• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode நிலவைக் கொண்டு வா – 15 (FINAL)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
ஹாய் ஃப்ரண்ட்ஸ்,

அனைவருக்கும் வணக்கம்

கடந்த பதிவுகளுக்கு, லைக்ஸ், கமெண்ட்ஸ், சைலண்ட் ரீடிங்க் மூலம் ஊக்கப்படுத்திய அனைத்து உள்ளங்களுக்கும் எனது நன்றியைத் தெரிவிப்பதில் மகிழ்கிறேன்.

இறுதி பதிவுடன் வந்துவிட்டேன். குறுநாவல் போட்டியில் பங்கு கொள்ள உதவிய அனைத்து அன்பான உள்ளங்களையும் நன்றியுடன் நினைவு கூறுகிறேன்.

வாருங்கள்.......... படித்துவிட்டு தங்களின் விமர்சனங்களை எழுதுங்கள்.

நிலவைக் கொண்டு வா – 15 (FINAL)

3514.jpg

இப்பதிவில் ரகுவுடன் வதனி ரசித்துக் கேட்டிருந்த பாடல்.... வீடியோவை காண்பதைத் தவிர்த்து, ஆடியோவை ஹெட் போனில் கேட்டுப்பாருங்கள். அவர்கள் உணர்ந்ததை சித் ஸ்ரீராம், ஸ்ரேயா கோஷல் வஞ்சனை இல்லாமல் உங்களையும் உணரச் செய்வார்கள்.

SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
நிலவைக் கொண்டு வா – 15

நிலவை கொண்டு வா கட்டிலில் கட்டி வை
மேகம் கொண்டு வா மெத்தை போட்டு வை
நிலவை பிடித்தேன் கட்டிலில் கட்டினேன்
மேகம் பிடித்தேன் மெத்தை விரித்தேன்
காயும் சூரியனை கடலுக்குள் பூட்டி வை
இரவு தொடர்ந்திட இந்திரனை காவல் வை
காயும் சூரியனை கடலுக்குள் பூட்டினேன்

இரவு தொடர்ந்திட இந்திரனை நம்பினேன்

அடுத்து வந்த இரு நாட்களில், கருணாகரனும் – கீதாஞ்சலியும் திருவாரூர் கிளம்பிவிட்டனர். போகும் போது கருணாகரன் தனது மகளிடம்

“வதனி, இனி பொறுப்பா இருந்துக்குவனு எனக்கு நம்பிக்கை இருக்கு, டெய்லி அப்பா கால் பண்றேன். கிளம்பவாடா?”

“சரிப்பா”, அவளை அறியாமலேயே, பார்வையை மறைக்கும் அளவு கண்களில் கண்ணீருடன் விடை கொடுத்தாள்.

அவளது தோளில் தட்டியவர் மனதிலும், மகள், வேரொருவரின் மனைவியாகி விட்டபின், அதற்கு மேல் உரிமை கொண்டாட இயலாமல் எதோ ஒன்று தடுத்தது.

இதைப் பார்த்திருந்த ரகுவின் விடையறியா வினாவிற்கு பதில் கிடைத்தது. ஆனாலும் அவள் சொல்லிக் கேட்க விரும்பியவன்,

“வதனா, லாஸ்ட் டைம் ஊருக்கு போகும்போது ஏன் அழுத?”

“ம்... வீட்டுல நீ இருந்தா இருக்கற கலகலப்பு... நீ போனவுடனே... உங்கூடவே போயிருதுனு அத்த சொன்னாங்க...”

“அதுக்காகவா அழுத?”

“இல்ல, அத்த பெத்த அரவேக்காடு நம்ம எப்ப கண்டுக்கறது, நாம எப்ப வந்து இங்க வாழுறதுனு நினச்சனா! என் கண்ணுல தூசி விழுந்திருச்சு”, என்று சிரித்தபடி அவள் நகர

அவளின் தனக்கான தேடலை உணர்ந்தவன், ‘நிறய நாள வேஸ்ட் பண்ணிட்டோம் போலயே!’, என எண்ணியபடி அவனது பணிகளைக் கவனிக்கச் சென்றான்.

அடுத்து வந்த நாட்களில், தோப்பிற்கு சென்றனர்.

இருபத்து ஐந்து ஏக்கர் நிலபரப்பில் இல்லாத மரமே அங்கு இல்லை எனும் அளவிற்கு வளர்ந்து நின்ற மரங்களுக்கிடையே புதிதாக நவீன முறையில் கட்டப்பட்ட இரண்டு மாடி வீடு ஒன்று இருந்தது.

தென்னங்கீற்றிலிருந்து பெருக்குமாறு, தட்டி, பனை மரத்தின் இள ஓலையிலிருந்து பாய், விசிறி, பெட்டி, முறம் போன்ற பொருட்களை அங்கு உற்பத்தி செய்வதற்கு ஆட்கள் நியமிக்கப்பட்டு வேலை செய்தபடி இருந்தனர்.

கயிறு திரித்தல், பனை மட்டைகளை அளவாக வெட்டி விற்பனைக்கு என பல தரப்பட்ட வேலைகள் நடந்தபடி இருந்ததைக் கண்டவள்,

“இதெல்லாம் எப்பவுமே நடக்குதா?”

“அப்பத்தா இருக்கற வர நடந்தது.... இடையில் கொஞ்சம் விட்டுட்டோம், திரும்ப ஆரம்பிச்சு ஒரு வருசமா நடக்குது”

“இந்த வீடு இப்பதான் கட்டுனதா?”

“ஆமா....”

“இங்க எதுக்கு இவ்வளவு பெரிய வீடு?”

“நான் அதிகமா இங்கதான் இருப்பேன்”

“அதுக்கு எதுக்கு ரெண்டு ஃப்ளோர்?”

“க்ரௌண்ட் ஃப்ளோர்ல, இங்க செய்ற, முடையற, திரிக்கிற பொருளெல்லாம் வச்சுக்குவாங்க, அப்புறம் வேலைக்கு வரவங்க மதியம் சாப்டிட்டு கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுப்பாங்க

ஃபர்ஸ்ட் ஃப்ளோர் நம்ம வீட்டுல இருந்து வரவங்க பயன்படுத்துவாங்க..... செகண்ட் ஃப்ளோர் நான் மட்டும் யூஸ் பண்றேன்”

“தனியா வந்து இங்க என்ன பண்ணுவீங்க?”

“கணக்கெல்லாம் இங்க வச்சு பார்ப்பேன், போரடிக்கிற நேரம் வேடிக்கை பார்ப்பேன், பாட்டு கேப்பேன்.... என்ன கண்டுக்கறதுக்கு தான் யாருமில்லாம இருந்தேனே”, பேச்சை மாற்ற எண்ணியவள்

“சரி வாங்க, மேல போயி பார்ப்போம்”

“வா....”, என அழைத்துச் சென்றான்.

மிகவும் அழகாக இருந்தது. மூன்று புறத்திலும், தரையிலிருந்து மூன்று அடி உயர சுவர்களில் பில்லர்களுக்கிடையே வைக்கப்பட்ட கிரில் கம்பிகளும், கம்பிகளுக்கு ட்ரான்ஸ்பரண்டான கண்ணாடி, இடையே ஜன்னல்கள், அழகான திரைச்சீலை என ரசனைக்குரியதாக அந்த ஃப்ளோர் இருந்தது.

அங்கிருந்து ஒரு புறம் பார்த்தால், தூரத்தில் நீலமாக பரந்து, விரிந்திருந்த கடல், மற்ற இருபுறமும் பரந்த மணல் வெளியில் அங்கங்கு சிறு சிறு தோப்புகளென அருமையாக இருந்தது.

ஜன்னலைத் திறந்தால், தேகம் தீண்டிச் சென்றது தென்றல்.

‘பயங்கர ரசனக்காரவனாடா ரகு நீ’

எதுவும் பேசாமல் ரசித்து பார்த்திருந்தவளை கண்டவனுக்கு, அவளின் ரசனையை, அவளின் விழிகளில் உண்டான மாற்றங்களை அவனும் ரசித்திருந்தான்.

“வதனி, இந்த பௌர்ணமிக்கு இங்க வந்து ஸ்டே பண்ணுவமா?”

“நைட் தோப்புக்குள்ள பயமா இருக்காதா?”

“என்ன பயம்? நான் இருக்கேன்ல”

‘அதாண்டா பயம், இன்னும் மனசுல ஒரு ஓரமா ஒட்டிட்டு இருக்கு....!, ஏன்னு இந்த க்ரீன் சாண்டுக்கு இன்னும் தெரியல...!’

சரியென்றவள், அங்கிருந்த மற்ற இடங்களையும் பார்வையிட்டாள். ஒரு அறையில் ஃபைல்களும், சிஸ்டமும் இருக்க கண்டாள்.

‘கணக்கு பண்ற இடம்போல...! ச்சேய்.... தப்பா சொல்லக்கூடாது...... கணக்கு பாக்குற இடம்’

கிச்சன், பெட்ரூம் என சகல வசதிகளுடன் இருந்தது அந்த தோப்பு வீடு.

நர்சரிக்கு சென்றாள் ஒரு நாள். அங்கு பசுமைக்குடில், நிழல் வலைக்குடில், பனி புகையறை போன்ற பல முறைகளைப் பயன்படுத்தி வண்ணமலர்கள் அதிகளவில் உற்பத்தி, அதிக மகசூல் பெறும் உத்தி, பதியன் முறை செடி வளர்த்தல் என அவளுக்கு ஆர்வமாக பொழுது போனது.

அறுவடைக்குப் பின் இருக்கும் வேலைகள், இறால் பண்ணையில் நடப்பதையும் சென்று பார்த்தாள்.

எல்லா இடங்களுக்கும் அவளை அழைத்துச் சென்றவன் இறுதியாக அவளிடம்,

“வதனி, இங்க நடக்கற நம்ம பிஸினெஸ் கணக்குகளெல்லாம் மதுர ஆடிட்டர் ஒருத்தவர் தான் பார்த்துக்கறார்.

நீ விருப்பப்பட்டா அவர்கிட்ட இருந்து ஒவ்வொரு அக்கவுண்டா வாங்கி உங்கிட்ட தரேன்.... அப்புறம் சென்னை, அரியலூர் ஐடி எல்லாத்தையும் நீயே பாத்துக்கலாம். என்ன சொல்ற...”

“இப்போ அரியலூர் மட்டும் பாக்குறேன்.... அப்றம்.... வருசத்துக்கு ஒண்ணா அவர்கிட்ட இருந்து மாத்திக்குவோம்....”

அவளிஷ்டம் என்றுவிட்டான்.

பௌர்ணமியும் வந்தது. அவர்களின் வாழ்க்கையை தோப்பு வீட்டில் ஆரம்பிக்க விருப்பம் தெரிவித்து இருந்தான் ரகு. அவளும் அதை ஆமோத்திருந்தாள்.

கணக்குகள் பார்க்க என பகலில் அவள் தோப்பிற்கு சென்று வந்த வண்ணம் இருந்ததால், இரு தினங்கள் அங்கிருக்க விருப்பம் தெரிவித்த தம்பதியினரை எதுவும் கேள்விகள் கேட்காமல் வீட்டிலிருந்த பெரியவர்கள் மகிழ்ச்சியுடன் அனுப்பி வைத்தனர்.

மூன்று வேளைக்கும் உணவு கொடுத்து விடுவதாக துர்கா தெரிவித்தார். மறுக்காமல் ஒப்புக்கொண்டனர் இருவரும்.
 
Last edited:

SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
காலை பதினோரு மணிக்கு தோப்பு வீட்டிற்கு சென்றனர். வதனி அரியலூர் ஐடி கணக்குகளை பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளை தொந்திரவு செய்யாமல், கடல் இருக்கும் புறத்தில் தொங்கிய மூங்கில் ஊஞ்சலில் அமர்ந்து ஹெட் போனில் பாட்டுக் கேட்டவாறு கண்களை மூடி இசையை, அது உண்டாக்கும் உணர்வுகளை தனக்குள் ரசித்திருந்தான்.

வெகு நேரம் தன்னை தொந்திரவு செய்யாமல் இருக்கும் கணவனை வியந்தபடி அங்கு வந்தவள், அவன் மடியிலிருந்த அவன் கைகளை மெதுவாக விலக்கி அமர்ந்தாள்.

அவன் வலப்புற காதிலிருந்த ஹெட் போனை எடுத்து அவளது காதில் மாட்டியவாறு அவனுடைய பரந்த மார்பில் சாய்ந்திருந்தாள். இருகைகளால் அவளை அவன் அணைத்திருக்க

சித் ஸ்ரீராம், ஸ்ரேயா கோஷல் குரலில், யுவன் சங்கர் ராஜா இசையில், உணர்வுகளை, உடலின் ஒவ்வொரு அணுவையும் மயங்கச் செய்திருந்த அந்த வரிகளை அனுபவித்து பாடிக் கொண்டிருக்கும் குரல்கள்

........ ஏனோ இரவோடு ஒளியாய்கூடும்
உறவொன்று கேட்கிறேன்
வரை மீறும் இவளின் ஆசை
நிறைவேறப் பார்க்கிறேன்.
நதி சேரும் கடலின்மீது

மழை நீராய் சேருவேன்
..........................

என்ற பாடலை இருவரும் இணைந்து ரசித்திருந்தனர்.

பாடல் முழுவதையும் கேட்ட பெண்ணவள், தனது உணர்வுகளை இதழ் மூலம் அவனிதழ்களுக்கு கடத்தினாள். கடத்தலில் காணாமல் போன இருவரையும் கண்டு பிடித்தது, வீட்டிலிருந்து வந்த போன் கால்.

இரவு நேர பௌர்ணமி நிலா மேலெழும்ப, அதன் நிழல் கருமை படர்ந்திருந்த கடலில் விழுந்தது. காண்பவர் கண்களுக்கு, மஞ்சள் நிலவு இரண்டாகக் காட்சி அளித்தது.

அவனுடைய நிலா அவன் கைகளுக்குள் இருக்க, எதிரில் தெரியும் இரு நிலவைப் பார்த்தவாறு அர்த்தமில்லா பல விசயம் அவன் பேச, அர்த்தம் புரியாமலேயே கேட்டிருந்தாள்.

அவன் கரங்கள் பேசிய கதைகள் பெண்ணவளின் தேகம் உணர்ந்த வேளை,

முடிவறியா முதல் அனுபவம் முற்றிலும் அவளறியாததால், அவன் பயணிக்கும் வேகத்திற்கு ஒத்துழைத்து, மனம் நெகிழ காத்திருந்தாள்.

அவளின் தேகத்திற்கு ஆடையானவன், முத்த ஊர்வலத்தை நடத்த, இருவருக்கும் பருவப் பசி கிளர்ந்தெழ, பசி போக்க... ஒருவரையொருவர் யாசிக்க ... மனமொத்து இருவரும் விருந்து பரிமாறி, களித்து, கனிந்து, களைத்திருந்தனர்.

இதழ் விரித்து மலரக் காத்திருந்த மலருக்குள், தேனருந்த வந்த வண்டினை இதழ்களால் சிறை செய்திருந்தது, மலர்.

காமக்கடலில் மூழ்கி இருவரும் முத்தெடுத்த வேளையில், அவனது வாழ்விற்குள் வர யோசித்த.... நிலவைக் கொண்டு வர உண்டான மனக்கிலேசமெல்லாம் பனிபோல மறைய, அவளின் பருத்த மார்புகளுக்கிடையே முகம் புதைத்திருந்தான்.

சந்திரவதனியின் உலகமாகியிருந்தான் ரகுநந்தன். அத்தான் என்ற அவளின் அழைப்பைக் கேட்டால் அத்தனையும் மறந்து அவள் பின்னால் என்னவென நிற்கும் ரகு அனைவருக்கும் புதிரானவன், புதிதானவன். வதனிபித்தன்.

நமது ரசனைக்குரியவன்..... அவனை பிறர் ரசிக்க விரும்பா அவனுடைய ராட்சசி வதனி. அறியா விளையாட்டுப் பெண்ணாக இருந்தவள், ரகுவிற்கும், ஆடிட்டிங்கிற்கும் அரசியாகியிருந்தாள்.

நிறைவான வாழ்வால் இருவரும், எல்லா வளங்களையும் பெற்று திறம்பட வாழ்ந்திருந்தனர்.

வாழ்த்தி விடைபெறுவோம்!!!
 
Last edited:

Jovi

மண்டலாதிபதி
Joined
Apr 4, 2018
Messages
156
Reaction score
259
Location
Uk
காலை பதினோரு மணிக்கு தோப்பு வீட்டிற்கு சென்றனர். வதனி அரியலூர் ஐடி கணக்குகளை பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளை தொந்திரவு செய்யாமல், கடல் இருக்கும் புறத்தில் தொங்கிய மூங்கில் ஊஞ்சலில் அமர்ந்து ஹெட் போனில் பாட்டுக் கேட்டவாறு கண்களை மூடி இசையை, அது உண்டாக்கும் உணர்வுகளை தனக்குள் ரசித்திருந்தான்.

வெகு நேரம் தன்னை தொந்திரவு செய்யாமல் இருக்கும் கணவனை வியந்தபடி அங்கு வந்தவள், அவன் மடியிலிருந்த அவன் கைகளை மெதுவாக விலக்கி அமர்ந்தாள்.

அவன் வலப்புற காதிலிருந்த ஹெட் போனை எடுத்து அவளது காதில் மாட்டியவாறு அவனுடைய பரந்த மார்பில் சாய்ந்திருந்தாள். இருகைகளால் அவளை அவன் அணைத்திருக்க

சித் ஸ்ரீராம், ஸ்ரேயா கோஷல் குரலில், யுவன் சங்கர் ராஜா இசையில், உணர்வுகளை, உடலின் ஒவ்வொரு அணுவையும் மயங்கச் செய்திருந்த அந்த வரிகளை அனுபவித்து பாடிக் கொண்டிருக்கும் குரல்கள்

........ ஏனோ இரவோடு ஒளியாய்கூடும்
உறவொன்று கேட்கிறேன்
வரை மீறும் இவளின் ஆசை
நிறைவேறப் பார்க்கிறேன்.
நதி சேரும் கடலின்மீது

மழை நீராய் சேருவேன்
..........................

என்ற பாடலை இருவரும் இணைந்து ரசித்திருந்தனர்.

பாடல் முழுவதையும் கேட்ட பெண்ணவள், தனது உணர்வுகளை இதழ் மூலம் அவனிதழ்களுக்கு கடத்தினாள். கடத்தலில் காணாமல் போன இருவரையும் கண்டு பிடித்தது, வீட்டிலிருந்து வந்த போன் கால்.

இரவு நேர பௌர்ணமி நிலா மேலெழும்ப, அதன் நிழல் கருமை படர்ந்திருந்த கடலில் விழுந்தது. காண்பவர் கண்களுக்கு, மஞ்சள் நிலவு இரண்டாகக் காட்சி அளித்தது.

அவனுடைய நிலா அவன் கைகளுக்குள் இருக்க, எதிரில் தெரியும் இரு நிலவைப் பார்த்தவாறு அர்த்தமில்லா பல விசயம் அவன் பேச, அர்த்தம் புரியாமலேயே கேட்டிருந்தாள்.

அவன் கரங்கள் பேசிய கதைகள் பெண்ணவளின் தேகம் உணர்ந்த வேளை,

முடிவறியா முதல் அனுபவம் முற்றிலும் அவளறியாததால், அவன் பயணிக்கும் வேகத்திற்கு ஒத்துழைத்து, மனம் நெகிழ காத்திருந்தாள்.

அவளின் தேகத்திற்கு ஆடையானவன், முத்த ஊர்வலத்தை நடத்த, இருவருக்கும் பருவப் பசி கிளர்ந்தெழ, பசி போக்க... ஒருவரையொருவர் யாசிக்க ... மனமொத்து இருவரும் விருந்து பரிமாறி, களித்து, கனிந்து, களைத்திருந்தனர்.

இதழ் விரித்து மலரக் காத்திருந்த மலருக்குள், தேனருந்த வந்த வண்டினை இதழ்களால் சிறை செய்திருந்தது, மலர்.

காமக்கடலில் மூழ்கி இருவரும் முத்தெடுத்த வேளையில், அவனது வாழ்விற்குள் வர யோசித்த.... நிலவைக் கொண்டு வர உண்டான மனக்கிலேசமெல்லாம் பனிபோல மறைய, அவளின் பருத்த முலைகளுக்கிடையே முகம் புதைத்திருந்தான்.

சந்திரவதனியின் உலகமாகியிருந்தான் ரகுநந்தன். அத்தான் என்ற அவளின் அழைப்பைக் கேட்டால் அத்தனையும் மறந்து அவள் பின்னால் என்னவென நிற்கும் ரகு அனைவருக்கும் புதிரானவன், புதிதானவன். வதனிபித்தன்.

நமது ரசனைக்குரியவன்..... அவனை பிறர் ரசிக்க விரும்பா அவனுடைய ராட்சசி வதனி. அறியா விளையாட்டுப் பெண்ணாக இருந்தவள், ரகுவிற்கும், ஆடிட்டிங்கிற்கும் அரசியாகியிருந்தாள்.

நிறைவான வாழ்வால் இருவரும், எல்லா வளங்களையும் பெற்று திறம்பட வாழ்ந்திருந்தனர்.

வாழ்த்தி விடைபெறுவோம்!!!
Lovely story
 
srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,972
Location
madurai
அழகான நிறைவு...சீக்கிரமே முடிந்த உணர்வு... Good... Good...??????? விரைவில் அடுத்த கதையுடன் வர வேண்டும் என்பதே என் அவா....
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top