• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பகுதி -26

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Crazeequeen

நாட்டாமை
Joined
Jun 27, 2019
Messages
74
Reaction score
298
Location
Pudukkottai
அஜய் படிப்பை முடித்து இந்தியாவிற்கு வந்ததும் துளசியும் இந்தியாவிற்கு பறந்தாள். அஜய் சொந்தமாக 'கிளினிக்' ஒன்றை நடத்தினான். மேலும் பல பெரிய மருத்துவமனைகளில் மருத்துவ ஆலோசராக சேவை புரிந்து வந்த அஜய்க்கு வருமானம் கொட்டத் தொடங்கியது.

அஜய்யின் நீண்ட நாள் ஆசை. இலவசமாக ஒரு கண் மருத்துவமனை கட்ட வேண்டும் என்பதே அவன் இலட்சியமாக இருந்து ‌

வயது செல்ல செல்ல துளசியால் முன்பிருந்ததை போன்று வேலைகளை செய்ய முடியவில்லை. கல்லூரியில் இருந்து ஓய்வும் பெற்றாள். அஜய்க்கு ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைக்க ஆசைப்பட்டாள். அவளின் ஆசையை ஒரு நாள் அஜய்யிடம் தெரிவித்தான்.

"அஜய் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்பா...."

"சொல்லுங்க அம்மா"

" அஜய் எனக்கு வயசாகுதுப்பா... நான் கண்ணை மூடறதுக்குள்ள உனக்கு ஒரு கல்யாணத்தை செஞ்சு பார்க்க ஆசைப்பட்டேன் அஜ்ய... நீ அமெரிக்காவுல படிச்ச பையன்... உனக்குன்னு கல்யாணத்தை பத்தி ஏதாவது கனவு இருக்கும். அப்படி இருந்தா சொல்லுப்பா... அஜய்யின் தோள்களை பற்றியவாறே துளசி அன்போடு கேட்டாள்.

"அம்மா, எனக்கு வாழ்க்கை துணைவியா வரப்போறவளை நீங்க தான் தேர்ந்தெடுக்கணும்ங்கறதுல நான் ரொம்ப தெளிவா இருக்கேன்மா.... என்னை பொறுத்த வரைக்கும் கடவுளை கூட உங்களுக்கு அடுத்த இடத்துல தான் வச்சிருக்கேன். எனக்கு எந்தெந்த வயசுல என்னென்ன தேவைங்கறதை பார்த்து பார்த்து செஞ்சாங்க நீங்க. அப்படி இருக்கும் போது உங்களுக்கு அடுத்து என்னை கவனிக்கப் போறவளை நீங்க தேர்ந்தெடுத்தான் நல்லாயிருக்கும்.... அதனால எனக்கு மனைவியா வரம் போறவளை தேர்ந்தெடுத்தால் தான் நல்லாயிருக்கும்.... அதனால எனக்கு மனைவியா வரப் போறவளை. தேர்ந்தெடுக்கறது உங்க சாய்ஸ்....பொண்னை பார்த்து இவதாண்டா பொண்ணு...‌ கட்டுடா தாலியை... ன்னு 'சொல்லுங்க நான் தாராளமா காட்டறேன்.... சரியா.... என்று கூறிவிட்டு துளசியின் கன்னத்தை செல்லமாக கிள்ளினான் அஜய்.

"சரிப்பா" என்று கூறிய துளசி பெருமிதத்துடன் அஜயை பார்த்தாள். பின் தன் அறையில் நுழைந்த துளசி, தனது கல்யாண போட்டோவில் ராகவனுடன் ஜோடியாக நின்று கொண்டிருப்பதைப்பதைப் பார்த்து கண் கலங்கினாள். இப்படிப்பட்ட மகனோடு வாழ ராகவனுக்கு கொடுப்பினை இல்லையே என்று நினைத்து வருந்தினாள்.

ஒரு நாள் துளசி, அஜ்ய்யுடன் ஹோட்டலில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். அப்போது அவளுக்கு முன் இருக்கையில் ஒருவன், அவளைக் கண்டு சிரித்தான். பரிச்சயப்பட்ட முகம் தான் என்றாலும் துளசிக்கு தன் நினைவுகளில் அவன் பெயர் சிக்கவில்லை பின் அந்த இளைஞன் எழுந்து வந்து துளசியின் அருகே ஒரு நாற்காலியை போட்டு அமர்ந்தான்.

"என்ன மிஸ் ... என்னை தெரியதா.... நான் தான் ஸ்டீபன்... ஞாபகம் இருக்கா மிஸ்.." என்று அவன் கூறியதும் தான் துளசிக்கு ஸ்டீபனின் ஞாபகம் வந்தது.

"ஆங்.‌.‌.. ஸ்டீபனா.... எப்படிப்பா இருக்கா...?"

" நல்லா இருக்கேன் மிஸ்....உங்களை பார்த்ததுல ரொம்ப சந்தோஷம்.... நீங்க எப்படி மிஸ் இருங்க்கீங்க...?"

"ஓ நல்லாயிருக்கேன்பா... ஆமா, இப்ப நீ என்ன பண்ற?"

" மிஸ் நான் இன்ஜினியரிங் முடிச்சு அமெரிக்காவுல ஒரு ஐ.டி. கம்பெனியில வேலை பார்க்கிறேன் மிஸ்..."

" அப்படியா.... உண்மையாவே ரொம்ப சந்தோஷம்பா..."

"எல்லாம் உங்க ஆசீர்வாதம் தான் மிஸ்.... இவருயாரு? உங்க பையனா?"

"ஆமாம்... 'அஜய்' என் பையன்"

"ஹாலோ.... "என்ற வார்த்தையால் அஜய்யும், ஸ்டீபனும் அறிமுகமாகிக் கொண்டபின், ஸ்டீபன் துளசியைப் பற்றி பெருமையாகக் கூறினான்.

"அஜய், உங்களுக்கு இப்படி ஒரு அம்மா கிடைக்க நீங்க குடுத்து வைச்சிருக்கணும்... நான் இப்ப இந்த நிலைமையில் இருக்கேன்னா, அதுக்கு காரணம் உங்க அம்மா தான் அஜய்.." என்று ஆரம்பித்த ஸ்டீபன், பள்ளியில் தான் போதை மருந்துக்கு அடிமையான தையும், அதன் பின் துளசி அவனை நல்வழிப்படுத்தையும் ஒப்புவிக்க பிரமித்துப் போனான் அஜய். உண்மையில் தன் தாயை நினைத்து பெருமைப் பட்டான்‌.

"சரி மிஸ், நான் கிளம்பறேன்... மிஸ்டர் அஐய்... அவசியம் ஒரு நாள் நீங்க வீட்டுக்கு வரணும்...." என்று கூறிவிட்டு ஸ்டீபன் விடைபெற, அஜய்யும் துளசியும் சாப்பிட்டு விட்டு வீட்டிற்கு புறப்பட்டனர்.

கல்லூரியில் துளசியுடன் பணியாற்றிய 'வேணுகோபால்' என்பவரின் மகன் திருமணம் மதுரையில் நிச்சயிக்கப்பட்டு இருந்து. திருமணத்திற்கான அழைப்பிதழ் துளசிக்கு வைக்கப்பட்டருந்தால் துளசி மதுரைக்கு புறப்பட்டு சென்றாள்.

அவள் சென்ற பகுதி ஒரு அழகான கிராமம். எப்போதும், வாகனங்களின் புகையை கக்கிக் கொண்டிருக்கும் மாநகரங்களை விட்டு இயற்கை சூழலோடு முற்றிலும் மாறுபட்டு ரம்மியமான இடமாக துளசி, திருமணச் சடங்குகளை வெகுவாக ரசித்துக் கொண்ட துளசி, திருமணச் சடங்குகளை வெகுவாக ரசித்துக் கொண்டிருந்த நேரத்தில் திடீரென்று ஒரு மென்மையான பெண்ணின் குரல் அவனை எழுப்பியது.

"அம்மா... காபி எடுத்துக்காங்க..." ஒரு மென்மையான குரல் அவள் காதோரம் ஒலிக்க, அவள் அருகில் ஒரு பெண் கையில் பல காபிகள் அடங்கிய தட்டினை பிடித்த வண்ணம் நின்று கொண்டிருந்தாள். துளசியும் புன்னகைத்து காபியை எடுத்துக் கொண்டாள்.ஏனோ துளசிக்கு பார்த்த மாத்திரத்தில் அந்த பெண்ணை மிகவும் பிடித்துப் போனது.

அத்திருமணம் நடந்து முடிக்கும் வரை பம்பரமாய் சுழ்வதை துளியும் கவனிக்கத் தவறவில்லை. ஆளையே அடிக்கும் அழகு என்றில்லை என்றாலும், களையான முகம், எப்பொழுதும் சிரிப்பை சுரக்கும் அவள் இதழ்கள் , அடர்ந்த நீண்ட கூந்தலும், பண்பான பேச்சு என் அனைத்தும் துளசிக்கு மிகவும் பிடித்துபோனது.

திருமணம் முடிந்ததும், வேணுகோபாலிடம் அப்பெண்ணை பற்றி விசாரித்த, அப்பெண்ணின் பெயர் ரோஜா என்றும் தன் சித்தப்பாவின் மகள் என்றும் கூறினாலும் வசதி இல்லாதவர்கள் 12-ம் வகுப்போடு நிறுத்தி விட்டதாகவும் ஒரு ஏற்றுமதி நிறுவனத்தில் பணிபுரியும் கூறினார் படிப்பு இல்லை என்றாலும் குணத்திலும் தங்கமானவள் என்ற சான்றிதழை வழங்கினார்.

வேணுகோபால் ரோஜாவின் பற்றி கூற, நிச்சயம் அஜய்க்கு சிறந்த துணையாக விளங்கும் என்று மனதுக்குள் நினைத்தாள்.

ரோஜாவை பற்றி தன் எண்ணத்தை வேணுகோபாலன் தெரிவித்த மகிழ்ந்து போன அவர், 'ரோஜா ரொம்ப அதிர்ஷ்டசாலி' என்று பெருமைப்பட்டனர் .

"இரு தினங்கள் கழித்து வேணுகோபால் , ரோஜாவின் பெற்றோரிடம் துளசி விருப்பத்தையும், அஜய் பற்றியும் கூற, 'தங்கள் மகளுக்கு நல்ல வாழ்க்கை அமைந்து விட்டதே' என்று சந்தோஷப் பட்டனர்.

துளசி சென்னைக்கு கிளம்பிச் செல்லும் நேரத்தில் ரோஜாவின் பெற்றோரிடம் அடுத்த மாதம் ஒரு நல்ல சுபமுகூர்த்த நாளில் நிச்சயதார்த்தத்தை வைத்துக் கொண்டு சென்னைக்கு புறப்பட்டாள்.

சென்னை திரும்பிய துளசிக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது!

சென்னை வந்ததும், அஜய்யுடன் வீட்டிற்கு காரில் பயணமானாள்‌

விட்டிற்கு வந்ததும், அஜய் சோபாவில் அமர அவன் அருகில் அமர்ந்த துளசி, அவனிடம் ரோஜாவின் புகைப்படத்தை காட்டி, "இந்த பொண்ணு எப்படி இருக்கா பாருடா..." என்று கூறினாள்.

தனக்கு பெண் பார்க்க துளசி துவங்கிவிட்டதை உணர்ந்த அஜய், "அம்மா, உனக்கு பிடிச்சிருக்கா...? என்று கேட்டான்.

"எனக்கு பிடிச்சிருக்குபா... நீயும் ஒரு வார்த்தை சொல்லிட்டா நல்லாயிருக்கும்...."

"அம்மா எனக்கும் பிடிச்சிருக்கு.... உன் விருப்பம் தான் என் விருப்பம் அம்மா ‌..."

"ரொம்ப சந்தோஷம்பா... உன்னை பெத்துக்கு நான் ரொம்ப பெருமைப்படறேன்.... ஆனா உன் கல்யாணத்தை அப்பா இருந்து நடத்தி வச்சாருன்னா எவ்வளவு சந்தோஷமா இருக்கும் தெரியுமா? உம்..." என்று பெருமூச்சுடன் கூறினாள்.

அன்று அஜய் தொலைக்காட்சியை 'ஆன்' செய்ததும் எப்போதும் போல துளசி செய்திகளை காணத் துவங்கின். அப்போது, அச்செய்தியில் ராகவனின் முதிர்ந்த வயது தோற்றத்தில் புகைப்படம் காட்டப்பட்டது.

அச்செய்தியில், செய்தி வாசிப்பாளர் ஒருவர், "25 ஆண்டுகளுகளாக தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 10 நபர்கள், பிணை கைதிகளாக வைக்கப்பட்டிருந்தனர் . இந்தியா ராணுவத்தினருக்கே பெரும் சவாலாய் விளங்கிய அந்த தீவிரவாத கும்பலை நேற்று இரவு ராணுவத்தினர் சுற்றி வளைத்தனர். பிணை கைதிகளாக இருந்து 10 பேர்களையும் மீட்ட ராணுவத்தினர், நேற்றே அவர்களை டெல்லிக்கு அனுப்பி வைத்ததாக எல்லை காவல் படை தளபதி ராஜ்சரண் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.மேலும் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்படுவதாகம் தெரிவித்தார்" என்று கூற, துளசிக்கு மனதில் சந்தோஷம் கரைபுரண்டு ஓடத் தொடங்கியது.

"டேய் அஜய்... உன் அப்பாவை விடுதலை செஞ்சிட்டாங்களா.

துளசியின் கண்களில் கண்ணீருடன் வெளிப்பட்ட சந்தோஷம் அவனுக்கு நன்றாகவே தெரிந்தது.

"அம்மா உன் நம்பிக்கை விண் போகலைமா..."என்று அஜய் கூறியபோது, காலிங் பெல்' சத்தம் கேட்டது.

அது ராகவனாகத் தான் இருக்கும் என்று நினைத்த துளசி ஓடிச்சென்று கதவைத் திறந்தாள், 'பால்கார் கணேசன்' நின்று கொண்டு இருந்தார். பாலை பெற்றுக் கொண்டவள், கதவை அடைத்துவிட்டு இரண்டு அடி நடக்க, மீண்டும் காலிங் பெல் சத்தம் கேட்டது. பால்காரருக்கு பணத்தை கொடுக்க மறந்ததால் தான் திரும்பவும் வந்திருப்பார் என்று எண்ணியவாறே துளசி கதவை திறக்க, தன் கண்களாலேயே நம்ப முடியாதவாய் இன்ப அதிர்ச்சியில் நின்றாள்.

அவள், இன்ப அதிர்ச்சிக்கு காரணம், ராகவனின் வருகை!

ராகவன் மிகவும் சித்திரவதை செய்யப்பட்டுள்ளான் என்பதை அவன் தோற்றமே துளசிக்கு உணர்த்தியது. ராகவனை கட்டியணைத்து அழுத துளசிக்கு, ராகவன் சமாதானப்படுத்தினான்.

"துளசி... இங்கு பாருடா.... ஏன் அழற...? அதான் நான் வந்துட்டேன் இல்ல...அழாதடா..."அவள் கண்களின் கண்ணீர் துளசியை துடைத்தவாறே ராகவன் கூறினான்.

"என்னங்க, ரொம்ப கஷ்டப்பட்டுத்திட்டீங்களாப்பா?"

"விடு துளசி... அதை பத்தி பேசாதே... யாருக்கு நான் என்ன பாவம் செஞ்சேன்னு தெரியலை 25 வருஷம்நரக வேதனையை அனுபவிச்சேன்... என்னால திரும்பவும் அந்த சம்பவத்தை பத்தி நினைச்சு பார்க்க கூட முடியலை.. சரி அதைவிடு துளசி... எங்க நம்ம அஜய்?" என்று கேட்டவாறே ராகவனின் கண்கள் அஜய்யை தேடல் தொடங்கியது.

"அப்பா...." என்று அஜய் கூப்பிட ராகவன் அவனை கட்டியணைத்து முத்தமிட்டான்.தந்தையின் முத்தமழையால் நனைத்த அஜய்க்கு கண்களில் நீர் கோர்த்து.

"என்னங்க முதல்ல நீங்க குளிச்சிட்டு வாங்க... அதுக்குள்ள நான் வாய்க்கு ருசியாக ஏதாவது சமைச்சு வைக்கிறேன்..." என்று கூறிய வாறே அடுக்குகளைக்குள் நுழைய முயன்ற துளசியை, ராகவனின் குரல் தடுத்தது.

"துளசி... ஒரு நிமிஷம்... கொஞ்சம் காரசாரமா சமைச்சு வை துளசி... 25 வருஷமா வாக்கே செத்துப் போச்சு... அவன் மனதின் சோகம், அவன் வார்த்தைகளில் துளசிக்கு தெரிந்தது.

"சரிங்க..." என்று கூறியவள், வேகமாக இட்லியை ஊற்றி விட்டு, ராகவனுக்கு மிகவும் பிடித்த புதினா சட்னியை காரமாக அணைத்தாள். அதற்குள் ராகவன் குளித்துவிட்டு வர, துளசி ராகவனுக்கும் , அஜய்க்கு பரிமாறத் தொடங்கினாள்.

துளசி ராகவனுக்கு பரிமாறிக் கொண்டிருந்த போது அவள் முகத்தில் தென்பட்ட சந்தோஷத்தை அஜய் கவனிக்க தவறவில்லை. 25 ஆண்டுகளாய் கணவர்களுக்கு காத்துக் கொண்டிருந்த தாயின் கனவு நனவானதை எண்ணி பூர்த்துப் போனான்.

'அப்பா' என்ற வார்த்தைக்கு சொந்தக்காரரை சந்தித்து அஜய்க்கு மகிழ்ச்சியாய் இருந்து.
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ராகவன் வந்துட்டான்
ஆனால் அது எப்படி கரெக்ட்டா துளசியின் வீட்டுக்கு நேராக வந்தான்?
 




Crazeequeen

நாட்டாமை
Joined
Jun 27, 2019
Messages
74
Reaction score
298
Location
Pudukkottai
ராகவன் வந்துட்டான்
ஆனால் அது எப்படி கரெக்ட்டா துளசியின் வீட்டுக்கு நேராக வந்தான்?

இன்னிக்கி தெரியும்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top