• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல் 36

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Chithu.h

இணை அமைச்சர்
Joined
Feb 5, 2020
Messages
519
Reaction score
1,398
Location
Madurai
மலர், தீரா ரதுவை தேடி வந்தவள்..தன் வீட்டில் மாப்பிள்ளை பார்த்ததாகவும்,அவளுக்கு அதில் இஷ்டமில்லை என்பதையும் கூறியவள்...தான் ஒருவரை காதலிப்பதாகவும் அவர் தன் காதல் ஏற்கவில்லை என்பதையும் கூறினாள்...

அவன் யாரென்று ரது கேட்க...தீராவோ,காளி அன்வர் மூலம் சிவாவை அழைத்து வந்து இவன் தானே என்றான்...தீராவிட்ட அறையில் சிவா அவன் காலடியில் விழுந்தவன் மன்னிப்புகேட்டான்...

" உன்னை என்னால மன்னிக்க முடியாது சிவா..." என்று தீரா இன்னும் தீராத கோபத்தில் கூறினான்....இன்னும் அவனது காலை விடாமல் பற்றிருந்தவன் மேலும் அழுத்தி பிடித்து அழுதான்...

" அண்ணா ! நான் உங்ககிட்ட சொல்லாதது தப்பு தான் அண்ணா...அண்ணியோட அம்மா எவ்வளவு பிடிவாதமா இருந்தாங்களோ அது போல மலர் வீட்டில் இருப்பாங்க நினைச்சுதான்,நான் அவகிட்ட என் காதலை சொல்லல அண்ணா...,அண்ணி,இன்னும் அவங்க அம்மா நினைச்சு கஷ்டபடுறத போல இவளும் குடும்பத்தை பிரிஞ்சு கஷ்டபட கூடாதுன்னு இப்படி ஒரு முடிவு எடுத்தேன்...எனக்கெல்லாம் யாருண்ணா பொண்ணு கொடுப்பா...இப்படியே உங்க காலடியில கிடைந்து வாழ்ந்திடுறேண்ணா...என்னால ஒரு குடும்பம் பிரிய காரணமாக வேணாம்..என்னை மன்னிச்சிடுங்க அண்ணா..." என அழுதான்,..

அவன் முன் மண்டியிட்டான் தீரா...," என்னடா சிவா,இப்படி பேசுற..நான் உன் அண்ணன்டா உனக்கு நல்லது நினைக்கமாட்டேன்னா ! உங்களை இப்படி தனியா விட்டு நான் மட்டும் பொண்டாட்டி பிள்ளைன்னு வாழுவேன் நினைச்சீங்களா...எப்படிடா என்கிட்ட மறைக்க தோனுச்சு...அந்த அளவுக்கு உனக்கு நான் வேறும் வேலை ஏவு தலைவனாத்தான் தெரியிறேன்னா...நான் கொலை பண்ண போறவன் டா...அதுனால ரது அம்மா அப்படி சொன்னாங்க...உனக்கென்ன நீ படிச்சவன்டா...மலரை வைச்சு உன்னால காப்பாத்த முடியும் உன்மேல இதுனால் வரைக்கும் எந்த கேஸ்ஸும் பதிவாகல...ஏன் நீ கொலை கொள்ளைன்னு எதுவுமே செய்யலைடா....நீ நல்லவன்டா.உன்னை நீயே ஏன்இப்படி நினைச்சிக்கிற...

இப்பதான் டா புரியுது நான் எவ்வளவு பெரிய தப்பு பண்ணிருக்கேன்....நம்ம ஊருல அடிதடின்னு பசங்க போயிடக் கூடாதேன்னு அப்பா,தாத்தா எல்லாரும் உங்களை படிக்க வைச்சாங்க...ஆனா நான் உங்களை அதே அடிதடிக்கு கொண்டு வந்து விட்டுடேன்...தப்பெல்லாம் என்னோடு தான்...என் சுயநலத்துக்காக உங்க வாழ்க்கை அழிச்சிட்டு இருக்கேன்....." என்றவன் கூற..

ஐவரும் அவன் காலை பற்றியவர்கள்..." அண்ணா,அப்படியெல்லாம் பேசாதீங்க ...யாருமே இல்லாத எங்களுக்கு தங்க இடம்,உடுத்த உடை உண்ண உணவு கொடுத்து எங்களுக்கு படிப்பறிவும் கொடுத்தது மட்டுமில்லாம பாசத்தையும் காட்டி உங்க கூடவே எங்களை சொந்த தம்பியா பார்த்து செய்ற நீங்க இப்படி சொல்லாதீங்க அண்ணா....எங்களுக்கு அம்மா,அப்பான்னா அது நீ தான்ண்ணா....எங்களை பிரிச்சு பார்க்காத ப்ளிஸ்ண்ணா..." என கணேஷ் அழுதான்..

" என்ன,அண்ணா நீ சுயநலமா யோசிச்சுடா...எங்கனை போல அனாதைக்கு யாருண்ணா இப்படி பாசத்தை காட்டி பார்த்துப்பா...எங்களுக்கு ஒன்னுன்னா முதல் துடிக்கிறது நீ தானே அண்ணா....பசியும் பட்டினியுமா சாக கிடந்த என்னை அண்ணன் நான் இருக்கேன் உறவு சொல்லி அழைச்சுட்டு எல்லாம் செஞ்சது சுயநலமா..," என கதறினான் ஆண்டனி.

" தாய் தந்தை முகத்தை பார்க்காத எனக்கு இரண்டும்மா இருக்கிறது நீதான் அண்ணா...அவங்க இருந்தாகூட இப்படி பாசத்தை காமிச்சிருக்க மாட்டாங்க அண்ணா..நீ இப்படி பேசாத அண்ணா..." அன்வர் கூற..

" அண்ணா...உயிருக்கு ஒன்னுன்னா காசை பணத்தையோ கொடுத்து போறவங்க மத்தில...நீ எங்களுக்கு கூட இருந்து அம்மா போல பார்த்துகிட்டண்ணா...எனக்கு தெரிஞ்ச பொண்ணு சொன்னதும் எவ்வளவு ரிஸ்க் எடுத்த அந்த பொண்ணுக்காக அண்ணிய உயிர் பணையம் வைச்சு காப்பாத்துனீயே...எங்கள எந்தளவு நீ உறவா நினைச்சு பார்த்துகிற இதை போய் சுயநலம் சொல்றீயே அண்ணா....ஐவரும் அழுது கறைய அவர்களை கட்டிக்கொண்டான்.....

யாருமே இல்லாம பசியும் பட்டினியுமாக இருக்க இடமின்றி தவித்தவர்களை....அன்னை தந்தையின்றி வாடிய கிடந்த இந்த நால்வரையும் தீராவே அழைத்து வந்து உணவு, உடை., இருப்பிடம் கொடுத்து அவர்களை படிக்கவும் வைத்தான்...,,
அவர்களை கூட பிறந்த பிறப்பாகத்தான் பார்த்தான் தீரா....தனக்காக நிற்கும் அவர்களுக்கு அவன் ஒரு அரணே !....

அவர்களை அணைத்துகொண்டான் தீரா....அவர்களை கண்ட மலர்,ரது கண்ணீர் வடித்தனர்..

" சிவா,கணேஷ்,காளி,அன்வர்,ஆண்டனி,நீங்க எல்லாரும் எங்களுக்கு குழந்தைங்கடா....ஒவ்வொருத்தரும் உங்க ஆசைய எங்ககிட்ட சொல்லலாம்...உங்களை யாரும் இங்க அடிமையா பார்க்கலை...யாரும் அப்படி நினைச்சிருந்தா மாத்திடுங்க...சிவா மட்டுமில்ல நீங்க யாரையும் காதலிச்சா கூட இந்த அண்ணிகிட்ட வந்து சொல்லன்னு..,என்னைய அண்ணியா நினைக்கிறது உண்மைன்னா எதையும் என்கிட்ட இருந்து மறைக்காதீங்க புரியுதா,..நான் தான் அன்னைக்கே சொன்னேனே நீங்க எல்லாம் குழந்தைங்க ரௌடிங்க இல்லைன்னு...இப்ப அது உண்மை நிருப்பிக்கிறீங்க...சின்ன பிள்ளை மாதிரி அழாம கண்ணை துடைங்கடா..." என்றவள் சிவாவிடம் வந்தாள்...

" சிவா,உனக்கு மலர பிடிச்சிருக்கா ?" என கேட்க அவன் மலரை பார்த்ணன் அவளோ தலை குனிந்தாள்...

" பிடிக்கும் அண்ணி...," என்றான்.." இரண்டும் பேரும் ஊமைகொட்டானா இருந்து எவ்வளவு பெரிய வேலை பார்த்திருக்கீங்க....சரி நாங்க போய் மலரை பொண்ணு கேட்கட்டுமா ? " என அவள் கேட்க...

அவன் வெட்கபட்டவன்..." ம்ம் கேளுங்க அண்ணி...." என்றான்." அப்ப.....இப்பையாவது சொன்னீயே ! அப்புறம் என்ன தீரா சிவா மனசு மாறதுக்குள்ள போய் பொண்ண கேட்டிடுவோம்..." தீரா வை பார்த்துகேட்க...

" டேய்,காதலிச்சிட்டா கடைசி வர அவளுக்கு துணையா இருக்கன்னும்டா...தியாகம் அது இதுன்னு கடைசிவரை இழுந்துடோமேன்னு வாழறது எவ்வளவு பெரிய கஷ்டம்... நம்மலை நம்பி வந்தவளை கண்கலங்கமா கடைசிரைக்கும் காப்பாத்தன்னும்...தியாகத்தின் பெயருல காதலை இழுந்து வாழுறது வாழ்நாள் நமக்கு நாமே துரோகம் செய்வது போல ஆகிடும்....வேணா சிவா...போய் அவகிட்ட மன்னிப்பு கேளு.."

" ஆமா ஆமா...சிவா உங்க அண்ணன் அனுபவ சாலி சொல்லுறாரு கேட்டுக்கோ....." என்றவனை வம்பிழுக்க தீரா அவளை முறைத்தான்..

" என்ன முறைப்பு மிஸ்டர் தீரா...நீங்களும் இப்படி இருந்தவர் தானே பழசை மறந்திடாதீங்க.." என்றாள்..

" சரிங்க மகாராணி..." என்றவன் யாரும் அறியாது அவளது இடையை கிள்ளவே கூச்சத்தில் தள்ளி நின்று முறைத்தாள்....சிவாவை மலர் முன்னே அந்த நால்வரும் தள்ளிவிட சிவா மலரின் அருகே வந்தான்...

மலர் குனிந்து நிற்க அவன் மலரையும் அவர்களையும் மாறி மாறி பார்த்தான்.... " அடேய் ! அப்பிரசெண்டிகளா இப்படி நின்னா எப்படிடா பேசுவான்...." என தலையில் அடித்தவள்..

" டேய் சிவா...சாரி நீ சொன்ன செய்ய மாட்டா...மலர் அவனைகூப்பிட்டு தனியா போய் பேசுடி " என்றாள்..அனைவரும் அதைகேட்டு சிரிக்க...சிவா அவள் கைப்பற்றி அழைத்துசென்றான்....

" ஆமா,தீரா சிவா லவ் பண்றது உனக்கு எப்படி தெரியும் ? எப்படி சிவா தான் தெரியும்..." என தனதுசந்தேகத்தை கேட்க...

" அதுவா செல்லம் ! " என அவள் மேல் கைப்போட்டு கொஞ்சிட...அங்கே நால்வரும் இருக்க கண்டவன் " டேய் போங்கடா ! அங்கிட்டு " என்று தீரா கூற சிரித்துகொண்டே சென்றனர்..

" அதுவா செல்லம் " என்று மீண்டும் அவளை தனது அருகில் இழுக்க..." நீ ஒன்னும் சொல்லவேணாம் போடா ! " என்றவள் அவனை விட்டு செல்ல..." ஹேய் இருடி சொல்லுறேன் " எனதன்னருகில் இழுத்தவன்..." நம்ம அடிக்கடி அந்த குளக்கரையில மீட் பண்ணுவோமே அப்ப தான் நீ மலரை துணைக்கு அழைச்சுட்டு வருவ என்கூட சிவா வருவான். இவங்கஇரண்டும் பேசி பழகிருக்காங்க நாம பேசி கிளம்பும் போதும் அவங்க பார்வையால பேசிறத நான் பார்த்திருக்கேன் அத வைச்சு தான் முடிவு பண்ணேன்...ஆனா பாவம் பையன் நம்ம கல்யாண பிரச்சினை பார்த்து அவன் பயந்துட்டான்...எப்ப அவன் என்கிட்ட வந்து சொல்லுவான் வெயிட் பண்ணேன்...ஆன மலர் முந்திடாங்க.

" தீரா,கண்ணுல எதுவும் சிக்காம போகுமா...இவ்வளவு ஸ்மார்ட் ஆன ரௌடிய நான் பார்த்ததே இல்லை " என அவனை வழித்து நெற்றி முறித்தாள்..." ஆமா டி என் கண்ணுல எதுவும் சிக்காம போகுமா..." என அவள் காதில் அவளை கிரங்கடிக்க ஒன்றை கூற " ச்சீ...." என வெட்கப்பட்டு அவள் நெஞ்சில் சாய்ந்தாள்...

இங்கோ மலர் அவனை பாராமல் நிற்க..இவனோ தயங்கி நின்றான்,." மலர்..."என அழைக்க அவள் கோபத்தில் திரும்பாது நின்றாள்...

"
 




Chithu.h

இணை அமைச்சர்
Joined
Feb 5, 2020
Messages
519
Reaction score
1,398
Location
Madurai
மலர், சாரிமா...உன்னை ரொம்ப கஷ்டபடுத்திட்டேன் எனக்கு தெரியும்...ஆன என்னால நீ உன் குடும்பத்தை பிரிஞ்சு கஷ்டபட கூடாதுன்னு தான் நான் அப்படி சொன்னேன்....,சாரிமா.."

" எல்லா பொண்ணுங்களும் குடும்பத்தை பிரிஞ்சு கணவன் தான் கடைசி வரைக்கும் இன்னொரு வீட்டுக்கு போவாங்க...அந்த கணவன் நமக்கு மனசுக்கு பிடிச்சவனா இருக்கன்னும் தான் ஒவ்வொரு பொண்ணு நினைப்பா.....நான் கூட அப்படி நினைச்சுதான் உங்க கிட்ட வந்து சொன்னேன்...இங்க ரது சந்தோசமா தான் இருக்கா அப்பப்ப அவளுக்கு அம்மா நியாபகம் தீரா சார் கூட இருக்காங்க...ஆன அவ அங்க தீராசார் பிரியனும் நினைக்கும் போது எவ்வளவு கஷ்டபட்டான்னு எனக்கு தான் தெரியும்..ஏன் தற்கொலை கூட பண்ணிக்கிட்டா..மனசுக்கு பிடிச்சவனோட வாழனும் எண்ணத்தினால தானே....மனசுல ஒருத்தனை வச்சிட்டு இன்னொருத்தன் கூட வாழுறது நரகவேதனை சிவா..." என அவள் அழுதுகூற அவளை அணைத்தவன்..." என்னை மன்னிச்சிடு ரதுமா....இனி எந்த சூழ்நிலையிலும் உன்னை விட்டுகொடுக்கமாட்டேன் யாருக்காகவும்...உன்னை விட்டு பிரிய மாட்டேன்...." என்றவன் அவளுக்கு நம்பிக்கை அளித்து வாக்குறுதி அளித்தான்...அவனை இறுக்க அணைத்துகொண்டாள்...

அடுத்துவந்த நாட்களில் மலர்வீட்டில் தீராவும் ரதுவும் பேசினர் முதலில் மலரின் தந்தை மறுத்தார் பின் பேசி சிவாவிற்கு சொத்தில் ஒருபங்கு இருப்பதையும் அவன் தனியாக தொழில் தொடங்க போவதாகவும்,கூறவே சம்மதித்தார்..அவன் சொன்னது போலவே செய்தும் காட்டினான்....
அடுத்த முகூர்த்ததிலே கல்யாணத்தை வைத்தனர்...

பெரும் விழாக்கோலம் கொண்டிருந்தது அம்மண்டபம்...சோலைகொட்டானிலிருந்து அணைவரும் வந்தனர்..பெண்ணுவீட்டாரிலிருந்து சொந்தங்கள் கூடியது....ரதுவை பார்த்து தீராவின் ஊர்மக்கள் வழித்து நெற்றிமுறித்து அவர்களை ஆசிர்வதித்தனர்...தனது சொந்த தம்பி கல்யாணமாக தீராவும்,மச்சினனாய் பிரணவும் பார்த்துக்கொண்டனர் நிசானும் உடன் இருந்தான்...கேத்ரீன் ,தேவரிசி,மகா,நாதன்..என அனைவரும் கல்யாணத்திற்கு வர...மகாவின் கண்கள் அவ்வபொழுது தன் மகளை தழுவி சென்றது..தீராவின் அன்பில் ஒருசுற்று கூடியே இருந்தாள்...முகமெல்லாம் பூத்த மலராய் இருக்க...அழகு ரதியாய் அங்குமிங்கும் திரிந்தாள்...அவ்வபோது தன்தாயையும் பார்த்துக்கொண்டாள்...

நல்ல நேரம் நெருங்க சிவா மலரின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டான்...நெற்றில் குங்குமம் சூட்டி அக்னி வலம் பெரியோர்களிடம் ஆசிவாங்கினான்....பின் அனைவரும் வயிறார உண்டு சென்றனர் கடைசியாக நெருங்கின சொந்தம் மட்டுமே இருந்தது

தீடிரென ரது அங்கே மயங்கி சரியாவே.அவளை கண்ட மகா தான் முதலில் ஓடிச்சென்று அவள் தலையை தன் மடியில் ஏந்தினார்..
" ரது,ரதும்மா....என்னாச்சுடா ? " என அவளை எழுப்பினார்..பதறி அடித்துக்கொண்டு தீரா வந்தவன்.ரது மகா மடியில் இருப்பதை கண்டு தள்ளிதான் நின்றான் இருந்தும்
ஒருவித,பயத்தோடுதான்....

கேத்ரீன் டாக்டர் என்பதால் கூட்டத்தை விலகி...அவளின் கைப்பற்றி ஆராய...முகத்தில் சிரிப்பே வந்தது." மகாம்மா...நீங்க பாட்டியாகிடீங்க.உங்க பொண்ணு ஒரு கருவ சுமக்கிறா.." என்றதும்..

அவரது மகிழ்ச்சிக்கு அளவே இல்லை..தன் மகளை அணைத்து முத்தமிட்டார்....கண்விழித்தவள் தாயின் அருகாமை உணர்ந்தவள் அவரை கட்டிகொள்ள..பாசத்திற்கு முன் கோபம்,வஞ்சகம்,வெறுப்பு நிற்குமா ? ... " அம்மா.." அழைத்தவளை வாஞ்சையாக அணைத்தவர்..அவளை கொஞ்சினார்..அதன் பின் சமாதானங்களே தேவரிசி கூறியது போலவே ஆனது.அதையும் வாய்விட்டே கூறியும்விட்டார்... பின் சடங்குகள் செய்து இரவு உணவை முடித்து சென்றனர்.. மலரையும் சிவாவையும் தனியறையில் முதலிரவிற்காக அனுப்பிட்டு வந்தாள் ரது...

அவளை எதிர்ப்பார்த்த தீரா...அவன் வந்ததும் இறுக்க அணைத்துக்கொண்டான்...

" தீரா....இப்படி இனி அணைக்க கூடாது..பாவம் பாப்பாக்கு வலிக்கும்ல..." என்றாள்.." சரி டி....இனி மெதுவாக அணைச்சுகிறேன்...." என்றவள் மெத்தையில் படுக்கவைத்து தானும் அருகினில் படுத்துகொண்டவன்..அவள் நெற்றி கண்ணம் என முத்தமிட்டவன் மெல்லிடையிலும் முத்தமிட்டான்..."

" தீரா..உன்னை போல ஒரு குட்டி தீரா வேணும்டா...." என்றாள். " ஏன்டி குட்டி ரது வேணாமா ? "

" வேணாம்...அதான் நமக்கு சம்மூ இருக்காளே போதும்...அடுத்து குட்டி தீராதான் வேணும்..." என்றாள்..

" சரி சரி குட்டி தீராவாவே இருக்கட்டும்...."

" தீரா,இனி நீ,நான்,சம்மூ,சஞ்சுன்னு ஒரு குடும்பமா சந்தோசமா வாழனும்டா..."என்றவளை புரியாமல் பார்த்தவன்..." சஞ்சு வா ? "
" ம்ம்...குட்டி தீராவோட பெயர் சஞ்சித்....நான் செல்லமா சஞ்சுன்னு கூப்பிடுவேன்.." என்றாள்..

" அடிப்பாவி,இந்த பெயரை பெயர் வச்ச ? "
" ம்ம்...நம்ம கல்யாணத்திற்கு முன்னாடியே வச்சிட்டேன்.." என்றவள் கண்சிமிட்டியே கூற அவளை மெல்ல அணைத்து முத்தமிட்டான்..

" ரொம்ப சந்தோசமா இருக்கேன் தீரா...இது நிலைக்கன்னும்.." என அவன் நெஞ்சில் சாய..அவனது முகமோ மாறியது..

இந்த சந்தோசம் நிலைக்குமா என்றவள் கேட்டாள் அவனிடம் சரியான பதில் இல்லை,என்பதே உண்மை...அவளறியாது அவன் துடித்துக்கொண்டிருந்தான்..ஒருபக்கம் தன் வாழ்க்கை ஒருபக்கம் தன் முடிவென எதை நினைக்க என்றே மனதில் போட்டு போராடிக்கொண்டிருந்தான்..

அடுத்து வந்த நாட்களில் மகா தீரா வீட்டில் ரதுவோடு தங்கி பார்த்துக்கொண்டார்....
மாதம் செல்ல வயிறு தெரிய ஆரம்பித்தது...தீராவின் காதல் அன்னையின் அன்பு நல்ல சூழலில் குழந்நை வளர்ந்தது...

இதற்கிடையே கேத்ரீனுக்கும் வளைகாப்பு இட்டனர்..ரதுவை விட்டு இவர்கள் மட்டும் சென்றனர்...காதலோடு நிசான் கேத்ரீன் இருவர் அமர அவளுக்கு வளையிட்டு அழுகு பார்த்தனர் நிசானின் அன்னைதந்தை..தாய்வீடென மகாவே அனைத்தையும் பார்த்தார்..

பின் ரதுவிற்கு வளைகாப்பு இட்டனர்....சொந்தங்கள் சூழ தீரா தலைமையில் அவளுக்கு வளைகாப்பு நடந்து..பின் எவ்வளவு சொல்லி வரமறுத்தாள் தீராவைவிட்டு,இருந்தும் அவன் பேசி அவளை அனுப்பிவைத்தான் மகாவீட்டிற்கு சம்மூவோடு தான்..

இவ்வாறு நாட்கள் அழகாய் சென்றது...கேத்ரீனுக்கு அழகான பெண்குழந்தை பிறந்தது...அவளது பிரசவ நேரத்தில் நிசானே துணையாக இருந்தான்...எவ்வளவு சொல்லியும் பயந்துகொண்டே இருந்தான் நிசான்..தாய் சேய் நலம் என்றதும் தான் உயிரே வந்தது அவனுக்கு...பின் வீட்டிற்கு அவர்களை அழைத்து வந்தனர்...

" நிறைமாத கர்ப்பிணியாக ரது இருந்தாள்...தீராவை துணை இருக்குமாறு அவனை வற்புறுத்தினாள்,.அவனும் அவளுக்கு உறுதி கூறினாலும் மனதில் சஞ்சலத்தோடு குழப்பத்தோடே இருந்தான்..

இதற்கிடையில் தீரா எங்கோ சென்றிருக்க....அவனை எங்கும் தேடியும் காணவில்லை..சிவா ரதுவிடம் வந்து கேட்க..அவளோ முதலில் நிதானமாக இருந்தவள்...அடுத்து வந்த செய்திகேட்டு அதிர்ந்து மயங்கி சரிந்தாள்....வித்தேஸ்ஸூம்,மாணிக்கபெருமாளும் ஒருசேர சிறையிலிருந்து தப்பித்தனர்...என்று நிசான் மூலம் செய்திக்கேட்க ரது பயத்தில் மயங்கி சரிந்தாள்....

தீரா(து)காதல்,...
 




honey1207

இணை அமைச்சர்
Joined
Mar 16, 2020
Messages
844
Reaction score
1,001
Location
chennai
Aiyo nalla thane poitrundhadhu ..he is not a don he planned to do murder but so don’t make dheera as criminal .
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top