• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

தமிழ் மொழியில் மட்டுமே இது போன்ற வார்த்தை ஜாலங்கள் சாத்தியம்?????

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Eswari kasirajan

முதலமைச்சர்
Joined
Apr 14, 2018
Messages
10,671
Reaction score
27,027
Location
Tamilnadu
தமிழ் மொழியில் மட்டுமே இது போன்ற வார்த்தை ஜாலங்கள் சாத்தியம்
????????

அதிகாலை வேளையில். காவல் நிலைய தொலைபேசி மணி அழைக்க, காவலர் கந்தன் தொலைபேசியை எடுத்துக் பேசினார்.

காவலர் : ஹலோ V 7 காவல் நிலையம், சொல்லுங்க.

எதிர் முனை : சார் இங்க ஒருத்தரச் சுட்டுட்டார் சார்.

காவலர் : சுட்டது யாருன்னு தெரியுமா?

எதிர் முனை : தெரியும் சார்.

காவலர் : யார் சுட்டது?

எதிர் முனை : சுடலை சார்.

காவலர் : யோவ் சுட்டாங்களா இல்லையா?

எதிர் முனை : சுட்டாங்க சார்.

காவலர் : யார் சுட்டது?

எதிர் முனை : சுடலை சார்.

காவலர் : உங்கள் பேர் என்ன?

எதிர் முனை : சாரதி சார்.

காவலர் : கோபத்துடன் எந்த எடத்துல இருக்கீங்க

கொலை நடந்த இடத்தைக் கேட்டு தெரிந்து கொண்டு அங்கே சென்றனர் காவல் துறையினர்.

அந்த இடத்தில இருவர் நின்று கொண்டிருந்தனர். ஒருவரை ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஸ்ட்ரெச்சரில் எடுத்துச் சென்று கொண்டிருந்தனர்.

காவலர் : இங்க கொலைய பார்த்த சாரதி யாரு?

அங்கே இருந்த இருவர் கையை தூக்கி நான் தான் என்று கூறினார்.

ஒருவரைப் பார்த்து காவலர் : சொல்லுங்க என்ன பார்த்தீங்க?

பார்த்த சாரதி : நான் ஒன்னும் பார்க்கல சார் நான் இப்பத்தான் வந்தேன்.

காவலர் : யோவ் பிறகு எதுக்கு யா கையைத்தூக்குன?.

பார்த்த சாரதி : என் பேர் பார்த்த சாரதி அதான் கையத் தூக்கினேன்.

இன்னொருவரைப் பார்த்து காவலர் : அப்பா நீ யாருயா?

சாரதி (போனில் பேசியவர்): நான் தான் பார்த்த சாரதி.

கடுங்கோபத்தில் காவலர் : யோவ் உன் பேரு பார்த்த சாரதி யா?

சாரதி : இல்ல சார்.

காவலர் : நீ தான் யா சொன்ன பார்த்த சாரதினு.

சாரதி : ஆமா சார்.

காவலர் : அப்ப ஏன் இல்லனு சொன்ன?

சாரதி : என் பேரு பார்த்த சாரதி இல்லேனு சொன்னேன் சார் .

காவலர் : அப்ப உன் பேரு என்ன?

சாரதி : சாரதி சார்.

காவலர் : சுட்டதை பார்த்தது நீங்கள் தானா?

சாரதி : ஆமாம் சார்.

பார்த்த சாரதியப் பார்த்து

காவலர் : அப்ப நீங்க ?

பார்த்த சாரதி : கொலையைப் பார்க்காத பார்த்தசாரதி சார்.

சாரதியைப் பார்த்து

காவலர் : போன் செய்தது நீ தானா?

சாரதி : ஆமாம் சார்.

காவலர் : சுட்டது யார்?

சாரதி : "மூன்றாம் நபரைக் காட்டி" இவர் தான் சார்.

மூன்றாம் நபரைப் பார்த்து

காவலர் : நீ யாரு?

3ம் நபர் : நான் சுடலை சார்.

சாரதியைப் பார்த்து காவலர் : யோவ் அவரு சுடலைனு சொல்லுறாரு.

சாரதி : ஆமாம் சார் அவர் சுடலை.

காவலர் : அப்ப சுட்டது யாரு?

சுடலையைக் காண்பித்து சாரதி : இவர் தான் சார்.

காவலர் இப்பொழுது கீழ்ப்பாக்கத்தில் ட்ரீட்மெண்ட் எடுத்துக்கிட்டு இருக்கிறார்.

ரசிக்கத் தக்கது. ரசித்தேன்.

????????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top