• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நிலவைக் கொண்டு வா - 13

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
ஹாய் ஃப்ரண்ட்ஸ்:love::love::love::love::love::love::love::love:,

அனைவருக்கும் வணக்கம்

கடந்த பதிவுகளுக்கு, லைக்ஸ், கமெண்ட்ஸ், சைலண்ட் ரீடிங்க் மூலம் ஊக்கப்படுத்திய அனைத்து உள்ளங்களுக்கும் எனது நன்றியைத் தெரிவிப்பதில் மகிழ்கிறேன்.

அடுத்த பதிவுடன் வந்துவிட்டேன். படித்துவிட்டு உங்களின் கருத்துகளைப் பதிவு செய்து என்னை உற்சாகப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

வாருங்கள்..........

நிலவைக் கொண்டு வா - 13

3514.jpg
 
SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
நிலவைக் கொண்டு வா – 13

லஜ்ஜாவதியே என்ன அசத்துற ரதியே

லஜ்ஜாவதியே என்ன அசத்துற ரதியே
ராட்சசியோ தேவதையோ ரெண்டும் சேர்ந்த பெண்ணோ
அடை மழையோ அனல் வெயிலோ
ரெண்டும் சேர்ந்த கண்ணோ
தொட்டவுடன் ஓடுறியே..... தொட்டவுடன் ஓடுறியே.....
ஏ... தொட்டாச்சிணுங்கி பெண்தானோ...
தொட்டாச்சிணுங்கி பெண்தானோ

அழகினாலே அடிமையாக்கும் ராஜ ராஜ ராணி

“என்ன அம்மாச்சி இது பிடிவாதம்”

“இது பிடிவாதம் இல்ல.... பிச்ச..... என்ன பாக்குற....”

“இல்ல அந்த பொண்ண புடிச்சு, கல்யாணம் வர வந்துட்டு, பொண்ணு மாறுனா..... அத எப்டி மச்சானால ஏத்துக்க முடியும்...?”

“ரகுட்ட, பொண்ணுக்கு முடியலனு சொல்லல..... ஆனா பொண்ணு அவ இல்ல... வேற பொண்ணு பாத்து..... அதே தேதில கல்யாணம்னு சொல்லிட்டேன்....”

“அதுக்கு அவங்க ஒன்னும் சொல்லலயா?”

“நீங்க பாத்து எது பண்ணாலும் என்னோட நல்லதுக்காகத்தான் இருக்கும்னு சொல்லிட்டான், எம்மேல அவ்வளவு நம்பிக்கை.....”, என்றார் சேலைத் தலைப்பில் கண்களைத் துடைத்தபடி...

‘அநியாயத்துக்கு நீ நல்லவனா இருக்கறதால, ஐ.நாவுக்கு அடுத்த செக்ரெட்டரி நீ தான்....’

“அவங்களுக்கு என்னக் கண்டாலே பிடிக்காது, சிடு சிடுன்னு பேசுவாங்க.....”

“அது உன் மேல இருக்கிற அக்கறையில.... எதாவது சொல்லிருப்பான்.... சிரிச்சுட்டே உன் கிட்ட சொன்னா என்னாகும்னு அவனுக்கு தெரிஞ்சிருக்கும்.....”, அந்த இக்கட்டான நிலையிலும் அவர் இதழில் சிரிப்பு மின்னல் போல வந்து, மறைந்திருந்தது.

“அப்ப எந்த பொண்ணுனாலும் சரினு சொல்லிட்டா, வேற பொண்ணு பாத்திருக்கலாம்ல.....?”

“வெளியில போயி பொண்ணு கேக்க முடியாத நில இப்ப ......, கேட்டா... பாத்த பொண்ணுக்கு என்னாச்சுனு கேள்வி வரும்.....

ஏன்னா.... ரெண்டாயிரத்து ஐநூரு பத்திரிக்கை அடிச்சு, சாதி ஜனம் எல்லாருக்கும் குடுத்தாச்சு.....

“கேள்வினு வந்தா என்ன? சொல்லிட்டு போக உண்மைய.....”

“அந்த புள்ள முடியாம இருக்கு இப்ப....., ஆனா அந்த ஆண்டவன் நினச்சா உடம்பு நல்லாகி, வேற வாழ்க்கையக் கூட வீட்ல அமச்சுக் குடுத்துருவாக....

நாம அவசரப்பட்டு வெளியில ஏதாவது சொல்லப்போக..... அது பின்னாடி தப்பா போயிரும்.... பொண்ணு பத்தி தப்பா இருந்தாலும், புறம் பேசக்கூடாது.... தாயி.....

பையனுக்கும் பிரச்சனைதான்...... எல்லார்கிட்டயும் போயி நாம எடுத்துச் சொல்ல முடியாது..... நரம்பில்லா நாக்கு, கண்டத விட்டுட்டு காணாததெல்லாம் கற்பனை பண்ணி பேசும் .......இவன் ராசி தான் பொண்ணுக்கு அப்டி ஆகிருச்சுனு கூட பேசுவாங்க... ”

“அம்மாச்சி, எனக்கும் அவங்களுக்கும் ஏஜ் டிஃபரன்ஸே அதிகமா இருக்கே?.... இப்பல்லாம் ஒரே ஏஜ்ல.... இல்லனா.... ஒன் ஆர் டூ இயர்ஸ் டிஃபரன்ஸ்ல தான மேரேஜ் பண்றாங்க”

“எட்டு வருஷமெல்லாம் பெரிய வித்யாசமில்ல சந்திரா, எனக்கும் உங்க தாத்தாவுக்கும் பதினஞ்சு வருஷ வித்தியாசம்....ம்ம்.... என்ன கெட்டு போயிட்டோம்...

இன்னொன்னு, பொண்ணுங்களுக்கு ஒரு குழந்த பிறந்துட்டாலே ..... வயச மீறி தெரிவோம்... அத .... புள்ள பெத்து கிழவி ஆகிட்டானு கிராமங்கள்ள கூட சொல்றதுண்டு...... ஆனா அம்பது வயசிலயும் ஆம்பளைங்க நல்லா தான் இருப்பாங்க... வயசு தெரியாது...

பதினெட்டு வயசு பொண்ணுக்கு இருக்குற புரிதல், முதிர்ச்சி இருவத்தியாறு வயசுக்கு மேல தான் பசங்களுக்கு வரும், அதனால வயச பெரிய விசயமா எடுக்கக் கூடாது.

என் பேரன் உன்ன நல்லா வச்சுக்குவான்... பொறுப்பா பாத்துக்குவான்..... நான் கேக்கனும்னு நினச்சத கேட்டுட்டேன்.

அவன நீ கல்யாணம் செய்துக்கிட்டா, உன் படிப்பு எல்லாம் எதுவும் கெடாது, நீ படிச்சு முடிச்சிட்டு மெதுவா வா..... சொல்ல வேண்டியத சொல்லிட்டேன்..... சரினு சொல்றதும், மறுக்கறதும்... உன் இஷ்டம் தான்.....”

“எனக்கு கோர்ஸ் முடிய இன்னும் ரெண்டு வருஷம் ஆகும்....”

“ரகுவும் ரெண்டு வருஷம் போகட்டும்னு தான் கல்யாணத்துக்கு பாக்குமுன்ன எங்கிட்ட சொன்னான்....

நான் தான் எனக்கு வயசாகுது, இந்த ஆத்தா சாகுறதுக்குள்ள உன் கல்யாணத்த பாக்கனும்னு..... அவன நச்சரிச்சேன்..... அப்புறம் வெளிநாடு போகுறதுக்கு முன்ன இங்க வந்தவன்.... பாக்குறதுனா பாருங்கனு சொல்லிட்டு போனான்....”, என பழையதை நினைத்தபடி பேசினார்.

“நாளைக்கு சொல்லவா அம்மாச்சி?”

“ம்.... இன்னிக்கு நல்லா யோசி....... நாளைக்கு காலைல, உங்க அப்பா, அம்மா, உன் மாமா, அத்த, ரகு எல்லாரையும் வச்சிட்டு நான் கேக்கும்போது உன் விருப்பத்த சொல்லு.....போ.... போயி படுத்து தூங்கு....”

‘வந்த தூக்கத்த..... இந்த அம்மாச்சி.... வார்த்தையாலயே விரட்டிட்டு .... போயி படுத்து தூங்காம் .... கிழவிக்கு.... இது கொஞ்சம் ஓவரா தெரியல...’, என நினைத்தவாறு அங்கிருந்து கிளம்பினாள்.
 
SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
நடந்தது என்ன? பாணியில் ரகுநந்தனிடம் அன்றைய நிகழ்வுகளைப் பகிர்ந்தவள், அவன் முகம் பார்த்திருந்தாள்.

முந்தைய தினம் வரை எந்த முடிவுக்கும் வராதிருந்த வதனி, அன்றைய தினம் வந்து கூறிய சம்மதம், அவன் மட்டும் அறியாதது அல்ல, அங்கிருந்த யாரும் அறியாதது என்பதை அறிந்தவன், அப்பத்தாவின் சாதூர்யத்தை எண்ணி ஆச்சரியப்பட்டுப் போனான்.

அன்று தோன்றாத பல எண்ணங்களும், நினைவுகளும் வதனியின் பகிர்வால் தோன்றுவதை எண்ணியபடி அமர்ந்திருந்தான்.

பூமி அதன் சுழற்சி வேகத்தில் ஓடி வந்ததால், சூரியன் மறைந்திருக்க, தற்காலிக ஒளி மறைந்து, பிரபஞ்சத்தின் நிரந்தர இருள் இரவைப் பிரசவித்திருந்தது.

இரவு உணவிற்குபின், லேப்பில் வேலை செய்திருந்தவன் அதை ஷட்டவுன் செய்து விட்டு, ஹாலில் அமர்ந்து சிறிது நேரம் டிவி பார்த்திருந்தான்.

அதற்குள், இரவு வேலைகளை முடித்துக் கொண்டு... குளித்து விட்டு, ரெட் ஃப்ளோரல் டைப் பிங்க் நிற காட்டன் மேக்ஸியில் ஹாலுக்கு வந்த வதனி ஹாலில் இருந்த அவள் சார்ஜரை எடுக்க வர,

“ஏஞ்சலுக்கு தூக்கம் வந்துருச்சா?”

“இல்ல..... தூக்கம் வரல...... ஆனா படுக்கப் போறேன்....”, என்றபடி ஹாலில் இருந்த அவளின் சார்ஜரை எடுத்தபடி அறைக்குள் செல்ல,

டிவி, ஹாலில் உள்ள லைட் எல்லாம் அணைத்துவிட்டு..... அவளின் பின்னே அறைக்குச் சென்றவன்..... அவளது பேகில் சார்ஜரை வைத்துக் கொண்டிருந்தவளின் பின்னிருந்தபடி அவளை அணைத்தான்.

சார்ஜரை உரிய இடத்தில் அவள் வைக்கும் வரை அணைத்தவாறு காத்திருந்தவன், அவளின் கழுத்தில் இதழ் பதித்தான். பெண்ணவள், எதிர்பாரா தன்னவனின் தாக்குதலால் உடல் சிலிர்த்தாள்.

“ஏஞ்சல், இந்த அத்தானைக் கண்டுக்கவே மாட்டிங்கற....”

“கண்டுக்கலயா....? பொய்ய பொருந்தச் சொல்லணும்”

“நான் ஏன் பொய் சொல்ல போறேன்....? உண்மையத்தான் சொன்னேன்”

“சரி சொல்லுங்க..... என்ன கண்டுக்க மாட்டீங்கறேன்?”

“அன்பா ஒரு அணைப்பு, ஆசையா ஒரு பார்வை, மோகமா ஒரு முத்தம்....ம்ஹூம்.... எதுவும் இல்ல.... பாலைவனம் மாதிரி வறண்டு போயிருக்கேன் டீ”

“இது தான் உங்க டிக்சனரில கண்டுக்கறதா?”

“ஆமா”

“அதெல்லாம் என்னால முடியாது.....”

“ஏன் முடியாது?... என்ன பிடிக்கலயா..... உனக்கு?”

“பிடிக்காம யாரும் கல்யாணம் பண்ணிக்குவாங்களா?....

“எப்ப இருந்துடி என்ன உனக்கு பிடிக்கும்”

“ம்....”, யோசிப்பது போல பாவனை செய்தவள், “உங்கள பாத்துக்க சொல்லி என்னை விட்டுட்டு கல்யாணத்துக்கு போனாங்கல்ல அம்மா, அப்ப இருந்து ....

கீர்த்தி அக்கா, இன்னும் நிறய பேரு உங்க பின்னாடி திரிஞ்சும், நீங்க கண்டுக்கலயா அதான் கொஞ்சம் பிடிச்சிருந்தது”, என சிரித்தபடி பேசியவளைத் தூக்கிச் சென்று படுக்கையில் விட்டவன், அவளை அவனுக்குள் இருக்குமாறு அணைத்தவாறு படுக்க,

இந்திய ரயில் நிலையங்களில் புகைவண்டி கடக்கும் போது நடைதளத்தில் உண்டாகும் அதிர்வு, அவளின் மனதில்.

“அப்ப ஏண்டி எங்கிட்ட பேசவே மாட்ட”

“ஆரம்பத்துல.... சிடுசிடுன்னு பேசறதால உங்கள பாத்தவுடனே ரூமுக்குள்ள போயிருவேன்....., பயமெல்லாம் போனதுக்கப்புறம் உங்கள ஃபிளாட்லயே காணோம்..

அம்மாட்ட கேட்டேன்.... நீங்க ஃபாரின் போயிட்டதா சொன்னாங்க, அப்றம் எங்கிட்டு வந்து உங்ககூட பேச....”

“அதான் என் மொபைல் நம்பர் தந்தேனடி”

“கூச்சமா இருந்தது அதான்.....பேசல.....”

“எங்கிட்ட எதுக்கு கூச்சம்?”

“தெரியல, ஆனா உங்ககிட்ட மட்டும் தான் அப்டி இருக்கு இன்னும்.... எதுக்குனு கேட்டா என்ன சொல்ல நான்?

அப்பறம் உங்களுக்கு கல்யாணம்னு அம்மா சொன்னாங்க... அப்போ நீங்க யாரையும் மனசுல யோசிக்காததால தான் அவங்கள மேரேஜ் பண்ணுறீங்கனு நினச்சுகிட்டேன்...”

“அப்பத்தா ஃபோர்ஸ் பண்ணாங்க.... சரி பாருங்கனு சொல்லிட்டு ஃபாரின் போயிட்டேன், ஆனா அதுக்குள்ள எத்தன ஜாதகங்கிற?”

“ம்ம்.... நீங்க நம்ம கல்யாணத்துக்கப்புறமா பேசுவீங்கனு நினச்சேன், அப்புறம் அந்த அக்காவை மறக்க முடியாம பேச மாட்டீங்கறீங்களோன்னு, நானும் பேசல”

“படிக்கற பொண்ண டைவர்ட் பண்ண வேணாம்னும் யோசிச்சேன் முதல்ல... படிப்பு முடிஞ்சு ஆறு மாசமா எந்த ரியாக்சனும் உங்கிட்ட இல்ல.

உன்னால இன்னும் என்னை ஏத்துக்க முடியாம கஷ்டப்படுறியோன்னு டிஸ்டர்ப் பண்ணல....

அந்த பொண்ண போட்டோல ஒரு தடவ பாத்திருக்கேன், அவ்வளவு தான்”

“அம்மா, கல்யாணத்துக்கப்புறம் அடிக்கடி சொல்லுவாங்க.... தம்பிகிட்ட பேசுனு.... நான் ரொம்ப நாளா தயங்கிட்டே இருந்தேன்..... இந்த தடவ தான் டெக்ஸ்ட் பண்ணிட்டேன்”

என்றவாறு பழங்கதை பேசியபடி இருவரும் உறக்கத்தை தழுவியிருந்தனர்.

அதிகாலையில் எழுந்த ரகு, அருகில் உறங்கும் வதனியைக் கண்டான்.

எழுப்ப மனமின்றி, குளித்து, வேண்டிய அனைத்தையும் அவனுடைய BMW வில் எடுத்து வைத்துவிட்டு வந்த பிறகு மனைவியை எழுப்பினான்.

“ஏஞ்சல்..... எந்திரிக்கிறியா?”

“ம்...ம்ம்ம்....”, என்றவள் எழுவதாகத் தெரியவில்லை.

“எங்கத்தை போன் பண்றாங்க டீ”, என சத்தமாகக் கூற

“யாரு இந்த நேரத்துல போன் பண்றது? என கண்ணைத் திறந்து கேட்டாள்.

அவன் சிரிப்பு கண்ணில் பட, தான் எழ அவன் அவ்வாறு சொல்லியிருக்கிறான் என எண்ணியவளாய், ஃபுல் கம்ஸ் ஃபோர்மல் நேவி புளூ காட்டன் ஃபிட் ஷர்ட், ரெகுலர் ஃபிட் லைட்புளூ டெனிம் ஜீன்ஸ்ஸில் கிளம்பி நின்றிருந்தவனை பார்த்தவாறு படுக்கையில் இருந்து எழுந்தாள்.

அவளின் பார்வையைக் கண்டவன்,

“காலைலயே அப்டி பார்க்காதடி”

“கண்டுக்கவே மாட்டீங்கறனு நைட் முழுக்க எங்கிட்ட புலம்பிட்டு, இப்பொ இப்டி சொன்னா...... என்ன அர்த்தம்?”

“ம்..... இன்னும் நல்லா பாருன்னு அர்த்தமாம்”

“நேரமாகுது.... நீங்க ஹாலுக்கு போங்க... நான் கிளம்பி வாரேன்”

“நீ பிரஸ் பண்ணி, ஃபேஸ் வாஷ் மட்டும் பண்ணிட்டு வரியா?”

“நீங்க மட்டும் குளிச்சுட்டீங்க...., நானும் குளிச்சிட்டு தான் வருவேன்”

“நீ வண்டில தூங்கதான போற”

“ம்... குளிச்சா தூங்கக் கூடாதுன்னா இருக்கு” , என்றவள் குளியலறைக்குள் செல்ல,

சிரித்தபடி, அவள் கிளம்புவதற்குள் வீட்டின் ஜன்னல், கதவுகளைச் சரி பார்த்து பூட்டினான்.

பதினைந்து நிமிடத்தில், மெரூன் மற்றும் பெய்ஜ் எம்பிராய்டரி காட்டன் ஜாக்குவாடு குர்தியில் கிளம்பி வந்தவளைக் கண்டவன், அவள் இதழில் சிறு கதை எழுதிய பின், அவளை அழைத்துக் கொண்டு கிளம்பினான்.
 
Last edited:

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,985
Location
madurai
நரம்பில்லா நாக்கு .. கண்டத விட்டுட்டு காணாததா பேசும்... எனக்கு பிடித்த வரிகள் சரோ..... அருமை:love:(y)
 
Jovi

மண்டலாதிபதி
Joined
Apr 4, 2018
Messages
156
Reaction score
259
Location
Uk

Nice episode
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top