செல்வா'ஸ் "தொடுவானம்" maha review 😊

Maha

Author
Author
SM Exclusive Author
#1
வாழ்த்துக்கள் செல்வா 👏👏💐💐🤩

உங்கள்.....
தொடுவானம் தொட்டு விட்டது என் மனம்.....

தொடுவானம் கசக்கி பிழிந்து நெஞ்சில் கனம்.....

தொடுவானம் தொடும் தூரத்தில் தெரியும் பயணத்தில், நெருங்கினால் மறைந்து போகும் மாயம் .....


செல்வா ரொம்ப அருமையான கதை நீங்களா எழுதியது 🤔????

எங்கே ஒளித்து வைத்து இருந்திங்க இத்தனை திறமையை.


ஒரு அமைதி பூங்கவிடம் இத்தனை சூறாவளி வேகம், திறமை simply superb 👏👏👌👍🤩🤩

இது உங்க முதல் கதைன்னு சொன்ன கொஞ்சம் நம்புவது கடினம் தான்..

உங்க கதை பெயர் மட்டும் தொடுவானம் இல்லை, உங்களிடம் இருக்கும் திறமையும் உங்கள் கையில் தொடும் தூரத்தில் இருக்கும் (வெற்றி ) தொடுவானம் தான்.

விடாதீங்க செல்வா பிடித்து கொள்ளுங்கள் கெட்டியாக வெற்றி நிச்சியம்...


உங்கள் திறமை பற்றி சொல்ல முடிந்த என்னால உங்கள் கதை பற்றி என்னவென்று சொல்ல 🤔

ரொம்ப அழுத்தமா அணி அடிச்ச போல வலியை உண்டாக்கும் கதை இல்லியா அது..

எவ்வளவு அழகா ஜாங்கிரி சாப்பிட்டது போல கதை கொண்டு போனதோ,

அப்பிடியே எங்களை அமுக்கி சோக கீதம் போட்டு பிழிஞ்சு பிழிஞ்சு அழுது jandu balm போடுறது போல் எண்டு கார்டு போட்டிங்க யா...

ஆனா usual இல்லாம எதிர் பார்க்காத முடிவை குடுத்து அசத்திட்டிங்க தான் சொல்லணும், great 👍👏👏👌💐😍😍

மொத்த characters மனசில் நிறைஞ்சு இருக்கன்னு தான் சொல்லணும்..

எல்லாரையும் பத்தி சொல்லனும் ஆசை தான் முக்கியமான இந்த ரெண்டு காதல் பறவைகள் பற்றி...

ஆகாஷ்...

இந்த பெயருக்கு அர்த்தம் ஆகாயம் இல்லியா..
அதே போல் தான் இந்த நாயகனும் பறந்து விரிந்து இருக்கும் அந்த வானத்தை போல் நிர்மலமான மனம் படைத்த மன்னவன். என்ன ஒரு பிடிவாத பிடித்தம் நிறைந்த காதலன் இவன்.
ஒரு டாக்டர் என்பவர் எந்த நேரத்திலும் மனம் சிதற விடாமல் இருக்கணும்ன்னு சொல்லுவாங்க. ஆகாஷ் ஒரு மருத்துவனா மட்டும் இல்லை ஒரு காதலனா தான் காதலில் கூட மனம் சிதறாமல் தான் காதலிக்கு காத்து இருப்பது அழகு. என்ன சேராமல் போனது தான் கொடுமை அதை ஜீரணிக்க முடியவில்லை வேறு வழியும் இல்லை.

கங்கா....
அந்த புனிதமான நதியை போல் இவளும் பவித்ரமான பெண்.
ஆனால் விதி அவள் வாழ்க்கையில் விளையாடியது தான் நரகம்..
சில பேரின் அஜாக்கிரதையால் ஒரு வாழ வேண்டிய குருத்து வளரும் முன்னே பட்டு
போச்சு இருந்தும் அந்த நிலையிலும் பிறருக்காக தன்னை அர்ப்பணித்து வாழும் அவள் ஒரு தெய்விகம் தேவதை அம்சம்.

இன்னும் நிறைய சொல்லிட்டு போலாம் இந்த கதையில் வரும் அணைத்து கதாபாத்திரங்கள் வெகு பொருத்தமாக பொருந்தி நம்ப மனசைஅவங்க
குணத்தால் செயலால்
நிறைச்சு இருக்காங்க

மிகவும் எதார்த்தமான எந்த கலப்படம் இல்லாத யூகிக்க முடியாத அக்மார்க் கதை இது

ஒரு எழுத்தாளர் கதையை யூகிக்க முடியாத படி குடுக்கணும் படிக்கிறவங்க மண்டைய பிச்சிக்கணும் அடுத்து என்னனு தெரியாம மண்டை ஓடு காயணும்😝 அது மெகா வெற்றியின் அறிகுறி

செல்வா நீங்க கொஞ்சம் பாயிண்ட் புடிச்சு கரெக்ட் டா போறீங்க மேலும் எழுதுங்க உங்களுக்கு ஒரு தனி இடம் மக்கள் மனசில் கிடைக்கும் வாழ்த்துக்கள் 💐👏👍🤩
 
Last edited:

Selva sankari

Major
SM Exclusive Author
#3
மகாம்மா... எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல... நான் ரொம்பவே சந்தோஷமா ஃபீல் பண்றேன்.
நீங்க என் நாவலைப் படித்ததே ஒரு சந்தோஷம். இந்த ரிவ்யூ டபுள் சந்தோஷம்.
என்னுடைய முதல் முயற்ச்சிக்கு இத்தனை பாராட்டுகள் சத்தியமா நான் எதிர்பார்க்கவே இல்லை.
சோகமா எழுதக் கூடாது ன்னு விதியிருந்தும், இந்தக் கதைக் களத்தை தேர்ந்தெடுத்த காரணம் என்ன ன்னா?
நான் முதல்ல எழுதற நாவல் இது தான்னு ரொம்ப நாளுக்கு முன்னாடியே முடிவு செய்து வச்சிருந்தேன்.
நம்ம தளத்தில் அறிவிக்கும் போட்டியில்தான் முதலில் எழுதனும்னு நினைத்திருந்தேன்.
இந்தக் கதைக்கு இந்த முடிவு தான் சரின்னு தோன்றியதால நான் முடிவ மாத்தல.
சோகமா இருந்தாலும் பரவாயில்லை ன்னு குடுத்துட்டேன்.
நம்ம சைட்டோட பெரிய பெரிய எழுத்தாளர் களோட போட்டி போட்டு கதை எழுதியதே என்னைப் பொருத்தவரை வெற்றிதான்.
அதிலும் உங்களைப் போன்றவர்களிடம் இருந்து வரும் பாராட்டுகள் தான் உண்மையான பரிசு.

மிகவும் நன்றி மகாம்மா.
 

Yuvakarthika

Author
Author
SM Exclusive Author
#8
அருமையான விமர்சனம் மஹா சகி 👏👏👏

தொடுவானம் படிச்சிட்டு என்னால அழுகையை நிறுத்தவே முடியல, செல்வா சகி கிட்ட அழுதிட்டே தான் கமெண்ட் போட்டேன், 'ஏன் இந்த கொலைவெறின்னு'😉 ஏன்னா நான் ஜாலி கதையை எதிர்பார்த்து தான் போனேன்🙊
உங்க கதை மனசுல ரொம்ப கனமா பதிஞ்சிடுச்சு சகி, எத்தனை வருசமானாலும் மறக்கவே இயலாத கதாப்பாத்திரங்களை அழகா கையாண்டு இருக்கீங்க 👍👍👍
 

Maha

Author
Author
SM Exclusive Author
#10
மகாம்மா... எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல... நான் ரொம்பவே சந்தோஷமா ஃபீல் பண்றேன்.
நீங்க என் நாவலைப் படித்ததே ஒரு சந்தோஷம். இந்த ரிவ்யூ டபுள் சந்தோஷம்.
என்னுடைய முதல் முயற்ச்சிக்கு இத்தனை பாராட்டுகள் சத்தியமா நான் எதிர்பார்க்கவே இல்லை.
சோகமா எழுதக் கூடாது ன்னு விதியிருந்தும், இந்தக் கதைக் களத்தை தேர்ந்தெடுத்த காரணம் என்ன ன்னா?
நான் முதல்ல எழுதற நாவல் இது தான்னு ரொம்ப நாளுக்கு முன்னாடியே முடிவு செய்து வச்சிருந்தேன்.
நம்ம தளத்தில் அறிவிக்கும் போட்டியில்தான் முதலில் எழுதனும்னு நினைத்திருந்தேன்.
இந்தக் கதைக்கு இந்த முடிவு தான் சரின்னு தோன்றியதால நான் முடிவ மாத்தல.
சோகமா இருந்தாலும் பரவாயில்லை ன்னு குடுத்துட்டேன்.
நம்ம சைட்டோட பெரிய பெரிய எழுத்தாளர் களோட போட்டி போட்டு கதை எழுதியதே என்னைப் பொருத்தவரை வெற்றிதான்.
அதிலும் உங்களைப் போன்றவர்களிடம் இருந்து வரும் பாராட்டுகள் தான் உண்மையான பரிசு.

மிகவும் நன்றி மகாம்மா.
நானும் சதோஷமா ஃ பீல் பன்றேன் டியர் கடைசி நிமிடம் வந்து படிச்சாலும் ஒரு அருமையான கதையை படித்தோம் என்ற நிறைவு எனக்கு இருக்கு எப்போவும் ஸ்வீட்டியா சாப்பிட்டா திகட்டும் கொஞ்சம் புளிப்பு கரம் கசப்பு எல்லாம் சேர்த்த தான் உடம்புக்கும் நல்லது உங்க way of writtingக்கு தனி ரசிகர்கள் இருக்காங்க டா டோண்ட் wry சோகம் முதல் கதையில் கொடுத்தோம் என்று, அது உயிரோட்டமாய் கொடுத்தோம் என்று மகிழ்ச்சி கொள்ளுங்கள்.😊 நான் இப்போ எழுதும் கதையிலும் முதல் ரெண்டு யூடியிலேயே death வீட்டில் அழுகை சோகம்ஒப்பாரி என்று usual கான்செப்ட் எழுதல ரெண்டு யூத் திக் டக் முறைப்பு தான் வரும். கொஞ்சம் ஏத்துக்க கஷ்டமா தான் இருக்கும் but நான் எதார்த்தம் இந்த காலகட்டம் நடக்கும் உண்மை தான் வெளிச்சமாய் போட்டு எழுதினே.. கொச்சையாக துளியும் தரல என் கதைக்கு வரவேற்பு குறைந்த போதும் படிக்கும் நாலு பேருக்காக இன்னும் விடாமல் எழுதி கிட்டு தான் இருக்கேன் சோ. நிங்களும் எதுக்கும் கவலை படாமல் இன்னும் ரைட் பண்ணுங்க fight பண்ணுங்க உங்க ரசனைக்கு தனி கூட்டம் வரும் விட முயற்சி விஸ்வரூப வெற்றி 👍😉😊
 

Advertisements

Top