• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

புறநானுற்று சிறுகதைகள்---- 22--- அவன் ஒரு வல்லாளன்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,040
Reaction score
49,883
Location
madurai
அவன் ஒரு பயிர்த் தொழிலாளி. வேளாண்மகன். அப்போது ஊரிலுள்ள வயல்களில் வரகுப் பயிர் முற்றி அறுவடைக்குத் தயாரான நிலையில் இருந்தது. அங்கங்கே வயல்களிலிருந்து கருநிற வரகின் தாள்களை அரிந்து களத்துக்குக் கொண்டுவந்து
கொண்டிருந்தார்கள்.


இந்தஅறுவடை வேலையில் ஈடுபட்டுக் கூலிபெறுவதற்காகப் பலர் வந்திருந்தனர். அவர்களில் அவனும் ஒருவன்! வயல்களிலிருந்து அறுத்துக்கொணர்ந்திருந்த தானிய மணிகளோடுகூடிய தாள்களை வட்டமாகப் பரப்பிஏழெட்டு எருதுகளைப் பூட்டி மேலே மிதிக்கவிட வேண்டும். எருதுகள் திரும்பத் திரும்பமிதிக்கும்போது கதிர்களிலுள்ள தானியமணிகள் உதிர்ந்து அடியில் தங்கிவிடும்.


சில நாழிகைகள் இப்படி எருதுகளை மிதிக்கவிட்டபின் வரகுத்தாள்களைத் தனியே உதறிப் பிரித்துவிட்டால் அடியில் உதிர்ந்திருக்கும் தானிய மணிகளைக் கூட்டித் திரட்டிக் குவிக்கலாம். குவியல் குவியலாகக் கிடைக்கப் போகும் அந்தத்
தானியத்தின் சொந்தக்காரர் யாரோ? எவரோ? அவனுக்கு அதைப் பற்றி என்னகவலை? அவர் செல்வர்? அனுபவிக்கக்கொடுத்து வைத்தவராக இருக்க வேண்டும்.


அவன் வெறும் உழைப்பாளி கூலிக்குவேலை செய்பவன்! வேலை முடிந்ததும்கூலியாக அளந்து போடுகிற நாழி வரகை முந்தியை விரித்து ஏந்திக்கொண்டுவீட்டுக்குத் திரும்ப வேண்டியதுதான் அவன்வேலை.


மாடுகள் மிதித்து முடித்துவிட்டன. மாடுகளை ஒதுக்கிக் கட்டிவிட்டுத் தாளைஉதறினான். எல்லா வைக்கோலையும்உதறி ஒதுக்குவதற்குச் சிறிது நேரம்பிடித்தது. வைக்கோலை உதறி ஒதுக்கியபின் தானியத்தைத் திரட்டினான். குவியல் குவியலாகத் தானிய மணிகள்ஒன்று சேர்ந்தன.


- வேலை முடிந்தது! நிலத்துச் சொந்தக்காரர் வந்தார்! அவனுக்குக் கூலியாகச் சேரவேண்டிய வரகு
தானியத்தை’ அளந்துபோட்டார். அவன் முந்தானையை விரித்துவாங்கிக் கொண்டு கிளம்பினான்.

வீட்டில்அவன் மனைவி உலையை ஏற்றிவைத்துவிட்டுத் தயாராகக் காத்துக்கொண்டிருப்பாளே? அவன் விரைவாகவரகைக் கொண்டுபோய்க் கொடுத்தால்தானே குத்திப்புடைத்து உலையில் இட்டுச்சோறாக்குவதற்கு வசதியாயிருக்கும்!
அவன் விரைவாக நடந்தான்.


“ஐயா! சாமி, ஏழை முகம் பாருங்க...”

அவன் திரும்பிப் பார்த்தான். யாழும் கையுமாக ஒருபாணன், அவன்மனைவி.பசியால் வாடிப்போனகுழந்தைகள். எல்லோரும்நின்றுகொண்டிருந்தனர். அவர்களைப்பார்க்கப் பரிதாபமாக இருந்தது.ஒருகணம்மேலே நடந்து செல்லத் தோன்றாமல்தயங்கி நின்றான்.அவன்.


“சாப்பிட்டு எட்டு நாளாகிறது! தருமவான்போலத் தோணுறிங்க...”

“நீங்களெல்லாம் யார்?”

“செழிப்பாக இருந்த பாணர் குடும்பமுங்க. இப்போ ஆதரிக்க ஒருவருமில்லாமல்சோத்துக்குப்பிச்சை எடுக்கிறோம்!”

“ஐயோ பாவம்!”

“ஏதோ! நீங்க மனசு வச்சா இன்னிக்காவதுஇந்தக் குழந்தைகள் வயிறு குளிறும்...”

அவன் ஒரு விநாடி தயங்கினான். நின்றுயோசித்தான். “ஐயா! நீங்க ரொம்பநல்லவங்களைப் போலத் தோன்றிங்க உங்களுக்கு
நிறைய புண்ணியம் உண்டு. ஏழை முகம் பார்த்து உதவுங்க”

“இந்தாரும் பாணரே இதை முன்தானையில்வாங்கிக் கொள்ளும்.”

பாணர் ஆவலோடு முன்தானையைவிரித்தார். தனக்குக் கூலியாகக் கிடைத்தஅவ்வளவு வரகையும் அந்த ஏழைப்பாணனின் முன்தானையில் உதறிவிட்டுமேலே நடந்தான் அவன். மனத்தில்பட்டதைச் செய்தான். அவன் வள்ளலில்லை, கொடையாளி இல்லை, கருணை இருந்தது. கையிலிருந்ததையும் மனத்திலிருந்தகருணையையும் சேர்த்துக் கொடுத்துவிட்டுநடந்தான்.


ஏழைக்குப் பணக்காரனின் உள்ளமும், பணக்காரனுக்கு ஏழையின் உள்ளமும்இருந்தால் என்ன செய்வது? அவன்ஏழைதான்! ஆனால் அவனுடைய உள்ளம்பணக்கார உள்ளமாக இருந்துதொலைத்ததே. அதற்கென்ன செய்யலாம்? உலகத்தில் இப்படி ஒரு முரண்இயற்கையாக விழுந்து கிடக்கிறதே?


வெறுங்கையோடு வீட்டில் போய் நின்றான். “வரகு கொண்டு வரவில்லையா? நீங்கள்கொண்டு வருவீர்கள் என்று நம்பி உலையைப் போட்டு வைத்திருக்கிறேன்? அவள் ஏமாற்றத்தோடு கேட்டாள்.

“கொண்டுதான் வந்தேன்.”

“இப்போது எங்கே? வழியில் தவறிப்போய்க் கொட்டிவீட்டீர்களா?”

“தரையில் கொட்டவில்லை. ஒரு ஏழையின்முந்தானையில் கொட்டி விட்டேன்.”

“என்ன? பிச்சை போட்டு விட்டீர்களா?” “பிச்சை அல்ல! பசித்தவனுக்கு உதவி.”

“நல்ல உதவி! நல்ல பசித்தவன்! இப்போதுஉங்களுக்கு யார் உதவப் போகிறார்கள்?”

“உஸ்ஸ் இரையாதே! அந்த ஒலைப்பெட்டியை எடு!”

“எதற்காக”

“அடுத்த வீட்டில் நாழி வரகு கடன்வாங்கிக்கொண்டு வருகிறேன்!”

“நன்றாக இருக்கிறது நியாயம்! யாராவதுகேட்டால் சிரிக்கப்போகிறார்கள். உங்களுக்கென்று அளித்த கூலியைஎவனிடமோ உதறிவிட்டு இப்போது நீங்கள்கடனுக்குப் பிச்சை எடுக்கப் போகவேண்டுமாக்கும்?”

“கொடு என்றால் கொடு உனக்கு ஏன்இந்தக் கவலை நான் வாங்கி வருகிறேன்.”

அவன் ஒலைப்பெட்டியைவாங்கிக்கொண்டு கடன்கொடுப்பாரைத்தேடி நடந்தான்.அவன்மனைவி எண்ணுவதைப் போலவே நாமும்அவனை ஒர் அசடனாகத்தான்எண்ணுவோம்!

அவனை மட்டும் என்ன? தர்மநியாயத்துக்கு அஞ்சிக் கருணைகொள்ளும் எல்லோருக்குமே இந்த உலகம் அசட்டுப் பட்டம்தான் கட்டுகிறது! ஒருபெரிய அரசாட்சியை அப்படியே தூக்கிக்கொடுத்தால் ஆளுகின்ற அவ்வளவு பெரியவல்லாளன்தான் அவன்!

அந்த வல்லாளன்இப்போது கால்குறுணி வரகரிசிக்காக வீடுவீடாக ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறான்! தர்மத்தின் பயனைப் பற்றி அவனுக்குத்தெரியாது தர்மம்தான் தெரியும்!

உண்மைதான்! நாமாவதுஒப்புக்கொள்ளலாமே, அவன் ஓர் உலகுபுரக்கும் வல்லாளன்தான் என்று!

எருது காலுறாஅது இளைஞர் கொன்ற
சில்விளை வரகின் புல்லென குப்பை
தொடுத்த கடவர்க்குக் கொடுத்த மிச்சில்
பசித்த பாணர் உண்டுகடை தப்பலின்
ஒக்கல் ஒற்கம் சொலியத் தன்ஊர்ச்
சிறுபுல் லாளர் முகத்தவை கூறி
வரகு கடன் இரக்கும் நெடுந்தகை
அரசுவரின் தாங்கும் வல்லா ளன்னே! (புறநானூறு- 327)
கொன்ற = அடித்த, சில்விளை - சிலவாகவிளைந்த, தொடுத்த கடவர் = வினைஞர்கள், ஒற்கம் = சுற்றம், சொலிய = போக்க, சிறுபுல்லாளர்=கேவலமானவர்களிடம், கடன்இரக்கம் = கடன் கேட்கும், நெடுந்தகை = ஆண்மகன்.


 




shiyamala sothy

இணை அமைச்சர்
Joined
May 4, 2018
Messages
990
Reaction score
2,953
Age
51
Location
canada
இரக்க குணமுள்ளவனைப் பிழைக்கத் தெரியாதவன் என்று தானே சொல்லினம்.
1555655560532.png
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top