தாயின்
கருவில் பிறந்த எமக்கு
கருப்பை சொந்தமில்லை
சொந்தங்கள் பல இருப்பினும்
தனியே நிற்கும் நிலை
வளர்த்த பெற்றோர் வெறுத்திட
நேசித்த உறவுகள் உதறிட
நடந்தது இதுவென புரியும் முன்னே
நடுத்தெருவில் நிற்கும் நிலை
ஏதேதோ பெயர்கள் இருப்பினும்
திருநங்கைதான் எமது பெயர்
நிற்க இடமில்லை
உண்ண உணவில்லை
ஊன் உண்ணும் பச்சிகள் சில
தவறாகத்தான் எம்மை நடத்தினவே
அதற்கு பெயரும் வேறு இட்டனவே
இவ்வளவு துயரம் இருந்த போதிலும்
யாம் வீழ்வோமென்று நினைத்தாயோ
அதுதான் இல்லை ,
இச்சை கெட்ட இச்சமுதாயத்தில்
விழுந்தோம் விதைகளாக
முளைத்தோம் மரமாக
எண்ணற்ற துறைகளில்
எம் இனமும் பறைசாற்றினவே
திருநங்கைகள்தான் நாங்களும்
திருமங்கைகளாக போற்றப் பட்டோம்
இனியும் போற்றப்படுவோம் !!!
இப்படிக்கு
திருநங்கை
கருவில் பிறந்த எமக்கு
கருப்பை சொந்தமில்லை
சொந்தங்கள் பல இருப்பினும்
தனியே நிற்கும் நிலை
வளர்த்த பெற்றோர் வெறுத்திட
நேசித்த உறவுகள் உதறிட
நடந்தது இதுவென புரியும் முன்னே
நடுத்தெருவில் நிற்கும் நிலை
ஏதேதோ பெயர்கள் இருப்பினும்
திருநங்கைதான் எமது பெயர்
நிற்க இடமில்லை
உண்ண உணவில்லை
ஊன் உண்ணும் பச்சிகள் சில
தவறாகத்தான் எம்மை நடத்தினவே
அதற்கு பெயரும் வேறு இட்டனவே
இவ்வளவு துயரம் இருந்த போதிலும்
யாம் வீழ்வோமென்று நினைத்தாயோ
அதுதான் இல்லை ,
இச்சை கெட்ட இச்சமுதாயத்தில்
விழுந்தோம் விதைகளாக
முளைத்தோம் மரமாக
எண்ணற்ற துறைகளில்
எம் இனமும் பறைசாற்றினவே
திருநங்கைகள்தான் நாங்களும்
திருமங்கைகளாக போற்றப் பட்டோம்
இனியும் போற்றப்படுவோம் !!!
இப்படிக்கு
திருநங்கை