You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.


Latest Episode பவன் ல(ட்சி)யா கல்யாணம் --32

Maha

Author
Author
SM Exclusive Author
#1
IMG_20191207_220048.JPG


(காதலர்களாக இருந்து தம்பதியாக மாற போகும் இருவரின் மனநிலை இந்த கடைசி நிமிடங்கள் கொஞ்சம் லாங் கான்வேர்சேஷன் சொன்ன எப்பிடி இருக்கு தோணியது, கல்யாண பார்க்கும் அவசரம் இல்லாம படிங்க...பிடிக்கும்😉👍 )

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

பவன்...
சிட் அவுட் அறைக்கு வந்தும் மனதில் ஒரு பதட்டம் தொற்றி கொண்டது ... மூச்சை இழுத்துவிட்டு லயாவுக்கு கால் செய்தான்.

"ச்சா, என்ன ஆச்சு நமக்கு.. இப்பிடி ஆயிட்டோம் ",

மணமகனாக உடை மாறியதும் புதிதாய் உணர்ந்தான். தன் லயாவையும் மணமகளாய் காண அவன் கண்கள் வெகு ஆவலாக காத்து இருந்தது.

நேற்றில் இருந்து சற்று எக்ஸைட் பீல்லில் தவிப்பவனை மேலும் முழுதாய திணறடித்தது , சற்று முன் வெண் பட்டாடையில் நனைந்த எழில் ஓவியமாய் தெரிந்த அவள் பிம்பம். அவன் அருகே நெருக்கமாக வேறு அமர்ந்து இருந்ததும் , கண்முன்னே வந்து போனது அந்த காட்சி
ஷப்பா... என்று இருந்தது அவனுக்கு,

இது வரை கண்ணையும் கருத்தையும் மட்டும் கவரும் ஆடையில் கொள்ளை கொண்டு இருந்தவள்...
அவனை தலைகீழாக புரட்டி போட்டு இருந்தாள், என்றுமே உணர்வை தூண்டா வண்ணம், பொத்தி மறைத்த ஆடையில் இருந்த அவளின் கவர்ச்சி, இன்று நீர் வடியும் உடையில் சற்று வெளிப்படவே,
அவன் கண்ணியத்துக்கு வந்த சோதனையானது ...! கன்னி அவள் எழில், கண்டவன் நாடி நரம்பு எல்லம் புடைக்க அவன் அண்மைய ஆட்டம் காட்டியது செதுக்கிய சிலையே உயிர் பெற்று வந்தது போன்ற அங்க வளைவுகளுடன் கண்முன்னே மனம் கவர்ந்தவள்,

இப்பிடி எல்லாம் சும்மா இருப்பவனை உசுப்பு ஏத்தவே இந்த மாதிரி விழா எல்லாம் ஏற்படுத்தி வைச்சு இருப்பாக இந்த பெருசுங்க 😤

(நீ ஏன்ய்யா அவ உடுப்பை மட்டும் பாக்காம இடுப்பை பாக்கிற... அப்போ ஷப்பா என்ன டப்பவும் டான்ஸ் ஆடும் சாமி)

குளிரில் உதடு நடுங்க கை நெஞ்சோடு கோர்த்து, அவனை பார்ப்பது, பின் இமை தாழ்த்துவது இப்படியே வித்தை காட்டி கொண்டு நின்ற தோரணை, எந்த ஆண்மகனை தான் வீழ்த்தாது,
அவன் கட்டுப்பாடு, ஆண்மையை தூண்டி, சதிராட்டம் போட வைத்தாள். உடைமாற்ற வந்தும் அவள் நினைவே துரத்தியது , ஏதோ ஒரு வேகம் பேசியே ஆக வேண்டும் உந்துதல் கை தானாய் கால் செய்தது.

காதில் கைபேசியோடு , தன் எண்ண பிடியில் இருந்தவனை கலைத்தது பிப் சவுண்ட்,

அடுத்து புதிதாய் இசைத்த ரிங்க்டோன் கேட்டதும் ...

புருவம் தானாக நெருக்க , விழிகள் விரிந்து தெறித்து விடும் போன்ற
ஆச்சரியம் அவனிடம்,


எனதுயிரே...! எனதுயிரே... !

நிகழும் நொடிகள் போதுமே..!

நிகழும் நொடிகள் ஆழம்...!

முழுதும் உணர பார்க்கிறேன்...!

எனதுயிரே...? " ரிங்க்டோன்..!"

மற்றும் ஒரு அதிர்ச்சி ஆனந்தம் கொடுத்தாள் அவன் லயா...


லயாவுடன் சேர்த்து முதல் முதலில் பார்த்த படத்தில் அவளுக்கு மிகவும் பிடித்த பாடல் அது , பவன் மீது பித்து பிடித்து, அவனை பார்க்கும் போது எல்லாம் சுற்றி சுற்றி அந்த பாடலை அவள் பாடி திரிந்தது ஒரு நேரம்,

இப்போதும், அவள் சுத்தமாய் மறந்து விட்டதாக அவன் நினைத்த..." அவளை காணும் போது எல்லாம் தற்போது இவன் முணுமுணுக்கும், அவன் போன் ரிங்க்டோன் ஆக வைத்து இருந்த அதே பாடலை, புதிதாக அவள் ரிங்டோன் வடிவில் ஒலிக்க கேட்டதும்...

அடுத்த மின்னல் வெட்டியது மனதுள், இதயத்தில் மூண்ட பரவசம்... நெகிழ்ந்து போனது அவன் மனது.

கண்ணோரம் துளிரிய சிதறலை ஒரு
விரல் கொண்டு தட்டி விட்டு,
மந்தகாச புன்னைகை வீசி அவள் எடுப்பதற்காக காத்து இருந்தான் அந்த அன்பு காதலன்,

(இது எல்லாம் பைத்தியக்கார தனமாய் தெரியுது இல்ல டார்லிஸ் ஆன இது எல்லாமே fact யா )மனதின் அடி வரை புரட்டி கொண்டு இருந்த பல விதமான குழப்பம், தடுமாற்றம், ஒரு வித உணர்ச்சி போராட்டம். எல்லாம் பனி விலகிய உணர்வை தந்தது பவனுக்கு.

இன்னும் சில நொடிகள் கடந்தால் அவள் என்னோட மனைவி எனக்கும் மட்டும் உரிமையானவள்.
எனதுயிரே என ... அவன் உதடும் கூடவே பாடியது",

சட்டென... "ஹலோ...? "லயாவின் குரல் கேட்டதும் தான் தாமதம் குஷி ஆகி,

"ஓய் பொண்டாட்டி என்ன டி பண்றே.. "ஒரே குதூகலமாகி வந்தது அவன் குரல்.

"...? "

லயாவுக்கு... ? ! குரல் எழும்ப வில்லை எதிர் பார்க்கவும்யில்லை , மனதில் சில் என்ற உணர்வு, சந்தோஷ சிரிப்பு, சிறிது மவுனம் அவ்விடம், கூடவே பழைய நையாண்டி குணம் தலைதூக்கவே 😉,

கேள்வியா பாரு என்ன பண்ணுவாங்க இந்த நேரம், நக்கலு தானே இந்த மாமனுக்கு,

மெதுவாக...

"ம்...🤨இப்போ நியூ ட்ரெண்ட், கல்யாண பொண்ணுங்க மொட்டை தலையோடு வர்றது தான் பேஷன்னாம்,அதை தான் அடிச்சிக்கிட்டு இருக்கேன், 😋🤭

வாட்...? " வாட் என்ன சொன்ன, கம் அகேன்,


ஒ... ஹா ஹா ஹா ஹா 🤣😂பவனுக்கு சிரிப்பை அடக்க முடியாது ,வெடித்து சிரித்தவன்,
ஸ்வீட்டு...😆
இதை ... இதை ... இந்த, என் லயாவை தான் எதிர் பார்க்குறேன்,
ஹாஹா... செம்ம டி செல்லக்குட்டி, ஒய்யி 😄 நீ எப்பிடி வந்தாலும் மாமனுக்கு ஓகே தாண்டி என் லவ்லி பொண்டாட்டி 😘

லயா... !
"அய்யய்யோ ஒளறிட்டேன்னா 🙆🤦

(அட போங்க யா... நானே ஒவ்வொரு நிமிஷமும் டர் ஆகிட்டு இருக்கேன், இவரை பார்த்தாலே இனிப்பை சுத்தும் ஈ போல மாறி போகுது என் முகம். கிலி ஆகுதுடா சாமி , இதுல இவர் குடுக்கும் ரியாக்சன் இருக்கே, மம்மி🤭நெஞ்சு கும்மி அடிக்குது. இதுல நா ... கிழிஞ்சுடும்.
நானு அதுவும் பழைய லயா..வா 🙄😤வாயையும் தாறுமாறா பேசுது , வயித்துக்குள்ளே இருந்து என்னவோ கிளம்புது போ மாமா பேசல நானு 🤦 )

"பேசு டி... "

வெகு அமைதியா யாருக்கும் கேக்காத குரலில்,

" ம்...சொல்லுங்க !" - நடுங்கிய குரலில் லயா,

(அடேங்கப்பா, லயாவா இது மறுபடியும் back to form ah மவுனமா உள்ளுக்குள்ள அவ்வளவு காதலோடு பேசுற...🤭 நேரடியா பேசும் போது மட்டும் " ம்" 🙄
என்னா நடிப்புடா சாமியோ😏)

"என்ன ம்...? ஓய் அதுக்கு மேல பேச மாட்டே அப்பிடி தானே... இப்போ நல்லா தானேடி பேசிட்டு இருந்தே ? "

பல்லை கடித்து, மா மா...? இப்போ பேசும் நேரமா இது , கூட எல்லாரும் இருக்காங்க, டைம் ஆச்சு, வெளியே அம்மா குரல் கேக்குக்குது நான் இன்னும் ரெடி ஆகல ,"சிணுங்கியவள்

பிளீஸ், மாமா, நா கட் பண்ண... ",

"ஏய் மெண்டல்...? " அய்யோ 🤦‍♂️இன்னைக்கு இப்பிடி திட்ட கூடாதே, ச்சா...நெற்றியில் தட்டி கொண்டு,

ஐயம் சாரி டி , என்னடி...? என்ன கட் பண்ணறதிலே இருக்கே, இதுல
சப்பாணி ரேஞ்சுக்கு ஆத்தா வையும் காசு குடுன்னு ஸேம் சீனை ஓட்டுறே, எரிச்சலில் கத்த, சற்று பொறுத்து,

(ஹுஹும்..? மயிலே மயிலேன்னா இவ இறகு போட மாட்ட பவன்,
ரூட்டை மாத்து, கொஞ்சம் அதிரடியா உன் முகத்தை கட்டு இல்லனா கல்யாணம் முடியும் வரை இவ இப்பிடி உமை படம் ஓட்டுற பீலிங் தான் குடுப்பா .)

லுக் மயில், ஏதாச்சும் சொல்லிட போறேன் டி 🤦‍♂️ ,நான் நல்லா மூடில் இருக்கேன் , பிளீஸ் டி என்ன மூட் ஆப் பண்ணாதே ...
நல்ல தானே டி பேச ஆரம்பிச்ச இப்போ என்னாச்சு, கட் பண்ணவான்னு கேக்குற

அடியே என் கியூட் லூசு பொண்டாட்டி ,
உனக்கு ஒரு கவிதை சொல்றேன் கேளு...

உன்னுடன் பேச உன் நினைவில் சுற்றி வரும் ஒரு நிமிடமுள் நான்...

24 மணி நேரம் கடிகாரம் போல் நீ அசையாமல் இருப்பது நீ ஏன் மயில்...

உன் நினைவை சுமந்து ஆக்ஸ்போர்ட்லில் படித்தேன் அன்று...

உன் நினைவையே என் ஆக்சிஜன் போல் சுவாசிக்கிறேன் இன்று...
மயில்... மயிலே ...

(கவிதையோடு பாடலும் சேர்ந்து கொண்டது )

உன்னை தீண்டாமல்...
உன்னை பார்க்காமல்...
கொஞ்சி பேசாமல்...
கண்ணில் தூக்கம் இல்லை ...

என்னை கொள்ளாதே...
தள்ளி போகாதே கண்மணி...

லயா --🤭அவ்வா கவிதை, பாட்டு வேறயா , இந்த ரொமான்டிக் மாமா இத்தனை நாள் எங்கே இருந்தாங்க கொல்றிங்களே மாமா💘...

(அடக்குடி லயா மாமனை தேடி எழுத்து ஓடிறதே கண்ட்ரோல் மை லாட் மனசாட்சியிடம் சண்டை போட்டு )😯

மாமா... ப்ளீஸ் கல்யாணம் முடியட்டும்
நீங்க எவ்வளவு நேரம் வேணா பேசுங்க நான் கேக்குறேன், ஸ்வரா கூட ரெடி ஆகிட்டா மாமா...அதுக்கு தான் வேண்ட...

" லயா !" கோவப்படும் நேரம் மட்டும் முழுமையாக கர்ஜித்து வரும் அவள் பெயர்.

"மாமா ஆ... ",? ஸ்ருதி இறங்கி குரல் பிசிறிட...! இப்போ...பேச வேண்டாம் தானே சொன்னே, அதுக்கு போயி இவ்வளவு கோவமா,

பேச வேண்டாமா கொன்னுருவே டி உன்ன, உனக்கு புரியுத இல்லியா,
போடி...இடியட் ? , நான் என்ன மணி கணக்க பேசவா கால் பண்ணே மனுஷன் நிலைமை தெரியாம விளையாடாதே ..."

"முடியாது டி...சற்று குரல் உயர்த்தி வரவே ,

பவன் --"ச்சா என்ன இப்பிடி கோவம் வருது எனக்கு... !" இவ தான் நம்மை பதிக்குறன்னு பார்த்த, இவ பேசாம அவாய்ட் பண்றது அதை விட மோசமா தாக்குது.
அந்த பக்கம் அமைதியாக இருக்கவே ..

ஹேய் இருக்கியா டி ... "

" ஹீம் ? "என்ற முனகல் மட்டும் வரவே ,

"சாரி ...!" -பவன்

" ஹேய் இங்க பாருடி நாம லவ்வர்ஸ் ஆக இருக்கும் இந்த நிமிஷம் பிரிசியஸ் டி எனக்கு , பொண்டாட்டி ஆன பிறகு லவ் அண்ட் ரொமான்ஸ் இருக்கும் தான் . பட் இப்போ கிடைக்கும் இந்த கிக் கிடைக்குமா இருக்குமா சொல்லு ,

நேத்து நைட்டே உன்னிடம் பேச இருந்தேன் எங்கே ...? கூடவே கொசு தொல்லை போல என் வில்லன் மித்ரா துரோகிங்க விடல, எங்க ரெண்டு பேரு போனையும் புடிங்கி, அமுக்கி படுக்க வைச்சுட்டாங்க,

சின்னதாக சிணுங்கி சிரிக்கும் சிரிப்பு கேக்கவே,

"ஹீம்... இப்போ நல்லா சிரி மா என் கவலை உனக்கு புரிஞ்சா நான் ஏன் போனில் பேச போறேன் இந்நேரம் உன் ரூமில் இல்ல இருப்பேன்,
நேத்து நைட் வந்து இருக்கணும் டி ... !"

"ச்சா..ஜஸ்ட் மிஸ் லட்டுமா , அப்போவே தெரிஞ்சு இருக்கும் ஐயா லெவல், இப்போ சிணுங்கி வரும் இந்த சிரிப்பு எல்லாம் வேற மாதிரி வர வைச்சு இருப்பேம் இல்ல 😉 ,
போடி ..." சுத்த வேஸ்ட்டு டி நீ... 🤦‍♂️

நைட் எல்லாம் தூங்கவே இல்ல மயில் , என் மண்டைக்குள்ளே நீயே சுத்திட்டு இருந்த ...? எங்க தூங்க, அப்போ பார்த்து ஒரே கவிதையா மைண்டுக்கு வருது டி மைனா, கேளேன் ஒய் இதை கேளேன்...

"அந்த நிலா கூட வனத்தில் வராத நாளுன்னு ஒண்ணு உண்டு குயில் ...!
உன் நினைவு இல்லாத நிமிடம் எனக்குள் ஏதாடி மயில்... !
எப்புடி 😉
மாமா சூப்பரா டி ..😜

அய்யோ... பாத்து மாமா கவிதைக்கே பொறாமை வர போகுது அவனுக்கு மட்டும் கேக்கும் குரலில், சத்தம் வராமல் முணுமுணுக்க,
ஹாஹா... !" நக்கலு, உன்னை வைச்சுக்குறேன் டி.

"ஓ... தரலாமா வைச்சுக்கோங்க மாமா ஹீஹீ... அப்போ கல்யாணம் நிறுத்தி சொல்லவா அப்புறம் பண்ணிக்கலாமா மாமா என்றதும்,

"ஹாஹாஹா....லைலு முடியல !" தொடர்பு சிரிப்பினால் நிறுத்த முடியாத பவன்,

ஸ்வீட்டு, ஹாஹா.. ஹா... கண்ணில் நீர் வர சிரித்து கொண்டே, லவ் யூ டி😘இப்போவே ஓடி போயிடலாமான்னு இருக்கு கண்ணம்மா.. "

"ஹேய்... ரொம்ப வறண்டு போயி இருந்தே ஸ்வீட்டி, இந்த ரெண்டு நாள் ஒரு சின்ன நம்பிக்கை, உன் கிட்ட தெரியும் மாற்றம் தான்டா பூஸ்ட்,

"லைலு, ஹலோ...?

" ம் ...? "குரல் இப்போது இறங்கி வந்தது அவன் சந்தோஷ சிரிப்பு இவள் மனதில் மத்தாப்பாக பூத்து கண்ணோரம் சந்தோஷத்தில் நீர் துளிர்த்தது.
 
Last edited:

Maha

Author
Author
SM Exclusive Author
#2
(ஒரு பக்கம் தலை அலங்கரம் நடக்க காதில் வைத்த போனை கெட்டியாக பிடித்து எந்நேரம் விழுவேனோ என்று கண்ணோரம் துளிர்க்கும் நீர்ரோடு அமைதியாக கேட்டு கொண்டு இருப்பதிலேயே, அங்கு இருந்த மூன்று பெண்களுக்கு புரிந்தது ,
ஏதோ உணாச்சி பிடியில் இருவரும் இருப்பது ).

பவன்...
"இன்னும் கொஞ்ச நேரத்தில் நீயும் நானும் கணவன் மனைவி, நினைக்கவே ஏதேதோ தோணுது லயா.

இப்போ கூட பாரு என்ன பேசுறேன் எப்பிடி நடந்துக்கிறேன் எனக்கு நானே வித்யாசமா உணருறேன் மா.

அந்த பக்கம் அமைதியாக இருக்கவே,
ஹேய்..என்னடி இன்னும் புரியாத மாதிரி இருக்காதே லைலு "

"ஒவ்வொரு முறையும் உன்னை பார்க்கும் போது என் பழைய ஸ்வீட்டியை தேடுறேன். இந்த மவுனம், இந்த ம், இல்ல...",

"வாழ்க்கையில் கல்யாணம் ஒரு முறை அதுவும் மனசுக்கு புடிச்ச பொண்ணோட கிடைக்கும் அந்த நேரம் சின்ன சின்ன சந்தோசங்கள் மறக்க முடியாத பொக்கிஷங்கள் .அதுவும் நம்ப வாழ்க்கை தொடங்கும் இந்த நேரத்திலே குழந்தை தனமான உன்னோட குறும்புகள் சீண்டல் எல்லாம் எதிர் பாக்குறேன் ரொம்ப மிஸ் பன்றேன் டா என் அந்த நாள் லயாவை, ரொம்ப வலிக்குது டி.

வலியை விட வலி இல்லாம இருக்குறது போல நடிக்கிறது தன் அதிகம் வலியா இருக்கு டி ...

உன்னோட , உன்னோட மட்டும் சலிக்க சலிக்க வாழனும்டி உன்ன போலவே பெண் குழந்தைங்க பெத்துக்கணும்,
என் நெஞ்சு முழுக்க நிறைச்சு இருக்கும் உன்னை என் ஆயுள்காலம் வரை இப்பிடியே...? பேசுவதை நிறுத்தியதும்,

லயா பதட்டம் ஆகி, "மாமா...? ",

ஏன் லைலு..." நடக்கும் இல்ல டா...
இது வெறும் ஆசை இல்ல, பேராசையும் டா , இது எல்லாம் நடக்கணும்ன்னா அது உன் கூட இருந்த மட்டும் சாத்தியமாகும்.
இப்போ சொல்லு, இருப்ப தானே சொல்லு...டி


லயா... மனதோடு,
, என்னாச்சு, ஏன் இத்தனை எமோஷன் மாமா,புரிந்தும் புரியாமலும் தடுமாறிய லயா ...,

" எல்லாம் என்னாலே தானே... முட்டாள் நான்... "உதடு துடிக்க பிதுங்கி கொண்டு போனது,
" எல்லாம் நான் காட்டின ஒதுக்கும் தானே மாமாவை இவ்வளவு எமோஷனல் ஆகிடுச்சு ஐயம் சாரி மா..மா ...
கண்கள் கலங்கி கொண்டு வந்தது,

அஷி- "லயா..!"என்ன இது, காஜல் கரையும் டா "

" சாரி " போனை மூடி அஷியிடம் சொன்ன லயா.

அவனிடமோ,
"மாமா...?" என்றவள் பேசா மடந்தையாகி, இப்போதும் வெளிப்படையாக பேசாது தன் மனதோடு...

மாமா, உங்க காதல், அன்புக்கு நான் தகுதியானவளா தெரியாது , பட் என் சந்தோஷத்தின் முழு உருவமும் நீங்க மட்டும் தானே மாமா ,
எத்தனை காதல், அன்பு, என்ன மூழ்கடிச்சி நீங்க இயல்பா பேசுறீங்க, ஆனா அத முழுக்க அனுபவிக்கும் நான் தடுமாறிக்கிட்டு இருக்கேன் மாமா .
நீங்க மனசு விட்டு பேசிடனும் நினைக்கிறீங்க, ஆனா நான் உங்க பேரு என் பெயரோடு சேர, தவம் இருந்த அந்த நொடிக்காக காத்து இருக்கேன்.

எனக்கும்உங்களை போல சகஜமா முன்ன போல இருக்க தோணும். ஆனா, நடுவில் ஏற்பட்ட தடுமாற்றம், பயம் இன்னும் என்ன விடல, முன்பை விட இப்போ தான் இன்னும் அதிகமா உங்களை நேசிக்கிறேன் மாமா அதனாலே தானோ என்னவோ , இந்த வெக்கம் கூச்சம் அதை விட அதிகமா சுரக்குது, நடுங்குது. நானும் என்னையும் அறியாமல் தான் ஒதுங்குறேன், இப்போ சொன்ன அத்தனையும் உங்கிட்ட பேச நவு துடிக்குது வார்த்தையா தான் வரல நான் என்ன பண்ணட்டும்.
என் ஆழ்மனது என்னவோ,

(வார்த்தைகள் வராத போது இப்படி பாட்டும் வரும் )
உனக்காக வாழ நினைக்கிறேன்...

உசுரோட வாசம் புடிக்கிறேன்...

புடவை மடிக்கையில்...

உன்னைத்தான் மடிக்கிறேன்...

ஒரு நூறு வருஷம் பேச நினைச்சு...

உன் தோளில்... தூங்கிடுவேன்...
உனக்காக...
உனக்காக... 👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋...


"ஏதாவது சொல்லு டி....? எனக்கு தெரியும் உன் மனசு முழுக்க நான் தான் நிறைஞ்சு இருக்கேன்ன்னு அதை நீ யா சொல்லணும் ஆசை படுறேன்.

அட்லீஸ்ட் " ம்" ன்னு ஒரு வார்த்தை சொல்ல கூட உன் ஈகோ தடுக்குது இல்ல... அப்பிடி தானே,
அந்த சந்தோஷம் கூட எனக்கு தர உனக்கு மனசு வரல இல்ல ஸ்வீட்டி, குரல் தேய்ந்து ஒழிக்கவே,

சட்டென தன்னையும் மறந்து, அறியாது " இல்ல...ஆமா...ம் " என்றதும்,
கேட்டவனுக்கு இன்ப அதிர்ச்சியில் பவன் மனநிலை வேறு நிலையில் பயணித்தது


முதலில் மவுனம் உடைத்தான் பவன்...

" ஓய்ய்ய்ய்... இந்த "இல்ல, ஆமா, ம்"
எல்லாம் தான் பதில, அப்போ அதையே சம்மதம்ன்னு எடுத்துக்க வா,

ஓகே..🕺ஹூரோ...வாரே வா, விசிலோடு
ஹாஹா....அப்பிடி தானே பட்டு, அப்போ என் டீல்க்கு ஓகே ஓகே தானே... 😉
ஒ மை குட்னெஸ், கடவுளே... ஹாப்பி பேபி, முத்தங்கள் பல அனுப்பி லாயவை திணற அடித்தான்.

லயா பதட்டமாகி என்ன பதில் சொல்ல என தெரியாது மறுபடியும், டீல்...லா😒 அது என்ன டீல் எனக்கு தெரியாம, எப்போ யாரு நானா... போட்டேன் டீல் என்ன சொல்றங்க அய்யோ 🙆

இந்த பக்கம் பவன், மறுபடியும் சொல்லு சொல்லு என துளைக்கவே என்ன சொல்ல என்று புரியாது வாய்க்கு வந்தப்படி.

"ஆ...ம்... ஹுஹும், ஆமா...
இல்ல ...அய்யோ தேவுடா
ஏன்....!!" இப்பிடி வாய் குளறுது...?🙆
வெறும் காத்து தாங்க வருது 🤭

பவன்...
"லவ் யூ பேபி ? "😘😍💖

" ம் " வேறு வார்த்தை வரல லயாவிற்கு

இப்போவே எல்லாத்துக்கு ரெடியா இரு 😘 இனி இந்த மாமன் ரேஞ்சே தனி டி செல்லம் 😉 பாக்க தானே போறே...
லவ் யூ,... லவ் யூ டி பொண்டாட்டி ❤️‍💋‍
என் சைலன்ட் கில்லிங் பொண்டாட்டி மண மேடையில் வெயிட்டிங் டி என் ஸ்வீட்டி...

நிரஞ்சன் அழைக்கவும்... மறுமுறையும்
முத்தங்கள் பல வாரி வழங்கி போனை கட் செய்து விரைந்தான் அடுத்த அறைக்கு .

கையில் இருக்கும் போனையே வெறித்து பார்த்த லயாவுக்கு அவன் வைத்த பொறி எல்லாம் மறந்து போனது , அவன் இட்ட முத்தங்கள் தந்த மயக்கம் வயிற்றில் ஆயிரம் பட்டம் பூச்சிகள் பறப்பது போல இருந்தது, மனதிலே குளுமை, வெளியே இவள் மனநிலைக்கேற்ப,

விடியற்காலை தூறல் வந்து... "கன்னியே நானும் வந்தேன் உன் விவாகத்துக்கு என்று சொல்லாமல் சொல்லி தூவி சென்ற சின்ன மழைச்சாரல் ஜன்னல் கண்ணாடியில் பட்டு வெளியே தெரிந்த பசுமை யாவும் பனிமூட்டமாய் கண்டவளுக்கு மனது எங்கோ சிறகில்லாமல் பறந்தது தான் விரல் கொண்டு ஹார்ட் வரைத்து பேர் எழுத நினைக்கும் போது...

IMG_20191212_095452.JPG


சைந்தவி பூ வைக்க அவள் தலையை தான் புறம் திருப்பி விடவே, ஓர பார்வையில், மனதில் பல வண்ண கற்பனை சிறகடிக்க அவள் வரைந்த ஹார்ட்டையே பார்த்தபடி ...அதே மனநிலையில் அலங்காரம் செய்யும் இரண்டு பெண்கள் இழுப்புக்கு எல்லாம் தன்னை வளைத்து கொடுத்து கொண்டு இருந்தாள் லயா.

அழைத்து செல்ல பெரியவர்கள் வரவும் சரியாக இருந்தது.

*********
 
Last edited:
#6
romba azhagana ud mahakka.... :love::love::love: nan pona ud 🤦‍♀️apdi light a kannai moodite padichen.....:p:D pudding kerchief :rolleyes:lam..... comment potten... but athu appave kanama poidichu.., antha ud oda...
oru kathal eppadi kalyanama varum podhu., antha penn manathilum, nadanthukara vithathilayum mariduranu azhaga azhama sollirukinga😘😘😘😍😍😍
 

srinavee

Author
Author
SM Exclusive Author
#8
அட அட... எப்பா காதல் மன்னா! :p:cool:எவ்ளோ பெரிய அப்பாடக்கர்டா பவன் நீ ....:rolleyes:o_O
உன்னோட மயிலை சாய்ச்சுபுட்டியே ராசா:love: அவ வாயில காத்து தாண்டா வருது:sneaky::sneaky:

உனக்கு பச்சைக்கொடி காமிச்சுட்டா ஓடு ஓடு நிக்காதே தாலி கட்டி ஹனிமூன் கிளம்பிடு ஷப்பா இதுங்கள ஒண்ணு சேர்க்க என்னவெல்லாம் செய்ய வேண்டு இருக்கு:p:D
ஒரு மெலடி ஓல்ட் சாங் போடுவோம் இந்த situationக்கு ஏத்த பாட்டு... ராஜா மெலடி அடிச்சுக்க ஆள் இல்ல
 

Maha

Author
Author
SM Exclusive Author
#9
romba azhagana ud mahakka.... :love::love::love: nan pona ud 🤦‍♀️apdi light a kannai moodite padichen.....:p:D pudding kerchief :rolleyes:lam..... comment potten... but athu appave kanama poidichu.., antha ud oda...
oru kathal eppadi kalyanama varum podhu., antha penn manathilum, nadanthukara vithathilayum mariduranu azhaga azhama sollirukinga😘😘😘😍😍😍
So happy dear எங்காச்சும் சொதப்பி இருப்போமா புடிக்குமா இவ்வளவு லாங் conversation நினைச்சேன் இப்போ ஐயம் clear பட் லாஸ்ட் ud cmt மிஸ் பண்ணிட்டேன் அது தான் கொஞ்சம் வருத்தம் இட்ஸ் ஓகே டார்லி 👍😍💖💖
 

Maha

Author
Author
SM Exclusive Author
#10
அட அட... எப்பா காதல் மன்னா! :p:cool:எவ்ளோ பெரிய அப்பாடக்கர்டா பவன் நீ ....:rolleyes:o_O
உன்னோட மயிலை சாய்ச்சுபுட்டியே ராசா:love: அவ வாயில காத்து தாண்டா வருது:sneaky::sneaky:

உனக்கு பச்சைக்கொடி காமிச்சுட்டா ஓடு ஓடு நிக்காதே தாலி கட்டி ஹனிமூன் கிளம்பிடு ஷப்பா இதுங்கள ஒண்ணு சேர்க்க என்னவெல்லாம் செய்ய வேண்டு இருக்கு:p:D
ஒரு மெலடி ஓல்ட் சாங் போடுவோம் இந்த situationக்கு ஏத்த பாட்டு... ராஜா மெலடி அடிச்சுக்க ஆள் இல்ல
ஹாஹா செம்ம ஸ்ரீ and beautiful ராஜா sir song லவ் it மகிழ்ச்சி டா 🤩💖
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top