• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நிலவைக் கொண்டு வா - 10

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
ஹாய் ஃப்ரண்ட்ஸ்:love::love::love::love::love:,

அனைவருக்கும் வணக்கம்

கடந்த பதிவுகளுக்கு, லைக்ஸ், கமெண்ட்ஸ், சைலண்ட் ரீடிங்க் மூலம் ஊக்கப்படுத்திய அனைத்து உள்ளங்களுக்கும் எனது நன்றியைத் தெரிவிப்பதில் மகிழ்கிறேன்.

அடுத்த பதிவுடன் வந்துவிட்டேன். படித்துவிட்டு உங்களின் கருத்துகளைப் பதிவு செய்து என்னை உற்சாகப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

வாருங்கள்..........

நிலவைக் கொண்டு வா - 10
3514.jpg
 




SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
நிலவைக் கொண்டு வா – 10

நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் – இசைத்திட
என்னைத்தேடி வரணும் வரணும்
ஒரு கிளி தனித்திருக்க உனக்கெனத் தவமிருக்க
இரு விழி சிவந்திருக்க இதழ் மட்டும் வெளுத்திருக்க
அழகிய ரகுவரனே – அனுதினமும்


நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் – இசைத்திட
என்னைத்தேடி வரணும் வரணும்


மாலை வேளையில் கிளம்பிய மகனைப் பார்த்திருந்த துர்கா,

“டீ குடிச்சுட்டு போப்பா”

“சரிம்மா....” என்றவாறு ஹாலில் உள்ள சோபாவில் அமர்ந்தான்.

அருகில், நிர்மலா தனது மகளுக்கு பாலை ஆற்றியபடி....

“என்ன நந்தா...... முகமெல்லாம் ப்ரைட்டா இருக்கு......”

“அது எப்பவும் போல தான் இருக்கு, உன் கண்ணுல தான் எதோ ப்ரொப்ளம்”, என்றான் சிரித்தபடி,

இருவருக்கும் ஒரே வயது, தூரத்து சொந்தம், சிறு வயது முதலே பழக்கம் என்பதால், அண்ணனின் மனைவியான பின்பும் ஒருமையில் இருவரும் பேசிக்கொள்வர்.

“எங்கிட்ட சொல்லு நான் உன் அண்ணங்கிட்ட கூட சொல்ல மாட்டேன்”

“யாரு.... நீ....... வீட்டுக்குள்ள எத்தன எறும்பு வந்துட்டு போச்சுன்னு கூட அவங்கிட்ட சொல்லுவனு தெரியும் எனக்கு....”

அது வரை அங்கு டாய்சுடன் விளையாடிய தன்யா அவனிடம் வந்து,

“ரகுப்பா..... என்னோட வீடியோ கேம அம்மா ஒழிச்சு வச்சுட்டங்க, வாங்கி தாங்க.... இப்பொ”, என்றபடி மடியில் அமர்ந்தாள்.

“ஏய் .... பச்ச புள்ளயோட விளையாட்டு சாமான எடுத்து ...... ஏன் ஒழிச்சு வைக்கிற..... அவளுக்கும் ....... பொழுது போகணும்ல....”, என்றான் மகளுக்கு ஆதரவாக....

“உன் பொண்ணுக்கு ரொம்ப சப்போர்ட் பண்ணாத...... சரி பேச்ச மாத்தாம... என்ன விசயம்னு சொல்லு......”

“ஒண்ணுமில்ல.. எப்பவும் போல தான் இருக்கேன்.....”, என்றான் அவனின் தாயார் குடித்த டீயை குடித்தபடி.....

“உன் மாமியார், மாமனார பார்த்தவுடனே...... ப்ரைட்டாகிட்டியோ”

“சரி அப்டியே வச்சுக்கோ.....”, என்றவன், இன்னும் சற்று நேரமிருந்தால் அவ்வளவு தான்..... கிண்டி கிழங்கெடுப்பாள்..... என எண்ணியவனாய்

“அம்மா நா டவுன் வர போயிட்டு வரேன்....”, என்றபடி மடியில் இருந்த அண்ணன் மகளை இறக்கி விட்டான்.

“எனக்கு வேற வீடியோ கேம் வாங்கிட்டு வாங்க ரகுப்பா....”

“சரிடா தங்கம்....”, என்றபடி கிளம்பினான்.


வந்திருந்த குறுஞ்செய்தியை பார்த்தவள் மனதில் இன்ப படபடப்பு.

“ஃப்ரீ ஆனவுடன்... மெசேஜ் பண்ணு..... கால் பண்றேன்....”, என அனுப்பியிருந்தான்.

அலுவலகத்திலிருந்து ஹாஸ்டல் வந்தவள், குளித்து இரவு உணவை முடித்துவிட்டு..... அவளவனின் போனுக்காக... காத்திருந்தாள்.

ரகுவின் மெசேஜ் பார்த்தவுடன், இரவு எட்டு மணிக்கு மேல் ஃப்ரீ என டெக்ஸ்ட் செய்திருந்தாள் அவனுக்கு.

‘என்ன பேசுவான்...... எதுவும் கேட்பானா....இல்ல..... ஒன்னும் பிரிய மாட்டீங்குது... சைலண்டா இருந்தவன்.... திடீர்னு..... வயலண்டா அர நாள்ல மாறுனா..... சின்ன என் இதயம் தாங்குமா?.... படபடப்பா .... மனசெல்லாம் என்னவோ மாதிரி இருக்கே...... இத்தன நாளு நல்லா தான் இருந்தேன்.......

இன்னிக்கு எனக்கு என்னாச்சு... மண்ட காயுது...... ஐயா .. ராசா..... சீக்கிரமா கால் பண்ணி...... என்ன விசயமா பேச போறேனு சொல்லிரு முதல்ல...... இல்ல நானு காலி.......’
கால் வந்தவுடன்... சிடுமூஞ்சி காலிங் என திரையில் தோன்றியதை பார்த்தவள், ‘ஐய.... மொதல்ல அவனுக்கு பேரு போனுல மாத்தணும்’ என எண்ணியபடி அட்டெண்ட் செய்தாள்.


“ஆஃபீஸ்ல இருந்து வந்தாச்சா...?”

“ம்... வந்துட்டேன்...”

“என் நம்பர் வச்சுட்டே.... இத்தன நாளு... ஒரு டெக்ஸ்ட் கூட பண்ணலல்ல....”

“அதான்.... இன்னிக்கு பண்ணேன்ல”

“ரொம்ப சீக்கிரமா பண்ணிட்ட..., சரி அத விடு, இன்னும் உனக்கு எத்தன நாள் அங்க வேல இருக்கும்......”

“நாளைக்கு முடியும்..... நாள மறுநாள் நான் வாரேன்.....”

“நாளைக்கு உனக்கு ஒரு சர்ப்பிரைஸ் இருக்கு..... இப்பொ..... சாப்டுட்டு தூங்கு..... நான் வெளியில இருக்கேன்...... முடிஞ்சா வீட்டுக்கு போயிட்டு வாட்ஸ் அப்ல... டெக்ஸ்ட் பண்றேன்.....பை....”, என வைத்துவிட்டான்.

‘நான் ரொம்ப லேட்டா டெக்ஸ்ட் பண்ணத கேக்கவா கால் பண்ண...... போடா...ங்க... என்னோட நம்பரு நீ வச்சிருந்தல்ல... அப்ப நீ இவ்வளவு நாள்ல டெக்ஸ்ட் பண்ணிருக்கலாம்ல......எனக்கு.... .’
என நினைத்தவாறு..... பதினைந்து நிமிடத்திற்கு ஒருமுறை வாட்ஸ் அப்பில் விழித்து, மீண்டும் புலம்பி என அவளது நினைவு முழுவதும் அவனானான்.


சரியாக பத்தரை மணிக்கு அவன் அனுப்பியிருந்ததை பார்த்தவளுக்கு....... ஆச்சர்யம்......
இவர்களின் தலை பொங்கலுக்கு, பிங்க் கலர் காட்டன் சில்க் புடவை, க்ரீன் ப்ளவுஸ் அணிந்து, வீட்டு முற்றத்தில் பொங்கல் பானையில் அரிசி போடும் போது எடுத்த அவளின் புகைப்படம்... அத்தனை அழகாக அவளுக்கே தெரியாமல் அதை எடுத்திருந்தான். அதன் கீழ்...............


எனது வாழ்வின் வசந்தமான பேபி டாலை வரவேற்கிறேன் என அனுப்பியிருந்தான்.

‘பேபி டால்’ என்பது அவனின் மிகச் சிறு வயது அழைப்பு. அவனுக்கு அவளைக்காணும்போது டால் போல இருப்பதால் அப்படி அழைப்பதாக அவன் அத்தையிடம் சொல்லியிருக்கிறான்.

‘அத்த, நம்ம வதனிய பார்த்தா பொம்ம மாதிரி இருக்கால்ல.....’ , அதற்கு அவன் தாய் துர்கா, குழந்தைய பொம்மைனு எல்லாம் சொல்லக்கூடாது எனக்கூற அதை அப்பொழுது ‘பேபி டால்’ என மாற்றிக்கூற ஆரம்பித்தான்...... பிறகு அவள் சற்று வளர்ந்ததும்.... அப்படி அழைத்ததை விட்டுவிட்டான்.
 




Last edited:

SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
ரகு : “ஹாய் ஏஞ்சல்”

வதனி : “என்ன?”

ரகு : “சாப்டாச்சா...”

வதனி : “ம்.... நீங்க”

ரகு : “ஆச்சு....ம்ம்.... என்ன புடிச்சு தான கல்யாணம் பண்ண....”

வதனி : “ம்...”

ரகு : “ம்ம தவிர வேற வார்த்த பேசற ஐடியா இல்லயா?”

வதனி : ‘கடவுளே என்ன சொல்ல’...... “சொல்லுங்க”

ரகு : “நீ தான் சொல்லணும்”

வதனி : “என்ன சொல்ல?”

ரகு : “அப்பத்தா கம்பெல் பண்ணாங்களா?”

வதனி : “இல்ல”

ரகு : “நீ சரினு சொன்னது.... எனக்கு இன்னும் நம்ப முடியல”

வதனி : “ஏன்?”

ரகு : “நீயே யோசி”

வதனி : “நீங்களே சொல்லிருங்க....”

ரகு : “கல்யாணத்துக்கு முன்னாடியும் சரி, அதற்கு அப்புறமும் சரி,.....என்னைய நீ கண்டுக்கவே இல்லல.... அதான்...”

வதனி : “மாமா பையன்னு மட்டும் யோசிச்ச எங்கிட்ட...அல்ரெடி மாரேஜ் வேற பொண்ணோட ஃபிக்ஸ் ஆகியிருந்த உங்கள கல்யாணம் பண்ணிக்கிறியானு கேட்டா..... நான் என்ன செய்வேன்.?”

ரகு : “அதுக்காக........ ரெண்டரை வருஷமா?”

வதனி : “இனி இவர் தான் உன் ஹஸ்பெண்ட்னு சொன்னவுடனே, ஏத்துக்கற மாதிரி லைஃப் ஸ்டைல்ல .... இப்போ நாம யாரும் வாழல.... அதுக்கு தான் அம்மாச்சிகிட்ட டைம் கேட்டேன்.... ஆனா அது இவ்வளவு நாளாகும்னு அப்ப எனக்கு தெரியாது.....”

ரகு : “அடுத்து என்ன செய்யறதா உத்தேசம்?”

வதனி : “ஊருக்கு வந்து, மாமாகிட்ட பேசிட்டு அப்றமா முடிவு பண்ணலாம்னு நினச்சேன்”

ரகு : “அப்பவும் நான் உங்கண்ணுக்கு தெரியல?”

வதனி : “ஐயோ, அப்டில்ல.... பெரியவங்க கிட்ட கேட்டுட்டு தான் எதுவும் செய்யணும்..... நீயா எதுவும் டிசைட் பண்ணக்கூடாதுன்னு அம்மாதான் சொன்னாங்க.... அதனாலதான்....”

ரகு : “சரி வேற என்ன சொன்னாங்க?”

வதனி : “அவங்க நிறய சொல்லிட்டே இருப்பாங்க.... நீங்க வேற எத கேக்குறீங்க...?”

ரகு : “உனக்குன்னு யோசனை எதுவும் இல்லயா?”

வதனி : “இருக்கு... ”

ரகு : “அத சொல்லு”

வதனி : “CA முடிச்சிட்டு.... ஜென்ரல் ப்ராக்டிஸ், டேக்ஸ் கம்ப்ளையன்ஸ், அட்வைஸ் அன் ப்ளானிங்க்னு...... ஐடியா இருக்குது..... ”

ரகு : “குட்... இத தான் கேட்டேன்....”
“வேற....”


வதனி : “அவ்வளவு தான்”

ரகு : “சரி... ஒரு செல்ஃபி அனுப்பு”

வதனி : ‘இது என்னடா சோதனை’ என யோசித்தவள்

ஹாஃப் ஸ்லீவ் லைட் சாண்டல் பேஷ் யெல்லோவ் பிங்க் ஃப்ளார் டிசைன் நைட்டியில் தலை முடியை தூக்கி போட்ட கொண்டையுடன், உறக்கம் வரவா எனக் கேட்டு விழியின் வாசலில் நிற்க, தனது ஹாஃப் சைஸ் செல்ஃபியை எடுத்து அனுப்பினாள்.

ரகு : “தூக்கம் வந்துருச்சா? சரி நீ போயி தூங்கு...”

வதனி : ‘இத எங்கிட்ட கேட்ருந்தா..... நானே சொல்லியிருப்பேனே .... ... அதுக்கு எதுக்குடா செல்ஃபி’ “சரி”

ரகு : “குட் நைட்”

வதனி : ‘குட் நைட்”

தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
செம்பூ மஞ்சம் விரித்தாலும்
பன்னீரைத் தெளித்தாலும்
ஆனந்தம் எனக்கேது
அன்பே நீ இல்லாது


என்ற பாடலின் வீடியோவை அவளுக்கு அனுப்பிவிட்டு உறங்க முயற்சி செய்தான்......... ரகுநந்தன்.

அவனனுப்பிய வீடியோவை கண்ணில் உறக்கத்துடன் பார்த்தவளின்....., கண்களை விட்டு தூரம் போனது உறக்கம்.

சரியாக உறங்காததால் உண்டான அயர்வு உடலில் தெரிந்தாலும், அலுவலகத்திற்கு கிளம்பிவிட்டாள் வதனி.

ரகுநந்தன், காலையில் இறால் பண்ணை, நர்சரி பிறகு மில் என அவசர அவசரமாக வேலைகளை முடித்துவிட்டு, தனது தந்தையிடம் வந்தவன்,

“அப்பா அரியலூர்ல வேல இருக்கு, அத முடிச்சுட்டு அப்டியே வரும்போது வதனிய கூட்டிட்டு வந்துறேன்.....”

“சரிப்பா... புது கம்பெனி எப்டி போகுது?”

“சிக்ஸ் மந்த்ஸ்ல ஒன்னும் தெரியாதுப்பா..... ஒன் இயர் ஆனா தாம்பா சொல்லா முடியும்.....”

“ரொம்ப அலைய வேணாம்.... இங்க நான் பாத்துக்கறேன்.... நீ அங்க வேலய முடிச்சுட்டு மெதுவா வா.... ஒன்னும் அவசரமில்ல..... பாத்து போயிட்டு வா...... அங்க போயிட்டு போன் பண்ணு”

தனது தாயிடமும், வதனியின் பெற்றோரிடமும் கூறிவிட்டு மதிய உணவிற்குப் பின் வீட்டிலிருந்து கிளம்பினான்.

மதுரையில் இருந்த வேலையை முடித்துவிட்டு, திருச்சி வரும்போது...... நேரம்இரவைத்
தொட்டிருந்தது.


ஆறரை மணிக்கு அலுவலகத்தில் இருந்து வதனி கிளம்புவதற்குள் அவளின் அலுவலகம் வந்திருந்தான். அங்கு வந்தவன் அவளின் வருகைக்காக அவனது BMW வில் காத்திருந்தான்.

அவளின் மொபைல் எண்ணுக்கு மெசேஜ் செய்தான்.

“வயிட்டிங் அட் யுவர் ஆஃபீஸ் என்ட்ரென்ஸ்”

பணிகளை முடித்துக்கொண்டு கிளம்பியவள் தனது பொருட்களுடன் வெளிவரும்போது சைலண்ட் மோடில் இருந்த மொபைலை நார்மல் மோடுக்கு மாற்றினாள்.


தன்னவனிடமிருந்து வந்த மெசேஜை ஆவலாக ஒபன் செய்தாள்.....

ஒரு கனம் நின்றவள்..... வாட்டர்கேனில் இருந்த நீரை எடுத்து குடித்தாள்....., ‘இன்ப அதிர்ச்சினு தெரியுமா? ....... என் சின்ன இதயத்துக்கு.... சர்ப்பிரைஸ்னு சொல்லி.... என்ன சாகடிச்சிருவான் போலயே......’ தன்னை நிதானப்படுத்திக் கொண்டு அலுவலகத்தை விட்டு வெளியே வந்தாள்.

பர்பிள் நிற சந்தேரி எம்பிராய்டரி போட்ட சல்வாரில், அவனது BMWவை நோக்கி வந்து கொண்டிருந்த, தன்னவளை ஆசைதீர ஆவலோடு பார்த்திருந்தான்......
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சரோஜினி டியர்
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
என்னப்பா சந்திரவதனி
இறந்திடுவாளா?
ரகுவிடமிருந்து இவளை பிரிக்கிறீங்களே?
எனக்கு இப்பவே ஒரே
அழுகையாக வருது, சரோ டியர்
 




Last edited:

SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
என்னப்பா சந்திரவதனி இறந்திடுவாளா?
ரகுவிடமிருந்து இவளை பிரிக்கிறீங்களே?
எனக்கு இப்பவே ஒரே
அழுகையாக வருது, சரோ டியர்
Illa dear
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top