• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நிலவைக் கொண்டு வா - 5

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
அனைவருக்கும் வணக்கம்



கடந்த நான்கு பதிவுகளுக்கும், லைக்ஸ், கமெண்ட்ஸ், சைலண்ட் ரீடிங்க் மூலம் ஊக்கப்படுத்திய அனைத்து உள்ளங்களுக்கும் எனது நன்றியைத் தெரிவிப்பதில் மகிழ்கிறேன்.



ஐந்தாவது பதிவுடன் வந்துவிட்டேன். படித்துவிட்டு உங்களின் கருத்துகளைப் பதிவு செய்து என்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.



வாருங்கள்..........



நிலவைக் கொண்டு வா - 5
3514.jpg

 




SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
நிலவைக் கொண்டு வா – 5



தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
செம்பூ மஞ்சம் விரித்தாலும்
பன்னீரைத் தெளித்தாலும்
ஆனந்தம் எனக்கேது
அன்பே நீ இல்லாது



தாயிடம் பேசிய வதனி, ஊருக்கு செல்வதை எண்ணி மகிழ்ந்திருந்தாலும், உள்ளுக்குள் தன் எதிர்காலத்தை நினைத்து நல்ல முடிவுக்கு வர முடியாமல் இருந்தாள்.

சார்ட்டர்டு அக்கவுண்ட் படிப்பின் அங்கமான, ட்ரைனீயாக ஆடிட்டர் வசம் பணியாற்றி சான்றிதழ் பெற, கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாக திருச்சியில் உள்ள விடுதியில் தங்கி இருந்தாள்.

பிறகு ஃபைனல் எக்சாம் வரை அங்கு தங்கியிருந்து படித்தாள். எல்லாம் முடிந்தபின், தன் தாயாரை அழைத்துப் பேசியிருந்தாள்.

வேண்டிய திங்க்ஸ் அனைத்தும் பேக் செய்யப்பட்டு இருந்தது. அன்று விடுதி வார்டனிடம் டின்னர் முடிந்தபின் பேச எண்ணியிருந்தாள்.

அப்போது அவளை போனில் அழைத்த ஆடிட்டர்,

“ஹலோ சந்திரா, நான் ஆடிட்டர் பேசறேன்மா”

“சொல்லுங்க சார்”

“நீ இன்னும் திருச்சில தானமா இருக்க?”

‘நீங்க விட்டாலும், என்ன .... திருச்சி விடமாட்டிங்குதே’

“ஆமா சார்” ‘இப்பொ இத எதுக்கு இவரு ஆஸ்கிங்கு...... என்ன கன்னி வெடியா...... அணுகுண்டானு தெரியலயே,....ம்ம்ம்ம்ம் எதுனாலும் சமாளிப்போம்ல’

“நான் ரெண்டு நாள் கான்ஃபரன்ஸ் விசயமா சென்னை போக வேண்டி இருக்குமா, ஆடிட்டர் கதிர் டூ டேஸ் பாத்துக்கறதா சொல்லியிருந்தாருமா..... அன்எக்ஸ்பெக்டடா இப்போ அவங்க வீட்ல இருந்து ஃபாதர்க்கு முடியலனு கால் வந்தது......, சோ கிளம்ப சொல்லிட்டேன்...... நீங்க ஒரு டூ டேஸ் பாத்துக்கிட்டா நல்லாயிருக்கும்........ உங்களால முடியுமாம்மா.....?”

“சரி சார்” ‘உங்களுக்கெல்லாம் நா ஊருக்கு போறத யாரு யா சொன்னது...... பிளான் பண்ணி பண்றீங்களே, இப்டி........

வேற மாட்டேனு சொல்லவும் முடியாதே.............’

“அப்பொ காலைல ஆஃபீஸ் வந்துருமா...... எதாவது டவுட்டுனா கால் பண்ணுமா....... வைக்குறேன்”

‘இந்த ரெண்டு நாள் உங்க ஆஃபீஸுக்கு லீவு விடக்கூடாதா......’

“ஓகே சார்”, என போனை வைத்தவள் யோசிக்க ஆரம்பித்தாள்.

‘இப்பொ கீத் டார்லிங்ட ஓபன் பண்ணா ............... அவ்ளோதான்....... சரி ..... விடிஞ்சதுக்கு அப்றமா சொல்லிக்குவோம்.....

இந்த கீத்........... அத்தை, மாமாக்கிட்டயும் பேசிருப்பாங்க......

அந்த சிடுமூஞ்சிக்கு.... நாம ஊருக்கு வரது தெரிஞ்சிருக்குமா?

தெரிஞ்சா மட்டும் என்ன பண்ணும்?

போனவுடனே ..... வானு வாயால கூட வரவேற்க தெரியாத ஒரு மனுசன்..... தலய மேலருந்து கீழ அசச்சா.... வா வாம்..... இவன்ங்களும் இவங்க லாங்குவேஜும்’ , என பலவாறு எண்ணியபடி படுக்கச் சென்றாள்.

நல்ல உறக்கம் இல்லை. இருந்தாலும் விடியல் வரை படுக்கையில் புரண்டபடி இருந்தாள்.

அவளின் தந்தை, கருணாகரன் திருவாரூரில் உள்ள சென்ட்ரல் யுனிவர்சிட்டி ஆஃப் தமிழ்நாடுவில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

தாய், கீதாஞ்சலி தஞ்சாவூரிலுள்ள ஒரு தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியில் இருக்கிறார்.

இவள் அழைத்துப் பேசியதால், மகளை தனியாக அனுப்ப விரும்பாத தம்பதியர் இருவரும் விடுப்பு எடுத்துக்கொண்டு அவளுடன் வந்து ஒரு வாரம் தங்கி இருந்துவிட்டு வருவதாக பிளான்.

காலையில் எழுந்தவுடன் முதலில் தாயிடம் பேசினாள். அவர்கள் சற்று நேரத்தில் திருச்சி வந்து விடுவதாகவும், கிளம்பி இருக்குமாறும் கூறிவிட்டு வைத்து விட்டார்.

அவர்கள் இருவரும் திருவாரூரில் இருந்து கிளம்பி வரும்போது திருச்சியில் அவளை பிக் அப் செய்து கொள்வதாக ஏற்பாடு.

விடுதிக்கு வந்தவர்களிடம் விசயத்தைக் கூற,

முடிவில், அவர்கள் இருவரும் கொஞ்சம் லக்கேஜ்ஜுடன் தற்போது ஊருக்கு செல்வதாகவும், ரெண்டு நாட்களில் அவளை வருமாறும் கூறிவிட்டு கிளம்பினார்கள்.

போகும்போது வழக்கம்போல் அவள் தாய், “வதனி தம்பிக்கு போன்ல பேசிறு” என்றவாறு கிளம்பினார்.

‘ஆமா.... தும்பி கிட்ட பேசிட்டாலும்.......’

கடந்த இரண்டரை ஆண்டுகளாக அவர் கூறுவது தான், ஆனால் இன்று ஏனோ அலட்சியப்படுத்த அவளால் இயலவில்லை.

மொபைலை எடுத்து வெகு நேர யோசனைக்குப் பின் வாட்ஸ்ஆப்பில்.... சிடுமூஞ்சி என தன்னால் சேமிக்கப்பட்டு இருந்த எண்ணை எடுத்தபோது ......

அந்த எண்ணை அவளுக்கு அவன் கொடுத்த தினம் மனதில் ஓடியது.

அப்பொழுது சென்னை, இண்டியன் மாரிடைம் யுடிவரிசிட்டியில் கருணாகரன் பணியாற்றிய நேரம். அவளால் சிடுமூஞ்சி என அழைக்கப்படுபவனும், இவர்களது குடும்பமும் ஒரே அப்பார்ட்மெண்ட்டில் மூன்றாவது மாடியில், எதிரெதிர் பிளாட்டுகளில் வசித்து வந்த சமயம்.

சிடுமூஞ்சி, பெங்களூரிவில் சில ஆண்டுகள் பணிபுரிந்துவிட்டு, சென்னையில் புதியதாக மென்பொருள் நிறுவனம் ஒன்றினைத் தொடங்கி திறம்பட நடத்தி வந்தான்.

அப்போது இவள் இன்ஸ்டிடியூட் ஆஃப் சார்ட்டர்டு அக்கவுண்ட்டண்ட்டில் படித்து கொண்டிருந்த சமயம்.

பெற்றோருடன், அவனது தம்பியும் (‘அவன் இருந்தால் இருவருக்குமிடையே நடக்கும் wwf மாட்ச்சிற்கு கண்டிப்பா அம்பையர் வேணும்’), புதுக்கோட்டையில் நடக்க இருந்த தந்தை வழி உறவு திருமணத்திற்கு செல்ல வேண்டிய நிர்பந்தம். வதனிக்கு விடுப்பு எடுக்க முடியாத சூழல்.

அப்போது சிடுமூஞ்சியிடம் அவளை பார்த்துக்கொள்ளுமாறு கூறிவிட்டு சென்று விட்டனர்.

மாலையில் வீடு திரும்பிய வதனி, காஃபீ மேக்கரில் இருந்து காஃபீயை எடுத்து குடித்து விட்டு கேசுவல் உடையில் அப்பார்ட்மெண்ட் வாண்டுகளுடன் வஞ்சனை இல்லாமல் விளையாடி.... களைத்து...... அவள் பிளாட்டிற்கு வந்தாள்.

இரண்டு பிளாட் தள்ளி குடியிருக்கும் கீர்த்தனா, அவளிடம் சில நாட்களாக வைத்துள்ள கோரிக்கை, சிடுமூஞ்சியின் காண்டாக்ட் நம்பர் அல்லது வாட்ஸ் அப் நம்பர் வேண்டுமென்பதே அது.
 




Last edited:

SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
‘எதனால் இந்த கீர்த்தனாவிற்கு அவனை பிடித்ததோ.... அவனும் அவன் ரூல்ஸ்ஸும்......

அங்க ஏன் நிக்கிற..... இப்டி ஏன் ட்ரெஸ் பண்ணிருக்க..... இப்டி ஏன் கத்தி சிரிக்கிற..... எப்பொ பாரு விளையாட்டு அதுவும் சின்ன வாண்டுகளோட..... என....

ஒரு லிஸ்டே வச்சு ஒவ்வொரு முறை பார்க்கும் போதெல்லாம் எதாவது குறை சொன்னால்..... யாருக்குத்தான் பிடிக்கும்.......

ஆனா இதெல்லாம் தெரியாம வாண்டடா வந்து ஒரு ஆளு அவங்கிட்ட மாட்ட போகுது..... கீர்த்து..... நீ நினச்சது உன் வாழ்க்கைல நடந்தா..... நடாம விட்ட நாத்தா மாறிருவே’

வதனிக்கும், சிடுமூஞ்சிக்கும் எப்போதும் ஆகாது. ஆகையால், அவன் இருக்கும் இடத்தில் கூட அமரமாட்டாள்.

அப்படிப்பட்ட பெண்ணிடம் அவனது காண்டாக்ட் நம்பரைக் கேட்டாள், பாவம் வதனியும் என்ன செய்வாள்.

“வதனி, இன்னிக்காவது காண்டாக்ட் நம்பர் வாங்கித்தா.....”

‘இன்னிக்கு வசமா மாட்டிட்டியே வதனி.....’

“கீர்த்தி அக்கா, நீங்க பேசாம எங்க கீத்திட்ட கேட்ருக்கலாம்ல....”

‘எனக்கு வேற என்ன விளையாட சொன்னாலும் விளையாடுவேன், எவ்வளவு படிக்கணும்னாலும் படிப்பேன்..... இதல்லாம் ஒரு வேலயா? .....ச்சே’

“அடிப்பாவி............. வேற வினையே வேணாம்.......”

“உங்க அம்மா எப்பொ வருவாங்க..?”

‘ம்ம்ம்ம் ..... அவுங்க இங்க வரும்போது வருவாங்க’

“நாளை மறுநாள்.... ஏன் கேக்குறீங்க?”

“அதுக்குல்ல அவங்க நம்பர எனக்கு வாங்கித் தர.....”

“எங்க அம்மா நம்பராக்கா?”

“ஏய்.... என்ன நக்கலா? என் மிஸ்டர் நம்பரு தான்..... வேற யாரு நம்பரும் எனக்கு இப்போ வேணாம்”

‘பெரிய ப்ரைம் மினிஸ்டரு இவரு’

“ஹாண்ட்சம் நம்பர வாங்குற...நாளைக்கு தர.... என்ன சரியா....?”

‘அப்டியா இருக்கான்.............. உர்ராங்கோட்டான் கனக்கா இருக்கான்...... அவன போயி என்னமோ சொல்லுது இது.....’

“எப்டி வாங்க முடியும்?”

‘கடைல இருக்குற பொருளுனா கேளு......எம் பாக்கெட் மணில வாங்கி தரேன்...... இந்த வளந்து கெட்டவனோட நம்பர கேட்டா..... நான் என்ன பண்ணுவேன்......’

“நீ உனக்குன்னு கேளு”

“எனக்கு தேவையில்லயே!”

‘அவன் நம்பரு எனக்கெதுக்கு....... நாக்கு வளிக்கவா?’

“உனக்கு தேவையில்ல...... ஆனா உனக்கு கான்டாக்ட் பண்ண அவங்க நம்பர் வேணும்னு கேளு..... அத எனக்கு தந்திரு”

‘அவன கான்டாக்ட் பண்ணறதுக்கு நான் கண்ணம்மா பேட்டைக்கே போயிருவேன்’

“ட்ரை பண்றேன்”

எல்லா இறைவனையும் வேண்டியபடி அவனின் வருகைக்காக காத்திருந்தாள்.

அவன் வந்து வழக்கம்போல் பிளாட்டைத் திறந்தபின், அவனுடைய கையில் கொண்டு வந்ததை டேபிளின் மீது வைத்துவிட்டு, ரெஃப்ரெஷ் செய்து கொள்ள சென்றான்.

எதிர் பிளாட்டில் இருந்தபடி கவனித்த வதனி, வெளியே வந்து சிடுமூஞ்சி பிளாட்டை வாசலில் நின்றபடி எட்டிப்பார்த்துவிட்டு அவனில்லாததை உறுதி செய்தவள் வீட்டினுல் சென்றாள்.

அவனது மொபைல் டேப்ளின் மீது இருந்தது. மொபைலை எடுத்து ஆன் செய்தால்.... பாஸ்வர்டு கேட்டது..... ச்சே... என்றவாறு அவளின் பிளாட்டிற்கு வந்துவிட்டாள்.

சற்று நேரத்தில் அங்கு வந்தவன்.....

“நைட் டின்னர் என்ன சாப்டலாம்?”

“எதுனாலும் ஓகே எனக்கு”

“குக் பண்ணுவியா?”

“ம்.....”, என்றாள் தலையாட்டியவாறு

“வதனி, வாயத் திறக்க மாட்டியா? வாயத் திறந்து பேசு”

“குக் பண்ணுவேன்”, சன்னமான குரலில் அவள் கூற

“அபார்ட்மெண்டே அதிர்ற மாதிரி மத்தவங்க கூட பேசுற..... எங்கிட்ட பேச என்ன பயமா உனக்கு....”

இல்ல என்பது போல தலையசைத்தாள்....

“இன்னிக்கு நான் இட்லி, தோசை மாதிரி எதாவது போயி வாங்கிட்டு வரேன்...... நாளைக்கு மார்னிங் எதாவது செய்வோம்”

“மாவு இருக்கு, அம்மா தோசை ஊத்திக்க சொன்னாங்க, சாம்பார் இருக்கு”

“உனக்கு கஷ்டமில்லனா தோசை ஊத்து....”

“ம்.... என தலையை ஆட்டியபடி கிச்சனுக்குள் சென்று, சற்று நேரத்தில் இரு ப்ளேட்களில் தோசையுடன் வந்தவள், ஒன்றை அவனிடம் கொடுத்து விட்டு அமர்ந்தாள், இருவரும் டைனிங்கில் எதிரெதிரே அமர்ந்து அமைதியாக உண்டார்கள்.

“தனியா தூங்கிருவ தான...”

“ம்....” , என்றாள்

“சரி கதவ லாக் பண்ணிக்க....”, என்றவாறு அவன் கிளம்ப,

“தயக்கத்துடன்....... உங்க காண்டாக்ட் நம்பர்....” , அவள் கேட்டது அவளுக்கே கேட்கவில்லை.

அவனுக்கு கேட்டதனால் நின்றவன்............ என்ன காண்டாக்ட் நம்பரா ? என்பது போல் அவளைப் பார்த்தபடி .....

“தனியா தூங்கிருவன்னு சொன்ன....?”

“ஆமா..........எனக்கில்ல...... ”, என கோபமாக சற்று சத்தமாக கூறிவிட்டு...... நாக்கை கடித்தவள்...ஸ்.... என்றபடி ‘எல்லாம் இந்த கீர்த்தி.... குரத்தியால வந்தது...’, தலையை குனிந்து நின்றாள்.

அருகில் வந்தவன், குனிந்த தலையை அவளது தாடையை பிடித்து நிமிர்த்தினான்.

அவளது கண்களோடு கண்களை கலக்கவிட்டபடி, “ம்.... சொல்லு..யாருக்கு.....?” என்றவுடன்..... கீர்த்தி விசயத்தை சொல்லிவிட்டாள்.

வதனியை அறியாதவன் அல்ல. சிறு வயது முதலே, அறியாமல் தவறு செய்துவிட்டாலும், அதை ஒத்துக்கொள்ளும் நேர்மையை அவளிடம் கண்டிருக்கிறான். இன்றும் அதை உணர்ந்தான்.

கேட்டவன் மிக நிதானமாக, “அப்பொ என் நம்பர் உங்கிட்ட இருந்திருந்தா..... யாரு கேட்டாலும் குடுத்துருவ...... ஏன்? எதுக்குனு கேக்கமாட்ட....”

“உங்க கூட பேசத்தான கேப்பாங்க....”

“பேசனும்னு கேட்டா.... குடுப்பியா?”

“வேற என்ன செய்ய?....அவங்க ரொம்ப நச்சரிச்சாங்க”

முகத்தில் கோவம் தாண்டவமாட.......

மூச்சை ஆழ்ந்து இழுத்து தன்னை சரி செய்தவன் ,

“சரி ..... டோர் லாக் பண்ணிட்டு .... தூங்கு.....” என்று தலையை அழுந்த இரு கைகளால் கோதியவாறு....... அவள் டோர் லாக் செய்யும் வரை வயிட் செய்துவிட்டு அவன் ப்ளாட்டை நோக்கிச் சென்று விட்டான்.

‘இவனுக்கு என்னமா கோவம் வருது.. பயபுள்ள பொங்குற அளவுக்கு இப்போ இங்க என்ன நடந்தது?.............. கடசில நம்பரத் தராம போயிட்டானே......’ என எண்ணியவாறு உறங்க சென்றாள்.
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
நான்தான் First,
சரோஜினி டியர்
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சரோஜினி டியர்
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,972
Location
madurai
nice epi... யார் அந்த சிடுமூஞ்சி... அறிய ஆவல்... :love:(y)
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top