• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஜெயா - நிப்பான் ஜொல்லிங் மொமண்ட்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
Hai friends,

நான் கல்லூரி சென்று கொண்டிருந்த காலமது.

டவுண் பேருந்து நிறுத்தம், பேருந்து நிலையத்திற்கே உரிய அனைத்தும் கடைகளும் அங்கே வீற்றிருக்கும் அனைத்து பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கும் இங்குதான் பேருந்து நிற்கும்.

நன்கு வேடிக்கை பார்க்கும் வழக்கம் கொண்ட நான் எப்பொழுதும் போல் கண்ணை சுழற்றையில் கண்ணில் விழுந்தான் அவன். உள்ளூர்கரனை மட்டுமே கண்ட என் கண்ணிற்கு விருந்தாக விழுந்தான் அந்த வெளிநாட்டவன்.

இரண்டு வருடமாக அந்த பேருந்து நிலையத்தை உபயோகித்து கொண்டிருக்கிறேன். வெட்கமே இல்லாமல் நன்றாக கண்ணை சுழற்றி பார்பவள் தான். இவனை எப்படி தவற விட்டேன் என்று யோசித்தேன். ஏனினெனில் அவன் நின்ற தோரணை இந்த இடம் எனக்கு நன்கு பழக்கமே புதியவன் அல்ல என உணர்த்தியது. அவனுடன் இருந்த மற்ற அனைவரையும் பராபட்சம் இல்லாமல் பார்த்திருக்கிறேன். அவர்கள் அனைவரும் பழகிய முகமே.

எங்கே தவற விட்டேன் இது இளமை பருவத்திற்கே வந்த இழுக்கு என எண்ணிணேன் அன்றிலிருந்து அவனை கவனிக்க ஆரம்பித்தேன்.

அவனது ராஜ தோரனை மற்ற அனைவரும் எனக்கு கீழ் என்றே கூறியது. சில நான் முன்னிற்பான் சில நாள் பின்னிற்பான். இப்படி பல நாளாக அவனை நான் பார்த்துக் கொண்டிருக்க ஒரு நாள் இல்லவேயில்லை. அப்போதுதான் என் மனம் அவனை விரும்பியதை உணர்ந்தது.

அன்றைய பொழுது முழுவதும் சோகத்தில் செல்ல மறுநாள் என் கண்ணில்பட்டான் அவன். என் கண்ணிலோ மின்னல் ஆனால் அவனோ அதே ராஜ தோரனை அப்போது முடிவு செய்தேன் இவனை விட கூடாது என, சற்று தொலைவில் நின்றதால் சற்று உற்று பார்த்தேன் அவனின் செழுமை புலப்பட்டது அப்போது முடிவு செய்தேன். எப்பாடு பட்டாவது பணம் சேர்கிறோம் அவன் முன்பு போய் நிற்கிறோம் என்று.

அன்றிலிருந்து கமிஷன் வாங்காமல் எந்த வேலையும் செய்ய வில்லை. அம்மாவிற்காக கடைக்கு சென்றால் கமிஷன், ஆச்சிக்கு வெற்றிலை வாங்கி கொடுத்தால் கமிஷன் என்று உழைத்து சேர்த்தேன். என்னுடன் இருப்பவர்களெல்லாம் மிட்டாய் வாங்கி தின்ற போதும் நான் வாயை கட்டி வயித்தை கட்டி சேர்த்தேன்.

சில நேரம் மனம் தத்தளியும் போது அவனை எண்ணி கொள்வேன்.. இப்படியாக மூன்று மாதம் சென்ற நிலையில் பதினாலாயிரத்தி ஐநூறு பைசா சேர்த்தேன் இன்னும் ஐநூறு பைசா தேவை என்ற நிலையில் உடைத்தேன் உண்டியலை. (சாமி உண்டியல் தான் இருந்தாலும் அவரின் பிள்ளை தான நாம் அதனால் ஒன்றும் செய்ய மாட்டார் என்ற நம்பிக்கை)

இறுதியாக பதினைந்தாயிரம் பைசாக்களை எடுத்துக்கொண்டுஅவன் முன்னே சென்று நின்றேன். தலை குனிந்து நாணி கோணவில்லை நான் கம்பீரமாகவே கூறினேன்." Black forest " என்று இத்தனை நாள் தள்ளி நின்று ரசித்தவனை அன்று கையிலேந்தினேன். மனம் முழுவதும் கொண்டாட்டம்.

பேருந்து நிறுத்தம் வந்து நண்பர்களுடன் இணைந்து கொண்டேன். எப்போழுது தின்போம் என்று மனது ஜொல்லினாலும் அவன் என் கையில் என்ற இன்பமே அலாதியாக இருந்தது.
ஹாஹா ?செம்ம டா black forest எதிர் பார்க்காத பெயர் செம்ம ஜொல்லிங் தான்.
வாயில் இட்டதும் உருண்டு கரைந்து போகும் அந்த பிரவுன் நிற கள்வனை விரும்பாத ஜீவன் உண்டோ இந்த நாட்டில் சூப்பர் ???
 




jeyalakshmigomathi

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2018
Messages
2,820
Reaction score
7,471
Location
Tirunelveli
ஹாஹா ?செம்ம டா black forest எதிர் பார்க்காத பெயர் செம்ம ஜொல்லிங் தான்.
வாயில் இட்டதும் உருண்டு கரைந்து போகும் அந்த பிரவுன் நிற கள்வனை விரும்பாத ஜீவன் உண்டோ இந்த நாட்டில் சூப்பர் ???
?? அதானே
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top