• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல் அடைமழை காலம் - 33

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

பர்வீன்.மை

மண்டலாதிபதி
Author
Joined
Jun 20, 2019
Messages
266
Reaction score
2,133
Location
Chennai
காதல் அடைமழை காலம் – 33

அத்தியாயம் 34

“ என் ஓரே தம்பி கல்யாணம்..... இப்படி ஆளாளுக்கு வரமாட்டேன் னு சொன்னா எப்படி?” வருத்தத்தோடு குறைபட்டார் ஜமீலா.

“ அச்சோ மச்சி.... உங்க தம்பி கல்யாணத்துக்காக தான் நாங்க பெங்களூரிலிருந்து திருச்சி வந்தோம். ஆனா இந்த ரிஸ்வி பையனுக்கு விடாமல் காய்ச்சல் அடிக்குதே..... எப்படி வர?” என நிலைமையை விளக்கினார் ரசியா.

ரசியாவின் விளக்கம் நியாயமாக இருக்க, “ சரி தான்..... நீ பிள்ளய பார்த்துக்க” என்றவர்,” சபூரா..... நீ ஏன் வரல னு சொல்ற?” என அடுத்த விசாரணையை துவக்கினார்.

“ கொஞ்சம் முக்கியமான வேலையிருக்கு லாத்தா. கணக்கு பார்க்கணும்.”

“ ம்.... உன் கணக்கு புஸ்தகம் நாலு நாள்ல எங்கேயும் போயிடாது.... வா சபூரா.” என அழைத்தார்.

“ இல்ல லாத்தா..... ஆடிட்டர வேற பார்க்கணும். அதுவுமில்லாம நான் இங்க கடைய பார்த்துகிட்டா மச்சான் அங்க நாலு நாள் டென்ஷன் இல்லாம இருப்பாங்கள. நீங்க போயிட்டு வாங்க.”

“ ப்பா..... என்னவோ இவங்க இருந்தா தான் கடையே ஓடுற மாதிரி என்ன ஒரு பந்தா....” என அங்கலாய்த்தார் ரசியா.

“ அவங்க ரெண்டு பேரும் தானே பேசிட்டு இருக்காங்க. நீ எதுக்கு இடையில நுழையுற” என மகளை கண்டித்தார் கமர்.

முகத்தை திருப்பிக் கொண்டு ரசியா எழுந்து போய்விட,” கடை வேலைய வந்து பார்த்துக்கலாம் சபூரா.... நீயும் எங்களோட வா.... இங்க இருந்தா ரசியா உன்னை ஏதாவது சொல்லிட்டேயிருப்பா....” என்றார் மகளை புரிந்து.

“ அது.... அது ஒரு முக்கியமான வேலையிருக்கு மாமி.... அதான்” என இழுக்க, தன் மகன் இல்லாமல் வர பிடிக்கவில்லையோ என அதற்கு மேல் அவரை வற்புறுத்தவில்லை கமர்.

“ காசிம் தம்பி ஏன் வரல அஸ்மா?” என அடுத்ததாக துவங்கினார் ஜமீலா.

“ அவங்களுக்கு கேஸ் விஷயமா லாயரை பார்க்கணுமாம். அதனால வர முடியல மச்சி. அதான் அவங்க சார்பா நா வரறேனே” என்றார் சமாதான குரலில்.

“ மாப்பிள்ள இல்லாம நீ மட்டும் ஒத்தையில வந்தா நல்லாவாயிருக்குது” என மகளை கடிந்து கொண்டார் கமர்.

“ என்னம்மா செய்யுறது..... அவங்க சூழ்நிலை அப்படி இருக்குது” என கணவருக்காக பரிந்து பேசினார் அஸ்மா.

காசிமிற்கு பெற்றோர்கள் இல்லை. இரண்டு சகோதரர்களின் கவனிப்பில் தான் வளர்ந்தார். ஆனால் அவர்கள் சொத்து விஷயத்தில் காசிமை ஏமாற்றி விட, அவர்களோடு சண்டை போட்டு வீட்டை விட்டு வெளியேறியவர் நான்கு மாதங்களாக மாமியார் வீட்டில் தான் தங்கியிருக்கிறார். சகோதரர்களை எதிர்த்து வழக்கு தொடுப்பதற்கான வேலைகளில் மும்பரமாக ஈடுபட்டிருந்தார்.

இப்படியாக ஒவ்வொருவரும் ஒரு காரணத்தை கூறி வீட்டிலேயே தங்கி விட, மற்றவர்கள் அனைவரும் நெல்லைக்கு கிளம்பினர். ஜமீலாவின் தம்பிக்கு அங்கே தான் பெண் பேசியிருந்தனர்.

முதல் நாள் எந்த களேபரமும் இல்லாமல் அமைதியாக தான் கழிந்தது. அடுத்த நாள் தான் சபூராவின் வாழ்க்கையை தடம் புரள செய்யும் நாளாக விடிந்தது.

முற்பகல் வேளை......

சபூரா கடைக்கு சென்றிருக்க, காசிமும் வழக்கறிஞரை சந்திக்க சென்றிருக்க, ரசியா மட்டுமே சில பணியாட்களோடு வீட்டிலிருந்தார்.

விடாமல் அழுத மகனை அரும்பாடுபட்டு உறங்க வைத்திருந்தார் ரசியா. காய்ச்சல் விட்டிருந்தாலும் குழந்தை சோர்ந்தே இருந்தான். பிள்ளைகளுக்கு உடம்பு சரியில்லை என்றால் தாய்மார்களின் நிலையை கேட்கவும் வேண்டுமா? படுத்தி எடுத்தியிருந்தான் ரிஸ்வி.

அப்போது தான் சற்று அயர்வாக கட்டிலில் சாய்ந்திருந்தார் ரசியா. ஹாலில் இருந்த தொலைபேசி அடிக்க, சலிப்பாக எழுந்து சென்றார்.

“ ஹலோ....”

“ அஸ்ஸலாமு அலைக்கும்..... சின்னம்மாவா? நல்லாயிருக்கீங்களா?” என்றவரை யாரென புரியாமல் யோசித்தார் ரசியா.

“ நீங்க யார் பேசுறீங்க.... தெரியலயே....”

“ நா பஷீர் மா. நம்ம கடையிலிருந்து பேசுறேன்.”

“ ஆங்..... சொல்லுங்க பஷீர் காகா. நா நல்லாயிருக்கேன். நீங்க நல்லாயிருக்கீங்களா?” பணியாள் என்றாலும் உறவுகள் போலவே பேசி கொள்வார்கள் அவர்கள்.

“ நல்லாயிருக்கேன் மா. சபூரா லாத்தா இருக்காங்களா?” என்றதும் துணுக்குற்றார் ரசியா.

“ மச்சி.... கடைக்கு தானே வந்தாங்க....”

“ இங்கயா? இல்லையே மா..... லாத்தா இரண்டு நாளா கடைக்கே வரலையே” என்றதும் விக்கித்து போனார் ரசியா.

“ கடைக்கு போறேன் னு சொல்லிட்டு இரண்டு நாளா எங்க போயிட்டு வரா.... ஒருவேளை ஆடிட்டர பார்க்க போயிருப்பாளோ.... ” என யோசிக்க,

“ ஹலோ.... ஹலோ....” என அமைதி கலைத்தார் பஷீர்.

“சொல்லுங்க காகா.... மச்சி வெளியே எங்கயோ போகணும் னு சொன்னாங்க.... மறந்துட்டேன்” என சமாளித்தார்.

“ லாத்தாவ பார்க்க ஆடிட்டர் வந்திருக்காங்க மா.” என கூற, ரசியாவிற்கு இன்னும் குழப்பம் கூடியது.

“ லாத்தா வீட்டுல இருப்பாங்க னு நினைச்சி போன் போட்டேன். அவங்க எப்ப வருவாங்க....” என கேட்க,

“ அவ எங்க போயிருக்கான்னே தெரியல அப்புறம் அவ எப்போ வருவா னு மட்டும் எப்படி தெரியும்” என உள்ளே அலுத்துக் கொண்டு,” அவங்க வர லேட்டாகும் காகா. நீங்க அவங்கள நாளைக்கு வர சொல்லுங்க” என்று விட்டு போனை வைத்தார்.

சற்று நேரம் குழம்பியவர் தங்களுக்குள் இயல்பான பேச்சுகள் இல்லாததால் வெளியே செல்வதை தெரிவிக்காமல் இருந்திருக்கலாம். தாம் தான் கடைக்கு சென்றிருப்பதாக நினைத்து கொண்டோம் போல.. என எண்ணிக் கொண்டார்.

ஆனால் மாலைக்குள் இரண்டு முறை சபூராவை கேட்டு கடையிலிருந்து அழைப்பு வர ரசியாவிற்கு ஒரு வித பயம் தொற்றி கொண்டது. அது அலைபேசி புழக்கத்திற்கு வராத காலம். தரைவழி தொலைபேசி தான் பயன்பாட்டில் இருந்தது. ஆகையால் சபூராவை நேரடியாக தொடர்பு கொள்ள முடியவில்லை.

“ பிள்ளையையும் தூக்கிட்டு எங்கே போயிட்டா இவ....” என உழன்று கொண்டிருக்க, மூன்றாவது முறையாக அழைப்பு வந்தது.

“ ஆடிட்டர் ஏதோ அவசரமா பார்க்கணுமாம் மா. லாத்தா வந்துட்டாங்களா?”

“ நீங்க ஆடிட்டர் சார்ட்ட போன்ன கொடுங்க காகா....”

“ சொல்லுங்க மேடம். “ தணிக்கையாளர் தொலைபேசியை வாங்கி பேசினார்.

“ மச்சி ஒரு அவசர வேலையா வெளியே போயிருக்காங்க.... என்ன விஷயம் னு என்கிட்ட சொல்லுங்க சார்” எனவும்,

“ அது.... அது.... இல்ல மா. அது சபூரா மேடம்ட்ட தான் பேசணும்.” என்றதும் ரசியாவின் ஈகோ லேசாக தலை தூக்கியது.

“ சார்... அவங்க ஜஸ்ட் இப்போ சில வருஷமா தான் இதெல்லாம் கவனிச்சிக்கிறாங்க. ஆனா நா ரொம்ப வருஷமா பிசினஸ் பீல்டுல இருக்கேன். சோ.... நீங்க தராளமா என் கிட்ட சொல்லலாம். அதுவுமில்லாம இது என் கடையும் கூட...” என அழுத்தமாக கூறவும்,

“ அது வந்து மேடம்.... அக்கௌண்ட்ஸ்ல இரண்டு லட்சம் குறையுது. நா போன வாரமே இத பற்றி சபூரா மேடம் ட்ட பேசியிருந்தேன். அவங்க தான் அமீர் சார் கிட்ட சொல்ல வேண்டாம் அடுத்த வாரம் நாமளே டீல் பண்ணிக்கலாம் னு சொன்னாங்க” என தயங்கி தயங்கி கூற ரசியாவிற்கு அதிர்ச்சியும் கோபமும் ஒருங்கே வந்தது.

“ கணக்கு பார்க்கணும்..... கணக்கு பார்க்கணும்...... னு இத தான் சொன்னாலா.... அப்படியென்ன காகா கிட்ட மறைச்சி கணக்கு எழுதுறா இவ” புருவம் நெறிய யோசித்தவரை எதிர்முனை குரல் கலைக்க, அவருக்கு ஏதோ ஒரு பதிலை கூறிவிட்டு போனை வைத்தார்.

யாஸ்மீன் பள்ளியிலிருந்து திரும்பி வரும் வரை கூட சபூரா வரவில்லை. யாஸ்மீன் உடை மாற்றி வந்ததும் ரசியா அவளுக்கு உணவை போட்டு கொண்டிருக்க, ஓய்ந்து களைத்த முகத்தோடு வீடு வந்து சேர்ந்தார் சபூரா. பசியில் அழுதுக் கொண்டிருக்கும் மைசராவை ரசியா வாங்கி கொள்ள முகம் கழுவ சென்று விட்டார் சபூரா.

“ ஹோய் பப்ளிமாஸ்..... எங்க போயிட்டு வரீங்க.... ஹூம்” என குழந்தையோடு பேசியபடி உணவை ஊட்டினார். மைசராவின் கொழுக் மொழுக் தோற்றத்தினால் அவளை ரசியா ‘ பப்ளிமாஸ்’ என்று தான் விளிப்பார். சபூரா மீது வெறுப்பிருந்தாலும் தந்தையை இழந்த பிள்ளைகள் மீது அதை காட்ட மாட்டார். அதிலும் பிறந்தது முதல் தந்தை முகத்தை பார்த்திராத மைசராவின் மீது அவருக்கு அலாதி பாசம் இருந்தது.

சபூராவும் வந்து சாப்பிட, அவரை ஏறிட்டவர்,” இவ்வளவு நேரம் சாப்பிடாம எங்கே போயிட்டீங்க?” என வினவினார்.

அக்கறையாய் வினவுபவரை ஆச்சரியமாய் பார்த்தவர்,” கடையில கொஞ்சம் வேலை அதிகம் ரசியா” என்றதும் திகைத்து பார்த்தார் ரசியா.

காலையிலிருந்து கடைக்கே போகாதவர் இப்போது கடையில் இருந்ததாக கூற அவருக்கு திகைப்பு தான். ஆனால் ஏதும் கேட்கவில்லை. பொய் கூறுகிறார் என தெரிந்த பின் என்ன கேட்பது? ரசியாவின் ஆராயும் பார்வையை கூட கவனியாமல் ஏதோ யோசனையில் முழ்கியிருந்தார் சபூரா.

உணவு உண்ட பின் சபூரா ஓய்வு எடுப்பதாக அறைக்கு சென்று விட சபூராவின் பிள்ளைகள் இருவரும் ரிஸ்வியோடு ரசியாவின் அறையில் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களை பார்த்த படி அமர்ந்திருந்தார் ரசியா. அவர் மனம் முழுவதும் சபூரா பேசியது தான் ஓடிக் கொண்டிருந்தது.

சற்று நேரத்தில் மைசரா உறக்கம் வந்து சிணுங்க,” என் பப்ளிமாஸ் க்கு தூக்கம் வந்திருச்சா.... வாங்க உம்மா கிட்ட போகலாம்” என கொஞ்சிய வாறே குழந்தையை தூக்கி கொண்டு எழுந்தவர்,” யாஸு குட்டி ரிஸ்விய பார்த்துக்கோ....” என்றபடி கீழே வந்தார்.

சபூராவின் அறைகதவை தட்ட கை வைக்க, அது சட்டென திறந்து கொண்டது. உள்ளே சபூராவும் அவரது தந்தையும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

“ இவர் எப்போது வீட்டிற்கு வந்தார்..... ஹாலில் அமர்ந்து பேசாமல், பேத்திகளை அழைத்து கொஞ்சாமல் அப்படி என்ன ரகசிய பேச்சு இருவருக்கும்....” என ஆராய்ந்தவரின் கண்கள் அப்போது தான் அதை கவனித்தது. கற்றை கற்றையாக ரூபாய் நோட்டுகளை தனது தந்தையின் கைகளில் திணித்து கொண்டிருந்தார் சபூரா.

- மழை வரும்....
தங்கள் ஆதரவை எதிர்நோக்கும்


- பர்வீன்.மை
 




lakshmiperumal

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
4,840
Reaction score
3,628
இது என்ன இப்படி ஒரு ட்விஸ்ட் ஆனால் இந்த பணத்தை புரட்ட தான் சபீரா வெளியே அலைந்து திரிந்து வந்திருப்பாள்.
 




Jothiliya

இணை அமைச்சர்
Joined
Aug 25, 2019
Messages
523
Reaction score
796
Location
Madurai
பண பிரச்சனையில் தான் ரசியாவிக்கும், சபூராவிற்கும் மோதல் வந்து சபூரா வீட்டை விட்ட வெளியேறினாரா ??????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top