• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நனிநம்பிக்கை கொள்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

JeyaBharathi

மண்டலாதிபதி
Joined
Jun 24, 2019
Messages
149
Reaction score
331
Location
Muscat

நனிநம்பிக்கை கொள்

நடைபழகும் மென்னெட்டு
நாளைய நீளெட்டு ஓட்டத்தின்
மௌன தொடக்கமெனும்
நனிநம்பிக்கை கொள்..

சுழல்ஓயா வாழ்வதன்
விசைகூட்டி விளாசிடும்
சமூக சாட்டையிடை,
சாதிக்க சங்கற்பம் கொள்..

உற்சாகம் பிரவாகிக்க
ஆழ்மன பாழ்கிணற்றில்
பச்சாதாபம் தள்...கொல்..

சுடுசொல் வடுவது
சுந்தர அகத்தில்
மற்றுமோர் சௌந்தர்யமெனும்
திட திமிர் கொள்..

வலு உறிஞ்சும்
வார்த்தைகள் புறந்தள்ளி
வாழ்வதன் குறிக்கோள் எட்டு..
வானது காலடியில்..

ஏற்றத்தினிடை
இறக்கம் நேர்கையில்
இயல்பென ..,
சுவை கொள்ள மனங்கொள்..

இலக்கதன் ஈர்ப்பில்
வலுவிழக்கும் தொடர் இடர்கள்..
அகஉள சபதத்தில்
ஆழமிழக்கும் புறவெளி அசாத்தியம்..

தீரா தேடலுடன்
தீர்க்க சிந்தையுடன்
எட்டித்தொடு..
எட்டா உயரங்கள்...

பிணையிட்ட சாத்திரங்கள் பிரித்தெறிந்து
எகிறிஎழுது பிறிதோர் சரித்திரம்..
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
?????????no words... Super dear...???keep it up...
 




Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai
அருமை அருமை...
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,609
Reaction score
36,883
Location
Srilanka
சுடுசொல் வடுவது சுந்தர அகத்தில் மற்றுமோர் சௌந்தர்யமெனும்
திட திமிர் கொள்

வலு உறிஞ்சும் வார்த்தைகள் புறந்தள்ளி வாழ்வதன் குறிக்கோள் எட்டு...
வானது காலடியில்.

"தீரா தேடலுடன்
தீர்க்க சிந்தையுடன்
எட்டி தொடு
எட்டா உயரங்கள்"
பிடிச்சிருக்கு?????
 




JeyaBharathi

மண்டலாதிபதி
Joined
Jun 24, 2019
Messages
149
Reaction score
331
Location
Muscat
சுடுசொல் வடுவது சுந்தர அகத்தில் மற்றுமோர் சௌந்தர்யமெனும்
திட திமிர் கொள்

வலு உறிஞ்சும் வார்த்தைகள் புறந்தள்ளி வாழ்வதன் குறிக்கோள் எட்டு...
வானது காலடியில்.

"தீரா தேடலுடன்
தீர்க்க சிந்தையுடன்
எட்டி தொடு
எட்டா உயரங்கள்"
பிடிச்சிருக்கு?????
ரொம்ப ரொம்ப நன்றிகள் டியர்... ❤ ❤
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top