Reviews ஜொலிக்கும் கண்ணாடி மாளிகை

#1
அழகாக வெகு நேர்த்தியாக அகிலா மாவால் கட்டப்பட்ட மாளிகை. அன்பும் , விட்டு கொடுக்கும் புரிதலும் இருந்தால் காதல் திருமணமோ , நிச்சயித்த திருமணமோ எதாக இருந்தாலும் வாழ்க்கையில் ஜெயிக்கலாம் என்பதை அழகாக சொல்லிவிட்டீர்கள். 👌👌. பிரச்சனைகளை கீர்த்தனாவும், நிரஞ்சனாவும் கையாண்ட விதம் மிக அழகு. யாருக்காகவும் எதற்காவும் அவர்கள் காதலை அவர்கள் விட்டு கொடுக்கவில்லை. மனைவிக்கும் காதலிக்கும் உள்ள வித்தியாசத்தை பற்றி விஜய் சொன்ன வரிகள் அருமையான உண்மை. முகுந்தனின் தவிப்பு என்னையும் தவிக்க வைத்துவிட்டது. ( இப்படி ஒரு பையன் என் பொண்ணுக்கு கிடைச்சா நான் கண்ணை மூடிட்டு ஓகே சொல்லிடுவேன் 😜😜). முகுந்தனின் அம்மா பூமா ம(ட)ம்மி மாமியார்( வில்லியாக இருப்பாங்க நினைச்சா காமடி பீசா இருக்காங்க😁😁).
ஆக அகிலா மா உங்க கை வண்ணத்தில் கண்ணாடி மாளிகை ஜொலிக்கிறது. வாழ்த்துக்கள் 👍👍💐💐😘😘😘.
எதிர்பார்க்கிறோம் அடுத்த நாவலில் உங்களை. 🙏🙏🙏
 

Sponsored

Latest Episodes

Advertisements

Latest updates

Top