• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பகுதி-25

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Crazeequeen

நாட்டாமை
Joined
Jun 27, 2019
Messages
74
Reaction score
298
Location
Pudukkottai
அஜய்க்கு 5 வயதான போது துளசி கணிதத்தில் ஆராய்ச்சி (Ph.D r Doctorate solluam)'டாக்டர்' பட்டம் பெற்றாள். இதனால் அவளுக்கு ஒரு பிரபல பொறியியல் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. இப்போது துளசியின் மாத ஊதியம் 30,000!

இறைவன், துளசி பட்ட கஷ்டத்திற்கு அவளை நல்ல நிலையில் நிறுத்தினான்!

ராகவனிடம் கடைசியாக மருத்துவமனையில் கூறியது போல் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்தாள். அவளுக்கு 'நேஹா' என்று பெயரிட்டாள்.

குழந்தைகளின் மனம்தான் எத்தனை கள்ளம் கபடமற்றது! அஜய்யும் நேஹாவும் இருவேறு தொப்புள் கொடியில் பிறந்திருந்தாலும். ஒரு வயிற்றுப் பிள்ளையாக பழகி வந்தனர். அஜய்யும், நேஹாவும் விளையாடும் போது துளசியும் அவர்களோடு இணைந்து ஒரு சிறு குழந்தையை போல் ஐக்கிய மாகிவிடுவாள்.

கை நிறைய பணம், பிஞ்சு குழந்தைகளின் நல்ல மனம், இரண்டும் இருந்தும் துளசிக்கு அமைதியற்ற வாழ்க்கையே நிலவியது. 'ராகவன் இல்லை' என்ற குறை மட்டும் எப்போதும் அவள் மனதில் கலவையாய் உருண்டோடியது.

மற்ற குழந்தைகள் தன் தந்தையுடன் பள்ளிக்கு வருவதை காணும் போதெல்லாம், அஜ்ய அன்று இரவு துளசியை கேள்வியால் துளைத்து எடுப்பான். "அம்மா, அப்பா எங்கமா?" என்று கேட்கும் போது துளசிக்கு என்ன சொல்வது என்றே புரியாமல் முழிப்பாள். ராகவனின் நிலை பற்றி அஜ்ய்யிடம் கூறலாம் என்றால், நடந்த சம்பவத்தை புரிந்து கொள்ளும் அளவுக்கு பக்குவம் இல்லை. இதனால், தற்காலிகமாக 'அப்பா துபாயில் வேலை பார்ப்பதாக கூறி சமாளிப்பாள்.

அஜ்ய வளர வளர தந்தையின் நிலை என்ன என்பது மெதுவாக புரியத் தொடங்கியது. அதற்கு ஏற்றாற் போல் துளசியிடம் தந்தையை பற்றி எதுவும் கேட்காமல் இருந்தான்.

காலம் தான் எத்தனை வேகமாக செல்கிறது? நேற்று சின்னஞ்சிறு மழலைகளாய் விளையாடிக் திரிந்த அஜ்யயும் நேஹாவும் இன்று வாலிப பருவத்தை எட்டியிருந்தனர்.

அஜய் 12 வகுப்பு முடித்தபின் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். (M.B.B.S) படிக்க வைத்தாள்!

நேஹாவை பொறியியல் படிக்க வைத்த துளசி ஆஸ்திரேலியாவில் உள்ள மிகப்பெரிய தொழிலதிபரான 'ஆகாஷ்' என்பவருக்கு சீரும் சிறப்புமாக திருமணம் நடத்தி கொடுத்தாள். சிறு வயதில் இருந்தே பரத நாட்டியத்தில் மீது மோகம் கொண்ட நேஹா, ஆஸ்திரேலியாவில் தன் கணவரின் ஆதரவோடு ஒரு நடன பள்ளி ஆரம்பித்து, சிறப்பாக நடத்திக் கொண்டிருந்தாள். எப்படியோ இருக்க வேண்டிய தன்னை, தத்தெடுத்து ஒரு நல்ல நிலையில் நிறுத்திய, தன் தாய் துளசிக்கு மனதளவில் தினமும் நன்றியை தெரிவித்துக் கொண்டிருப்பாள். துளசியை பற்றி பெருமையாக ஆகாஷிடம் கூறுவாள். தினமும் இருமுறையாவது தன் அம்மாவிடமும் , அண்ணன் அஜய்யிடமும் பேசவில்லை என்றால் அவளுக்கு உறக்கமே வராது. திருமணமாகி ஒரே வருடத்தில் அவள் ஒரு ஆண் குழந்தைக்கு தாயானாள்.

எப்படியோ நேஹாவின் வாழ்க்கை சிறப்பாக அமைந்த திருப்தி துளசிக்கு இருந்து. தன் மகன் அஜய்யும் நல்ல படியாக மருத்துவ படிப்பை முடிக்க வேண்டும் என்று துளசி தினமும் தனது இரு கோரிக்கைகளுள் ஒன்றாக இறைவனிடம் வேண்டுவாள்.

தன் தாயின் வாழ்வில் நடந்த கொடுமைகளையும், தந்தையின் பிரிவையும் உணர்ந்த அஜ்ய பொறுப்பாக படிக்கத் துவங்கினேன்.

மருத்துவ பாடத்தில் அஜய்க்கு இருந்த ஆர்வம், அவனை அணைத்து பாடங்களிலும் முதல் மதிப்பெண்ணை பெற வைத்தது.அஜய்யை பற்றி அவனது பேராசிரியர்கள் கூறும் போது, துளசிக்கு தான் பட்ட துன்பத்திற்கு ஆறுதல் கிடைத்தது போல் தோன்றும். அக் கல்லூரியிலேயே முதல்வர் வெகுவாக பாராட்டி பேசியதை கண்ட துளசிக்கு ஆனந்த கண்ணீர் வந்துவிட்டது! அச்சமயம் அஜய்க்கு ஆம் மேடையில் பேச ஓர் வாய்ப்பு அளிக்கப்பட்டது. தன் தாயை பற்றி அஜய் பெருமையாக பேசினான்.

"எல்லாருக்கும் என் பணிவான வணக்கம்....! நான் என்னவோ பெரிசா சாதிச்சிட்ட மாதிரி இங்க எல்லாரும். பெருமையா பேசுறாங்க.... சந்தோஷம் தான்... ஆனா இந்த எல்லோரும். பெருமைக்கு முழு உரிமையும் என் அம்மாவுக்கு தான் ... நான் பிறந்ததில் இருந்து என் அப்பாவை பார்த்து இல்லை.... அதுக்காக எனக்கு அப்பா இல்லைன்னு நினைக்காதீங்க... எனக்கும் அப்பா இருக்காரு.... ஆனா 22 வருஷத்துக்கு முன்னாடி எங்க அப்பாவை தீவிரவாதிகள் கடத்தி, பினை கைதியா வைச்சுருக்காங்க.... ஒரு அப்பா செய்ய வேண்டிய எல்லாம் வேலையையும் 'தகப்பன்' ஸ்தானத்துல இருந்து என் அம்மா தான் எனக்கு செஞ்சாங்க.... இத்தனைக்கும் என் அம்மாவுக்கு துணையா எந்தவொரு உறவுகளும் துணையா சிக்கலை. கஷ்டங்களை முழுவதும் அவங்க வாங்கி, எங்களுக்கு சுகத்தை கொடுத்தாங்க.... என் அம்மா வாழ்க்கையில் படிச்சு முன்னாடியும் ஒரு டாக்டரா நிறுத்தி இருக்காங்க.... என் அப்பா உயிரோட இருக்காரான்னு கூட எனக்கு தெரியலை... ஆனா இன்னகி வரைக்கும் என் அப்பா நிச்சயம் திரும்பி வருவார் நம்பிக்கையில வாழ்ந்துட்டு இருக்கற இந்த ஜீவனுக்கு தான் இந்த பதக்கங்கள் சேரணும் .... அம்மா பிளீஸ் இங்க வாம்மா..‌" கைகளை வாம்மா..‌" கைகளை மேடையில் ஏந்தியவாறு அஜய் கூப்பிட துளசிக்கு கண்கள் கலங்கிப் போயின.

அஜய்க்காக மேடை ஏறிய துளசியை அனைத்து மாணவர்களும் ,ஆசிரியர்களும் பெருமையான பார்த்தனர். அஜய் தன் கழுத்தில் போடப்பட்ட அனைத்தும் பதக்கங்களையும் துளசிக்கு அணிவித்து ஐ லவ் யூ மாம்... ஐ லவ் யூ சோ மச் மாம்..." நான் என்று ஆங்கிலத்தில் பேசுவதை பற்றி நினைத்து துளசி அழுதுவிட்டாள்.

அஜய்யின் நெற்றியில் துளசி முத்தமிட்டதும் , பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்து!

அஜய், எம்.பி.பி.எஸ் (M.B.B.S) படித்து முடித்ததும் மேற்கொண்டு அமெரிக்காவில் கண் மருத்துவமனை 'ஆப்தமாலஜிஸ்ட்'(ophtalmologist) படிக்க விருப்பப்பட்டான். அஜய்யின் விருப்பத்தின்படியே துளசி அவன் பேரில் போட்டு வைத்திருந்த பணத்தை கொண்டு 2 வருடம், அமெரிக்காவுக்கு அனுப்பி படிக்க வைத்தாள்.

2 வருடங்கள் துளசி அஜய்யை பிரிந்து வாழ்ந்தாள் . அந்த பிரிவை சமாளிக்க. நேஹா கேட்டுக் கொண்டதன் பேரில் ஆஸ்திரேலியா வில் இரண்டு வருடம் தன் பேரனுடன் வாழ்ந்து வந்தாள்.

? துளசி வாழ்க்கையில அடுத்து என்ன நடக்கும் என்று பார்க்கலாம்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
தஸீன் பாத்திமா டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
25 வருடம் ஆகி விட்டது
ஒரு பெண் குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்து படிக்க வைச்சு கல்யாணமும் பண்ணியாச்சு
பேரனும் வந்தாச்சு
இன்னுமா ராகவன் கிடைக்கலை?
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top