• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பத்மஸ்ரீ & பத்மபூஷன் திரு. பாலசுப்பிரமணியம் அவரின் ரசிகர் ஒருவரின் வரிகள்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,472
Reaction score
44,913
Location
India
sp.jpg
நான் ஏன் அழ வேண்டும்?

50 ஆண்டுகளாக
உன் குரல் என் வசம்.

உன் குரல் கேட்காது
ஒரு நாள் இருந்ததில்லை.

எனக்கு உன்னைத் தெரியும்
உனக்கு என்னைத் தெரியாது.

உன் குரலை காதலித்தவள்
நான்..

நீ மரணம் அடைந்து விட்டதாக
செய்தி..

உன் குரலுக்கு ஏது மரணம்?

எனக்கு பழக்கமானது
உன் குரல்தானே.

அது மரணம் அடையாதே
அது என்றும் என்னோடு
வாழ்ந்து கொண்டு தானே
இருக்கும்..

அப்புறம் நான் ஏன்
அழ வேண்டும்?

நீ இருப்பாய் என்னோடு
நான் இருக்கும் வரை..

உன்னோடு பழகியவர்க்கு
உன் இறப்பு இழப்பு..

உன் குரலோடு வாழும்
எனக்கு ஏது இழப்பு?

நீ எப்போதும்
என்னோடு தானே...
அப்புறம் நான் ஏன்
அழ வேண்டும்?

உடலை இறைவன்
மறைத்திருக்கலாம்,
உன் குரலை
எந்த இறைவனும்
மறைக்க முடியாது...

நீ
இறைவனையே பாடியவன்
பாட்டில் இறைவனானவன்.

தூரத்தில் இருக்கும் எனக்கு
நீ இன்னும் கொஞ்சம் தூரம்
அவ்வளவு தான்..

என்னைப் பொறுத்தவரை
நீ என்னோடு
இருக்கிறாய்..
இசையாக.. பாடலாக..

அப்புறம் நான் ஏன்
அழ வேண்டும்?

இன்று முதல்
இன்னும் அதிகமாக
உன் குரலை கேட்பேன்..

இருந்தாலும் மறைந்தாலும்
பேர் சொல்ல வேண்டும்..
இவர் போல யார் என்று
ஊர் சொல்ல வேண்டும்....

இதில் நடித்தவர்
இதை பாடியவர்
இதை எழுதியவர்
இசையமைத்தவர்
இன்றில்லை...

இந்த வரிகள்
உனக்கும் பொருந்தும்...

பொன் மாலைப் பொழுதில்
இயற்கை எனும் இளைய மகளை
பனிவிழும் மலர் வனத்தில்
ஆயிரம் நிலவே வா என அழைத்து
அவள் ஒரு நவரச நாடகம் என்றாய்..

இதயம் ஒரு கோவில்
அதில் உதயம் ஒரு பாடல்... என்று
பாடிய நீ என் இதயத்தில்
கோவில் கொண்டு அமர்ந்துள்ளாய்..

பிறகு
நான் ஏன் அழ வேண்டும்?

உன் பாடல் என்னை
எழ வைக்கும்...

வாழ்க உன் புகழ்..

ஒரு வீட்டில் இருந்த நீ
இன்று
எல்லோரது இதய வீட்டில்...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top