• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நிலவே என் வண்ணமுகிலே-2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vishnu jegadeesan

புதிய முகம்
Joined
Sep 8, 2020
Messages
15
Reaction score
38
Location
Rajapalayam,virudhunagar
அத்தியாயம்-2


வடித்து வைத்த வெண்ணிலவாய்
உன் காதலில் கட்டுண்டு
கிடக்கிறேன்.
உன் சுவாசமாய் கலக்க ஆவல் கொண்டுள்ளேன் என் அந்தி சாயும் ஆயுள் வரை!




அந்த எட்டு மாடி கட்டிடத்தில் ஏழாவது மாடியறையில் குளிரூட்டப்பட்ட அறைக்குள் சென்றவுடன் இன்டர்காம் அவளை அழைத்தது. ரிசீவரைை எடுத்தவுடன் மறுமுனையில் அவள் எம்.டியின் குரல் உடனே ரூமிற்கு வருமாறு அழைத்தது.


எம்.டியின் கண்ணாடி அறை கதவை தட்டி அனுமதி பெற்றுக்கொண்டு உள்ளே நுழைந்தவள் அவருக்கு "குட்மார்னிங்" என்றாள். பதிலுக்கு விஷ் செய்தார்.


எம்.டி ராகவன் உத்ராவிடம், மீட் மிஸ்டர் அபிமன்யு , அபி குரூப்ஸ் ஆஃப் கம்பனீஸ் எம்.டி. மிகப்பெரிய தொழிலதிபர் , இந்தியாவில் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவர் , நிறைய பிசினஸ் செய்கிறார் என்று அறிமுகப்படுத்தினார்.


அப்போதுதான் உள்ளே இன்னொருவரும் இருக்கிறார் என்பதை உணர்ந்த உத்ரா , அவருக்கு விஷ் செய்தவள் எரிச்சலடைந்தாள். பதிலுக்கு ஹலோ கூட சொல்லாமல் அமர்த்தலாக தலையைை மட்டும் ஆட்டினான் , கண்களில் அலட்சியம் வேறு , திமிர்பிடித்தவன் சரியான பணத்திமிர் என்று நன்றாக அவனை மனதிற்குள் திட்டிக்கொண்டாள்.


ஒரு புது ப்ராஜெக்ட் உத்ரா , அபி சாரும் நாமும் இதில் கொலாப்ரேட் ஆகி இருக்கோம். நம்ம கம்பெனியின் சார்பாக நீ இவருடன் இணைந்து இந்த ப்ராஜக்டை செய்ய வேண்டும். இது நம்ம கம்பெனிக்கு கிடைச்ச ஒரு பெரிய வாய்ப்பு என்று கூறி அவளிடம் ஒரு பைலை நீட்டினார்.


மத்த டீடைல்ஸ் எல்லாம் அபி சொல்லுவார் என்றார் ராகவன்.


"சின்ன பாப்பாவெல்லாம் ப்ராஜெக்ட்டுக்கு ஹெட்டா போட்டுருக்கீங்க, சைல்ட் லேபர் எல்லாம் தப்பு" என்றான் கிண்டலாக.


எவ்வளவு தைரியமிருந்தால் என்னை சின்ன பாப்பாவென்று சொல்லுவான் , திமிர்பிடித்தவன் மனதிற்குள் அவனை வறுத்தெடுத்தாள்.


ஓ நோ அபி , உத்ரா இஸ் வெரி ஸ்மார்ட் . இந்த சின்ன வயசிலேயே அவளோட திறமையாலதான் இவ்வளவு பெரிய பதவிக்கு வந்திருக்கா. இந்த ப்ராஜக்டை அவ நல்லா செய்வானு எனக்கு நம்பிக்கைை இருக்கு என்று கூறினார்.


ராகவன் கூறியதை கேட்டவுடன் உத்ராவிற்கு மனம் நெகிழ்ந்து விட , "ஒ.கே சார், ஐ கேன் டு மை பெஸ்ட்" என்று அவரிடம் விடைபெற்றுக்கொண்டவள் அவனிடம் திரும்பி சார் என்னுடைய அறைக்கு சென்று
பேசலாமா? என்றாள்.


ம்ம்.. ஒ.கே என்று கூறி சிறு தலை அசைப்புடன் விடைபெற்றுக்கொண்டான்.


பைலை பார்வையிட்டு கொண்டிருந்தவள் தன்னை ஏதோ உறுத்துவது போல் தோன்ற சட்டென நிமிர்ந்து பார்த்தாள். ஆறடி உயரத்தில் கோதுமை நிறத்தில் பார்க்க ஹிந்தி ஹீரோ ரேஞ்சுக்கு இருந்தான். வெள்ளை நிறத்தில் ஷர்ட் , அதற்கு மேல் ஆகாய நீல நிறத்தில் கோட் , சந்தன நிறத்தில் பேண்ட் அணிந்து கால்
மேல் கால் போட்டுக்கொண்டு அவளை சாவகாசமாாக பார்த்துக் கொண்டிருந்தான்.


எதற்கு இப்படி பார்த்து தொலைக்கிறான் என்று எண்ணிக் கொண்டாள்.


இந்த பிளான் நல்லா இருக்கு , இது கஸ்டமர்ஸ்க்கு நல்ல லெவல்ல ரீச் ஆகும் சார் , அவன் பார்வையை மாற்ற பேச்சை ஆரம்பித்தாள்.


ஆனால் அவனோ இன்னும் நிதானமாக அவளை பார்வையால் வருடிக்கொண்டிருந்தான்.


"ஹலோ மிஸ்டர் என்ன பகல் கனவா" கிண்டலாக கேட்டாள்.


கனவுதான். ஆனால் எந்த கனவனாலும் சரி , நான் நினைத்ததை எப்பவும் நடத்தி முடிக்கிறவன் என்று உறுதியுடன் கூறினான்.


லூசா இவன் என்று நினைத்துக்கொண்டு , வேலையைப் பத்தி பேசலாம் என்று நினைக்கிறேன் என்றாள்.


ம் . கண்டிப்பாக, சற்று நேரம் அடுத்த கட்ட வேலையைப்பற்றி பேசினார்கள், அவன் பேச பேச அவளுக்கு வியப்பாக இருந்தது.


இவன் இந்த துறையில் இவ்வளவு திறமையானவனா என்று , அவன் மீது கொஞ்சம் மதிப்பு கூட தோன்றியது.


ஒ.கே இந்த பிளான் படி ரெடி பண்ணிடுங்க என்றான்.


வெல். நான் நினைச்ச அளவுக்கு நீ மோசம் இல்ல , நல்லா பிரசெண்டேஷன் பண்ற , அவன் கண்களில் அவளை சீண்டும் ஆர்வம் இருந்தது.


"ஏன்? இந்த உலகத்துல நீங்க மட்டும்தான் அறிவாளியா இருக்ககனுமா , மத்த யாருக்கும் மூளையே இருக்கக் கூடாதா?" படபடவென பொரிந்தாள்.


"பட், எனிவே என்ன பத்தி இவ்ளோ நல்லா யோசிச்சதுக்கு தேங்க்ஸ்" கிண்டலாக கூறினாள்.


"ஹப்பா , எவ்ளோ கோபம் வருது , ஆனா பேபி கோபத்துல கூட சோ க்யூட்" பார்வையால் ரசித்தபடியே கூறினான்.


"ஐ ஆம் நாட் ய பேபி" சீற்றத்துடன் கூறினாள்.


"ஆனால் நீ எனக்கு எப்பவும் பேபி தான்" கண்கள் மின்ன கூறினான்.


இவள் அவனை முறைத்துப் பார்த்தாள்.


கதவருகில் சென்றவன் நின்று திரும்பி அவளைப் பார்த்து , நான் நினைச்சதை விட நீ ரொம்ப அழகா, அறிவா இருக்க, ஐ லைக் இட் , எனிவே ஐ ஆம் சோ லக்கி, பை டார்லிங் என்று கூறி கண் சிமிட்டு விட்டு சென்று விட்டான்.


அவன் சென்ற பிறகும் அவளுக்கு மூச்சடைப்பது போல் இருந்தது.


இவன் என்ன உளறிட்டு போறான் ஒன்னும் புரியலையே, குழம்பித் தவித்தாள்.


எதற்கும் இவனிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டாள்.


மாலையில் வீட்டிற்கு சென்றவுடன் பரபரப்பாக வந்த விஸ்வநாதன், " சீக்கிரம் ரெடியாகு உத்ரா , இன்னிக்கு என் பிரெண்ட் வீட்டுல விசேஷம், அவங்க வெட்டிங் டே, நாம போகணும்னு நேத்து நைட்டு சொன்னேனே மறந்துட்டியா, சீக்கிரம் ரெடியாகு" அவசரப் படுத்தினார்.


அப்பொழுதுதான் நினைவு வந்தவளாக அவசர அவசரமாக கிளம்பினாள்.
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
விஷ்ணு ஜெகதீசன் தம்பி
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top