• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பூண்டு ஊறுகாய் ??

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Allivisalatchi

முதலமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
10,521
Reaction score
27,440
Location
Chennai
_20200604_201130.JPG
தேவையான பொருட்கள்:-
பூண்டு - 100 கிராம்
மிளகாய்த்தூள் - 11/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் -1 டீஸ்பூன் ( சிறியது)
வெந்தயப்பொடி - கால் டீஸ்பூன்
புளி - எலுமிச்சை அளவு
வெல்லம் - 1 டீஸ்பூன்
தாளிக்க - நல்லெண்ணெய், கடுகு, உ. பருப்பு, கறிவேப்பிலை
உப்பு - தேவையான அளவு


செய்முறை:-
வாணலியில் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு உரித்த பூண்டை சிறிது வதக்கி கொள்ளவும். புளியை அரை டம்ளர் தண்ணீர் விட்டு கரைத்து எடுத்து கொள்ளவும். வதக்கி வைத்துள்ள பூண்டு ஆறியவுடன் அதனை மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும். வாணலியில் நான்கு ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, உ. பருப்பு, கறிவேப்பிலை தாளித்து அரைத்த பூண்டு சேர்த்து வதக்கவும். பின்னர் அதனுடன் மிளகாய்த்தூள், வெந்தயப்பொடி, பெருங்காயத்தூள், சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். அதனுடன் கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை சேர்க்கவும். பின்னர் அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து வெல்லம் சேர்த்து மிதமான தீயில் வதக்கவும் ‌. எண்ணெய் பிரிந்து வரும் போது அடுப்பை அணைக்கவும். சூடு ஆறியதும் வேறு பாத்திரத்தில் போட்டு மூடி வைக்கவும்.
 




shiyamala sothybalan

இணை அமைச்சர்
Joined
Dec 12, 2019
Messages
867
Reaction score
2,644
மிகவும் சுவையான பூண்டு ஊறுகாய். கட்டாயம் பெருங்காயம் போடவேணுமா இங்கு கடைகளில் பெருங்காயம் முடிந்துவிட்டது. இந்தியாவில் லொக்டவுன் முடிந்த பிறகு தான் வரவேணும்.
1591394775989.png1591394915914.png1591395005603.png
 




Guhapriya

அமைச்சர்
Joined
Apr 5, 2019
Messages
4,175
Reaction score
12,257
Location
Trichy
பூண்டு ஊறுகாய் செம பேபி:love::love:. செய்து பார்க்கிறேன் பேபி(y)
 




Allivisalatchi

முதலமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
10,521
Reaction score
27,440
Location
Chennai
ஆஹா அருமை அல்லி சிஸ்?????????இன்றே அம்மாவிடம் செய்யசொல்ல போகிறேன்?????????????♥
கண்டிப்பா செய்ய சொல்லுடா.. இன்னைக்கு மாங்காய் ஊறுகாய் ரெசிபி போடுறேன்.அதுவும் நல்லாருக்கும் ?????????
 




Allivisalatchi

முதலமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
10,521
Reaction score
27,440
Location
Chennai
மிகவும் சுவையான பூண்டு ஊறுகாய். கட்டாயம் பெருங்காயம் போடவேணுமா இங்கு கடைகளில் பெருங்காயம் முடிந்துவிட்டது. இந்தியாவில் லொக்டவுன் முடிந்த பிறகு தான் வரவேணும்.
View attachment 24180View attachment 24181View attachment 24182
ஓகே டியர் பெருங்காயம் போடாம செய்ங்க.. பெருங்காயம் கிடைச்சதும் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு பெருங்காயத்தூள் தாளித்து இதோடு சேர்த்துடுங்க??????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top