன விதம், சூயிங்கம் வெளியே வந்தது, மூன்றாம் மொழி its all pari style :love::love::LOL::LOL:
 




SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
சயனா... நீ எங்களை மயக்க (ஈர்க்க) வந்த அயனா?:p:p:p:love:

ஆரம்பமே அமர்க்களம்:love::love::love::love:

மீ வயிட்டிங்கு (y):)
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
Kaathuka.. my first follow story of you.. writings la vara uvamai arumai.. ????

Sema interesting intro of sayan.. ??
நீ கொஞ்சம் லேட் காவ்யா... ஆனாலும் வந்துட்டே... இனிமே சேர்ந்தே follow பண்ணுவோம்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top